Thursday, September 30, 2021

SRIMAN NARAYANEEYAM



 ஸ்ரீமந்  நாராயணீயம் -   நங்கநல்லூர்  J K SIVAN --

65வது தசகம் --

65.  காற்றினிலே வரும் கீதம்.

ஸ்ரீ கிருஷ்ணனின்  பால்ய லீலைகளில் ராஸலீலாவும்  இடம் பெறும் . ரொம்ப சந்தோஷம் உண்டானால் நாம் கை கால் உடம்பு அசைத்து நமது ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறோம். பிருந்தாவன கோகுல கோபியர்கள் , தாயன்பு, சகோதர சகோதரி பாவம், சகி எனும் தோழிகளாகவும் கிருஷ்ணனோடு  சகஜமாக பழகி  மனம் களித்தவர்கள், நேரம் கழித்தவர்கள்.  நாராயணீயத்தில் மேப்பத்தூர்  நாராயண பட்டத்ரி இதை அற்புதமாக  சில  தசகங்களில் பாடுகிறார்.  பக்தி ரசம் தவிர்த்து எந்த  உணர்வும் கொள்ளாமல் ருசிக்க, ரசிக்க வேண்டிய பகுதி.

गोपीजनाय कथितं नियमावसाने
मारोत्सवं त्वमथ साधयितुं प्रवृत्त: ।
सान्द्रेण चान्द्रमहसा शिशिरीकृताशे
प्रापूरयो मुरलिकां यमुनावनान्ते ॥१॥

gOpii janaaya kathitaM niyamaavasaane
maarOtsavaM tvamatha saadhayituM pravR^ittaH |
saandreNa chaandramahasaa shishiriikR^itaashe
praapuurayO muralikaaM yamunaavanaante || 1

கோ³பீஜனாய கதி²தம் நியமாவஸானே
மாரோத்ஸவம் த்வமத² ஸாத⁴யிதும் ப்ரவ்ருத்த꞉ |
ஸாந்த்³ரேண சாந்த்³ரமஹஸா ஶிஶிரீக்ருதாஶே
ப்ராபூரயோ முரலிகாம் யமுனாவனாந்தே || 65-1 ||

கோபியர்கள்  கண்ணனைக் காண  அவனோடு விளையாட பேச  பாட  ஆட  விரதம், தவம் மேற்கொண்டவர்கள் என்று சொல்லலாம். கண்ணன் அவ்வாறு அவர்களோடு நேரம் செலவழிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தான்.  யமுனாநதி தீரம் கோலாலகலமாக காட்சி அளித்தது. முன்னிரவு  சந்திரன் பால் போல் ஒளிப்ரகாசமாக எல்லாவற்றையும் வெள்ளியாக மாற்றியிருந்தான்.  கருப்பு கிருஷ்ணனை வெள்ளை பின்னணியில் பார்த்தால் தான் எடுப்பாக இருக்கும்.  எந்த காட்சியும்  ஊமைப்படமாக இருந்தால் எப்படி ரசிக்கும். பின்னணி சங்கீதம் வேண்டாமா. இருக்கவே இருக்கிறது கண்ணனின் அதிசய புல்லாங்குழல். அதில் பிறக்காத நாதமா கீதமா?   எங்கும் அழகு, எதிலும் ஆனந்தம்.

सम्मूर्छनाभिरुदितस्वरमण्डलाभि:
सम्मूर्छयन्तमखिलं भुवनान्तरालम् ।
त्वद्वेणुनादमुपकर्ण्य विभो तरुण्य-
स्तत्तादृशं कमपि चित्तविमोहमापु: ॥२॥

sammuurchChanaabhirudita svaramaNDalaabhiH
sammuurchChayantamakhilaM bhuvanaantaraalam |
tvadveNunaadamupakarNya vibhO taruNyaH
tattaadR^ishaM kamapi chittavimOhamaapuH || 2

ஸம்மூர்ச²னாபி⁴ருதி³தஸ்வரமண்ட³லாபி⁴꞉
ஸம்மூர்ச²யந்தமகி²லம் பு⁴வனாந்தராலம் |
த்வத்³வேணுனாத³முபகர்ண்ய விபோ⁴ தருண்ய-
ஸ்தத்தாத்³ருஶம் கமபி சித்தவிமோஹமாபு꞉ || 65-2 ||

ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. சிறுவயதில் நாம் எல்லோரும் படித்த ருசிகரமான கதை .
Pied Piper of Hamelin. அதில்  டச்சுக்காரன்  ஒருவன் குழல் போன்று ஒன்றை வாசிப்பான். அதைக் கேட்டதும், தாத்தா, பாட்டி, மாமா மாமி குஞ்சு எலிகள் அனைத்தும் எங்கிருந்தோ படையாக ஓடி அவனிடம் வரும்.  இந்த கதை எழுதியவனுக்கு ஒருவேளை  கிருஷ்ணன் குழல் ஓசை காந்த ஈர்ப்பு தெரிந்திருக்குமோ?
கண்ணன் குழல் ஜீவசக்தி கொண்டது. மதியை மயக்குவது.  சப்த ஸ்வரங்களை பின்னிப் பிணைந்து தேவகணத்தை பிழிந்து தருவது.  சங்கீத எல்லைகள் அனைத்தையும் தொட்டு ஸ்வரஜாதி மலர்களை அள்ளி  வீசுவது.  கோபிகளின் மனம் கோபியர் கொஞ்சும் ரமணன் மேல் கொள்ளைபோனதில் என்ன ஆச்சர்யம். 

ता गेहकृत्यनिरतास्तनयप्रसक्ता:
कान्तोपसेवनपराश्च सरोरुहाक्ष्य: ।
सर्वं विसृज्य मुरलीरवमोहितास्ते
कान्तारदेशमयि कान्ततनो समेता: ॥३॥
 
taa geha kR^itya nirataastanaya prasaktaaH
kaantOpasevana paraashcha sarOruhaakshyaH |
sarvaM visR^ijya muraliirava mOhitaaste
kaantaaradeshamayi kaantatanO sametaaH || 3

தா கே³ஹக்ருத்யனிரதாஸ்தனயப்ரஸக்தா꞉
காந்தோபஸேவனபராஶ்ச ஸரோருஹாக்ஷ்ய꞉ |
ஸர்வம் விஸ்ருஜ்ய முரலீரவமோஹிதாஸ்தே
காந்தாரதே³ஶமயி காந்ததனோ ஸமேதா꞉ || 65-3 |


அந்த கால பெண்கள்  ஒரு நிமிஷ நேரமும் வீணாக்காமல் எண்ணற்ற வீட்டு வேலைகளை சந்தோஷமாக  ஆர்வமாக செய்து சுக போகம் வழங்கியவர்கள். அவர்கள் அத்தனை வேலை களையும் உதறிப் போட்டுவிட்டு,  புருஷன், பெற்றோர், குழந்தைகள், எவரையும் மறந்து  உன்னைத்  தேடி ஓடி மதுவனத்திற்கு, பண்டீரவனத்துக்கு  ஓடிவந்தார்கள் என்றால் எப்படி உன் வேணுகானம் அவர்களை கிறங்க அடித்திருக்கும்? கிருஷ்ணா  நீ  மாயாஜாலன்  அல்லவா?

काश्चिन्निजाङ्गपरिभूषणमादधाना
वेणुप्रणादमुपकर्ण्य कृतार्धभूषा: ।
त्वामागता ननु तथैव विभूषिताभ्य-
स्ता एव संरुरुचिरे तव लोचनाय ॥४॥
 
kaashchinnijaanga paribhuuShaNa maadadhaanaa
veNupraNaadamupakarNya kR^itaardhabhuuShaaH |
tvaamaagataa nanu tathaiva vibhuuShitaabhyaH
taa eva sanruruchire tava lOchanaaya ||4

காஶ்சின்னிஜாங்க³பரிபூ⁴ஷணமாத³தா⁴னா
வேணுப்ரணாத³முபகர்ண்ய க்ருதார்த⁴பூ⁴ஷா꞉ |
த்வாமாக³தா நனு ததை²வ விபூ⁴ஷிதாப்⁴ய-
ஸ்தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசனாய || 65-4 ||

கோபியர்கள்  நிறைய  நகைகள், ஆபரணங்கள் பூட்டிக்  கொள்வார்கள்,  மலர்கள்  தலைநிறைய சூட்டிக்கொள்வார்கள்.. அதில் நேரம் நிறைய செலவிடுபவர்கள். ஆனால் என்ன ஆச்சர்யம்,  உன் குரல் கேட்ட மாத்திரத்தில் அப்படியே அனைத்தையும் அந்த அந்த இடத்திலேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டம் நீ இருக்கும் இடத்திற்கு ஓட  வைத்தது உன் குழலோசை.   நீ  ஆபரணம், நகை அணிந்த முகத்தையா விரும்புபவன். மனத்தை  யல்லவோ ரசிப்பவன். தேடுபவன்.  அவர்கள் நகை அணிந்தால் என்ன, அணியாவிட்டால் என்ன?

हारं नितम्बभुवि काचन धारयन्ती
काञ्चीं च कण्ठभुवि देव समागता त्वाम् ।
हारित्वमात्मजघनस्य मुकुन्द तुभ्यं
व्यक्तं बभाष इव मुग्धमुखी विशेषात् ॥५॥

haaraM nitambabhuvi kaachana dhaarayantii
kaa~nchii~ncha kaNThabhuvi deva samaagataa tvaam |
haaritvamaatma jaghanasya mukunda tubhyaM
vyaktaM babhaaSha iva mugdhamukhii visheShaat || 5

ஹாரம் நிதம்ப³பு⁴வி காசன தா⁴ரயந்தீ
காஞ்சீம் ச கண்ட²பு⁴வி தே³வ ஸமாக³தா த்வாம் |
ஹாரித்வமாத்மஜக⁴னஸ்ய முகுந்த³ துப்⁴யம்
வ்யக்தம் ப³பா⁴ஷ இவ முக்³த⁴முகீ² விஶேஷாத் || 65-5 ||


கிருஷ்ணா,   ஒரு  வேடிக்கை உனக்கு தெரியுமா? உன் குழலோசை  ஒரு கோபியை என்ன செய்ய வைத்தது தெரியுமா?  கழுத்தில் அணிய வேண்டிய  நெக்லஸை  இடுப்பில்   ஒட்டியாணம் போல் சுற்றிக் கொண்டு  உன்னை நோக்கி ஓடினாள். உ
ண்மையிலேயே அவள் இடுப்பு அவ்வளவு சின்னதாக இருந்திருக்கும். ஒருவள்  நெற்றிக்கு இட்டுக்கொள்ளும்  சாந்தை கால்களில் இட்டுக்கொண்டு ஓடினாள். யாருக்குமே  தலைகால் புரியவில்லை.

काचित् कुचे पुनरसज्जितकञ्चुलीका
व्यामोहत: परवधूभिरलक्ष्यमाणा ।
त्वामाययौ निरुपमप्रणयातिभार-
राज्याभिषेकविधये कलशीधरेव ॥६॥

kaachitkuche punarasajjita ka~nchuliikaa
vyaamOhataH paravadhuubhiralakshyamaaNaa |
tvaamaayayau nirupama praNayaatibhaara
raajyaabhiSheka vidhaye kalashiidhareva || 6

காசித்குசே புனரஸஜ்ஜிதகஞ்சுலீகா
வ்யாமோஹத꞉ பரவதூ⁴பி⁴ரலக்ஷ்யமாணா |
த்வாமாயயௌ நிருபமப்ரணயாதிபா⁴ர-
ராஜ்யாபி⁴ஷேகவித⁴யே கலஶீத⁴ரேவ || 65-6 


ஒருவளுக்கு  மேலே ஆடை அணிந்துகொள்ளக்  கூட   மறந்துபோய்விட்டது. அவ்வளவு மதி மயக்கமா? அவசரமா? எல்லாம் உன் குழலோசை பண்ணிய கோலம். மற்றவர்கள்  எடுத்துச் சொன்னபோது தான் அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள் கவனம் பூரா உனக்கு அபிஷேகம் பண்ண  எடுத்துக் கொண்டுவந்த இரண்டு குட  யமுனை நீரின் மேல் தான் இருந்ததாம். 

काश्चित् गृहात् किल निरेतुमपारयन्त्य-
स्त्वामेव देव हृदये सुदृढं विभाव्य ।
देहं विधूय परचित्सुखरूपमेकं
त्वामाविशन् परमिमा ननु धन्यधन्या: ॥७॥

kaashchid gR^ihaat kila niretumapaarayantyaH
tvaameva deva hR^idaye sudR^iDhaM vibhaavya |
dehaM vidhuuya parachitsukharuupamekaM
tvaamaavishan paramimaa nanu dhanyadhanyaaH || 7

காஶ்சித்³க்³ருஹாத்கில நிரேதுமபாரயந்த்ய-
ஸ்த்வாமேவ தே³வ ஹ்ருத³யே ஸுத்³ருட⁴ம் விபா⁴வ்ய |
தே³ஹம் விதூ⁴ய பரசித்ஸுக²ரூபமேகம்
த்வாமாவிஶன்பரமிமா நனு த⁴ன்யத⁴ன்யா꞉ || 65-7 ||


இன்னொரு விஷயமும் சொல்கிறேன் கிருஷ்ணா.  சில பேருக்கு  வீட்டை விட்டு நகர முடியாத நிலை. ஆனால் அவர்கள்  இருந்த இடத்திலேயே  மனதால் உன்னை நெருங்கவிடாமல் உன் பெயரைச்சொல்லி  தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.  உன் பேரைச் சொல்லும்   ''பேரானந்தம் '' அவர்களை  உன்னிடம் இணைத்தது.  

