Thursday, August 31, 2017

THE CONSCIOUSNESS PLANES


SWAMIJI'S TIME:      J.K. SIVAN

                      THE CONSCIOUSNESS PLANES

 We see, as human beings, that all our knowledge which is called rational is referred to consciousness. My consciousness of this table, and of your presence, makes me know that the table and you are here. At the same time, there is a very great part of my existence of which I am not conscious. All the different organs inside the body, the different parts of the brain — nobody is conscious of these.

When I eat food, I do it consciously; when I assimilate it, I do it unconsciously. When the food is manufactured into blood, it is done unconsciously. When out of the blood all the different parts of my body are strengthened, it is done unconsciously. And yet it is I who am doing all this; there cannot be twenty people in this one body. How do I know that I do it, and nobody else? It may be urged that my business is only in eating and assimilating the food, and that strengthening the body by the food is done for me by somebody else. That cannot be, because it can be demonstrated that almost every action of which we are now unconscious can be brought up to the plane of consciousness. The heart is beating apparently without our control. None of us here can control the heart; it goes on its own way. But by practice men can bring even the heart under control, until it will just beat at will, slowly, or quickly, or almost stop. Nearly every part of the body can be brought under control. What does this show? That the functions which are beneath consciousness are also performed by us, only we are doing it unconsciously. We have, then, two planes in which the human mind works. First is the conscious plane, in which all work is always accompanied with the feeling of egoism. Next comes the unconscious plane, where all work is unaccompanied by the feeling of egoism. That part of mind-work which is unaccompanied with the feeling of egoism is unconscious work, and that part which is accompanied with the feeling of egoism is conscious work. In the lower animals this unconscious work is called instinct. In higher animals, and in the highest of all animals, man, what is called conscious work prevails.

BHAGAVAN SRI RAMANA'S TALKS


BHAGAVAN SRI RAMANA'S TALKS : J.K. SIVAN

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you. So you will enjoy profusely. JKS

Devotee: Is the understanding intellectual?
Maharishi Ramana : Intellect. Whose intellect? The problem revolves round that question. You admit that you exist even in the absence of intellect - say, in sleep. How do you know that you exist if you have not realised your existence? Your very existence is realisation.You cannot imagine a point of time when you do not exist. So there is no period of time when realisation is not.

D: How to know the Power of God?
M: You say ‘I AM’. That is it. What else can say I AM?
One’s own being is His Power. The trouble arises only when one says, “I am this or that, such and such.” Do not do it - Be yourself.
That is all.

D.: How to experience Bliss?
M.: To be free from thinking “I am now out of Bliss”.

D.: That is to say free from modes of mind.
M.: To be with only one mode of mind to the exclusion of others.

D.: But Bliss must be experienced.
M.: Bliss consists in not forgetting your being. How can you be
Otherwise than what you really are? It is also to be the Seat of Love. Love is Bliss. Here the Seat is not different from Love.

D.: How shall I be all-pervading?
M.: Give up the thought, “I am not all-pervading now.”

D.: How to permeate the separate objects?
M.: Do they exist independently of “I”? Do they say to you “We are”? you see them. You are, and then the objects are also seen. “Without me,these do not exist” -this knowledge is permeation. Owing to the idea “I am the body; there is something in me” the separate objects are seen as if lying outside. Know that they are all within yourself. Is a piece of cloth independent of yarn? Can the objects remain without Me?

D.: Which is the best of all the religions? What is Sri Bhagavan’s method?
M.: All religions and methods are one and the same.

D.: Different methods are taught for liberation.
M.: Why should you be liberated? Why not remain as you are now?

D.: I want to get rid of pain. To be rid of it is said to be liberation.
M.: That is what all religions teach.

D.: But what is the method?
M.: To retrace your way back.

D.: Whence have I come?
M.: That is just what you should know. Did these questions arise in your sleep? Did you not exist then? Are you not the same being now?

D.: Yes, I was in sleep; so also the mind; but the senses had merged, so I could not speak.
M.: Are you jiva? Are you the mind? Did the mind announce itself to you in sleep?

D.: No. But elders say that the jiva is different from Isvara.
M.: Leave Isvara alone. Speak for yourself.

D.: What about myself? Who am I?
M.: That is just it. Know it, when all will be known; if not, ask then.

D.: On waking I see the world and I am not changed from sleep.
M.: But this is not known in sleep. Now or then, the same you remain. Who has changed now? Is your nature to be changing or remain unchanging?

