Saturday, August 26, 2017

நிலவு ஒரு பெண்ணானால் -



நிலவு ஒரு பெண்ணானால் -- J.K. SIVAN

ஒரு குட்டி சீனா தேச நாட்டுப்புற கதை சொல்லட்டுமா?
''காதலி, நான் கற்பூரம் ஏற்றி கையால் அடித்து சொல்லட்டுமா. நிலவு என்பது உன் பட்டொளி வீசும் முகம்.அதுவே பால் நிலவு, பால் சொட்டுகிறதே. இரு ஓடிப்போய் ஒரு பெரிய சொம்பு கொண்டுவருகிறேன்''
இப்படிஎல்லாம் அப்போது சொல்லமுடியாதபடி பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பு நிலா வெள்ளையாக இல்லை. கருப்பு. அழகற்று யாருமே லக்ஷியம் பண்ணவில்லை. சந்திரன் அழுதான்.
செடி கொடியில் இருந்த மலர்கள் தூரத்தில் இருந்த நக்ஷத்ரங்கள் இவை பரிதாபமாக அவனை பார்த்து
''ஹே சந்திரா, என்னடா உனக்கு குறை. முகத்தை தொங்க போட்டுக் கொண்டிருக்கிறாய்?என்றன.
''நான் உங்களை போல தூரத்தில் ஒரு நக்ஷத்ரமாக இருந்தால் யாராவது இருண்ட வானத்தில் ஒருநாள் என்னைபற்றி யோசிப்பார்கள். அதோ பார் பிரகாசிக்கும் ஒரு நக்ஷத்ரம் என்று என்னை தேடுவார்கள். மலராக இருந்தால் பெண்கள் பறித்து தலையில் வைத்துக் கொள்வார்கள். நடுக்காட்டில் இருந்தால், பக்ஷிகளாக வந்து என்னிடம் தேன் குடித்துவிட்டு பாடும். இந்த கருப்பு கோர முக சந்திரனை யார் சீண்டுகிறார்கள்.சொல்லுங்கள் ?''
''அடடா பாவம். உனக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லையே'' என்றன பூக்களும் நக்ஷத்ரமும்.
ஒரு பூ சொல்லியது. 'நாங்கள் இருக்கும் தோட்டத்தின் அருகே ஒரு மிக அழகான பெண் இருக்கிறாள். அவள் தான் எங்களை வளர்க்கிறாள். அவளிடம் உன்னைப் பற்றி சொல்கிறேன். ஏதாவது உதவி செய்வாள்.''
''சரி, நானும் வந்து அவளை பார்க்கிறேன்'' என்றான் சந்திரன்.
உண்மையிலேயே அந்த சீனப் பெண் பேரழகி. சந்திரன் கண்டதும் அவள் மேல் காதல் கொண்டான்.
''பெண்ணே, பேரழகி கிளியோபாட்ரா, உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகு கிடைத்தது?. என்னோடு வாயேன். உன் அழகினால் ஒருவேளை எனக்கும் முகத்தில் கொஞ்சம் அழகும் ஒளியும் வரலாம். வா.'' என்றான் சந்திரன்.
''இதோ பார் நான் வசிக்கும் என் வீட்டில் எல்லாரும் நல்லவர்கள். சந்தோஷமாக இருப்பவர்கள். அதனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன். சந்தோஷம் அழகைத் தருமே''. என்றாள் அந்த சீனப்பெண்.
சந்திரன் அன்றுமுதல் இரவில் தினமும் அந்த பெண் வீட்டுக்குப் போனான்.
''அம்மா, அந்த சந்திரன் பாவம் ரொம்ப நல்லவன். அவனை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?''
சீனாக்காரி பதில் சொல்லவில்லை. பெண் ஒருநாள் சந்திரனோடு சென்றுவிட்டது என்று யாரோ சொல்லி கொஞ்சநாள் கழித்து தெரிந்து கொண்டாள் .
வருஷங்கள் பல ஓடிவிட்டது. சீனாக்காரிக்கு பெண் திரும்ப கிடைக்கவில்லை என்ற ஆதங்கம். வானத்தில் தேடித் தேடி பார்த்தாள். சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாக தெரிந்தவன், பூரண நிலவும் ஆனான். அவனைப் பார்த்த அம்மாவுக்கு சந்திரன் என்பது தனது பெண் முகமோ என்று தோன்றியதாம். என் பெண் எங்கே ? என்று கேட்டபோது '' ஏன் அம்மா, என்னை தெரியல்லியா. நான் தான் மா சந்திரன் '' என்றாள் பெண்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...