Sunday, October 31, 2021

EKADASI FASTING

 ABOUT  EKADASI  FASTING  -  nanganallur  J K  SIVAN  


Many of us may not have given enough thought about what is Ekadasi.  We know it is the 11th day after  new moon  and Full moon and so it occurs almost twice a month. We  know many fast on this day.This article may perhaps  give certain  additional information which may  or may not be known to you.

Ekadasi has another name also. Madhav thithi.  It is the day which pleases Lord Krishna and his devotees.  There is no restriction as to who should be fasting on this day.   To think of Krishna alone is necessary when  everything  becomes  auspicious. 

Fasting  greatly controls our minds and the senses which is the prerequisite for  pure devotion.  Many who cannot fast on this day, have another good alternative, which is  simply chanting Krishna's name the Hare Krishna Maha Mantra.HARE RAMA HARE RAMA HARE RAMA HARE HARE, HARE KRISHNA HARE KRISHNA HARE KRISHNA HARE HARE''

This anyone can easily chant as many times as possible to gain peace of mind and happiness.You will observe 16 words are there in the above manthra.  Fasting reduces body fat.  There is more time for utilisation in spiritual activities . So there is  both internal and external purity to be gained. It accelerates the faith and love for Krishna.  

You will be interested to note that Brahma-vaivarta Purana  says, Ekadasi fasting  frees us  from the sins committed. Padma Purana  also  endorses this view,  that  all our sins  are  absolved and enables us attain the supreme goal, Moksha, Many observe fasting without even sipping water performing   Nirjala  Ekadasi fasting.  Those due to many reasons cannot  fast on Ekadasi days, of course are free to  consume food three times like  any  other  day. The next option is that you can also take other non-grain foods like vegetables (except onion and garlic), roots, nuts, etc., only once during the fast. Can take a little fruit and milk. 

Eladasi vratham  is observed from  sunrise of the Ekadashi day to sunrise of Dhwadasi,the next day.12th day.


SRI LALITHA SAHASRNAMAM

  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  -

ஸ்லோகங்கள்:  55-56     நாமங்கள்: 219 -231  

महाभोगा महैश्वर्या महावीर्या महाबला ।
महाबुद्धिर् महासिद्धिर्म हायोगेश्वरेश्वरी ॥ ५५॥

Maha bhoga Mahaiswarya  Maha veerya Maha bala
Maha bhudhi Maha sidhi Maha Yogeswareswari

மஹாபோகா மஹைச்வர்யாமஹாவீர்யா மஹாபலா |
மஹாபுத்திர் மஹாஸித்திர்மஹாயோகேச்வரேச்வரீ || 55

महातन्त्रा महामन्त्रा महायन्त्रा महासना ।
महायाग-क्रमाराध्या  महाभैरव-पूजिता ॥ ५६॥

Mahathanthra Mahamanthra Mahayanthra Mahasana
Mahayaaga kramaaraathyaa mahabhairava poojithaa.

மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸநா |
மஹாயாக க்ரமாராத்யா மஹாபைரவ பூஜிதா || 56

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (219 - 231 )  அர்த்தம்  


* 219 *  महाभोगा -மஹாபோகா  --  
அம்பாள் ஒரு  மஹாராணி.  ராஜ போகம் . அவளுக்கில்லாத  சந்தோஷங்களா? . சர்வமும் அவளே, அவளுடையதே  என்கிறபோது  மகிழ்ச்சிக்கு அளவேது?

* 220 *महैश्वर्या -    மஹைஸ்வர்யா   -
அவளே  அளவற்ற செல்வ ஸ்வரூபம். பிரம்மானந்தம்.  அதை தான்  விபூதி  என்பது. சகல  ஸர்வ ஸ்வதந்த்ர சக்தி அம்பாள்.    '' அர்ஜுனா,  எனக்கு எல்லையே இல்லையடா. எல்லா உயிர்களின் இதயத்திலும் நான் அமர்ந்திருக்கிறேனடா. நானே எல்லாவற்றிற்கும்  எவ்வுயிர்க்கும் முதல், நடு, முடிவு எல்லாமே''  என்று கிருஷ்ணன் சொன்னானே அதே தான் இங்கே  அம்பாள் காட்சி அளிப்பது.

 *221*महावीर्या -   மஹாவீர்யா  --
எல்லையில்லா பெரும் காம்பீர்யம், சக்தி, அதிகாரம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை. .  பக்தியோடு அணுகிய பக்தனுக்கு  சகலமும்  அருள்பவள். வழங்குபவள்.

*222* महाबला - மஹாபலா -  
அபரிமிதமான பலத்தை கொண்டவள் அம்பாள்.  சக்தியிலேயே  மிகப் பெரியது ப்ரம்ம சக்தி. அதுவே  ஸ்ரீ லலிதாம்பிகை.

* 223 *. महाबुद्धिः - மஹாபுத்திர் -
அதிக புத்தி கூர்மையானவள்.  அவளறியாத விஷயமே இல்லை.  சர்வ சகல ஞானி.

* 224 * महासिद्धिः - மஹாஸித்திர் --  
அதீதமான  சித்தத்தில்  வாய்க்கப்பட்டவள் .  இயற்கையாகவே  சர்வமும்  வரப்பெற்றவள்.   அஷ்ட மா சித்திகள்  மட்டுமா?  சகல சித்திகளுக்கும்  ஆதார நாயகி   அம்பாள்.

* 225 * महायोगेश्वरेश्वरी -  மஹாயோகேஸ்வரேஸ்வரீ-  
எல்லா யோகங்களும்  கை வரப் பெற்ற  மஹா யோகிகளும் வணங்கி போற்றும்   யோகிகளுக்குக் கெல்லாம் யோகியாகிய  யோக ஈஸ்வரி ஸ்ரீ லலிதை என்கிறார்  ஹயக்ரீவர்..

* 226 * महातन्त्रा - மஹாதந்த்ரா -  
பூரணமாக  தந்த்ர சாஸ்திரங்களின்  வெளிப்பாடானவள்.  வழிபடப்படுபவள் ஸ்ரீ லலிதை.

* 227 * महामन्त्रा -மஹாமந்த்ரா -  
 வேத  மந்திரங்களின் உட்பொருள்  அம்பாள்.  சிறந்த மந்த்ரங்களை தனது  கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள். எல்லா மந்திரங்களும்  ஸமஸ்க்ரிதத்தின்  51 அக்ஷரங்களான  கூட்டமைப்பு அல்லவா.  இந்த அக்ஷரங்கள் மாலையாக அம்பாளை அலங்கரிக்கிறதே.  பஞ்சதசி  ஷோடசி மந்த்ரங்கள் அவளே அல்லவா.

* 228 *  महायन्त्रा - மஹாயந்த்ரா --
அம்பாளைதான்  சக்தி வாய்ந்த  யந்திரங்கள் குறிக்கின்றன.  ஸர்வ யந்த்ராத்மிகே  என அவளைத்தானே  மந்த்ரங்கள் போற்றுகின்றன. மகா யந்த்ரம் தான்   ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரம்.  

* 229 * महासना - மஹாஸநா -  ஸ்
ஸ்ரீ  சக்ர   ராஜ சிம்ஹாஸனி  என்பது அம்பாளை அல்லவா.  சர்வ சக்தியான அம்பாள் மஹாராணி அல்லவா?

* 230 *   महायागक्रमाराध्या - மஹாயாக க்ரமாராத்யா --  
பாவன யாகம், சிதாக்னி குண்ட யாகம் போன்ற  பெரும்  யாகங்களில் வழிபடப்படுபவள் அம்பாள்.  அம்பாளின் பிரதிநிதியாக  64 யோகினிகளை வணங்கி வளர்க்கும் யாகம் மஹா யாகம். தந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்படும் நவாவரண வழிபாடு.  க்ரமா என்பது முறையாக, கிரமமாக  அந்த யாகத்தை செய்வது.   64  யோகினிகள் பெயர் தெரியுமா?   சில பெயர்கள்  சில இடங்களில் மாறி வரலாம்:
 1.  பிராம்மணி  2. சண்டிகா 3. ரௌத்ரி, 4. கௌரி  5. இந்திராணி  6.கௌமாரி  7. பைரவி  8.துர்கா 9. நாரசிம்ஹி,10. காளிகா 11. சாமுண்டா 12. சிவ தூதி  13.வாராஹி  14.கௌசிகி  15 மகா ஈஸ்வரி  16. சங்கரி  17. ஜெயந்தி 18. சர்வ மங்களா 19 காளி  20.கராளிணி   21 .மேதா  22. சிவா 23. சாகம்பரி  24.  பீமா 25.சாந்தா  26 ப்ரமாரி  27.ருத்ராணி  28. அம்பிகா  29.  க்ஷமா  30. தாத்ரி  31. ஸ்வாஹா  32. ஸ்வதா  33. பர்ணா  34. மஹௌந்தரி  35. கோர ரூபா  36 , மஹா காளி 37. பத்ரகாளி  38. கபாலினி  39.  க்ஷேம கரி  41. சந்திரா 42.  சந்திராவளி  43. பிரபஞ்சா  44. ப்ரளயந்திகா  45.  பிசுவக்த்ரா  46. பிசாசி  47.  ப்ரியங்கரி  48.  பால விகர்மி  49. பால ப்ரமந்தநீ  50.  மத நௌன் மந்தணி  51. சர்வ பூதாதமனி  52  உமா  53. தாரா  54 மஹா நித்ரா  55.  விஜயா  56. ஜெயா 57.  சைலபுத்ரி , 58. ஸாயந்தி , 59. துஸ்ஜயா  60. ஜெயந்திகா 61. பிடாலி  62. கூஸ்மாண்டி   63. காத்யாயனி  64. மஹா கௌரி.

 * 231 *  महाभैरवपूजिता -  மஹா பைரவ பூஜிதா   -  
மஹா சக்தி வாய்ந்த   பைரவராலேயே பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை.  மீண்டும் கவனப்படுத்துகிறேன்.  சிவனும் சக்தியும் கலந்த அம்சம் தான் பைரவர் எனும்போது எவ்வித  சக்தியும் வலிமையும்  உடையவர் என்று புரியும்.

சக்தி ஆலயம்:  அவனியாபுரம்  ரேணுகாம்பாள்:

''அப்பா, நீங்கள் விருப்பப்பட்டபடியே நான் புண்ய ஸ்தலங்களுக்கு சென்று யாத்திரை செய்து வருகிறேன்'' என்று  ஜமதக்னி ரிஷியை வலம்வந்து நமஸ்கரித்து   கிளம்பினார் பரசுராமர். ஒரு வருஷ காலம் சென்றது. திரும்பினார். தந்தைக்கு யாக யஞங்களுக்கு உதவியாக இருந்தார்.

வழக்கம் போல ஓர் நாள் ஆற்றங்கரைக்கு சென்ற  அவரது தாய்  ரேணுகா தேவி தரையில் குனிந்து மண் குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த மண் அன்று அந்த நிமிடமே மண்குடம் ஆகவில்லை. அடடா என்ன தவறு செய்துவிட்டேன். என்னால் மண்ணில் குடம் செய்து நீர் கொண்டு செல்ல முடியவில்லையே என்று திகைத்தாள். ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டு வரச் சென்ற ரேணுகா   ஏன் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார்.  ஞானக் கண்ணால் ஆற்றங்கரை நிகழ்ச்சி தெரிந்தது. ரேணுகாவின் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்து ஜமதக்னி ரிஷி,  சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயை  உடனே  கொல்லுமாறு கர்ஜித்தார்.
தந்தையின் இந்த கோபமான கட்டளை பிள்ளைகளை திகைக்க வைக்க அவர்கள் அப்பாவின் கட்டளையை நிறைவேற்ற தயங்கினார்கள். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கோட்பாடு கொண்ட பரசுராமன் அதை நிறைவேற்ற முன் வந்தான். அவனுக்கும் தாய்ப்பாசம் அதிகம். எனினும் தனது தந்தை சொல் தான் முக்கியம் என்று உணர்ந்தான்.   பரசு என்ற தனது ஆயுதமான  கோடாலியைக்   கையில் ஏந்தினான். ஆற்றங்கரை சென்றான். துளியும் யோசிக்காமல் அங்கே திகைத்து நின்ற தாய் மீது கோடாலியை வீசினான். அவள் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன.

ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். எதுவும் நிகழாததுபோல் கையைக் கட்டிக்கொண்டு

''ராமா! உன் சகோதரர்கள் எனது கட்டளையை நிறைவேற்றத்  தயங்கினாலும் நீ யோசனையே செய்யாமல் என் கட்டளைக்குக்  கீழ்ப்படிந்த   உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார் ஜமதக்னி ரிஷி.

''தந்தையே, என் குருதேவா... எனக்கு என்ன வேண்டும்.....தங்கள் தவ மகிமையால் இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அவர்கள் உயிர் பெற்ற பின்னர் நான் தான் அவர்களைக் கொன்றேன் என்ற எண்ணமே அவர்களுக்கு எழக்கூடாது. இந்த வரம் அருளவேண்டும்'' என்கிறார் பரசுராமன்.

உயிர் பெற்ற  ரேணுகா தான் மாரி அம்மன். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். சென்னையை அடுத்த போளூர் வந்தவாசி சாலையில் அவனியாபுரம் என்கிற ஊரில் அற்புதமாக ஒரு ஆஞ்சநேயர், நரசிம்மர். ரேணுகாம்பாள் ஆலயம் எல்லாம் தரிசித்த நினைவு வருகிறது.

ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனை கொல்கிறார் .

