Friday, July 23, 2021

PESUM DHEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


61.    உலக பிரசித்தமான  ஒரு  சந்திப்பு.

நண்பர்களே,  ஒரு எச்சரிக்கை  இது ரொம்ப நீண்ட பதிவு. பாதியை ஓடித்தது, பிரிக்க முடியாத அற்புதமான பகுதி. நிதானமாக  நேரம் செலவழித்து மஹா பெரியவா சம்பாஷணையை கூர்ந்து கேளுங்கள். 
1930ல்   வெள்ளைக்கார அமெரிக்கர்  பால் ப்ரண்டன், ஆத்ம ஞானம் தேடி கப்பலேறி இந்தியா வருகிறார் .  இந்தியாவில் பல  இடங்களில் சுற்றி  யோகிகளைஎல்லாம்  தேடி  சந்தித்து அவர்கள்  உண்மையான சித்த புருஷர்களா என்று  ஆராய்கிறார்.  அவர்  முயற்சியில் தோல்வியே  மிஞ்சு கிறது.  தான் சந்தித்தவர்கள் விவரங்களை தனது புத்தகத்தில் தொகுத்து அளித்திருக்கிறார் .  ''ரஹஸ்ய இந்தியாவைத்  தேடி  ''(IN  SEARCH  OF  SECRET  INDIA ). அருமையான புத்தகம்.  அதில்  போலி  சித்தர்கள் தான் அதிகம்  தென்படுகிறார்கள். உண்மையான சித்த புருஷர்களை காணமுடியவில்லை என்கிறார்.
வட இந்தியாவில் தோல்வி கண்டு,  தெற்கு நோக்கி வருகிறார் பால் ப்ரண்டன். தேடல் ஆரம்பிக்கிறது.  சென்னை அடையாறில் ஒரு  சித்த புருஷர் கண்ணில் படுகிறார். மற்றொருவர் அவரது குரு திருவண்ணாமலையில் இருப்பதாக சொல்கிறார். இன்னொருவர்  காஞ்சி காமகோடி மட அதிபதி ஒருவர்  சென்னைக்கருகே  செங்கல்பட்டில் வாசம் செயகிறார். அவர் ஒரு சிறந்த யோகி.  அவரைப் போய் பாருங்கள் என்கிறார். பால்  ப்ரண்டன்  சென்னையில் இருந்து உடனே  செங்கல்பட்டு சென்று  மஹா பெரியவா  வாசம் செய்த இடத்தை  அடைகிறார். 
 இதுவரை மஹா பெரியவா எந்த வெளிநாட்டினரையும் சந்திக்காததால்  ப்ரண்டனை மார்க்க மாட்டார் என்ற  வதந்தி.  ஆனால் ப்ரண்டனை அழைத்து வந்த மஹா பெரியவா பக்தர்  மடத்துக்குள் சென்று  அனுமதி பெற்று ப்ரண்டனை உள்ளே அழைத்து செல்கிறார்.  பிறகு நடந்த பெரியவா ப்ரண்டன் சந்திப்பில்  நடந்த சம்பாஷணையை ப்ரண்டன் தனது புத்தகத்தில் இப்படி  கூறுகிறார் .

 ''தென்னிந்திய மதத் தலைவருடன் சந்திப்பு'

அந்த  மடத்தில் ஒரு சின்ன கதவு வழியாக உள்ளே சென்றால் ஒரு சின்ன அறை . வெளிச்சம் அதிகம் இல்லை. அதன் உள்ளே தீப ஒளி  நிழலில் சற்று உயரம் கம்மியான ஒரு உருவம். ஆடம்பரமில்லாத ஒரு பெரிய மதத்தின், ஹிந்து மத ஆச்சார்யர். தென்னிந்தியா முழுதுமே போற்றி புகழ்ந்து  அவரது உபதேசத்தை பின்பற்றியது. அமைதியாக  அவரைப் பார்த்தேன்.  காவி உடுத்த சாதாரணர்.  கையில் ஒரு தண்டம்  என்ற கோல்.  கிட்டத்தட்ட  நாற்பது வயதிருக்கும். அதற்குள் நரைத்த தலை. முகம்  தாடி மீசையின்   வெண்மை யாலும்  தங்க நிற உடலும்  முகமும்  சோபை அளித்தது.. பெரிய விழிகள். சாந்தமான முகம்.  மூக்கு  அதிக கூர்மை இல்லை. மத்திய காலத்தில் இருந்த கிருத்தவ  மஹான்கள் முகம் இப்படித் தான் பார்த்திருக்கிறேன்.  இவர்  ஒரு சிறந்த புத்திமான் மிகவும் கற்றவர்  என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர் விழிகள் பல  சேதிகள் சொல்லவல்லவை.
''வாருங்கள்''  . என்னை அழைத்து உபசரித்தார். என் கூட வந்தவரிடம் தமிழில் அவர் சொல்வது எனக்கு புரிகிறது.
''உங்கள் ஆங்கிலம் அவருக்கு  புரிகிறது, ஆனால் அவர் பேசுவது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம் என்பதற்காக  என்னை மொழிபெயர்க்க  சொன்னார் '' என்கிறார்  கூட வெந்த வேங்கடரமணி .''இந்த தேசத்தில்  நீங்கள் பல இடங்களில் பல மக்களை சென்று கண்டீர்களே, உங்கள் சொந்த அபிப்ராயம், அனுபவம் என்ன?''
நான் பட்டவர்த்தனமாக என் மனதில் தோன்றியதை சொன்னேன். அப்புறம் வேறு ஏதேதோ பற்றி பேசினோம். ஆங்கில பத்திரிகைகள் பற்றி,  நாட்டு நடப்பு  வெளியுலகில் நடப்பவை. எங்கள் இங்கிலாந்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட நன்றாக அறிந்திருக்கிறார்.    ஐரோப்பாவில்   ஆங்காங்கே   உருவாகும்  மக்களாட்சி  புரட்சி  பற்றிய  சம்பவங்கள் பற்றியும் என்னிடத்தில்  சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன்.

என் நண்பர் வெங்கட்ரமணி  ''காஞ்சி பெரியவா தீர்க்க தரிசி'' என்று சொல்லி அழைத்து வந்தது நினைவுக்கு வந்தது. ஆகவே  அவரிடத்தில் உலக எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்க தோன்றிற்று.

"ஐயா,   இந்த   உலகத்தில்  எப்போது  அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இப்போதுள்ள நிலை மாறி   முன்னேற்றம் எபபோது  உருவாகும் என்று கருதுகிறீர்கள்?''

''முன்னேற்றம் என்பது  படிப்படியாக  நிகழ்வது.   ஒவ்வொரு தேசமும் போட்டி போட்டுக்கொண்டு   மேலும் மேலும்  மக்களைக் கொள்ளும்  நாசா காரிய   ஆயுதங்களை சேமிப்பதில் ஈடுபடும்போது முன்னேற்றம்  உடனே எப்படி எதிர்பார்க்க முடியும் ?
''போர்  வேண்டாம் என்று பேச்சு வார்த்தைகள் எங்கும் காதில் விழுகிறதே  ஐயா ?''
''உங்கள்  யுத்த கப்பல்களை நீங்கள் முடக்கி வைப்பதாலோ,  பீரங்கிகளை துருப்பிடிக்க செய்வதாலோ  உலகத்தில் யுத்தம்  நிற்குமா? மக்கள் ஒருவரோடொரு வர்  மோதிக் கொள் வார்கள்.  தடியெடுத்தாவது  சண்டை போடும் குணம் இருக்கும்.
''இதை  எப்படி  மாற்றி உதவ முடியும்?''
''தெய்வ  நம்பிக்கை,   ஒவ்வொரு தேசத்தினிடையிலும் பரஸ்பரமாக  மக்கள்  மனத்திலும்   இருக்க வேண்டும். ஏழை பணக்கார  வித்யாசம்  விலக வேண்டும்.   நல்லெண்ணம் மக்களிடையே அப்போது தோன்றும். அமைதி நிலவும். செழுமை, வளமை எங்கும்  பெருகும்.''
" நீங்கள் சொல்வது  நடக்க வெகு நாளாகும் போல் இருக்கிறது. வெகு தூரத்தில் உள்ளது போல் இருக்கிறது.   அதுவரை  சந்தோஷப்பட  எதுவுமில்லை அல்லவா? ''
மஹா பெரியவா கையில் இருந்த தண்டத்தை அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தார்
"பகவான் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்லது நடக்கும்''
" நீங்கள் சொல்லும் பகவான் எங்கோ  வெகு வெகு தூரத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்''
" பகவானுக்கு  மனித இனம் மேல் அளவற்ற அன்புண்டு '' ..அமைதியான மெல்லிய குரலில் பதில்.'' மக்களிடையே நிலவும்  மகிழ்ச்சியற்ற நிலை, கஷ்டங்களை பார்த்தால்  பகவானுக்கு கருணை இல்லை என்று தோன்றுகிறதே''
என் வார்த்தை  அவரை ஆச்சர்யபட வைத்தது. என்னை கூர்ந்து பார்த்தார்.  நாம் ஏன் அவசரப் பட்டு இப்படி பேசினோமென்று எனக்குள் ஒரு வித எண்ணம் உறுத்தியது.  பொறுமை யாக பார்த்த  அவரது   கண்கள் ஆழமாக யோசித்தன.  
''பகவான்  மனித சக்தியையே  பயன்படுத்தி  சமநிலை படுத்துவார். தக்க நேரம் அமையும்போது அது நிகழும்.  எல்லாம் சரியாகும். தேசங்களிடையே உள்ள  கலவரம், மனிதர்களிடையே காணும்  தீய எண்ணங்கள்,  செயல்கள், மக்களின் துன்பம், கோடானுகோடி மக்கள் துயரம் எல்லாம் சாதகமாக உருவெடுக்கும்.  மாற்றம் தேடும்.  அதன் விளைவாக  பொறுப்புள்ள, சரியான  தெய்வீக  அன்புள்ள  மனிதன் ஒருவன் தோன்றுவான்.  நிலைமை சரியாகும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் இப்படி ஒருவர் தோன்றுவது வழக்கம்.  துன்பங்கள் அராஜகம், அக்கிரமம்  தெய்வ அவ  நம்பிக்கை, அறியாமை, உலக ஈர்ப்பு,  இதெல்லாம்  அதிகரிக்கும் போது  நிச்சயம்  ஒரு சக்திமான்   உதார குண புருஷன் அதைச்  சரிப்படுத்த  உலக க்ஷேமத்துக்கென்று உதயமாவான்.''
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நமது காலத்திலேயே அப்படி ஒருவர் தோன்றுவாரோ?''
"இந்த நூற்றாண்டிலேயே, அப்படி ஒருவர் நிச்சயம்  காணப்படுவார்.  உலகத்துக்கு அது தேவை. அஞ்ஞான  இருள்  அதிகரித்துவிட்டது.  ஒரு தேவ புருஷன் நம்மிடையே சீக்கிரமே அறியப் படலாம்''
"மக்கள் தரம் தாழ்ந்து விட்டது என்பது உங்கள் அபிப்ராயமா ?''
" இல்லை. நான் அப்படி என்றும்   நினைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்   இறைவன் ஆத்மாவாக இருக்கிறான்.  ஆகவே  முடிவில் எல்லோரையும் இறை நம்பிக்கையில் ஈடுபடுத்த வாய்ப்பிருக்கிறது''
"எங்கள் மேலை நாடுகளில், பெரிய பெரிய  நகரங்களில் ராக்ஷஸர்களை உள்ளே கொண்ட மக்களைத்  தான் காண்கிறோம்.   கும்பலாக  பலம் கொண்ட சக்திகள் உள்ளனவே''
"மக்கள் மேல் குறை சொல்லவேண்டாம். அவர்கள் வாழும், வளரும் சூழ்நிலை அவ்வாறு உள்ளது.
அவற்றால் அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  உங்கள் நாட்டில் மட்டும் அல்ல, கிழக்கிலும்   மேற்கேயும்  எங்கும்  அதே நிலை தான். சமூகம் மேம்படவேண்டும். அது அவசியம். அப்போது மக்கள்  மனநிலையும் நம்பிக்கையும் மாறும்.   உலக  ஈர்ப்பு வஸ்துக்கள், பொருள்மீது உள்ள  ஆர்வம், தேவை  மாறிவிடும். மனம்  ஒரு உயர்ந்த லக்ஷியத்தில்  ஈடுபடும். சமரஸம்  தழைக்கும். உலக துன்பங்களை மாற்ற இது ஒன்றே வழி.    ஏதோ ஒரு அசுரவேகத்தில் தேசங்கள் தவறான பாதையில் உழலும்போது   அதன் விளைவாக நிகழும் ஏமாற்றம், துயரம், கஷ்டம், துன்பம்  இத்தகைய  நல்ல மாற்றத்துக்கு  அடி கோலும் . கொடிய  செயல்களை, எண்ணங்களை கட்டுப் படுத்தும்.  தோல்வி தான் வெற்றிக்கு வழிகாட்டி.
''மக்கள் ஆன்மீக கொள்கைகளை, நம்பிக்கைகளை, அவர்களது  அன்றாட உலக விவகாரங்களில் ஈடுபடச்  செய்ய  வேண்டும் என  விரும்புகிறீர்களா?''

