Wednesday, January 31, 2018

SHORT STORY



            தமஸோமாம் ஜோதிர் கமய ....J.K. SIVAN

காயாரோஹண சிவாச்சாரியார்  77  வயதை தாண்டினாலும் தினமும்  அர்த்தநாரீஸ்வரனுக்கு  பூஜை மூன்று காலமும் பண்ணாமல் வீடு திரும்பியதில்லை.   அர்தநாரிஸ்வரர்  அந்த ஊர்  சின்ன ஒரு மலை மீது  பல நூற்றாண்டுகளாக அருள்பாலிப்பவர்.  சிவாச்சாரியார்  ஐந்தாவது தலைமுறையாக  அர்ச்சகர் அந்த ஆலயத்தில்.

பவழக்குன்று என்ற அந்த மலைக்கு பின்னால் ஒரு பெரிய  ஏரி .  அதில் சில படகோட்டிகள்  அக்கரைக்கு சென்று பொருள்கள் வாங்கி வியாபாரம் செய்பவர்கள்.

அன்று  கடுங்குளிர், எங்கும் பனிமூட்டம். கண்ணே தெரியவில்லை.  சாயந்திரம் ஆகிவிட்டது. மழையும் பிடித்துக் கொண்டது. மூன்றாம் கால  அர்ச்சனை நைவேத்தியத்துடன் காயாரோஹணம் கிளம்பியபோது அவர் வீட்டில் எதிர்ப்பு.

இந்த கொட்ற மழையிலும் இருட்டிலும் நீங்க இப்போ போகணுமா மலை மேலே ஏறி?  சொல்லுங்கோ?  யார்  வந்து அங்கே காத்தியிண்டு இருக்கப்போறா?  நல்ல நாளிலேயே  மூணு பேர் வந்தா  அதிசயம்.  இப்போ எதுக்கு போறேள். மனசாலே பகவானை வேண்டிண்டு இங்கேயே  அவருக்கு நைவேத்தியம் பண்ணுங்கோ.  ஒத்துப்பார்.  உங்களைப்பத்தி அர்தநாரீஸ்வரனுக்கு தெரியாதா?''

பதில் சொல்லாமல் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்  அர்ச்சகர். என்ன தோன்றிற்றோ. தலையில் துண்டை போட்டு மூடிக்கொண்டு   கையில் ஒரு பளிச் என்ற  வெளிச்சம் தரும்  விளக்கை எடுத்துக்கொண்டு இருட்டில் கிளம்பிவிட்டார்.

மெதுவாக  மலையேறும்போது ஒரு எண்ணம்.

''யார் அங்கே இருக்கப்போறா. நானும் சிவனும் தான். யாருக்கு  என்ன பிரயோசனம் நான் போறதிலே.''
இருட்டில் ஏரி நீர் சப்தம் அது ரொம்பி ஓடுவதை அறிவித்தது. கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை. காற்று பலமாக வீச  தொடங்கியது.அவர் உடம்பு குளிரில் நடுங்கியது.

க்ரீச் என்று மரக்கதவு  சாவியை வாங்கிக்கொண்டு சபதித்தது. உள்ளே  வெளிச்சம் காட்டிக்கொண்டு போய்  சந்நிதியின் கதவையும் திறந்தார்.  எங்கும் அமைதி. எண்ணையில் திரியை தூண்டி விட்டு  பெரிதாக ஆக்கி விளக்கேற்றினார்.  கையில் கொண்டுவந்திருந்த  வெளிச்ச விளக்கை வெளியே பிறையில் வைத்தார். அது எரிந்து கொண்டு மலையை ஒட்டிய  ஏரியைப் பார்த்தது.

நிதானமாக  ஸ்லோகங்கள் சொல்லி, கொண்டுவந்திருந்த மலர்களை தூவி பரமேஸ்வரனை தியானித்து ஸ்லோகங்கள் சொன்னார். வீட்டில் மடியாக பண்ணிய  நைவேத்தியத்தை  அர்ப்பணித்தார். கடமை முடித்ததில் ஆத்ம திருப்தி. 

''அர்த்தநாரி  என்னால் முடிந்தவரை உனக்கு சேவை செயகிறேனடா? எனக்கப்புறம்  ஒரு சரியான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன். அது நிறைவேற நீ தான் அருளவேண்டும்'' வணங்கி பிரசாதம் எடுத்துக்கொண்டு  கதவை சாத்தி பூட்டினார். வெளி மரக்கதவு சாத்துமுன்பு  வெளிச்ச விளக்கை எடுத்துக்கொண்டு  பூட்டி விட்டு  மலை இறங்கினார்.

இதனால் யாருக்கு பலனோ இல்லையோ எனக்கு பலன் உண்டு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு மலைப்படிகளில் இறங்கினார்.

மறுநாள் காலை பளிச்சென்று சூரியன் உதித்தான். மழை இல்லை. யாரோ ஓடிவந்தார்கள். 
மரக்கடை   அந்தோணி. 
''சாமி. என் உயிரை காப்பாத்தினீங்க''
''என்னப்பா சொல்றே?''
''நேத்து ராத்திரி குப்பன் படகுலே பெயிண்ட் சாமான் எல்லாம் வாங்கி வந்தேன். இருட்டிலே மாட்டிக்கொண்டோம். குப்பன் வராம அவன் பிள்ளை சங்கரன் தான் படகோட்டி வந்தான். வழி தெரியலே. சில இடங்களில் பாறைகள் .  குப்பன் இருந்தால் ஒருவழியாக அனுபவத்தில் கரை சேர்ப்பான். இந்த பையன் துடித்துக் கொண்டிருந்தான்.  அப்போது தான் ;மலைமேல்  நீங்கள் வெளிச்சம் காட்டினீங்க.   ''அதோ நம்ம கோவில் தெரியுது மலைமேல், அந்த பக்கம் போனா பாறைங்க இல்லை. ''   தப்பாக எங்கோ சென்றுகொண்டிருந்த படகை திருப்பி தைரியமாக மெதுவாக  படகை  வெளிச்சத்தை நோக்கி செலுத்தி கரை வந்து சேர்ந்தோம்.   
உங்களாலே  எங்களுக்கு உயிர் தப்பிச்சுது.