D.: What is the proof?
M.: Does one’s own being require a proof? Only remain aware of your own self, all else will be known.
D.: Why then do the dualists and non-dualists quarrel among
themselves?
M.: If each one minds his own business, there will be no quarrel.



'' சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது!'' - 2




அமுதன் ஈந்த ஆழ்வார்கள் J.K. SIVAN


'' சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது!'' - 2

சிவ வாக்கியரை பேயாழ்வார் நாராயணனின் மகத்வம் உணர வைத்து வைணவராக மாற்றி திருமழிசை ஆழ்வார் என்று நாமகரணம் செய்தார் என்று சொல்வதுண்டு. ஸம்ஸ்க்ரிதத்தில் மழிசை என்பது 'மஹீஸாரம்' என்று பெயர் கொண்டது. திரு மழிசை மஹீஸார க்ஷேத்ரம் " (பூமிக்கே ஸாரமான ஊர்) என்று புகழ் பெற்றது.

மஹீஸாரத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் திருமழிசை ஆழ்வாருக்கு பக்தி ஸாரர்! என்றும் பேயாழ்வார் நாம மிட்டார். .ஆழ்வார் கூடவே இருக்கும் அவரது இளைய சகோதரன் கணிக்கண்ணன் ஆழ்வாரின் பிரதம சிஷ்யனானான். இனி திருமழிசை ஆழ்வார் என்றே அழைப்போம்.

ஒரு முறை அவர் காஞ்சீபுரத்துக்கு வந்து அங்கே வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். அங்கேயிருக்கிற ஒரு பெருமாள் கோவிலில் பாசுரம் பாடிக் கொண்டும், உபதேசம் பண்ணிக்கொண்டும் அவ்வப்போது அப்படியே யோக ஸமாதியில் ஆழ்ந்து கொண்டவாறும் இருந்தார்.

ஒரு வயதான பெண்மணி உடம்பு முடியாமல் பிரதி தினமும் ஆழ்வார் பூஜை செய்யும் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு விடாமல் தொண்டு செய்வது கண்டு மகிழ்வுற்ற ஆழ்வார் அவளுக்கு இளமை திரும்ப பெருமாளிடம் வேண்டுகிறார். என்ன ஆச்சர்யம். அழகிய யுவதியாக அந்த முதியவள் மாறுகிறாள். இந்த செய்தி காட்டுத்தீயாக எங்கும் பரவி அந்த ஊர் அரசன் காதிலும் புகுந்தது. பல்லவ ராஜா அவளது அழகில் மயங்கி அவளை மணக்கிறான். அவள் மூலம் அவள் எழில் ரகசியம் அறிகிறான். அந்த ராஜாவுக்கும் இப்போது தனக்கும் இளமை திரும்ப வேண்டும் என்ற ஆவல் வந்து, அவள் மூலம் அந்த கோவிலுக்கு வருகிறான்.

பெருமாளை வழிபடும்போது கணிக்கண்ணன் இனிய அழகு தமிழில் ஆழ்வார் இயற்றிய செவிக்கினிய பாசுரத்தை பாடிக்கொண்டிருந்ததால் அதில் மயங்கினான்

''ஆஹா என்ன அற்புதமாக பாடினீர்கள்'''இந்த பாசுரத்தை நீங்கள் நன்றாக வெகு இனிமையாக இயற்றி இருக்கிறீர்களே''

''இல்லை மஹாராஜா, இது என் குருநாதர் ஆழ்வார் இயற்றியதை தான் பாடினேன் .''

''ஓ அப்படியா எங்கே அவர். அவரைக் கண்டு என் மீதும் புகழ்ந்து இப்படிப்பட்ட ஒரு சில பாடல்களை இயற்ற சொல்லவேண்டும். அதை நீங்கள் பாடவேண்டும் '

''மன்னிக்க வேண்டும் மஹாராஜா, '' பெருமாள் மீதன்றி மற்றவர் மேல் புகழாரம் பாடும் வழக்கம் எங்கள் குருநாதருக்கு இல்லை. எனக்கும் இல்லை '' என பவ்யமாக மறுத்தான் கணிக்கண்ணன்''. தனது ஆணையை மீறியதால் கணிக்கண்ணன் மீது ராஜாவுக்கு கடுங் கோபம்.

ராஜாவுடன் மந்திரியும் கூட இருந்தான்.