जारात्मना न परमात्मतया स्मरन्त्यो
नार्यो गता: परमहंसगतिं क्षणेन ।
तं त्वां प्रकाशपरमात्मतनुं कथञ्चि-
च्चित्ते वहन्नमृतमश्रममश्नुवीय ॥८॥

jaaraatmanaa na paramaatmatayaa smarantyO
naaryO gataaH paramahamsagatiM kshaNena |
taM tvaaM prakaasha paramaatmatanuM katha~nchit
chitte vahannamR^ita-mashrama mashnuviiya ||8

ஜாராத்மனா ந பரமாத்மதயா ஸ்மரந்த்யோ
நார்யோ க³தா꞉ பரமஹம்ஸக³திம் க்ஷணேன |
தம் த்வாம் ப்ரகாஶபரமாத்மதனும் கத²ஞ்சி-
ச்சித்தே வஹன்னம்ருதமஶ்ரமமஶ்னுவீய || 65-8 ||

ஒன்று நிச்சயம் கண்ணா. அந்த எல்லா கோபியருக்கும்  நீ  கடவுளாகவே தென்படவில்லை. அவர்களது உயிருக்கும்  மேலான செல்லக் குழந்தையாக  தான்  தோன்றினாய்.அளவற்ற பாசம் கொண்டு ஆனந்தத்தில் திக்கு முக்காடினார்கள். 

 अभ्यागताभिरभितो व्रजसुन्दरीभि-
र्मुग्धस्मितार्द्रवदन: करुणावलोकी ।
निस्सीमकान्तिजलधिस्त्वमवेक्ष्यमाणो
विश्वैकहृद्य हर मे पवनेश रोगान् ॥९॥

abhyaagataabhirabhitO vrajasundariibhiH
mugdhasmitaardra vadanaH karuNaavalOkii |
nissiima kaanti jaladhistvamavekshyamaaNO
vishvaikahR^idya hara me paramesha rOgaan ||9

அப்⁴யாக³தாபி⁴ரபி⁴தோ வ்ரஜஸுந்த³ரீபி⁴-
ர்முக்³த⁴ஸ்மிதார்த்³ரவத³ன꞉ கருணாவலோகீ |
நிஸ்ஸீமகாந்திஜலதி⁴ஸ்த்வமவேக்ஷ்யமாணோ
விஶ்வைகஹ்ருத்³ய ஹர மே பவனேஶ ரோகா³ன் || 65-9 ||


நீ வசீகரன்.  உன் புன்முறுவல் ஒன்றே போதுமே  மதியை மயக்க. உன்னைப் படத்தில் கண்ட நானே மயங்குகிறேனே. நேரில் கண்ட அவர்கள் நிலையைச்  சொல்லவா முடியும்.  முகமலர்  என்பது நிச்சயம் உன் முகத்தைப் பார்த்தபிறகு தோன்றிய வார்த்தையாக இருக்கும்.  எண்டே குருவாயூரப்பா  என் வாத நோய் தீர்த்து என்னை வாழவிடு தெய்வமே.

தொடரும்  


Wednesday, September 29, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம் - நங்கநல்லூர் J K  SIVAN  --

64வது தசகம் 

64.  ''கோவிந்தா, கோவிந்தா '' என்னே  உன் திவ்ய தரிசனம்...

தேவேந்திரன் கிருஷ்ணன் வேறு யாருமில்லை மஹா விஷ்ணுவான  ஸ்ரீமந் நாராயணனின் அவதாரம் என்பதை உணர்ந்து தனது தவறுக்கு  வருந்தி கிருஷ்ணனை வணங்கினான்.  அனைத்து தேவர்களும் கிருஷ்ணனைப் பிரார்த்தித்தனர்.

आलोक्य शैलोद्धरणादिरूपं प्रभावमुच्चैस्तव गोपलोका: ।
विश्वेश्वरं त्वामभिमत्य विश्वे नन्दं भवज्जातकमन्वपृच्छन् ॥१॥

aalOkya shailOddharaNaadi ruupaM prabhaavamuchchaistava gOpalOkaaH |
vishveshvaraM tvaamabhimatya vishve nandaM bhavajjaatakamanvapR^ichChan || 1

ஆலோக்ய ஶைலோத்³த⁴ரணாதி³ரூபம்
ப்ரபா⁴வமுச்சைஸ்தவ கோ³பலோகா꞉ |
விஶ்வேஶ்வரம் த்வாமபி⁴மத்ய விஶ்வே
நந்த³ம் ப⁴வஜ்ஜாதகமன்வப்ருச்ச²ன் || 64-1 ||

 வ்ரஜபூமி கோபர்களுக்கு இப்போது நன்றாக புரிந்துவிட்டது. கோவர்த்தன கிரியை  ஏழுநாட்கள் ஒரு சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி  அவர்களை ஆநிரைகளோடு  காத்தருளிய  கிருஷ்ணன் சாதாரண மானுடன் இல்லை. தங்களை உய்விக்க வந்த தெய்வம் என்று உள்ளுணர்வு அவர்களுக்குள் உணர்த்தியது. மட்டற்ற மகிழ்ச்சியில்  கண்ணனின் அருமைபெருமைகளை புகழ்ந்து நன்றியோடு  நினைவு கூர்ந்தார்கள். 

எல்லோரும்  ஒன்று கூடி  நந்தகோபனிடம் சென்று ஆவலோடு என்ன கேட்டார்கள் தெரியுமா? ''நந்தகோபா,  உன் மகன்  கிருஷ்ணனின் ஜாதகத்தை  பார்த்தாயா, அதில் அவனைப் பற்றி என்ன சொல்கிறது? விசேஷ ஜாதகனாக அவன் இருக்கவேண்டுமே?  ஆவலாக இருக்கிறது அவனைப் பற்றி சொல்லப்பா?''

गर्गोदितो निर्गदितो निजाय वर्गाय तातेन तव प्रभाव: ।
पूर्वाधिकस्त्वय्यनुराग एषामैधिष्ट तावत् बहुमानभार: ॥२॥

gargOditO nirgaditO nijaaya vargaaya taatena tava prabhaavaH |
puurvaadhikastvayyanuraaga eShaamaidhiShTa taavadvahumaana bhaaraH || 2

க³ர்கோ³தி³தோ நிர்க³தி³தோ நிஜாய
வர்கா³ய தாதேன தவ ப்ரபா⁴வ꞉ |
பூர்வாதி⁴கஸ்த்வய்யனுராக³ ஏஷா-
மைதி⁴ஷ்ட தாவத்³ப³ஹுமானபா⁴ர꞉ || 64-2 ||

குருவாயூரப்பா,  உன் தந்தை நந்தகோபன் சொன்ன பதில் இது தான்.
 ''ஆமாம்  கிருஷ்ணன்  ஒரு தனிப்பிறவி. விசேஷமானவன்.  அவன் பிறந்தபோது   குலகுரு  கர்க முனிவர்  வந்தது, அப்போது அவர் அவனுக்கு பெயர் வைத்தது. அவனைப் பற்றி  உயர்வாக சொன்னது அத்தனையும்  ஒன்றுவிடாமல்  நந்தகோபன் சொன்னான். கோபர்கள்   ''ஆ'' வென்று வாய் பிளந்து கிருஷ்ணா உன் அருமை பெருமைகளை அறிந்தார்கள்.  அவர்களே அனுபவித்த  உன்னுடைய  எத்தனையோ  சாகசச் செயல்களும் ஒன்றன் பின் ஒன்றாக மனத்திரையில் தோன்றின.  அவர்களுக்கு  உன்மீது பக்தியும் பாசமும் முன்னிலும்  அதிகமாகப்  பெருகியது.

ततोऽवमानोदिततत्त्वबोध: सुराधिराज: सह दिव्यगव्या।
उपेत्य तुष्टाव स नष्टगर्व: स्पृष्ट्वा पदाब्जं मणिमौलिना ते ॥३॥

tatO(a)vamaanOdita tattvabOdhaH suraadhiraajaH saha divyagavyaa |
upetya tuShTaava sa naShTagarvaH spR^iShTvaa padaabjaM maNi maulinaa te || 3

ததோ(அ)வமானோதி³ததத்த்வபோ³த⁴꞉
ஸுராதி⁴ராஜ꞉ ஸஹ தி³வ்யக³வ்யா |
உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்டக³ர்வ꞉
ஸ்ப்ருஷ்ட்வா பதா³ப்³ஜம் மணிமௌலினா தே || 64-3 ||

கிருஷ்ணா,  உனக்கு தெரியும்  தேவேந்திரன் மாயையால், அதுவும்  உன் சங்கல்பத்தால்,  சற்று மதி மயங்கி ஆணவத்தில் தவறு செய்தவன், அதுவும்  ஒரு  நன்மைக்கே  என்று.  இப்போது இந்திரன் ஆணவம் நீங்கியவனாக அனைத்து தேவர்களோடும் உன்னை நேரில் காண ஓடிவந்தான்.   வரும்போது காமதேனுவையும் அழைத்து வந்தான்.  ஸாஷ்டாங்கமாக  அனைவரும் உன் திருவடியில் விழுந்து வணங்கினார்கள். 

स्नेहस्नुतैस्त्वां सुरभि: पयोभिर्गोविन्दनामाङ्कितमभ्यषिञ्चत् ।
ऐरावतोपाहृतदिव्यगङ्गापाथोभिरिन्द्रोऽपि च जातहर्ष: ॥४॥

snehasnutaistvaaM surabhiH payObhiH gOvinda naamaankitamabhyaShi~nchat |
airaavatOpaahR^ita divya gangaa paathObhirindrO(a)pi cha jaataharShaH || 4

ஸ்னேஹஸ்னுதைஸ்த்வாம் ஸுரபி⁴꞉ பயோபி⁴-
ர்கோ³விந்த³னாமாங்கிதமப்⁴யஷிஞ்சத் |
ஐராவதோபாஹ்ருததி³வ்யக³ங்கா³-
பாதோ²பி⁴ரிந்த்³ரோ(அ)பி ச ஜாதஹர்ஷ꞉ || 64-4 ||

தேவேந்திரன் காமதேனுவின் திவ்ய க்ஷீரத்தால் , உனக்கு  பாலபிஷேகம் செய்தான். உளமார  அனைவரும் இந்திரனோடு சேர்ந்து  ''கோவிந்தா  கோவிந்தா '' என  வாய் மணக்க  கூவினார்கள்.  இந்திரன் ஆனந்தத்தில் தன்னை மறந்து கூத்தாடினான்.  தனது வாகனமான  ஐராவதத்தின் மேல்  பக்தி, மரியாதையோடு  குடம் குடமாக கொண்டு வந்திருந்த  கங்கை போன்ற புனித தீர்த்தங்களால் தானே  உனக்கு  அபிஷேகம் செய்தான். 

जगत्त्रयेशे त्वयि गोकुलेशे तथाऽभिषिक्ते सति गोपवाट: ।
नाकेऽपि वैकुण्ठपदेऽप्यलभ्यां श्रियं प्रपेदे भवत: प्रभावात् ॥५॥

jagattrayeshe tvayi gOkuleshe tathaa(a)bhiShikte sati gOpavaaTaH |
naake(a)pi vaikuNTha pade(a)pyalabhyaaM shriyaM prapede bhavataHprabhaavaat || 5

ஜக³த்த்ரயேஶே த்வயி கோ³குலேஶே
ததா²(அ)பி⁴ஷிக்தே ஸதி கோ³பவாட꞉ |
நாகே(அ)பி வைகுண்ட²பதே³(அ)ப்யலப்⁴யாம்
ஶ்ரியம் ப்ரபேதே³ ப⁴வத꞉ ப்ரபா⁴வாத் || 64-5 ||

கிருஷ்ணா, நீ  மூவுலகும்  ஆள்பவன். உன்னை  கோகுலநாதனாக, கோகுல நாயகனாக அனைவரும்  வாழ்த்தி போற்றினார்கள். மலர்களால் உன் பாதார விந்தங்களை  அர்ச்சித்தார்கள்.  கோகுலம் செய்த பாக்யம்  வைகுண்டம் கூட  பெற்றிருக்காது என்று தோன்றுகிறது கண்ணா இந்த வைபவங்களைக் கண்டபோது. அதைப்பற்றி அறியும்போது''

कदाचिदन्तर्यमुनं प्रभाते स्नायन् पिता वारुणपूरुषेण ।
नीतस्तमानेतुमगा: पुरीं त्वं तां वारुणीं कारणमर्त्यरूप: ॥६॥

kadaachidantaryamunaM prabhaate snaayan pitaa vaaruNapuuruSheNa |
niitastamaanetu magaaH puriintvaM taaM vaaruNiiM kaaraNa martyaruupaH || 6

கதா³சித³ந்தர்யமுனம் ப்ரபா⁴தே
ஸ்னாயன் பிதா வாருணபூருஷேண |
நீதஸ்தமானேதுமகா³꞉ புரீம் த்வம்
தாம் வாருணீம் காரணமர்த்யரூப꞉ || 64-6 ||

குருவாயூரா,   உனக்கு ஞாபகம் இருக்கிறதா?  அது ஒரு ஆச்சர்யமான சம்பவம். உனக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன் கேள்.  ஒரு முறை  வருணனின் சேவகன் ஒருவன்  உன் தந்தை நந்தகோபன்  யமுனையில் விடியற்காலையில் ஸ்னானம் செய்த்துக்கொண்டிருந்தபோது  கடத்திக் கொண்டு போய்விட்டான்.   இந்த  பூமியில் நீ  அவதாரம் செய்ததே நல்லவர்கள்  எல்லோரையும்  நேரடியாக  காப்பதற்கு தானே. அவ்வளவு சுலபத்தில் இது நடக்க விடுவாயா?  நேராக  வருணனை விண்ணுலகில் சென்று சந்தித்து  உன்  தந்தையை மீட்க சென்றாயே. 

ससम्भ्रमं तेन जलाधिपेन प्रपूजितस्त्वं प्रतिगृह्य तातम् ।
उपागतस्तत्क्षणमात्मगेहं पिताऽवदत्तच्चरितं निजेभ्य: ॥७॥

sasambhramaM tena jalaadhipena prapuujitastvaM pratigR^ihya taatam |
upaagatastatkshaNamaatmagehaM pitaa(a)vadattachcharitaM nijebhyaH || 7

ஸஸம்ப்⁴ரமம் தேன ஜலாதி⁴பேன
ப்ரபூஜிதஸ்த்வம் ப்ரதிக்³ருஹ்ய தாதம் |
உபாக³தஸ்தத்க்ஷணமாத்மகே³ஹம்
பிதா(அ)வத³த்தச்சரிதம் நிஜேப்⁴ய꞉ || 64-7 ||

''கிருஷ்ணா, நீ  வந்திருக்கிறாய் என்ற சேதி அறிந்ததும் வருணன் ஓடோடி வந்து உன் பாத கமலங்களில் விழுந்தானே. அவனுக்கு தெரியாது  அவன் சேவகன் செய்த தவறு.  ஆகவே வருந்தினான்.  உன்னிடம் மன்னிப்பு கோரினான். உன் தந்தையை உன்னோடு அனுப்பினான். 
க்ஷண காலத்தில் இதெல்லாம் நடந்தது. நந்தகோபன் கோகுலத்திற்கு உன்னோடு திரும்பி வந்தான்.

