Friday, January 31, 2020

RATHA SAPTHAMI



இன்று என்ன  விசேஷம் ?  J K  SIVAN  

இன்று  ரத சப்தமி.    தை மாத  வளர்பிறை  ஏழாம் நாள்.  இது பற்றிய ஒரு சிறு கதை.
ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி. பூரண கர்ப்பவதியாக இருந்த ஒரு சமயம் கணவர் காஷ்யப ரிஷிக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது தாயே, ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்டான்.

'' இரு கொண்டுவருகிறேன்'' என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து உள்ளே வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .

''ஏன் என்னை காக்கவைத்து, லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை  அவமதித்து   உதாசீனமா பண்ணினாய்.     நீ செய்த காரியத்துக்காக உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான் வந்த பிராமணன்..

பிராமணனின் சாபத்தை கேட்ட அதிதி அதிர்ச்சியடைந்து, கணவர் காஸ்யபரிடம் விஷயத்தைச் சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே அதிதி, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்'' என்று ரிஷிகாஷ்யபர் வாழ்த்துகிறார். ஒளி பிரகாசமான சூரியன் அதிதியின் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை எடுத்து தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.   காலை ஸ்நானம் பண்ணும் போது தலையில் வைக்கும் எருக்க இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி அன்று தர்மம் செய்தால் பலமடங்கு புண்ணியம். இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். . ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இன்னொரு விஷயம் ;
மகாபாரதப் போரில் அர்ஜுனனால் /அம்பை ஆணாகிய சிகண்டியால் யால் வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார்.

''வியாஸா, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்றார் பீஷ்மர்.

"பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் கௌரவர்கள் செய்த தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.'' --- வியாசர்.

''ஆம் வியாஸா , சபை நடுவே பாஞ்சாலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. வியாஸா இதற்கு பரிகாரம் என்ன, விமோசனம் எது ?

'பீஷ்மா, எப்பொழுது உன் தவறை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும், செய்த கொடுமைகள் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை  கட்டாயம் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்றார் வியாசர். 


''சூர்யா   நீயே  உன் நெருப்பைக் கொண்டு  என்னைப் சுட்டுப் பொசுக்கு''  என கெஞ்சுகிறார்  பீஷ்மர்.

''இந்தா  பீஷ்மா, இது  எருக்க  இலை.  ''அர்க்கம்'' என்று பெயர்.   அர்க்கன்  என்றால் சூரியன். இதை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை.அதேபோல் பிரம்மச்சாரியான உன்னையும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார் வியாசர்..

உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.

நமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையை என்று தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான்.

எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா?

சூரியனுக்கு நமஸ்காரம்.........

Thursday, January 30, 2020

GITANJALI



கீதாஞ்சலி    J K  SIVAN 
ரவீந்திரநாத் தாகூர் 

                                                         30.   என் எண்ண  எதிரொலி 
       
30.  I came out alone on my way to my tryst. 
But who is this that follows me in the silent dark?
I move aside to avoid his presence but I escape him not.
He makes the dust rise from the earth with his swagger; 
he adds his loud voice to every word that I utter.
He is my own little self, my lord, he knows no shame;
 but I am ashamed to come to thy door in his company.

யாரோ  நம்மை  பின் தொடர்கிறார்கள். நம்மை, நம் பேச்சை, செயல்களை கூர்ந்து கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்தால் எவ்வளவு சங்கடமாக இருக்கும்.  தெரியுமல்லவா?  அதே தான். 



நான் எப்படியோ உன்னை சந்திக்க வேண்டும். அந்த எண்ணத்தோடு தான் நான் தனியே உன்னைத்தேடி வந்தவன். இந்த இருளிலும்   துளியும் சப்தமே போடாமல் யார் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டி
ருப்பது யார். நான் நின்றால்  நிற்பது, நான் திரும்பினால்  தானும்  திரும்புவது,  யார் இப்படி  என்னை தொடர்வது.  சரி யாரோ  வேகமாக போவதற்கு நாம் இடையூறாக இருக்கிறோம் போல் இருக்கிறது. சரி அவ்வளவு அவசரமாக போவதாக இருந்தால் முன்னால் என்னை தாண்டி போகட்டும் என்று ஓரமாக நின்று வழி விட்டேன்.   அவனோ /அவளோ  அதுவும்  நிற்கிறது. 

 எனக்குள் ஒரு ஆர்வம்.  அவன் யார் என்று அறியாமல் விடப் போவதில்லை. அட்டகாசமாக அவன் டப்டப் என்று நடக்கும் அந்த அதிகார டாம்பீக தோரணையில் அவன் கால்களால் புழுதியைக் கிளப்பி விட்டு அல்லவோ செல்கிறான்?  நான் சொல்லும் மிருதுவான வார்த்தைகளை உரக்க  காது செவிடுபட  எதிரொலிக்கிறான் . எதற்கு  உரத்த குரலில்  பிரதிபலிப்பு?

ஓஹோ  நீ  வேறு யாரோ அல்ல. எப்படி என்னில் என் நிழல் மறைந்திருக்கிறதோ அதுபோல் அவன் என்னுள்  உறைபவன் தான் நீ. . என்னில் பாதி.  அவனே  'நான்''   என்கிற போது  அவனுக்கு என்ன  அதில் வெட்கம்  சொல்லிக்கொள்ள?.

''கிருஷ்ணா,  என் தலைவா,  பிரபு,    அவன்  என்  உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு, அவனோடு சேர்ந்து உன்  சந்நிதி   வாசலுக்கு  எப்படி  அவனோடு நான் வருவேன்?  இப்படி நினைக்கும்போது எனக்கு தான்  என்மேலேயே  வெட்கமாக,  கஷ்டமாக இருக்கிறது. மனதில்   எந்த பழங்குப்பையுமில்லாமல், உன் எண்ணம் ஒன்றுடனேயே தான் வரவேண்டும்.

Wednesday, January 29, 2020

HSS FAIR 2020



Dear Friends,
I am glad to advise you that in the 11th annual Hindu Spiritual and Services Fair being held at Guru Nanak College complex at Velacheri, Chennai, from 29.1.20 till 3.2.2020 we have a stall numbered U 9 at the end near Food Court area. The working hours are from 9 am till 8.30 pm.
We look forward to your visit with family and friends and collect your requirement of SREE KRISHNARPANAM SEVA TRUST PUBLICATIONS ON MEAGRE DONATION JUST TO COVER THE SUBSIDISED COST OF PRINTING.
Most of the time I am available at the Stall to receive you all and meet you.

எங்கள்  ஸ்டால்  U 9

29.1.2020 இன்று காலை  9 மணிக்கு  குருநானக் காலேஜ் சென்று  இரவு  9 மணிக்கு  திரும்பினேன். நடுநடுவில்  ஒரு சில நிமிஷங்கள் நிற்பதும்  சற்று நடப்பதும்   போக  மீதி நேரத்தை  ஒரு நாற்காலியில்  உட்கார்ந்தே நாள் முழுதும்  கடத்துவது  81+ல்  சிரமம் தான்.   உங்களுக்கு ஒரு நிம்மதி என்ன வென்றால்  எனது விடாத எழுத்திலிருந்து  6 நாள்  விடுதலை.  எனக்கு நடு நடுவே   ஐந்து பத்து நிமிஷங்கள்  அவ்வபோது வீட்டிலிருந்தால்  படுப்பது  இங்கே முடியாது.
நான் கவனித்தவரை   வயது வித்தியாச மின்றி   ஆண்கள் தான் அநேகர்  தேனீக்களாக ஒவ்வொரு ஸ்டாலி லிருந்தும்   நோட்டீஸ்  சேகரிக் கிறார்கள். கைநிறைய, சிலர்  பை  நிறைய.    பெண்கள் கையில் அவ்வளவு கலர் காகிதங்களை காணோம். முக்கால் வாசி  பெண்கள் தனியாக வருவதில்லை. ஏதாவது மென்று கொண்டே,  கொரித்துக் கொண்டே ,அல்லது   சுகமாக  நாக்கால்  ருசி பார்த்துக்கொண்டே  இருபக்கமும்  உள்ள  ஸ்டால்களை    பார்த்தும்  பார்க்காமலுமாக நடந்தார்கள்.   நிறைய  பேர் கையில்  மைதா மாவில் செய்த கோனில்  cone  குல்ஃபீ.  kulfi யைப்   பார்த்ததால்  எங்கள்  ஸ்டால்  stall  வரிசைக்கு   அடுத்த  வரிசையில் இருந்த   உணவு தின் பண்டப் பகுதி  நன்றாக  கவனிக்கப் படுகிறது என்று புரிந்தது.

இலவச சில நிமிஷ த்யானம்,  யோக பயிற்சி பெறுகிறார்கள்.  அடுத்த ஸ்டால் சென்றால் நிச்சயம் அந்த அனுபவம் மறந்துவிட நூற்றுக்கு  ஆயிரம் மடங்கு  வாய்ப்பு என்று தோன்றுகிறது.  போலீஸ் காரர்கள் ஒலிபெருக்கியில் மொபைல் போன், கைப்பை  திருடர்களைபற்றியே  ஸ்தோத்ரம் செய்து  கொண்டிருந்ததை பொதுமக்கள் செவிமடுப்பதில்லை.  அநேகர்  திருட்டு கொடுத்துவிடுவது இந்த வருஷமும்  கொஞ்சமாவது குறைய வேண்டும்.
வருஷா வருஷம்  இந்த  HSSF  THE  HINDU SPIRUTUAL & SERVICES FAIR   ஹிந்து   ஆன்மீக மற்றும் சேவை  கண்காட்சி  நிறுவனம் அருமையாக  ஒரு 6 நாள் பல தரப்பட்ட சேவை மையங்களுக்கு இலவசமாக இடமளித்து அவர்களை ஊக்குவிப்பது தொடர்ந்து பதினோரு வருஷங்களாக  நடந்துவருகிறது.