"ரொம்ப சரி.   அது முடியாததல்ல. நடக்காதது அல்ல. அது ஒன்றே வழி. எல்லோரிடமும் பரஸ்பர நம்பிக்கை, பயமின்மை, அன்பு,  அப்போது தான் மலரும்.அமைதி நிலவும்.    அது தோன்றி விட்டால்  அப்புறம் மறையாமல் தொடரும்  நிறைய ஆன்மீக புருஷர்கள் இவ்வாறு  தோன்றினால் மாற்றம் வேகமாக மலரும்.  பரவும்.  எங்கள் பாரத தேசம்  இந்தியா, அதை வரவேற்கும்,   வளர உதவும்., மரியாதையோடு மதிக்கும்.  ஆன்மீகத்தை மக்கள் செவி மடுத்து கேட்டு புரிந்து பின்பற்றினால்,  அதன் வழி வாழ்க்கை முறை அமைந்தால்,  எங்கும் அமைதி சுபிக்ஷம் நிச்சயம் தோன்றும்''

எங்கள் சம்பாஷணை தொடர்ந்தது. மஹா பெரியவா மேலை நாட்டை இகழ்ந்து கீழ்நாடுகளை உயர்த்தி பேசவில்லை.  பிறர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன்.  உலக கோளத்தின்  இரு பகுதிகளும் வெவ்வேறு  கோட்பாடுகள், நல்லவை,  தீயவை,  கொண்டவை.  அந்த வகையில்  அவற்றுள் அதிக   வித்யாசம் இல்லை.  புத்திசாலித்தனம் கொண்ட அடுத்த  தலைமுறை  ஆசிய, ஐரோப்பிய தேசங்களில் நல்லவற்றை இணைத்து பொருத்தி மக்கள் நாகரிகத்தில் முன்னேற்றம் கொண்டுவரும். சமநிலை உண்டாக்கும்.''
''ஐயா நான் உங்களைபற்றி சில கேள்விகள் கேட்கலாமா?
''ஆஹா  தாராளமாக கேளுங்கள் ''
''எவ்வளவு காலமாக நீங்கள் இந்த ஜகத்குரு  பட்டம் பதவி ஏற்கிறீர்கள்?'
" 1907லிருந்து.  அப்போது எனக்கு 12 வயது. பட்டமேற்றவுடன் நான்கு வருஷங்கள் காவேரிநதியின் கரையில் ஒரு கிராமத்தில் தீவிர  தியானம், கல்வியில் மூன்று வருஷங்கள் ஈடுபட்டேன். அப்புறம் தான் பொதுவாழ்வில் எனது காரியங்கள் ஆரம்பித்தது.''
"நீங்கள் உங்கள் தலைமை செயலகமான கும்பகோணத்தில் அதிகம் தங்குவதில்லையோ?
"கும்பகோணத்தில் அதிகம் இல்லாததற்கு காரணம், என்னை  நேபாள  அரசர் 1918ல் அழைத்த தால்.  அப்போது  வடக்கு நோக்கிய பிரயாண காலத்தில்  சில நூறு மைல்கள் தான் மெதுவாக  நகர இயன்றது.  ஏனென்றால்  அது என் பொறுப்பில் உள்ள சம்ப்ரதாயம், பண்பாடு வழக்கம்.  நான் வழியில்  உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சென்று தங்கி அவர்கள் அழைப்பை ஏற்று  அங்கெல்லாம் ஆன்மீக  உரையாற்றி, ஆங்காங்கே  கோவில்களில்  பிரசங்கங்கள் உபன்யா சங்கள் செய்து ஆன்மீகத்தை, தெய்வீகத்தை வளர்க்க வேண்டும். மக்களுக்கு நல்வழி போதிக்க வேண்டும். இது தான் எனக்கிட்ட வேலை .'