தந்தையை இழந்த கார்த்தவீரியார்ஜுனன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்த நேரத்தில்  ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் அருகே சென்று வாளை ஓங்கினான். ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது.

துண்டான ஜமதக்னி மஹரிஷியின் தலையை கார்த்தவீரியன் புதல்வர்கள் எடுத்துப்  போனார்கள். வெளியே இருந்து திரும்பிய பரசுராமன் விஷயம் அறிந்து நெருப்பாக கொதித்தார்.

இந்த கணம் முதல் க்ஷத்ரியர்களை பூண்டோடு அழிப்பேன் என சபதம் பூண்டு புறப்படுகிறார். பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார். கார்த்த வீர்யன் புதல்வர்கள் மற்றும் அரச குமாரர் களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது.

குருக்ஷேத்ரத்தில் இரத்தம் குளமாகியது. ஜமதக்னியின் தலையை மீட்டு உடலோடு சேர்த்து ஈம கிரியைகளை செய்தனர். இருபத்தொரு திக்விஜயம் செய்து பாரதம் முழுதும் பல க்ஷத்ரியர்கள் வம்சம் வேரறுந்தது. அந்த க்ஷத்ரிய ஹத பாபத்திற்கு பரிகாரமாக யாகங்கள் செய்தார்.

சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார்.

இன்றும் பரசுராமர் மஹேந்திர மலையில் சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு சிரஞ்சீவியாக தவம் செய்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன் பரசுராமரால் உயிரிழக்காமல் தப்பி பெண்களால் காப்பாற்றப்பட்டு அவன் வம்சம் தழைக்கிறது. பெண்களால் காப்பாற்றப்பட்டதால் அவனை ''நாரி வசன்'' என்பார்கள். மூலகனுக்கு அப்புறம் ஒரு தசரதன், இவன் ராமன் தந்தை அல்ல. அப்புறம் அந்த வம்சத்தில் கடைசியில் இன்னொரு தசரதன் தான் ராமன் தந்தை.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சிவ தனுசை ஒடித்து சீதையை மனைவியாக அடைந்து மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் ராமனோடு மோதுகிறார். தன் த\வவலிமை முழுவதையும் ராமபாணத்திடம் இழந்து '' நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக'' என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர்.

மகாபாரதத்தில் பரசுராமர் காசிராஜன் மகள் அம்பை ஸ்வயம்வரத்தில் பீஷ்மரால் கவரப்பட்டு அவரது விருப்பப்படி அவர் தம்பி விசித்திர வீர்யனை மணம் செய்துகொள்ள மறுத்து, அவள் காதலித்த சால்வ மன்னனால் நிராகரிக்கப்பட்டு பீஷ்மனை வெல்ல, கொல்ல, பரசுராமன் தயவை நாடுகிறாள். தவம் செயது பீஷ்மனை கொள்ள சிகண்டியாக உருவெடுக்கிறாள். பீஷ்மருக்கும் பரசுராமருக்கு போர் நடக்கிறது. பீஷ்மர், தனது பிரம்மச்சர்ய விரதத்தை காக்க உயிரையே பணயம் வைத்து பரசுராமரிடம் யுத்தம் புரிகிறார். பரசுராமர் தோற்கிறார். பின்பு தவம் செய்யச் சென்றார்.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தவர். கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று பொய் சொல்லி ஏமாற்றியதை அறிந்து அவனுக்கு தன்னிடம் கற்ற வில் வித்தை தக்க சமயத்தில் மறந்து போக சபிக்கிறார். இந்த சாபத்தாலும் அர்ஜுனன் கர்ணனை வென்று கொல்ல எளிதாகிறது.

இன்றைய கேரளாவிற்கு பரசுராம க்ஷேத்ரம் என்று பெயர். திருவானந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் உள்ளது.

கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கூடு என்ற ஊரில் உள்ள கண்டேஸ்வரர் ஆலயம் பரசுராமர் வழிபட்ட க்ஷேத்ரம். தனது தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கௌதம ரிஷி  ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டு நித்ய பூஜை நடக்கிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் விக்ரஹம் உள்ளது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.  

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர் J K  SIVAN --

பகவான்  ரமண மஹரிஷி .

29.  ஆத்ம  ஸாக்ஷாத் காரம்

நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நஞானநெறி–
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமதுவி சாரமா மாவமீமுறையே 29

அடிக்கடி  சொல்லிக்கொண்டே  இருக்கவேண்டும். அப்போது தான் மனதில் பதியும். '' நான்''  என்பது யார்? என்ற ஆத்ம விசாரத்தை பற்றி சொல்லும்போது  முதலில் இந்த தேகத்தை  ''இது , ஒரு சவம் ''  என்று புறக்கணிக்க முடிகிறதா?  வாய் வார்த்தையாக  நான்  என்று  சொல்லாமல்  உண்மையில் இந்த  நான் யார்? எங்கிருந்து இது  உற்பத்தியாகிறது என்று உள்நோக்கி  கவனிப்பது தான்  ஞானத்தை தேடுவது.

வாயினால்  அளவில்லாமல் ''நான்'' இந்த தேஹமல்ல ,   மனம் அல்ல,  பிராணன் அல்ல, ப்ரம்மம் என்று மனதளவில் மட்டும் சொல்வதும்  தியானிப்பதும்,  உண்மையில் ஞான விசாரம் அல்ல.  உண்மையாக உள்  நோக்கி  பிரயாணித்து  அதை அலசி தேடுவது, அஹம்பாவம் எனும் அகந்தை தான் நான்  அதை உருவாக்குவது மனம் என்று அறிந்து அதையும்  விலக்குவது  தான்  ஞானவிசாரம்.

பட்டினத்தாரின்  ஒரு எளிமையான  அற்புத அர்த்த புஷ்டியான  ஒரு பாடல்:

ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.

உடலைச்  சடலம்  மென்று முடிவாக  உயிரிருக்கும்போதே நினைக்க  துணிவு,  ஈஸ்வர சங்கல்பம்   வேண்டும்.  ரமண மகரிஷிக்கு 17 வயதிலேயே  உடலின் மரணஅனுபவம் கிடைத்தது.


 ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN --

88வது தசகம் 

88. பூர்ணாவதாரா  பதம் பணிந்தேன். 

''என் கண்ணே, உன்னை மகனாகப் பெற்று வளர்க்க நான் என்ன தவம் செய்தேனடா கிருஷ்ணா என்று  கண்ணனை ஆரத்தழுவி அணைத்து  முத்தமிட்டாள் தேவகி.  சிறையிலிருந்து மீட்டு அவளை யம் தந்தை வசுதேவரையும்  மீண்டும்  மதுரா  அரண்மனையில் சிறப்பாக வாழ  வகை செய்த கண்ணன் சிரித்தான்.
''அம்மா ''உனைப் பெற ''  என்று நீ   சொன்னால் தான்  ரொம்ப பொருத்தம். ''வளர்க்க''  என்றால் அது யசோதையைத்  தான்  சேரும். உனக்கு என்ன ஆசை சொல், உடனே  நிறைவேற்றுகிறேன்''
''ஆமாமடா  கிருஷ்ணா, நீ சொல்வது தான் சரி. உனை  வளர்க்க எனக்கு  கொடுத்து வைக்கவில்லை, நீ உயிர் வாழ்ந்தால் தானே  வளர முடியும்.  ஆகவே தான் உன்னைப்  பிறந்தவுடனே யசோதையிடம் அனுப்பினோம்.. எனக்கு அந்த  பாக்யம்  கிடைக்கவில்லையடா. உனக்கு முன் இழந்த என் செல்வங்களைபோல் உன்னை இழக்க  நான் தயாரில்லாத தாய். உன்னால் இழந்த என்  ஆறு செல்வங்களை மீட்டுத்  தர முடியுமா?''  என்று கண்ணீருடன் கேட்டாள்  தேவகி.''

''இதோ என்று புறப்பட்ட  கிருஷ்ணன்,  சுதல லோகம் சென்று  இறந்த அவனது சகோதரர்களை மீட்டான். அவர்களுக்கு முக்தி அளித்தான்.  இதைத்  தவிர   இந்த தசகத்தில்,  அர்ஜுனன் ஒரு ஏழைப் பிராமணனுக்கு வாக்களித்ததை நிறைவேற்ற  அர்ஜுனனை எமனுலகிற்கு அழைத்துச் சென்று  அந்த பிராமணன் மகனை உயிர்ப்பித்து திரும்ப கொண்டு வந்து தருகிற  விஷயமும் வருகிறது.  கிர்ஷ்ணன் அவதாரத்தின்  லீலைகள் இந்த தசகத்துடன் நிறைவுறுகிறது.

प्रागेवाचार्यपुत्राहृतिनिशमनया स्वीयषट्सूनुवीक्षां काङ्क्षन्त्या मातुरुक्त्या सुतलभुवि बलिं प्राप्य तेनार्चितस्त्वम् । धातु: शापाद्धिरण्यान्वितकशिपुभवान् शौरिजान् कंसभग्ना- नानीयैनान् प्रदर्श्य स्वपदमनयथा: पूर्वपुत्रान् मरीचे: ॥१॥

praagevaachaarya putraahR^iti nishamanayaa sviiya ShaTsuunuviikshaaM
kaankshantyaa maaturuktyaa sutalabhuvi baliM praapya tenaarchitastvam |
dhaatuH shaapaaddhiraNyaanvitakashipubhavaan shaurijaan kamsabhagnaan
aaniiyainaan pradarshya svapadamanayathaaH puurvaputraan mariicheH || 1

ப்ராகே³வாசார்யபுத்ராஹ்ருதினிஶமனயா ஸ்வீயஷட்ஸூனுவீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாதுருக்த்யா ஸுதலபு⁴வி ப³லிம் ப்ராப்ய தேனார்சிதஸ்த்வம் |
தா⁴து꞉ ஶாபாத்³தி⁴ரண்யான்விதகஶிபுப⁴வான்ஶௌரிஜான் கம்ஸப⁴க்³னா-
நானீயைனான் ப்ரத³ர்ஶ்ய ஸ்வபத³மனயதா²꞉ பூர்வபுத்ரான்மரீசே꞉ || 88-1 ||

''தேவகி காதில் செய்தி விழுந்ததும்  அவள்  ஆச்சர்யப்பட்டாள் .
''என்ன  என் கண்மணி கிருஷ்ணன் அவன் குருநாதர்  சாந்தீபனி முனிவரின் இறந்த மகனை மீண்டும் உயிர் மீட்டுக் கொடுத்தானா?'' ஆஹா  எவ்வளவு பெருமையாக இருக்கிறது எனக்கு''  அவளும்  ஆறு குழந்தைகளைப்  பிறந்ததும் அண்ணன் கம்சனின் உடைவாளுக்கு  பலியாக தந்தவள் தானே. பெற்ற  தாய்க்கு அந்த பிள்ளைகள் மேல் பாசம் இருக்காதா?   கிருஷ்ணா, நீ  உன் தாய் தேவகியை சிறையிலிருந்து விடுவித்து மீண்டும் தாய் தந்தையரை அரண்மனையில்  வாழ வைத்தபோது அவள் உன்னை என்ன கேட்டாள்  என நினைவிருக்கிறதா?

''கிருஷ்ணா, உனக்கு முன் நான் பெற்று இழந்த  உன் சகோதரர்கள் ஆறு   குழந்தைகளின் உயிரையும் மீட்டு எனக்கு தருவாயா?''

''கிருஷ்ணா,  உனக்குத்  தெரியும்,  அந்த  ஆறு பேரும்   முன்னர் மரீசியின் புத்திரர்கள்,  பின்னர் ப்ரம்மாவின்   சாபத்தால்  ஹிரண்ய கசிபுவின் பிள்ளைகளாக பிறந்தவர்கள்.  சுதல லோகத்திற்கு சென்று மகாபலியை பார்த்து பேசி அந்த ஆறு பேரையும்  மீட்டுக் கொண்டுவந்தாய்.  உன் தாயிடம் அவர்களைக்  காட்டிவிட்டு  அவர்களை வைகுண்டம் திரும்பச்  செய்தாய்.

श्रुतदेव इति श्रुतं द्विजेन्द्रं बहुलाश्वं नृपतिं च भक्तिपूर्णम् ।
युगपत्त्वमनुग्रहीतुकामो मिथिलां प्रापिथं तापसै: समेत: ॥२॥

shrutadeva iti shrutaM dvijendraM
bahulaashvaM nR^ipatincha bhaktipuurNam |
yugapattvamanugrahiitu kaamO
mithilaaM praapitha taapasaiH sametaH || 2

மிதிலைக்கு ஒரு முறை நீ ஏன் சென்றாய் என்று நினைவிருக்கிறதா?  அங்கு ஒரு  ஸாஸ்த்ர மறிந்த பண்டிதன் ஸ்ருததேவன் உன் அருளைப்  பெற  தியானித்தவன்,மற்றும்  ராஜா  நஹுலாஸ்வன் ஒரு சிறந்த பக்தன், அவர்கள் இருவருக்கும்  ஆசி அளிக்க தான் அங்கே சென்றாய்.