சேவா நிறுவனங்களில் தொண்டு புரிவோர்க்கு இலவசமாக  காலை  மதிய இரவு உணவு தருகிறது.   பார்க்க வரும் ஜனங்களுக்கும்   கண்காட்சிக்கு  நுழைவு கட்டணம் இன்றி  இலவச  அனுமதி.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட்  ஸ்டால் U-9 வரிசையில் உள்ளது. கடைசி வரிசையில் இருந்தாலும் நமக்கு அடுத்து உணவு தின்பண்ட ஸ்டால் வரிசை என்பதால் நிறைய அதற்கு வருபவர் களின் நடமாட்டம் நமது வரிசைக்கும் ''புல்லுக்கு மாங்கு பொசியுமாம் '' மாதிரி  பார்வை யாளர்கள் வருகை தருகிறார் கள்.

சில தெரிந்த முகங்கள், பல தெரியா தவை.  சில  சிறுவர்களுக்கு இலவசமாக புத்தகங் கள் வழங்கினேன்.

ஸ்ரீ  V .R . சித்தானந்தம்,  ஸ்ரீ   A .K .ரமணன்  போன்ற  நண்பர்கள்  வருஷா வருஷம் எனக்கு  உதவி  செய்து கொண்டு  என்னோடு அவ்வப்போது முடிந்த நேரத்தில் ஸ்டாலில் இருந்து பார்வை யாளர்களுக்கு சேவை செய்வது  எனது  பூர்வ ஜென்ம புண்யம்.

இந்த வருஷமும் அநேக  முகநூல்  FB , வாட்ஸாப், மின்னஞ்சல் EMAIL  நண்பர்களை, வாசகர்களை சந்திக்க இந்த வாய்ப்பை  உபயோகிக்க எண்ணம்.  உங்கள் பேராதரவை அன்புடன்  எதிர்பார்க் கிறேன்.

HSSF கண்காட்சி குருநானக் காலேஜில்  காலை 9 மணி முதல் இரவு  8.30மணி வரை  29.1.2020 லிருந்து  3.2.20 வரை நடை பெறுவதால் முடிந்தபோது அனைவரும் வருக , என்று  எங்கள்  ஸ்ரீ கிருஷ்ணார்ப் பணம் சேவா டிரஸ்ட் ஸ்டாலுக்கும்  (U 9) விஜயம் செய்க என்றும் வேண்டுகிறேன். புத்தகங்கள் அங்கேயே பெறலாம்.

Tuesday, January 28, 2020

MY WEALTH 2

நான்  பெற்ற  செல்வம்  2                    J K  SIVAN 
                                                                                                                                                                                   சகலகலா வல்லவர்  ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் 

2013ல்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்கம்  நாங்கள் துவங்கு முன்பு எனக்கு   இவரைத் தெரியாது.  கிருஷ்ணனால்  அறியப்பட்டவர்.
மின்னஞ்சலில் என
து கட்டுரைகள் கதைகள் எழுதினேன்.  அம்ருத வர்ஷிணி  என்று  ஒரு குழாம் சிறந்த பல  வல்லுனர்களின்  ஆன்மீக  கட்டுரைகளை,  தெய்வீக  இலக்கிய  சம்பந்த  விஷயங்களை அழகாக தினமும் மின்னஞ்சலில்  அனுப்பிக் கொண்டிருந்தது. எனக்கு  மற்றொரு நண்பர்  இந்த அம்ருத வாஹினி/அம்ருத வர்ஷிணி  மின்னஞ்சல் குழு பற்றி சொல்லி எனது கட்டுரைகளை அதற்கும் அனுப்ப சொன்னார்.  அவ்வாறே செய்தபோது  அந்த குழுவை வெகு சிறப்பாக  இயக்கி வரும் ஸ்ரீ  ஆனந்த்  வாசுதேவன் பழக்கமானார் . அவரது குழுவின் மூலம் எண்ணற்றோர் எனக்கு பரிச்சயமானார்கள். எனது  முதல் புத்தகம் 100 கிருஷ்ணன் கதைகளை தாங்கி வெளிவர முக்கிய காரணம் ஸ்ரீ ஆ. வி.   கம்பீரமான  விவேகானந்த  இளைஞர். வடக்கே குர்காவ்ம் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் அடிக்கடி என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வார்.  இன்றும் தொடர்ந்து எனது கட்டுரைகள், கதைகள்  இந்த மேன்மை பொருந்திய உலக பிரசித்த  மின்னஞ்சல் குழுவில் வெளியாகி வருகிறது என்று நினைக்கும்போது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் பெருமை கொள்கிறது.
இவர்  ஒரு  நல்ல   ஆங்கில, தமிழ்  எழுத்தாளர், அறிஞர்,  கவிஞர், தெய்வீக பாடல்கள் இயற்றுபவர் . அவர் இல்லத்தரசியும்  குரல் வளம் கொண்ட நல்ல பாடகி.   இவர் இயற்றிய பாடல்களை பாடி எனக்கு அனுப்பி இருக்கிறார். சென்னை வந்தபோது நேரமிருந்தால்  என்னை நங்கநல்லூரில் சந்திப்பார் . மிக துடிப்பான இந்த இளைஞரின் அம்ருத வர்ஷிணி  மாதமொருமுறை அழகிய  மின் புத்தகமாக  சிறந்த தலைப்புகளில்  பக்தி விஷயத்தை  உலகமுழுதும் பரப்பி வருகிறது.  சுறுசுறுப்பை  இவரிடம் இருந்து கொஞ்சம் கற்றுக்கொண்டேன்.  தற்போது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே   அதற்கே  நேரம்  போதாமல்  இருந்தும்  எப்படியோ  நடுநடுவே  தனது தெய்வீக பணியையும் தொடர்ந்து செய்துவருகிறார் என்று  அறியும்போது  அவரது அயராத உழைப்புக்கு  தலை வணங்கி  அவர் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
காஞ்சி மஹா பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்ட இந்த இளைஞரின் நட்பு நான் பெற்ற  செல்வம் என்று சொன்னால் மிகையாகாது.   அவர் பணி  சிறக்க ஸ்ரீ கிருஷ்ணன் நிச்சயம்  அருள்வான்.

KAALIDAS



                                    நீ  யாரப்பா?  J K  SIVAN  

நமது  பாரதத் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவன்  காளிதாசன்.  மிகச்சிறந்த உலகம் இதுவரை காணாத  அற்புத சமஸ்க்ரித கவிஞன். காலத்தால்  அழியாத அமரன்.   நமது இதிகாசங்கள், புராணங்களில்  சிலவற்றை மையமாக கொண்டு  அவன் புனைந்த காவியங்கள் என்றும் அழியாதவை. உலகமெல்லாம் வியக்கும்  சுவை படைத்தவை.  எவரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் கொண்டவன் காளிதாசன். சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவன்.  காளியின் அருளால் ஒரே ராத்திரி கவிஞனானவன்.  அவனைப்பற்றி எத்தனையோ  விஷயங்கள். ஒன்றை சொல்கிறேன்.


காளிதாசன் பல இடங்களுக்கு நடந்து சென்றவன். பல மன்னர்களை பல தேசங்களில் சந்தித்து பரிசு பாராட்டு பெற்றவன். பல பண்டிதர்களை வென்றவன். கவிதையுலகில் காவிய உலகில் முடிசூடா மன்னன். 

ஒருநாள்  பகலில் எங்கோ பட்டை தீர்க்கும்  வெயிலில்  மாட்டிக்கொண்ட காளிதாசனுக்கு  தொண்டை வறண்டு தாகம் .. தண்ணீரை தேடினான்.  சற்று தூரம் சென்றது ஒரு கிராமம் வந்தது. அதில் ஊர்க்  கோடியில் ஒரு கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் சேந்திக்  கொண்டிருந்ததைப்  பார்த்ததும்  நெஞ்சு வறட்சியும்  தாகமும்  அவளை நோக்கி செல்ல வைத்தது.   

''அம்மா  கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?''
''ஆஹா  தருகிறேன்.. நீ  யாரப்பா?''
 இவள்   பார்த்தால்  நிரக்ஷர குட்சிபோல் இருக்கிறாளே. இந்த படிக்காத பட்டிக்காட்டு பெண்ணிடம் தனது பாண்டித்யம் பற்றி  எதற்கு சொல்லவேண்டும்.  அவசியமே இல்லையே என்று நினைத்த காளிதாசன்  ''அம்மா  நான் ஒரு  யாத்ரீகன்' என்றான்.

'அதென்னப்பா  அப்படி சொல்கிறாய்?  இந்த உலகத்திலேயே   ரெண்டே ரெண்டு  பேர் தானே யாத்ரீகர்கள். ஒருவன் சூரியன் மற்றவன் சந்திரன்.  இவர்கள் தானே  காலையில் எழுந்ததிலிருந்து மாலை மறையும் வரை  ஒருவன்,  இரவில் எழுந்தது முதல் மறுநாள் விடியற்காலை வரை  இன்னொருவன் என்று விடாமல் குறித்த நேரத்தில்   ஒருவர் மாற்றி இன்னொருவர் யாத்திரை செய்பவர்கள்.
''சரிம்மா,  அப்படியென்றால் நான் ஒரு  விருந்தாளி, அதிதி என்று வைத்துக் கொள்ளேன். என்றான் காளிதாசன் .
''தம்பி, நீ ஏதோ அர்த்தம்  புரியாமல் நீ ஒரு அதிதி என்கிறாய் .   இந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு பேர் தான்  அதிதி. டெம்பரரி  விருந்தாளிகள் .  வந்து போய்விடுபவர்கள்.   இளமையும்  செல்வமும் தான் அது . நிரந்தரமில்லாதவை''  என்றாள்  அந்த பெண். 