இருட்டிலிருந்து நம்மை மீட்பவன் அல்லவா அர்த்தநாரி.  அறிந்து தானே என்னை மலைக்கு வரவழைத்தான்...... காயாரோஹணம் கைகூப்பி  அவனை வணங்கினார்.

swamiji's tme

SWAMIJI’S TIME -   J.K. SIVAN
 Before considering further how devotion to duty helps us in our spiritual progress, let me place before you in a brief compass another aspect of what we in India mean by Karma.
In every religion there are three parts: philosophy, mythology, and ritual.
Philosophy of course is the essence of every religion;
mythology explains and illustrates it by means of the more or less legendary lives of great men, stories and fables of wonderful things, and so on;
ritual gives to that philosophy a still more concrete form, so that every one may grasp it — ritual is in fact concretised philosophy.

This ritual is Karma; it is necessary in every religion, because most of us cannot understand abstract spiritual things until we grow much spiritually. It is easy for men to think that they can understand anything; but when it comes to practical experience, they find that abstract ideas are often very hard to comprehend. Therefore symbols are of great help, and we cannot dispense with the symbolical method of putting things before us. From time immemorial symbols have been used by all kinds of religions. In one sense we cannot think but in symbols; words themselves are symbols of thought. In another sense everything in the universe may be looked upon as a symbol. The whole universe is a symbol, and God is the essence behind. This kind of symbology is not simply the creation of man; it is not that certain people belonging to a religion sit down together and think out certain symbols, and bring them into existence out of their own minds. The symbols of religion have a natural growth. Otherwise, why is it that certain symbols are associated with certain ideas in the mind of almost every one? Certain symbols are universally prevalent. Many of you may think that the cross first came into existence as a symbol in connection with the Christian religion, but as a matter of fact it existed before Christianity was, before Moses was born, before the Vedas were given out, before there was any human record of human things. The cross may be found to have been in existence among the Aztecs and the Phoenicians; every race seems to have had the cross. Again, the symbol of the crucified Saviour, of a man crucified upon a cross, appears to have been known to almost every nation. The circle has been a great symbol throughout the world. Then there is the most universal of all symbols, the Swastika.  At one time it was thought that the Buddhists carried it all over the world with them, but it has been found out that ages before Buddhism it was used among nations. In Old Babylon and in Egypt it was to be found. What does this show? All these symbols could not have been purely conventional. There must be some reason for them; some natural association between them and the human mind. 