இந்த  நிகழ்ச்சியை  மற்ற கோபர்களுக்கு  இப்போது  நந்தகோபன்  உன் பெருமைகளை சொல்லிக்கொண்டு வரும்போது,   ஞாபகப்படுத்தி சொன்னான்.  

हरिं विनिश्चित्य भवन्तमेतान् भवत्पदालोकनबद्धतृष्णान् ॥
निरीक्ष्य विष्णो परमं पदं तद्दुरापमन्यैस्त्वमदीदृशस्तान् ॥८॥

hariM vinishchitya bhavantametaan bhavatpadaalOkana baddhatR^iShNaan |
niriikshya viShNO paramaM padaM tad duraapamanyaistvamadiidR^ishastaan || 8

ஹரிம் வினிஶ்சித்ய ப⁴வந்தமேதான்
ப⁴வத்பதா³லோகனப³த்³த⁴த்ருஷ்ணான் |
நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பத³ம் த-
த்³து³ராபமன்யைஸ்த்வமதீ³த்³ருஶஸ்தான் || 64-8 ||

கொஞ்சமும் சந்தேகத்துக்கே  இடமில்லாமல்  அனைத்து கோப கோபியர்களும்  நீ  மஹா விஷ்ணுவின் அவதாரம் என  தெரிந்துகொண்டார்கள்.  அவர்கள் செய்த பாக்யம்  வ்ரஜபூமியில் அவர்களை வாழ்விக்க வந்தவன் நீ  என்று புரிந்து கொண்டார்கள்.  ஹரி ,  எவ்வளவு புண்யம் பண்ணியவர்கள் அந்த மக்கள் என்று நினைக்கும்போது  வைகுண்டநாதா,  அவர்கள் நீ வாழும்  அந்த திவ்ய ஸ்தலத்தை தரிசிக்க ஆவல் கொண்டார்கள்.  ஆஹா  என்ன பாக்யம் அவர்களுக்கு  க்ஷணகாலம்  அவர்களுக்கு ஜீவன்முக்தர்கள் போல  வைகுண்ட தரிசனமே கிடைத்தது.  ஆம்.  நீ தான் கோகுல பிரிந்தாவனத்தையே  பூலோக  வைகுண்டமாக மாற்றிவிட்டாயே ''

स्फुरत्परानन्दरसप्रवाहप्रपूर्णकैवल्यमहापयोधौ ।
चिरं निमग्ना: खलु गोपसङ्घास्त्वयैव भूमन् पुनरुद्धृतास्ते ॥९॥

sphuratparaananda rasapravaaha prapuurNa kaivalya mahaapayOdhau |
chiraM nimagnaaH khalu gOpasanghaaH tvayaiva bhuuman punaruddhR^itaaste || 9

ஸ்பு²ரத்பரானந்த³ரஸப்ரவாஹ-
ப்ரபூர்ணகைவல்யமஹாபயோதௌ⁴ |
சிரம் நிமக்³னா꞉ க²லு கோ³பஸங்கா⁴-
ஸ்த்வயைவ பூ⁴மன் புனருத்³த்⁴ருதாஸ்தே || 64-9 ||

கோவர்தன கிரியை நீ  உயர்த்தி அனைவரையும்  காத்தருளிய போது  எங்கும்  ஓடியது  ஓவென்று   நீர் வெள்ளம்.  இப்போது  அவர்கள் அனைவரும் மூழ்கியது ஆனந்த வெள்ளத்தில்.  தெய்வீகமான  உன் திவ்ய தரிசனத்தில் எல்லோரும்   பரமானந்த முக்தியடைந்தவர்களாக தென்பட்டார்கள். உன் ஸாக்ஷாத் ஸ்வரூபத்தை நொடியில் காட்டி  அவர்களை மகிழ்வித்தாயே தெய்வமே. மீண்டும் அவர்களை  பழைய கோபர்களாக மாற்றி வாழவைத்தாய்.

करबदरवदेवं देव कुत्रावतारे
निजपदमनवाप्यं दर्शितं भक्तिभाजाम् ।
तदिह पशुपरूपी त्वं हि साक्षात् परात्मा
पवनपुरनिवासिन् पाहि मामामयेभ्य: ॥१०॥

karabadaravadevaM deva kutraavataare
nijapadamanavaapyaM darshitaM bhaktibhaajaam |
tadiha pashuparuupii tvaM hi saakshaat paraatmaa
pavana puranivaasin paahi maamaamayebhyaH ||10

கரப³த³ரவதே³வம் தே³வ குத்ராவதாரே
பரபத³மனவாப்யம் த³ர்ஶிதம் ப⁴க்திபா⁴ஜாம் | [** நிஜபத³மனவாப்யம் **
ததி³ஹ பஶுபரூபீ த்வம் ஹி ஸாக்ஷாத்பராத்மா
பவனபுரனிவாஸின் பாஹி மாமாமயேப்⁴ய꞉ || 64-10 ||

பவனபுர நிவாஸா,   பரமாத்மா,  கிருஷ்ணா, இது வரை உனது எந்த  அவதாரத்திலும்   உனது நிஜ  ஸ்வரூபத்தை , உனது ஸ்ரீ வைகுண்டத்தை  பக்தர்கள் எவரும் தரிசனம்  செய்ய  கொடுத்து  வைக்க வில்லையே. . இந்த கிருஷ்ண அவதாரத்தில்  கோகுல பிருந்தாவன வ்ரஜபூமியில்  மாடு மேய்க்கும்   கோபர்கள் கோபியர்கள்  அல்லவோ  அந்த அதிர்ஷ்டம் பெற்றவர்கள்.  எண்டே குருவாயூரப்பா, நீ பரமாத்மா என்பதை வெளிப்படுத்தியது அவர்கள் எத்தனையோ ஜென்மத்தில் செய்த புண்ய கர்மபலன்.  அப்பனே என் நோய் தீர்த்து எனக்கும்  அருள்புரிவாய்.

தொடரும் 


GARUDA AND HANUMAN

 இரு திருவடிகள்   -   நங்கநல்லூர்  J K சிவன் -


நமது புராணங்களில் எண்ணற்ற  சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.  ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவித ருசியைத் தரும் தன்மை  கொண்டது. ஒரே ஒரு கதை சொல்லட்டுமா?

கருடனுக்கு சில சமயம் தன்னைவிட  பலசாலி, சாமர்த்தியசாலி, வேறு யாரும் இல்லை என்று கர்வம் வந்து விடும்.  விஷயம் கொஞ்சம் அல்ல நிறைய  தெரிந்தவர்களுக்கு  கர்வம், ஆணவம் என்பது  ஒரு உடன் பிறந்த வியாதி.  பாற்கடலில்  அம்ருதம் கிடைத்தவுடன்  அந்த அம்ருத ஜாடியை  அசுரர் களிடமிருந்து மீட்ட பெருமை  கருடனுக்கு கட்டுக்கடங்கவில்லை.  இந்திரன் தோட்டத்திலிருந்து
கிருஷ்ணனுக்காக,  பாரிஜாத  மரத்தை  நைஸாக  கொண்டு  வந்த ஆணவம் வேறு தலைக்கேறி  விட்டது கருடனுக்கு.  இந்திரன் வீசிய  வஜ்ராயுதம் கருடனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற  பெருமை வேறு.  எண்ணற்ற அசுரர்களை விஷ்ணு அழித்தபோது கருடன் தனது பங்கு அதிகம் என்று ஒரு எண்ணம் கொண்டிருந்தான். விஷ்ணுவுக்கு தான் இல்லையென்றால் சக்தி இல்லை, தானே அனைவரையும் விட உயர்ந்தவன் என்ற  எண்ணம் மனதில் பூரா பரவி இருந்தது. இதை  கிருஷ்ணன்  கவனிக்காமல் இருப்பாரா? கருடனுக்கு பாடம் கற்பிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என மனதில் சங்கல்பம் செய்து கொண்டார். .

ஒருநாள் கிருஷ்ணன்  ஹனுமனை துவாரகைக்கு வரச் செய்தார்.  கருடனின் கர்வபங்கத்தை அடக்க  துவாரகை நந்தவனத்தை ஹனுமான் அழிக்கும்படியாக  செய்தார்.   ஹனுமான்  அட்டகாசம் செய்தன. பழங்களை பறித்து எறிந்தான், தின்றான், வீணாக்கினான், மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான்.  துவாரகையில்  கிருஷ்ணன் அரண்மனை நந்தவனம் பெரிய  சுனாமியில் சிக்கியது போலாகிவிட்டது.  அரண்மனை காவல்காரர்கள் நிலைமை கட்டுக்கடங்காமல்   போகவே, கிருஷ்ணனிடம் ஏதோ ஒரு பலசாலி குரங்கு அட்டகாசம் செயது நந்தவனத்தை அழிக்கிறது என்று முறையிட்டார்கள். 

கருடன் அப்போது கிருஷ்ணன் அருகில் இருந்தான்.  ''கருடா, நீ தான் சிறந்த பலசாலி. உடனே  நமது படை வீரர்களோடு போ.  யார் அந்த குரங்கு என்று கண்டுபிடித்து தக்க  தண்டனை கொடுத்து விரட்டு.'' என்று கட்டளையிட்டார்.

''ப்ரபோ, ஒரு குரங்கை பிடித்து அடித்து விரட்ட  எனக்கு எதற்கு படையின் உதவி.  நானே  பார்த்துக் கொள்கிறேன். அந்த குரங்கைபிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன்.'' என்ற கருடனுக்கு தனது பழத்தின் மேல், சக்தி மேல் அவ்வளவு நம்பிக்கை. கர்வம். 

நந்தவனத்தில்  கருடன்  ஹனுமான்  ஒரு மரக்கிளையில் மேல் அமர்ந்து பழங்களை சாப்பிடுவதை பார்த்தான். நிறைய பழங்களை பறித்து தரையில் வீசி எரிந்து  ஹனுமான்  சேதப்படுத்தியிருந்தான். பல மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன.  செடிகொடிகள் ஒடிக்கப்பட்டு துண்டாக கிடந்தன.

''ஏய் துஷ்ட குரங்கே  யார் நீ?  எதற்கு  எங்கள் நந்தவனத்தை சேதப்படுத்தினாய்?''   இடி போல் கேட்டான் கருடன்.  ஹனுமான் கருடனை லக்ஷியம் பண்ணாமல் மேலும் சேதப்படுத்திக்  கொண்டிருந்தான்.  சில காய்களையும் பழங்களையும் கருடன் முகத்தில் வீசி  எறிந்தான்.

''ஏய்,  அல்ப, முட்டாள் குரங்கே, யாருடன் பேசுகிறாய் என்று அறியாமல் நடந்து  கொள்கிறாய். உன் உயிரை இழக்காமல் முதலில் என்னோடு வா உன்னை உயிரோடு கொண்டுபோய் என் எஜமானன் முன் நிறுத்துகிறேன். இல்லாவிட்டால் என் கூறிய  நகங்களால் கிழிபட்டு துடித்து சாவாய். ஜாக்கிரதை''

 ''ஹனுமான் சிரித்தான்.  ''அறிவற்ற சாதாரணமான பறவையே. நான் உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உன்னைப்போல  எவ்வளவோ பறவைகளைப்  பார்த்தவன் நான். நீ சக்தி உள்ளவன் என்று பீற்றிக்கொள்கிறாயே. எங்கே உன் சக்தியை என் முன்னால்  காட்டு பார்க்கலாம்'' என்ற ஹனுமான் தனது வாலால்  கருடனை சுற்றி இறுக்கி கட்டினான். எவ்வளவோ முயன்றும் கருடனால்  ஹனுமான் வாலின் இரும்புப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.  மூச்சு திணறியது. கண் இருண்டது .
''என் எஜமான் கிருஷ்ண பிரபு தான் உன்னை அழைத்துக்கொண்டு வர அனுப்பினார்.வா என்னோடு''  என்றான் கருடன்.. 

''போனால் போகிறது என்று உன்னை  விடுகிறேன். நான் என் பிரபு  கோசல ராமனின் அடிமை. நான் எதற்கு உங்கள் கிருஷ்ணனை வந்து பார்க்கவேண்டும்'' 

 ஹனுமானின் வாலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்து  கருடனால் கொஞ்சம்  மூச்சு விட முடிந்தது. அப்போதும் அவன் கர்வம் தளரவில்லை. 

''என்ன  உளறுகிறாய்  நீ.  ராமனும் கிருஷ்ணனும் ஒன்று தானே. ஆகவே உடனே என்னோடு கிருஷ்ணன் முன் வா''

''ஏ  அல்ப  பறவையே,  என் முன்னாலிருந்து ஓடிவிடு. தப்பித்துக்  கொள்.  என்னிடம் மோதாதே.  உயிரிழக்காதே. நான் இன்னும் கொஞ்சம் சுகமாக பழங்கள் சாப்பிடும்போது குறுக்கே  தொந்திரவு செய்யாமல் ஓடிவிடு ''

கருடனுக்கு கோபம் உச்சிக்கேறி  ஹனுமனைத்  தாக்கினான்.  ஹனுமான் கருடனின்  பின் கழுத்தைப்   பிடித்து  தூர  சமுத்திரத்தில் எறிந்தான். பிறகு ஒன்றும் நடக்காததுபோல் ஹனுமான் மலயமாருத மலையை நோக்கி நடந்தான்.  தொப்பென்று சமுத்திரத்தில் விழுந்த கருடன் எப்படியோ சுதாரித்துக் கொண்டு எழுந்து துவாரகையை நோக்கி  பறந்தான் .

