Sunday, December 31, 2017

dasavatharam vaamanan



 தசாவதாரம்

                                      ஆதி நாராயணனின் அவதாரங்கள்..4

நாராயணன் குள்ளமான  மலையாள நம்பூத்திரியாக ஏன்   அவதாரம்  எடுத்தார்? வாமனன் என்று எல்லோரும் அவனது உருவத்தை வைத்தே  அழைத்து அவன் பெயர் என்னவென்றே இதுவரை  யாருக்கும் தெரியாதபடி எதற்கு வைத்தார்?   ஆதி நாராயணனின்  அவதாரங்களில் இது ஐந்தாவது அவதாரம்.  மனித உருவில் மஹாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம்.  தன்னை அளவில் குறைத்துக்கொண்டது  எதை எடுத்துக் காட்டுகிறது. மகா சக்தி வாய்ந்த  மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை குறைக்கவா?

மஹாபலி  ப்ரஹலாதனின் பேரன்.  பாதாள லோகத்தை தனது ஆளுமையில் வைத்து அரசாண்டவன். ராக்ஷஸ வம்ச  பேரரசன். பாதாள லோகம் மட்டும்  போதாது மற்ற எல்லா லோகங்களையும் வென்று தனது கைவசம் கொண்டுவர எண்ணம் கொண்டான்.  அது  நிறைவேற ஒரு பெரிய  காரிய சித்தி யாகம் பண்ண ஏற்பாடுகள் நடந்தது.  அந்த யாகம் முடிந்ததும் அனைவருக்கும் நிறைய ல் தானங்கள் வழங்கினான். நிச்சயம் அந்த யாகத்தின் பலனாக  மஹாபலி சர்வ லோகங்களுக்கும் அதிபதி யாகிவிடுவான் என்பதில் யாருக்கும் துளியும் ஐயமில்லை.  தேவர்கள் நடுங்கினர். மஹாபலி அவர்களை அடக்கி ஒடுக்கிவிடுவானே.  மஹாபலி யாகம் வெற்றிகரமாக நடந்த சந்தோஷத்தில் யார் எதை தானமாக  கேட்டாலும் வாரி வழங்கினான்.

வரிசையாக  எண்ணற்ற  பிராமணர்கள் அவன் அரண்மனையில் நின்று அவனிடம்  இருந்து தானம் பெற்றார்கள். அவர்களில் ஒரு குட்டையான பிராமணன் நடுவில் இருந்தான். காஸ்யபரின் பிள்ளை.  ஒரு கையில் தாழங்குடை, மற்றொரு கையில் கமண்டலம். இடையில் கோவணம். சிவந்த உடலில் மார்பில் பூணல்.
கையில் மோதிரவிறலில் தர்ப்பை பவித்ரம்.


வரிசை நகர்ந்து குட்டையன் மஹாபலி முன் நின்றான்.

அவன் உருவத்தை பார்த்து  மஹாபலி வேடிக்கையாக சிரித்தான்.  பிறகு   ''வா ப்ராம்மணா,  கால் கடுக்க வெகுநேரம் இந்த வரிசையில் நிற்கிறாயோ?''

''அரசே  உங்களிடம்  தானம் வாங்க நான் அதி ர்ஷ்டம்  செய்திருக்கவேண்டும். கால் கடுக்க நின்றாலும் கை நிறைய கொடுப்பவர்கள்  அல்லவா  நீங்கள்''என்றான்  வாமனன்,

''பரவாயில்லே  சாதுர்யமாக பேசுகிறாயே. நீ கேட்பதை கொடுக்க என் மனதுக்கு பிடித்திருக்கிறது. சொல் உனக்கு என்ன தானம் வேண்டும் என்னிடம்?''  என்றான்  மஹாபலி

''கால் கடுக்க என்று நீங்கள் சொன்னதால் என் மனத்திலும் காலே  முதலாவதாக நிற்கிறது.  என் சிறிய காலடியால் மூன்று அடி  மண் மட்டும் நீங்கள் தந்தால் போதுமே''

''மண்ணா , மூன்றடியா?''  என்ன உளறுகிறாய்.  போயும் போயும் இதையா கேட்பாய்.  நிறைய  கேள் பொன் ,மணி, வைரம் வைடூர்யம், காசு, பசு, தானியம்  அதெல்லாம் கேட்காமல்  ஏதோ கேட்கத்தெரியாமல் எதையோ கேட்டு நல்ல ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறாயே. பாவம் விவரம் தெரியாதவன்  ஏதோ மாற்றி கேட்டுவிட்டாயோ?'' சரியாக சிந்தித்து சீக்கிரம் கேள். உனக்கு பின்னால்  நிறைய பேர் நிற்கிறார்கள் ''

''இல்லை ப்ரபோ   எனக்கு தேவையானதை தான் கேட்கிறேன்.  என் கால் அளவால்  மூன்றடி  மண் மட்டுமே போதும்''  