गच्छन् द्विमूर्तिरुभयोर्युगपन्निकेत- 
मेकेन भूरिविभवैर्विहितोपचार: ।
अन्येन तद्दिनभृतैश्च फलौदनाद्यै-
स्तुल्यं प्रसेदिथ ददथ च मुक्तिमाभ्याम् ॥३॥

gachChan dvimuurtirubhayOryugapanniketam
ekena bhuurivibhavairvihitOpachaaraH |
anyena taddina bhR^itaishcha phalaudanaadyaiH
tulyaM praseditha dadaatha cha muktimaabhyaam || 3

க³ச்ச²ந்த்³விமூர்திருப⁴யோர்யுக³பன்னிகேத-
மேகேன பூ⁴ரிவிப⁴வைர்விஹிதோபசார꞉ |
அன்யேன தத்³தி³னப்⁴ருதைஶ்ச ப²லௌத³னாத்³யை-
ஸ்துல்யம் ப்ரஸேதி³த² த³தா³த² ச முக்திமாப்⁴யாம் || 88-3 ||

கிருஷ்ணா, மேலே சொன்னதை மனதில் கொண்டு, நீ இரு உருவங்கள் கொண்டவனாக  ஒரே சமயத்தில் அந்த இருவரின்  இருப்பிடத்திற்கு சென்றாய்.  ஒருவன் உன்னை ரொம்ப  பெருமையோடு விமரிசையாக  வழிபட்டான்.  மற்றவன் அன்று தனக்கு  உஞ்சவிருத்தியில் கிடைத்த  ஆகாரம், காய்கறிகள் எல்லாவற்றையும் உனக்கே  அர்பணித்தான்.  அவர்கள் இருவரின் பக்தியையும்  மெச்சி இருவருக்குமே மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளித்தாய்.

भूयोऽथ द्वारवत्यां द्विजतनयमृतिं तत्प्रलापानपि त्वम्
को वा दैवं निरुन्ध्यादिति किल कथयन् विश्ववोढाप्यसोढा: ।
जिष्णोर्गर्वं विनेतुं त्वयि मनुजधिया कुण्ठितां चास्य बुद्धिं
तत्त्वारूढां विधातुं परमतमपदप्रेक्षणेनेति मन्ये ॥४॥

bhuuyO(a)tha dvaaravatyaaM dvijatanaya mR^itiM tatpralaapaanapi tvaM
kO vaa daivaM nirundhyaaditi kila kathayan vishvavODhaa(a)pyasO(a)DhaaH |
jiShNOrgarvaM vinetuM tvayi manujadhiyaa kuNThitaaM chaasya buddhiM
tattvaaruuDhaaM vidhaatuM paramatama pada perakshaNeneti manye ||4

இன்னொரு சம்பவத்தையும் இங்கே  மறக்காமல் சொல்கிறேன். 
ஒரு பிராமணனுக்கு ஒவ்வொரு முறையும்  அவன் மனைவி பிரசவித்து  ஒரு குழந்தை பிறந்த சில  வினாடிகளிலேயே, அதை மரணம் விடாமல் கவ்வியது.   பிராமணன்  உன்னிடம் தனது விதியை  நொந்து அழுதபோது,  நீ  சர்வலோக  ரக்ஷகன் அவனுக்கு என்ன ஆறுதல் சொன்னாய்.? 

''அப்பா  இது உன் கர்மா வினைப்பயன்,  யாராலும் தடுத்துநிறுத்த முடியாத இதை நீ ஏற்று அனுபவித்தாக வேண்டும் '' என்றாய்.   உன் அருகில் நின்றிருந்த அர்ஜுனன் உன்னை  ஏற  இறங்க பார்த்தான். அவ்வளவு தானா நீ,   ஓஹோ  நீயும்  ஒரு சாதாரண மனிதன் தானோ?  என்று  எடை போட்டான். அவனுடைய கர்வத்தை ஒடுக்க  நீ  ஒரு நாடகம் தயாரித்ததை அவன் உணரவில்லை.

नष्टा अष्टास्य पुत्रा: पुनरपि तव तूपेक्षया कष्टवाद:
स्पष्टो जातो जनानामथ तदवसरे द्वारकामाप पार्थ: ।
मैत्र्या तत्रोषितोऽसौ नवमसुतमृतौ विप्रवर्यप्ररोदं
श्रुत्वा चक्रे प्रतिज्ञामनुपहृतसुतसन्निवेक्ष्ये कृशानुम् ॥५॥

naShTaa aShTaasya putraaH punarapi tava tuupekshayaa kaShTavaadaH
spaShTO jaatO janaanaamatha tadavasare dvaarakaamaapa paarthaH |
maitryaa tatrOShitO(a)sau navamasutamR^itau vipravaryaprarOdaM
shrutvaa chakre pratij~naaM anupahR^itasutaH sannivekshye kR^ishaanum || 5

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா꞉ புனரபி தவ தூபேக்ஷயா கஷ்டவாத³꞉
ஸ்பஷ்டோ ஜாதோ ஜனானாமத² தத³வஸரே த்³வாரகாமாப பார்த²꞉ |
மைத்ர்யா தத்ரோஷிதோ(அ)ஸௌ நவமஸுதம்ருதௌ விப்ரவர்யப்ரரோத³ம்
ஶ்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாமனுபஹ்ருதஸுத꞉ ஸன்னிவேக்ஷ்யே க்ருஶானும் || 88-5 ||

அருகே சில பிராமணர்களும் அப்போது  நின்றிருந்தார்கள்.  ''இதென்ன  பரிதாபம், அக்ரமமும் கூட. பாவம் இதோடு இந்த ஏழை பிராமணனுக்கு  எட்டு குழந்தைகள் பிறந்து மரணம் அடைந்தன.  கிருஷ்ணன் அருள் இல்லாததால் தானே,  கிருஷ்ணன் கருணை இல்லாததால் தானே அவை காப்பாற்றப் படவில்லை''என்று  உன்னை ஏளனமாக அவர்கள்  பேசினதை கேட்ட அர்ஜுனன் கொதித்தான்.    ''ஹே, ப்ராமணா,  உனது அடுத்த குழந்தை பிறக்கும் சமயம் எனக்குச் சொல். நானே நேரில் வந்து உன் குழந்தையைக் கொல்லும்  தீய  சக்தியை நான் எனது காண்டீபவத்தால் கொன்றுவிடுகிறேன். அதை காப்பாற்ற தவறினால் உன் வீட்டு வாசலில் தீமூட்டி உயிரிழப்பேன்''  அர்ஜுனன்  விஷயம்  தெரியாமல் சபதம் செய்துவிட்டான்.. 

मानी स त्वामपृष्ट्वा द्विजनिलयगतो बाणजालैर्महास्त्रै
रुन्धान: सूतिगेहं पुनरपि सहसा दृष्टनष्टे कुमारे ।
याम्यामैन्द्रीं तथाऽन्या:सुरवरनगरीर्विद्ययाऽऽसाद्य सद्यो
मोघोद्योगपतिष्यन् हुतभुजि भवता सस्मितं वारितोऽभूत् :॥६

maanii sa tvaamapR^iShTvaa dvijanilayagatO baaNajaalairmahaastraiH
rundhaanaH suutigehaM punarapi sahasaa dR^iShTa naShTe kumaare |
yaamyaamaindriiM tathaa(a)nyaaH suravara nagariirvidyayaa(a)(a)saadya sadyO
mOghOdyOgaH patiShyan hutabhuji bhavataa sasmitaM vaaritO(a)bhuut || 6

மானீ ஸ த்வாமப்ருஷ்ட்வா த்³விஜனிலயக³தோ பா³ணஜாலைர்மஹாஸ்த்ரை
ருந்தா⁴ன꞉ ஸூதிகே³ஹம் புனரபி ஸஹஸா த்³ருஷ்டனஷ்டே குமாரே |
யாம்யாமைந்த்³ரீம் ததா²ன்யா꞉ ஸுரவரனக³ரீர்வித்³யயா(ஆ)ஸாத்³ய ஸத்³யோ
மோகோ⁴த்³யோக³꞉ பதிஷ்யன்ஹுதபு⁴ஜி ப⁴வதா ஸஸ்மிதம் வாரிதோ(அ)பூ⁴த் || 88-6 ||

கிருஷ்ணா, உன்னிடம் அறிவிக்காமலே,  அடுத்த குழந்தை பிறக்கும் சமயத்தில் முன்னதாகவே  அர்ஜுனன் அந்த பிராமணன் வீட்டுக்கு சென்று விட்டான்.  பிரசவ அறையை சுற்றி  அம்புகளால்  வேலி போட்டு கோட்டையாக்கிவிட்டு  காவல் காத்திருந்தான்.  குழந்தை பிறந்தது, அடுத்த கணமே, இதற்கு முன்னர் பிறந்த மற்ற குழந்தைகளைப்  போலவே  அதுவும்  மூச்கிழந்து  இறந்தது. 

அர்ஜுனன் திகைத்தான். தன்னுடைய  யோக சக்தியால் எமனுலகு சென்றான். இந்திரலோகம், எமலோகம் எங்குமே அந்த குழந்தையின் உயிரை கண்டுபிடிக்கமுடியவில்லை, தான் கொடுத்த வாக்குப்படி குழி தோண்டி அக்னி வளர்த்து அந்த பிராமணன் வீட்டு வாசலிலேயே  அக்னிப்ரவேசம் பண்ண தயாரானான். அந்த நேரம் நீ  சென்று தடுத்தாய். 

सार्धं तेन प्रतीचीं दिशमतिजविना स्यन्दनेनाभियातो
लोकालोकं व्यतीतस्तिमिरभरमथो चक्रधाम्ना निरुन्धन् ।
चक्रांशुक्लिष्टदृष्टिं स्थितमथ विजयं पश्य पश्येति वारां
पारे त्वं प्राददर्शकिमपि हि तमसां दूरदूरं पदं ते :॥७॥

saardhaM tena pratiichiiM dishamati javinaa syandanenaabhiyaatO
lOkaalOkaM vyatiitastimira bharamathO chakradhaamnaa nirundhan |
chakraamshukliShTa dR^iShTiM sthitamatha vijayaM pashya pashyeti vaaraaM
paare tvaM praadadarshaH kimapi hi tamasaaM duura duuraM padaM te || 7

ஸார்த⁴ம் தேன ப்ரதீசீம் தி³ஶமதிஜவினா ஸ்யந்த³னேனாபி⁴யாதோ
லோகாலோகம் வ்யதீதஸ்திமிரப⁴ரமதோ² சக்ரதா⁴ம்னா நிருந்த⁴ன் |
சக்ராம்ஶுக்லிஷ்டத்³ருஷ்டிம் ஸ்தி²தமத² விஜயம் பஶ்ய பஶ்யேதி வாராம்
பாரே த்வம் ப்ராத³த³ர்ஶ꞉ கிமபி ஹி தமஸாம் தூ³ரதூ³ரம் பத³ம் தே || 88-7 ||

''வா  என்னுடன்'' என்று அர்ஜுனனை அழைத்துக் கொண்டே மேற்கே  ஒரு வேகமான தேரில் சென்றாய்.  உனது சுதர்சன சக்ரம் இருளை விரட்டியது.  ஏழு கடல்களை தாண்டி சென்றீர்கள், சுதர்சன சக்ரத்தின் ஒளி அர்ஜுனன் கண்களைக் குருடாக்கியது.  ''அங்கே பார் அர்ஜுனா '' என்றாய். நீ வாசம் செய்யும்   வைகுண்டத்தில் இப்போது நீங்கள் இருந்தீர்கள். 

तत्रासीनं भुजङ्गाधिपशयनतले दिव्यभूषायुधाद्यै-
रावीतं पीतचेलं प्रतिनवजलदश्यामलं श्रीमदङ्गम् ।
मूर्तीनामीशितारं परमिह तिसृणामेकमर्थं श्रुतीनां
त्वामेव त्वं परात्मन् प्रियसखसहितो नेमिथ क्षेमरूपम् ॥८॥

tatraasiinaM bhujangaadhipa shayanatale divyabhuuShaayudhaadyaiH
aaviitaM piitachelaM pratinavajalada shyaamalaM shriimadangam |
muurtiinaamiishitaaraM paramiha tisR^iNaa mekamarthaM shrutiinaaM
tvaameva tvaM paraatman priyasakha sahitO nemitha kshemaruupam || 8

தத்ராஸீனம் பு⁴ஜங்கா³தி⁴பஶயனதலே தி³வ்யபூ⁴ஷாயுதா⁴த்³யை-
ராவீதம் பீதசேலம் ப்ரதினவஜலத³ஶ்யாமலம் ஶ்ரீமத³ங்க³ம் |
மூர்தீனாமீஶிதாரம் பரமிஹ திஸ்ருணாமேகமர்த²ம் ஶ்ருதீனாம்
த்வாமேவ த்வம் பராத்மன் ப்ரியஸக²ஸஹிதோ நேமித² க்ஷேமரூபம் || 88-8 ||

அங்கே  ஆதிசேஷன் மேல் சர்வாலங்கார  பூஷிதனாக  சங்கு சக்ர கதாபாணியாக , இடையில் மஞ்சள் பீதாம்பர வஸ்திரம் தரித்து,  கார்மேக வண்ணனாய், ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸஹிதம்  ஆரோகணித்திருந்தாய். வேதஸ்வரூபா, முக்தி அளிப்பவனே.