''என்ன கருடா இவ்வளவு நேரம்.? ஏன் முழுதும் நனைந்திருக்கிறாய். மழை கூட பெய்யவில்லையே? என்று கிருஷ்ணன்  கேட்க :
''பிரபு , அந்த முட்டாள் குரங்குக்கு  ரொம்ப  பிடிவாதம். கர்வம்.  என்னைப் பிடித்து சமுத்திரத்தில் வீசிவிட்டது. எவ்வளவு சொல்லியும் கேட்காமல்  ராமன் தான் அதன் எஜமானனாம்.  உங்களை லக்ஷியம் பண்ணி இங்கே வராதாம்.''

''கருடா, நீ சொல்வதைப் பார்த்தால் அந்த குரங்கு ஹனுமனாக இருக்குமோ என்று தோன்றுகிறது . நீ உடனே மலயமாருத கிரிக்கு பறந்து செல்.  அந்த குரங்கை  கண்டுபிடித்து  ''உன்னை  ராமர் அழைக்கிறார். துவாரகையில்  உனக்காக  காத்திருக்கிறார் '' என்று சொல். ராமன் அழைக்கிறான் என்றால் தட்டாமல் ஹனுமன்  ஓடிவருவான். ''
கருடன் பறந்தான்.  அதற்குள் கிருஷ்ணன்  
''சத்யபாமா, நீ சீதை போல்  உருவம் மாற்றிக்கொள்..அவளைப்போல்  ஆடையணிந்து நில். ''  '' சுதர்ஸன சக்ரமே, நீ வாசலில் நின்று எவரையும்  என் உத்தரவின்றி உள்ளே அனுமதிக்காதே'' கிருஷ்ணன் கையில் வில்லேந்தி ராமனாக மாறி நின்றான். 

கருடன் ஹனுமானைக் கண்டு  ராமர் அழைக்கிறார் என்றதும் உடனே  கருடன் பின் ஓடினான் ஹனுமான். இவனுக்கு என் வேகத்தையும் பலத்தையும் காட்டுகிறேன் என்று கருடன்  வெகு வேகமாக துவாரகைக்கு பறந்தான்.  துவாரகையில்  கிருஷ்ணன் அரண்மனையை அடைந்த கருடனுக்கு ஆச்சர்யமும் ஏமாற்றமும் காத்திருந்தது. அவனுக்கு முன்பே ஹனுமான் காற்றோடு கலந்து பறந்து அங்கே வந்து விட்டான்.  வாசலில் ஹனுமனை  உள்ளே நுழையவிடாமல் சுதர்சன சக்ரம் தடுத்தது 

''என் ராமனைப்பார்க்க ஆவலோடு வந்த என்னை இதுவா தடுக்கிறது'' என்று சுதர்சன சக்ரத்தை அப்படியே வாய் திறந்து விழுங்கிவிட்டு உள்ளே சென்றான் ஹனுமான்.

''என் பிரபுவே  ஸ்ரீ ராமா, எங்கே என் தாய் சீதம்மா, யார் இந்த அழகற்ற பெண். இவளுக்கென்ன  உன்னிடம் வேலை?'' என்று சத்யபாமாவை காட்டி கேட்டான் ஹனுமான். ஸத்யபாமாவுக்கு  தனது அழகில் கர்வம். அதற்கு தான் இந்த பரிசு.

''ஹனுமான், எப்படி இங்கே உள்ளே வந்தாய்?  வாசலில் எவரும் யார் நீ  என்று கேட்டு தடை செய்ய வில்லையா?
''அதை ஏன் கேட்கிறீர்கள் பிரபு,  வாசலில் சுதர்சன சக்ரம் என்னை தடுத்து நிறுத்தியது. என் பிரபுவை உடனே காணவேண்டும் என்று வந்த எனக்கு அதோடு நின்று பேச, சண்டைபோட,  நேரம் இல்லை.  என்னை வந்து பார் என்று கட்டளையிட்ட உங்களை காக்க வைக்கவும்   மனமில்லை.  ஆகவே அதை அப்படியே விழுங்கிவிட்டேன்..  வாயைத்  திறந்து சுதர்சன சக்ரத்தை வெளியே விட்டான் ஹனுமான்.

இதெல்லாம் தூர நின்று பார்த்துக்  கொண்டிருந்த கருடன் சிலையாக நின்றான். இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அவன் சந்தித்ததே இல்லை.  ஹனுமானின் பக்தி, பணிவு,  ராமனிடம் கொண்ட  அன்பு, நேசம், சுதர்சன சக்ரத்தையே செயலிழக்கச்  செய்யும் வலிமை, வீரம், அவனை  சரணடையச் செய்து அவன் கர்வம் அவனை விட்டு நீங்கியது. சத்யபாமா தலை குனிந்து நின்றவள் கர்வமும் விலகியது.

கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் புன்னகையோடு  பார்த்து  ஹனுமனை  அன்போடு அணைத்தார்  ''கருடா, சக்தி பணிவுடன் கலந்திருந்தால் தான் அதற்கு மதிப்பு'' புரிகிறதா? என்றார்.
அதற்கப்புறம்  என்ன  கருடன் பெரிய திருவடி,  ஹனுமான் சிறிய திருவடி.. இன்றும்  இருவரும் நாராயணனோடு இணைபிரியாதவர்கள். நம்மால் வணங்கப்படுபவர்கள். 
 

Tuesday, September 28, 2021

sriman narayaneeyam

 ஸ்ரீமந்  நாராயணீயம் -   நங்கநல்லூர்  J K  SIVAN

63 தசகம்

63  மலையை விரலால் நிறுத்தியவன் 

தர்பாரி கானடா என்று ஒரு மனத்தைக் கவரும் ராகம் உண்டு.   அந்த  ராகத்தில் நாராயண தீர்த்தரின் அற்புத பாடல் ஒன்று இன்றும் பல நூறு ஆண்டுகளாக  பாடப்பட்டு வருகிறதே தெரியுமா?  அது தான் ''கோவர்தன கிரிதரா'' ..பல முறை நான் திரும்ப திரும்ப கேட்டு மகிழும் ஒரு பாடல். கிருஷ்ணனுக்கு கோவர்தன கிரிதரன் என்று ஒரு பெயர் எதனால் வந்தது என்பதை இந்த தசகம் சொல்கிறது. 

ददृशिरे किल तत्क्षणमक्षत-
स्तनितजृम्भितकम्पितदिक्तटा: ।
सुषमया भवदङ्गतुलां गता
व्रजपदोपरि वारिधरास्त्वया ॥१॥

dadR^ishire kila tatkshaNamakshata
stanita jR^imbhita kampita diktaTaaH |
suShamayaa bhavadangatulaaM gataa
vrajapadOpari vaaridharaastvayaa || 1

த³த்³ருஶிரே கில தத்க்ஷணமக்ஷத-
ஸ்தனிதஜ்ரும்பி⁴தகம்பிததி³க்தடா꞉ |
ஸுஷமயா ப⁴வத³ங்க³துலாம் க³தா
வ்ரஜபதோ³பரி வாரித⁴ராஸ்த்வயா || 63-1 ||

கோகுல பிருந்தாவன மக்கள்  கதி கலங்கி நின்ற காரணம் மேலே  செவிடு பட இடிக்கும் கரு மேகங்களும்  தலையில் விழுந்து விடுமோ என்று பயத்தை அளித்த  தாழ்ந்த கனமான   சூல் கொண்ட மேகங்களும் தான். மின்னல் கண்ணைக் குருடாக்கும்படி  பளிச்சிட்டது. இப்படியா விடாமல் இடி இடிக்கும்?  வரப்போகும் ஆபத்துக்கு  கட்டியம் கூறுகிறதோ?  நாலா திசைகளிலும் இப்படி இருந்தால் எங்கே ஓடி ஒளிவது?  கிருஷ்ணா,   நீ தான் மேலே  இப்படி எங்கும் கருப்பாக உன் தேஹ நிறத்தைக்  காட்டி  படர்ந்திருக்கிறாயா ? 

विपुलकरकमिश्रैस्तोयधारानिपातै-
र्दिशिदिशि पशुपानां मण्डले दण्ड्यमाने ।
कुपितहरिकृतान्न: पाहि पाहीति तेषां
वचनमजित श्रृण्वन् मा बिभीतेत्यभाणी: ॥२॥

vipulakarakamishraistOya dhaaraa nipaataiH
dishi dishi pashupaanaaM maNDale daNDyamaane |
kupita hari kR^itaannaH paahi paahiiti teShaaM
vachanamajita shR^iNvan maa bibhiitetyabhaaNiiH || 2

விபுலகரகமிஶ்ரைஸ்தோயதா⁴ரானிபாதை-
ர்தி³ஶி தி³ஶி பஶுபானாம் மண்ட³லே த³ண்ட்³யமானே |
குபிதஹரிக்ருதான்ன꞉ பாஹி பாஹீதி தேஷாம்
வசனமஜித ஶ்ருண்வன்மா பி³பீ⁴தேத்யபா⁴ணீ꞉ || 63-2 ||

ஆலங்கட்டி மழை தெரியுமா.  கல் வீசப்பட்டது போல் மேலே மழையோடு  கல்லு கல்லாக மழைத் துளிகள் பெரிசாக விழும்.அனுபவித்ததுண்டா. மீன் தவளைகள் கூட மேகத்திலிருந்து மேலே விழும்.  மேகங்கள் வெடித்து  ஜோ என்று மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.  அடடா என்ன காரியம் செய்து விட்டோம்,  இந்திரனின் கோபத்துக்கு இப்படி  வீணாக ஆளாகிவிட்டோமே. எப்படி இந்த சீற்றத்திலிருந்து  தப்புவது?கோபர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள்.  பகவானே எங்களைக்  காப்பாற்று என்று வேண்டினார்கள். அவர்கள் உன்னை எங்கோ தேடி கூப்பிடுவது அருகிலேயே இருந்த உன் காதில் விழாமல் இருக்குமா  கிருஷ்ணா?  கூப்பிட்ட குரலுக்கு  நீ ஓடிவருபவன் ஆயிற்றே.  யாரும் பயப்படாதீர்கள் என்று பதிலளித்தாய்.

कुल इह खलु गोत्रो दैवतं गोत्रशत्रो-
र्विहतिमिह स रुन्ध्यात् को नु व: संशयोऽस्मिन् ।
इति सहसितवादी देव गोवर्द्धनाद्रिं
त्वरितमुदमुमूलो मूलतो बालदोर्भ्याम् ॥३॥

kula iha khalu gOtrO daivataM gOtrashatrOH
vihatimiha sa rundhyaat kO nu vaH samshayO(a)smin |
iti sahasita vaadii deva gOvardhanaadriM
tvaritamudamumuulO muulatO baaladOrbhyaam || 3

குல இஹ க²லு கோ³த்ரோ தை³வதம் கோ³த்ரஶத்ரோ-
ர்விஹதிமிஹ ஸ ருந்த்⁴யாத்கோ நு꞉ வ꞉ ஸம்ஶாயோ(அ)ஸ்மின் |
இதி ஸஹஸிதவாதீ³ தே³வ கோ³வர்த⁴னாத்³ரிம்
த்வரிதமுத³முமூலோ மூலதோ பா³லதோ³ர்ப்⁴யாம் || 63-3 ||

''ஏன் இப்படி பதட்டப்படுகிறீர்கள்?  நம்மையும், நம் பசுக்களையும் ஆதரித்து, உணவளித்து வாழ்வளிக்கும் கோவர்தன மலை நம்மை கைவிட்டு விடுமா? இதல்லவோ நமது  உண்மையான  கடவுள்? ஆமாம்,   இது நிச்சயம் தேவேந்திரன் வேலை தான். சந்தேகமே இல்லை. வாருங்கள் என்னோடு''   என்று அவர்கள்  எல்லோரையும் அழைத்துக்கொண்டு கோவர்தன கிரி அருகே சென்றாய்.   உன் இடது கரத்தின் சுண்டுவிரலால் அப்படியே  கோவர்தன கிரியை அலாக்காக தூக்கி குடைபோல் பிடித்தாய்.

तदनु गिरिवरस्य प्रोद्धृतस्यास्य तावत्
सिकतिलमृदुदेशे दूरतो वारितापे ।
परिकरपरिमिश्रान् धेनुगोपानधस्ता-
दुपनिदधदधत्था हस्तपद्मेन शैलम् ॥४॥

tadanu girivarasya prOddhR^itasyaasya taavat
sikatilamR^idudeshe duuratO vaaritaape |
parikara parimishraan dhenugOpaanadhastaat
upanidadhadadhatthaa hastapadmena shailam ||4

தத³னு கி³ரிவரஸ்ய ப்ரோத்³த்⁴ருதஸ்யாஸ்ய தாவத்
ஸிகதிலம்ருது³தே³ஶே தூ³ரதோ வாரிதாபே |
பரிகரபரிமிஶ்ராந்தே⁴னுகோ³பானத⁴ஸ்தா-
து³பனித³த⁴த³த⁴த்தா² ஹஸ்தபத்³மேன ஶைலம் || 63-4 ||

''குருவாயூரா , உனது தாமரை இதழ் போன்ற மென்மையான கரங்களுக்கு இத்தனை வலிமையா? ஏதோ ஒரு புஷ்பத்தை தூக்கி உயர்த்திப் பிடிப்பதைப் போல் அல்லவா கோவர்தன கிரி உன் கரத்தில் சிறுவிரல் மேல் நின்றது.!  கனமழை பெய்தாலும்  அளவற்ற தாகத்தால் அத்தனை நீரையும் அந்த வ்ரஜ பூமி  உறிஞ்சியது கூட உன் மாயமோ?   மழையினால் எந்த பாதிப்பும் இல்லாமல்  அனைத்து பசுக்கள், கன்றுகள் கோபர்கள் கோபியர்கள் மற்ற ஜீவராசிகள் எல்லாமே சௌக்யமாக உன் ''குடை நிழலில்'' நின்று மழையை வேடிக்கை பார்த்தன.  மழையை வேடிக்கை பார்ப்பது நம் எல்லோருக்கும் சிறுவயதிலிருந்தே ஒரு அழகான விருப்பமான பொழுது போக்கு இல்லையா?