''மந்திரி, இதை கவனித்தாயா? நமது நாட்டின் பிரஜை ஒருவன், அதுவும் ஏழைப் புலவன், இந்த கணிக்கண்ணன் என்னை அவமானப் படுத்திவிட்டான்? இவனை தண்டிக்காமல் விடக்கூடாது. ஆனால் அவன் அறியாமையால் செய்த பிழைக்காக அவன் மீது கருணை கொண்டு இன்னுமொரு வாய்ப்பு தருகிறேன். நாளை காலைக்குள் இவன் என் மீது பாட்டியற்றி பாட வில்லை என்றால், நாளையே இவன் இந்த ஊரை விட்டே வெளியேற வேண்டும். இல்லையேல் அவனுக்கு சிரச்சேதம்'' என்று உத்தரவு போட்டுவிட்டு சென்று விட்டான்.

கணிக்கண்ணன் அதிர்ந்து போனான். தன் குருவான திருமழிசை ஆழ்வாரிடம் சென்று நடந்ததை சொன்னான். பிறகு அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி "ஸ்வாமின், நான் உங்கள் நிழல், எவ்வாறு உங்களை விட்டு பிரிந்து செல்ல முடியும்'? ' என்றதும், ஆழ்வார் அமைதியாக பெருமாளை நோக்கினார்

'என்ன பார்க்கிறாய்?''என்றான் பரமாத்மன். ஆழ்வார் பதில் சொன்னார் ஆண்டவனுக்கு:

''கணிக்கண்ணன் போகின்றான் காமரு பூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந் நாகப்பாயை சுருட்டிக் கொள்''

"ஹே!! நாகசயனா, என் அருமை தம்பி, ஸ்ரீ வைஷ்ணவன், கணிக்கண்ணன் இந்த ஊரை விட்டு போகப்போகிறான். , அவனின்றி நான் இல்லை. எனவே நானும் போகிறேன், நீயின்றி நானில்லை என்பதால் நீ என்ன செய்கிறாய் . உடனே நீயும் சட்டு புட்டு என்று உன்னுடைய இந்த ஆதிசேஷ நாக படுக்கையை சுருட்டி கொண்டு ஐந்தே நிமிஷத்தில் கிளம்பு. மூவருமே இந்த ஊரை விட்டு செல்லலாம்" என்று ஆர்டர் போட்டார்!

அவர் சொன்னவண்ணமே செய்தான் சேஷ சயனன்.

கணிக்கண்ணன் நடக்க அவன் பின்னே திருமழிசை ஆழ்வார் தொடர, அவர்கள் பின்னே தனது சேஷ சயன படுக்கையை தோளில் தூக்கிக் கொண்டு பெருமாள் ஆகிய மூவரும் காஞ்சியை விட்டு அகன்றனர்.
ஓரிரவு ஓரூரில் தங்கினார்கள். அதுவே காஞ்சியில் இருக்கும் ஓரிக்கை என்னும் தலம். அந்த ஓரிக்கையில் தான் காஞ்சி பரமாச்சாரியரின் அற்புத மண்டபம் ஒன்று இப்போது உருவாகியிருக்கிறது.

அடுத்த கணமே அந்த ஊரே அஸ்தமித்து விட்டது.எங்கும் மண்மாரி பெய்தது.
ராஜாவுக்கு விஷயம் தெரிந்து அலறி புடைத்துக்கொண்டு ஓடினான். ஓரிக்கையில் அவர்களை கண்டான்.
பெருமாள்,ஆழ்வார் கணிக்கண்ணன் மூவர் திருவடிகளில் விழுந்து புரண்டான். அழுது தீர்த்தான்.

''புண்யா ,பாதகன் நான் மாபெரும் தவறிழைத்தேன். செய்த தவறை உணர்ந்து உங்கள் திருவடிகளில் சரணடைந்து திருந்தினேன். என் தவறை மன்னிதருளவேண்டும்'' என்று அலறினான். நீங்கள் வராமல் ஊர் திரும்பேன் என்று கெஞ்சினான்.

ஆழ்வார் யோசித்தார். ஊரில் எவரும் துன்பம் அனுபவிக்க கூடாதே.