युवां मामेव द्वावधिकविवृतान्तर्हिततया
विभिन्नौ सन्द्रष्टुं स्वयमहमहार्षं द्विजसुतान् ।
नयेतं द्रागेतानिति खलु वितीर्णान् पुनरमू
न्द्विजायादायादाप्रणुतमहिमा पाण्डुजनुषा ॥९॥

yuvaaM maameva dvaavadhika vivR^itaantarhitatayaa
vibhinnau sandraShTuM svayamaha mahaarShaM dvijasutaan |
nayetaM draagetaaniti khalu vitiirNaan punaramuun
dvijaayaadaayaadaaH praNutamahimaa paaNDujanuShaa || 9

யுவாம் மாமேவ த்³வாவதி⁴கவிவ்ருதாந்தர்ஹிததயா
விபி⁴ன்னௌ ஸுந்த்³ரஷ்டும் ஸ்வயமஹமஹார்ஷம் த்³விஜஸுதான் |
நயேதம் த்³ராகே³தானிதி க²லு விதீர்ணான்புனரமூன்
த்³விஜாயாதா³யாதா³꞉ ப்ரணுதமஹிமா பாண்டு³ஜனுஷா || 88-9 ||


கிருஷ்ணா,  ஸ்ரீ மஹா விஷ்ணு   உன்னையும் அர்ஜுனனையும் கண்டதும்  உங்கள் இருவரையும் பார்த்து மகிழ்கிறார்,  ''நீங்கள் நர நாராயணர்கள்.  ஒருவர்  என் முழு அம்சம், மற்றவர் அதில் ஒரு பகுதியானவர்.அவருக்கு அது தெரியாதவர்.  நீங்கள் தேடிவந்ததெல்லாம் இங்கே இருக்கிறது. எடுத்துச் செல்லலாம். ''  இதுவரை மறைந்த அனைத்து பிராமணன் குழந்தைகளையும் அர்ஜுனனனிடத்தில் ஒப்படைத்தார் மஹா விஷ்ணு.  அர்ஜுனன் அந்த குழந்தைகள் அனைவரையும் பிராமணனிடம் ஒப்படைத்தபோது அவன் அர்ஜுனனைப் புகழ்ந்ததை வர்ணிக்க வார்த்தை எனக்கு தெரியவில்லை.

एवं नानाविहारैर्जगदभिरमयन् वृष्णिवंशं प्रपुष्ण
- न्नीजानो यज्ञभेदैरतुलविहृतिभि: प्रीणयन्नेणनेत्रा: ।
भूभारक्षेपदम्भात् पदकमलजुषां मोक्षणायावतीर्ण:
पूर्णं ब्रह्मैव साक्षाद्यदुषु मनुजतारूषितस्त्वं व्यलासी ॥१०॥
:
evaM naanaavihaarairjagadabhiramayan vR^iShNivamshaM prapuShNan
iijaanO yaj~nabhedaiH atulavihR^itibhiH priiNayanneNanetraaH |
bhuubhaarakshepadambhaat padakamalajuShaaM mOkshaNaayaavatiirNaH
puurNaM brahmaiva saakshaadyaduShu manujataaruuShitastvaM vyalaasiiH || 10

ஏவம் நானாவிஹாரைர்ஜக³த³பி⁴ரமயன்வ்ருஷ்ணிவம்ஶம் ப்ரபுஷ்ண-
ந்னீஜானோ யஜ்ஞபே⁴தை³ரதுலவிஹ்ருதிபி⁴꞉ ப்ரீணயன்னேணனேத்ரா꞉ |
பூ⁴பா⁴ரக்ஷேபத³ம்பா⁴த்பத³கமலஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண꞉
பூர்ணம் ப்³ரஹ்மைவ ஸாக்ஷாத்³யது³ஷு மனுஜதாரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ꞉ || 88-10 ||

வாதபுரீசா,   ப்ரம்மஸ்வரூபா,  நீ  கிருஷ்ணனாக அவதாரம் எடுத்ததே  உன்  தாமரைத் திருவடியை சரணடைந்தவர்க்கு  முக்தி அளிக்கவே. பூமியின் பாரம் குறைக்க என்பது  தீய சக்திகளை அழிக்க கொடுத்த காரணப்பெயர்.  உனது செயல்கள் அனைத்தும் லீலைகள். கிருஷ்ண பகவானே, நீ 
பாசத்தால், நேசத்தால் அனைவரையும் கட்டுண்டப்பண்ணிய மாயன்.  யதுகுலம்  பெருமையுற அதில் தோன்றியவன்.

प्रायेण द्वारवत्यामवृतदयि तदा नारदस्त्वद्रसार्द्र-
स्तस्माल्लेभे कदाचित्खलु सुकृतनिधिस्त्वत्पिता तत्त्वबोधम् ।
भक्तानामग्रयायी स च खलु मतिमानुद्धवस्त्वत्त एव
प्राप्तो विज्ञानसारं स किल जनहितायाधुनाऽऽस्ते बदर्याम् ॥११॥

praayeNa dvaaravatyaamavR^itadayi tadaa naaradastvadrasaardraH
tasmaallebhe kadaachitkhalu sukR^itanidhi stvatpitaa tattvabOdham |
bhaktaanaamagrayaayii sa cha khalu matimaan uddhavastvatta eva
praaptO vij~naanasaaraM sa kilajanahitaayaadhunaa(a)(a)ste badaryaam || 11

ப்ராயேண த்³வாரவத்யாமவ்ருதத³யி ததா³ நாரத³ஸ்த்வத்³ரஸார்த்³ர-
ஸ்தஸ்மால்லேபே⁴ கதா³சித்க²லு ஸுக்ருதனிதி⁴ஸ்த்வத்பிதா தத்த்வபோ³த⁴ம் |
ப⁴க்தானாமக்³ரயாயீ ஸ ச க²லு மதிமானுத்³த⁴வஸ்த்வத்த ஏவ
ப்ராப்தோ விஜ்ஞானஸாரம் ஸ கில ஜனஹிதாயாது⁴னா(அ)ஸ்தே ப³த³ர்யாம் || 88-11 ||

தெய்வமே,  உன்மேல்  அதீத  பக்தி கொண்ட நாரதர் அங்கே அப்போது துவாரகைக்கு  உன்னை தரிசிக்க வந்தார்.  வசுதேவர் உன் தந்தை ,  நாரதரைக் கண்டதும்  மிக்க பக்தியும் மகிழ்ச்சியும் கொண்டு வரவேற்று உபசரித்தார். நாரதரிடம் வேதாந்த தத்வங்களை கேட்டு அறிந்தார்.  இதை உன்னிடம் உன் பக்தன்  உத்தவன் பின்னர் அறிந்தான்.  இன்று வரையிலும் உத்தவன்  உலக க்ஷேமத்துக்காக  பத்திரிகாச்ரமத்தில்  நாராயணா உன்னோடு இருக்கிறான். 

सोऽयं कृष्णावतारो जयति तव विभो यत्र सौहार्दभीति-
स्नेहद्वेषानुरागप्रभृतिभिरतुलैरश्रमैर्योगभेदै: ।
आर्तिं तीर्त्वा समस्ताममृतपदमगुस्सर्वत: सर्वलोका:
स त्वं विश्वार्तिशान्त्यै पवनपुरपते भक्तिपूर्त्यै च भूया: ॥१२॥

sO(a)yaM kR^iShNaavataarO jayati tava vibhO yatra sauhaarda bhiiti
sneha dveShaanuraaga prabhR^itibhiratulairashramairyOgabhedaiH |
aartiM tiirtvaa samastaamamR^itapadamaguH sarvataH sarvalOkaaH
sa tvaM vishvaartishaantyai pavanapurapate bhaktipuurtyai cha bhuuyaaH || 12

ஸோ(அ)யம் க்ருஷ்ணாவதாரோ ஜயதி தவ விபோ⁴ யத்ர ஸௌஹார்த³பீ⁴தி-
ஸ்னேஹத்³வேஷானுராக³ப்ரப்⁴ருதிபி⁴ரதுலைரஶ்ரமைர்யோக³பே⁴தை³꞉ |
ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தாமம்ருதபத³மகு³ஸ்ஸர்வத꞉ ஸர்வலோகா꞉
ஸ த்வம் விஶ்வார்திஶாந்த்யை பவனபுரபதே ப⁴க்திபூர்த்யை ச பூ⁴யா꞉ || 88-12 ||


என்  தெய்வமே  குருவாயூரப்பா,  உன்னுடைய  அவதாரங்களிலேயே  கிருஷ்ணாவதாரம் ஒன்று தான் மற்றதெல்லாம் விட  மிக்க உன்னதமாக அமைந்துவிட்டது. அதை பூர்ணாவதாரம் என்கிறார்கள். எங்கள் இதயத்தில் நீ இருக்கிறாய் என்பதால் உன் இதயத்தில் எங்களை குடிகொள்ளச்செய்பவனே  நட்புயோகம் எங்கும்  எவரிடமும் பரவ, பயம் அகல, அன்பு பெறுக, பொறாமை, கோபம், அழிய, பந்தம் பாசம் உன்னிடம் மட்டுமே பற்றிட, இந்த  ஒரு அவதாரத்தில் , உலக பற்றனைத்திலிருந்தும் விடுபட வைத்து  அனைவரையும்  ஆனந்தத்தில்  மகிழ்விப்பவன் நீ.  துன்பமகற்றி இன்பமளிக்கும் எண்டே குருவாயூரப்பா,எங்கும் சாந்தி அளிப்பவனே,  என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷி.



Friday, October 29, 2021

LIFE LESSON

 Some thoughts to ponder over -  J K SIVAN 


We are friends,  How  thick and close we are ?  It depends on the way we maintain our contacts and create a great good will in the minds of  all. Any association with a motive, self interest will certainly fail because  it is easily noticeable. Built on a platform of  mutual love, affection, help, and joint effort to promote friendship with everyone alone will strengthen the relationship.
So we have to show more care in maintaining our good relationship for the betterment of our society.
The happiness in any family depends on how the couples spend their time, how much they care to connect with each other in keeping their relationship healthy and strong  It involves give-and take- policy and tolerance and understanding of the other.   Close, loving relationship with life partner, is what everyone looks for in life  but many lack the spirit to promote it.  partners in life are not just picking one off the shelf, use and throw.
No one knew of divorce and breaking of marriage in the lives of our forefathers and ancestors. Nowadays it has become the order of the day.  very soon after their marriage, the couple seek separation legally. why?  what is the mental and physical agony involved which should have been avoidable if care was exercised and more thought was given for a happy future by both jointy.   Even today it is a common sight that many elders in their oldage  when separated from their partners do not survive because the love and affection and need for the other person is heartily felt.
Relationship just dont happen of its own,  it is chosen, enjoyed, time and effort is spent on developing it to last long.

Life is ever challenging for everyone.  So we need a support to face it. The support should be reliable, mentally same levelled,  help each other to walk the path of life successfully.  Many wives are  source of encouragement for the husbands and so are they to their wives.  Comparison has no place between couples, because  once ego and arrogance sets in it will spoil a healthy  longtime relationship.

Pointing out the errors, mistakes of the other is unwarranted, because no one is perfect.  Accept and try to correct wherever possible, your ways.  It is a joint venture to the accepted same goal of happiness. Constructive healthy criticism in polite soothing way would be wholeheartedly accepted by the other, because of the trust one has on the other.  Everyone needs patient listening to their views, and  expect attention be given to him or her.

We  all cannot and may not be mind readers. Therefore  expression is needed for asking what we want, and helping the other  with their needs.  Communication between couples is  most essential for long term happy relationship in life.
God has created us to help each other without self interest.  Everyone is blessed with some talent which should be unearthed, exposed and appreciated.   I have  observed how successful it is in life in my long years of survival so far.

MATHS TEACHER


 எங்க வாத்யார்..... நங்கநல்லூர் J K SIVAN


ராகவாச்சாரி பல்லைக் கடித்தான். இருப்பதே பத்தரை பல்லு தான். அதுவும் அங்கொன்று இங்கொன்றுமாக மேலும் கீழும். சீடை, முறுக்கு கடித்து ரொம்ப காலமாகிவிட்டது. பெரிய குடுமி காணாமல் போய் வழுக்கை மண்டை விளக்கொளியில் கண்ணைக் கூச, ரெண்டு காதுக்கும் மேலே சில வெள்ளிக்கம்பிகள் பின்னால் சென்று இணைந்து சங்கமமாகி ஒரு சிண்டு தான் மிச்சம்.

அவன் கணக்கு வாத்தியாராக ரிடையர் ஆனவன். பிள்ளைகள் வளர்ந்து உத்யோகமாகிகுடும்பஸ்தர்கள். பேரன் பேத்திகள் தாத்தாவோடு விளையாட, ஏன் பேசக்கூட நேரமில்லாதவர்கள். ஒரு காலத்தில் வைதேகி இருந்தாள் , அடிக்கடி காப்பி கேட்பான். ஆனால் ரெண்டு வேளை தான் அரை டம்ளர் கொடுப்பாள். திட்டுவான். ஆரம்ப பயம் அவளுக்கு மறத்து போய்விட்டது. அவனுக்கு பிடித்த சுண்டைக்கா வத்தக் குழம்பு, ஜவ்வரிசி வடாம் பண்ணி போடுவாள். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் கீரை சுண்டல், கீரை மசியல், மணத்தக்காளி கீரை பொறிச்ச கூட்டு ரொம்ப பிடிக்கும். பண்ணி போடுவாள். ஐந்தே முக்கால் வருஷம் ஆகிவிட்டது அவள் போய். அந்த சாப்பாடு இல்லாம நாக்கு செத்து போச்சு.

இப்போது என்ன கொடுக்கிறார்களோ அதைச் சாப்பிட பழக்கம் பண்ணிக் கொண்டு விட்டான், இன்னும் ரெண்டு நாளில் காலண்டர் சீட்டு கிழித்தால் 78வயது முடியப்போகிறது. இடுப்பு வெட்டி அவிழ்வது தெரியவில்லை. பார்வை கொஞ்சம் மங்கல். அதிக பக்ஷம் 10 அடி தூரம். காதும் கிணற்றுக்குள் இருந்து யாரோ பேசுவது போல் தான் கேட்கிறது. தூக்கம் அடிக்கடி வருகிறது. கோழி தூக்கம். உடனே விழிப்பு.
''ஒரு பயலும் என்னை லக்ஷியம் பண்ணறதில்ல''. உள்ளே ஒரு குரலின் கேள்வி.