பைத்தியக்கார  பிராமணன். விசித்தரமானவன்.  சரி  இதோ நீ கேட்ட மூன்றடி மண் தந்தேன். அளந்து எடுத்துக் கொள்''  என்றான் மஹாபலி

வானம் இடித்தது. பூமி நடுங்கியது. பறவை, விலங்கு, தாவர இனம், கடல்  பூமி வானம் எல்லாமே சுழன்றது. மஹாபலி வாயைப் ;பிளந்து எதிரே பார்த்தான். குள்ளனைக் காணோம்.  எங்கே அவன்...  இது யார் ?  ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  ஒரு பேருருவம்  நின்றது. அதன் ஒரு காலடியில்  அவனது பாதாள லோகம் அனைத்தும்   அடங்கியது. ஐயோ  இது என்ன.  அது இன்னொரு காலால்  பூமி வானம்  இரண்டையும் அளந்து விட்டதே. உயர்ந்த அந்த காலடி  சத்யலோகத்தில் பிரமன் எதிரில் நிற்க  அவன் அதற்கு அபிஷேகம் செய்தான் என்று அன்னமாச்சார்யா ஒரு கீர்த்தனத்தில் பாடுகிறார். ''ப்ரம்ம கடிகின பாதமு'' .  சிறந்த பாடல் அது.

''மஹாபலி  நீ வழங்கிய தானம்  மூன்றடி மண்.  ஒரு  அடியால் பாதாளலோகங்கள் அனைத்தும் அளக்கப்பட்டது. ரெண்டாம் அடியால் பூமியும் வானமும், மண்ணும் விண்ணும் அளந்து மண் பெற்றேன். இனி நான் கேட்ட மூன்றாவது அடி மண் எங்கே ? சொல்.

மிரள மிரள விழித்தான் மஹாபலி. அவனையறியாமல் அவனது இரு கரங்களும் கூப்பின. திருவிக்ரமனாக எதிரே நிற்பவன்ம தன்னிடம் தானம் கேட்ட  வாமனனாக  வந்த  மஹா விஷ்ணுவே   என புரிந்து கொண்டான்.

கண்களில் தாரை தாரையாக  கண்ணீர் வடிந்தது. தனது தவறு புரிந்தது. ''பிரபு, மூன்றாவது அடியை எனது சிரத்தில் வையுங்கள் '' என்று கெஞ்சினான்.  ஆணவம் அழிந்தான். அதற்காகத்தானே விஷ்ணு இந்த அவதாரத்தையே எடுத்தார்.

''மஹாபலி. உன்னை எனக்கு பிடிக்கும். உன் ஆணவத்தை அழிக்கவே நான் இந்த அவதாரம் எடுத்தேன். இனி நீ இந்த சுதல லோகம் எனும் பாதாளத்தை நேர்மையாக ஆட்சி  செய்து வருவாய்.  அடுத்த மன்வந்தரத்தில் நீ தான் இந்திரன். உனக்கு மரணமில்லை. நீ ஒரு சிரஞ்சீவி ''  என்று வரமளித்தார் விஷ்ணு.  அந்த மன்வந்தரம் இன்னும் வரவில்லை. அது வருவதற்குள் நமக்கு  எத்தனை லக்ஷங்கள் பிறவி பாக்கி இருக்கிறதோ!


காஞ்சிபுரத்தில் சிவ காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆலயத்தின் அருகே  ஒரு வாமனன் கோவில் இருக்கிறது. இங்கு ஒரு கோவிலில் தான் விஷ்ணு வாமனனாக காட்சி தருகிறார்.  35 அடி  உயர 24 அடி  அகலமாக  உலகளந்த பெருமாள் இருக்கும்  கோயில்.  என்று யாரைக்கேட்டாலும் வழி சொல்லுவார்கள். திருக்கோவிலூரில் அற்புதமாக காட்சி அளிக்கிறார். சென்றிருக்கிறேன்

THIRUPPAAVAI 17



சுடச்சுட அக்காரவடிசல் J.K. SIVAN

மார்கழி 17வது நாள்

கொழுந்தே குலவிளக்கே

மிகத் துணிச்சலானவள் ஆண்டாள். நினைத்ததை சாதிப்பவள்.
ஆண்டாள் மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் நமது குட்டிக் கதையில் மார்கழி 17வது நாளன்று இடம் பெறுகிறது. உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.

தனது சப்ரமஞ்ச கட்டிலில் சாய்ந்திருந்த நந்தகோபன் திடீரென்று சில பெண்கள் தன்னெதிரே வந்து நிற்பது எதற்கு என்று யோசித்தவாறு முதலில் நின்ற அழகிய பெண் ஆண்டாளை பார்க்க ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :

''என்ன விஷயமாக நீங்கள் இந்த அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''

''ஐயா மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழ தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.'' என்றாள் .

