Saturday, January 8, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகங்கள்  139-141  நாமங்கள்  714-734 

 कुलोत्तीर्णा भगाराध्या माया मधुमती मही ।
गणाम्बा गुह्यकाराध्या कोमलाङ्गी गुरुप्रिया ॥ 139

Kulotheerna Bhagaradhya Maya Madhumathi Mahee
Ganamba Guhyakaradhya Komalangi Guru Priya

குலோத்தீர்ணா, பகாராத்யா, மாயா, மதுமதீ, மஹீ |
கணாம்பா, குஹ்யகாராத்யா, கோமலாம்கீ, குருப்ரியா || 139 ||

स्वतन्त्रा सर्वतन्त्रेशी दक्षिणामूर्ति -दक्षिणामूर्तिरूपिणी ।
सनकादि-समाराध्या शिवज्ञान-प्रदायिनी ॥ १४०॥

Swathanthra Sarwa thanthresi Dakshina Moorthi Roopini
Sanakadhi Samaradhya Siva Gnana Pradhayini

ஸ்வதம்த்ரா, ஸர்வதம்த்ரேஶீ, தக்ஷிணாமூர்தி ரூபிணீ |
ஸனகாதி ஸமாராத்யா, ஶிவஜ்ஞான ப்ரதாயினீ || 140 ||

चित्कलाऽऽनन्द-कलिका प्रेमरूपा प्रियङ्करी ।
नामपारायण-प्रीता नन्दिविद्या नटेश्वरी ॥ १४१॥

Chid kala Ananda Kalika Prema roopa Priyamkaree
Nama parayana preetha Nandhi Vidhya Nateshwaree

சித்களா,‌உனம்தகலிகா, ப்ரேமரூபா, ப்ரியம்கரீ |
நாம பாராயண ப்ரீதா, நந்தி வித்யா, நடேஸ்வரீ || 141 ||

 லலிதா ஸஹஸ்ரநாமம் - (714- 734 ) அர்த்தம்

 * 714 *
  कुलोत्तीर्णा   குலோத்தீர்ணா - 
அம்பாள் லலிதையின் நாமங்களில் ''குலா'' என்று நிறைய வரும். குலா என்றால் உணர்வுகளின் ஒட்டு மொத்தம் என்று ஒரு அர்த்தம். அந்தக்கரணம் வெளிப்புற உணர்வுகள் இதில் ஐக்கியம். அம்பாள் இதெல்லாம் கடந்தவள். ப்ரம்ம ஸ்வரூபமானவள்

* 715 *
भगाराध्या  , பகாராத்யா - 
சூரிய மண்டலத்திற்குள் மனிதர்களால் நுழைந்து சூரியனை நெருங்க முடியாது. அம்பாளை ஒரு சக்கரமாக அமைத்து வழிபடுவது வழக்கம். மறைவாக ரஹஸ்யமாக வழிபடுவது முறையாக இருக்கிறது. ஸ்ரீ சக்ரம் முக்கோணங்களாக சக்தி ஸ்வரூபமாக அமைந்திருக்கிறது. சர்வம் சக்திமயம்.

* 716 *माया மாயா - 
அம்பாளே மாய ரூபத்திலும் காணப்படுபவள். நிரந்தரமற்றது. ப்ரம்மம் எல்லையும் காலமும் கடந்தது.

* 717 *
मधुमती   மதுமதி  - 
யோகத்தில் ஏழாவது நிலை தன்னை மறந்த மயக்கம். மது என்றால் தேன் என்று பொருள். மதி என்பது புத்தி. சாந்தோக்ய உபநிஷத் என்ன சொல்கிறது? (III.i.1) ''asau vā ādityo devamadhu'' அதாவது அதோ தெரியும் சூரியன் அவன் தான் தான் தெய்வங்களின் தேன்'' . சூரியன் தான் மனிதகுலத்தின் எல்லா நற்செயல்களுக்கும் மொத்த உரு. அதனால் தான் தெய்வங்களுக்கு உகந்தவன் சூரியன். இனித்தவன். மது.

* 718 *
मही । மஹி - 
மஹி என்றால் பூமி. அம்பாளின் தோற்றம். எங்கும் எதுவுமாக நம் கண்களுக்கு காண்பவள்.
s
* 719 *
गणाम्बा  கணாம்பா - 
கணேசன், கணபதி, கணேஸ்வரன் என்றால் விநாயகர். பிள்ளையார். அவனது தாய் அம்பாள். அவள் சகல பூதகணங்களும் தாயானவள் என்று இந்த நாமம் கூறுகிறது.

* 720 * 
गुह्यकाराध्या குஹ்யகாராத்யா -
ரகசிய இடங்களில் வழிபடப்படுபவள். தாந்த்ரீக உபாசனை ரகசியமாக நடத்தப்படுவது. அதில் பிரதான தெய்வம் அம்பாள் ஸ்ரீ லலிதை.