காளிதாசன் திகைத்தான்.  ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.  ஒரு நாட்டுப்புற பெண்ணுக்கு இவ்வளவு அறிவா?  இவளை மேலும் சோதிக்க அடுத்து தன்னை யார் என்று எப்படி சொல்லலாம் என்று யோசித்தவன்   ''அம்மா  அப்படி யென்றால்  நான்  ஒரு ''பொறுமைசாலி'' என்று வைத்துக் கொள் '' என்றான்.

அவள் சிரித்தாள். நீ விவரம் தெரியாதவனாக  இருக்கிறாயே. இந்த உலகில் ரெண்டே ரெண்டு தான் பொறுமைக்கு இலக்கணம். ஒன்று பூமி, அகழ்வாரை தாங்கும் நிலம். தன்னை ஆழ தோண்டினாலும் இடம் கொடுப்பது.  மற்றொன்று  விருக்ஷம், மரம்.  வெட்டுபவனுக்கே, கல்லால் அடிப்பவனுக்கே   நிழலும் கனியும் கொடுப்பது. நீ அப்படி ஒரு பொறுமைசாலியா?  சொல்வதானால் ஏதாவது பொருத்தமாக சொல்ல வேண்டும். நீ யார் சொல்?'' என்றாள்  அந்த பெண். 

காளிதாசன் யோசித்தான். தனது திறமையை உபயோகிக்க ஆரம்பித்தான்   ''அம்மா  நான் இந்த உலகிலேயே  ரொம்ப பிடிவாதக்காரன்  சளைக்காதவன் '  புரிந்துகொள் ' என்றான் காளிதாசன்.

குடத்து நீரில் எடுத்து கொஞ்சம் அவன் மேல் தெளித்து சிரித்தாள் அந்த பெண்.  உனக்கு உலகிலேயே பிடிவாதமாக  மீண்டும் மீண்டும்  தொடர்ந்து செயல்படுவது ரெண்டு  தான் என்று தெரியாதா ?  ஒன்று நமது நகங்கள், மற்றது தலை முடி.   வெட்ட வெட்ட  துளிர்த்து வளர்பவை.ஓயாமல் தொடர்ந்து இப்படி செய்பவை. நீ  அவ்வளவு பிடிவாதக்காரன் என்று என்னை நம்ப சொல்கிறாயா?''  என்றாள்  அவள்.

கோபம் வந்துவிட்டது காளிதாசனுக்கு.   உரக்க  அவளிடம் சொன்னான்  ''சரி சரி  நீ என்னை உலகிலேயே சிறந்த  ஒரு முட்டாள் என்று எடுத்துக்கொள்'' என்றான். அதற்கும் அவள் தயாராக  பதில் வைத்திருந்தாள் .

''அப்பனே  உலகில் ரெண்டு முட்டாள்கள் தான் சிறந்தவர்கள். ஒன்று ஞானமில்லாமல், திறமையில்லாமல் ஆளும் ஒரு அரசன்.  இன்னொருவன்  அவனது அடிவருடி மந்திரி. அரசன் எது சொன்னாலும் செய்தாலும் ஆமாம் சாமி  போட்டுக்கொண்டு  அவனையே புகழ்ந்து கொண்டு  அவன் பின் செல்பவன்.  உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லையே''  என்றாள் .

''அம்மா  என்னை மன்னித்துவிடு. நான் உன்னை தவறாக எடை போட்டுவிட்டேன். நீ யார் என்று  என்னை கேட்டாய்  எனக்கு பதில் தெரியவில்லை,  இப்போது நான் கேட்கிறேன் உன்னை . இவ்வளவு சாதுர்யமாக எனக்கு பதில் சொன்ன நீ யாரம்மா? '' அவள் காலில் விழுந்தான் காளிதாசன்.  எழுந்திரப்பா என்று அவனை தொட்டெழுப்பியவள் முகத்தை பார்த்த  காளிதாசன் அங்கே அந்த பெண்ணை காணவில்லை, சாக்ஷாத் சரஸ்வதி தேவியே புன்னகைத்து நின்றாள்.   இரு  கை கோர்த்து கும்பிட அவனை பார்த்து 
''காளிதாஸா நீ அறிஞன், நீ யார் என்று உன்னை உணர்ந்தால் நீ ஒரு  சாதாரண மனுஷ்யஜீவன்   என்று புரிந்து கொள்வாய்.'' என்ற வாக்தேவி மறைந்தாள்.    அப்போது உருவானதே   காளிதாசனின் சியாமளா தண்டகம். இதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

நாம்  சாதாரண ஜீவன்கள்  ஆத்மாவால், பரமாத்வால் ஆட்டுவிக்கப் பட்டு  அசைபவர்கள் என்ற ஞானம் ஒன்றே போதும். சதா இந்த சிந்தனை இருந்தால் அதுவே  பகவான் மேல் பக்தியை வளர்க்கும். அறிவை வளர்க்கும். 

SESHADRI SWAMIGAL




                                ப்ரம்ம ஞானி படமாகிறார் J K  SIVAN

சில  இளைஞர்கள்  ஒன்று சேர்ந்து ஒரு பெரிய காரியத்தை செய்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத ஒன்றை செய்யவேண்டும். எல்லோருக்கும்  உதவி, ஆனால் எவரிடத்தும் நெருங்காத ஒரு சிறந்த ப்ரம்மஞானியை  படமாக்கி  பட்டிதொட்டிகளுக்கும்  புரிய செய்யவேண்டும். எல்லோருக்குமே அவரை  தெரியப் படுத்த  வேண்டும் என்ற ஒரே எண்ணமே தவிர  இதில் காசு பார்க்க அல்ல என்று அந்த இளைஞர்கள் என்னிடம் ரெண்டு நாட்களுக்கு முன் கூறினார்கள்.


அந்த ப்ரம்ம ஞானியை படமாக்குவது என்றால் ஒரு தகுந்த மனிதர் அந்த பாத்திரமேற்க வேண்டுமே கிடைப்பாரா என்று கேட்டபோது, ஒருவரை தேர்வு செய்தாகி விட்டது என்கிறார்கள்.  பணம் வேண்டாம் என்று நடிப்பவர்கள், இயக்குபவர்கள், அல்லது குறைந்த சம்பளத்துக்கு உழைப்பவர்கள் என்று சிலரை அடையாளம் கண்டு சமீபத்தில் வந்த  ப்ரம்மஞானியின் பிறந்தநாள் அன்று பூஜை போட்டு விட்டார்கள். ஒரு காட்சி வந்தவாசியில்  படமாக்கியும் விட்டார்கள். 

சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர் ஒருவர் இதில் முனைந்து செயல்




படுகிறார் என்ற செய்தியே எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இதற்கும் சேஷாத்திரி ஸ்வாமிகளின் அருள் இருந்தால் தான் இப்படி ஒரு எண்ணமே அவரை படமாக்க தோன்றும். அது வெற்றியும் பெறும் .

மிக கடினமான ஒரு திட்டம் இது. ஜாக்கிரதை எங்கும் எதிலும் தவறு இல்லாமல் அற்புதமாக அவரை மக்களுக்கு அளியுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினேன்.  எல்லாம் அவன் செயல். நல்லிதயம், நல்லெண்ணம் கொண்டவர்கள், சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்கள் தூக்கி விடட்டும்.  ஒருவேளை இது ஒரு சிறந்த படமாக அமையலாம் அவர் அருளால். நல்லதையே நினைத்து உதவுவோமே . ஸ்வாமியின் பக்தர்கள் அவர்களை அணுகி நல்ல விதமாக அவர்கள் பணி  சிறக்க  எல்லாவிதத்திலும் உதவி செய்வார்கள் என்று  எனக்குள் ஒரு சிறிய  குரல் சொல்கிறது. 






HSSF 2020





Dear Friends,


The 11th Hindu  Spiritual and Service Fair 2020  will be inaugurated and commence from 29th January 2020  and will be open for public freely from 8 am to 8 pm.  at Gurunanak College, Velachery, .

SREE KRISHNARPANAM SEVA TRUST  has been allotted a stall  No. U9   where all the SKST  PUBLICATIONS WILL BE AVAILABLE FOR DONORS AT A MINIMUM  QUANTUM FIXED FOR EACH.

I  WILL BE AVAILABLE DURING THIS FAIR MOSTLY AT THE ABOVE  U9 STALL TO MEET ALL FRIENDS AND KRISHNA DEVOTEES AND 
INTERACT WITH THEM.

PLEASE HONOUR US WITH YOUR VISIT TO STALL  U9 OF  SKST AND OBLIGE

J.K. SIVAN 9840279080




Monday, January 27, 2020

SUR SAGARAM






சூர் சாகரம்    J K   SIVAN  

                         வார்த்தை தேடுகிறேன் கிருஷ்ணா ....

கோகுல பாலகன் கண்ணன்  பயல்  விஷமக்கார  குழந்தை.  அவனை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவே  ஆசைப்பட்டார்கள். இன்னும் தவழக்கூட  தெரியவில்லை. கைகால்களை மட்டுமே  அசைத்து மயங்கினான். கால் கட்டை  விரலை உதடுகள் வரை கொண்டுவந்து  கால் கட்டைவிரலை சுவைத்தான். தனது கைவிரல்களோடு விளையாடி அழகு பார்த்துக் கொண்டான். பேசத்தெரியாத பச்சிளம் குழந்தை.
இப்படி ஒரு சின்னஞ்சிசுவை  கொல்ல  மதுரா நகரத்தில்   ராஜா  கம்சனின் அரசவை மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்.