ADITYA HRIDHAYAM 3

சூரியா உனக்கு நமஸ்காரம் 3 J.K. SIVAN
ADITYA HRIDHAYAM SLOKAS
आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान्।
सुवर्णसदृशो भानुर्हिरण्यरेता दिवाकरः॥
adithya savitha soorya khaga poosha gabasthiman
suvarna sadhrusho baanuhiranyaretha thivakara:
ஆதித்ய சவிதா சூர்யா காக பூஷா கபஸ்திதான்
சுவர்ண ஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர: || 10 ||
ஹே சூர்ய நாராயணா. நீ அதிதி புத்திரன். அதனால் உன்னை ஆதித்யன் என்று வணங்குகிறோம். லோக சிருஷ்டிகர்த்தா. எங்கள் ஒவ்வொரு செயலும் உன்னால். உன்செயலால் அன்றி எது ஆகும்? வானவெளியில் வலம் வருபவன். நீ இன்றி மழை ஏது. மழை இன்றி உலகேது? தங்க ஒளி படைத்த கதிரவனே, பொன்வண்ணனே , பிரகாசமே, திவாகரா, தினகரா, உன்னால் தானே தினங்களே உருவாகிறது.
हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्तिर्मरीचिमान्।
तिमिरोन्मथनः शम्भुस्त्वष्टा मार्ताण्ड अंशुमान्॥
'haridaswa sahasrarchi saptha sapthir mareechiman
thimironmadhana shambhu thwashtwa marthanda amsuman
ஹரித்ஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: சப்த சப்தி: மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்புஸ்த்வஷ்ட மார்த்தாண்ட அம்ஷுமான் || 11 ||
சூரிய தேவா, உனது ரதத்தில் பூட்டிய பச்சை நிற ஏழு குதிரைகளுடன், ஆயிர ஒளி கிரணங்களுடன் இருளை விரட்டுபவனே, ஆனந்தமய வாழ்வு உன்னால் தானே சூரியநாராயணா, ஜனன மரண காரணா, சொல்லொணா புகழ் மிக்கவனே, உனக்கு நமஸ்காரம்.
hiranya garbha shisira thapano bhaskaro ravi
agni garbha adithe puthra sanka shisira nasana
ஹிரண்ய கர்ப்ப ஷிஷிரஸ்தாபனோ பாஸ்கரோ ரவி: |
அக்னி கர்ப்போ திதே புத்ர: ஷன்க: ஷிஷிர நாஷன: || 12 ||
ஸூர்ய பகவான் சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர். கடுங்குளிரை அகற்றுபவர். நெருப்பே உருவானவர். தீய எண்ணங்களையும் தீமைகளையும் அகற்றுபவர்.ஹிரண்ய கர்பா, உள்ளும் புறமும் சுவர்ண பிம்ப மயமானவனே, மனக் கிலேசம் எல்லாம் நீக்குபவனே, உஷ்ணத்தை அளித்தாலும் அதிலிருந்து தாபத்தை அகற்றுபவனே, ஒளி ஊட்டுபவனே, எல்லோராலும் விரும்பி போற்றப்படுபவனே, இணையற்ற அக்னியை தன்னுள் கொண்டவனே, அதிதியின் புத்ரனே, விருப்பமுடன் ஆகயமார்கமாக பிரயாணிப்பவனே, பனி,குளிர் ஆகியவற்றை நாசம் செய்பவனே, உனக்கு நமஸ்காரம்.
व्योमनाथस्तमोभेदी ऋग्यजुःसामपारगः।
घनवृष्टिरपां मित्रो विन्ध्यवीथीप्लवङ्गमः॥
vyomanadha sthamobhedi rig yajur sama paraga
ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama
வ்யாமனாத ஸ்தமோபேதி ருக்யஜுஸ்ஸாம பாரக: |
கனவ்ரிஷ்டி ரபாம்மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம: || 13 ||
ஸூர்ய பகவான் அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர். மழையை பொழிவிக்கிறார். நீர் நிலைகளை நேசிக்கிறார். விந்த்ய மலைகளை தெய்வீகமாக கடக்கிறார்.
வானவெளி மன்னவனே, இருள் நீக்கி, நான்கு வேதம் உணர்ந்த நிபுணனே, உலகம் ஜீவிக்க உன் ஒளியுடன் மழையும் அளிப்பவனே, வருணனின் நண்பனே, எந்த உயரமான மலைகளையும் தாண்டி உலவுபவனே, உனக்கு நமஸ்காரம்.
आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः।
कविर्विश्वो महातेजाः रक्तः सर्वभवोद्भवः॥
aathapee mandali mruthyu pingala sarva thapana
kavir viswo maha thejaa raktha sarvodbhava
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள ஸர்வதாபன: |
கவிர்விஷ்வோ மஹாதேஜா ரக்த ஸர்வபவோத்பவ: || 14 ||
சூரியதேவா, நீ உஷ்ணத்தை அளித்தாலும் அதன் தாபத்தையும் போக்குபவன். சக்ரம் போன்ற உருளை வடிவானவன். காலனின் ஒரு உரு. ஹிரண்மயன் எனும் பொன்னன், உயிர்வாழ தீயை அளிப்பவனே, ஞானத்தை அளிக்கும் உன்னைத் தானே ஞான சூரியன் என்று வாழ்த்துகிறோம், உயிர்களின் முதலும் முடிவும் நீயே. பிரபஞ்சத்தை நிர்வகிப்பவனே நீ தான், உலகின் ஒளியே, ஒவ்வொருவர் மனத்திலும் உறைந்து ஒவ்வொரு செயலும் நிறைவேற்றுபவனே, சூர்யநாராயணா, உனக்கு நமஸ்காரங்கள்.
नक्षत्रग्रहताराणामधिपो विश्वभावनः।
तेजसामपि तेजस्वी द्वादशात्मन् नमोऽस्तु ते॥
nakshtra gruha tharanam adhipo viswa bhaavana
thejasam aphi thejaswi dwadasathman namosththe
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஷ்வ பாவன: |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மன் நமோஸ்துதே || 15 ||
ஸூர்ய பகவான் நக்ஷத்ரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் தலைவர். அவரே இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கிறவர். கதிரவனின் பன்னிரெண்டு (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக இருக்கிறார். ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். நமஸ்காரம் நமஸ்காரம் சூர்ய நாராயணா நக்ஷத்திர, நவக்ரஹ, புவன மண்டலாதிபதி, சர்வ பிரகாச காரணா , ஒளிக்கு ஒளியூட்டுபவனே, பன்னிரண்டு ஆத்ம ஸ்வரூபனே எம்மை ஆசிர்வதிப்பாய்.
nama poorvaya giraye, paschimayadraye nama
jyothirgananam pathaye dhinadhipathaye nama
நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||
ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.
சூரிய பகவானே, கிழ்வானம் சிவக்க உதயமாகின்றவனே, அன்றைய பிரயாணம் முடித்து மேலைவானில் செக்கர்வானமாக மறைபவனே, எதையும் பொன்னிறமாக்குபவனே, தினமும் நாம் வழிபடும் தினகரனே ஆதித்யா உனக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः।
नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः॥
jayaya jaya bhadraya haryaswaya namo nama
namo nama sahasramso adithyaya namo nama
ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய நமோ நமஃ |
நமோ நமஃ ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய நமோ நமஃ || 17 ||
''சூர்யா, நீ வெற்றிக்கு காரணமானவன், ஜெயன். ஜெய பத்ரன். பச்சை குதிரை பூட்டிய ரதன் . உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். அதிதி புத்ரா அசகாய சூரா, சூர்யநாராயணா, உன்னை வணங்கும்போதே நெஞ்சில் தைர்யம் நிரம்புகிறதே. எடுத்த காரியம் யாவினும் வெற்றி தருபவனல்லவா நீ.
nama ugraya veeraya sarangaya namo nama
nama padma prabhodaya, marthandaya namo nama
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நமஃ |
நமஃ பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நமஃ || 18 ||
சூர்யநாராயணா, பாபம் செய்தவர் அஞ்சும் பரிசுத்தனே, ரட்சிக்கும் நாயகனே, வேகத்தில் ஈடற்றவனே, காலத்தை நடத்திச் செல்பவனே, காத்திருக்கும் தாமரை மொட்டுக்களை மொட்டவிழச் செய்பவனே, உயிர்கொடுப்பவனே, உயிர் காப்பவனே, உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.
brihamesanachuthesaya sooryadhithya varchase
bhaswathe sarva bhakshaya roudraya vapushe nama
ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே |
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நமஃ || 19 ||
சூர்யா நாராயணா , சுட்டெரிக்கும் செழுஞ்சுடரே, நீயே பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் தேவனாகவும், அதிதி மைந்தனாகவும், சாஸ்வத பிரகாசனாகவும்,சர்வத்தையும் சாம்பலாக்கும் சக்தி படைத்தவனாகும் எதிரிகள் கண்டஞ்சும் பறக்க்ரமனாகவும் உள்ளாய். இதோ எங்கள் நமஸ்காரங்கள் உனக்கு.