நந்தகோபன் அருகில் அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக்கண்டதும் ஆண்டாள்

''எங்களின் தாய், அம்மா யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம் அவற்றை கண்காணிக்கும் இந்த ஆயர் பாடி கோப கோபியர்கள் எல்லோருமே உங்கள் அன்பாலும்
பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். துயில் எழுந்திரு தாயே. எங்களை ஆசிர்வதிப்பாயாக.

நந்தகோபன் யசோதைக்கு நடுவில் ஒரு கட்டிலில் கிருஷ்ணனும் பலராமனும் அழகிய கட்டிலில் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டாள் ஆண்டாள். கிருஷ்ணன் அரைத்தூக்கத்தில் இருந்தான்.

''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.! எங்கள் தலைவனின் சகோதரா அழகிய வீரா பலதேவா நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களை ப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது!!) இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ர கலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். ''கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா'' என நாமும் அவனைப் பணிவோம்.

ஆண்டாள் கண்ணனைக்கண்ட ஆனந்தத்தில் கடல் மடை யென பாசுரம் ஒன்று பாடுகிறாள். இல்லை இல்லை ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் இருந்த மற்றொரு இளம்பெண் கோதை ஆண்டாளாகி இதைப்புனைகிறாள். ஏட்டில் எழுத்தாணி விரைகிறது. வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியைநிரப்பி கண்வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. பனை ஓலை ஏடு நிறைகிறது.

இனி காலம் காலமாக அந்தக் காவியம் திருப்பாவையாகி நமக்கு மகிழ்ச்சியூட்டி என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.

வில்லிப்புத்தூர் வட பத்ர சாயீ கோவிலில் பட்டாச்சார்யர் தான் விஷ்ணுசித்தர் வீட்டிலிருந்து எழுதிக்கொண்டு வந்த கோதையின் அன்றைய பாசுரத்தை படித்துக்காட்டிக் கொண்டிருந்தார்: அவரைச்சுற்றி உள்ளூர் வைஷ்ணவர்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதே உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்

அதே நேரம் நந்தவன ஆஸ்ரமத்தில் தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இதுவரை இருபது தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை படித்து வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியை கீழே வைக்க மனம் வரவில்லையே. எதிரே மலர்களைத் தொடுத்துக்கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.

'கோதையின் பாமாலையில் மகிழ்ந்த அரங்கா உனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் இந்தா சூடிக்கொள்.''

RANGA'S DIAMAND TILAK







அரங்கா எங்கே உன் திலகம்?
J.K. SIVAN

2018 சுபிக்ஷமாக இருக்க அனைவரும் ஆசைப்படுகிறோம். ததாஸ்து. அதற்கு ஒரு சின்ன தியாகம் நாம் அனைவரும் செய்ய தயாராக இருக்கவேண்டும். நாளை 1.1.18 முதல். என் இஷ்ட தெய்வமே, கிருஷ்ணா, உன் மேல் ஆணை. இனி நான் யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் தரமாட்டேன். பிடிவாதாமாக கேட்டாலும்

'' தர முடியாது ஐயா மன்னிக்கவும்''

''உங்கள் வேலை நிறைவேறாது'. தாமதமாகும். பரவாயில்லையா'?

'' அதால் உயிர் போய்விடாது அல்லவா?''

தக்க அதிகாரியை கண்டு பயப்படாமல் உண்மையை உடைத்து பேசவேண்டும். இது ஒருவர் செய்வது அல்ல. அனைவரும் நாம் அனைவரும். நமக்கு நாமே துரோகம் செயது கொள்ளவேண்டாம்.

அதேபோல் லஞ்சம், உபரி வருமானம் வாங்கும் நிலையில் உள்ளவரும், இனி யாரிடமும் நாம் ஒரு பைசா கூட கேட்கமாட்டேன். என்னால் முடிந்த அளவு உதவுவேன் என்று மனதுக்குள் சத்தியம் செயது கொள்ளவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இது பரவினால் சுபிக்ஷத்தை தவிர வேறு எதையும் நாம் பெறமுடியாது

இப்போது இருக்கும் நிலை, எங்கு பார்த்தாலும் நம்மை நிறைய பேர் சுரண்டும் விஷயம் குறைய வேண்டும். . இயலாதபோது நாம் அதிர்ச்சி அடைகிறோம். இவ்வளவா? அத்தனையுமா? இது அடுக்குமா? என்று நிர்கதியாக அரற்றுகிறோம். இனி சுபிக்ஷமா? ஆமாம். நிச்சயம் நாம் தேடி அனுபவிக்கவேண்டியது.

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.. அடேயப்பா எவ்வளவு காலங்கள் நாம் சுரண்டப் பட்டவர்கள். வாரிக்கொடுத்தது போக வாரிச் சுருட்டிக்கொண்டு போகவும் வழி செய்தவர்கள். ஒன்றா இரண்டா எத்தனையோ அக்கிரமங்களை நாமும் நம் முன்னோர்களும் சகித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறோம்.
போதுமே அது. முற்றுப்புள்ளி வைக்க முயல்வோமே.