''அதனாலென்னடா ராகவா, நீயும் லக்ஷியம் பண்ணாதே அவ்வளவு தானே.. '' இன்னொரு குரலின் பதில். இன்னும் பேசுகிறது:'' கிருஷ்ணன் இருக்கான், நாராயணன் இருக்கான், பிரபஞ்சம் முழுக்க அவனே தான். எப்பவும் உன்னை பார்த்துண்டு இருக்கான். எதிரே படம் மாட்டியிருக்கியே. அந்த கண்ணுலே பார் எத்தனை கருணை, தயை, அன்பு. அம்மாடா அவன். அவன் ஒத்தன் உன்னை எப்பவும் லக்ஷியம் பண்ணி தானே உன்னையே பாக்கிறான் போறாதா?''

''நீ சின்ன வயசிலிருந்து பார்க்கறியே, இந்த சூரியன். எத்தனை தடவை நமஸ்காரம் பண்ணி இருக்கே? . அன்னிலேருந்து இன்னிக்கு வரை உன்னை ஒரேமாதிரி தானே லக்ஷியம் பண்ணி அதே வெளிச்சம் கொடுக்கிறது. அந்த சந்திரனும் , காத்தும், மழையும், கிணற்று நீரும் அப்படி தானே, யாரு உன்னை அலட்சியம் பண்ணறா சொல்லு? - அதேகுரல் தொடர்கிறது.
நீ நட்ட மாஞ்செடி கொல்லப்பக்கம் எத்தனை மாங்காயை, பழத்தை தறது. உன்னை அலக்ஷியம் பண்ணலையே. பின்னே எதுக்கு வேண்டாத கவலை உனக்கு?
''அப்போ யாரு என்னை அலக்ஷியம் பண்ணது?:: ராகவாச்சாரி குரலைக் கேட்டான்.

''நீயே தாண்டா. உன் மனசு. அது தான் பொல்லாதது. அப்பவும், இப்பவும், எப்பவுமே அது தான் நம்பியார்.
நீ எத்தனை பேரை தூக்கி அடிச்சு பேசினவன், உதாசீனம் பண்ணவன், அவனுக்கு வலிக்குமேன்னு அப்போ தெரியலையே? உன்னை மதிச்சு வந்தவனைக் கூட நீ எதுத்தவன் தூக்கி யடிச்சு முட்டியவன். அப்போ வலிக்கலே. சிலர் உன்னை லக்ஷியம் பண்ணாவிட்டா லும் அவன் பின்னாலேயே எல்லாம் காரியம் ஆகணு ம்னு ஒடினியே. அப்போ இந்த தன்மானம் எங்கே போச்சு?இப்படி பண்றதெல்லாம் நீ இல்லை. உன் மனசு. அதோட தன்மையை தான் ''மனப்பான்மை'' என்று சொல்கிறோம். வேண்டுமென்றால் உயர்த்தி, வேண்டாமென்றால் துச்சமாக, கால் தூசியாக தள்ளும் குணம். இப்போ யாரைப் பாத்தாலும் உன்னை அலட்சியம் பண்றதாக ஒரு நினைப்பு. அவனவன் கவலை அவனுக்கு. அது உனக்கு மறந்து போயிடுத்து. நீயே உன்னை ஏன் தாழ்வா நினைச்சுக்கறே. இல்லாததை இருக்கறா மாதிரி ஒரு பாவனை ஏன்.

ராகவாச்சாரி என்னிக்கும் கணக்கு ப்ரபோஸர் தான். அவனுக்குன்னு ஒரு தனி மதிப்பு எப்போதும் உண்டு. எத்தனை பேர் உன்கிட்டே படிச்சதுக்கு தினமும் ஒரு தடவையாவது நினைக்கிறான்னு உனக்கு தெரியுமா? உன்னை தெய்வமா எத்தனை பேர் கொண்டாடறான் தெரியுமா உனக்கு? 32 வருஷம் வீடு வாசல் குழந்தை குடும்பம், எல்லாம் மறந்து கணக்கே பிரதானம்னு திருப்பி திருப்பி ஒவ்வொருத்தனுக்கும் புரிய வைச்சியே, காசா பணமா? என்ன எதிர்பார்த்தே? ஒண்ணுமில்லே. மாசம். 186 ரூபா சம்பளம் ஒண்ணுக்காக தானே உசிரைக்கொடுத்து, அத்தனை நன்றியோடு உழைச்சே. அது வீண் போகுமா? . நீ தெய்வம்டா ராகவா. ஒரு கணம் இப்படி நீ நினைச்சதுண்டா. உன் ஸ்டூடண்ட்ஸ் உலகமெல்லாம் எங்கெங்கேயோ இருக்காண்டா. அவன் பிள்ளை குட்டிக் கிட்டே ''எனக்கு கிடைச்சது போல் உங்களுக்கு கணக்கு, இங்கிலிஷ் சொல்லிக் கொடுக்க ராகவாச்சாரி மாதிரி வாத்யார் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கிடைக்க மாட்டார் டா'' என்று சொல்றது உன் காதிலே விழலே. '' பாவம், நாங்கல்லாம் அவரை கிழிசல் கருப்பு கோட்டு'' ன்னு தான் கேலி பண்ணுவோம் என்று வருத்தப்படறானுங்க உன் மாணவர்கள் எல்லாம். உனக்கு எங்கே அதெல்லாம் தெரியும். பெரிய சூரியனும் அதன் சின்ன பிரதிபலிப்பும் ஒண்ணு தான். ரெண்டுக்கும் வெளிச்சம் உண்டு. நீ பெரிசாவே நினை. சின்ன எண்ணங்கள் காணாமல் போயிடும். இப்பல்லாம், நீ ஏன் பெரியாழ்வார் படிக்கறதை நிறுத்திட்டே? . எடு புஸ்தகத்தை. தினமும் மூணு நாலு பாசுரம் உரக்க படி, பாடு. உனக்கு கேட்டால் போதும் உன் குரல்.

அப்புறம் எவன் என்ன நினைச்சா என்ன, பெரியாழ்வார் என்ன நினைச்சார் என்பதே மனதில் நிக்கும். உன்னை நேரடியாக பாராட்ட எவரும் வேண்டாம். நீ பாராயணம் பண்றியே அந்த பெருமாள் உன்னை பாராட்டுவார்.

''டேய் , ராகவா நீ நல்லவன். உன்னாலே எத்தனையோ குடும்பங்கள் உன்கிட்டே நன்னா படிச்சு, சந்தோஷமாக நல்ல உத்யோகம் கிடைச்சு சுபிக்ஷமா வாழறதுடா. ஒரு க்ஷணம் இதை எண்ணி பார்த்தா, நீ இமயமலை மேலே நிக்கிறேடா. பாரிஜாதம் யாருக்கு வேணும் யாருக்கு வேணாம் என்று யோசித்து பூக்கறதில்லே. வாரி வாரி வழங்கறது., தரையெல்லாம் பாவாடை விரிக்கிறது. நீ வாத்யார் வேலை அப்படி தான் செஞ்சவன். உன்கிட்டே இருக்கிற வித்தையை வாரி வாரி தானம் பண்ணினவன். ஒரு க்ஷணம் திரும்பி பாருடா. உனக்கு தெரிஞ்ச, அந்த முகம் மறந்துபோன, மாணவர்கள் புரிஞ்சுக்கற வரையிலும் நீ விடமாட்டே. விடாம திருப்பி திருப்பி சொல்லிக் கொடுப்பே, கேள்வி கேட்பே. அவங்களுக்கு அப்போ அது புரியல. அப்புறம் வளந்து மூளை விரிஞ்சதும் புரிஞ்சுது. உன்னை வாழ்த்திண்டே தான் இன்னும் இருக்கானுங்க.

நீ என்ன பண்றே. உனக்கு அப்படிப்பட்ட ஒரு பாக்யத்தை கொடுத்த பெருமாளுக்கு நமஸ்காரம் பண்ணி பெரியாழ்வார் ரொம்ப பிடிக்குமே படி எடுத்து மறுபடியும் இனிமே படி.

ulladhu narpadhu

 


உள்ளது நாற்பது -  நங்கநல்லூர் J K  SIVAN--
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி --

28.  மூழ்கி முத்தெடுப்போம்.

எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள்காண வமுழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டு மறிபிணதீர்ந்துடலம் 28

உங்களுக்கெல்லாம்  ஞாபகம் இருக்கிறதா?  முன்பெல்லாம்  வீடுகளில் குழாய் நீர்  கிடையாது. கிணற்று நீர் தான் குடிக்க குளிக்க எல்லாவற்றுக்கும்.  அநேக வீடுகளில் மின்சாரம் கூட கிடையாது. ஹரிக்கேன் லைட் வாழ்க்கை.  ஆனந்தமாக இருந்தது.

அப்போதெல்லாம்  சனி ஞாயிறுகளில்  தெருவில் ஒருவர் ''தூறு வார்ரது '' என்று  கத்திக்கொண்டே போவார்.  வீட்டில் கிணற்றில் தவலை , குடம், பாத்திரங்கள் விழுந்துவிட்டால் எடுத்துக் கொடுப்பார்.   கிணற்றில் மூழ்கி  எடுத்துக் கொடுத்து  கூலியாக  ரெண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய்  வரை  வாங்கிக்கொண்டு போவார்.  இது ஐம்பது அறுபது   வருஷங்களுக்கு முன்பு. நான் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு மூச்சுப்பிடித்து நீரில் மூழ்கி முத்துக் குளிப்பது போல், கிணற்றில் ஆழமாக, அடியில் விழுந்ததை எடுப்பது போல  மனதிற்குள் ஆழமாகப்  போய் அகந்தை, நான் எனும் அகம்பாவம் எங்கிருக்கிறது என்று  தேடி அப்புறப்படுத்த வேண்டும். நீரில் மூழ்கி தேடி எடுக்க நல்ல மூச்சுப் பயிற்சி வேண்டும்.  

உபாசனை என்றால்  கடினமான  அனுஷ்டானம், சாதனை. அது இருந்தால் விடாமல்  ஹ்ருதயத்தை அலச முடியும். அப்படி தேடினால் தான் SCAN  பண்ணினால்  தான் அகந்தை எங்கெல்லாம் உற்பத்தியாகிறதோ அதெல்லாம் காணாமல் போகும்.  ''நான் '' எனும் எண்ணத்தை, அகந்தையை,   அது உற்பத்தியாகும் மூலத்தில் தேடுவதை தான் ரமணர்  உபாசனை என்கிறார்.  இப்படி  விடாமல் ''நான்''  யார் எனும்  விசாரத்தில் மூழ்கும்போது  அஹங்காரத்தின்  சலனத்தில் தான் கவனம் இருக்கும். நீரில் மூழ்கியவன்  தவலை  குடம் எங்கிருக்கிறது என்பதில் தான் கவனமாக தேடுவான். 

நீரில் மூழ்குபவன் பேச்சையும்  மூச்சையும் அடக்கிக்கொண்டு தான் தேடுவான். நாம்  ஏகாந்தமாக,  எண்ணங்களை  அடக்கி அலையவிடாமல் உள்நோக்கி  ஆத்ம விசாரத்தை பழகவேண்டும். ஆஹாரம்  சுத்தமானதாக, சாத்வீகமானதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும்.  நீண்ட உறக்கம், கண் விழித்தல் வேண்டாம். 

தூக்கத்தால்,  எண்ணங்கள் அலைபாய்வதால், மனம் மூடத்தனம் மிகுந்ததாகி,  விவேகமில்லாமல்
துன்பம் அடைந்து  சீரழிகிறது.  அதை ஓடாமல் நிறுத்தி ஒரு நிலையில் வைப்பது முதலில் அவசியம். அதற்கு ஒரு சின்ன  உபாயம்.  மூச்சு, ப்ராணன்,  ஸ்வாஸம் , உள்ளே செல்வதையும், நிற்பதையும், வெளியே வருவதையும், நிதானமாக கவனித்துவந்தாலே மனம் அதில் மட்டும் ஈடுபடும்.  நிஸ்சலமாகும் . 

கரண்ட் இல்லாமல், இருட்டிலே  மணிக்கணக்காக உட்கார்ந்தோமானால்,  அங்கு இருப்பதெல்லாம் தெரிகிறது. 

உள்ளே புகுந்து அலசும்போது  ''நான்''  என்பதை தேடும்போது, மனம்  அது தேடும் இடம், வழி,  எல்லாம் தெரிந்து கொள்ளும், எதை தேடுகிறோம் என்றும் புரிந்துகொள்ளும். 

இப்படி  உறக்கமோ, எண்ணங்களோ இல்லாமல்,  தேஜோமயமாக  நிச்சலம்   அனுபவமாகிவிட்டால், அது தான் மஹா யோகம்.  தினசரி வாழ்க்கை உறவுகளில்  கூட  சலனத்தை நிறுத்த முடியும்.  அப்புறம் நினைத்த போதெல்லாம்  சஹஜமாக  மனம் நிச்சயமாகும். முன்பே சொன்னேனே  நிர்விகல்ப சமாதிநிலை. அது கை கூடும். அப்புறம் என்ன. சதானந்தம், சித்தானந்தம் தான். 