 भवति विधृतशैले बालिकाभिर्वयस्यै-
रपि विहितविलासं केलिलापादिलोले ।
सविधमिलितधेनूरेकहस्तेन कण्डू-
यति सति पशुपालास्तोषमैषन्त सर्वे ॥५॥
 
vidhR^itashaile baalikaabhirvayasyaiH
api vihita vilaasaM keli laapaadi lOle |
savidha milita dhenuurekahastena kaNDuu -
yati sati pashupaalaastOShamaiShanta sarve || 5

ப⁴வதி வித்⁴ருதஶைலே பா³லிகாபி⁴ர்வயஸ்யை-
ரபி விஹிதவிலாஸம் கேலிலாபாதி³லோலே |
ஸவித⁴மிலிததே⁴னூரேகஹஸ்தேன கண்டூ³-
யதி ஸதி பஶுபாலாஸ்தோஷமைஷந்த ஸர்வே || 63-5 ||

''கிருஷ்ணா, நீ என்ன  பேசாமலா  மலையை தூக்கி தாங்கி பிடித்துக் கொண்டு நின்றாய் ? வழக்கம்போல் உன் வேடிக்கை பேச்சு எல்லோரையும் கவர்ந்ததே.  சுவாரஸ்யமான விஷயங்களை சொல்வதில் உனக்கு ஈடு இணை யார்?  கீதை ஒன்றே போதுமே. கோபர்களுக்கு  ஆட்டம் பாட்டத் தோடு உன்னோடு இணைந்து அங்கே  ஆனந்தமாக  கோவர்தன மலைக்கு கீழே பொழுது கழிந்து கொண்டிருந்தது. கன்றுகள்  ஆனந்தமாக உன் மேல் உரசிக்கொண்டு நின்றன. நாவால் நன்றியோடு நக்கின. இதெல்லாம் கண்ட கோபர்கள் மனம் உன்னை நன்றியோடு வாழ்த்தியது.

अतिमहान् गिरिरेष तु वामके
करसरोरुहि तं धरते चिरम् ।
किमिदमद्भुतमद्रिबलं न्विति
त्वदवलोकिभिराकथि गोपकै: ॥६॥

ati mahaan girireSha tu vaamake
karasarOruhi taM dharatechiram |
kimidamadbhuta madribalaM nviti
tvadavalOkibhiraakathi gOpakaiH || 6

அதிமஹான் கி³ரிரேஷ து வாமகே
கரஸரோருஹி தே த⁴ரதே சிரம் | [**தம் த⁴ரதே**] 
கிமித³மத்³பு⁴தமத்³ரிப³லம் ந்விதி
த்வத³வலோகிபி⁴ராகதி² கோ³பகை꞉ || 63-6 ||

கோபர்கள்  ஆச்சர்யத்தில் வாய் பிளந்து அதிசயித்தனர். ஆஹா,   இந்த கிருஷ்ணன் எவ்வளவு சக்தி வாய்ந்தவன். இவ்வளவு பெரிய மலையை அனாயாசமாக தூக்கி நிறுத்தி  ஏதோ தாமரைப் பூவை உயர்த்தி குடை போல்  பிடிப்பதாக அல்லவோ  காட்சி அளிக்கிறான்.  நமக்காக அவன் என்ன வெல்லாம் செய்கிறான். ஒன்று கிருஷ்ணன் பலசாலியாக இருக்கவேண்டும் அல்லது கோவர்தன கிரி தனது சக்தியெல்லாம் இழந்து எடையற்றதாக ஆகி இருக்க வேண்டும் எது உண்மை? என்று யோசித்தார்கள்.

अहह धार्ष्ट्यममुष्य वटोर्गिरिं
व्यथितबाहुरसाववरोपयेत् ।
इति हरिस्त्वयि बद्धविगर्हणो
दिवससप्तकमुग्रमवर्षयत् ॥७॥

ahaha dhaarShTyamamuShya vaTOrgiri
M vyathita baahurasaavavarOpayet |
iti haristvayi baddhavigarhaNO
divasasaptakamugramavarShayat || 7

அஹஹ தா⁴ர்ஷ்ட்யமமுஷ்ய வடோர்கி³ரிம்
வ்யதி²தபா³ஹுரஸாவவரோபயேத் |
இதி ஹரிஸ்த்வயி ப³த்³த⁴விக³ர்ஹணோ
தி³வஸஸப்தகமுக்³ரமவர்ஷயத் || 63-7 ||

தேவேந்திரன் ''ஹா ஹா''  என்று சிரித்தான்.  அந்த சின்ன யாதவப் பயல் எத்தனை நேரம் அந்த மலையை தூக்கிக் கொண்டு நிற்கமுடியும். கை  துவண்டு போன பின்  அல்லவோ இருக்கிறது வேடிக்கை., மலை கீழே விழும். அப்புறம்  மழையிலிருந்து தப்ப  முடியுமா அவர்களால். பார்த்து விடுவோம்.      ''மழையே,   இன்னும் உக்ரமாக தொடர்ந்து பெய் ''  என ஆணையிட்டான்.
ஏழுநாள் மழை ஜோ  வென்று இடைவிடாமல் தொடர்ந்து பெய்தது.

अचलति त्वयि देव पदात् पदं
गलितसर्वजले च घनोत्करे ।
अपहृते मरुता मरुतां पति-
स्त्वदभिशङ्कितधी: समुपाद्रवत् ॥८॥

achalati tvayi deva padaatpadaM
galita sarvajale cha ghanOtkare |
apahR^ite marutaa marutaaM pati
stvadabhishankitadhiiH samupaadravat || 8

அசலதி த்வயி தே³வ பதா³த்பத³ம்
க³லிதஸர்வஜலே ச க⁴னோத்கரே |
அபஹ்ருதே மருதா மருதாம் பதி-
ஸ்த்வத³பி⁴ஶங்கிததீ⁴꞉ ஸமுபாத்³ரவத் || 63-8 ||

கிருஷ்ணா, நீ தந்திரமே உருவானவன். பனங்காட்டு நாரி சலசலப்புக்கு அஞ்சுமா? ஏழுநாள் அல்ல ஏழு வருஷமும் நீ  அசையாமல் நிற்க கூடியவன் என்று இந்திரன் அறிவானா? மழை பெய்து சரக்கு தீர்ந்து போய்   ஓய்ந்து விட்டது. காற்று  வலுவற்ற மேகங்களை தூர துரத்தியது.  தேவேந்திரன் திகைத்தான். உடல் நடுங்கியது.  நெஞ்சு படபடத்தது. உன்னைக்கண்டு பயந்து ஓடினான். 

शममुपेयुषि वर्षभरे तदा
पशुपधेनुकुले च विनिर्गते ।
भुवि विभो समुपाहितभूधर:
प्रमुदितै: पशुपै: परिरेभिषे ॥९॥

shamamupeyuShi varShabhare tadaa
pashupadhenukule cha vinirgate |
bhuvi vibhO samupaahita bhuudharaH
pramuditaiH pashupaiH parirebhiShe || 9

ஶமமுபேயுஷி வர்ஷப⁴ரே ததா³
பஶுபதே⁴னுகுலே ச வினிர்க³தே |
பு⁴வி விபோ⁴ ஸமுபாஹிதபூ⁴த⁴ர꞉
ப்ரமுதி³தை꞉ பஶுபை꞉ பரிரேபி⁴ஷே || 63-9 ||

பொட்டு மழை, சொட்டு தண்ணீர்  கூட இல்லாமல் மழை நின்று வெயில் காய ஆரம்பித்தது.  கோபர்களின் குடும்பங்கள், கன்று பசுக்களோடு வீடு திரும்பின.  கோவர்தன கிரியை மெதுவாக அது நின்ற இடத்திலேயே இறக்கி விட்டாய்.  எல்லோரும் ஓடிவந்து உன்னைக் கட்டிக்கொண்டார்கள்.  வார்த்தைகள் சொல்ல முடியாததை சில சமயம் நமது கைகள் அணைத்துக் கொள்வதன் மூலம் வெளிப்படுத்தும் அல்லவா? 

धरणिमेव पुरा धृतवानसि
क्षितिधरोद्धरणे तव क: श्रम: ।
इति नुतस्त्रिदशै: कमलापते
गुरुपुरालय पालय मां गदात् ॥१०॥

dharaNimeva puraa dhR^itavaanasi
kshitidharOddharaNe tava kaH shramaH |
iti nutasitradashaiH kamalaapate
gurupuraalaya paalaya maaM gadaat ||10

த⁴ரணிமேவ புரா த்⁴ருதவானஸி
க்ஷிதித⁴ரோத்³த⁴ரணே தவ க꞉ ஶ்ரம꞉ |
இதி நுதஸ்த்ரித³ஶை꞉ கமலாபதே
கு³ருபுராலய பாலய மாம் க³தா³த் || 63-10

இந்திரன் செயல், உன்  அமைதியான போற்ற எதிர்ப்பு,  நடந்த  ஆச்சர்யமான செயல் அனைத்தையும் விண்ணிலிருந்து தேவர்களும் பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள்.  எவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு !  உன்னை யாரென்று தெரியுமே அவர்களுக்கு. ''தெய்வமே  நீ முன்பொரு காலத்தில் வராஹனாக வந்து  இந்த பூமியையே உருட்டி  கடலுக்கடியிலிருந்து  மேலே தூக்கிக் கொண்டுவந்தவன். இந்த பூமியில் உள்ள ஒரு சிறு மலையை தூக்குவதா உனக்கு ஸ்ரமம்? என்று போற்றி பாடினார்கள்.  எண்டே குருவாயூரப்பா, என் நோயையும் தூக்கி கடாசி விட்டு என்னையும் ரக்ஷிப்பாயா?


ORU ARPUDHA GNANI

 ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர்  J K  SIVAN 


''சிட்டாய் பறக்கும் ஸ்வாமிகள்''

சேஷாத்ரி  ஸ்வாமிகளை பற்றி  நிறைய எழுத  ஆசை. ஆனால்  அதற்கு ரெண்டு விஷயங்கள் தடையாக இருக்கிறது.  ஒன்று  அவர்  விளம்பர சாமியார் இல்லை என்பதால், எவரையும் கிட்டே அணுக ஒட்டாதவர், யாருக்கும் குரு இல்லை,  தனக்கென ஒரு இடம் தேடாத, புகழ் விரும்பாத ப்ரம்மஞானி என்பதால் அதிக விஷயங்கள் அவரைப்பற்றி வெளி உலகம் அறியமுடியாமல் போய் விட்டது.   குழுமணி ஸ்ரீ நாராயணஸ்வாமி சாஸ்திரிகள் போன்ற ஒரு சிலரால் வெளியே கசிந்த விஷயங்கள் தவிர அதிகம் வெளியே தெரியாத ஒரு மஹான் ஆகிவிட்டார். 

 ரெண்டாவது அவரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் என் கண்ணில் நீர் திரையிடுகிறது. பார்க்க முடியவில்லை. கண் கோளாறு எதுவும் அல்ல. மனதில் பொங்கி வழியும் பக்தி ஆனந்தக் கண்ணீர் தான் திரையிடுகிறது. மனம் நினைக்கும் விஷயத்தை கை  எழுதமுடியவில்லை ஸ்வாமி. நான் என்ன பண்ணுவேன்.

சேஷாத்ரி ஸ்வாமிகள் என்கு  சென்றாலும் அவர் பின்னே தொடர்ந்து செல்லும் பக்தர் கூட்டம் பெருகிக்  கொண்டே வந்தது.

 திருவண்ணாமலையில் போளூர் தாலுக்கா பக்கம் துரிஞ்சி குப்பம் என்று ஒரு குட்டி கிராமம். அங்கே  ஒரு பழைய  ஆதி பராசக்தி அம்மன் கோவில் உண்டு.  ஒருநாள் அதற்கு செல்லும் பக்தர்கள் கண்ணுக்கு  ஸ்வாமிகள் அம்பாளாக தென்பட்டாரா  என்று தெரியவில்லை அவரை பின் தொடர்ந்
தார்கள்.

''இது  திருவண்ணாமலை  போகிறது' என்று மண்ணில்  எழுதி காட்டினாரோ, சுவற்றில் கரியில் எழுதினாரோ, காகிதத்தில் எழுதிக்காட்டினாரோ சரியாக தெரியவில்லை.  மெளனமாக வேகமாக பின் தொடர்பவர்களை விட்டு விலகிச்  சென்றார்.

மார்செட்டி குளம் கிராமம் பக்கம் வந்தபோது  பின்னால் தொடர்ந்து வந்தவர்களிடம்  குளக் கரையில்  நிறைய  களாக்காய் காய்த்திருக்கிறது போய் பறித்துக்கொண்டு வாருங்கள் என்று அறிவித்து விட்டு சென்றார்.   சில  நிமிஷங்க
ளிலேயே  அவர்  கை நிறைய  களாக்காய் சேர்ந்துவிட்டது. குழந்தை மாதிரி ஆனந்தம். சிரிப்பு.   புளிப்பாக இருக்கும் சிலவற்றை சுவைத்தார்.  மற்றவற்றை  போட்டுவிட்டு,  நடந்து சென்று அடுத்த ஊர்  ஐயன் தோப்பை அடைந்தார்.

 எவ்வளவோ பேரை அவர்  எப்படியோ  பின் தொடராமல் கழற்றி விட்டாலும் மூன்று பேர் விடாமல் நிழல் போல் தொடர்ந்து வந்தார்கள்.   அது காலை வேளை. அவர்  ஒரு இடத்தில் உட்கார்ந்த
போது  அவர்கள் இவர் இங்கே இருக்கட்டும்,  சீக்கிரம்  அதற்குள்  நாம்   குளித்து விட்டு வந்துவிடுவோம்  என்று நகர்ந்த சமயம் சிட்டாக  பறந்துவிட்டார்.   குளித்து விட்டு வந்தவர்கள் எங்கு தேடியும்  ஸ்வாமிகளைக்  கண்டு பிடிக்க முடியவில்லை.

அடுத்த சில  மாதங்களுக்கு  ஸ்வாமிகள் எங்கிருக்
கிறார் என்ற அட்ரஸே  இல்லை.  காஞ்சிபுரத்துக்கு தெற்கே உள்ள  தூசி மாமண்டூர் எனும் கிராமத்தில்  பாண்டவர் குகைகள் அருகே ஸ்வாமிகள் செல்வதை  பார்த்ததாக ஒரு சிலர் தகவல் தந்தார்கள்.  உடனே ஒரு கூட்டம் அங்கே சென்றது.