"ஐயா , எனக்கு  யோக மார்கத்தில் உயர்ந்த    ஞானி ஒருவரை சந்திக்க வேண்டும். அதற்காக தான் நான் என் தேசத்திலிருந்து இங்கே வந்து தேட ஆரம்பித்தேன்.  சிறந்த யோகி யாராவது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா. அவரது செயல்பாடுகளை  நான் கூர்ந்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள  விரும்புகிறேன்.  உதவுவீர்களா?''
மஹா பெரியவா அமைதியாக  நோக்கினார். மௌனம் சில வினாடிகள். அவரது விரல்கள் தாடியை தடவின.
"உங்களுக்கு  யோகமார்க்க   வழிகாட்டல்  வேண்டுமானால்  நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.  உங்கள் ஆர்வம் நியாயமானதால் நிச்சயம் உங்கள் எண்ணம் ஈடேறும். உங்களிடம் திடமான மனம், மன உறுதி இருப்பதை அறிகிறேன். உங்களுக்குள்ளே ஒரு ஆன்மீக ஒளி உருவாகிவிட்டது. உங்களை அது சரியான  பாதையில் வழிநடத்தும்.''
''ஐயா  இதுவரை நான் எனக்கு புரிந்த தெரிந்த  வழியில் தான் நடக்கிறேன்.  உங்கள் ரிஷிகள் கூட  ''உன்னைத்தவிர வேறு தெய்வம் இல்லை ''என்கிறார்களே. ''
"பகவான் எங்கும் நிறைந்தவர். அவரை ஒரு இடத்தில் மட்டும் இருப்பதாக  கட்டுப்படுத் துவது தவறு. இந்த பிரபஞ்சத்தையே  காப்பவர் ''
எங்கோ  மீண்டும்  திசை தெரியா வேதாந்தத் திற்குள்  செல்வது போல் எனக்கு தோன்றியது. ஆகவே  அந்த ஆழத்தில் மூழ்காமல்  தலையை மேலே  தூக்கி  மீண்டேன்.
''ஐயா  உடனடியாக  நடைமுறையில் நான் செய்யவேண்டிய காரியம் என்ன ?''
"உங்கள் பிரயாணம் தொடரட்டும்.  பிரயாணம் ஒருநாள் முடிவுக்கு வரும். அப்போது  நீங்கள் சந்தித்த  ஆன்மீகவாதிகள், யோகிகள், பற்ற ற்ற துறவிகளை  சந்தித்ததை எல்லாம் நினைவு கூர்வீர்கள்.  அவர்களுள்  எவர் சிறந்தவராக உங்கள் மனதுக்கு படுகிறதோ அவரை  நாடுங்கள். அவர் உற்ற துணையாக உங்களை வழிநடத்துவார்.  உங்களுக்கு அருள் புரிவார்.''
நான் மஹா பெரியவாளின்  சாந்தமான முகத்தை, தோற்றத்தில்  மகிழ்ந்து மனதில் போற்றினேன்.
"ஐயா  அப்படி எவரும் எனக்கு உசிதமானவ ராக  படவில்லை என்றால் என்ன செய்வது?''
"அப்படிஎன்றால்  நீங்கள் நேராக கடவுளை நாட வேண்டியது தான்   அவரே தோன்றி உங்களை வழி நடத்துவார்.   இடைவிடாத தியானம்  அதற்கு அவசியம். அது தான் தவம்.  உங்கள் இதயத்தில் நல்ல விஷயங்களுக்கு பரந்த எல்லையற்ற  பாரபக்ஷமற்ற  அன்போடு  கலந்து  மட்டுமே இடம் தரவேண்டும். ஆத்மா பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.  விடியற்காலை அதற்கு  உகந்த நேரம். அடுத்தது அந்தி வேளை. உலகம் அமைதியாக தோன்றும் நேரங்கள் அவை.  உங்கள் தியானம் எந்த வித  தடங்கல்,  இடையூறில்லாமல் தொடர உதவும்''
என் மீது  தாயன்பு கொண்ட  கருணைப்  பார்வை,   அவரது தாடி முக  தெய்வீக அமைதி  என்னை கவர்ந்தது.  (படம் இணைத்திருக் கிறேன். இதை வெகு  நேரம்  இன்று காலை பார்த்துக்கொண்டே இருந்தேன் . நீங்களும் அனுபவியுங்கள்.) . 
எனக்கு பொறாமையாக இருந்தது. அவர் இதயத்தில் உலகில் காலத்தால் ஏற்படும்  எந்த வித  சலனமும் இல்லை.  திடீரென்று சடக்கென்று ஒரு கேள்வி கேட்டேன்.
''ஐயா,நீங்கள் சொல்வது போல் செய்து கடைசியில் ஒருவேளை  உங்களையே என் குருவாக தேர்ந்தெடுத்து உங்கள்  உதவி கோரி அணுகலாமா?''
''இல்லை. முடியாது '' என்று தலையசைத்தார்.
"நான் ஹிந்து ஸநாதன  தர்ம மதத்தில்  பொதுவான ஒரு  மடத்தின் தலைவன்.  ஜகத் குரு . எனது நேரம் எனக்கு சொந்தமில்லை.  உலக நன்மைக்காக மட்டுமே. ஆகவே  எனது காரியங்களுக்கே  எனது நேரம் போதவில்லை.   பல வருஷங்களாக நான் தினமும் மூன்று மணிகள் தான்  தூங்க முடிகிறது. நான் எப்படி   தனிப்பட்ட முறையில்  சிஷ்யர்களை ஏற்றுக் கொண்டு  குருவாக உதவ முடியும்? உலக மக்களுக்கு  வழிகாட்டும்  குரு ஒருவரை நீங்கள் அணுகவேண்டும்.
"ஐயா, ஐரோப்பாவில் நீங்கள் சொல்வது போல் குருமார்களை காண்பது அரிது. ''
புரிந்து கொண்டு தலையசைத்தார்.
"சத்யம்  உண்மை என்றும் இருக்கிறது. உங்களால்  கண்டுபிடிக்க இயலும் ''
"நீங்களே  அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த யோகி யான  குருவை எனக்கு அறிவிக்க முடியுமா?
சற்று மௌனம்.
"எனக்கு  தெரிந்து  ரெண்டு மஹான்கள் உடனே  ஞாபகத்துக்கு வருகிறார்கள்.  நீங்கள் தேடுவதை உணர்த்த அவர்களால் முடியும்.   ஒருவர் வடக்கே காசி க்ஷேத்ரத்தில் உள்ளவர்.  பெரிய மாளிகை போன்ற  இடத்தில்  உள்ளார்  வெகு சிலரே  அவரை அணுகமுடியும். இதுவரை  ஐரோப்பியர்கள் எவரும் அவரது தனிமையை  நாடியதில்லை.   அவரிடம் உங்களை அனுப்புகிறேன்.  அனால் அவர்  ஐரோப்பியர்களை  ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகம் தான். ''
''ரெண்டு பேர்  என்கிறீர்களே, இன்னொருவர்?''  என் ஆர்வம் கொதித்தது. அவசரம். அவசரம்.
''மற்றவர் இங்கிருந்து  தெற்கே சென்றால்  உள்ளடங்கிய ஒரு மலையில் இருப்பவர்.  சிறந்த உயர்ந்த ஞான குரு. அவரிடம் நீங்கள் செல்லவேண்டும் என்பது என்  கோரிக்கை''
''யார் அவர்?''
"அவரை  ''மஹரிஷி''  என்பார்கள்.   அருணாசலம்  எனும்  மலையில் வாசம்  செய்பவர். அருணாச்சலம் என்பது வட ஆற்காட்டில் உள்ள  ஒரு  ஞானச்சுடர் வீசும்  ஆன்மீக தெய்வீக க்ஷேத்ரம்.   அவரிடம் போக விருப்பமென்றால் வழி சொல்கிறேன்.'''
''மிக்க நன்றி குருநாதா. அவரை குருவாக ஏற்ற ஒருவர் அந்த பக்கத்துக்காரர் ஒருவர் எனக்கு ஏற்கனவே  தெரியும். ''
"ஓஹோ. அப்படியென்றால் நீங்கள்  அருணா சலம் செல்வீர்களா?''
''நிச்சயமில்லை.   நான் நாளை நான் தென்னிந் தியாவை விட்டு  செல்ல ஏற்பாடுகள் ஆகி விட்டது.''
"அப்படியென்றால்  நான் உங்களிடம்   ஒன்று கேட்கலாமா?'   'என்கிறார் மஹா பெரியவா பால் ப்ரண்டனிடம்.
''தாராளமாக ''
"மஹரிஷியைப்  பார்க்காமல்  தென்னிந்தி யாவை விட்டு செல்வதில்லை என்று எனக்கு வாக்கு கொடுங்கள்''
மஹா பெரியவா கண்களில் எனக்கு  உள்ளூர உதவும்  அன்பும் நேர்மையும் கொண்ட பார்வை எனக்கு பிடித்ததால் நான் ''அப்படியே செயகிறேன்'' என்று வாக்கு கொடுத்தேன்.
''சஞ்சலம் மனதில் வேண்டாம். நீங்கள் தேடு வதை நீங்கள் கண்டுபிடித்து அடையப் போகிறீர்கள்''
வாசலில் பக்தர்கள், தெருவில் போவோர் களின் குரல்  உள்ளே கேட்கிறது.
ஸ்ரீ சங்கராச்சார்யர்  அருகே இருந்தவரிடம்  காதில் ஏதோ சொல்கிறார்  '' ப்ரண்டன்''  என்ற என் பெயர் மட்டும் எனக்கு  விளங்குகிறது.  தெளிவாக கேட்கிறது.  
"என்னை நீங்கள் மறவாதீர்கள், நானும் உங்க ளை நினைவில் கொள்வேன்''  என்கிறார்
 இந்த  சுருக்கமான உரையுடன் எங்கள் சம்பாஷணை முடிகிறது.  பால்ய  வயதில் இருந்தே தனது வாழ்க்கையை கடவுளிடம் அர்ப்பணித்த  அந்த  அற்புத  புனிதரிடமிருந்து விடை பெற மனதில்லாமல்  வெளியேறு கிறேன்.  உலகத்தில் எந்த அதிகாரத்தையும்  தேடாத, விரும்பாத  ஒரு மதகுரு. முற்றும் துறந்த உண்மையான ஒரு துறவி. உலக சம்பந்தப்பட்ட எந்த பொருளை யார் கொடுத்தாலும் அதை உடனே அங்கேயே  தேவைப்பட்ட ,மற்றவர்களுக்கு  அளித்து விடும்  ஞானி.
ஆம் .  சத்யமாக அவர் சொன்னது போல் அவர் என் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டார்.
செங்கல்பட்டில் கொஞ்சம் சுற்றினேன். 
தொடரும்.





PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


60.  செங்கல்பட்டு விஜயம் 

1930ம் வருஷ  வ்யாஸ பூஜை  சாதுர்மாஸ்ய விரதம்  ரெண்டுமே  பூசமலைக் குப்பத்தில் நடந்தது.  அங்கே மடத்து யானைக்கு தீ விபத்து நேர்ந்து மஹா பெரியவா குணப்படுத்தி அழைத்து வந்தார் என்று பார்த்தோமல்லவா?.

அப்புறம்  மஹா பெரியவா காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை, வாலாஜாபாத், ஆற்காட்,
திருவள்ளூர் , பூந்தமல்லி, கோயம்பேடு ஆகியும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.    அந்த வருஷ கடைசியில் செங்கல்பட்டு பிரயாணம்.  அங்கிருந்து பக்ஷி தீர்த்தம்  என்கிற  திருக் கழுக்குன்றம்.செங்கல்பட்டு வரை வந்தாயிற்று.

திருக்கழுக்குன்றம் ஆலயம் பற்றி ஒரு சிறு குறிப்பு தருகிறேன்.   வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்). பக்தவசலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்).  மலை மேலிருக்கும் அம்பாள் பெயர் சொக்கநாயகி .  மலையடிவாரத்தில் இருக்கும் அம்பாள்: திரிபுரசுந்தரி .வாழை இங்கு ஸ்தல விருக்ஷம். சங்குத் தீர்த்தம். பக்ஷி தீர்த்தம் இரண்டும் தீர்த்தங்கள். 
மார்க்கண்டேயர்
, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார் தரிசித்த  பழம் பெரும் ஆலயம்.  வேதமே  மலையாக இருந்ததால் 'வேதகிரி ' எனப் பெயர். மற்ற பெயர்கள்  வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம்.