மேலே  tank   தொட்டியில் நீர்  அழுக்காக  நிறைந்திருக்கிறது.  மேலே ஏறி  தொட்டி உள்ளே குதித்து,  நன்றாக  தேய்த்து, அடைப்பானை பிடுங்கிவிட்டால் அழுக்கு நீர்  எல்லாமே  பீச்சியடித்துக்கொண்டு வெளியே ஓடும். அப்புறம் தொட்டி காலி. சுத்தமாகி,  நல்ல நீர் ஒன்றே  அதில் இருக்கும். அது தான் ஸார்  இந்த  ஆத்ம விசார பயிற்சி. அகந்தை, மனம் எல்லாம் காலியாகி,   ஹ்ருதயத்தில் ஆத்மா ஒன்றே  இருக்கும். அது தான் ஸாக்ஷாத்காரம். ஆனந்தம், சாந்தி , அம்ருதானுபவம். 


Thursday, October 28, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -   நங்கநல்லூர் J.K. SIVAN-
ஸ்லோகங்கள் 53-54  நாமங்கள் 205-218.

सर्व-सर्वयन्त्रात्मिका सर्व-सर्वतन्त्ररूपा मनोन्मनी ।
माहेश्वरी महादेवी महालक्ष्मीर् मृडप्रिया ॥ ५३॥
महारूपा महापूज्या महापातक-नाशिनी ।
महामाया महासत्त्वा महाशक्तिर् महारतिः ॥ ५४॥

ஸர்வ யந்த்ராத்மிகா ஸர்வ
தந்த்ரரூபா மநோந்மநீ |
மாஹேச்வரீ மஹாதேவீ
மஹாலக்ஷ்மீர் ம்ருடப்ரியா || 53

Sarva yanthrathmika Sarva thanthra roopa Manonmani
Maaheswari Mahaa devi Maha lakshmi Mrida priya

महारूपा महापूज्या महापातक-नाशिनी ।
महामाया महासत्त्वा महाशक्तिर् महारतिः ॥ ५४॥

Maha roopa Maha poojya Maha pathaka nasini
Maha maya Maha sathva Maha sakthi Maha rathi

மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக நாசிநீ |
மஹாமாயா மஹாஸத்வா  மஹாசக்திர் மஹாரதி: || 54

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (205 - 225) அர்த்தம்

சர்வேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகை எனும் காமாக்ஷி கையில் ஏன் கரும்பை வைத்துக் கொண்டிருக் கிறாள். அம்பாள் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை கூட சாதகமாக்கிக்கொள்கிறாள் என்று புரிய வைக்கும் சம்பவம் அது.  

மன்மதன் காதல் கடவுள். காமன். அவன் சிவன் தியானத்தில் இருக்கும்போது தனது கரும்புவில்லில் ஐந்து புஷ்ப பாணங்களைத்  தொடுத்து சிவன் மேல் எய்துகிறான். மற்றவர்களாக இருந்தால் காமன் கணைகளால் அவன் வசப்பட்டு மதி மயங்குவார்கள். சிவன் தியானம் கலையவே யார் கலைத்தது என்று நெற்றிக்கண்ணால் (ஞானக்கண்) மெதுவாக எதிரே நோக்க அந்த ஞானத்தீ காமனை எரித்து சாம்பலாக்க, அவன் மனைவி ரதி ஓடிவந்து அம்பாளிடம் கதறுகிறாள். கணவனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சுகிறாள். அம்பாள் யார்? சிவை. தனது கணவன் இட்ட தண்டனை அவள் இட்டது தானே? மீற முடியாதே. அதே நேரம் தாய் அல்லவா? பாசத்தோடு ரதிக்கு அருள்கிறாள்? எப்படி?

''மன்மதா, எழுந்திரு. உன் மனைவியிடம் சேர். உன் கரும்பு வில் இனி என் கையில் இருக்கட்டும். உன் புஷ்ப பாணங்கள் இனி உன் கரும்பு வில்லிலிருந்து புறப்படாது. அவை என் வசம் இருக்கும். இனி நீ உன் மனைவிக்கு அன்பு கணவன். அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவாய். உலகத்துக்கு பிரபஞ்சத்துக்கு நீ கரும்பு வில்லேந்தி கணைகள் வீசும் காமன் இல்லை. தேகம் இல்லாதவன்.  அநங்கன் .''

ரதி மகிழ்ந்து வணங்கி மதனோடு செல்கிறாள். மன்மதன் நமக்கெல்லாம் அநங்கன். உடல் இல்லாதவன். பஞ்ச இந்திரியங்களை கட்டுப்படுத்தும் மன்மதன் பாணங்கள் அம்பாளிடமிருந்து அவ்வளவு சுலபமாக வெளியேறாது.  இனி அம்பாளின் நாமங்களை தொடர்வோம்.


* 205 *  सर्वयन्त्रात्मिका --ஸர்வ யந்த்ராத்மிகா -
எந்த செப்பு, பித்தளை, தங்க வெள்ளி உலோக தகடாக, வேண்டுமானாலும் இருக்கட்டும்,  எந்தெந்த தெய்வத்தின் சக்தியை ஆகர்ஷிக்கும் யந்த்ரமாக இருந்தாலும்  இருக்கட்டும்.  அது ஸ்ரீ லலிதாம்பா வின் சக்தியாகவே தான் மிளிர்கிறது.

* 206 *  सर्वतन्त्ररूपा - ஸர்வ தந்த்ரரூபா -
தந்திரம் என்பது வழிபாடு. எந்த மந்த்ர தந்த்ர வழிபாடாக இருந்தாலும் அது அம்பாளையே குறித்து செய்ததாகும்.

* 207 *मनोन्मनी -    மநோன்மணீ  -
 நமக்கு எத்தனையோ எண்ணங்கள் மனதில் தோன்றுகிறதே அது எல்லாமே குப்பையாக அல்லவோ இருக்கிறது. ஆனால் அதற்கிடையே அற்புதமான சில எண்ணங்களும் கலந்திருக்கிறது. நிறைய மண்ணை மலைமலையாக தோண்டினால் தான் ஒரு  நூறு கிராம் வைரம் கிடைக்க வழி இருக்கி றது.  அது வேண்டுமானால் குப்பையும் மண்ணும் எறியப்படவேண்டும். நல்ல எண்ணங்களே மனத்தில் தோன்றும் மணி. மனோன்மணி. அதுவே அம்பாள். அவள் தான் மனோன்மணி, உண்மணி, என்கிறார் ஹயக்ரீவர். ஸ்ரீ ருத்ரம் சிவனை மனோன்மனன் என்கிறது. ரிஷிகளின் முத்திரைகளில் மனோன்மணி என்று தியான முத்திரை உண்டு.

* 208 *  माहेश्वरी -மாஹேஸ்வரீ -
 மஹேஸ்வரனோடு இணைந்த அம்பாள் தான் மஹேஸ்வரி.  பாகம் பிரியாள் . அர்த்த நாரி.

* 209 * महादेवी -  மஹாதேவீ -
 மஹாதேவனோடு ஐக்யமானவள் மஹாதேவி. அர்த்தமே தேவை இல்லை இதற்கு. மஹா என்றாலே வெகுவாக உயர்ந்த என்று பொருள். சிவனுக்கு எட்டு ஸ்வரூபங்கள்.   சர்வ ஈஸ்வரன் - பூமி. பவ: புண்ய நதிகள் போல ஜலரூபம், ருத்ரன்: அக்னி ஸ்வரூபம். எரிப்பவன் . உக்கிரன்: காற்று பீமன்: அகண்ட எல்லையற்ற ஜலசக்தி. சுனாமி போல் என்று வைத்துக்கொள்ளுங்கள், பசுபதி: ஆத்ம ஸ்வரூபம். ஈசானன்: சூர்ய ஸ்வரூபம். மஹாதேவன்: பிறைசூடி,   சந்திர ஸ்வரூபன். லிங்க புராணம் இதை சொல்கிறது. நான் அல்ல.

* 210 *महालक्ष्मी -     மஹாலக்ஷ்மி --
அளவற்ற செல்வங்களை வாரிவழங்கும் செல்வ ராணி ஸ்ரீ மஹா லக்ஷ்மி  தேவி,  விஷ்ணுபத்னி. மஹாலக்ஷ்மியை  பதிமூன்று வயது பெண்ணாக சொல்கிறது ஒரு புராணம். அதனால் தான் பதிமூன்றாம் நாளான திரியோதசி அன்று லக்ஷ்மி  பூஜை செய்வார்கள்.

* 211 *  मृडप्रिया - ம்ருடப்ரியா -
சிவனுக்கு ம்ரிடன் என்று ஒரு பெயர். சிவனின் தாண்டவ சப்தங்களில் உண்டான பெயர். அதை வாசிப்பதால் அதன் உருவானது தான் ம்ரித அங்கம் - மிருதங்கம் - நந்திகேஸ்வரன் சிவனின் தாண்டவத்துக்கு அந்த சப்தத்தை வாசித்து காட்டும் சொல் கட்டு.

* 212 * महारूपा -*மஹாரூபா --
அண்ட பகிரண்ட மகா பெரிய உருவம் கொண்டவள் அம்பாள். பெரியதில் பெரியது. சிறியதில் சிரியதானவள்.

* 213 * महापूज्या - மஹாபூஜ்யா -
எல்லோராலும் வழிபடப்படுபவள். எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் அவளை தான் வழிபட்டதாகும் அல்லவே. எல்லாமும் அவளே என்றபோது எந்த வழிபாடும் அவளுக்கு தானே.

* 214 * महापातकनाशिनी -  மஹாபாதக நாசிநீ --
எந்த தீய பாப செயலில் மாட்டிக் கொண்டாலும் அவற்றை நாசம் செய்து அதில் இருந்து பக்தனை மீட்பவள் அம்பாள். அதிக பட்ச பாபம் ப்ரம்மஹத்தி, பிராமணனை கொல்வது.

* 215 * महामाया - மஹாமாயா -
சிறு மாயை, பெரு மாயை எல்லா வித மாயைகளையும் அடக்கி ஆள்பவள் அம்பாள். அவளை அதனால் மஹா மாய ஸ்வரூபிணி என்பது. இந்த பிரபஞ்சமே மாயையால் உழல்வது. அவள் மாயையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிடில் உலகம் இயங்கமுடியாது. செயல் நின்று விடும்.

* 216 *महासत्त्वा - மஹாஸத்வா -
எல்லா ஞானமும் தானேயானவள். சத்வ குண சீலி.

* 217 * महाशक्तिः -மஹாசக்தி -
அதீத சக்தி படைத்தவள் அவள் பெயரே சிவசக்தி அல்லவா. சர்வ சக்தி கொண்ட அம்பாள் மஹா சக்தி என்று புகழ்ந்து போற்றுகிறார் ஹயக்ரீவர். ஆமாம் சந்தேகமென்ன என்கிறார் அகஸ்திய மகா ரிஷி.

* 218 *महारतिः*மஹாரதி:
உலகத்தில்  எதெல்லாம் நாம் சுகம் இன்பம் என்கிறோமே அதெல்லாம்  நாம் அனுபவிக்க வாரி வழங்குபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. சந்தோஷபடுத்தும்  சந்தோஷி மாதா அல்லவா  அவள்?.

ஒரு  சின்ன விஷய தானம்.

அம்பாளின் கருணை ப்ரத்யக்ஷமாக எனக்கு கிடைத்ததற்கு  ஒரு சின்ன  உதாரணம்.  நான் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  விளக்கம் எழுத  ஆரம்பித்து முதல் கட்டுரை அனுப்பினேன்.  வயதான ஒரு  மெல்லிய குரல் டெலிபோனில் வந்தது. ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி, நாற்பத்தைந்து ஐம்பது வருஷங்களாக சக்தி உபாசகர்.   தினமும்  குறைந்தது ஏழு  எட்டு  மணி நேரங்களாவது லலிதா பூஜை வழிபாடு செய்துவிட்டு உண்பவர்.   இப்போது பொன்னேரியில் வசிக்கும்  அவர்  அடிக்கடி என்னோடு பேசுபவராகி விட்டார். மகா பெரியவளோடு நெருக்கமான ஒரு குடும்பம்.  மஹா பெரியவாளுக்கு ஆசானாக இருந்த  பருத்தியூர்  ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி குடும்பம்.  பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளின் ரஸ நிஷ்யந்தினியை  நான் தமிழில் எழுத  காரணமானவர்.
 