''நான் போகிறேன்''  ''நான் போகிறேன்'' என்று பல  பலம் மிக்க ராக்ஷஸர்கள் அந்த குழந்தையை கொல்ல  முன்வந்தார்கள் .  நான் போகிறேன் காரியத்தை கச்சிதமாக முடித்து வருகிறேன் என்று  ஒரு ராக்ஷஸி குரல் கொடுத்ததால் அனைவரின் கவனமும் அவள் மேல் படர்ந்தது.

''நீ எப்படி அந்த கிருஷ்ணனை கொல்வதாக  திட்டம் வகுத்துள்ளாய்?''  கம்சன் குரல் எழுப்பினான்
''மற்ற ராக்ஷசர்களால் முடியாததை என்னால் சுலபமாக முடிக்க முடியும்'' என்றாள்  அந்த அரக்கி.

''எப்படி சொல்கிறாய் அவ்வளவு நிச்சியாமாக?''

''ஒரு சிறு குழந்தையை  பார்க்க  ஆண்கள் போவதைவிட ஒரு பெண் போனால் சுலபமாக அனுமதி கிடைக்கும். அதுவும் ஒரு தாயாக.  நான் ஒரு அழகிய  கோபியாக  கோகுலத்தில் நுழைவேன். நந்தகோபன் அரண்மனையில் மற்ற பெண்கள் குழந்தையை பார்க்க போகும்போது நானும் அவர்களோடு சேர்வேன். அவனைக் கொஞ்சுவேன். என் மடிமேல் போட்டுக் கொள்வேன். எப்படியாவது நடித்து அவன் தாயின் அன்பை பெற்று அவனுக்கு பாலூட்ட  அனுமதி பெறுவேன். அதில் தான் என் திட்டத்தின் வெற்றி இருக்கிறது?

''எப்படி?

''என் முலைக்காம்புகளில்   கொடிய கருநாக விஷத்தை தடவிக்கொண்டு தான் அவனை மடியில் வைத்து தாலாட்டி சீராட்டி பாலூட்டுவது போல் முயல்வேன். பாவம் அந்த முட்டாள் குழந்தை என்னிடம் பால் குடிக்க விரும்பும்.ஆனால்  என் முலைக்காம்புகள் மேல் தடவப்பட்ட  விஷம் அதன் உயிரை குடித்துவிடும்.
அது தூங்குவதாக சொல்லி குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு அடுத்த கணம் நான் இங்கே இருப்பேன்''   இப்படி  இவர்களால்  காரியத்தை கச்சிதமாக முடிக்க இயலுமா?  ன்று  அரக்கர்கள் பக்கம் கை நீட்டினாள் அந்த  அரக்கி.

'சபாஷ்,   பூதனா  என்று கைதட்டினான்  கம்சன். அவன் முகம் மலர்ந்தது.   உன் திட்டம்  இயற்கையாக இருக்கிறது என்று மெச்சினான் . மற்ற அரக்கர்களும் ஆமாம் என்று ஆமோதித்தனர்.

பூதனை கோகுலம் செல்ல தயாரானாள். தாயாரானாள் . அந்தப் பயலை  சிறுகுழந்தைதானே, சுலபத் தில் அவனுக்கு   விஷ மூட்டி  மீளா தூக்கத்தில்  ஆழ்த்தி கொன்று விடலாம்    கை சொடுக்கும் நேரத்தில் முடியும் ஒரு சுண்டைக்காய் சமாச்சாரம்  என்ற  கர்வத்தோடு, அளவற்ற தன்னம்பிக்கையஹோடு  பூதனை கோகுலம் வந்தாள்.   மெதுவாக  நந்தகோபன் வீட்டு வாயிலில் ஒரு அழகிய இளம் பெண்ணாக நின்றாள்.  உள்ளே இருந்து வந்த  யசோதை  வாசலில் தயங்கி நின்ற  ஒரு யாதவ பெண்ணை ''யாரம்மா நீ, என்ன வேண்டும்  உனக்கு?''   என்று கேட்டாள் அன்போடு.

''இங்கே ஒரு குழந்தை இருக்கிறானாமே, கிருஷ்ணன் என்று, அவன்  எல்லோரையும் மயக்கும் அழகன் என்று கேள்விப்பட்டேன். அவனை பார்க்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவல்  அம்மா எனக்கு?  எப்படி கேட்பது என்று தயங்கி வெளியில் நின்றேன்.

''யார் அம்மா நீ?

''அம்மா  நான் யமுனாநதி அக்கரையில் ஒரு கிராம பெண்.  ஒரு யாதவ குடும்பம். இங்கே வந்த போது   எல்லோரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு இங்கே வந்தேன்''
 என்று மிருதுவாக பதில் சொன்னாள்  பூதனை.

''உள்ளே  வா அம்மா''
பூதனை வரவேற்கப்பட்டாள், அவளுக்கு  பழங்கள் பால், பணியாரம் எல்லாம் அளிக்கப்பட்டது. பேசினாள் . நடுவே நடுவே  கண்கள் கண்ணனை தேடின.''

''அம்மா  நான் குழந்தையை பார்க்கலாமா. சீக்கிரம் செல்லவேண்டும்''

'' ஆஹா இதோ இருக்கிறானே என்று  யசோதை ஜாடை காட்ட  ஒரு பணிப்பெண் கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு வந்தாள் ''

கிருஷ்ணன் அழகில் உண்மையாகவே  பூதனை மயங்கினாள். அவளைப்பார்த்ததும்  கண்ணன் பணிப்பெண் மடியிலிருந்து புன்னகையோடு  பூதனையிடம்  தாவினான். பொக்கை  வாயோடு   கண்கள் மலர  வெகுளியாக  சிரித்தான்.  கேவினான்.  சிறு விரல்கள் கொண்ட கைகளை கொட்டினான்.

''ஆஹா  இந்த  மடச் சிறுவன்  வசமாக  என்னிடம் மாட்டிக்கொண்டான்'' என்று  பூதனை உள்ளூர மகிழ்ந்தாள்'  

 மடியில் வைத்து கொஞ்சினாள் பூதனை. அவனும் ஆவலுடன் விளையாடினான்.  சிணுங்கினான் . தூக்கி வைத்துக்கொண்ட  பூதனை,   யசோதையிடம் வாஞ்சையாக  கேட்டாள் .  அம்மா

அம்மா  நானும்  ஒரு  தாய், எனக்கும் என் வீட்டில் ஒரு சிறு குழந்தை, தாய்ப்பால் அருந்தும் இளம் சிசு இருக்கிறது, நான் உடனே  போகவேண்டும், அதற்குமுன் எனக்கு ஒரு விருப்பம், அனுமதிப்பாயா?

''தாராளமாக  நீ  சொல்லலாம் என்ன உன் விருப்பம்?

''என் குழந்தை போலவே  இந்த அழகிய குழந்தைக்கும் நான்  பாலூட்டட்டுமா? அதில் எனக்கு ரொம்ப விருப்பம். அனுமத்திப்பீர்களா?''

ஒரு தாய் மற்றொரு தாயின்  ஆசையை பூர்த்தி செய்ய தயங்குவாளா? சரியம்மா  என்றாள் .
பூதனை எதிர்ப்பார்த்த நேரம் வந்துவிட்டது.  அந்த சிறு பயல் முகத்தை உயிரோடு ஒரு கணம் பார்க்கலாம் என்று நோக்கியபோது அவன் கொள்ளையாக சிரித்தான்.  அந்த சிரிப்புக்கு அர்த்தம் அவளுக்கு தான் புரியவில்லை.

''வா  நீயே  வந்து வகையாக என்னிடம் தனியாக மாட்டிக்கொண்டாயா.  என்னை அணைத்து உன் முலையில் பால்  குடிக்க வை.  அப்போது தான்  நீ  அசையாமல் நான் உன்னை பிடித்து உன் உயிரைக்குடிப்பேன்.  தாயென வந்த  பேயே, எனக்கு  இன்று  பால் தர வந்த உனக்கு நாளைக்கு பால் '' என்று அவள் முலையை பிடித்து  அழுத்தி அவள் உயிரை உறிஞ்சினான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் முலையில் வாய் வைத்தவுடன் நஞ்சு தீண்டி  இறப்பான் என்று எதிர்பார்த்த பூதனை, அவன் அவள்  குலையை திருகி   நெஞ்ஜினிலிருந்து உயிரையே உறிஞ்சி குடித்த போது திணறினாள், ஓ வென்று அலறினாள், அவள்  வேஷம் கலைந்தது. ஒரு அழகிய பெண் இருந்த இடத்தில் இப்போது  மாபெரும் ராக்ஷஸி ஒருவள் உயிரற்று கிடந்தாள்.  குழந்தை கிருஷ்ணன் அவள் மீது படுத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

கடைசியாக அவள் போட்ட மரண ஒலியில்  ஓடிவந்து ஒரு மாபெரும் ராக்ஷஸியின்  மார்பில் படுத்து விளையாடும் குழந்தை கிருஷ்ணனைத்தான் கண்டார்கள்.