நான் இளம் வயதில் திருக்கழுக்குன்றத்தில்  மத்தியானம் உச்சி வேளையில்  ரெண்டு கழுகுகள் வந்து அர்ச்சகர் வைக்கும் பிரசாதத்தை சாப்பிடுவதை  பார்த்திருக்கிறேன்.  பிரசாத  பாத்திரத்தை  லொட்டு லொட்டு என்று கல்லின் மேல் தட்டுவார். அந்த சப்தத்தைக் கேட்டு  அந்த கழுகுகள் அவர் அருகே வந்து  அவர் அளிக்கும்  பிரசாதத்தை சாப்பிடும்.  

500 அடி உயர மலை.  கழுகுகள் வருவதால் கழுகு குன்றம்.  பக்ஷி தீர்த்தம்.  நாளடைவில் கழுக்குன்றம் ஆகி  கழுகும் இல்லாமல் ஆகிவிட்டது.

1930ம் வருஷம்  டிசம்பர் மாதம் 25. கிரிஸ்மஸ் அன்று  மஹா பெரியவா வேதகிரீஸ்வரரை
 தரிசித்தார்.   அகில இந்திய  சாதுக்கள் சங்கம் அவரை வரவேற்று உபசரித்தது.   அவர்கள் வரவேற்புரையை சொல்லிய வாசகம்  அவர்களுக்கு மஹா பெரியவா மேல் இருந்த  மதிப்பு மரியாதையை வெளிப்படுத்துகிறது.

“ ஜகத்குருநாதா,  இந்த  பாரத தேசத்தை உங்கள் ஞான தீப ஒளியால் பிரகாசிக்க செய்கிறீர்கள். ஆதி சங்கரரின்  எண்ணங்களை  செயலாக்குகிறீர்கள் . எங்கள் ஆத்மாவை  உணர்ந்து  மகிழச்  செய்கிறீர்கள்.  எங்கள்  புண்ய பலனாக  உங்களைப்போன்ற கருணை தெய்வம்,  சதகுருவாக
 அவதரித்து லோக க்ஷேமத்தை பரிபாலித்து வருகிறீர்கள்.

தங்களது திருப்பாதங்கள் பட்ட இடமெல்லாம் இந்த பூமியில்  புனிதம் பெறும் . ஆகவே தான் சென்ற இடமெல்லாம் உங்கள் பாதங்கள் பூஜை பெறுகின்றன.  அபிஷேகம் பெறுகிறது. அங்கெல்லாம் ஆத்மாக்கள்  மேன்மேலும்  சத் காரியங்களில்  ஈடுபட்டு லோக க்ஷேமம் வ்ருத்தி அடைகிறது.   இந்த மண்டபம் மஹா பெரியவா திருவடி பட்டு  மேலும்  புனிதமடைந்து  நற்பணியில் சிறக்கும். மஹாபெரியவாளைப் போன்ற ஞான சத்குரு  சத்தியத்தின் திருவுரு.தெய்வீகத்தை சனாதன தர்மத்தை ஒங்கச் செய்யும்  உபதேசம் செய்யும்  ஞானகுரு.
தங்கள் திருவடிகளுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.   அத்வைத உபதேசங்கள் பெற விழைகிறோம். எங்களை பேரானந்தம் பெறச்செய்யுங்கள். எங்கள் ஆத்மபலம் அதிகரிக்கட்டும். சரணம் சரணம்  ஜகத்குரு சங்கர பகவத் பாதா சரணம். ''

மஹா பெரியவா அவர்கள் அளித்த வரவேற்புரைஹ்யை ஏற்று  அந்த சாதுக்களுக்கு மோக்ஷ மார்க்கம் சித்திக்க  வழிமுறைகளை உபதேசித்தார்.  சென்ற இடத்திலெல்லாம்  மக்களுக்கு நல்வழி புகட்ட வேண்டும் என்ற அறிவுரை அளித்தார்.

1931ல்  மஹா பெரியவா செங்கல்பட்டுக்கு விஜயம் செய்தார்.   செங்கல்பட்டு வாசிகளுக்கு, முக்யமாக  பக்தர்களுக்கு  பெரியவா விஜயம் வரப்பிரசாதமாக அமைந்தது. வெகுகாலமாக காத்திருந்தவர்கள்.  ஒவ்வொருநாளும்  ஆயிரக்கணக்கானவர்கள், வயது ,ஜாதி மத வித்யாசம் இன்றி, சமூக அந்தஸ்து, பணகாரன் ஏழை பாகுபாடு இன்றி ஆண்  பெண் இருபாலரும்  மஹா பெரியவா தரிசனத்துக்குக் காத்திருந்து  அவரது அருளாசி பெற்றார்கள் .

ஒவ்வொரு இரவும்  மஹா பெரியவாவின் உபன்யாசம் நடைபெற்றபோது வெகு ஆர்வமாக மக்கள் வந்திருந்து பயனடைந்தனர்  என்று சொன்னால் மிகையாகாது.

தொடரும்  



Thursday, July 22, 2021

KONERI RJAPURAM

 ஒரு  அற்புத  நடராஜா  --    J  K   SIVAN


எத்தனையோ  நூற்றாண்டுகளுக்கு முன்  சோழ சாம்ராஜ்யத்தில்  எங்கும்  பக்தி பரவசமாக இருக்க காரணம். பெரிய பிராட்டி  பல  கோவில்களை புனருத்தாரணம் செய்வதில் இரவும் பகலும் ஈடுபட்டிருந்ததால்.  செம்பியன் மாதேவியை எனக்கு தெரிந்தது கல்கி  எழுதிய  பொன்னியின் செல்வன் மூலமாகத்தான் .

அவர் காலத்தில்  சோழநாட்டில்   அநேக சிவாலயங்களை செங்கல், காரை, சுண்ணாம்பு, மண்ணிலிருந்து காப்பாற்றி கற்றளியாக,  கருங்கல் கோவில்களாக  அற்புத சிற்பக் களஞ்சியங் களாக, பக்தி பெருகும்  கருவூலங்களாக மாற்றி அமைத்தார்.   பராமரிப்புக்காக  விளக்குகள் தினமும் எரிய, நித்ய பூஜைகள் நடக்க,   நிறைய   ஆடுகள், மானியங்கள், நிலங்கள்  நிவந்தங்கள் விட்டிருக்கிறாள்.  

அடடா   பெரிய பிராட்டியால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு, பிழைக்க வழி, பக்தியை எப்படி பரப்பி இருக்கிறாள்?   இவளை இருட்டடிப்பு செய்து விட்டிருக்கிறார்களே.  ஏன் தமிழ்  பாட புத்தகங்களில் பெரிய பிராட்டியைக்  காணோம்.

 கண்டராதித்த  ஏரி, வீராணம் ஏரி, செம்பியன் மாதேவி ஏரி என்று எவ்வளவு நீர்நிலைகளை ஸ்தாபித்திருக்கிறாள்.  எத்தனை ராஜாக்களை வளர்த்திருக்கிறாள். இன்று  ராஜராஜன் கட்டிய உலகப்புகழ் பெற்ற தஞ்சை   பெரிய கோவிலுக்கு யார் காரணம்? அவனை ஐந்து வயது முதல் வளர்த்த பாட்டி இவள் அல்லவா? குந்தவை தேவி  ராஜ்யதிகாரம் செலுத்து திறம்பட சோழ ராஜ்யத்தை நிர்வகிக்க யார் காரணம்? செம்பியன் மாதேவி எனும் பெரிய பிராட்டி தானே?    மூவேந்தர்கள்  சேர சோழ பாண்டியர்களில் பெரும் புகழ் பெற்று  ப்ரஸித்தமானவர்கள் சோழர்கள் என்பது  அவர்கள் விட்டுச்சென்ற செல்வங்கள், பக்தி, ஆளுமை, மக்கள் மேல் அன்பு  பொதுநல சேவைகள்

 ஆறு  ராஜாக்கள் அவளது  85 வயது வாழ்வில் வழி நடத்தியவன் செம்பியன் மா தேவி.   எவ்வளவு பெரிய  சக்தி தெய்வம்.  சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவி சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் குலத்தில் பிறந்து சோழ வம்சத்தில் புகுந்தவர்.  

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள செம்பியக்குடி  அவள் பிறந்த ஊர் என்பதால் அவள் பெயரை தாங்கி இன்றும் இருக்கிறது.  ஊர் மக்கள் 1000 கிலோவில் ஐம்பொன் சிலை செய்து மணிமண்டபம் கட்டி  கௌரவித்திருக்கிறார்கள்.   செம்பியன்மாதேவியை  நாம் எல்லோரும் மறந்த  குற்றவாளிகள்.  அவளது  மகத்தான சேவையை  அதிகாரத்தில் இருப்பவர்கள் என் மறந்து விட்டார்கள்?   அவள் எழுப்பிய   எத்தனையோ  கோவில்களுக்குச் செல்லக்  கூட நேரமின்றி  விருப்பமின்றி  உல வுகிறோம்.

செம்பியன் மாதேவி  வாழ்நாளில்  ஆண்ட சோழ மன்னர்கள். 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன்  ராஜராஜ சோழன்.