''கணிக்கண்ணா, வா காஞ்சிபுரம் திரும்புவோம்" என்றார். பின்னால் நின்ற பெருமாளையும் பார்த்தார்

" அனந்த சயனா என்ன பார்க்கிறாய், உனக்கும் தான் சொன்னேன். நீ இல்லாமல் நாங்கள் ஏது? சுருட்டிய உன் பாம்பு படுக்கையை மீண்டும் தூக்கிண்டு வா. திரும்புவோம். உன் இடத்துக்கே மீண்டும் போவோம். அங்கு வந்து படுக்கையை விரித்துக் கொள்" என்றார். அந்த அருமையான பாசுரம் இது:

''கணிக்கண்ணன் போக்கொழிந்தான், காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்- துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன், நீயுன் உன்றன்
பைந்நாகப் பாயில் படுத்துக் கொள்''

மூவரும் திரும்பினர். இந்த பெருமாள் அந்தக் கணம் முதல் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" (யதோக்த காரி'யதா உக்த':='சொன்னபடி', 'சொன்ன வண்ணம்';காரி'=செய்பவர்) என்று பெயர் வாங்கினான்.

திரு வெக்கா என்று இந்த கோவில் க்ஷேத்ரத்துக்கு பெயர். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஏறக்குறைய ஆயிரம் வருட வயதுள்ள வைஷ்ணவ திவ்ய தேச கோவில். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஒரு கி.மீ தூரம் தான். விஷ்ணு காஞ்சி பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ. எதிரே அஷ்ட புஜம் பெருமாள் கோவில் அசாத்யமாக இருக்கிறது. நான் சென்று மகிழ்ந்தேன். நீங்கள்? .

ஒன்று நிச்சயம். ,காஞ்சிபுரம் சென்றும் இதை தரிசிக்காதவர்கள் மூச்சிருந்தும் பேச்சில்லாதவர்களுக்கு சமம். நின் கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இறைவனே மூச்சாக வாழ்வார்க்கு இறைவன் சொன்னதையும் ஏன் சொல்லாததையும் செய்வான். இறைவன் பக்தனுக்கு அடிமை என்பதற்கு இந்த கதை ஒன்றே போதுமே!

திருமழிசை ஆழ்வார் நாராயணனின் சுதர்சன சக்ர அம்சம். ஆழ்வார் பிராமணர் இல்லை என்று சிலர் அவரை கோவிலில் அர்ச்சகர் கௌரவிப்பது பொறுக்கவில்லை. தாறுமாறாக பேசினார்கள். ஆழ்வார் அப்போது இயற்றிய ஒரு பாடல் பொருள் செறிந்தது:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே, சடங்கர் வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காத்திடே - (பாடல் சிவவாக்கியர் மாடலில் இருப்பது புரிகிறதா)

''ஹே, நாராயணா , உனக்கு நாற்கரங்கள் இருந்தும் என்ன பயன் சொல்?. உன்னால் இந்த வீணர்கள் வாயை உன் கைகளால் ''நிறுத்துங்கள்'' என்று சொல்லி பொத்த முடிந்ததா? உன் கையில் சக்கரம் வேறு! நீ என்னுள்ளே புகுந்தால் நானே இவர்களுக்கு என் வாயால் அவர்கள் வாயை மூட வைப்பேனே !

நாராயணன் அவ்வாறே ஆழ்வாரின் உடல் புகுவதை எல்லோரும் பார்த்தார்களாம். பிறகென்ன அத்தனை பேரும் அவர் திருவடிகளில் ''எங்களை மன்னித்துவிடுங்கள் '' என்று கூறி ' தடால்'' தான்.

ஆழ்வார் கும்பகோணம் சென்றார். தனது திருச் சந்த விருத்த பாசுரங்களை ஓலைச் சுவடியில் எழுதி வைத்திருந்த தெல்லாம் அப்படியே சுழியிட்டு ஓடும் காவேரியில் எறிந்து விட்டார். உனக்கு பிடித்திருந்தால் மீண்டு வரட்டுமே.! அப்படியே அது மிதந்து அவரிடமே வந்ததே.

''நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்த மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஃ கணைக் கிடந்ததென்ன நீர்மையே?''

''இதோ இருக்கிறாரே இந்த நாராயணன் என்ன பண்ணினார்? நான் பிறப்பதற்கு முன்பாகவே ஊரகத்தில் நின்றவர், பாட கத்தில் போய் உட்கார்ந்தவர், திருவெட்காவில் கால் நீட்டி படுத்தவர், எனக்கு அப்போது எது ஞானம்?கொஞ்சம் ஞானம் கிட்டியதும் மறப்பேனா? அவர் அப்புறம் என்ன செய்தார் என்று சொல்லவில்லையே, எனக்கு அவர் பற்றிய ஞானம் வந்ததும் மேலே சொன்ன எல்லா இடத்தையும் விட்டு நேராக வந்து என் இதயத்தில் குடிபுகுந்து விட்டார், அதுவும் நிரந்தரமாக..!!"