யசோதை பாய்ந்து சென்று கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு கதறினாள். ''  கிருஷ்ணா  நானே  உனக்கு துரோகம் செயது விட்டேனே''  என்று அலறினாள்.  அவன் ''கக்''  என்று சிரித்தான்.   பேதையே, நான் தான் அவளை இங்கே வரவழைத்தது. அவளை மயக்கி அவள்  மடியில் படுத்து, அவள் பாலூட்ட காத்திருந்தது.   ஐந்து தலை  ஆதி சேஷன் மேல் படுக்கும் என்னை ஒரு சாதாரண பாம்பு விஷம் என்ன செய்யும்.  ஆனால் வகையாக என்னிடம் சிக்கிய அவள்  உயிரை உறிஞ்சி பிணமாக்கினேன். '' எனக்கு பால் கொடுக்க வந்த செயலுக்காக  என்னுடன்  பாற்கடலுக்கு அவளையும்   அழைத்து செல்வேனே '' என்று அதற்கு அர்த்தம்

மற்றொரு சந்தர்ப்பத்தில்  கிருஷ்ணா  உன்  லீலையை எப்படி  விவரிப்பேன்? முயற்சி செய்கிறேன் சொல்வதற்கு.

சர்வவேதங்களும்  சகலஉபநிஷதங்களும் , மகரிஷிகளும் ஞானிகளும்  உன்னை  முழுமையாக  அறிந்து விவரிக்க திணறுகிறார்களே.  அப்படி இருக்க  படிக்காத  பாமர  ஒரு  சாதாரண  கோபி, யசோதா எனும்  உன்  தாய் ''இனி   நீ  எப்படி  வெளியே சென்று விஷமம் பண்ணுவாய்   என்று  பார்க்கிறேன்'' என்று உன்னை  ஒரு சாதாரண விஷமக்கார  சிறுவனாக எண்ணி  உன் கண்களில் நீர் ததும்ப  உன்னை  ஒரு  சிறு  தாம்பு மணிக்கயிற்றால் வயிற்றில் கட்டிஎப்போது  நீ எப்படிப்பட்ட நடிகன் என்று தெரிந்ததே .  அந்த அதிசயத்தை எப்படி  நான்  உரைப்பேன்,  விவரிப்பேன்.?    கண்ணா நீ  ஒரு  ''பேரதிசயம்''.   இந்த ஒரு
வார்த்தைக்கு மேல்  எனக்கு  வேறு ஒன்றுமே சொல்லத்தெரியவில்லை.  என்ன செய்வேன்?

 பல காலம் கம்சனால் சிறையில் வாடிய உக்கிரசேனனை விடுவித்தாயே.  கம்சனைக் கொன்று மதுராபுரியை மீட்டு, மீண்டும்  அவனை  ராஜாவாக்கினாயே, எப்படி கண்ணா  இப்படி நீ  நீதி பரிபாலனம்  செய்ய  எங்கு கற்றாய் என்று மற்றவர்கள் வேண்டுமானால்  யோசிக்கட்டும் ? பவ்யமாக மரியாதையோடு, வணங்கி, உன் தலையைக்குனிந்து ''உக்கிரசேனரே  நீங்களே மீண்டும் எம் அரசனாக ஆளவேண்டும்'' என்றாயே அதை  எந்த  வார்த்தையால்  விவரிப்பேன்? மேலே  சொன்னதை  மட்டுமே  தானே  திருப்பிதிருப்பி  சொல்ல  முடிகிறது? அது  அந்த   உக்கிரசேனனின்  உணர்ச்சியையோ, உன் கருணையையோ  விவரித்ததாக ஆகுமா?

சரி, அதை எல்லாம் விடுவோம். ஜராசந்தன் பல ராஜாக்களை வென்று அடிமைப்படுத்தி சிறையில் அடைத்து வைத்து  வாட்டின  போது, அவனை   பீமனை  வைத்து கொல்லச் செய்து, அந்த ராஜாக்களை மீட்டாயே அப்போது அவர்கள்  உன்னை வாழ்த்தினதை எத்தனை வார்த்தைகளில், எந்தெந்த வார்த்தைகளில் சொல்வேன். என்னை விடு.   யாரால்  இது முடியும்?

கிருஷ்ணனாக, நீ சொன்னதை, செய்ததை என்னால் வார்த்தைகளில் சொல்ல இயல வில்லை
என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

 ராமனாக  நீ  செய்ததையாவதுசொல்வோம் என்றால், ஒரு  சின்ன  சம்பவத்தைக்  கூட சொல்ல முடிய வில்லையே. உதாரணமாக  தனது ரிஷி  கணவர்  கௌதமர்  இட்ட சாபத்தால்  பல வருஷங்கள் கல்லாக மாறி  வாடிய அஹல்யாவை ஒரு நொடியில் உன் காலடியால் மீண்டும் உயிர்ப் பித்தாயே , அப்போது அவள் கடல் மடையாக கொட்டிய  வார்த்தைகளை  வெறும் அர்த்த மற்ற நாம் அடிக்கடி காரணமில்லாமல் நன்றி உணர்ச்சியே  இல்லாமல் சொல்லும் ''தேங்க்ஸ்'' என்ற  வார்த்தைக்கு  ஈடு கட்டினால்   பொருத்தமாகுமா? சரியா, முறையா 


எப்போதோ  நீ  நாராயணனாக கஜேந்திரனை முதலை வாயிலிருந்து  அவன்  ''ஆதி மூலமே''   என  கூப்பிட்ட கண நேரத்தில் மீட்டாயே அதையாவது விவரிக்கலாமென்றால் அது கூட முடியவில்லையே கிருஷ்ணா.! கஜேந்த்ரனின் உணர்ச்சியை சொல்ல  வார்த்தைகள் உன்னை விட பெரியதாக இருக்கும்
 போல் இருக்கிறதே. நான் எங்கே போவேன்? 

விடாத மழையில்அந்த தொத்தல் குடிசை  காற்றில் பறந்து  விழுந்த போது உடனே  ஒரு கூரை வேய்ந்தாயே, அப்போது அந்த  ஏழை  பக்தர்  நாம தேவர்  வாய் பிளந்து  ''பாண்டுரங்காஆஆஆ'' என்று அடி வயிற்றிலிருந்து  ஒலித்தாரே , அதன் பின் ஒளிந்து கொண்டிருந்த  உணர்ச்சிகளை எந்த வார்த்தைகளால், எப்படி எழுத்தால் விவரிப்பேன் சொல் ? 
மேலே  சொன்னதெல்லாம் நான் எழுப்பும் கேள்விகள்  அல்லவே அல்ல, கண்ணில்லாத சூர்தாஸ் அருமையான ப்ரஜ்பாஸி எனும் பழைய வடமொழியில்  எவ்வளவு அழகாக கேட்கிறார். அது எந்தமொழி வார்த்தைகளாக  இருந்தால் என்ன? மனதில் நிரம்பி வழியும் என் பிரார்த்தனைகளை புரிந்து ஏற்றுக் கொள் கிருஷ்ணா. என் வார்த்தைகள் அதை சொல்ல முடிந்தது அவ்வளவுதான்'' என்கிறார் சூர்தாஸ் இந்த பாடலில்.  அதன்  ஆங்கில மொழி  பெயர்ப்பு யாரோ   செய்தது:

 The voice falters when it sings of the deeds of the Lord who's an ocean of mercy. He gave guileful Putana, who posed as his mother, a mother's reward! He of whom the Vedas and the Upanishads sing as the Unmanifest, let Yashoda bind him with a rope, lamented Ugrasena's grief, and after killing Kansa made him king paying him obeisance, bowing low; Freed the kings held captive by jarAsandha at which the kingly hosts sang his praises; removing Gautama's curse he restored life to stone-turned Ahalya:' all in a moment he rescued Braj's ruler from the sea-monster running to his aid as a cow to her calf," he came hastening to rescue the king of the elephants; he got Namadeva's hut thatched. says Suradasa, O, make Hari hear my prayer  

Sunday, January 26, 2020

KRISHNA TIMES


                       கண்ணன் சொல்கிறான்...  J K  SIVAN   

என் எதிரே  கிருஷ்ணன். நேரில் அல்ல. உணர்வு பூர்வமான ஒரு  வண்ணப்படத்தில்.  காலண்டராக ஒரு வருஷம்  நாங்கள் போட்டு  நிறைய  பேருக்கு  கொடுத்தோம். அதில்  ஒன்று  என் முன்னே சுவற்றில்....எத்தனை நேரம் அவனையே உற்று பார்த்துக்கொண்டிருந்தேன் தெரியவில்லை.  நான்  நங்கநல்லூரில் இல்லை. எங்கோ விண்ணில் பறந்து கொண்டிருந்தேன். என் கால்கள் என்னை இழுத்து செல்லவில்லை. ஏதோ மெல்லிய  வலிமையற்ற சிறிய  பஞ்சுத் துண்டு  காற்றில் அடித்துச் செல்லப்படுவதைப்  போல  எந்த வித  நோக்கம், மார்க்கமும்  இல்லாமல்   நான் எங்கோ  தூக்கிச் செல்கிறதே.  தொம் மென்று கீழே  இறக்கப்பட்டேன்.....

''அட,   நான் எப்படி அதற்குள்  பிருந்தாவனம் வந்தேன்.  இந்த பெரிய  மாட மாளிகை யாருடையது.? இவ்வளவு பெரியதை நான் பார்த்ததே இல்லையே.  இந்த குளுமையான மாலைவேளையில்  நந்தகோபன் இல்லத்தின் வாசலிலா நான்! .  

சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.  எல்லாமே  ஆனந்தமாக தென்படுகிறது.   வசந்த கால மாலை   பொன்  வெய்யில் என்னையே  தங்கநிறமாக்கிக் கொண்டிருக்கிறது.  எங்கும் எதுவும் பொன் முலாம் பூசப்பட்டிருக்கிறது.  ஏதோ மஞ்சள் சிவப்பு கலந்த  மலர்  ஜமுக்காளம்  எங்கும் விரித்தாற் போல  வண்ணம் தீட்டி விட்டது. 