இத்தனை  ராஜாக்களும் எழுப்பிய  சிவாலயங்கள், செய்த தர்ம காரியங்களுக்கு பின் புலமாக இருந்த  தெய்வீக பெண்மணி  செம்பியன் மாதேவி என்ற சிவபக்தை.   காவிரியின் இரு மருங்கிலும் எண்ணற்ற சிவாலயங்கள் வைணவ ஆலயங்கள் தோன்ற, பராமரிக்கப்பட காரணம்  இந்த பெண்மணி. ஒரு சில கோவில்கள் உள்ள ஊர்கள் பெயரை மட்டும் சொல்கிறேன்  


திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
திருமணஞ்சேரி
தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)
திருக்கோடிக்காவல்
ஆதாங்கூர்
குத்தாலம்
திருவக்கரை
திருச்சேலூர்

ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று அதன் நிலையை கண்டறிந்து உடனே புணருத்தாரணம் செய்ய வழிவகுத்தவர். ஆலய திருப்பணிகளை நேரில் சென்று மேற்பார்வை பார்த்தவர்.
செம்பியன் மாதேவி வாழ்ந்த காலத்தில்  நூற்றுக்கணக்கான  மண், செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்ட பழைய  கோவில்கள் சிதிலமடைந்திருந்த நிலை கண்டு கண்ணீர் வடித்தாள்.  அவற்றை புதுப்பிக்கும் பணி யில் தன்னை அர்ப்பணித்தாள்.   மலைகளோ, கருங்கற்களோ  இல்லாத போதும்  கற் பாறைகளை களை கொணரச் செய்து  ஆயிரக்கணக்கான சிற்பிகளை ஊக்குவித்து,  எங்கும் உளி சத்தம் கேட்க செய்தவள். செப்புச்சிலைகள், ஐம்பொன் சிலைகள் சிறந்த வேலைப்பாடுகள்  கொண்ட கோவில்கள் அமைந்தன.  செப்பு பட்டயங்கள், கல்வெட்டுகளில் செயதிகளை பரப்பினாள் . நிவந்தங்கள் ஆலயங்களுக்கு கொடுக்கும் முறையை  உண்டாக்கினாள் . ஏரிகள் குளங்கள் அமைத்து நீர் பஞ்சம் இல்லாதபடி செய்தவள்.  இதற்கெல்லாம் படிப்பு அவசியமா?

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் சிவாலயம்.  சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டாள்.  இனி  திருநல்லத்தில் ஒரு காட்சிக்கு செல்வோம்:

திருநல்லத்தில் ஏக போகமாக அலங்காரம். காலை வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்தாலும் மரங்கள் சூழ்ந்த அந்த கிராமத்தில் வெயில் தெரியவில்லை. குளிர்ந்த காற்று வீசியது. கிராமத்தின் ஒரே பாதை முழுதும், வழியெல்லாம் தோரணங்கள் கட்டியிருந்தது. எங்கும் தென்னங்குருத்து மாவிலைகள், வாழைமரங்கள் கட்டி மலர் பந்தல் கோவில் கட்டும் இடம் வரை பரந்திருந்தது. நறுமணம் வீச அகில் புகை வளர்த்தார்கள். காற்றில் மணத்தது. வழியெங்கும் நீர் தெளித்து சுத்தமாக நடு வீடு போல காணப்பட்டது.

அழகுக்கு அழகு செய்வது போல் பெரிய மாக்கோலங்கள் பல பல வண்ணம் குழைத்து கண்ணை கவரும்படியாக பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு வரைந்திருந்தார்கள் . திருநல்லம் கிராம நுழைவாயிலில் மாவிலை தோரணம், வாழைமரம் கட்டி வரவேற்பு. ஊர் பிரமுகர்கள் கை கட்டி நின்றனர். கையில் பெரிய தாம்பாளங்களில் பழங்கள், வெற்றிலை பாக்கு இனிப்புகள், வாத்திய கோஷ்டி தங்கள் கைவரிசையை காட்டின. பெரிய பெரிய பாத்திரங்களில் பொறி கடலை, வெல்லம் நீர் மோர் பானகம் எல்லாம் வருவோர் போவோர்க்கெல்லாம் அளித்தனர்.
நாட்டிய பெண்கள் ஒரு ஓரத்தில் ''மதன காம ராஜன்'' தெருக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர். என்ன விசேஷம் இன்று?

'' நம்ம ஊர் கோவில்  புனருத்தாரணம் நடக்குது.  புதுசு பண்றாங்க , பெரிய ராணியம்மா வராங்க. அதோ வந்துவிட்டது பல்லக்கு''. அம்மா மஹாலக்ஷ்மி.  பார்த்தாலே  புண்யம்.   எல்லோர் விழியும் பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தது. சோழ பெரிய மஹாராணி, வரப்போகிறார் என்ற சேதி சில நாட்களுக்கு முன்பே காதில் விழுந்ததால் மக்கள் வெள்ளம். பெரிய மகாராணியை பார்த்தால் ஸ்ரீ லலிதாம்பிகையை பார்த்தது போல் என்பார்கள். எத்தனை கோவில்களுக்கு தான தர்மம். நிலம், விளக்குகள், அர்ச்சர்களுக்கு நிலம், மான்யம்... அடடா... பழங்கால காரை செங்கல் கோவில் எல்லாம் கல்லாக மாத்தறாங்க அந்த தெய்வம்.    இங்கே உமாமஹேஸ்வரர் கோவில் புதுசாவுது.     உள்ளே ராஜா கண்டரா தித்தர் சிலை சாமி கும்புடுறாப்புலே வைக்கிறாங்க.''

பல்லக்கு திரைச்சீலையை விலக்கி அந்த முதிய சோழ ராணி வெளியே பார்த்தாள் . அவள் எதிர்பார்த்த கோபுரம் அங்கே விரைவில் தோன்றப்  போகிறது. வேலைப் பாடுகள் நடந்து
 கொண்டிருந்தது. தனது கணவர் சிவபாதசேகரன் சிவபக்தி செல்வர் கண்டராதித்த தேவரின் நினைவாக அந்த ஆலயம் இருக்கும் ஊருக்கு கண்டராதித்த புரம் என்று பெயர் சூட்டப்போகிறார்.
ரெண்டு மூன்று முறை நடராஜர் சிலை வடித்தது திருப்தியாக இல்லை.சிற்பிக்கு அரசர் ஏற்கனவே கட்டளையிட்டு   விட்டார். இந்த முறை நடராஜர் சிற்பம் சரியாக அமையவில்லை யென்றால் அவன் உயிர் பலியாகும் . சிற்பி பயத்தில் பொறுப்பை ஏற்றோ, உபவாசம் இருந்து சிலை வடித்துக் கொண்டிருந்தான்.

கண்டராதித்த சோழன் திருத்தேவி , மாதேவடிகள் செம்பியன் மாதேவி தன் கணவர் நினைவாக இரு கோயில் கட்டினாள். குடமுழுக்கு நாளும் நிச்சயிக்கப்ப்ட்டு விட்டது.  எல்லா சிலைகளும் தயாரான நிலையில் நடராஜர் சில மட்டும் சரியாக அமையவில்லை. சிற்பி எப்படி செய்தும் தவரு நிகழ்ந்து கொண்டேயிருந்தது. ஒன்றும் புரியாமல் சிற்பி   நடராஜனை கண்களில் நீரோடு  கெஞ்சினான் .கவலையோடு முணுமுணுத்தான்  சிற்பி.

 ''நடேசா.  இது தான் என் கடைசி முயற்சி.   ஏன் என்னை சோதனை செய்கிறாய்.  எத்தனையோ முறை உன்னை சிலை வடித்திருக்கிறேனே .  இப்போது மட்டும் ஏன் இவ்வாறு நடக்கின்றது? உன்னுடைய திருவுருவம் மட்டும் ஏன் அமையமாட்டேன் என்கிறது. நான் என்ன பாபம் செய்தேன்   எப்படியாவது அரச தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்று . உன்னைத் திருப்திகரமாக  நான் வடிக்கவில்லையேல்  உன் பாதாரவிந்தங்களில் என்னை அழைத்துக்  கொள்.  அடுத்த பிறவியிலாவது   நான் உன்னை திருப்திகரமாக வடிக்க, அருள் புரிவாயப்பனே.''

தன்னுடைய  பக்தன் வேண்டுகோளை  பரமேஸ்வரன்  உபாதேவியுடன் திருநல்லம் எழுந்தருளினார். எவ்வாறு வந்தார்?,

 ஒரு புலையனாக, கையில் நான்கு வேதங்களையும் நாய்களாகப் பிடித்துக் கொண்டு அம்பாள் தலையில் கள் குடத்தை சுமந்தவாறு, ஸ்கந்தனை சிறு குழந்தையாக இடுப்பிலே ஏந்தி அஹ்ரகாரத்திலே வலம் வந்தார். தாகத்திற்காக வீடுதோறும் நீர் கேட்டார். கொடுப்பார் யாருமில்லை என்று சேக்கிழார்  சொல்கிறார்.

கோவில்  அருகே  ஒரு பட்டறையில்  கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம்   அந்த  கிழ தம்பதிகள்  வருகிறார்கள்.   அங்கே  சிற்பி தனது உயிரைப் பணயம் வைத்து  நடராஜர் சிலை வடிக் கிறான்.   வெயில் தஹிக்கிறது . பவளமல்லி மரங்கள் சூழ்ந்திருந்ததால் நிழல் தரையில் சூட்டை கொஞ்சம்  பொறுக்கும்படியாக பண்ணி கொண்டிருந்தது.  

பட்டறையில்  உலை  ஆக்கிரோஷமாக எரிந்து கொண்டிருந்தது.  பஞ்சலோகங்களை சரியான அளவில்  எடுத்து  காய்ச்சி வார்ப் படம் செய்யும் நேரத்தில்  அங்கே  வந்த கிழ தம்பதியர் வந்தது,  அவனோடு   பேச்சுக் கொடுப்பது சிற்பிக்கு  எரிச்சலைத்  தந்தது. .

''யார் நீங்கள், என்ன வேண்டும் இங்கே ? முக்கிய ராஜ காரியம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் உங்களோடு நேரம் ஒதுக்க முடியாது. வந்த விஷயம் சொல்லுங்கள் ?''   கோபமாக கத்தினான்.
 தான் சிற்பி.

''திரு நல்லம் க்ஷேத்ர தரிசனம் வந்தோம். களைப்பாக இருந்தது இங்கே கொஞ்சம் நேரம் அமர வந்தோம். நீ தான் நடராஜா சிலை வடிக்கிறாயாமே அதை பார்க்க வந்தோம்.

''ஐயா பெரியவரே, தொண தொணவென்று  கொஞ்ச நேரம்   பேசாமல் இருக்கிறீர்களா, இப்போது தான் வார்ப்படம் தயாராகிறது. இப்போது நடராஜர் சிலையை  நீங்கள்   பார்க்க  முடியாது. சென்று அப்புறம் வாருங்கள். கோவிலில்   விக்ரஹம் வைத்தபிறகு போய்  தரிசனம் பண்ணுங்கள்  போங்கள் இங்கிருந்து உடனே.''

