Saturday, January 22, 2022

SURDAS

 ஸூர் தாஸ் -  நங்கநல்லூர்   J K  SIVAN 


15.    ஹரி தர்சனம்

பாலும் கசந்ததடி, பஞ்சணை உறுத்துதடி, தூக்கம் மறந்ததடி, கண்ணீர் பார்வையை  மறைத்ததடி, நெஞ்சம் பிளந்ததடி, இதயம் வெடித்ததடி, வாழ்க்கை வெறுத்ததடி, இன்னும் இது போன்ற எத்தனையோ ''தடி''  க்களில் வருத்தங்கள். யாருக்கு?   ஒருவராக இருந்தால் அடையாளம்,  பெயர் சொல்லலாம். ஊரில்  எல்லோருக்குமே  இப்படி எனும்போது?   ஆம், பிருந்தாவனத்திலிருந்த அனைத்து கோபியர் நிலையும் இதே தான்   என்றபோது எப்படி சொல்வது?  ஏன்  என்ன காரணம்  என்கிறீர்களா?

ஏன் என்ற கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்கிறேன்.

அந்த ஊரின் ஜோதி வெளியேறிவிட்டது.    மனதில் குடியிருக்கும்  மகிழ்ச்சி மதுராபுரி நகருக்கு குடி பெயர்கிறது.... ஆனந்தன் அடுத்த ஊருக்குப்  போகிறானே.

கோகுலத்தை விட்டு  பிருந்தாவனத்தை விட்டு,   கண்ணன் சென்று  விட்டானே. கண்களே, இன்னுமொரு முறை அவனைக்  கண்டு ஆனந்தியுங்கள். அவன் இதோ இன்னும் சற்று நேரத்தில்  கண்ணிலிருந்து  மறைந்து விடுவான்.கருத்தில் மட்டும்  நிற்பான்.   அவன் தாமரைக் கண்களைக்  கண்டு மகிழ்ந்த எங்கள் கண்கள்   இனி பனித்து , துயரத்தை தான் ஒவ்வொரு  நாளும் வெளிப்படுத்தும்.  சுகம் சோகம்  என்று வார்த்தைகள் எழுதும்போது அவ்வளவாக வித்யாசம் இல்லை, ஆனால் அனுபவிக்கும்போது அவை வட துருவம் தென் துருவம் இல்லையா?

எங்கே அவன்? அழகிய கரு நீல நெற்றியில் சிவந்த சிந்தூரத்திலகன். கண் முன்னாலேயே நிற்கிறதே அவன் கருநீல கழுத்தில் ஜொலிக்கும் வெண்ணிற முத்து மாலைகள்.     அவன் பேசும்போதெல்லாம் எவ்வளவு அழகாக அவை அசையும்!   இத்தனை நாள் எங்களை மகிழ்வித்த அந்த தெய்வத்தை இனி பிருந்தாவனத்தில் எங்கே பார்க்கமுடியும்?

எங்கள் அனைவரையும் அன்பினாலே பிணைத்து இன்பமூட்டிய அவன் எங்கள் கழுத்தில் சுறுக்கை மாட்டி விட்டதை போல் அல்லவா இருக்கிறது இப்போது?

உள்ளே இத்தனை உணர்ச்சிகளை கழுத்து வரைக்கும் கொண்டுள்ள கோபியர் வெளியே துன்பத்தை,  துயரத்தை,   காட்டிக்  கொள்ளாமல் அன்றாட வேலைகளைச் செய்து கொண்டு பேசாமல் இருக்கிறார்களே, அடடா,   இது என்ன நிலைமை என்கிறார் சூர்தாஸ்.

அவர்கள் சிரித்து சாதாரணமாக இருப்பதாக காட்டிக்  கொண்டாலும் உள்ளே ஒரு தாங்கமுடியாத எரிமலையை அல்லவோ  விழுங்கி  உள்ளே  சுமக்கிறார்கள்!

கிருஷ்ணா, நீ இன்றி காசியே கூட அல்லவோ அமைதி இழந்து விட்டதாம்.  அப்படி இருக்க  பிருந்தாவனத்தில் எங்கள் நிலையைச்  சொல்லவா வேண்டும்''என்று கோபியர்கள் கூறுவதை கேட்டுவிட்டு சொல்கிறார் சூர் தாஸ்  கவிதையாக.

अंखियाँ हरि दरसन की प्यासी।  
देख्यौ चाहति कमलनैन कौ,
निसि-दिन रहति उदासी।।

आए ऊधै फिरि गए आँगन,
डारि गए गर फांसी।

केसरि तिलक मोतिन की माला,
वृन्दावन के बासी।।
 
 काहू के मन को कोउ न जानत,
लोगन के मन हांसी।

सूरदास प्रभु तुम्हरे दरस कौ,
करवत लैहौं कासी।


Hari darshan ki pyasi akhiyaan hari darshan ki pyasi
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
akhiyaan hari darshan ki pyasi
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
akhiyan hari darshan ki ......
kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki........


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...