வெள்ளைத் தோல் இருந்தால் நேர்மையானவன், நல்லவன் என்று மடத்தனம் அப்போதே இருந்தது. நிறத்திற்கும் நேர்மைக்கும் என்றுமே சம்பந்தமில்லை. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

ஆர்லோவ் வைரம் என்று ஒரு வகை. அசாத்தியம், அபூர்வம், அதிசயம் என்று என்ன வார்த்தை வேண்டுமா னாலும் அதற்கு பொருந்தும். ரஷ்யாவில் மாஸ்கோவில் வைரங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று இந்த ஆர்லோவ் வைர வகை. கோழி முட்டையின் அளவில் சரி பாதியாக இது கண்டெடுக்கப் பட்டது. எங்கே?? ரஷ்யாவிலோ எங்கேயோ இல்லை. நமது ஊரில் கோலாரில் சுரங்கத்தில்.

அதை கண்டெடுத்த காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. சரி அதை எடுத்து என்ன செய்தார்கள்?

இருக்கவே இருக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். உத்சவருக்கு நெற்றியில் திலகமாக பெரிதாக அழகாக பொருத்தி மின்ன வைத்தார்கள். பார்த்தவர்கள் பக்தியோடு பார்த்தார்கள். ஒருவன் மட்டுமே அதை 'ஒரு கை' பார்த்தான். அவன் ஒரு பிரெஞ்சுக்காரன். முன்னூறு வருஷங்களுக்கு முன்பு 1747 வாக்கில் ஒண்ட வந்த பிடாரிகள், பிரெஞ்சுக்காரர்களுக்கும் கிழக்கிந்திய வெள்ளைக்காரர்களுக்கும் சண்டை நடந்தபோது அந்த யுத்ததில் வேலை பார்த்தவன். யுத்தத்தை விட்டு ஓடி வந்து ஸ்ரீ ரங்கம் வந்தான். தினமும் கோவிலுக்கு தவறாமல் வருவான். ''நான் ஒரு 'ஹிந்து' வாக மாறிவிட்டேன், அரங்கனின் பக்தன்' என்று சொன்னதை நம்பி அவனை உள்ளே சேர்த்துக் கொண்டார்கள் எதையும் எவரையும் நம்பும் நம்மவர்கள். தினமும் வைரத்தை தரிசனம் செய்தவன் ஒருநாள் ஆண்டாள் ரங்கனோடு கலந்ததைப் போல் ரங்கநாதரின் ஆர்லோவ் வைரம் அவனோடு கலந்து விட்டது.

எடுத்தவன் நேராக சென்னைக்கு ஓடி வந்துவிட்டான். கிழக்கிந்திய வெள்ளையர்களிடம் பேரம் பேசினான். அது பல வைர வியாபாரிகள் கை மாறியது. ஹாலந்து தேசத்தில் ஆம்ஸ்டெர்டாம் என்ற ஊர் வைரத்துக்கு ரொம்ப பேர் போனது. அங்கே வைர சந்தையில் ரங்கனின் வைர திலகம் விற்பனைக்கு வந்தது. அதிக விலை கொடுத்து (நாலு லக்ஷம் டச்சு காசுகள் அப்போது . எத்தனை கோடியோ இப்போது . எனக்கு கணக்கு தெரியாது. ) கிரிகோரி கிரிகோரிவிச் ஆர்லோவ் என்ற ஒரு வைர நிபுணன் பெரிய வியாபாரி. ரஷ்யாக்காரன். அதை அவன் விலைக்கு வாங்கினான் ரங்கன் திலகம் ரஷ்யா போய் பார்த்தது.

கிரிகோரிவிச்சுக்கு ஒரு நீண்ட கால ஆசை. ரஷ்ய ராணி காதரின் மீது கொள்ளை காதல். அவள் 3வது பீட்டர் மனைவி. இந்த வைரத்தால் காதரினை தூண்டில் போட்டு மயக்கினான். வைரம் ஒன்று சேர்த்தது. இதனால்
சிம்மாசனத்திலிருந்து பீட்டர் கழண்டு போனான். காதரின் ராணியானாள். வைரம் போல் ஒர்லோவ் உறவு உறுதியானது.

ரங்கனின் திலகம் ராணி காதரினின் வைரச் செங்கோலில் உச்சியில் அரை உருண்டையாக பொருத்தப்பட்டு ஒளி வீசியது. அதன் அளவு 32 mm x 35 mm x 21 mm. ள்ளையில் பட்டை தீட்டப்பட்ட நீல டால் அடிக்கும் இந்த வைரக்கல் 189.62 carats (37.924 g). அதற்கு மேல் தான் ரெட்டை தலை கழுகு

அந்த வைரத்தின் மதிப்பு?விலைஎன்ன என்று கேட்காதீர்கள். சுவிஸ் பேங்கில் இருக்கும் யார் பேர்களிலோ இருக்கும் நமது பணத்தை விட அதிகம் என்று வேண்டுமானால் தோராயமாக சொல்லி வைக்கிறேன். சரியா தப்பா என்று எனக்கு என்ன கவலை? எனக்கு இங்கேயே பணம் இல்லை!