KNOW YOUR KRISHNA




KNOW YOUR KRISHNA: - J.K. SIVAN

There is a disturbing account in Vyasa's Mahabharata.

Kurukshetra war between Kouravas and Pandavas, ended after 18 days of fierce battle resulting in the death of all the hundred sons of Dhritharashtra and Gandhari.

On the night of Duryodhana's death, Lord Krishna visited Gandhari at Hasthinapuram palace, to offer His condolences.

Gandhari felt that Krishna knowingly did not put an end to the war, and in a fit of rage and sorrow, Gandhari , having lost all her hundred sons, cursed that Krishna, along with everyone else from His Yadhu dynasty, would perish after 36 years.

Krishna Himself knew well ahead that His avathar has come to an end and wanted this to happen as He felt that the Yadavas had become very haughty and arrogant (adharmi),

so He ended Gandhari's speech by saying "tathastu" (so be it).

சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! - 1.




அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN

சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது! - 1.

சென்னையிலிருந்து சற்றே தூரத்தில் ஒரு ஊர் பூந்தமல்லி. இது அதன் இயற் பெயர் இல்லை. ஹமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி (ஒரு சிலர் இதை மறுபடியும் ஆங்கிலத்தில் ''Barber's bridge என மொழி பெயர்ப்பு வேறு!!) ஆனது போல்,''பூவிருந்த வல்லி'' பழைய அழகிய செடி கொடி மலிந்து கம்மென்ற மணமிழந்து தனது பேரையும் அடையாளத்தையும் கூட இழந்து விட்டது.

இதன் அருகே மற்றொரு அருமையான புனித கிராமம் திருமழிசை. திருமழிசை பூந்தமல்லி தேசிய சாலையில் திடீரென்று வலக்கை பக்கம் திரும்பும். ஊசி குத்த இடம் இல்லாமல் ஒரு பெரிய தொழில் பேட்டையாகவும் திருவள்ளூர்,திருத்தணி போகும் வேகப்பாதையாகவும் இருப்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆங்கிலத்தில் ''திருமுஷி'' என்று இன்னும் வெள்ளைக்காரன் வைத்த பெயர் தப்பாமல் எழுதுகிறோம்..ஆனால் இதெல்லாம் அதற்கு பெருமை சேர்க்காது. இந்த திருமுஷி ஒருகாலத்தில் திருமழிசைஆக இருந்தது..

7ம் நூற்றாண்டில் இந்த கிராமம் வெறும் மூங்கில் காடாக இருந்த சமயம். ஒரு நாள் பார்கவ ரிஷி என்ற ஒரு பக்தர் கனகாங்கி என்னும் தனது பத்னி யோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார்.அவள் கண்ணில் காவேரி .அவர் கையிலோ 12 மாசம் கருவில் இருந்தும் உடல் உறுப்புகள் இன்றி ஒரு உயிரற்ற மாமிச பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம் இப்போது சொல்கிறோமே ''ஸ்டில் பார்ன்'' என்று அது போல்) பிறந்த ஒரு சிசு.

''.இறைவா, இதுவும் உன் செயலாலே என்றால் அப்படியே ஆட்டும்".

ஒரு மூங்கில் புதரில் அந்த சிசு கை விடப்பட்டது. இதயம் வெடித்து சிதற பெற்றவர்கள் பார்கவ ரிஷியும் கனகாங்கியும் இனி அந்த குழந்தை வைகுண்டம் செல்லட்டும் என்று வேண்டிக்கொண்டு அங்கே காட்டில் அதை விட்டு விட்டு கண்ணில் நீர் மல்க மனம் உடைந்து திரும்பி சென்றனர்.

நாராயணன் சித்தம் வேறாக இருந்தது அவர்களுக்கு தெரியாதே! எம்பெருமானின் கருணையை வார்த்தைகளில் ரொப்ப முடியுமா? தனித்து விடப்பட்ட "அது", அந்த குறைப் பிரசவ சிசு, சில மணி நேரத்திலேயே பூரண தேஜஸோடு முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக அழுதது.

