Monday, July 19, 2021

GEETHANJALI


 கீதாஞ்சலி   - நங்கநல்லூர்  J K  SIVAN --

தாகூர்

91.   மணமும்  மரணமும்

91.  O thou the last fulfilment of life, Death, my death, come and whisper to me!
Day after day I have kept watch for thee; for thee have I borne the joys and pangs of life.
All that I am, that I have, that I hope and all my love have ever flowed towards thee in depth of secrecy. One final glance from thine eyes and my life will be ever thine own.
The flowers have been woven and the garland is ready for the bridegroom. After the wedding the bride shall leave her home and meet her lord alone in the solitude of night.


கிருஷ்ணா,  உன்  உபதேசங்கள்  எப்போதுமே  கஷ்டங்கள் அனுபவித்து, வாழ்க்கையில் அனுபவம் மேலிட்ட பிறகு தான் நிறைய பேருக்கு புரிகிறது. நானும் ஒருவன் தான் அந்த கூட்டத்தில்.

தாகூரின் இந்த சிறிய  கவிதையில் அவர்  மரணதேவனை அழைத்து பேசுகிறார்.
''காலமே  வா, காலதேவா வந்து என் காதில் கிசு கிசுவென்று  ரகசியமாக பேசு.
வாழ்க்கையில்  எது எதிர்பார்த்தபடி நடந்தாலும், எதிர்பாராமலேயே நடந்தாலும், சுகமும் துக்கமும் அனுபவித்தபின்  எல்லா செயல்களின் மொத்த  விளைவு, சொத்து, சுகம் , பேர் ,புகழ் எது நான் சம்பாதித்தாலும் கடைசியில் அது எல்லாம் சேர்வது உன்னிடம் தான்.  நான் தான் எல்லாவற்றையும் துறந்து விடுவேனே. விருப்பப்பட்டாலும் அவை எனதல்லவே.
நீ வருவதை முன் கூட்டி சொல்லும் விருந்தாளி அல்ல.  எதிர்பாராமல் வருவனும் அல்ல.   உன்னை  ஏனோ எவரும் எதிர்பார்ப்பதும் அல்ல. 
எனக்கு தெரியும் நீ கண்டிப்பாக ஒருநாள் வருபவன். உன் வரவை நான் கண்காணித்து வருபவன். ஏற்கனவே சொன்னேனே. நான் அனுபவித்த சுகம் துக்கம் எல்லாம் கடைசியில் உன்னை சந்திக்கவே.   '' உனக்காக  எல்லாம்  உனக்காக''   என்று ஒரு பாட்டு சின்னவயதில் பாடியவன்.
அப்போது அர்த்தம் புரியவில்லை.
உலகத்தில் எல்லோருடைய  ரஹஸ்ய சொத்துக்களுக்கும் நீ தான் அதிகாரி. என் எண்ணம், மனக்கோட்டை, காதல்,   நம்பிக்கை,  எதிர்பார்ப்பு  சகலமும் உன்னிடம் அல்லவரோ வந்து சேர்கிறது.
நேரம் வந்தபோது  கடைசியாக உன் பார்வை என்மேல் பட்டால்  என் எல்லை முடிந்ததாக அர்த்தம். என் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று பொருள். இனி நான், எனது எல்லாமே உன்னுடையது என்று புரிதல்.

முகூர்த்த நேரம் வந்துவிட்டது. ஜேஜே என்று கல்யாண கூடத்தில் கூட்டம்.  வாத்தியார்கள் உரக்க மந்திரம் சொல்கிறார்கள் . கசமுச  என்று எல்லோரும் ஏதோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.பட்டு புடவைகள் சலசலக்கிறது. மங்கள வாத்யம் ஒலிக்கிறது. காப்பி டம்பளர்களின்  சத்தம். குறுக்கும் நெடுக்கும் நிறைய பேர்  அலைகிறார்கள். வண்ண வண்ணமாக மலர் மாலைகள் தொடுக்கப்பட்டு மாப்பிள்ளை கழுத்துக்காக  காத்திருக்கின்றன.  
இதோ வந்து விட்டான் மாப்பிள்ளை. கழுத்தில் தாலி கட்டிவிட்டான். அட அவனும் கயிற்றை கட்டி அவளைச்  சொந்தம் கொண்டாடியவன்.  

நீயும் தான்  கயிறோடு வந்தவன். என் கழுத்துக்கு கயிறு கொண்டு வந்தவன்.  இந்த மணப்பெண் உனக்கு ரெடி காலதேவா.  கயிற்றை கட்டு.  மரண மணம்  ஜோராக  நடக்கட்டும். தனது எஜமானனோடு  இவளும்  புறப்படட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...