Tuesday, January 30, 2018

VALLALAAR


        பசி தீர்த்த டாக்டர்   J.K. SIVAN 

இன்று தைப்பூசம். என்றோ நிகழ்ந்த ஒரு ஆச்சர்ய அதிசய சம்பவம் நினைவுக்கு வருகிறது..

ஒரு ஆச்சர்யமான மனிதர் அவர்.

மனிதர் என்று எப்படி சொல்வது? தெய்வம் மானிடனாக வந்த உரு என்பது தான் பொருத்தமாகும். அவர் எவரிடமும் தீட்சை பெறவில்லை. ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள். ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். ஒரு பார்வையிலேயே மாமிசம் உண்பவர்கள் கூட அடியோடு அதை விட்டனர். அவர் பார்வை எக்ஸ்ரே,ஸ்கேன் தன்மை கொண்டதோ? பிறர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரால் உணர முடிந்தது. எங்கிருக்கிறார் என்று அறியமுடியாதபடி திடீரென்று காணாமல் போய்விடுவார்.

பார்ப்பதற்கு, மாநிறம், ஒல்லி, நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும். நீண்ட மெல்லிய மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. முகத்தில் ஏதோ, எதையோ பற்றி எப்போதும் கவலைப் பட்டுக்கொண்டே  யிருக்கிற மாதிரி ஒரு தோற்றம். நீண்ட கூந்தல் மாதிரி தலை முடி. காலில் பாத ரக்ஷை. (அந்த காலத்தில் ஆற்காடு ஜோடு என்று அதற்குப் பெயர்) .

உடம்பை மூட ஒரு வெள்ளைத் துணி. வேட்டியோடு சேர்ந்து உடலின் மேல் பாகமும்  மூடியிருக்கும். ஆகார விஷயம் சொல்பம். ஒன்றிரண்டு கவளம். அதுவும் ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம். உபவாசம் என்று இருந்தால் அது ரெண்டு மூன்று மாசம் வரை கூட தொடரும். வெந்நீரில் கொஞ்சம் வெல்லம் கரைத்து  குடிப்பது தான்  ஆகாரம். சிறுவயதிலே குழந்தையாக அப்பாவின் தோளில் இருந்தபோதே சிதம்பரத்தில் ''ரகசியம்'' (ஆனந்த வெளி, பரமஆகாசம்) புரிந்துவிட்டது. பல பாடல்களில் அது வெளிப்பட்டது.

சந்நியாசியாய் இருந்தும் உலக இயல் பிடிக்கவில்லை,  படமுடியவில்லையே இந்த துயரம் என்று கதறல். போதும் போதும் பட்டதெல்லாம்.

''படமுடியாதினித் துயரம் பட முடியாதரசே
பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என்
உடல் உயிராதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்
உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே, குரு மணியே, மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே, ஞான
நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே

இந்தப்பாட்டில் கண்டபடி தானே இறைவனின் உடல் உயிர் ஆவியானவர் அந்த மா மனிதர். சித்தர். ஞானி.

ஒரு ஆடு மாடு, பறவை, பூச்சி கத்தினாலும் ''ஆண்டவா, அதற்கு என்ன துன்பமோ, என்னால் அதை போக்க முடியுமோ, என்று கலங்குவார், பாவம் அதற்கு என்ன ஆச்சோ என்று பயந்துபோவார். என் அப்பா, இறைவனே அவற்றின் துன்பம் உடனே போக்கிடுவாய். இது கொடிய விஷ நாகத்திற்கும் கூட. அவருக்குத்தான் எல்லா உயிரும் சமமாயிற்றே.

'' காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன்
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ் சகுனம் செய்
வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் ''

செடி கொடி தண்ணீரின்றி எங்காவது வாடி வதங்கி தலை சாய்ந்ததைப் பார்த்து பதறுவார். ஐயோ என்ன துன்பம் அதன் பசியை போக்க யாருமில்லையா என்று உலகில் எந்த உயிரும் துன்பமுருவதைக் காண சகிக்காத ஜீவா காருண்யர் அவர். ''வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய நெஞ்சம்'' அவருக்கு. 


நமக்கும் கொஞ்சமாவது அவர் வழியில் போக கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? ஜீவ காருணி யத்தைப்பற்றி அவர் கையாலேயே எழுதிய ஒரு சில வரிகள் நம் மனதைத் தொடவில்லையானால் நமது நெஞ்சம் அம்மா அப்பா மனைவி குழந்தைகள் எந்த உயிரைப் பற்றியும் கவலையே கொள்ளாது.  இரும்போ, பிளாஸ்டிக்கோ!.

'' உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். 

ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். 

ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். 

பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.''
இது அவர் எழுத்து.