இது அவன் வீட்டை விட்டு வெளியே வரும் நேரம். இப்போது தான் காலையில் பசுக்கள் கன்றுகளுடன் கோவர்தன மலை  பள்ளத்தில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு  அவைகளோடு திரும்பி வந்து அவற்றை  பாதுகாப்பாக  வீட்டின் பின்புறம் கட்டிவிட்டு  இனி அவன்  வழக்கம் போல் யமுனாநதி  மதுவனத்தில்  புல்லாங்குழல் ஊதி எல்லோரும்  விளையாடும் நேரம். முன்னிரவு வரை விளையாடிவிட்டு திரும்புவான்.  எத்தனை கோபியர்கள் மான்கள் மயில்கள் காத்துக்கொண்டிருக்கும் அவனுக்காக அங்கே.   

இது யார்  என்னைப்போலவே இங்கே  இன்னொரு ஆசாமி ?  ஓ!    ஒரு கோபி.   அவள்  எதற்கு நந்தகோபன் வீட்டு வாசல் தூணின் பின்னே நிற்கிறாள் ? அவளும்  என்னைப்போல கிருஷ்ணனுக்காக  காத்திருக்கிறாளா? அவள் கையில் ஒரு பெரிய  மலர்மாலை. அதன் மணம் 'கம்' மென்று என் மூக்கை துளைக்கிறதே. 

வெகுநாட்களாக  மல்லிகை  செண்பக மலர்ச்  செடிகள் வளர்த்து அவை பூத்துக் குலுங்கும் வரை காத்திருந்து முதன்  முதலாக பூத்த அவற்றை எடுத்து தொடுத்து கண்ணனுக்கு அவற்றை அளிக்கவேண்டும் என்று அவளது நீண்ட கால ஆசை இன்று நிறைவேறப் போகிறது. அந்த பூக்களை தொடுத்தது நூலைக் கொண்டு அல்ல. அவள் மனதால், ஆனந்த கண்ணீரால், கண்ணன் மேல் அவள் கொண்ட எல்லையில்லாத  பாசத்தால் ... சங்கு போன்ற வெள்ளை வெளேர் மல்லிகை மலர்கள், அதோடு  மஞ்சள் மசேல் என்று அவனது பீதாம்பரம் போல் மஞ்சள் செண்பகமலர்கள்.  ஒன்றின் பக்கம் ஒன்றாக  அவற்றை நெருக்கமாக தொடுத்து திண்டு மாதிரி ஒரு மாலை கட்டி இருக்கிறாளே. ஒரு சின்ன சந்தேகம் அவளுக்கு  . அவன் இதை  ஏற்பானா?  ஏன் மாட்டான்? அவனுக்கு மலர் மாலைகள் என்றால் ரொம்ப ரொம்ப  விருப்பமாயிற்றே.

மாலையை  தொடுத்து கையில் ஏந்தியவாறு நந்தகோபன் வீடு  வரை வந்தவளுக்கு ஒரு திடீர்இன்னொரு  சந்தேகம், சங்கோஜம்? எதற்காக? எப்படி  திடு திப்பென்று  உள்ளே நுழைவது?.  ஓஹோ  அதற்காகத்தான் அவன் வெளியே வருவான் இந்த நேரத்தில் என்று கேள்விப்பட்டு அவனை நேரில் கண்டு கொடுப்பதற்கு இந்த தூணின் பின்னே நிற்கிறாளோ?

யாரோ வரும் சத்தம். கால் சதங்கை ஒலி, அதை தொடர்ந்து ஒரு தெய்வீக ஒளி.  மஞ்சள் பீதாம்பரம் கண்ணைப் பறிக்க,  மாலை தென்றல் அவன் சுருள்சுருளான கேசத்தை  நாட்டிய  மாட வைக்க, அவனது காதுகளில் குண்டலங்கள் முன்னும் பின்னும் ஆடி  அவனது காதிற்கு பின் சுருண்டு ஆடும் கேசத்தை தொட முயல்கிறதே.  அழகிய  கருநிறம் அவன்.  கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் என்பது சாத்தியமான வார்த்தை. .  ஸ்ப்ரிங்  என்போமே  அது மாதிரியான சுருள் சுருளான கம்பி  கேசங்கள் அவனது கரிய  மென்மையான  கழுத்தின் பின் பகுதியில்  கடலலை போல் ஆட, இடது தோளில்  இறங்கி ஆட, அவன் அவற்றை நாசூக்காக பின்னே  தள்ளி விடுகிறான்.

மேலே  ஒரு  பீதாம்பர வஸ்திரம் அதை அழகாக ஒரு பக்கம் தூக்கலாக  இடது தோளில்  விடுகிறான். அது வழிந்து அவன் முழங்கை வரை நழுவி விழுந்து அவன் அழகுக்கு அழகு சேர்க்கிறது. 

அதை அவன் வாரி  மீண்டும்  இடது தோளில்  விடுகிறான் அப்போது அசையும் மார்பின் வெண்ணிற முத்து நெக்லஸ் முத்துக்கள் ஒன்றோடொன்று உராய்ந்து  ஒரு இனிய சப்தத்தை  தருகிறது.

இப்படி ஒரு தெய்வீக உருவத்தை பார்த்த தூண் பின்னால்  நிற்கும் கோபியின்  கண்கள் நிலை குத்தி அப்படியே அவன் முகத்தில் நின்றுவிட்டன.  அவன் முகமண்டல காந்த சக்தி அவள் எதற்காக அங்கே வந்தாள்  நின்றாள்  என்பதெல்லாவற்றையும்  மறக்கடித்து விட்டது. 

அவள் மறந்தாலும் மல்லிகை செண்பக பூக்கள் மறந்து போகுமா?.  ஒவ்வொரு இதழும்  கிருஷ்ணா, மாதவா, கோவிந்தா என்று இசை பாடின.

எப்படி தான் அவனுக்கு தெரியுமோ ?  சொல்லிவைத்தாற்போல்  அவன் நேராக அவள் நிற்கும் தூண் அருகே வந்தான்.  அவனுக்கு  அவள் அங்கே இருப்பது எப்படி தெரிந்தது?  அவளுக்கு அவளை பற்றி தெரிந்ததை விட அவனுக்கு அவளைப்பற்றி மட்டும் அல்ல  எல்லோரைப்பற்றியுமே  நிறையவே தெரியும்.  அவள் செடி வளர்த்தது. அவை பூக்க ஆரம்பித்து இன்று அவள் அவற்றை முதன் முதலாக பறித்தது, மாலை கட்டியது, தனக்கு அளிக்க விரும்பியது எல்லாமே அவள் சொல்லாமலேயே அவனுக்கு  தெரியுமே. அவன் சங்கல்பத்தால்  தானே  அவளே  செடி வளர்த்து , மாலை தொடுத்து அதை அவனுக்காக இங்கே  கொண்டு வந்து தூணின் பின் ஒளிந்துகொண்டிருக்கிறாள்.  தூணுக்குள்ளே இருந்த நரசிம்மனுக்கு தூணுக்கு பின்னாலே ஒரு பக்தை நிற்பது தெரியாமல் போகுமா.  அவனருளால் தான் அவள் இதெல்லாம் செய்தவள்.  

கண்ணன் நேராக அவள் எதிரில் வந்து குனிந்து தன்  நீலோத்பல விழிகளை அவள் மேல் செலுத்தினான் 
அவள் கைகளில் தவழும் மாலையை பார்த்தான். இதழோரத்தில் புன் சிரிப்பு   அவளுக்கு  அவன் கரிய அழகிய விழிகள், தனது கைகளில் இருக்கும் மாலை மேல் செல்வது ஆனந்தத்தை அளித்தது. கரிய பெரிய  கண் இமைகள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மழைபோல் அவளது  முகத் திலிருந்து  அவள் கைகள் தாங்கிய  மாலைக்கு பாய்ந்தன.

' ஓ.  உனக்கு என் சாம்ராஜ்யத்தில் இடம் உண்டே,  வைகுண்ட வாசி இனி நீ, என்று தலை அசைத்தான் கிருஷ்ணன். கையை நீட்டி  அவள் வைத்திருந்த மாலையை தானே  எடுத்து அணிந்து கொண்டான்.  தனது எண்ணம்  இவ்வளவு அழகாக  கண்ணெதிரே நிறைவேறுவதை ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த கோபி அந்த எளிய கண்ணனின் ஏராளமான  அன்பை பூர்ணமாக  அனுபவித்து தனைமறந்த நிலையில் சிலையாகிவிட்டாள் .
 


என் எதிரே இருந்த படத்தில்  இவ்வளவும் சொல்லிவிட்டு  இன்னும்  சொல்லவா என்று கேட்டான்......  போதும் என்றா சொல்வேன்.. 

LOVING FRIENDS

நான்  பெற்ற  செல்வம்  - 1:     J K   SIVAN 
                                                                                   
நான்  முகநூலில் எழுத ஆரம்பித்தபோது அதை வெறும் பொழுது போக்காக நினைத்தேன். அதன் ஆழம் அகலம் அப்போது  அறியேன். நிறைய  முகநூல் பதிவுகளை பார்க்கும்போதே மனதில் ஒரு வித வெறுப்பு வளர்ந்தது.  நேரம் வீணாக்க ஒரு இடமோ, வேண்டாத விஷயம்  வண்டிவண்டியாக  விளையும் இடமோ  என்று ஒரு சலிப்பு. நான் வம்பு தும்புக்கு போகாமல் கிருஷ்ணன் பற்றியே என் மனதில் தோன்றியதை எழுத ஆரம்பித்தேன்.  சே


ணம் கட்டிய  குதிரை போல், வேறு பக்கம் திரும்பவில்லை.  J.K Sivan  / SREE  KRISHNARPANAM SEVA TRUST  என்ற  பெயர்களில் நான் துவங்கிய  FB  பக்கங்களில் மட்டும் என் கட்டுரை/கதை வெளிவந்தது.  5000-7000 அன்பர்கள் அதில் சேர்ந்து அன்றாடம் என்னோடு தொடர்பு கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு 18-20மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்வதில் ஆனந்தம்.