ஓ அப்படியா. ஏனோ நீ எங்கள் மேல் கோபமாக இருக்கிறாய்.  நடராஜா இருந்தால் பார்க்கலாமே என்ற ஆசையால் கேட்டோம்.  ஐயா,  எங்களுக்கு இந்த வெயிலில்    தாகமாக இருக்கிறதே கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருவாயா மகனே? கால் நீட்டி சற்று உட்காருகிறோம்'' முதியவர் சொன்னார்.

சிற்பிக்கு எரிச்சல் உச்சகட்டத்துக்கு சென்றது. '' இங்கே  எல்லாம்  நீங்கள்  உட்காரமுடியாது. எழுந்திருந்து செல்லுங்கள்.''

'' சரியப்பா  போகிறோம்.  தாகமாக இருக்கிறது,   கொஞ்சம்   தண்ணீர் கொடேனப்பா''

''ஆமாம்,   இங்கே தண்ணீர்ப்பந்தல் வைத்திருக்கிறேன் வருவோர் போவோர்க்கு உபசாரம் செய்ய. வேண்டுமானால் இதோ கொதிக்கிறதே உலோக குழம்பு அது நிறைய இருக்கிறது, தாகம் தீர தாராளமாக எடுத்து குடியுங்கள்.''

 கோபத்தோடு சொல்லிவிட்டு சிற்பி எழுந்து அவர்களுக்கு தண்ணீர் கொண்டுவர  பின் பக்கம் குடிசைக்குப்  போனான்.  அங்கே பானையில் குளிர்ந்த நீர் வைத்திருந்தான்.

''ஆஹா சரியப்பா, நீ சொல்கிறபடியே செயகிறோம். நீ ரொம்ப நல்லவன்.'' என்கிறார்கள் இருவரும்.

சிற்பி தண்ணீர் சொம்புடன் திரும்பி வந்தபோது அந்த கொதிக்கும் அத்தனை  பஞ்சலோக குழம்பையம். உலை  அணைந்திருந்தது.   தம்பதியை காணோம்.  அந்த முதியவர் கிழவி இருவரும் இருந்த இடத்தில் நடராஜர் அம்பாள் சிலைகள் தான் இருந்தது. அவர்கள் அந்த உலோக குழம்பை அவன் சொல்லியபடி குடித்து சிலையாகி விட்டார்களா????

 பரபரவென்று  நடராஜர்  சிலை தானாகவே  உருவாகியது பற்றிய செயதி பரவி விட்டது.  யார்  அந்த கிழ தம்பதியர். எங்கே போனார்கள்? இந்த நடராஜர்  ஸ்வயம்பு நடராஜர்.  சிதம்பரம் நடராஜரை விட பெரியவர்.

இந்த செய்தி அரண்மனைக்கு எட்டிவிட்டது  மேலே  சொன்ன  பெரிய மஹாராணி செம்பியன் மாதேவி இதை பார்க்க தான்  நேரே வந்துவிட்டார்கள் திரு நல்லம் க்ஷேத்ரத்துக்கு.  

கும்பகோணம் அருகில் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரன் ஆலயத்தில் அற்புதமான நடராஜனின் கதை மேலே சொன்னேன். அவன் அழகைப் பார்த்து வியந்தேன்.

பெரிய சிவன் கோயில் என்று அழைக்கப்படும் உமாமஹேஸ்வரர் ஆலயத்திற்கு வட மேற்கே ஊரின் ஆரம்பத்திலேயே ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. எஸ். புதூரிலிருந்து லிருந்து கொடியமங்கலம் வழியாக கோனேரி ராஜபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது .  அங்கே  சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆகி  கைலாசநாதர்  தரிசனம் தருகிறார்.

திருநல்லம் என்பது  பழைய  புராணப்பெயர்.  பிற்காலத்தில் சோழமன்னனின்  தளபதி ஒருத்தன்  கோனேரி ராஜன் இந்த ஊர் நிர்வாக  பொறுப்பேற்றான்.உமாமஹேஸ்வரர் ஆலயத்தை புதுப்பித்து நிறைய தான தர்மங்கள் அளித்து   திருநல்லம்  என்பதை   தனது பெயரில் கோனேரி  ராஜபுரம் ஆக்கினான்.  

உமாமஹேஸ்வரர் ஆலயம் பெரிதாக சோழ மஹாராணி செம்பியன் மாதேவியால் புனருத்தாரணம் செய்யப்பட்டு கற்றளி ஆலயமாகி பின்னர் பல அரசர்களால் பராமரிக்கப்பட்டு பெரிய கோவிலாக இன்று நமக்கு காட்சி தருகிறது. அந்த கோவிலை சுற்றி ஒரு சில பழைய கோவில்கள் இருந்தன

ஆலயத்தை சுற்றிலும் பச்சை பசேல் என வயல்கள் . அமைதியான கிராம சூழ்நிலை. கோனேரி ராஜபுரம் 18 வாத்திமா கிராமங்களில் ஒன்று. 200 க்கும் மேல் பட்ட பிராமண குடும்பங்கள் வாழ்ந்த வசித்த ஊர். ஏழு அக்ரஹாரங்களை கொண்டது. கோவில் மடவிளாகம் உமா மஹேஸ்வரர் ஆலயத்தை ஒட்டி இருந்தது. அங்கே கோவிலை தனி அக்ரஹாரமாக குருக்கள் மற்றும் பாரிஜாக்கர்கள் பரிஜாரகர்கள் வசித்தனர். கால ஓட்டத்தில் பிழைப்பை தேடி நிறைய பேர் புலம் பெயர்ந்த காரணத்தால் கோவில்களும் அதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குடும்பங்கள் மட்டுமே எஞ்சியவை.

கோனேரி ராஜபுரம் பூரா  ஒரு காலத்தில் சாம வேதக்காரர்கள். 1950 களில் ஸ்ரீ மஹா பெரியவா கும்பகோணத்தில் முகாம் இருந்த காலத்தில் இங்கு வந்து அநேகமாக எல்லா வீடுகளிலும் தங்கி ஆசிர்வதித்து உள்ளார். உமா மகேஸ்வர கோயில் ஸ்தல வ்ருக்ஷம் அரசமரம். குளக்கரையில் பலி பீடமும் மஹா வில்வ மரமும் உள்ளன.







SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 

31 வது தசகம் 


31. மஹாபலி சிரஞ்சீவியானான்.






ஸ்ரீமந் நாராயணீயம்  எத்தனையோ உன்னத  விஷயங்களை தனக்குள் கொண்ட ஒரு புண்ய ஸ்தோத்ரம்.  அதில் இல்லாத வேதாந்த கருத்துக்கள் கிடையாது.  கை மேல் பலனளிக்கும் ஒரு மருந்து.  எண்ணற்ற  ஹிந்து பக்தர்கள் இதை  அறிந்ததால்   இன்றும்  தனித்தோ கூட்டாகவோ  பாராயணங்கள் நடைபெற்று வருகிறது.   நாராயணீயம் சர்வ வியாதி, சகல ரோக நிவாரணி.

முற்றிய  புற்று  நோயால் வாடிய ஒரு பெண்மணி மஹா பெரியவரை காஞ்சி மடத்தில் கண்டு  தனது துன்பத்தை  குறைகளை சொல்லி அழுதார்.  

''நீ  நாராயணீய  பாராயணம் பண்ணு  சரியாயிடும்.  நாராயணன்  பார்த்துப் பார்''.   அது தான் மஹா பெரியவா உபதேசம். அவள் அப்படியே பக்தி ஸ்ரத்தையாக  பாராயணம் செய்த பலன்  புற்றுநோய் காணாமல் போய்விட்டது.     நாம் வாழ்வதே  கடவுள் நம்பிக்கையில் தான்.

 प्रीत्या दैत्यस्तव तनुमह:प्रेक्षणात् सर्वथाऽपि
त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद ।
मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं
वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥

priityaa daityastava tanumahaH prekshaNaat sarvathaa(a)pi
tvaamaaraadhyannajita rachayanna~njaliM sa~njagaada |
mattaH kiM te samabhilaShitaM viprasuunO vada tvaM
vyaktaM bhaktaM bhavanamavaniiM vaa(a)pi sarvaM pradaasye || 1

ப்ரீத்யா தை³த்யஸ்தவ தனுமஹ꞉ப்ரேக்ஷணாத்ஸர்வதா²(அ)பி
த்வாமாராத்⁴யன்னஜித ரசயன்னஞ்ஜலிம் ஸஞ்ஜகா³த³ |
மத்த꞉ கிம் தே ஸமபி⁴லஷிதம் விப்ரஸூனோ வத³ த்வம்
வித்தம் ப⁴க்தம் ப⁴வனமவனீம் வாபி ஸர்வம் ப்ரதா³ஸ்யே || 31-1 ||
[** பாட²பே⁴த³꞉ – வ்யக்தம் ப⁴க்தம் பு⁴வனமவனீம் **]

குருவாயூரப்பா,  நீ   குட்டியூண்டு  ப்ராமண பிரம்மச்சாரியாக ஒளி  வீசி நின்றதைப் பார்த்த மஹாபலி சக்கரவர்த்தி   ரொம்ப ஆனந்தமடைந்தான்.  உன்னை ஒரு குட்டி தெய்வமாக எதிரில் கண்டான்.  இரு கை  கூப்பி குனிந்து உன் முகத்தருகே முகம் வைத்து  '' ப்ரம்மச்சாரியே,   உனக்கு என்னப்பா  வேண்டும். கேள். வீடு வாசல் வேண்டுமா, ஆகாராதிகள் வேண்டுமா, பணம் காசு வேண்டுமா,  வஸ்திரங்கள் வேண்டுமா,   யானை குதிரை பசு  வேண்டுமா,  நீ எதை வேண்டுமானாலும் கேள். அவற்றை தந்து உன்னை திருப்தி படுத்துகிறேன்.''  என்றான் வாமனனாக வந்த உன்னிடம்.