அந்த மாமனிதர் ஒரு ம்ருது பாஷி . உரக்கவே பேசமாட்டார். நம்மை மாதிரி எதையாவது சாப்பிட்டுவிட்டு இடுப்பு வேஷ்டியில் கைகளைத் துடைத்துக்கொள்ளும் ரகமல்ல. ஒரு கைக்குட்டை எப்போதும் இடுப்பில். கைககளை வீசி நடக்கவே மாட்டார். யாருமே அவர் கைகளைத் தொங்கவிட்டுக்கொண்டு நடந்துபோனதைப்  பார்த்ததில்லை. எப்போதும் கை கட்டியே காணப்படுவார். காலும் தலையும் எப்போதும் மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை. ஒரே துணி உடம்பைச் சுற்றி தலையையும் சுற்றி இருக்கும். அதுவும் வெள்ளைத்துணி. காலுக்கு ஒரு செருப்பு இல்லாமல் நடக்க மாட்டார். எதிரே வரும் யாரையும் முகமோ, நிறமோ உருவமோ எதையுமே பார்க்கமாட்டார். அப்படி அவர்கள் உருவம் கண்ணில் பட்டுவிட்டால் என்னால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டதோ என்ற பயமும் கவலையும் அவரைத் தின்று விடும்.

அவர் பற்றி அவரே சொல்வது:

கையற வீசி நடப்பதை நாணிக்
கைகளை கட்டியே நடந்தேன்
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால்
மெய்யெலாம் அய்யகோ மறைத்தேன்.
வையமேல் பிறர் தம் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப்பார்த்ததே இல்லை.
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்

அர்த்தம் தான் மேலே சொல்லியிருக்கிறேனே .

இவர் மீது கோர்ட்டில் ஒரு கேஸ். ''ஏமாற்று வித்தைக்காரர், மக்களை தனது பக்கம் வசப்படுத்தி துன்பப் படுத்தக் கூடியவர். இவர் பாடல்களை வெளியே வராமல் தடை போடவேண்டும்'' என்று அந்த கேஸ். கோர்ட்டில் அவர் ஆஜராக உத்தரவு. அந்த கோர்ட் பண்ணின பாக்கியம் அவர் கோர்ட்டில் தனது வெள்ளை மேலாடை போர்த்தியவாறு வந்து நீதிபதி முன் நின்றார். என்ன தோன்றியதோ அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு. அவர் வந்து நின்ற உடனேயே கோர்ட்டில் அத்தனை பெரும் எழுந்து நின்றதைப் பார்த்துவிட்டு தானே தனது இருக்கையில் இருந்து தன்னிச்சையாக எழுந்து நின்று அவரை வணங்கினார். ஒரே வரி தீர்ப்பு. 'இந்த கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது'' அவர் வேறு யாருமில்லை. நம்மோடு அண்மையில் வாழ்ந்த சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்கிற வள்ளலார் சுவாமிகள்.

'''நான் உன் மூத்த பிள்ளை. என் கையில் கருணை நீதி ச்செங்கோல் தரப்பட்டிருக்கிறது. ஜீவ காருண்யம் செய்வதற்கு. என் தெய்வமே, இன்று நீ உன்னை என்னில் காட்டி உன்னில் என்னை ஏற்றுக் கொண்டாய். இனி எனக்கு துயர் இல்லை. நல்லதே செயதாய். என் அன்னையே, அரசே, தந்தையே, எல்லாமும் நீயே, என் மனத்திலுருந்த திரையை நீக்கிவிட்டாய் உன் ஒளி இனி என்னுள்ளே, உன்னை சரணடைந்தேன்'' என்ற பொருளில் பாடியிருக்கிறார்.

இவ்வாறெல்லாம் பாடிக்கொண்டே ஒரு நாள் உள்ளேயிருந்து ஒரு தீபத்தை கொண்டுவந்து அனைவருக்கும் காட்டி வெளியே வைத்தார். ''இது தான் அருட்சோதி தெய்வம், ஆண்டருளும் தெய்வம்.'' என்று வழி காட்டினார். அன்பே தெய்வம், ஆருயிர்க்கெல்லாம் அருள் செய்க. கருணை செய்வீர் என்று உபதேசித்தார்.

''நான் இந்த அறைக்குள் செல்கிறேன். யாரும் கதவைத் திறக்க முயற்சிக்கவேண்டாம். அரசாங்கம் என் விருப்பை மீறி கதவை உடைத்து திறந்தாலும் உள்ளே நான் இருக்கமாட்டேன். எல்லா உயிரிலும் கலந்திருப்பேன் அவர்கள் எல்லா உயிரிடத்தும் காருண்யம் புரிய செய்வேன். இது என் முடிவு.
இது நடந்தது 30.1.1874 நள்ளிரவு. உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை என சேதி கேட்டு தென்னாற்காடு வெள்ளைக்கார கலெக்டர் டாக்டர்கள் புடை சூழ கதவை திறந்து உள்ளேசென்றபோது அங்கே அழுகிய பிண நாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பச்சை கல்பூர வாசனை மணத்தது.

அருளாளர் சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற இயற்பெயர் மறந்துபோய் உலகமுழுதும் வள்ளலார் எனும் புகழ்பெற்று வாழும் அடிகளார் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் எரிந்து கொடிக்கனக்காக எத்தனையோ பேர் பல வருஷங்களாக இன்றுவரை வடலூரில் அவர் நிர்மாணித்த சித்தி வளாகம், சத்ய ஞான சபையில் பசிப்பிணி தீர்ந்து மகிழ்கிறார்கள். யார்போனாலும் சாப்பிடாமல் உள்ளே போகக்கூடாது. நானும் சாப்பிட்டு இருக்கிறேன். 