 என் எண்ணத்தின் வடிகாலாக  நான் விதைத்த வேதத்தின் வித்து வலையில் அவனது அநேக பக்தர்களை என் பக்கம் திருப்பினான். பலரின் நட்பு என்னை மேலும் ஊக்குவித்து நிறைய எழுதினேன். வருஷம்  ஆறு ஆகிவிட்டது.  லக்ஷக்கணக்காக  வாசகர்கள் என்று முகநூல் சொல்லியபோது நம்ப முடியவில்லை. நான் எழுத்தாளனே இல்லையே. 75 வயதுக்கு பிறந்து தானே  முதன் முதலாக எழுத ஆரம்பித்தவன். ஆறு வருஷங்களில் 70 புத்தகங்கள். அதில் 30க்கு மேல்  புத்தகங்களாக பிரசுரிக்கப்பட்டு விநியோகம் ஆகிக்கொண்டிருக்கிறது. மற்றவை புத்தகமாக  காத்திருப்பவை.

இப்படி எழுத ஆரம்பித்ததால் எனக்கு என்ன நன்மை சொல்லட்டுமா?  எழுத அநேக  விஷயங்கள் என் மனதில் பதிந்து  வரிசையில் நிற்கிறது. நிறைய படிக்க வேண்டியிருப்பதில் சந்தோஷம் வளர்கிறது  பதினைந்து பக்கம் படித்தால் அதை 10 வரியில் எழுதவேண்டும்.   எவருக்கும் நேரமின்மை யால்   சுருக்கமாக  சொல்லவேண்டியது  இரத்தின சுருக்கமாக  சொல்லப்பட வேண்டும்.  நான் அடைந்த மகிழ்ச்சியை மற்றோரும் அடையவேண்டும் என்ற  ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போகிறது.  

என் எழுத்து  எவரையும் பின்பற்றி எழுதப்படுவது எல்லை. என் எண்ண ஓட்டங்களுக்கு எந்த எழுத்து மனதில் படுகிறதோ அது தான். அது சரியா, பொருத்தமா என்று யோசிக்கக்கூட  நேரமில்லை.  என் எழுத்து எனக்கு புரிந்தால் நிச்சயம் மற்றவர்களுக்கு புரியும் என்ற நம்பிக்கை . ஏனென்றால் நான் அதிகம் படித்தவன் அல்ல. எந்த விஷயமாவது படித்தால் சட்டென்று புரிந்தால் தான் படிப்பேன். அப்படி என் எழுத்து எனக்கே  புரிந்தால் தான் வெளியிடுவேன். என்னைக்  காட்டிலும் என் வாசகர்கள் எல்லோருமே  நன்றாக விஷயானுபவம் உள்ளவர்கள். புரிந்து கொள்வார்கள்.   அவர்களுக்கு என் எழுத்து புரிந்து தானே குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும்  என் புத்தகங்கள்  செல்கிறது.  எனவே  மேலும் மேலும் எழுதுவேன். கிருஷ்ணன் ஆட்டுவித்தால் ஆடாதார்  யாரே.

ஒரு புது விஷயம். என்னை நிறைய பேர்  சந்திக்கிறார்கள். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி .  வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், சென்னையின்   தமிழ்நாட்டின் இதர பகுதிகள் ஆகியவைகளிலிருந்தெல்லாம் நங்கநல்லூர் வந்து சந்திக்கும் நட்புள்ளங்களை பற்றி ஒவ்வொருவராக எழுத ஒரு எண்ணம்
இதில் யார் முத லில்  யார் அப்புறம் என்பதற்கு  இடமே   இல்லை. இன்று யாரைப்  பற்றி மனதில்  தோன்றியதோ அவரைப் பற்றியே ஆரம்பிக்கிறேன். இதில்  ஆண் , பெண், வயது, ஏழை, பணக்காரர், தமிழர் இதரர்,  முதியவர் இளையவர், படித்தவர்  படிக்காதவர்  என்ற  எந்த பாகுபாடும் இல்லை. மனம்,  அதில் நிறைந்த  பாசம், அன்பு, நேசம்,  ஒன்றே பிரதானம்.  என்னை சந்தித்தவர் அனைவரிடமும் அதை அபரிதமாக உணர்ந்ததால் எல்லோரும்  எனக்கு  ஒரே வரிசையில் தான்  எப்போதும்.   ஆரம்பிப்பது வட்டத்தின் ஏதோ ஒரு புள்ளியிலிருந்து.   .... அவ்வளவுதான்.

                                           கோயமுத்தூர்    டாக்டர்  எல்.என்.


டாக்டர்  லக்ஷ்மிநாராயணன்,   நடராஜன்:     எனக்கு  இந்த  நண்பர்  பரிச்சயமானது  தெய்வ சங்கல்பம்.   என் எந்த  கட்டுரைக்கும் முதலில் ஒரு லைக் போடுபவர்.  யார் இவர்? எனக்கு லைக் முக்கியமில்லை.  அதை எதிர்பார்க்கவில்லை. பிடித்திருக்கிறது என்று தானாகவே தெரிவிப்பவர்கள்  சிலர்  ஏதாவது எழுதுவார்கள். சிலர் விடாமல் லைக் போடுவார்கள்.  சிலகாலம் இப்படி  மௌன தொடர்புக்கு பின் டெலிபோனில் பேச்சு. பிறகு நேரில் சந்திப்பு. இதுவரை மூன்று முறை சென்னை வந்தபோதெல்லாம்  என்னை அன்போடு வந்து பார்த்தவர்.

 அசப்பில்  எதிரே  உட்கார்ந்திருப்பவர்  கொஞ்சம்  அருண்  ஜேட்லீயோ என்று தோன்றியது. அப்படி  ஒரு  தீர்மானமான சிறிய உறுதிவாய்ந்த  உதடுகள்.  1987ல் கோயமுத்தூரில் நரம்பு வியாதி நிபுணராக  பணி  துவங்கிய  இவர்  பிரபல  நரம்பியல் மருத்துவர் நிபுணர்.   இடையே சங்கீதத்துக்கும் தன்னை அர்ப்பணித்தவர்.  நாலாவது படிக்கும்போதே மிருதங்கம்  இவரது பிஞ்சுவிரல்கள் சொன்னதை கேட்டது. சொல் தப்பவில்லை. 

ஆரம்ப கல்வி  ஆதிசங்கரர் அவதரித்த காலடி  க்ஷேத்ரத்தில் கேரளாவில். குடும்பம் அப்புறம் திருநெல்வேலிக்கு தாவியது.   விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?  இவரது மகளும் கர்நாடக சங்கீத வித்துவான்.  பிள்ளையும் அப்பாவழியில் மிருதங்க வித்துவான்.  இந்த சங்கீத குடும்பத்தில் பிரபல கர்னாடக சங்கீத வித்துவான்  ஸ்ரீ  சிக்கில்  குருசரண் மாபிள்ளையானதில் என்ன ஆச்சர்யம்.  அவரவர் உத்யோக சம்பந்தமாக  நிறைய அலையவேண்டி இருக்கிறது. சென்னை கோயமுத்தூர்  என்று குடும்பம் கிளையாக உள்ளது.
 
எனது சதாபிஷேகத்துக்கு வருவதற்கு  ஒரு மாதம் முன்பாகவே  குறித்து வைத்துக்கொண்டாலும் அவசரமாக வெளிநாடு செல்ல நேரிட்டதால் ஒருசில தினங்கள் முன்பாகவே  தம்பதிகளாக டாக்டர் குடும்பம் என்னை சந்தித்ததில் ஒரு ஐந்து வயது எனக்கு குறைந்துவிட்டது.

கிருஷ்ணன் எல்லோரையும் பரஸ்பர அன்பு, பாசம், நேசம்  நட்பு மூலம்   ஒரே கிருஷ்ண குடும்பமாக்கும்  மாயாவி என்பதில் சந்தேகமில்லை.





THIRUK KOLOOR PEN PILLAI




திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN

44 பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே

கம்சன் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆஹா கடைசியில் சிங்கத்தின் குகைக்குள்ளேயே வெள்ளாடுகள் புகுந்து விட்டன. வேட்டை தான் இனி என்று ஆனந்தத்தில் கூத்தாடினான் கம்சன். அது சரி எதற்கு இந்த சந்தோஷம்?

ஓஹோ அவன் திட்டமிட்டப்படி அக்ரூரரை பிரிந்தவனத்துக்கு அனுப்பி கிருஷ்ணனையும் பலராமனையும் மதுராவுக்கு விருந்தாளிகளாக அழைத்தது வெற்றிகரமாக முடிந்துவிட்டது. கிருஷ்ணனுக்கு கம்சனின் அழைப்பா அல்லது கம்சன் மரணதேவதையை வரவழைத்துக் கொண்டானா. கிருஷ்ணனும் உள்ளூர மகிழ்ச்சியாக தான் இருந்தான். அவன் எதிர்பார்த்த வேளையும் நெருங்கிவிட்டதே. இனி கம்சனின் முடிவு ஒரு சில நாளில் என்பது கிருஷ்ணனுக்கு மட்டுமே தெரியும்

வரும் வழியில் மதுரா நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது எதற்கு? கம்சன் நடத்தப்போகும் தனுர் விழாவுக்கா, கண்ணனின் வரவுக்கா, கம்சனின் முடிவுக்கா? .