* 721 *
कोमलाङ्गी  கோமளாங்கீ- 
அழகு பிம்பமாக காட்சி அளிப்பவள். மென்மையான பெண்மை கொண்டவள். என்றாலும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எனும் முத்தொழில் புரிபவள்.

* 722 * गुरुप्रिया குருப்ரியா- 
ஆசான்கள், ஆசிரியர்கள், ஆச்சர்யங்களை விரும்புபவள் . இங்கே சகல ஆசார்யர்களிலும் உயர்ந்த பரமேஸ்வரனையே குறிக்கும். சிவகுரு என்று தானே அவருக்கு பெயர். அவளே சிறந்த குருபத்னி. அம்பாளுக்கு தந்த்ர ஸாஸ்த்ரத்தை உபதேசித்தவர் சிவன் தான். ஸ்ரீவித்யா உபாசனை.

* 723 * 
स्वतन्त्रा  ஸ்வதந்த்ரா- 
எவ்வித கட்டுப்படும் இல்லாத சுதந்திரமானவள் அம்பாள். 64 கலைஞானங்களையும் தன்னுள் கொண்டவள்.

724 * 
सर्वतन्त्रेशी  ஸர்வதந்த்ரேஶீ
சகல சாஸ்த்ர தந்திரங்களுக்கும் தெய்வமானவள்.

* 725 *
दक्षिणामूर्तिरूपिणी । தக்ஷிணாமூர்தி ரூபிணீ - 
தென் திசை நோக்கி மோனத்தவம் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமானவள் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை

* 726 *
सनकादि-समाराध्या  ஸனகாதி ஸமாராத்யா- 
தக்ஷிணாமூர்த்தி அருகே அமர்ந்திருக்கும் முதிய முனிவர்கள் சனகாதியர் . அவர்கள் தொழும், வணங்கும் தெய்வம் அம்பாள் ஸ்ரீ லலிதை என்று இந்த நாமம் உணர்த்துகிறது.

* 727 *
शिवज्ञान-प्रदायिनी - ஶிவஜ்ஞான ப்ரதாயினீ - 
நமக்கு சிவஞானம் தரவென்றே தோன்றிய தெய்வம் அம்பாள் ஸ்ரீ லலிதா. ஞானத்தின் எல்லை மோனம். மோனத்தின் குரு சிவன். த்யானஸ்வரூபன். சிவனை அனுபவிக்க ஞானம் தருபவள் அம்பாள். சிவன் சர்வஞன். சகல ஞானங்களின் இருப்பிடம் அல்லவா?

* 728 *
 चित्कलाऽ   சித்களா- ‌ 
ஒவ்வொரு ஜீவனிலும் உள்ளே ஆழத்தில் விளங்கும் சக்தி தான் அம்பாள். ப்ரம்ம சக்தி.

* 729 *
ऽनन्द-कलिका  ஆனந்த கலிகா- 
ஜீவர்கள் எதை ஆனந்தம் என்று களிக்கிறார்களோ அந்த ஆனந்தத்தின் பிறப்பிடம் அம்பாள் - தைத்ரிய உபநிஷத் ஆனந்தம் என்பதை நீளமாக விவரிக்கிறது. அதற்குள் இப்போது போகவேண்டாம். சிவனோடு ஐக்யமாவதே, சிவத்தில் சேர்வதே பரமானந்தம்.

* 730 *
प्रेमरूपा   ப்ரேமரூபா - 
ஸ்ரீ அம்பாளுக்கு நீயே ப்ரேமையின் உருவம் என்று இந்த அழகான பெயர். தாய் என்றாலே அன்பு என்று அர்த்தம். தாய்க்கு தாயான பரமேஸ்வரியின் ஆனந்த ஸ்வரூபத்தை எப்படி விளக்குவது?

* 731 *
 प्रियङ्करी । ப்ரியங்கரீ - 
இதெல்லாம் நாம் தேடுகிறோம், விரும்புகிறோமோ அதெல்லாம் நமக்கு பிரியத்தை அளிக்கும் அம்பாள் ஸ்ரீ லலிதையின் தோற்றமே. நமது மகிழ்ச்சிக்கு பிரியத்துக்கு காரணமானவள் .

* 732 *
नामपारायण-प्रीता  நாமபாராயண ப்ரீதா- 
தனது நாமங்கள் மீண்டும் உச்சரிக்கப்படுவதை விரும்பும் அன்னை அம்பாள் லலிதை. லலிதா சஹஸ்ரநாமத்தை எல்லோரும் அடிக்கடி உச்சரிக்கவேண்டும் என்பதை காட்டும் நாமம்.