TALAT MAHMOOD



       இசைக்கு  மொழி தடை இல்லையே  J.K. SIVAN

எனக்கு  சங்கீதம் தெரியும் என்று நான்  பெருமைப் படமுடியாது.  ஆனால்  பாடுவேன்  என்று சமாதானம்  அடையமுடியும்.  இதிலும் ஒரு சிறிய சிக்கல்.  பாடினால் யாருக்கு பிடிக்கும் என்று கேள்வி எழும்புகிறதே, அதற்கு ஒரே விடை, எனக்கு பிடிக்கும்  என்பதால் நான்  பாடுகிறேன், பாடுவேன்.

பாடுவது வேறு  கேட்பது வேறு.  கேட்கப் பிடிக்கிறவர்கள்  பாடவேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே. சங்கீதம்  நமது  பண்பாட்டில்  கலந்ததோ இல்லையோ, ரத்தத்தில் கலந்தது என்று நிச்சயம்  சொல்லமுடியும்.  பாடாதவர் எவருமே இல்லை.  தனக்குள்  தானே,  தனக்கு மட்டும்  பாடிக் கொள்கிறவர்கள்  வெளியே பிறரைப் பாடிக் கொல்வதை விட  இது  மேன்மையானது. சமூக விரோதமானது அல்ல.

அவுரங்க  ஜீப்  பாடமாட்டான் என்பதை விட  பாடுபவர்களை தண்டிப்பானாம். சங்கீதம் பிடிக்காது அவனுக்கு.

நவராத்திரி சமயங்களில் நிறைய மாமிகள் வீட்டில்  வந்தவர்களை பாட சொல்வார்கள். சப்தம் வெளியே வராமல் பாடும் சாமர்த்தியம் கொண்டவர்கள் இருக்கிறார்கள், ஒரே  ராகத்திலேயே  எல்லா பாட்டுகளும் பாடக்கூடிய  பாடகர்களை பொறுமையின்றி கேட்டிருக்கிறேன்.  ஆரம்பித்து விட்டு  முடிக்கமுடியாமல்  தவிப்பவர்களும் உண்டு.  அடுத்த அடி மறந்து போச்சே, என்று  சமாளிப்பவர்களும்,  எப்படியோ  ஒரு  பாதி பாடி விட்டு,  ''ஒரு வாரமா  இருமல், தொண்டை கட்டியிருக்கிறது '' என்று வராத நோயை   சமய சஞ்சீவியாக  வரவழைத்துக் கொள்பவர்களையும்  கண்டிருக்கிறேன்.

 சிலர்  பாட்டு  '' படி' ப்பார்கள்.   என் நண்பர் நகரத்தார் ஒருவர்  வீட்டில் நான் செல்லும்போது  ''சிவன் சார்  நல்லா பாட்டு படிப் பாங்க'. எங்கே  முருகன் மேல்  ஒரு பாட்டு படிங்க''  என்று  சொல்வார்கள்.  நெளிவேன்.  அவர்கள்  பாடச் சொல்கிறார்கள் என்பது தெரியாமல்  ஆரம்ப காலத்தில் ''அடடா முருகன் மேல் பாட்டு படிக்க சொல்கிறார்களே,  ஒருவேளை   புஜங்க ஸ்தோத்ரம் , அல்லது கந்த சஷ்டி கவசம்  ஸ்லோக புஸ்தகம் கொண்டுவந்து பாராயணம் பண்ணியிருக்க வேண்டுமோ''  என்று  தோன்றியது.  அப்புறம் தான்  என்னை பாடச் சொல்கிறார்கள் என்பது புரிந்தது.

நகரத்தார்  என்று சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.  தோடி  மேதை, திருவாடுதுறை  ராஜரத்தினம் பிள்ளை  நாதஸ்வர சக்ரவர்த்தி ஒரு பிரபல நகரத்தார் குல  தனவந்தர்  குலத்தில் ஒரு  விசேஷம் என்பதால் காரைக்குடிக்கு  வரவழைத்த்தார்கள்.  அன்று  அவர் கச்சேரி.  மனிதர் வழக்கம்போல்  அபூர்வமாக   3 மணிநேரத்துக்கும் மேல்  கான  மழை பொழிந்தார். எங்கிருந்தோ எல்லாம் ரசிகர்கள் மாட்டுவண்டி, கோச் வண்டி, சாரட் எல்லாம் பிடித்துக் கொண்டு பல ஊர்களிலிருந்து வந்து  ரசித்தார்கள்.  இரவெல்லாம்  தீவர்த்தி வெளிச்சத்தில்  தரையில்  அமர்ந்து  கூட்டம் கூட்டமாக  ரசிகர்கள் தேவ கானம்  பருகுவார்கள்.   நிகழ்ச்சி  ஏற்பாடு செய்த  தனவந்தருக்கு  தனக்கும்  சங்கீதம் தெரியும் என்று சபையில்  எல்லோர் எதிரிலும் காட்டிக் கொள்ள  ஆசை.

நாதஸ்வர சக்ரவர்த்தி  ராஜரத்னம் பிள்ளையை கௌரவித்து பணமுடிச்சு கொடுத்து,  பலர்  எதிரில்,  ''ஐயா, உங்கள் கச்சேரி  அருமையிலும் அருமை.  நேரம் போனதே தெரியவில்லை.  ஆனால்  எனக்கு  ஒரு  ஏமாற்றம்.  நீங்கள்  தோடியில் ஒரு கீர்த்தனமாவது பாடி இருந்தால்  ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும்  எனக்கு''   என்று  உளறினார்.  அன்று  பிள்ளை   ஒருமணி நேரத்துக்கு மேலாக  தோடியில்  அபூர்வ  ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் செய்து எல்லோரையும்  சங்கீதக் கடலில் மூழ்க அடித்ததில் தொப்பலாக  நனைந்து  நிறைய பேருக்கு தோடி ' ஈரம்'   இன்னும் காயவில்லை

அப்படி இருக்க, இந்த செட்டியார் இப்படி  திடீர் என்று தனது அறியாமையை ''ராபணா'' என்று   போட்டு உடைப்பார்  என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை. ராஜரத்தினம் பிள்ளைக்கு ஒரு புறம் கோபம், இன்னொருபக்கம் ஹாஸ்யம்.   அநேகர் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தனர்.   ஊரில் பெரிய மனிதராயிற்றே.  ராஜரத்தினம் பிள்ளை  குறும்புக்காரர்  என்று அநேகருக்கு தெரியும்.  இந்தமாதிரி சந்தர்ப்பங்கள் கிடைத்தார்  விடுவாரா?