மதுரா நகர வீதிகள் பெரியவை, பிருந்தாவன வீதிகள் போல அமைதியானவை அல்ல. மக்கள் கூட்டமாக வியாபார, கேளிக்கைகளில் ஈடுபடுபவை. எங்கும் இனிப்பு தின்பண்டங்கள், வாழ்க்கைக்கு தேவையான பொருள்கள், எல்லாமே விற்பனையாகிக் கொண்டிருந்தன.

கிருஷ்ணன் பலராமன் இருவருமே அவற்றை ரசித்துக் கொண்டே நடந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் நல்ல அரச போக உடை அணியவில்லை. சாதாரண கிராமிய உடையில் தான் இருந்தனர். இந்த இருவரின் பராக்கிரமம் அவர்களுக்கு முன்பே மதுராவில் சென்று மக்களை அடைந்து அவர்கள் ஆர்வமாக இந்த இருவரின் வரவை எதிர் நோக்கி இருந்தனர்.

எனக்கு தெரிந்து என் சிறிய வயதில் துணிவெளுக்கும் லாண்டரிகள் எங்கோ ஒன்றிரண்டு தான் இருந்தது. அவரவர் வீட்டிலேயே துணி தோய்த்து அதை அப்படியே அணிந்து கொண்டார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். முக்கியமான இடங்களுக்கு, விழாக்களுக்கு செல்லும்போது அவற்றை இஸ்திரி என்று சொல்லும் சலவை மடிப்புக்கு சுருக்கமில்லாமல் தேய்த்துக் கொடுக்க கன்னியப்பனை தேடுவோம். வீட்டில் பெரிய வெண்கல இஸ்திரிப்பெட்டி வைத்திருந்து. கள்ளிப்பெட்டி அடுக்கி அதன் மேல் பெட்ஷீட் போட்டு இஸ்திரி செயது தருவான். அது தான் லாண்டிரி. வீட்டில் விசேஷம் என்றால் யாருடையதோ, எவருடைய புடைவை, வேஷ்டி சட்டை எல்லாம் ஒருநாள் ரெண்டு நாள் வாடகைக்கு விடுவார். வாடகை எட்டணா, ஒரு ரூபாவுக்கு மேல் தாண்டியதில்லை. அதுவே பெரிய அமௌன்ட். ''ஜாக்கிரதை கிழியாமல் கறைபடாமல் சீக்கிரம் கொண்டு தரவேண்டும்'' என்று பல முறை சொல்வான்.

கிருஷ்ணன் காலத்திலும் இது நடைமுறையில் இருந்தது போல் தோன்றுகிறது. கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் ஒரு வண்ணான் அழகிய வஸ்த்ரங்கள் தந்தார். அக்காலத்தில் ஆண்கள் மலர் மாலை அணிந்து தான் விழாக்களில் பங்கேற்பார்கள். சுதாமா என்ற ஒரு புஷ்பங்களை தொடுத்து மாலையாக கட்டி விற்கும் ஒரு கிருஷ்ண பக்தர் பரம சந்தோஷமாக இருந்தார். மாலா காரர் என்று அழைக்கப்பட்டவர்.
'
' ஆஹா கிருஷ்ணன் பிருந்தா வனத்திலிருந்து இங்கே மதுராவுக்கு வந்திருக்கிறாராமே அவரை பார்த்து அவருக்கு இந்த மாலைகளை அணிவிக்க வேண்டும் என்று ஓடினார். கிருஷ்ணனையும் பலராமனையும் கூட்டத்தில் தெருவில் அடையாளம் கண்டு கொண்ட சுதாமா அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கி அழகான, வாசனை மலர்கள் கொண்டு ஸ்பெஷலாக தொடுக்கப்பட்ட மாலைகள் இரண்டை எடுத்து தனது கையாலே கிருஷ்ணனுக்கும் பலராமானுக்கும் அணிவித்தார்.

ஒரு சின்ன விஷயம்..... மாலையை ஸ்ரீ கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் வழங்கும் முன், தன் முகத்தை ஒரு துணியால் மூடிக்கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் வாசத்தில் மயங்கி, அதன் மீது இச்சை கொள்ளக்கூடாது . அப்படி செய்தால் புனிதம் கெடும் என்பதற்காக. கோவிலில் பிரசாதங்கள் நைவேத்தியங்கள் அற்பணிக்கும்போது நைவேத்திய பாத்திரங்களை மூடி, தனது மூக்கையும் மூடிக்கொண்டு தான் கொண்டு சந்நிதிக்கு கொண்டுவருவது வழக்கம்

தனது இந்த சிறந்த மாலை படைப்பு கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம் என்று சுதாமா இவ்வாறு பூமாலைகளை அணிவித்ததை அக்ரூரர் பார்த்து மகிழ்ந்தார். கீதா பாஷ்யம் சொல்கிறது இதை. .

திருக்கோளூர் அம்மாள் ஒரு என்சைக்ளோபீடியா என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே. அவளுக்கும் மேலே சொன்ன விஷயம் தெரியும். ஆகவே தான் ஸ்ரீ ராமானுஜரை பார்த்து '' சுவாமி, நான் மாலாகாரர் போல் பகவானுக்கு என்றாவது பூவையாவது கொடுத்தேனா, எவ்விதம் நான் திருக்கோளூரில் வசிக்க அருகதை யானவள்? என்று கேட்கிறாள்

Saturday, January 25, 2020

ARUNKUNRAM MEET




Dear Friends, J K SIVAN



























































                                   
 Meeting with  school children in Arungulam and Ayilam in Arcot 

SREE KRISHNARPANAM SEVA TRUST,  at the instance of  Sri A.K. Ramanan, a good friend and SKSS   supporter ,  hailing from the village of  Arunkunram and an adjoining village  Ayilam,  in Arcot,  organised a meeting with the children of Govt Elementary School and High school in the said village on 22nd January 2020.   In all about  125+  children  from both villages were present to participate in the programs conducted by SKST.  Arunkundram is situated between Arcot and Kannamangalam.   It is  surrounded by hillocks and paddy fields, and is about 8 km from Arcot in Vellore district. Agriculture is the backbone of the village. The village people are dependent on the North East Monsoon and the Palar river for irrigation. 

During the rule of Pallava dynasty (400 - 800 AD), Arungundram was a place of busy activities. Jain Monks and Nuns lived in the hillocks near Arungundram. Thiruppan Malai, in the outskirts of the village, had a dormitory of Jain Nuns. There are seven cave temples in the hills, belonging to Nandivarma Pallava period (740 AD). The hillock and the caves are now known as "Panchapandavar malai" in Tamil. There is also a cavern atop the hill with a spring. Sculpted figures of the famous monk Naganandhi and a Jain Yakshi are seen near the spring. An inscription near the figure says "Naranan has carved the figure of Pon Iyakki (Yakshi) for his guru Naganandhi during the reign of Nandivarma Pothatharasar ..."

Another inscription belonging to Chola period tells about the donation of a village Kooraganpadi, by a kind of Lada country, Veeracholan and his queen. Hearsay tells about a palace at the Malligai Medu village (Lalaimedu) to the west of Arungundram. It is also believed that there existed 108 Siva temples in and around Arungundram village and the hills. Even now one can see remnants of Siva temples and lingams scattered all around the paddy fields of Arungundram.

These temples are believed to have been damaged during the Carnatic War between Arcot Nawab Chanda Saheb and East India Company in the middle ot 18th century. The invasion of Hyder Ali is also believed to have caused major damage to the temples around Arcot including Arungundram.

A dilapidated temple of Siva, Sri Chandramouleeswarar Temple atop Hariharan Kundram, which over the period of time has become  ''Arungundram '' village, a temple of Sri Dharmeswarar at the heart of the village and a temple of Sri Venugopalaswamy still exist in spite of invasions and wars.

The Ponniamman temple with shrines for Saptha Matrikas is revered as the Guardian Angel of the village and a footprint of the Ponniamman on a rock is still worshipped by the villagers.

We  reached Arunkunram by  9 am. and proceeded to the elementary school.  In the morning there were about 60 children in the primary elementary school  at Arunkunram  village.  The children eagerly awaited us as they had been told about our visit to meet them  on 22nd January 2020 morning.
The children  were jubilant to participate in the ''Paint Your Krishna'' competition conducted by SKST.   We  supplied  outline sketches of Krishna with a cow,  for painting and were supplied crayons and color pencils.  They were told stories of Krishna and this opportunity was taken to advise them about their duties towards parents, teachers,  Faith  and society   respectively. 

The children were very happy to  receive  prizes in the form of sweets,  writing  equipment, pen pencil, eraser and sharpener set,  note books and  SKST  story  books for their   participation .  The school's acting Headmistress was honoured with a shawl and the teachers were presented with SKST Books.

In the  post lunch session, the children of higher secondary School at the adjoining Ayilam,  were met and a written quiz was conducted by SKST,  comprising 50 questions with suggested answers  for them to select the correct answer.  The children  were addressed to follow basic disciplines and obedience towards  parents and teachers and  various methods were suggested for their characater moulding.  They were told short stories for self development. 
All the participating children showed interest in our visit and advices and were very happy to be  presented with note books, writing equipment and books of SKST.  The Headmaster was thanked and honoured with a shawl for his cooperation  in arranging the meeting with children.Books were given as compliment to  teachers.
Dear Friends, if you can organise our visit to  any school management known to you , please do let us know and join us in meeting the children and presenting them the books and  educate them on our  legends, epics tradition custom, culture and  basic discipline 






GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...