1700 பிற்பகுதியில் பொருத்தப்பட்ட அந்த வைரம் 1913 யாரோ அதை சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்போது கீழே விழுந்ததாம். எடுத்தவன் அதை எடை பார்த்தானாம். எழுத மறந்து போச்சாம். கிட்டத்தட்ட 190 காரட் (38g )என்று சொன்னானாம்!

இப்போது அந்த வைரம் எங்கே? ரங்கநாதனுக்கு சக்தி உண்டு ஒரு நாள் அது அவனை அடையும். அவன் காரணமாகத்தானே எதையும் விட்டு வைப்பவன். காலம் செல்லட்டும் வழி சொல்லட்டும்.



காதரினின் வைர செங்கோலையும் ஆர்லோவ் கொடுத்த வைரக்கல்லையும் அதில் பார்த்தேன். நீங்களும் பார்க்க இணைத்துள்ளேன். ரங்கா மசமச வென்று இருக்காதே. உனது திலகம் சீக்கிரம் உன்னிடம் வரவேண்டாமா? நீ தான் ஏதாவது செய்வாயே, செய்யேன்! கோலில் பார்த்த அந்த வைரத்தை கோவிந்தா உன் நெற்றியில் பார்க்க என்னால் முடியுமோ???என்னால் முடிந்தது இந்த வைரத்தின் பொம்மையை அளவாக வெட்டி உன் நெற்றியில் ஒட்டி வைத்து அழகு பார்க்கிறேன். அவ்வளவு தான்!

Saturday, December 30, 2017

MAHARISHI RAMANA


BHAGAVAN SRI RAMANA'S TALKS :

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you. So you will enjoy profusely. JKS

Devotee: Is pranayama necessary?
Maharishi: Yes. It is useful.

D.: I did not practise it. But should I undertake it?
M.: Everything will be all right with sufficient strength of mind.

D.: How shall I get the strength of mind?
M.: By pranayama.

D.: Is food-regulation also necessary?
M.: It is certainly useful.

D.: Should my contemplation be on the Infinite or the limited
being?
M.: What do you mean?

D.: May I contemplate on Sri Krishna or Sri Rama alternately?
M.: Bhavana implies khanda i.e., division. Thirujnanasambandar had sung in praise of Sri Arunachala. He also mentioned the story briefly as follows:

Jnanasambandar was born in an orthodox family about 1,500 years
ago. When he was three years old his father took him to the temple in Shiyali. He left the boy on the bank of the sacred tank and went in to bathe. As he dipped in the water the boy, not finding his father, began to cry out. Immediately Siva and Parvati appeared in a vimana. Siva told Parvati to feed the boy with her milk. So she drew out milk in a cup and handed it to the boy. He drank it and was happy.

The father as he came out of the water saw the boy smiling and with streaks of milk round his lips. So he asked the boy what happened to him. The boy did not answer. He was threatened and the boy sang songs. They were hymns in praise of Siva who appeared before him.

He sang, “The One with ear-rings... the Robber, who robbed me of
my mind....”


He thus became one of the most famous bhaktas and was much sought after. He led a vigorous and active life; went on pilgrimage to several places in South India. He got married in his sixteenth year. The bride and the bridegroom went to have darsan of God in the local temple soon after the marriage ceremonies were over. A large party went with them. When they reached the temple the place was a blaze of light and the temple was not visible. There was however a passage visible in the blaze of light. Jnanasambandar told the people to enter the passage. They did so. He himself went round the light with his young wife, came to the passage and entered it as the others had done earlier. The Light vanished leaving no trace of those who entered it.The temple again came into view as usual. Such was the brief but very eventful life of the sage.

SWAMIJI'S TIME




SWAMIJI'S TIME J.K. SIVAN

NON RESISTANCE

I once met a man whom I had known before as a very stupid, dull person, who knew nothing and had not the desire to know anything, and was living the life of a brute. He asked me ‘ what I should do to know God, how am I to get free?’’

"Can you tell a lie?" I asked him.

"No," he replied.

"Then you must learn to do so. It is better to tell a lie than to be a brute, or a log of wood. You are inactive; you have not certainly reached the highest state, which is beyond all actions, calm and serene; you are too dull even to do something wicked."
That was an extreme case, of course, and I was joking with him; but what I meant was that a man must be active in order to pass through activity to perfect calmness.