ராஜரத்தினம்சி பிள்ளை சிரிப்பை கஷ்டப்பட்டு  அடக்கிக்கொண்டு பவ்யமாக  எல்லோர்  எதிரிலும்   ''செட்டியார்வாள்,  உங்கள்  சங்கீத ஞானம் எனக்கு தெரியும். நீங்கள்  ஒரு ஜாம்பவான் என்று  கேள்விப்பட்டு  தான் உங்கள்  எதிரில்  நாதஸ்வரம் வாசிக்க ஒப்புக்கொண்டேன். உயர்ந்த சங்கீத ஞானம் கொண்ட சிறந்த ரசிகர் நீங்கள்.   நான்  தப்பு செய்துவிட்டேன். அதனால் உங்களை  எப்படியாவது சந்திக்காமல்  சென்றுவிடவேண்டும் என்று பார்த்தேன்.  என்னைக் கையும் களவுமாக பிடித்துவிட்டீர்களே.  நீங்கள்  சொன்னது ரொம்ப  வாஸ்தவம்.  நான் இன்று  தோடி  பாடமுடியாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சொல்லாமல் தப்பிக்கலாம் என்று பார்த்தேன். வகையாக உங்களிடம் அகப்பட்டுக் கொண்டேன்.

செட்டியார்  பெருமிதமாக  அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

 அப்போது  நாதஸ்வர சக்ரவர்த்தி சொன்னது  தான்  இங்கு விஷயமே.

''செட்டியார்  மன்னிக்க வேண்டும்.  சாஷ்டாங்க  நமஸ்காரம் செய்கிறேன்.  வரும் அவசரத்தில்  நான்  வழக்கமாக  தோடி ராகம்  வாசிக்கும் நாதஸ்வரத்தை வீட்டிலேயே  மறந்துபோய்  வைத்து விட்டு வந்தேன். சரி  வந்த இடத்தில் இந்த நாதஸ்வரத்தில் வரும் ராகங்களை மட்டும் வாசித்து விட்டு நழுவலாம் என்று  நம்பி ஏமாந்தேன்.  என்ன செய்வது.உங்களிடம் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டேன். ''  என்றார்.  சபையே  குலுங்கியது. சிரிப்பு அடங்கவும் கைதட்டல் அடங்கவும் வெகு நேரமாயிற்று.
செட்டியார் பாவம்  தனது  சங்கீத ஞானத்திற்காக  அனைவரும்  கை தட்டுவதாக  எண்ணி  பெருமைப் பட்டார்.

இந்தக் கதை இருக்கட்டும்.  நான் இன்று இதை எழுத முற்பட்டது. ஒரு  இந்தி பாடகர் பற்றி. தலத் மஹ்மூத். .இசையுலகம் இன்றுவரை காணாத  ஒரு தனிப்பிறவி. எத்தனை பாட்டுகள், எல்லாமே  அந்த இனிய  தேன்  குரலில் பாடியவை.  நான் சிறிய  பையனாக இருந்த காலத்தில் ''பாபுல்'' என்ற ஹிந்தி படத்தில் திலிப் குமாருக்காக  அவர் பாடிய  பாடல்களை முதலில் கேட்டேன். அன்று முதல் இன்றுவரை நான் இந்தி நிபுணன் இல்லை.  இசைக்கு மொழி ஏது? . தலத் மஹ்மூத் குரல்  காந்த சக்தி கொண்டது.  இதயத்தை பிழியும் சக்தி வாய்ந்தது. உள்ளே  எங்கேயோ புகுந்து மயிலிறகு தேன் தோய்த்து தடவுவது போல் மனதை த்தொட்டு  தடவி சுகம் தருவது.   


இரவில் கண்ணை மூடிக்கொண்டு  அவர் பாடல்களைக் கேட்கும் சுகம் அதை அனுபவித்தோருக்கு மட்டுமே புரியும்.  அவர் ஆல்பர்ட் ஹால்,   லண்டனில், ( இந்தியாவில்  ரெண்டே பேர்  தான் அங்கு நிகழ்ச்சி கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவு பிரபலம் அந்த ஹால்-  ஒன்று லதா மங்கேஷ்கர்,  மற்றவர் தலத்மஹ்மூத் ) . நிகழ்ச்சிக்கு  பத்து நாள் முன்பே  எல்லா டிக்கெட்களும் விற்று போய்விட்டதாம். அவர் நேரடியாக  தனது   55 வயதில் பாடிய சில பாட்டுகளை  ஒரு நாள்  இரவு கேட்க நேர்ந்தது.  அதைத்  தான் இங்கு  உங்களுக்கும்  தருகிறேன்.  சினிமாவில் அவர் குரல்  எப்படிப் பட்டது என்றால்  10  AM  ராஜா + 8 PBS   இருவரின் குரலை  கலந்து  பிழிந்து வடிகட்டி அதில் கிடைக்கும் எஸ்ஸன்ஸ்.    ஒருமுறை  ஸ்ரீ  பி.பீ.  ஸ்ரீநிவாஸை  அப்போதைய  டிரைவ் இந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பார்த்து பேசினேன்.    அப்போது அவர்  '' தலத் மஹ்மூத்  சினிமா பாட்டுகளை கேட்டு  அவரைப்போல மென்மையான குரலில் பாட எவ்வளவோ முயற்சித்தது  உண்டு. எனக்கு  ஒரு  ரோல் மாடல்  தலத் மஹ்மூத்''  என்று  சொன்னது நினைவில் இருக்கிறது.    