காட்டில் உலவிக்கொண்டிருந்த குழந்தை செல்வமில்லாத இரு வயதான காட்டுவாசிகளான திருவாளன், பங்கயற்செல்வி ஆகிய தம்பதியர் அந்தப் பக்கமாக அப்போது தான் வரவேண்டுமா? அவர்கள் காதில் மூங்கில் காட்டில் ஒரு குழந்தை அழும் ஒலி ஸ்பஷ்டமாக கேட்கவேண்டுமா? கேட்டதும் ஆச்சர்யத்தோடு குழந்தையை தேடி கண்டு பிடிக்க வேண்டுமா? யார் இந்த குழந்தையை இங்கே விட்டு விட்டு சென்றது என்று தேட வேண்டுமா?
யாரும் உரிமை கொள்ள இல்லையே என்று வருந்தவேண்டுமா? அவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லாமல் இப்படி திடீரென்று ஒரு அபூர்வ குழந்தை கிடைக்கவேண்டுமா?

இதற்கெல்லாம் ஒரே பதில் எல்லாம் சர்வேசன் நாராயணன் செயல்.அவனது திருவுளம்.

காட்டுவாசிகள் அந்த குழந்தையை தங்கள் குடிசைக்கு எடுத்து சென்றனர்.. திருமழிசையில் கிடைத்ததால் அதற்கு திருமழிசையான் என்றே பெயரிட்டனர். மிக்க ஆனந்தத்தோடு அதற்கு பசும்பால் ஊட்டினர்

''ஐயோ இதென்ன சோதனை? குழந்தை பால் கூட பருக மறுக்கிறதே. ஆகாரமே உட்கொள்ளாததால் அவர்களுக்கு கவலை வந்துவிட்டது.

"ஹே! திருமழிசையானே நீயே அருளவேண்டும், இந்த சிசு பாலுண்ண வேண்டும் என அந்த கிழ தம்பதியர் அந்த ஊர் பெருமாளையே தஞ்சமென வேண்டியவுடன், குழந்தை சிறிது பால் அருந்தி விட்டு மீதியை அவர்களே குடிக்க வைத்தது.

தொடர்ந்து இன்னொரு ஆச்சர்யம்! குழந்தை மறுத்து அவர்களுக்கு அளித்த பாலை அருந்தியவுடன் அந்த கிழ வேடுவர்கள் இருவரும் இளம் தம்பதிகள் ஆகி அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தையும் பிறந்து அவனுக்கு கணிக்கண்ணன் என்று பெயரிட்டு அவன் திருமழிசையானுடன் இளைய சகோதரனாக வளர்ந்தான் என்று ஒருவரியில் கதையை சுருக்கிவிட்டேன்.

திருமழிசையான் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகி பல மதங்களை ஆராய்ந்து பின்னர் சிவபக்த சிரோமணியாக மாறி சிவவாக்யர் ஆனார் என்று சொல்வதுண்டு. நிறைய சிவ வாக்கியர் பாடல்கள் உங்களுக்கு ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மிகவும் சக்திவாய்ந்த அர்த்த முள்ளவை அவை. எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்தவை. மீண்டும் ஒரு சில பாடல்களை மட்டும் அலசுவோம். எழுத்திலே பல 'டன்' சுமையும் வலிமையையும் கொண்டவை.

''இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்ற தொன்றை இல்லையென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்று மல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே''.

(அவன் இல்லாதது போல் இருக்கிறான். இல்லை என்று சொல்வதனால் இல்லாதவனாகி விடுவானா? எல்லாமாக இருக்கும் ஒன்று என்றாலும் இல்லவே இல்லை என்றாலும் இரண்டும் அவனே என்று முடிவாக தெரிந்தவர்கள் ஜனனம் மரணம் சுழற்சி முடிந்து இனி பிறவாவரம் பெற்றவர் என்கிறார் சிவ வாக்யர் )

''தில்லைநாயகன் னவன் திருவரங் கனும் அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

(அரியும் அரனும் ஒண்ணு.இந்த புவனமே அவன். எல்லாமும் தானான ஒருவன். பல்லும் நாக்கும் புரட்டிப் பேசும் மனிதர்களே , கபர்தார்!! நீங்கள் யாரேனும் அந்த அரியும் அறனும் வேறு என்று பங்கு போட்டு பேசி மகிழ்வதாக இருந்தால் , ஞாபகம் இருக்கட்டும் வாய் புழுத்து விடும். அப்புறம் அபோல்லோ உங்களை விழுங்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்.)

திருமழிசை ஆழ்வார் தொடர்கிறார்

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...