Inactivity should be avoided by all means. Activity always means resistance. Resist all evils, mental and physical; and when you have succeeded in resisting, then will calmness come. It is very easy to say, "Hate nobody, resist not evil," but we know what that kind of thing generally means in practice. When the eyes of society are turned towards us, we may make a show of non-resistance, but in our hearts it is canker all the time. We feel the utter want of the calm of non-resistance; we feel that it would be better for us to resist. If you desire wealth, and know at the same time that the whole world regards him who aims at wealth as a very wicked man, you, perhaps, will not dare to plunge into the struggle for wealth, yet your mind will be running day and night after money. This is hypocrisy and will serve no purpose. Plunge into the world, and then, after a time, when you have suffered and enjoyed all that is in it, will renunciation come; then will calmness come. So fulfil your desire for power and everything else, and after you have fulfilled the desire, will come the time when you will know that they are all very little things; but until you have fulfilled this desire, until you have passed through that activity, it is impossible for you to come to the state of calmness, serenity, and self-surrender. These ideas of serenity and renunciation have been preached for thousands of years; everybody has heard of them from childhood, and yet we see very few in the world who have really reached that stage. I do not know if I have seen twenty persons in my life who are really calm and non-resisting, and I have travelled over half the world.



thiruppavai 16

சுடச்சுட  அக்காரவடிசல் 
மார்கழி 16ம் நாள்:

                                 மணிக் கதவம் தாள் திறவாய்

வெயில் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கி விடலாம். இந்த குளிர் மட்டும் பொல்லாதது. துளிக்கூட நிம்மதியாக இருக்க விடுவதில்லை.  குளிரும் பனியும்  பெரிசுகளுக்கு  பரம வைரி.  வெடவெட வென்று நடுங்கிக்கொண்டு கம்பளிகளுக்குள்ளே  மறைந்து கண்ணு மட்டும் ரெண்டு வெளியே தெரியும்.

ஆனால்  ஆயர்பாடியில் நிலைமையே  வேறு.  சில்லென்று  வீசும்  இனிய குளிர் காற்றில் சுகமாக  ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும்   தன் சினேகிதிகளோடு ஆண்டாள்  பேசிக்கொண்டே போகின்
றாள்.  மற்ற பெண்களையும்எழுப்பி நீராட வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே.

இன்று  மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே இதுவரை  விடாது  அந்த  பெண்கள்  அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,உள்ளும்புறமும் தூய்மையோடு  கிருஷ்ணனையும் நாராயணனையும்  அருள் தா என்று   வேண்டுகிறார்கள்.  சொட்ட சொட்ட  ஈர ஆடையை பிழிந்து சுற்றிக்கொண்டு  அந்தப்பெண்கள் இதோ  யமுனைக் கரையில் இருக்கிறார்கள்.  அவர்கள் நீராடி  நோன்பிருந்து கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

'ஆண்டாள் இப்போ எங்கேடி போறோம்?''

'நந்தகோபனது  அரண்மனை போன்ற  வீட்டுக்கு.   இன்று  என்ன  விசேஷம்  தெரியுமா?  இந்த  பதினைந்து நாட்களாக  எல்லோர் வீட்டிலேயும் சென்று  பெண்களை துயில் எழுப்பிய  ஆண்டாள்  இன்று காலை  யார் வீட்டுக்கு சென்றாள்   தெரியுமா? 

ஆயர்பாடியில்  கண்ணன்  வசிக்கும்  அவன்  தகப்பன்  நந்தகோபன் அரண்மனைக்கே.  எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில்  காவலாளி   கொடிய  கூர்மையான  வேல்  ஈட்டி போன்ற  ஆயுதங்களோடு காவல்  காத்துக் கொண்டிருக்கிறான். யாரும்  உள்ளே  நெருங்க முடியாது. கண்ணனைக் கண் போல்  பாதுகாக்கிறான்  நந்தகோபன். ஏன்?  நாளொரு  அரக்கனும்  பொழுதொரு ஆபத்தும்  தான் அந்தச் சிறுவனைக்   கொல்ல  கம்சனால்  அனுப்பப்படும்  ராக்ஷஸர்கள்   மூலம்  எந்த உருவில்  வேண்டுமானாலும் வரலாமே?  சொல்லிவிட்டா வருவார்கள்?  நாம் தான் ஜாக்கிரதையாக குட்டி கிருஷ்ணனை காப்பாற்றவேண்டும்!!  என்ற நினைப்பு  அந்த வாயில் காப்பானுக்கு.  அவனைக் காப்பதே அந்த கண்ணன் தான் என்று அவன் எப்படி அறிவான். அறிந்தால்  ஏன் ஈட்டி வேல்  பிடித்துக்கொண்டு வாசலில் நிற்கிறான்?   

'சிறுமிகளா யார் நீங்கள்  எல்லாம் ? அதுவும்  இந்த   வேளையிலே இந்நேரத்தில்  இங்கு  என்ன வேலை  உங்களுக்கு.?''