அவரிடமிருந்து  பஞ்ச பஞ்சிகா எனும் ஐந்து ஐந்து  தேவி நாமங்களை பற்றி அறிந்தேன். இந்த பூஜை நாமாவளி  நவாவரண பூஜைக்கு பிறகு உச்சாடனம் செய்வது.  குறிப்பாக இந்த ஐந்தைந்து பிரிவுகளும்   அதில் வரும் நாமங்களை மட்டும் அவரிடமிருந்து அறிந்ததை  விஷய தானம் செய்கிறேன்.
பஞ்ச பஞ்சிகா  பிரிவுகள்
1.லக்ஷ்மி பஞ்சகம்
2.கோச பஞ்சகம்
3.கல்பலதா பஞ்சகம்
4.காமத்துக்கா பஞ்சகம்
5.ரத்ன பஞ்சகம்
ஒவ்வொரு பஞ்சகத்திலும் வரும்   அம்பாளின் நாமங்கள்
1. லக்ஷ்மி பஞ்சகம்:      ஸ்ரீ வித்யா லக்ஷ்மி,  ஸ்ரீ லக்ஷ்மி,  கமலாலய  மஹா லக்ஷ்மி,   த்ரிசக்தி மஹாலக்ஷ்மி,  சாம்ராஜ்ய லக்ஷ்மி
2. கோச பஞ்சகம்:   ஸ்ரீ வித்யா கோஸி ,  பரஞ்ஜோதி  கோஸி , பரா நிஷ்கள சாம்பவ கோஸி ,  அஜபா கோஸி  மாத்ருகா கோஸி
 3.கல்பலதா பஞ்சகம்:   ஸ்ரீ வித்யா கல்பலதா,  துக்தா கல்பலதா , ஸரஸ்வதி கல்பலதா , திரிபுரா கல்பலதா,  பஞ்ச பாணேஸ்வரி  கல்பலதா
4. காமதுகா பஞ்சகம்:  ஸ்ரீவித்யா மஹா திரிபுரசுந்தரி,  அமிர்த பீடேஸ்வரி,  சுதா, அம்ருதேஸ்வரி, அன்னபூர்ணா.
5. ரத்ன பஞ்சகம்:  ஸ்ரீ வித்யா ரத்னா, சித்த லக்ஷ்மி ரத்னா, புவனேஸ்வரி ரத்னா,  ராஜமாதங்கி ரத்நா , வாராஹி ரத்நா
ஸ்ரீ லலிதாம்பா நவாவர்ணமோ  சக்தி வழிபாடோ ஒரு பெரிய கடல்.  முத்துக்கள் நவமணிகள் நிறைந்தது.   அதன் ஆழத்தை, என் போன்று கடற்கரையில்  ஈர  மணலில் வீடு கட்டும் சிறுவர்கள் அறிய இயலாதது.

                                  ஒரு சக்தி ஆலயம்:     ஸ்ரீ  முண்டக கண்ணி  அம்மன்,  மைலாப்பூர்.

எல்லாவற்றையும் சிதைப்பது நமக்கு வழக்கம்.  பெயர்கள் பொருள்கள், புஷ்பம், பழங்கள், பண்பாடுகள், புஸ்தகங்கள், அனைத்துமே   எது கண்ணில் கருத்தில் பட்டாலும் அதை   த்வம்ஸம் பண்ணுபவர்கள்.  முண்டகம் என்றால் தாமரை, தாமரைக் கண்ணாள்  என்ற அழகிய பெயரை   விழி பிதுங்கியவள், பெருத்தவள் என்று முண்டக்கண் என்று கொச்சையாக சொல்லும்படியாக்கி விட்டார்கள். அரசாங்க  சுற்றுலாத்துறை பதிவுகள் கூடவா இதைத்  திருத்தக் கூடாது. பல நூறு வருஷங்களாக பிரபலமான ஒரு சென்னை நகர  ஹ்ருதயத்தில் உள்ள,   நகரை அலங்கரிக்கும்  ஒரு  அழகு இந்த முண்டகக்   கண்ணியம்மன்  ஆலயம்.  சக்தி வாய்ந்த  மாரியம்மன். தோஷ நிவர்த்தி பண்ணுபவள். பலவருஷங்களாக நான் சென்று வணங்குபவள் .சுயம்புவாய்த் தோன்றி பக்தர்களுக்கு அருள் செய்யும் 1000 ஆண்டுப் பழைமையான முண்டகக் கண்ணியம்மன் கோயில்!
அம்பாள்  ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒருவள்.  சப்த கன்னிகைகளுள் ஒருவள் 
 மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், கோலவிழி அம்மனும் முண்டகக்கண்ணி அம்மனும்  தான். அம்பாளின்  கருவறை ஓர் எளிய தென்னங்கீற்றுக் கொட்டகைதான். இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை , 'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர்.

முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவளைத் 
தாயாக ஏற்றுக்கொண்டு வேண்டிக்கொள்கிறார்கள். கோயிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் தான் அதிகம்.  அம்மனும் பெற்ற தாயைவிட வாஞ்சையுடன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். கோயிலில், அம்மன் சந்நிதிக்கு எதிரே மிகப்பெரிய அரசமரம் ஒன்று உள்ளது.

அதன்கீழ், நாக கன்னிகளின் விக்ரஹங்கள் .இந்த நாக கன்னிகளுக்கு பால் ஊற்றி, அரசமரத்தை மூன்று முறை சுற்றிவந்து வணங்குகிறார்கள் பக்தர்கள். இதேபோன்று, அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் விழுதுகள் இல்லாத அபூர்வ கல்லால மரமும் புற்றுடன்  கூடிய மூன்றடி  கல்நாகமும் இருக்கின்றன. இந்தக் கல்லால மரம் தான் தலமரமாக வணங்கப்படுகிறது. அந்தப் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், அந்த நாகம் கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் நம்பிக்கை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,  இந்த ஆலயம் இருந்த இடம் ஒரு குளம். அந்தக் குளக்கரையில்  புராதன  ஆலமரம். அதன் அடியில் ஸ்வயம்புவாக  அம்மன் வெளிப்பட்டாள் என்கிறார்கள்.  மூல விக்ரஹத்துக்கு  அம்மன்  உருவம்  இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும். மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது.
 கருவறைக்கு  இருபுறமும் துவாரபாலகிகள்.  உள்ளே பிரமாண்ட பிரபையின் முன்  அம்பாள். மைலாப்பூர் செல்பவர்கள் ஒரு தரமாவது அம்மனை தரிசிக்கவேண்டும். அற்புதம்.





 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள் 50-52 .   நாமங்கள்: 184 -204

निस्तुला, नीलचिकुरा, निरपाया, निरत्यया ।
दुर्लभा, दुर्गमा, दुर्गा, दुःखहन्त्री, सुखप्रदा ॥ 50 ॥

Nistula nilachikura nirapaya niratyaya
Durlabha durgama durga dukha-hantri sukhaprada – 50

நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |
துர்லபா துர்க்கமா துர்க்காது:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா || 50
 
दुष्टदूरा दुराचार-शमनी दोषवर्जिता ।
सर्वज्ञा सान्द्रकरुणा समानाधिक-वर्जिता ॥ ५१॥

Dushta-dura duracharashamani doshavarjita
Sarvagyna sandrakaruna samanadhika varjita – 51

துஷ்டதூரா துராசார சமநீ தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா ஸமாநாதிக வர்ஜிதா || 51

सर्वशक्तिमयी सर्व-मङ्गला सद्गतिप्रदा ।
सर्वेश्वरी सर्वमयी सर्वमन्त्र-स्वरूपिणी ॥ ५२॥

Sarva-shaktimaei sarvamangala sadgatiprada
Sarveshvari sarvamaei sarvamantrasvarupini – 52

சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ || 52

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (184-200) அர்த்தம்

* 184 *निस्तुला - நிஸ்துலா --
ஸ்ரீ லலிதை ஒப்பிலாமணி. யாருடன் எதனுடன் அவளை ஒப்பிடுவது? ஹிமாசல கைலாச மலையை வேறு எந்த மலையுடன் ஒப்பிட முடியும். அவள் ஹிமவான் மகள் அல்லவா?
 
*185*  नीलचिकुरा  நீலசிகுரா -
கன்னங்கரேர் என்ற கருநாக கூந்தலுடையவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர். ஆக்ஞா சக்ரத்தை கருநீல வர்ணம் என்பார்கள். பின் மண்டையில் முகுளம் பகுதியில் மேல் இருக்கும் இந்த சக்ரத்தை கேசங்கள் மறைத்து இருக்கும். இது வெளியில் பிறர் கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான் இன்றும் தலை மழித்தாலும் சிறிய சிண்டு, சிகையாவது பின் மண்டையில் மரியாதையோடு வைத்துக் கொள்வது. அம்பாள் பக்திக்கு எடுத்துக் காட்டு.உச்சிக்குடுமியின்  தாத்பர்யம் இது தான். 

* 186 * निरपाया - நிரபாயா -
எந்த சக்தியாலும் அழிக்கமுடியாதவள் அம்பாள் என்று இந்த நாமம் குறிப்பிடுகிறது. ஒரு அபாயமும் இல்லாதவள். பிரம்மத்தை எவரால் நெருங்கமுடியும்?. அதற்கு மாறுதல் எது? ஏது?

 187 * निरत्यया -    நிரத்யயா |
 காமேஸ்வரி சாம்ராஜ்ய மஹாராஜ்னி . அவள் இடும் சட்ட திட்டங்களை, எல்லையை மீறாதவள். மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக தான் இருப்பவள். என்ன ஒரு அற்புத குணம் அம்பாளுக்கு!
உதாரண புருஷி!

* 188 *दुर्लभा - துர்லபா -
எட்டாத நிலையில் இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பாள் என்று இந்த நாமம் சொன்னாலும் பக்தர்களுக்கு கிட்டாதவள் அல்ல அவள். ஆத்ம விசாரம், பக்தியால் அவளை எளிதில் அடையலாம். சக்தி உபாசகர்கள் இதை நன்குணர்ந்தவர்கள்.

* 189 * दुर्गमा -துர்க்கமா --
நெருங்கமுடியாதவள். கடின சாதனையாலும் வழிபாட்டினாலும் உயரிய பக்தியாலும் அவளை லலிதாம்பாளாக தரிசிக்கலாம். காமகலாவாக குண்டலினியாகி யோக பயிற்சியால் அனுஷ்டா னத்தில் உணரலாம்.

* 190 *  दुर्गा -துர்க்கா -
அழகிய சிறிய ஒன்பது வயது பெண்ணாகக்  கூட  அம்பாளைக்  காணலாம். துர்க்கை என்றாலே துன்பங்களை, கஷ்டங்களை நிவர்த்தி பண்ணுபவள் என்று அர்த்தம். நெருப்பு மாதிரி ஜ்வாலையாக ஜொலிப்பவள். துர்கா சூக்தம் விடாமல் சொல்வது கஷ்டங்களில் இருந்து நிவாரணம் பெற. இதில் முதல் ஸ்லோகம் ம்ரித்யுஞ்ஜய மந்த்ரம். காலனை வெல்லும் மந்திரம். த்ரியம்பகம் யஜாமஹே........ என்ற சக்திவாய்ந்த மந்திரம்.  கிராமங்களில் நாலு எல்லையிலும் எல்லையம்மனை, துர்க்கையை வழிபட்டவர்கள் நமது முன்னோர்கள். ரட்சிக்கும் கடவுள் அம்பாள்.

* 191 * दुःखहन्त्री - துக்கஹந்த்ரீ --
பக்தர்களின் துயரங்களை, துன்பங்களை, துக்கங்களை, நீக்குபவள் அம்பாள். எல்லா துன்பத்துக்கும்  அடிப்படை காரணம் சம்சார பந்தம். இந்த பற்று விடத்தான் பற்றற்றவனான காமேஸ்வரன், பரமேஸ்வரனின் திருவடிகளை பற்றிக்  கொள்வது. உலக வாதனைகளிலிருந்து மீள்வதற்கு.

* 192 *सुखप्रदा - ஸுகப்ரதா -
சந்தேகமற பக்தர்கள் வேண்டியதற்கும் மேலாக சுகத்தை, சந்தோஷத்தை அருள்பவள் அம்பாள். மறுபிறவியின்றி தப்புவதே அதி சுகமானது அல்லவா? இந்த ஆனந்தத்தை தரும் அம்பாள் ஆனந்தி.

* 193 * दुष्टदूरा - துஷ்டதூரா -
துஷ்டனை கண்டால் தூர விலகு என்கிறோமே அதே தான். அம்பாள் துஷ்டர்களை அணுக விடமாட்டாள். நாம் பயந்து தூர ஓடுபவர்கள். அவளோ அவர்கள் பயந்து அவள் இருக்கும் பக்கமே நெருங்காதவர்களாக பண்ணுபவள்.

* 194 * दुराचारशमनी - துராசார சமநீ -
சாஸ்த்ர விரோத தவறான செயல்களை புரிவது துராசாரம் எனப்படும். ஸ்ரீ லலிதாம்பாள் இத்தகைய செயல்களை புரிவோர்களை தண்டிப்பவள் .

* 195 * दोषवर्जिता - தோஷவர்ஜிதா-
எந்த விதமான தோஷமும் தன்னை நெருங்க விடாதவள் அம்பாள்.ப்ரம்மத்திடம் எந்த தோஷம் நெருங்கும்?

* 196 *सर्वज्ञा - ஸர்வஜ்ஞா -
சகல ஞானமும் இருப்பிடமாக கொண்டவள் ப்ரம்ம ஸ்வரூபிணி அம்பாள். அவளறியாதது என்ன இருக்கிறது? சகலமும் அறிந்தவள்,

* 197 * सान्द्रकरुणा - ஸாந்த்ரகருணா-
கருணா சமுத்திரம் காமேஸ்வரி. நாம் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் தானாகவே  பத்து அடி எடுத்து நம்மை அணுகி வந்து ரட்சிக்கும் தாய் அல்லவா ? பிரபஞ்சத்தின் தாயாயிற்றே. அவள் கண்கள் தயை, அன்பு, காருண்யம் இவற்றால் நிரம்பியவை. எல்லையற்றவை.

* 198 * समानाधिकवर्जिता - ஸமாநாதிக வர்ஜிதா -
ஈடிணையற்றவள் சிவசக்தி. சர்வேஸ்வரியை யாருடன் ஒப்பிடுவது? ஞானமயம் அவள். ப்ரம்மணி. அர்ஜுனன் க்ரிஷ்ணனிடம் சொல்கிறானே '' நீ அகிலபுவனமும் போற்றும் சர்வ சக்தி வாய்ந்தவன் உனக்கு யாரை சமமாக சொல்வேன் ?'' அம்பாள் அதே தான்.