 ஸ்வாமிகளின் தம்பி   நரசிம்ம ஜோசியரும்  இந்த சேதி கேட்டு விழுந்தடித்துக்கொண்டு அங்கே ஓடினார். ரொம்ப நாளாக  அண்ணாவை தேடிக்
கொண்டிருப்பவர் அல்லவா?   அங்கிருந்ததாக சிலர் சொன்னாலும்  ஸ்வாமிகள்  அதற்குள் வேறு எங்கோ சென்றுவிட்டார்.  

சில நாட்கள் வேகமாக வளர்ந்து  வாரங்களாகி விட்டன . வடாற்காடு ஜில்லாவில் திருப்பத்தூரில் ஸ்வாமிகள் இருப்பதாக ஒரு சேதி கிடைத்தது.  

எனக்குத் தெரிந்து  திருச்சி - சென்னை நெடுஞ்
சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்  இருக்கிறது.  இங்கேயா  ஸ்வாமிகள் வந்தார்?  ரொம்ப அற்புதமான ஆலயம் அது. சமய புரத்தில் இருந்து 15 கி.மீ.தூரம்.  பிரம்மபுரீஸ்வரர்  ஆலயத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால்  காற்றில் எங்கும்  அங்கே  அதிர்வலைகள் பரவி இருந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர், அது தான்  காலப்போக்கில் ‘திருப்
பட்டூர் ’.  இங்கே  புலியின் கால்களை கொண்ட  ‘வியாக்ர பாத ரிஷி  சிவனை நோக்கி தவம் செய்த ஸ்தலம்.  இந்த ஆலய  குளத்து நீரைத் தொட்டாலே
கங்கையில் நீராடிய பலன்.  அவ்வளவு விசேஷம்.   காசிக்கு சமமான புனித ஸ்தலம்.   விஷ்ணுவை  வணங்கி தொழுததால், ஆதிசேஷன் பதஞ்சலி முனிவரான  ஸ்தலம். 
சிவபெருமான், பிரம்மனின் ஐந்தாவது  தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். திருவையாறு ஸப்த ஸ்தான ஆலயங்களில் ஒன்று. நிறைய இது பற்றி எழுதியிருக்
கிறேன்.  அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்
டது இந்த  திருப்பட்டூர் ஸ்தலத்தில் .  அம்பாள் பெயர்  பிரம்ம சம்பத் கவுரி.கருணா  சாகரி . இங்கு
பிரம்மாவை  தனி சந்நிதியில்வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம். ரொம்ப விசேஷமானவர்.இதுவரை தரிசிக்கா
தவர்கள் நிச்சயம் ஒரு முறையாவது சென்று வணங்கவேண்டிய ஸ்தலம்.

சேஷாத்ரி  ஸ்வாமிகள் இந்த  ஆலயத்திலும்  முத்துக்குமாரசுவாமி  ஆலயத்திலும்  சிலநாள் தங்கி  தரிசித்தார். எதற்காக  ஸ்வாமிகள் இங்கே வந்தார்  என்பது  கோவிலில் உள்ள ப்ரம்மாவுக்கே தெரியாத ப்ரம்ம ரஹஸ்யம்.  அவர் அத்தை மகள்  காகினி இங்கே கல்யாணமாகி கணவன் வெங்கட்ரமண ஐயரோடு வாழ்ந்தாள் . அவளை தான் மரகதம் தன் மகன் சேஷாத்திரிக்கு மணமுடிக்க ஆசையாக இருந்தும், சித்தப்பா  ராமஸ்வாமி  ஜோசியர் தான்  சேஷாத்திரிக்கு சந்நியாசி ஜாதகம். மண வாழ்க்
கையில் ஈடுபடமாட்டான்  என்று கல்லைத் தூக்கி  தலையில் போட்டு அந்த  ஏக்கத்திலேயே விரைவில் அம்மா மரகதம் மறைந்து போனதை ஏற்கனவே சொன்னேனே.

சேஷாத்ரியின்  சித்தப்பா  ராமஸ்வாமி ஐயர் சகோதரி  வெங்கட லக்ஷ்மி மாப்பிள்ளை  வெங்கட்ரமண  ஐயருக்கு   கடிதாசு எழுதினார். 

 ''மாப்பிள்ளே, உங்க ஊருக்கு தான்  சேஷாத்திரி வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன். கொஞ்சம் திருப்பத்தூரில் தேடிப்பாருங்கோ. இருந்தா உடனே தந்தி போல் பாவித்து எனக்கு தெரியப்படுத் துங்கோ ''
வெங்கட்ரமணன்தேடிக்கொண்டிருந்த போது  சேஷாத்திரி ஒருநாள் மார்க்கெட் பக்கம்  அவர் கண்ணில்  பட்டுவிட்டார்.  நைஸாக   பேசி ஸ்வாமிகளை  வீட்டுக்கு அழைத்தார். ஸ்வாமிகளின் சித்தப்பா ஜோசியர்  ராமஸ்வாமி ஐயர் எழுதிய கடிதத்தை காட்டினார்.  எவ்வளவோ வற்புறுத்தியும்  ஸ்வாமிகள் வீட்டுக்குள் நுழையாமல் திண்ணை
யிலேயே  உட்கார்ந்துவிட்டார்.  அத்தை வெங்கட
லக்ஷ்மி சேஷாத்ரியின் வாடிய முகம், ஒட்டி உலர்ந்த வயிறு,  கலைந்த  எண்ணெய் காணாத தலை,  கிழிசல் வேஷ்டி துண்டு--  இதைஎல்லாம்  பார்த்து அழுதாள்.  உறவு எதையும் சுவாமி லக்ஷியம் பண்ணவில்லை.   என்ன கேள்வி கேட்டாலும் அவர் பதில் சம்பந்தமில்லாமல் இருந்தது. இல்லை இல்லை அந்த  மஹான் சொன்னது அவர்களுக்கு புரிய
வில்லை.  உயர்ந்த வேதாந்தி எளிதில் புரிவாரா? 

''உள்ளே வாடா  சேஷு  கண்ணா என்று அத்தை கெஞ்சினாள்.  ஏதோ எங்கோ  கவனத்தில் சிரித்துக் கொண்டே  தெருவையே வெறிக்கப்  பார்த்துக்
கொண்டிருந்தார் ஸ்வாமிகள்.  அத்தை மகள் காகினி நெஞ்சு படபடத்தது.  அம்மாஞ்சி இப்படி ஆயிட்டானே .  இப்படி  பரப்ரம்மமா வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கானே.  அவனைப் பார்க்கும்போது வயிறு பகபகவென்று பத்தி எரியறதே.இப்போது பிறன் மனைவி என்பதால் பேச முடியவில்லை. ஸ்வாமிகள் அவள் இருந்த திசை
யைக் கூட திரும்பி பார்க்கவில்லை. உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். சாப்பிட்டுவிட்டு திண்ணையிலே சாய்ந்தார்.  அவர் பக்கத்திலேயே  வெங்கட்ரமணய்யர் படுத்து தூங்கினார்.  பொழுது விடிந்தது. அத்தை வெங்கட லக்ஷ்மி  வாசலில் பெருக்கி நீர் தெளித்து கோலம் போட  ஐந்து மணிக்கே எழுந்து வந்தாள் . அவள் கண்கள் திண்ணையில் சேஷுவைத்  தேடின.  சேஷாத்ரி ஸ்வாமிகள் படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. எப்போது எழுந்து எங்கே போனார்?

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  சிவன் 


பையனின் ஆசை 

எங்கோ படித்த ஒரு விஷயத்தை சுருக்கித்  தருகிறேன்.
மஹா பெரியவா என்றாலே  ஒரு தனித்வம்.     நடை உடை பாவனை, பேச்சு, செயல் எல்லாவற் றிலுமே தெய்வம் மனிதனிடமிருந்து வித்யாசமாக தான்காட்சி தரும்.

தேனம்பாக்கத்தில் மஹா பெரியவா இருந்த ஒரு சமயம் அது.   அதிர்ஷ்ட வசமாக பெரியவாளுக்கு சற்று  ரெஸ்ட்  கிடைத்தது  பக்தர்கள் கூட்டம் வந்து போய்விட்டது. அடுத்து எவராவது வருவதற்குள் பெரியவா சில நிமிஷங்கள்  விஶ்ராந்தியாக கிணத்தடியில் அழகாக அவருக்கே உரிய பாணியில் உடலை குறுக்கிக் கொண்டு, கால்களை பின்னிக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். அனேகமாக எல்லாரும் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு போயாச்சு இல்லையா.  யாரும் வந்தாலும் வராவிட்டாலும் மஹா பெரியவாளின் அனுக்ரஹம்  எங்கோ  யாருக்கோ, எப்போதுமே, கிடைத்துக் கொண்டே இருக்குமே. அது தானே  அவர் ஸ்டைல்.
பெரியவா  கண்களில்  ஒரு நிழல் தென்பட்டது. 
''அங்க யாரோ நிக்கறாப்ல இருக்கே! என்னன்னு கேளு”
யாரோ  ஒரு  பையன்  கண்களில் பக்தி பரவஸம் மின்ன, இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பிக் கொண்டு தன்னை மறந்த நிலையில் பெரியவாளை தர்ஶனம் பண்ணிக் கொண்டிருந்தான்.
அணுக்க தொண்டர்  அவனிடம் சென்றார்.
''என்னப்பா, பெரியவா தர்ஶனத்துக்குத்தாநீ வந்தே? கிட்டக்க போய் நன்னா தர்ஶனம் பண்ணிட்டு, நமஸ்காரம் பண்ணிக்கோப்பா! …”
''பையன்  பார்வை  பெரியவா  மேல்  ஆணி அடித்திருந்தது.  அதை விட்டு நகரவில்லை!  மடத்து தொண்டர்  கேட்டது காதில் விழுந்ததா இல்லையா?''
''உன்னைத்தாம்பா கேக்கறேன்,  உனக்கு என்ன வேணும்? பெரியவா கிட்டக்க போப்பா. போய் அவர்கிட்டே கேளு .”
” நானும்  பெரியவா மாதிரி ஆகணும்!!”
''அட  ஈஶ்வரா !………
“இங்க பாருப்பா,இந்த மாதிரில்லாம் ‘தத்துபித்து‘ன்னு பெரியவாட்ட போய் கேட்டுடாதே. என்ன? புரிஞ்சுதா? ”
''என்ன  சொல்றேள்  நீங்க.  பெரிய சக்ரவர்த்தி கிட்ட போய், உப்பு, புளி வேணும்னா கேப்பா?…பகவான்  கிட்ட பகவானையே கேக்காம, அழியற ஶரீர ஸௌக்யங்களை, ஸுக போகங்களையா கேப்பா? நான் கேட்டதுலே என்ன தப்பு ?''
“ஸாதாரணமா எல்லாரும் கேக்கறா மாதிரி.  வேலை,  ப்ரமோஷன், கல்யாணம் கார்த்தி, வ்யாதி சொஸ்தம், படிப்பு, பதவி…ன்னு இப்டித்தான் எல்லாரும் கேட்பா ..என்ன? ஸரியா?…”
“ஒங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதானா '' என்பது போல் பையன்  தொண்டரைப்  பார்த்தான்.
“வா…. வந்து நமஸ்காரம் பண்ணிக்கோ!.”
 தொண்டரோடு  பெரியவா முன்னால்  சென்றான்.  பெரியவாளுக்கு நான்கு முறை நமஸ்காரம் பண்ணினான். பேச்சே வரவில்லை! கண்கள்  பெரியவாளின் முகத்தையே ஆனந்தமாக பருகிக் கொண்டிருந்தன!. 
பையன்  ரெண்டுங்கெட்டானாச்சே.  பெரியவா கிட்டே  வாயை திறந்து  ராபணா ன்னு    ஏதாவது ‘ஏடாகூடமாக‘  பேசிடப்போறானே...  தொண்டருக்கு கவலை.   தானே  பேச்சை ஆரம்பித்தார். …
“இந்த பையனுக்கு.. பெரியவா அனுக்ரஹம் வேணுமாம்……தொண்டர்  பெரியவாளுக்கு காது கேட்க உரக்க சொன்னார்.…”
பெரியவா  பையனுக்கு ப்ரஸாதம் குடுத்தார். சென்றுவிட்டான்.
அப்பாடா! நல்லவேளை ... பையன் வாயை திறக்காமல் போய்விட்டான்... தொண்டர் நிம்மதியாக மூச்சு விட்டார்.   ஆனால்  பெரியவா  அவரை கிட்டே அழைத்தார். 
” ஏண்டா…அந்த பையன் கிட்டே ஏதோ  ரொம்ப நேரமா பேசிண்டிருந்தியே?  என்ன சொன்னான்?”
“இல்ல பெரியவா  அவன் ரெண்டுங்கெட்டான்.. அசடாட்டமா  பேசினான்.
'' அப்படி என்ன பேசினான் ?'
''அவனுக்கு…. பெரியவா மாதிரி தானும்  ஆகணுமாம்! ……”
“நீ என்ன பதில் சொன்ன?...”
“…………….”
“சொல்லு   நீ  என்ன  பதில் சொன்னே?''
இந்த மாதிரில்லாம் தத்துபித்துன்னு பெரியவாட்ட கேக்கப்டாது….ன்னு சொல்லிட்டியோ?”
ஸுமார் 25 அடி தள்ளி நின்று பேசியதுதுல்லியமாக  பெரியவா காதில் விழுந்திருக்கிறது..!!!
 எல்லா தெசைலயும் கோடிகோடியா காதுகளும், கண்களும், கைகளும் வெச்சிண்டு, நம்ம முன்னால, ஒரு ‘ஸ்வாமிகள்’னு ஒரு வேஷம் போட்டுண்டு, காஷாயம் கட்டிண்டு உக்காந்துண்டு இருக்காரே!… இவருக்கா காது கேக்காதுன்னு உரக்க பேசறேன். இப்போ…. வகையா மாட்டிண்டேனே!”
“ஆ……..மா…..பெரியவா”
‘அப்பாடா! எப்படியோ உண்மையை   பெரியவா கிட்டே  சொல்லியாச்சு. !
நீ…அப்டி சொல்லியிருக்கப்டாது.! அவன், ஏன் அப்டி கேட்டான்னு ஒனக்கு தெரியுமோ? ஒனக்கு என்ன தோணியிருக்கும்?…… அவன், என்னை மாதிரி பீடாதிபதியா ஆகணும்னு ஆசைப்படறதா நெனைச்சிண்டியோ?… குரு பீடத்ல ஒக்காந்துண்டுட்டா….. எல்லாரும்… ப்ரைம் மினிஸ்டர்லேர்ந்து… க்ரைம் மினிஸ்டர் வரை வந்து நமஸ்காரம் பண்ணுவா.! காணிக்கை குடுப்பா….! ஸாமான்ய விஷயத்த சொன்னாக் கூட, அத, வேத வாக்கா எடுத்துண்டு பேப்பர்ல போடுவா…! இப்டி நெனச்சு ஆசைப்பட்டுட்டான்னு தோணித்தோ?..……”
தொண்டர்  கைகட்டி வாய் பொத்தி நின்றார். பெரியவா தொடர்ந்தார். 
“அதையே.. அந்த பையன் வேற விதமா ஏன் ஆசைப்பட்ருக்கக் கூடாது? இவர் பெரிய ஞானி.! பக்தர்! வேதஶாஸ்த்ர புராணங்கள்ள கரை கண்டவர்.! இவர் பேரை சொல்லிண்டு நெறைய நல்ல கார்யங்கள் நடக்கறது! கோவில் கும்பாபிஷேகங்கள் நடக்கறது! க்ராமியக் கலைகள் அபிவ்ருத்தி யாறது..! இப்பிடில்லாம் இருந்தாலும், அவர் கொஞ்சமும் கர்வமில்லாம… தாமரை எலை தண்ணீர் மாதிரி இருக்கார்….! நானும் அந்த மாதிரி ஆகணும்! ஞானியா ஆகணும்!…ன்னு நெனைச்சிருக்க லாமில்லியோ?….”
அடாடா  நம்மால் இப்படி நினைத்துப்பார்க்க முடியுமா. அது தான் பெரியவா.
சரி  நீ “போ ! போயி…. அந்த பையன கூட்டிண்டு வா”
எங்க போய் தேடறது? எங்க போனானோ?
நாலாபுறமும் தேடிக் கொண்டு போனார்.
அதோ! அப்பாடா! ஶிவன் கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருந்தான்!
“கொழந்தே! பெரியவா கூப்டறா…. வாப்பா..”
அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டி போல் தாயை தேடிக் கொண்டு ஓடினான்…… அந்தக் குழந்தை.
ஏறக்குறைய ஐந்து நிமிஷம் பெரியவாளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ! பெரியவாளும் நடுநடுவே அவனை கடாக்ஷித்தார் …….நயன தீக்ஷை நல்கினார்..….
“பெரியவா கை சொடுக்கி ஏதோ குறிப்பாக சொல்ல, தொண்டர்  ஒரு தட்டில் ஒரு பழத்தை வைத்து பெரியவாளிடம் கொடுத்தார்.  பெரியவா தன்  கையில் பழத்தை வைத்து  உறுத்திக்கொண்டே ஏதோ கண்மூடி சிந்தித்தார்.  ஒரு அம்மாவானவள், தன் குழந்தையின் கையில் ஸாதத்தை பிசைந்து போடுவது போல, சில நிமிஷங்கள் பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த [ஞான] பழம், பையனுக்கு பெரியவாளாலேயே அவனுடைய கையில் அனுக்ரஹிக்கப்பட்டது!
அரிய ஞானப்பழமாக அதை அன்போடு எடுத்துக்கொண்டு, நமஸ்கரித்துவிட்டு வேகமாக போய் விட்டான் அந்த பையன் , இல்லை  யாரோ ஒரு  ஞானி! 
மஹான்கள் தங்கள் கைகளால் நமக்கென்று கொடுத்த எதையும் ஸாதாரணமாக உடனே பங்கு போட்டு யாருக்கும் கொடுக்கக்  கூடாது.  அது தான் உபதேச உத்தமம்! இது ஸுயநலமில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக, மஹான்கள்  ஸங்கல்பம்  செய்து  நமக்கு தனியாக  கொடுக்கப்பட்டது.