तामीक्षणां बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ-
प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् ।
भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं
सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥

taamakshiiNaaM baligiramupaakarNya kaaruNyapuurNO-
(a)pyasyOtsekaM shamayitumanaa daityavamshaM prashamsan |
bhuumiM paadatrayaparimitaaM praarthayaamaasitha tvaM
sarvaM dehiiti tu nigadite kasya haasyaM na vaa syaat || 2

தாமக்ஷீணாம் ப³லிகி³ரமுபாகர்ண்ய காருண்யபூர்ணோ(அ)-
ப்யஸ்யோத்ஸேகம் ஶமயிதுமனா தை³த்யவம்ஶம் ப்ரஶம்ஸன் |
பூ⁴மிம் பாத³த்ரயபரிமிதாம் ப்ரார்த²யாமாஸித² த்வம்
ஸர்வம் தே³ஹீதி து நிக³தி³தே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் || 31-2 ||

நாராயணா, உனக்கு சிரிப்பு வந்ததா அப்போது?  பார்க்குமிடமெங்கும் நிறைந்த உன்னிடம், எல்லாவற்றையும் உருவாக்கிய உன்னிடமே உனக்கு எது வேண்டும் '' நான் தருகிறேன்'' என்கிறான் மஹா பலி . அவன் அவ்வளவு செல்வந்தனா?  நீ காருண்யமூர்த்தி அல்லவா?   அவன் கர்வத்தை ஆணவத்தை அடக்க  அல்லவோ வந்தவன்.   நடித்தாய்.  

'' ஆஹா,   எவ்வளவு பெரிய மனசு உங்களுக்கு மஹாராஜா, உங்கள் வம்சமே  கொடுத்து சிவந்த கரங்கள் கொண்டது.  எனக்கு  எதுவுமே வேண்டாம் ராஜா,  மூன்றே மூன்று  என் காலடி  அளவு  மண்  தந்தாயானால் அதுவே போதும்'' என்கிறாய்.  நீ  இவ்வளவு நிலம் கொடு, அவ்வளவு நிலம் கொடு என்று  யாசித்தால்  எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிக்கமாட்டார்களா கிருஷ்ணா "?

विश्वेशं मां त्रिपदमिह किं याचसे बालिशस्त्वं
सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् ।
यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षम: क्षेपवादान्
बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै ॥३॥

vishveshaM maaM tripadamiha kiM yaachase baalishastvaM
sarvaaM bhuumiM vR^iNu kimamunetyaalapattvaaM sa dR^ipyan |
yasmaaddarpaat tripadaparipuurtyakshamaH kshepavaadaan
bandhaM chaasaavagamadatadarhO(a)pi gaaDhOpashaantyai || 3

விஶ்வேஶம் மாம் த்ரிபத³மிஹ கிம் யாசஸே பா³லிஶஸ்த்வம்
ஸர்வாம் பூ⁴மிம் வ்ருணு கிமமுனேத்யாலபத்த்வாம் ஸ த்³ருப்யன் |
யஸ்மாத்³த³ர்பாத்த்ரிபத³பரிபூர்த்யக்ஷம꞉ க்ஷேபவாதா³ன்
ப³ந்த⁴ம் சாஸாவக³மத³தத³ர்ஹோ(அ)பி கா³டோ⁴பஶாந்த்யை || 31-3 ||

மஹாபலி  ''ஹா ஹா''   என்று அட்டகாசமாக சிரித்தான்.  
''என்ன குட்டி ப்ராமணரே , இப்படி இருக்கிறீர்?  என்னிடம் வந்து  யாசிக்கும்போது  வெறும் மூன்று அடி  மண்ணா  கேட்பது?  நான் இந்த  மூவுலகத்துக்கும்  அதிபதி, என்னிடம் என்ன கேட்க வேண்டும் என்று கூட தெரியாதவராக   எதையோ  யாசிக்கிறீரே?   ஆள் தான் பார்த்தால்  குழந்தையாக இருக்கிறீர் என்றால்  உமது  எண்ணங்களும் குழந்தைத் தனமாக இருக்கிறதே!'  என் அந்தஸ்துக்கு ஏற்றபடி  இந்த உலகையே கேளும்,    தருகிறேன்'',  என்று பெருமிதத்தால்  பேசினான்.  இந்த பெருமிதம் தான் அவனால்   நீ கேட்ட மூன்றடி மண் கூட கொடுக்க முடியாமல் செய்து விட்டது.  அவனைச் சிறைப்பட வைத்தது.

पादत्रय्या यदि न मुदितो विष्टपैर्नापि तुष्ये-
दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् ।
दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिन: प्रेरणात्तं
मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे ॥४॥

paadatrayyaa yadi na muditO viShTapairnaapi tuShyedityukte(
a)smin varada bhavate daatukaame(a)tha tOyam |
daityaachaaryastava khalu pariikshaarthinaH preraNaattaM
maa maa deyaM harirayamiti vyaktamevaababhaaShe|| 4

பாத³த்ரய்யா யதி³ ந முதி³தோ விஷ்டபைர்னாபி துஷ்யே-
தி³த்யுக்தே(அ)ஸ்மின்வரத³ ப⁴வதே தா³துகாமே(அ)த² தோயம் |
தை³த்யாசார்யஸ்தவ க²லு பரீக்ஷார்தி²ன꞉ ப்ரேரணாத்தம்
மா மா தே³யம் ஹரிரயமிதி வ்யக்தமேவாப³பா⁴ஷே || 31-4 ||

குருவாயூரப்பா, நீ  வாமனனாக அப்போது மஹாபலிக்கு கொடுத்த பதில் உனக்கு நினைவிருக் கிறதா?  உன்னருளால் எனக்கு  ஞாபகம் இருக்கிறது? சொல்கிறேன் கேள். 

''அரசே, ரொம்ப சந்தோஷம் உங்கள் தாராள மனதுக்கு.  நான் மகிழ்கிறேன்.  ஆனால் ஒரு மூன்றடி மண்ணிலேயே  திருப்தி அடையாமல் ஒருவன் நீங்கள் கொடுக்கும்  இந்த பூமியையே  தானமாக பெற்றால்  அதால்  திருப்தியா அடையப்போகிறான்?  ஆசைக்கு அளவேது சுவாமி ?
 பிரபஞ்சமே பெற்றாலும் அப்பவும் ஏதாவது ஒரு தேவை அவனுக்கு  இருந்து கொண்டு தான் இருக்கும்.'' 

மஹாபலி  ''ஆமாம். வாஸ்தவம் '' என்று தலையசைத்தான்.  நீ கேட்ட  மூன்றடி மண்ணை தானமாகத் தருவதற்கு தீர்த்த  பாத்திரம் எடுத்தான். தாரை வார்த்து தருவது இது தான்.  நீ அப்போது  ஒரு நாடகம் ஆடினாயே  நினைவிருக்கிறதா?. 

நீ  மஹாபலியை  சோதிக்க விரும்பினாய். அவன் பெருமையை உலகுக்கு காட்ட விரும்பினாய்.  ஆகவே அருகே நின்ற  அசுரகுரு சுக்ராச்சாரியார் மனதில் ஒரு எண்ணத்தை விதைத்தாய். அது வேலை செய்தது.   சுக்ராச்சாரியார்  குறுக்கிட்டு  

''அரசே,கொடுக்காதீர்கள், கொடுக்காதீர்கள், வேண்டாம் . இந்த  ப்ராமண சிறுவன்  சாதாரணன் அல்ல,  ஸ்ரீமன் நாராயணன், மஹா விஷ்ணு , எல்லாவற்றையுமே  எடுத்துச் சென்றுவிடுபவன் '' என்று  சொல்லி   மஹாபலியை தடுக்க வைத்தாய்.

याचत्येवं यदि स भगवान् पूर्णकामोऽस्मि सोऽहं
दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्य: ।
विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं
चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम् ॥५॥

yaachatyevaM yadi sa bhagavaan puurNakaamO(a)smi sO(a)haM
daasyaamyeva sthiramiti vadan kaavyashaptO(a)pi daityaH |
vindhyaavalyaa nijadayitayaa dattapaadyaaya tubhyaM
chitraM chitraM sakalamapi saH praarpayattOyapuurvam || 5

யாசத்யேவம் யதி³ ஸ ப⁴க³வான்பூர்ணகாமோ(அ)ஸ்மி ஸோ(அ)ஹம்
தா³ஸ்யாம்யேவ ஸ்தி²ரமிதி வத³ன் காவ்யஶப்தோ(அ)பி தை³த்ய꞉ |
விந்த்⁴யாவல்யா நிஜத³யிதயா த³த்தபாத்³யாய துப்⁴யம்
சித்ரம் சித்ரம் ஸகலமபி ஸ ப்ரார்பயத்தோயபூர்வம் || 31-5 ||

குருவாயூரப்பா,  மஹாபலி இன்றும் சிரஞ்சிவியாக ஏன் இருக்கிறான் தெரியுமா?  அவன் குணத்தால்.  நேர்மையால்.     சுக்ராச்சாரியார் தடுத்தும்  மஹாபலி என்ன சொன்னான்?

''குருநாதா,  நீங்கள் சொல்வது போல் இந்த சிறுவன்  மஹா விஷ்ணுவாக இருந்தால் அது எனக்கு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ தராது.  பெருமையைத்  தான் தரும்.   மஹா விஷ்ணுவே என்னிடம் வந்து யாசகம் கேட்டார் என்ற அளவுக்கு எனக்கு சந்தோஷத்தை தரும்.  கேட்டவருக்கு கேட்டதெல்லாம் தந்தான் மஹாபலி என்ற பெருமை தரும். 