* 733 
 नन्दिविद्या  நந்தி வித்யா -
நந்தி தேவன் கற்பிக்கும் ஞானமானவள் ஸ்ரீ லலிதாம்பிகை என்று இந்த நாமம் குறிக்கிறது.
அதாவது நந்திதேவன் வணங்கும் தொழும் தேவி. ஸ்ரீ வித்யா உபாசகர்கள் பன்னிரண்டு ரிஷிகள். அதில் பிரதானமானவர் நந்திதேவர். நந்திதேவர் ரிஷி என்றும் சிவனின் வாகனம் என்றும் சொல்கிறார்கள்.

* 734 *
नटेश्वरी  நடேஸ்வரி - 
நாட்டியமாடும் ஈஸ்வரி. ஆடலரசன் நடேசனுக்கு, சிவனுக்கு, ஈடாக நவரச தாண்டவ நடம் ஆடுபவள் அம்பாள். ஆண் ஆடினால் தாண்டவம் , பெண் ஆடினால் நாட்யம் . ரெண்டும் ஒன்றான அம்பாள் எதுவும் ஆடுவாள். நடேஸ்வரி. சிவா தாண்டவ இலக்கணம்: ஜண்ட டுகு டுகுடுகுடு டுகுகுடு டும்மகிட்ட கிடடக ஜனுட ஜனுட டகி ஜனுட ஜனுட டக ஜகனம் ஜரிடக ஜகுனம் நகநக ''
கண்ணை மூடிக்கொண்டு சிவ பார்வதி நடனம் மனதில் கேட்டு ரசியுங்கள்.

சக்தி பீடம்:    மானஸா தேவி ஆலயம், உத்தராஞ்சல்.

ஹரித்துவார் செல்பவர்கள் அவசியம் தரிசிப்பது உத்தரகாண்டத்தில் உள்ள மானஸா தேவி ஆலயம் எனும் சக்தி பீடம். ஷிவாலிக் குன்றுகளின் உச்சியில் வில்வ தீர்த்தம் எனும் இடத்தில் அமைந்த ஆலயம். ஹரிதுவாரை சுற்றி உள்ள ஐந்து தீர்த்தங்களில் ஒன்று. நாகராஜா வாசுகியின் சகோதரி மாநஸா தேவி.
மானஸா என்றால் மனதின் விருப்பம் என்று அர்த்தம். சிவனின் மனஸிலிருந்து தோன்றியது இந்த சக்தி என்பார்கள். பக்தர்களின் மனதில் தோன்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் தேவி. விருப்பம் நிறைவேறு முன் இந்த ஆலயத்தில் உள்ள மரங்களின் கிளைகளில் நூலோ, வஸ்திரமோ முடிந்து வைப்பார்கள். அது நிறைவேறிய பின் இங்கே மறுபடியும் வந்து வணங்கி அந்த நூலை, வஸ்திரத்தை அவிழ்த்து விடுவார்கள். மலை மேல் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு மலை ஏறி நடந்து செல்லவேண்டும்.  கயிற்றில் தொங்கிக்கொண்டு ஊர்ந்து செல்லும் வாகனமும்(cable car)உண்டு. “மான்ஸா தேவி விண்வெளி வாகனம்'' என்று பெயர் . அருகே உள்ள சண்டி தேவி, மாயா தேவி ஆலயங்களுக்கும் இதில் செல்லலாம். மலையடிவாரத்திலிருந்து மேலே தூக்கிச் செல்லும் வசதி இது. 178 மீட்டர் உயரம் 540 மீ நீளம் மலை ஏறி செல்லாமல் இதில் பயணம் செய்யலாம். கீழே வெள்ளிக்கம்பியாக கங்கை ஜில்லென்று ஓடுவதை, ஹரித்துவார் கிராமத்தை முழுதுமாக மேலே இருந்து பார்த்து மகிழலாம். இது ஒரு சித்தபீடம் . தேவிக்கு இங்கே இரு சிலைகள். ஒன்று எட்டு கைகளுடன், மற்றொன்று மூன்று தலைகள், ஐந்து கரங்களுடன். எதற்கு என்று என்னை கேட்டால் பதில் சொல்ல தெரியாது.
இந்த ஆலயம் காலை 8 மணி முதல் மலை 5 மணி வரை திறந்து இருக்கும். கிட்டத்தட்ட 200-300 வருஷங்களுக்கு முன்பு இந்த ஆலயத்தை அமைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே சிறு கடைகள் கோவில் பூஜா சாமான்கள் விற்கிறார்கள். கடையில் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். இப்போதெல்லாம் பஸ், ரிக்ஷா, வாடகை கார் வசதிகள் இருக்கிறது அம்பாளின் அனுக்ரஹத்தால்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...