* 199 *सर्वशक्तिमयी -   ஸர்வ சக்திமயீ.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டினால் போல் அம்பாள் சர்வ சக்தி உருவானவள். தச மஹா வித்யா சக்தி உடையவள். சக்தி என்பது இங்கு அம்பாளின் தலைமையில் உள்ள இதர உப தெய்வங்களையும் (வாராஹி, அஸ்வாரூடா போன்ற மந்த்ரிணீ சக்திகள் )குறிக்கும்.

* 200 *. सर्वमङ्गला - ஸர்வமங்களா  -
 புனித ஸ்வரூபி. சிவம் என்றாலே மங்களம். அவள் சிவை. புனிதத்தின் பிறப்பிடம் அம்பாள். சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே .... என போற்றுகிறோமே ,அவள்!

* 201 * सद्गतिप्रदा - ஸத்கதிப்ரதா --
 நல்வழி காட்டுபவள் . ''உலக பந்தங்களில் சிக்காதே. முள் குத்தும். இப்படிப்போ'' என்று வழிகாட்டு பவள். தாயல்லவா? அவள் காட்டும் பாதையில் சென்றால் பிரம்மத்தை அடையலாம்.

* 202 *सर्वेश्वरी  ஸர்வேச்வரீ --
சகல அகில புவன லோகங்களுக்கும் உண்டான ஒரே தெய்வம் ஸ்ரீ லலிதாம்பிகை.அவளுக்கு மிஞ்சியதோ, சமமோ வேறொன்றும் இல்லாதவள்.

* 203 * सर्वमयी -ஸர்வமயீ -
எல்லாமும் தானே ஆனவள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி...... இது அவளே தான். அவள் எங்கில்லை?, எதில் இல்லை?. சர்வம் என்பது 36 தத்துவங்களை குறிக்கிறது. அந்த விவரத்துக்குள்  இப்போது செல்ல  அவகாசம் இல்லை. 

* 204 * सर्वमन्त्रस्वरूपिणी - ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ -
எல்லா மந்திரங்களுக்கும் உருவம் கொடுத்தால் அது அம்பாளின் உருவமாகத்தான் தோன்றும். சமஸ்க்ரிதத்தின் 52 அக்ஷரங்களையும் தொடுத்து மாலையாக அணிபவள் அம்பாள்.

ஒரு அம்பாள் உபாசகி, நமது முகநூல் சகோதரி,  எனக்கு ஒரு அதிசய செயதி சொன்னார்: ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அம்பாள் அனுகிரஹத்தோடு இயற்றிய ஒரு கீர்த்தனை (ஆரபி ராகத்தில் அமைந்தது) யை ஒரு தடவை ரசித்து மனமுருகி பாடினால் நவா வர்ண கடின பூஜை செய்வதன் பலன் கைமேல் கிடைக்கும் என்றார். இந்த அற்புத பாடலை அம்புஜம் வேதாந்தம் என்ற அம்மையார் மூலம் பலர் கற்றவர்கள். தீக்ஷிதரின் அகிலாண்டேஸ்வரி கீர்த்தனை கேட்டிருப்பீர்கள்.  த்விஜாவந்தி என்கிற அற்புத ராகத்தில் அமைந்தது. ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.   இந்த  க்ரிதியும்  அகிலாண் டேஸ்வரிமேல் பாடப்பட்டது  தான்:

அகிலாண்டேஸ்வர்யை - ராகம் ஆரபி தாளம் ஆதி
பல்லவி
''அகிலாண்டேஸ்வர்யை நமஸ்தே,
அணிமாதி சித்தீஸ்வர்யை நமஸ்தே,
அனுபல்லவி:
நிகிலாகம ஸன்னுத வரதாயை
நிர்விகாராயை நித்ய முக்தாயை
ஸம்ஸார பீதி பஞ்சனாயை
சரத் சந்திரிகா ஸீதளாயை
ஸாகர மேகலாயை த்ரிபுராயை (அகிலா)
யாரவது பாடி அனுப்புங்கள் எல்லோரும் கேட்போம்.

இதில் வரும் அம்பாளின் நாமங்களை தான் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அறிந்து வருகிறோம். அந்த சகோதரிக்கு உங்களோடு சேர்ந்து நன்றி தெறிக்கிறேன். 

சக்தி ஆலயம்:   வாழவைக்கும்  வாளாடி  உலகாயி   
வாளாடி  எனும்  கனவு  ''உலகத்தில்''   நான்  மூன்று நாள்  இருந்து   சில வருஷங்கள் ஓடிப் போய்விட்டது என்றாலும்  இன்னும்  நினைவில் பசுமையாக உள்ளது. உலகத்தை  ஆள்பவள்  உலகாயி.  ஆமாம் ஒரு  சக்தி வாய்ந்த அம்மன்  வாளாடியில் கோயில் கொண்டுள்ள உலகாயி  அம்மன்.  1908ம்  வருஷம்  அவளைக் கண்டு பிடித்து பிரதிஷ்டை பண்ணினார்கள்.  அன்று முதல்  எல்லா வயல்களிலும்  நெல்மணிகள் இடுப்புயரத்துக்கு வளர்ந்தனவாம். எங்கும்  வாழையும் கரும்பும்  ஆள் உயரத்துக்கு  செழித்து காற்றில் தலையசைக்கிறதாம்.  என்னப்பா  காரணம் என்று ஒருவரைக் கேட்டபோது  அவர் சொன்னது: 
''நெல்லுல பலம், வாழையிலே  குளிர்ச்சி,  கரும்புலே   தித்திப்புமாக    எங்க  உலகாயி  இருந்து கொண்டு  எங்களைக்  காப்பத்தறா. ஒண்ணும் வேணாம்.  ஒரு சின்ன கற்பூரம் போதும் அவளுக்கு.  குளிர்ந்து போய் நம்ம சந்ததிக்கே துணையா வருவா,  கூடவே  இருப்பா எங்க  உலகாயி'' , ஆமாம்  அவள் அப்படித்தான் என்று  கிராமத்தில்  ஏகோபித்து  எல்லோரும்  தலையசைக்கிறார்கள். 

வயலின் வித்வான் லால்குடி ஜெயராமனின் பாட்டி,  அதாவது  அப்பா கோபாலய்யரின் அம்மா, உலகாயியின் பக்தை. உலகாயி  யார் தெரியுமா? கொல்லி மலையிலிருந்து இங்கே வந்திருக்கும்  ஸ்ரீ வைஷ்ணவி. அவள் மேல் கும்மி பாட்டு  பாடி, அது பிரபலமாகி,   லால்குடி, பூவாளூர் னு  சுத்து  வட்டாரத்திலேருந்து எல்லாம் பக்தர்கள் வராங்க.''  என்கிறார்கள்.   அவளுக்கு  உலகாயி ன்னு பேரு . ஆனால்  கருவறையில் சப்தமாதாக்களாக  இருக்கா.  கோவில்ல  கருப்பண்ணசாமி , காத்தவராயன், சேவுக பெருமாள், மதுரை வீரன்  எல்லோருமே இருக்காங்க.   வேறென்ன வேணும்?

தை மாச அறுவடையாய்ட்டுதுன்னா  அடுத்து,  பங்குனிலே  என்ன விதைக்கறதுன்னு உலகாயி கிட்டே கேட்டுட்டு தான்  பயிர் வைப்பாங்க.   பங்குனிலே திருவிழா   அஞ்சு நாள்  ஓஹோன்னு நடக்கும். வாளாடிக்கு நிறைய  பேரு  வெளியாளுங்கள்லாம் வருவாங்க.  பங்குனி  முதல்  ரெண்டு புதன்கிழமையும்    காப்பு கட்டிட்டு,   திங்கக் கிழமை லேருந்து   அஞ்சு நாள்  பல்லாக்கு, சப்பரம், தேரு  எல்லாம்  ஊர்வலம் வரும்.    ஊர்  சனங்க, வெளியூர் பக்தர்கள்னு  எல்லோரும் வேண்டுதலை நிறைவேற்றுவாங்க.  முடி இறக்கறது , பாவாடை புடவை சாத்தறது, பொங்கல் படையல் எல்லாம் நடக்கும். அத்தினி பேருக்கும் சாப்பாடு.  வாளாடிக்கு வந்து உலகாயி அம்மனை ஒரே ஒருக்கா தரிசனம் பண்ணினாப் போதும்… அதுவரை நாம பட்ட கஷ்டமெல்லாம் ஓடிடும்; எல்லாக் கெட்டதுகளும் மறைஞ்சு, நல்ல நல்லதுங்க  நடக்க ஆரம்பிச்சிடும்” என்று மனநிறைவுடன் சொல்கிறார்கள், அம்மனின் பக்தர்கள். உணர்ச்சிபூர்வமாக அவர்கள் பேச்சு நெஞ்சைத் தொட்டது.

”எங்களுக்கு எல்லாமே உலகாயி அம்மன்தான்! வாளாடில பிறந்து வளர்ந்து, இன்னிக்குக் கடல் கடந்து எங்கேயோ போயிட்டாலும், சின்னதா ஒரு துக்கம்னாலும், ‘அம்மா உலகாயி… நீதாம்மா காப்பாத்தணும்’னு ஒரு நிமிஷம் கண்ணை மூடி பிரார்த்தனை பண்ணினாப் போதும்; மனசுல இருந்த சங்கடங்களும் சஞ்சலங்களும் சட்டுனு விலகிடும். இது எங்க எல்லோருடைய  அனுபவம்''  என்கிறார்கள் ஊர்க்காரர்கள். .

திருச்சி- லால்குடி  வழியிலே சமயபுரம் டோல்கேட் பக்கத்திலே   இருக்கிற  ஊரு  வாளாடி.   திருச்சி  சத்திரம்  பஸ்  நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ..  
 
ஒரு கதை இருக்குது  சொல்றேன் கேட்டுக்கிடுங்க  என்று ஒருவர் சொன்னார். கேட்டேன்.
 வாளாடியில்  ஒரு  கோயில்  கட்ற வேலை செய்யற ஸ்தபதியோட   குழந்தைக்கு    திடீரென்று  ஏதோ  நோய் வந்தூட்டுது.   பூச்சி கடியா  இருக்குமோன்னு  வைத்தியர்கிட்டே  போனாரு.  

‘ இன்னாபா  இது,  இந்தக் குழந்தைக்கு   இன்னா  நோய்,  எதனாலே  ன்னே  கண்டுபிடிக்க முடிய லியே, எனக்குத்  தெரியலியே ''ன்னுட்டார் வைத்தியரு .  
அப்புறம் ஸ்தபதி  உலகாயிகிட்டே வேண்டிகிட்டார்
''மாதா  என் தாயே,  நீ தான்மா  என் குழந்தையை காப்பாத்தணும்னுட்டு''  அழுது கொண்டே  வீட்டுக்கு வந்துட்டார்.   ராத்திரி  ஸ்தபதி  கனவிலே  உலகாயி  வந்தாள் .
‘போடா,  உன் குழந்தைக்கு ஒண்ணு மில்லேடா. சப்த மாதாக்களில் நானும் ஒருத்தி. கொல்லி மலையில் இருந்து நான் இங்கே வந்திருக்கிறேன். இதை இந்த ஊருக்கு நீ  தெரியப்படுத்தணும் .  என்  விபூதி சாம்பலை குழந்தை மேலே பூசு சரியாயிடும் பாரு.   நான்  இந்த ஊரிலே தங்கி   நீங்க எல்லோரும் நல்லா  இருக்க செய்யணும். எனக்கு நீ ஒரு கோயில் கட்டு .  இந்த இடத்திலே கட்டு''   என்று  ஒரு இடத்தையும்  அடையாளம் காட்டினாள்  உலகாயி''' ,  ஸ்தபதி எல்லார்கிட்டேயேயும் ஓடிப்போய் இதை சொன்னார்  அப்புறம் என்ன. கோவில் உயரமா வளந்துடுச்சு. 
உலகாயி அம்மன் கோயிலுக்கு ஒருமுறை வந்து, புடவை சார்த்தி, விளக்கேற்றி வழிபட்டால்… திருமணத் தடை அகலும்; சந்ததி சிறக்கும்; கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
வாளாடியை  வாழவைக்கும்  ஒரு பெரிய  அம்மா   உலகாயி .  ஆயி  அப்பன்  என்றால்  அம்மை+அப்பன்   உலகமெல்லாம்  வாழ  அருள்பவள். வாளாடி நாயகி! 

வாளாடிக்கு வந்து உலகாயியை  தரிசிக்க எனக்கு  உதவியவர்   வாளாடியில்  அற்புதமான  தர்ம கார்யங்களை செய்து கொண்டுவரும்  அருமை  முகநூல் நண்பர்  ஸ்ரீ  தத்தாத்ரேயன்  வீட்டில்   தங்கி  வாளாடி உலகாயியை தரிசித்தேன்.  அருகே  லால்குடி  குணசேகரம்   கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யும் பாக்யத்தை கொடுத்த புண்யவான்.  அந்த கோவில்களை பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். அந்த அக்ராஹார மக்களுடன் கலந்து பேசி, அன்பர் இதிஹாசம் சீதாராமனின்   வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்று  கதைகள்  சொல்லி  நிறைய க்ருஷ்ணார்ப்பணம் டிரஸ்ட் புத்தகங்களை பரிசளித்ததில்  மட்டற்ற மகிழ்ச்சி. 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...