கர்மாவை கழிக்க பூமியில் பிறந்தாச்சு! கஷ்டமில்லாம ஓரளவு ஸௌகர்யமான வாழ்க்கை அமைஞ்சாச்சு! எல்லாத்துக்கும் மேல, கஷ்டமான ஜீவிதமோ, ஸுக ஜீவிதமோ, மஹா மஹா அவதாரமான பெரியவாளோட தர்ஶனமோ, ஸ்மரணமோ நிறையாவே கிடைச்சாச்சு! அவர் மேல அப்படியொரு அன்பும், பிடிப்பும் வந்தாச்சு! அவர் உபதேஸிப்பதை கடைப்பிடிக்கும் ஸௌகர்யமும் இருக்கு! பெரியவாதான் பகவான், காமாக்ஷி, ஶிவன், நாராயணன், பரப்ரஹ்மம் எல்லாமே .

Monday, September 27, 2021

SRIMAN NARAYANEEYAM


 ஸ்ரீமந்  நாராயணீயம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN  --

62வது தசகம்-

62 இந்திரனின் கோபம்.

காலம் காலமாக  பிருந்தாவன கோபர்கள்  இந்திரனை வழிபடுபவர்கள்.  இந்திரனுக்கு  அடிக்கடி கர்வம் வந்துவிடும். அதை அடக்க  வேண்டும் என்று கிருஷ்ணன் மனதில் தோன்றியதால் கோபர்களை  எங்கோ கண்காணாமல் இருக்கும் இந்திரனை வழிபடுவதற்குப் பதிலாக  கண்ணெதிரே என்றும் அவர்களுக்கு உதவி வரும்  கோவர்தன மலையை வழிபடச் செய்கிறான். அதல்லவோ, மழை தருகிறது, வாழ வகை செய்கிறது. பசுக்களுக்கு கன்றுகளுக்கு  பிராமணர்களுக்கு  என்று அனைவரையும்  தாய் போல்  ஆதரிக்கிறது.   மூலிகைகள், உணவு,வாழ இடம், அளிக்கிறது என்றான் கண்ணன். 
  கண்ணன் சொல்வது சரியென்று தோன்றவே  அந்த வருஷ  இந்திரவழிபாடு நின்றுபோனது. இதனால் இந்திரன் சீற்றம் கொண்டு பிருந்தாவனத்தை  கிருஷ்ணனோடு சேர்த்து அழிக்க கிளம்பிவிட்டான். 

कदाचिद्गोपालान् विहितमखसम्भारविभवान्
निरीक्ष्य त्वं शौरे मघवमदमुद्ध्वंसितुमना: ।
विजानन्नप्येतान् विनयमृदु नन्दादिपशुपा-
नपृच्छ: को वाऽयं जनक भवतामुद्यम इति ॥१॥

kadaachidgOpaalaan vihita makhasambhaara vibhavaan
niriikshya tvaM shaure maghavamada mudhdvamsitumanaaH |
vijaanannapyetaan vinaya mR^idu nandaadi pashupaan
apR^ichChaH kO vaa(a)yaM janaka bhavataamudyama iti || 1

கதா³சித்³கோ³பாலான் விஹிதமக²ஸம்பா⁴ரவிப⁴வான்
நிரீக்ஷ்ய த்வம் ஶௌரே மக⁴வமத³முத்⁴வம்ஸிதுமனா꞉ |
விஜானந்னப்யேதான் வினயம்ருது³ நந்தா³தி³பஶுபா-
நப்ருச்ச²꞉ கோ வாயம் ஜனக ப⁴வதாமுத்³யம இதி || 62-1 ||

''என் தெய்வமே, சூரசேனன் வழித்  தோன்றலே,  ஒரு நாள்  கோபர்கள்  யாகம் செய்ய பொருட்களை திரட்டுவதை கவனித்துவிட்டாய்.  ஓஹோ  இந்த வருஷ  இந்திர விழாவுக்கு ஏற்பாடு நடக்கிறதுஎன்று அறிந்து கொண்டாய்.  இப்போதெல்லாம் இந்திரன் மிகவும் கர்வம் கொண்டவனாக நடந்து கொள்கிறான்.  இதற்கு ஒரு முடிவு கட்ட  வேண்டும் என்று மனதில் தோன்றிவிட்டது உனக்கு. கபட நாடக சூத்ரதாரியான   நீ  ஒன்றுமறியாதவன் போல் உன் தந்தை நந்தகோபனிடம் என்ன கேட்டாய் என்று நினைவிருக்கிறதா?

''அப்பா,  என்ன நீங்கள் எல்லோரும் ஏதோ யாகம் செய்வதைப் பற்றி பேசுகிறீர்கள்,  அதற்கு ஏற்பாடுகள் செயகிறீர்கள்? எனக்கும் சொல்லுங்கள்''

बभाषे नन्दस्त्वां सुत ननु विधेयो मघवतो
मखो वर्षे वर्षे सुखयति स वर्षेण पृथिवीम् ।
नृणां वर्षायत्तं निखिलमुपजीव्यं महितले
विशेषादस्माकं तृणसलिलजीवा हि पशव: ॥२॥

babhaaShe nandastvaaM suta nanu vidheyO maghavatO
makhO varShe varShe sukhayati sa varSheNa pR^ithiviim |
nR^iNaaM varShaayattaM nikhilamupajiivyaM mahitale
visheShaadasmaakaM tR^iNasalilajiivaa hi pashavaH || 2

ப³பா⁴ஷே நந்த³ஸ்த்வாம் ஸுத நனு விதே⁴யோ மக⁴வதோ
மகோ² வர்ஷே வர்ஷே ஸுக²யதி ஸ வர்ஷேண ப்ருதி²வீம் |
ந்ருணாம் வர்ஷாயத்தம் நிகி²லமுபஜீவ்யம் மஹிதலே
விஶேஷாத³ஸ்மாகம் த்ருணஸலிலஜீவா ஹி பஶவ꞉ || 62-2 ||

''கிருஷ்ணா, என் ஆருயிர் செல்வமே  சொல்கிறேன் கேள்.  ஒவ்வொருவருஷம்  நாம் எல்லோரும் ஒரு பெரிய யாகம் செய்கிறோம். வானத்தில் இருக்கும்  தேவராஜன்  இந்திரனை வேண்டி  வணங்கு கிறோம். அவனை திருப்தி பண்ணி அவன் ஆசியை நாம் பெறுகிறோம்.  இந்திரன்  மகிழ்ந்து நம்மை சுகமாக  வாழவைக்க  நிறைய மழை தருகிறான்.  நீரின்றி அமையாது உலகம் என்பார்களே.   மழை இல்லாமல் உலகில் ஜீவராசிகள் வாழமுடியாது கண்ணா.  அதுவும் நம்மைப் போன்ற கோபர்களுக்கு பசுக்கள் முக்கியம்.    அவையே  நம்  வாழ்வாதாரம். அவை சந்தோஷமாக  வாழ புல்லும் நீரும்  மழையால் தான் அல்லவோ  கிடைக்கிறது.  நான் சொல்வது புரிகிறதா?''  என்றான் நந்தகோபன்.

इति श्रुत्वा वाचं पितुरयि भवानाह सरसं
धिगेतन्नो सत्यं मघवजनिता वृष्टिरिति यत् ।
अदृष्टं जीवानां सृजति खलु वृष्टिं समुचितां
महारण्ये वृक्षा: किमिव बलिमिन्द्राय ददते ॥३॥

iti shrutvaa vaachaM piturayi bhavaanaaha sarasaM
dhigetannO satyaM maghavajanitaa vR^iShTiriti yat |
adR^iShTaM jiivaanaaM sR^ijati khalu vR^iShTiM samuchitaaM
mahaaraNye vR^ikshaaH kimiva balimindraaya dadate || 3

இதி ஶ்ருத்வா வாசம் பிதுரயி ப⁴வானாஹ ஸரஸம்
தி⁴கே³தன்னோ ஸத்யம் மக⁴வஜனிதா வ்ருஷ்டிரிதி யத் |
அத்³ருஷ்டம் ஜீவானாம் ஸ்ருஜதி க²லு வ்ருஷ்டிம் ஸமுசிதாம்
மஹாரண்யே வ்ருக்ஷா꞉ கிமிவ ப³லிமிந்த்³ராய த³த³தே || 62-3 ||

''குருவாயூரா , ஏதோ முதன் முதலாக  இதுவரை தெரியாத ஒன்றை தெரிந்துக்கொண்டவன் போல் நீ தலையாட்டினாய்.  இருந்தாலும் உன் மனதில் உள்ளதை தெரிவிப்பவன் போல் பேசினாய்.

''இல்லேப்பா.  எனக்கு என்னவோ அந்த இந்திரன் தான் நமக்கு  மழை கொடுப்பவன் என்று தோன்றவில்லை அப்பா. நீ தானே அடிக்கடி சொல்லுவாய். நாம் எல்லோருக்கும் நல்லது செய்தால்  நாடு சுபிக்ஷமாக இருக்கும். நல்ல மழை விடாமல் பெய்யும்''  என்று. அப்படிப்பார்த்தால் ,அதோ அந்த காட்டில் இருக்கும்  பெரிய பெரிய மரங்கள் என்ன யாகம் செயகிறது. எதை இந்திரனுக்கு நன்றியாக தருகிறது?