''ஐயா வாயில் காப்போனே,  இந்த  உயர்ந்த மணிகள்  பொருத்திய பெரிய   உங்களது கோட்டை  மணிக்கதவைக்  கொஞ்சம் திறவுங்கள்  எங்களை கொஞ்சம்  உள்ளே  விடுங்கள்''  என்கிறாள்  ஆண்டாள்

'' சிறு  பெண்களா   யார் நீங்கள், எதற்கு  உள்ளே போகவேண்டும்?''

''இந்த  தெய்வீக  மாதத்தில்  விடியலில் நீராடி  பாவை நோன்பு  நூற்று  எங்கள் தெய்வத்தை அந்த  கிருஷ்ணனை  தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும்  வந்துள்ளோம். உள்ளே  இருக்கும்  உங்கள்  தலைவன்,  எங்கள் மனம்  நிறைந்த  அந்த   கண்ணன்  நேற்று  எங்களை  இங்கே  வரச்சொல்லி  அனுமதி கொடுத்ததால்  அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற  வந்துள்ளோம். இது அவன்  நேரம்.  நாங்கள்  உள்ளே சென்று   அவன் ஆயிர நாமங்களை சொல்லி அவனை  துயிலெழுப்ப விழைகிறோம்.   எங்களைக்  தடுக்காமல் குறுக்கிடாமால்   தயவு செய்து  கதவை  மட்டும் திறவுங்களேன்?''

''விசாரிக்காமல்  நான்  யாரையும் உள்ளே  விடமுடியாது.''

''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன  துன்பம் உங்களுக்கோ,அந்த  மாயக் கண்ணனுக்கோ நேரும்?"

''சூர்பனகை, பூதகி  ஆகியோரும் பெண்  தானே?''  என  சிரித்தான் காவலாளி.

''அவர்கள்  வெளியே  இருந்து  இங்கே வந்தவர்கள்.  நாங்கள்  இதே  ஊரில்  கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள்.  கோபியர்  குடும்பப்பெண்கள். மேலும்  நாங்கள்  கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள்  மனத்தை அவன்  வெல்ல வந்தவர்கள்.புரிகிறதா?'' என்றால் ஆண்டாள்.

''நான்  கிருஷ்ணனையே  நேரில் கேட்டு  அனுமதி தருகிறானா என்று  தெரிந்து தான் உங்களை உள்ளே  விடமுடியும். அதுவரை வெளியே நில்லுங்கள்''  என்றான் வாயில் காப்போன். அவர்கள்  அங்கேயே  பாடிக்கொண்டு  நின்றார்கள். உள்ளே சென்று  வந்த  அந்த  காவலாளி  அந்தப் பெண்களை  உள்ளே அனுமதித்தான். ஆண்டாள்  எதையும்  சாதிப்பவளாச்சே.

வில்லிபுத்தூரில் அப்போது---

ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே  போகும் நேரம் தான் அந்த ஆஸ்ரம வாயிற் கதவைத்திறந்து  வெளியே சென்று அழகிய பெரிய  கோலம்  போட்டுக்கொண்டிருந்த  கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள். அவள் எதிரே  அந்த  அழகிய அரங்கனின்  உருவச்சிலை  அவளையே பார்த்துக்கொண்டிருக்க  அன்று எழுதிய  பாசுரத்தை  மனதிலிருந்து வாய்க்கு மாற்றிக்கொண்டு வந்து   பாடினாள். மேலே ஆயர்பாடியில் நாம்  கண்ட காட்சி அவள் செய்த  அந்த அற்புதக் கற்பனை தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லா பாசுரமாக  பக்தி சொட்ட  வெளிப்  பட்டது.

 'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
               வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
             மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
            வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

‘’'அம்மா  கோதை, நீ  இந்த  16 நாட்களாக  என்னை  வைகுண்டத்தில்  ஆழ்த்தி விட்டாய்  தாயே. நீ  சாதாரண  கவிதையாக சொல்லலங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே  புகட்டி விட்டாய்.''

''அப்படி என்னப்பா  எழுதினேன் ?  சிரித்தாள்  கோதை.

சொல்கிறேன் கேள்.  முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி  நோன்பிருந்தார்களோ', அவனை ,  ஏன்  16வது நாளன்று பார்க்க நேரிட்டது?''  யோசித்து பதில் சொல்?

''தெரியவில்லையே  அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?'' சிரித்துக்கொண்டே  கேட்டாள்  கோதை.

''கிருஷ்ணனை வேண்டித்தானே  இந்த  மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் ஆகிவிட்டதே. மீதியை அவர்கள்  அவனைத் தேடி போகவேண்டாம் என்பதால் தான்.

பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால்  மீதி பாதி  வழியை கிருஷ்ணனே  நடந்து  வந்து அவனை எதிர்கொள்ளுவான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய் அம்மா.  எனக்கு  இப்படித்தான் படுகிறது ''என்றார்   விஷ்ணு சித்தர்.