 மஹாபலிஇடம்   தீர்த்த பாத்திரத்தை அவன் மனைவி  விந்த்யாவளி  எடுத்து அவன் கையில் தீர்த்தம் விட்டாள் .  மஹாபலி உனக்கு  நீ கேட்ட  மூன்றடி மண் எடுத்துக் கொள்  என்று தாரை வார்த்தான் . அப்போது ஆச்சரயமாக நடந்த விஷயத்தை  சொல்லட்டுமா?

निस्सन्देहं दितिकुलपतौ त्वय्यशेषार्पणं तद्-
व्यातन्वाने मुमुचु:-ऋषय: सामरा: पुष्पवर्षम् ।
दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा-
मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम् ॥६॥

nissandehaM ditikulapatau tvayyasheShaarpaNaM tat
vyaatanvaane mumuchurR^IShayaH saamaraaH puShpavarSham |
divyaM ruupaM tava cha tadidaM pashyataaM vishvabhaajaamuchchairuchchairavR^
idhadavadhiikR^itya vishvaaNDabhaaNDam || 6

நிஸ்ஸந்தே³ஹம் தி³திகுலபதௌ த்வய்யஶேஷார்பணம் தத்³-
வ்யாதன்வானே முமுசுர்ருஷய꞉ ஸாமரா꞉ புஷ்பவர்ஷம் |
தி³வ்யம் ரூபம் தவ ச ததி³த³ம் பஶ்யதாம் விஶ்வபா⁴ஜா-
முச்சைருச்சைரவ்ருத⁴த³வதீ⁴க்ருத்ய விஶ்வாண்ட³பா⁴ண்ட³ம் || 31-6 ||

குருவாயூரப்பா,   விண்ணவர்கள் யாவரும்  மலர் மாரி  பொழிந்தார்கள்.  மஹாபலியை  பாராட்டி னார்கள்.  தன்னிடமிருந்ததை எல்லாம்  தானம் செய்துவிட்டானே.   எல்லோரும் பிரமிக்க நீ  ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  வளர்ந்தாய். 

त्वत्पादाग्रं निजपदगतं पुण्डरीकोद्भवोऽसौ
कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् ।
हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन्
भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली ॥७॥

tvatpaadaagraM nijapadagataM puNDariikOdbhavO(a)sau
kuNDiitOyairasichadapunaadyajjalaM vishvalOkaan |
harShOtkarShaat subahu nanR^ite khecharairutsave(a)smin
bheriinnighnan bhuvanamacharajjaambavaan bhaktishaalii || 7

த்வத்பாதா³க்³ரம் நிஜபத³க³தம் புண்ட³ரீகோத்³ப⁴வோ(அ)ஸௌ
குண்டீ³தோயைரஸிசத³புனாத்³யஜ்ஜலம் விஶ்வலோகான் |
ஹர்ஷோத்கர்ஷாத்ஸுப³ஹு நன்ருதே கே²சரைருத்ஸவே(அ)ஸ்மின்
பே⁴ரீம் நிக்⁴னன் பு⁴வனமசரஜ்ஜாம்ப³வான் ப⁴க்திஶாலீ || 31-7 ||

ப்ரம்ம லோகத்தில்  விண்ணை அளந்த உன் ஒரு  பாதம்  தெரிந்தது.  ப்ரம்மா அதற்கு  பாத பூஜை செய்தார்.  அந்த  பாதாபிஷேக ஜலம் பிரபஞ்சத்தை தூய்மைப் படுத்தியது. பூமியில் கங்கையாக ஓடியது. தேவர்கள் கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் எல்லோரும்  ஆடினார்கள் பாடினார்கள்.    உன் பக்தன் ஜாம்பவான்  பக்தியில் பாடிக்கொண்டு   ஆனந்தமாக  ஆடிக்கொண்டு உலகைச் சுற்றி வந்தான்.

तावद्दैत्यास्त्वनुमतिमृते भर्तुरारब्धयुद्धा
देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् ।
कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिता: स्म:
किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पातालमापु: ॥८॥

taavaddaityaastvanumatimR^ite bharturaarabdhayuddhaaH
devOpetairbhavadanucharaissangataa bhangamaapan |
kaalaatmaa(a)yaM vasati puratO yadvashaat praagjitaaH smaH
kiM vO yuddhairiti baligiraa te(a)tha paataalamaapuH || 8

தாவத்³தை³த்யாஸ்த்வனுமதிம்ருதே ப⁴ர்துராரப்³த⁴யுத்³தா⁴
தே³வோபேதைர்ப⁴வத³னுசரைஸ்ஸங்க³தா ப⁴ங்க³மாபன் |
காலாத்மாயம் வஸதி புரதோ யத்³வஶாத்ப்ராக்³ஜிதா꞉ ஸ்ம꞉
கிம் வோ யுத்³தை⁴ரிதி ப³லிகி³ரா தே(அ)த² பாதாலமாபு꞉ || 31-8 ||

அசுரர்கள் இதை  ஏற்பார்களா,  கோபத்தோடு, அவர்கள் தலைவன் மஹாபலி இல்லாமலேயே  தேவர்களோடு போரிட்டார்கள். தோல்வியடைந்தார்கள்.   அசுரர்களுக்கு நீ கால தேவன், காலாத்மா, என்று  உணர்த்தினாய்.  இது வரை அவர்கள் வென்றதே உன் கருணையால் என்று புரியவைத்தாய்.  எல்லோரையும்  பாதாளத்திற்கு அனுப்பி வைத்தாய். 

पाशैर्बद्धं पतगपतिना दैत्यमुच्चैरवादी-
स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि ।
पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं
प्रह्लाद्स्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम् ॥९॥

paashairbaddhaM patagapatinaa daityamuchchairavaadii
staarttiiyiikaM disha mama padaM kiM na vishveshvarO(a)si |
paadaM muurdhni praNaya bhagavannityakampaM vadantaM
prahlaadastaM svayamupagatO maanayannastaviittvaam || 9

பாஶைர்ப³த்³த⁴ம் பதக³பதினா தை³த்யமுச்சைரவாதீ³-
ஸ்தார்தீயீகம் தி³ஶ மம பத³ம் கிம் ந விஶ்வேஶ்வரோ(அ)ஸி |
பாத³ம் மூர்த்⁴னி ப்ரணய ப⁴க³வன்னித்யகம்பம் வத³ந்தம்
ப்ரஹ்லாத³ஸ்தம் ஸ்வயமுபக³தோ மானயன்னஸ்தவீத்த்வாம் || 31-9 ||

நாராயணா,  வாதபுரீஸ்வரா,  இந்த மூவுலகும்  ஈரடியால் அழிந்துவிட்ட நீ,   சகலமும் இழந்த  மஹாபலியை எதிரே  வருணன்கயிற்றால் கட்டி அடிமையாக  நிற்கவைக்க,   ''மஹாபலி,  நீ 
மூன்று உலகுக்கும் அதிபதி என்கிறாயே,  ஈரடியில் எல்லாமே அடங்கியபின் நான் கேட்ட மூன்றாவது அடி  மண் எங்கே,  கொடு? '' என்று கேட்டாய்.

ப்ரபோ,  நான்  எல்லாம் இழந்தவன். நான் மட்டுமே இருக்கிறேன். என் சிரத்தை மூன்றாவது அடியாக பாவித்து ஏற்றுக்கொள்ளும்படி  கெஞ்சுகிறேன்''என்றான்.  அவனருகே  பிரஹலாதன் நின்று கொண்டிருந்தான். அவன்  உன் பக்தன் அல்லவா?  மனதார  உன்னை பிரார்த்தித்தான்.

दर्पोच्छित्त्यै विहितमखिलं दैत्य सिद्धोऽसि पुण्यै-
र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् ।
मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं
विप्रैस्सन्तानितमखवर: पाहि वातालयेश ॥१०॥

darpOchChittyai vihitamakhilaM daitya siddhO(a)si puNyairlOkaste(
a)stu tridivavijayii vaasavatvaM cha pashchaat |
matsaayujyaM bhaja cha punarityanvagR^ihNaabaliM taM
vipraissantaanitamakhavaraH paahi vaataalayesha ||10

த³ர்போச்சி²த்த்யை விஹிதமகி²லம் தை³த்ய ஸித்³தோ⁴(அ)ஸி புண்யை-
ர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி³வவிஜயீ வாஸவத்வம் ச பஶ்சாத் |
மத்ஸாயுஜ்யம் ப⁴ஜ ச புனரித்யன்வக்³ருஹ்ணா ப³லிம் தம்
விப்ரைஸ்ஸந்தானிதமக²வர꞉ பாஹி வாதாலயேஶ || 31-10 ||

கிருஷ்ணா,  நீ  மஹாபலியிடம்  அப்போது     'மஹாபலி,   நான் இப்படி செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா?  உன் கர்வம், ஆணவம் அடங்குவதற்கு.  அஹங்காரம்  எவரையும்  அழித்துவிடும் என்று உணர்த்துவதற்கு.  நீ  நல்லவன். அசுரர்களின் அதிபதி.  எத்தனையோ  நற் காரியங்கள் செய்தவன். வேண்டியதை எல்லாம் அதனால் அடைந்தவன்.  உனக்கு   விண்ணுலகை விட, ஒரு சிறந்த பெரிய  உலகம் அமைக்கிறேன்.  அதை நீ ஆண்டு கொண்டு சுகமாக இரு.   தக்க நேரம் வந்தபோது நீ என்னை வந்தடைவாய்.

என்னப்பா, எண்ட  குருவாயூரப்பா, நீ இவ்வாறு மஹாபலியின் அஸ்வமேத யாகத்தை சிறப்பாக நிறைவேற்றி கொடுத்து  சிறந்த தானங்கள் தர செய்தாய்.  இதற்கு சுக்ராச்சாரியார் போன்ற வர்களை ஈடுபடுத்தினாய். உலகுக்கு  மஹாபலியின்  பெருமையை உணர்த்தினாய்.  என் நோயை தீர்த்து என்னையும்  ரக்ஷிக்கவேண்டாமா?

தொடரும் 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...