 इदं तावत् सत्यं यदिह पशवो न: कुलधनं
तदाजीव्यायासौ बलिरचलभर्त्रे समुचित: ।
सुरेभ्योऽप्युत्कृष्टा ननु धरणिदेवा: क्षितितले
ततस्तेऽप्याराध्या इति जगदिथ त्वं निजजनान् ॥४॥

idaM taavatsatyaM yadiha pashavO naH kuladhanaM
tadaajiivyaayaasau balirachalabhartre samuchitaH |
surebhyO(a)pyutkR^iShTaa nanu dharaNi devaaH kshititale
tataste(a)pyaaraadhyaa iti jagaditha tvaM nijajanaan ||4

இத³ம் தாவத்ஸத்யம் யதி³ஹ பஶவோ ந꞉ குலத⁴னம்
ததா³ஜீவ்யாயாஸௌ ப³லிரசலப⁴ர்த்ரே ஸமுசித꞉ |
ஸுரேப்⁴யோ(அ)ப்யுத்க்ருஷ்டா நனு த⁴ரணிதே³வா꞉ க்ஷிதிதலே
ததஸ்தே(அ)ப்யாராத்⁴யா இதி ஜக³தி³த² த்வம் நிஜஜனான் || 62-4 ||

''நீ சாமர்த்தியக்காரன் ஆச்சே. நந்தகோபனோடு பேசும்போது  அவனைச் சுற்றி   நிறைய கோபர்கள் இருக்கும் சமயமாகத்தான் இந்த பேச்சை  ஆரமித்தாய்.  எல்லோரையும்  பார்த்து ''நீங்கள் சொல்வது ரொம்ப சரி அப்பா.  பசுக்கள் தான் நமக்கு ஜீவாதாரம்.  நமது செல்வம்.  அதில் ஒரு சந்தேகமும் இல்லை. அப்படி முக்கியமான நமது பசுக்களுக்கும், வேதமோதும் பிராமணர்களுக்கும்    உணவளித்து அதன் மூலம் நம்மை காப்பாற்றும் இந்த மலை தான் முக்கியம்.  அதை திருப்திப் படுத்த அல்லவோ நாம்  யாகம் செய்யவேண்டும்?   அதோ நிற்கிறதே  அந்த  கோவர்த்தன  மலையும் பிராமணர்களும்  எங்கோ மேலே இருக்கும் தேவர்களை விட முக்கியமானவர்கள், பெரியவர்கள் , நாம் வணங்கத்தக்கவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது அப்பா ''

 भवद्वाचं श्रुत्वा बहुमतियुतास्तेऽपि पशुपा:
द्विजेन्द्रानर्चन्तो बलिमददुरुच्चै: क्षितिभृते ।
व्यधु: प्रादक्षिण्यं सुभृशमनमन्नादरयुता-
स्त्वमादश्शैलात्मा बलिमखिलमाभीरपुरत: ॥५॥

bhavadvaacham shrutvaa bahumatiyutaaste(a)pi pashupaaH
dvijendraanarchantO balimadaduruchchaiH kshitibhR^ite |
vyadhuH praadakshiNyaM subhR^ishamanamannaadarayutaastvamaadashshailaatmaa
balimakhilamaabhiirapurataH || 5

ப⁴வத்³வாசம் ஶ்ருத்வா ப³ஹுமதியுதாஸ்தே(அ)பி பஶுபா꞉
த்³விஜேந்த்³ரானர்சந்தோ ப³லிமத³து³ருச்சை꞉ க்ஷிதிப்⁴ருதே |
வ்யது⁴꞉ ப்ராத³க்ஷிண்யம் ஸுப்⁴ருஶமனமன்னாத³ரயுதா-
ஸ்த்வமாத³꞉ ஶைலாத்மா ப³லிமகி²லமாபீ⁴ரபுரத꞉ || 62-5 ||

ஊரிலுள்ள கோபர்களும்  சிந்தித்தார்கள்.  ஆமாம்,  குட்டி கிருஷ்ணா,  நீ சொல்வது தான் சரி என்று மனதில் பட்டது.   பிராமணர்களை  பூஜித்து தான தர்மம் செய்தார்கள். கோவர்தன மலையை வணங்கி  ஒரு யாகம் அதற்கு  ஏற்பாடுசெய்தார்கள். கோவர்தன மலையை நன்றியோடு வணங்கி அதை திருப்திப்படுத்த ஒரு பெரிய  யாகம் நடந்தது. கோவர்தன மலையை பிரதக்ஷணம் செய்து நமஸ்கரித்தார்கள்.  நீயே  கோவர்தனனாக  மாறி  மகிழ்ந்து அவர்கள்  அளித்த  நைவேத்யத்தை ஏற்றுக்கொண்டாய். அவர்களை ஆசிர்வதித்தாய்.

अवोचश्चैवं तान् किमिह वितथं मे निगदितं
गिरीन्द्रो नन्वेष स्वबलिमुपभुङ्क्ते स्ववपुषा ।
अयं गोत्रो गोत्रद्विषि च कुपिते रक्षितुमलं
समस्तानित्युक्ता जहृषुरखिला गोकुलजुष: ॥६॥

avOchashchaivaM taan kimiha vitathaM me nigaditaM
giriindrO nanveSha svabalimupabhunkte svavapuShaa |
ayaM gOtrO gOtradviShi cha kupite rakshitumalaM
samastaanityuktaa jahR^iShurakhilaa gOkulajuShaH || 6

அவோசஶ்சைவம் தான்கிமிஹ விதத²ம் மே நிக³தி³தம்
கி³ரீந்த்³ரோ நன்வேஷ ஸ்வப³லிமுபபு⁴ங்க்தே ஸ்வவபுஷா |
அயம் கோ³த்ரோ கோ³த்ரத்³விஷி ச குபிதே ரக்ஷிதுமலம்
ஸமஸ்தானித்யுக்தா ஜஹ்ருஷுரகி²லா கோ³குலஜுஷ꞉ || 62-6 ||

''வாதபுரீஸ்வரா, உன்னோடு வாதம் செய்யமுடியுமா? நீ ஒரு கோடி காட்டினாயே  உன் பேச்சில் ஞாபகம் இருக்கிறதா? அதை நினைவூட்டுகிறேன்.கேள். 

 ''அப்பா  நான் சொன்னது பொய்  இல்லை  என்று இப்போது புரிகிறதா?  பார்த்தீர்களா, இந்த கோவர்த்தன மலை  நாம்  யாகத்தில் படைத்த அனைத்து  பண்டங்களையும்  தானே  திருப்தியாக  ஏற்று உண்டதை  கவனித்தீர்களா?  ஒருவேளை இதனால்  இந்திரன் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அப்படி இந்திரன் கோபித்துக்கொண்டு நமக்கு தீங்கு செய்தால்  கூட இந்த கோவர்த்தன மலை நம்மை எல்லாம் காக்கும்''   என்று நீ சொன்னதும்  அனைத்து கோபர்களும் தலையாட்டி மகிழ்ந்தார்கள். 

परिप्रीता याता: खलु भवदुपेता व्रजजुषो
व्रजं यावत्तावन्निजमखविभङ्गं निशमयन् ।
भवन्तं जानन्नप्यधिकरजसाऽऽक्रान्तहृदयो
न सेहे देवेन्द्रस्त्वदुपरचितात्मोन्नतिरपि ॥७॥
 
paripriitaa yaataaH khalu bhavadupetaa vrajajuShO
vrajaM yaavattaavannija makhavibhangaM nishamayan |
bhavantaM jaanannapyadhika rajasaa(a)(a)kraantahR^idayO
na sehe devendrastvaduparachitaatmOnnatirapi || 7

பரிப்ரீதா யாதா꞉ க²லு ப⁴வது³பேதா வ்ரஜஜுஷோ
வ்ரஜம் யாவத்தாவன்னிஜமக²விப⁴ங்க³ம் நிஶமயன் |
ப⁴வந்தம் ஜானந்னப்யதி⁴கரஜஸா(ஆ)க்ராந்தஹ்ருத³யோ
ந ஸேஹே தே³வேந்த்³ரஸ்த்வது³பரசிதாத்மோன்னதிரபி || 62-7 ||

கோவர்தன கிரி விழா,  கிரிபூஜை, எல்லாம் சிறப்பாக நடந்து  வ்ரஜபூமியில்  எல்லோரும் திருப்தியோடு வீடு திரும்பினார்கள்., இந்திரலோகத்துக்கு  செய்தி உடனே போயிற்று. கோகுல பிருந்தாவன பிரஜைகள் தன்னை மதித்து, வணங்காமல், ஏதோ ஒரு சின்ன  மலைக்கு இந்த வருஷம்  யாகம் செய்தது இந்திரனை கடும்கோபத்தில் ஆழ்த்தியது.  இந்திரனுக்கு நீ யார் என்பதும் தெரியும். உன்னால் தான் இந்திர பதவி அவனுக்கு கிடைத்ததும் தெரியும்.  அவனிடம் ரஜோகுணம் மிகுந்து விட்டதால்  தலை கால் புரியவில்லை. ஆணவம்  அவனை ஆட்கொண்டது. தன்னை அவமதித்ததால்  வ்ரஜபூமி பிரஜைகள் மேல் சீற்றம் பெருகியது. 

मनुष्यत्वं यातो मधुभिदपि देवेष्वविनयं
विधत्ते चेन्नष्टस्त्रिदशसदसां कोऽपि महिमा ।
ततश्च ध्वंसिष्ये पशुपहतकस्य श्रियमिति
प्रवृत्तस्त्वां जेतुं स किल मघवा दुर्मदनिधि: ॥८॥

manuShyatvaM yaatO madhubhidapi deveShvavinayaM
vidhatte chennaShTasitradashasadasaaM kO(a)pi mahimaa |
tatashcha dhvamsiShye pashupahatakasya shriyamiti
pravR^ittastvaaM jetuM sa kila maghavaa durmadanidhiH || 8

மனுஷ்யத்வம் யாதோ மது⁴பி⁴த³பி தே³வேஷ்வவினயம்
வித⁴த்தே சேன்னஷ்டஸ்த்ரித³ஶஸத³ஸாம் கோ(அ)பி மஹிமா |
ததஶ்ச த்⁴வம்ஸிஷ்யே பஶுபஹதகஸ்ய ஶ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ்த்வாம் ஜேதும் ஸ கில மக⁴வா து³ர்மத³னிதி⁴꞉ || 62-8 ||

''இந்த விஷ்ணு, மானுட அவதாரம் கொண்டு  யாதவ  சிறுவனாக  பிறந்து தேவர்களை அவமதிக் கிறான். அவர்களை கௌரவிப்பதை தடை செய்துவிட்டான்.  இந்த  யாதவ சிறுவனை தண்டிக்க வேண்டும்.  உடனே  அவனை பழி வாங்கி பாடம் கற்பிக்கிறேன். என்னை எதிர்க்கும் அவனை தோல்வி அடையச் செய்கிறேன்  '' என்று  கிளம்பிவிட்டான். 

त्वदावासं हन्तुं प्रलयजलदानम्बरभुवि
प्रहिण्वन् बिभ्राण; कुलिशमयमभ्रेभगमन: ।
प्रतस्थेऽन्यैरन्तर्दहनमरुदाद्यैविंहसितो
भवन्माया नैव त्रिभुवनपते मोहयति कम् ॥९॥

tvadaavaasaM hantuM pralayajaladaanambarabhuvi
prahiNvan bibhraaNaH kulishamayamabhrebhagamanaH |
pratasthe(a)nyairantardahana marudaadyairvihasitO
bhavanmaayaa naiva tribhuvanapate mOhayatikam || 9

த்வதா³வாஸம் ஹந்தும் ப்ரலயஜலதா³னம்ப³ரபு⁴வி
ப்ரஹிண்வன் பி³ப்⁴ராண꞉ குலிஶமயமப்⁴ரேப⁴க³மன꞉ |
ப்ரதஸ்தே²(அ)ன்யைரந்தர்த³ஹனமருதா³த்³யைர்விஹஸிதோ
ப⁴வன்மாயா நைவ த்ரிபு⁴வனபதே மோஹயதி கம் || 62-9 ||

குருவாயூரா,  கிருஷ்ணா,  நீ  வாழும்  கோகுலத்தையே அழிக்க  இந்திரன் திட்டமிட்டான். உங்கள் அனைவரையும்  கூண்டோடு கைலாசம் அனுப்ப முடிவெடுத்தான்.  மேகராஜனை அழைத்தான்.  ஐராவதத்தின் மேல்  ஏறிக்கொண்டான். திக் தேவதைகளுக்கு  ஆணையிட்டான். அக்னி வாயு, வருணன் ஆகியோர்  இந்திரா என்ன ஆயிற்று உனக்கு என்று சிரித்தனர்.  யாரை எதிர்க்கிறாய் என்று உணர்கிறாயா ? என்று அறிவுறுத்தினாலும்  இந்திரன் காதில் எதுவும் விழவில்லை.  எல்லாம் உன் மாயையினால் நிகழ்வது அல்லவா? அதில் மயங்காதார் யார்?

 सुरेन्द्र: क्रुद्धश्चेत् द्विजकरुणया शैलकृपयाऽ-
प्यनातङ्कोऽस्माकं नियत इति विश्वास्य पशुपान् ।
अहो किन्नायातो गिरिभिदिति सञ्चिन्त्य निवसन्
मरुद्गेहाधीश प्रणुद मुरवैरिन् मम गदान् ॥१०॥

surendraH kruddhashchet dvijakaruNayaa shailakR^ipayaa(a)-
pyanaatankO(a)smaakaM niyata iti vishvaasya pashupaan |
ahO kinnaayaatO giribhiditi sanchintya nivasan
marudgehaadhiisha praNuda muravairin mama gadaan ||10

ஸுரேந்த்³ர꞉ க்ருத்³த⁴ஶ்சேத்³விஜகருணயா ஶைலக்ருபயா-
ப்யனாதங்கோ(அ)ஸ்மாகம் நியத இதி விஶ்வாஸ்ய பஶுபான் |
அஹோ கிம் நாயாதோ கி³ரிபி⁴தி³தி ஸஞ்சிந்த்ய நிவஸன்
மருத்³கே³ஹாதீ⁴ஶ ப்ரணுத³ முரவைரின் மம க³தா³ன் || 62-10 |

பயங்கரமாக தொடர்ந்து இடி இடித்தது.  கதி கலங்கியது. வானம் இருளாக இருண்டது . காற்று சீறி சூறையாடிற்று.  கோபர்கள் திகைத்தனர்.  நீ அனைவருக்கும் ஆறுதல் அளித்தாய்.

 'இது  இந்திரன் கோபச்செயல் என்றால்   நீங்கள் யாரும்  தேவேந்திரன் கோபத்தை கண்டு அஞ்சவேண்டாம். பிராமணர்கள்  தான தர்மம் பெற்று  நம்மை  வாயார மனமார  வாழ்த்தினார்களே  அது போதும். கோவர்தன கிரீசன் நம் மீது கருணை கொண்டவன். தேவேந்திரன்  என்னதான்  செயகிறான் பார்க்கலாம்.  அவன் செய்வதை செய்யட்டும்''  என்றாய் .

முராரி , எண்டே  குருவாயூரப்பா, என்னையும்  இந்த வாத நோயிலிருந்து காப்பாற்றி அருள்புரிவாயப்பா.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...