GNANAPPANA





சோகம் தந்த ராகம். ஞானப்பான J.K SIVAN

Karmangalkku vibhuvayitolloru ,
Janama desamee bhoomi yennarinjalum,
Karma nasam varuthenam engilum,
Chemme mattengum sadhiya nirnayam.19

ஐயாமார்களே , அம்மாமார்களே, நமது பாரத தேசத்துக்கு கர்ம பூமி என்று பெயர். இங்கே பிறந்து தான் கர்மங்களை தொலைக்க வழி தேடிக்கொள்ளவேண்டும். எண்ணற்ற வழிகள் இருக்கிறது அதற்கு. நாம் தான் உபயோகிக்கவில்லை. இதை விட்டு வேறு எங்கோ காசுக்கும் பேருக்கும், வசதிக்கும் அலைகிறவர்கள் முக்கியமாக ஒன்றை மறந்து விடுகிறார்கள். ''நகர வசதி'' தேடுபவர்களுக்கு ''நரக வசதி'' எப்படி என்று தெரியும்போது தான் கிருஷ்ணனை தேடுவார்கள். அப்போதும் அவன் உதவுவான். நிச்சயம்.

Bakthanmarkkum mumukshu janaNgalkkum,
Saktharaya vishayee janangalkkum,
Ichicheedunnathokke kodutheedum,
Viswa mathavu bhoomi siva! Siva! 20

முக்தி தேடும் பக்தர்களே, ஆன்மாவோடு ஒன்றரக்கலந்து ஜீவன்முக்தர்களாக முயலும் முமுக்ஷுக்களே, இதையெல்லாம் விட்டு மற்றதெல்லாம் தேடும் மாந்தர்களே, ஒரு முக்கிய விஷயம் இது. நன்றாக மண்டையில் ஏற்றிக்கொள்ளுங்கள். இந்த தேசத்தை என்னவென்று அழைக்கிறோம். தாய் நாடு. அம்மா டா இது. கருணை மிக்கது. ஹர ஹரா சிவ சிவா எவ்வளவு அற்புதமான மண் இந்த கர்மபூமி. காமதேனு இது. கேட்டதெல்லாம் வாரி வழங்குகிறதே.

Viswanathante moola prakrithi than,
Prathyakshena vilangunnu bhoomiyayi, 21

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், லோகரக்ஷகனான பரமாத்மாவின் அத்தனை கல்யாணா குணங்களையும் உருவமாக கொண்டது தான் இந்த கர்ம பூமியோ? பரமாத்மாவே தான் இந்த பரந்த பூமியோ?

Avani thala paalanithinallo ,
Avatharangalim palathorkkumbol,
Athu kondu viseshichum Bhoolokam,
Pathinallilum uthamam ennallo,
Veda vadhikalaya munikalum,
Vedavum bahumamichhu chollunnu. 22

நான் யோசித்து பார்த்ததில் புரிந்தது என்ன வென்றால், இந்த பரந்த புண்ய பூமியை பரிபாலிக்க யாரால் முடியும்? அதற்காக தான் பல அவதாரங்களை அந்த மகா விஷ்ணு நாராயணன், என் கிருஷ்ணன் எடுத்தானோ. அதனால், அந்த ஒரே காரணத்தால் தான், இந்த உலகம், பூலோகம், மொத்தம் பதினாலு லோகங்களிலும் மிக சிறந்த, பிரதானமானது. இதை நானா சொல்கிறேன். இல்லை. வேதமுணர்ந்த ஞானிகள், மஹான்கள், ரிஷிகள், வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்தோத்ரங்களில் பாடுகிறார்கள்.

Lavanambhdhi madhye vilangunna,
Jambhu dweeporu yojana lakshavum,
Saptha dweepukal adhil undethrayum,
Uttamamennu vazhthunnu pinneyum.23

பூந்தானத்துக்கு கடல் தான் பூமியை விட அதிகம் என்று நன்றாக தெரியும். எங்கும் ஜலமயம். உப்பு நீர். ஒரு வாய் கூட குடிக்க பிரயோசனம் இல்லை. இதில் தான் இருக்கிறது இந்த ஜம்பு த்வீபம் (தீவு). பத்து லக்ஷம் மைல் நீளமாம். அதற்குள் ஏழு குட்டி தீவுகளாம். வேதங்கள் புராணங்கள் சொல்வதிலிருந்து இதை ஏதோ ஒருவாறு புரிந்து கொண்டேன்.

Bhoo padmathinnu karnigayayittu,
Bhoo darendran adil allo nilkunnu,
Idhil ombadhu gandangal undallo,
Adil uttamam bharatha bhoo thalam. 24



இந்த பூமித் தாமரை மேலே, நடுவிலே, ஒரு உயர மலை தெரிகிறதா? அது தான் மஹா மேரு. இதை தவிர ஒன்பது முக்கிய பாகங்கள் இதற்கு இருக்கிறது. அதில் எல்லாவற்றிலும் அதி உன்னதமானது இந்த பாரத வர்ஷம். நமது பாரத தேசம்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...