தலத்தின்  சினிமா  பாட்டுகள் நேரடி நிகழ்ச்சியை விட  இன்னுமே  மென்மையாக,  இருக்கும்.  கேட்டுப் பாருங்களேன்.   யு ட்யூபில்  தலத் மஹ்மூத்  என்று க்ளிக் செயது கேட்டுவிட்டுப்   பிறகு எனக்கு சொல்லுங்கள்.  நான்  அவுரங்கசீப்பா  இல்லையா   என்று அப்போது தீர்மானிப்போம்.  மீண்டும் சந்திப்போம்.  இந்த  லிங்கை  க்ளிக் செய்து கேட்கவும்.https://youtu.be/cJwIdhmijw0

Monday, January 29, 2018

GANDHI DEAD

பழைய டயரியில் ஒரு ரத்தக்கறை
J.K. SIVAN

நாலாவது குண்டு யார் சுட்டது என்று எழுபது வருஷங்களுக்கு அப்புறம் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அவரை நினைக்காம இருக்க முடியலியே. காரணம். யாரும் மறக்கக்கூடாத விஷயம். மறக்கமுடியாத மனிதர்.
அப்போது எனக்கு 9 வயசு. நன்றாக நினைவிருக்கிறது. ஆல் இந்தியா ரேடியோவில் வயலின் வீணை எல்லாம் ''டொய்ங்'' ''டொய்ங் ''. நாளெல்லாம் அழுதது. பாட்டு எல்லாம் பாடுமே ஏன் அழுகிறது? என்று கேட்டேன். யாரும் என்னை மதித்து பதில் சொல்லலை. அதற்கு மேல் புரியவில்லை. தெருவெல்லாம் கூடிக் கூடி மொட்டு மொட்டாக கும்பல். என்ன பேசினார்கள் என்று தெரியாத வயது. கோடம்பாக்கத்தில் இருந்தேன். அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.

+++

ஜனவரி 30, 1948 வெளிக்கிழமை.
காலை 3.30 மணி -- வழக்கமாக அவருக்கு பொழுது விடியும் நேரம். பிரிவினையால் நாடு துண்டாடப்பட்டு லட்சோப லக்ஷம் மக்கள் வீடு , வாசல், சுற்றம், உறவு, சுகம் அனைத்து இழந்து பரதேசிகளாக ஒரே இரவில் அனாதிகளாக, மதவெறி, இனவெறி,கொலை வெறி அவர்களைச் சூறையாட, ரத்தம் அநேக இடங்களில் ஆறாக ஓடியது. டில்லி பேருக்குத் தான் தலைநகர். அதற்கு தலை சுற்றியது. அல்புகர்க் தெருவில் பிர்லா மாளிகையின் முதல் மாடியில் நிசப்தம்.

நாடு சுதந்திரமடைந்து விட்டதாம்! கல்கத்தாவின் அமளியை ஒருவாறாக சமாதானப் படுத்திவிட்டு-- முழுமையும் அல்ல--, கொஞ்சம். செப்டம்பர் மாதம் 10 தேதி வாக்கில், அவர் டில்லி வந்து விட்டார். இங்கு அவர் வரவால் நிச்சயம் கட்டாயம் கொஞ்சம் ரத்த சேதம் குறையும். ஆத்திரம் அடங்கும், அமைதி ஏற்பட்டு, காற்றில் கொஞ்சம் அனல் குறைந்து வீசும். இந்த நான்கு மாதத்திலேயே பொதுவாக இருந்த மக்கள் கோபம் கொஞ்சம் அடங்கியது. வெறி சற்று பின் வாங்கியது. எல்லாம் அந்த மனிதரின் அலாதி திறமை. 78 வயதில் அன்பு தான் அவருக்கு பலமாக கை கொடுத்தது.

''அமைதி நீங்கள் காக்கவில்லை என்றால் என் பிராணனை விடுகிறேன். உங்கள் பொறுமைக்காக, விட்டுக் கொடுக்கும் குணத்துக்காக நான் பட்டினி உபவாசம் கிடக்கிறேன்.''

உபவாசம் பயனளித்தது. ஆச்சு. 12 நாள் ஆகிவிட்டது அவர் உண்ணாவிரதம் முடிந்து. ''ஒற்றுமை , ஒற்றுமை, அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். கஷ்டங்களை எதிர்கொள்வோம். காலம் மாறும். நிச்சயம் எதிர்காலம் இந்த சுதந்திர நாட்டில் நமக்கு இன்பத்தைத் தரும்'' என்ன தான் அவர் கத்தினாலும், சில காதுகளில் ஏறவில்லையே. என்ன செய்ய? அவர்கள் இழந்த, பணம், சொத்து, குடும்ப நாசம், பொறுமையாகவா அவர் பேச்சைக் கேட்க வைக்கும்? ஒரு சிலர் அவரையே கொல்ல முயற்சி செய்தனர். இவரால் தானே இவ்வளவும். எதிரிக்கும் அன்பு காட்டும், தவறு செய்பவனையும் சகோதரனாக அணைக்கும் இவர் தேவையில்லை'' என்றனர் சிலர். தினமும் சாயந்திரம் அந்த மாளிகையின் வெட்ட வெளியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் உபதேசம் செய்வார். அமைதி காக்க வேண்டுவார். இந்து முஸ்லிம் இருவரும் இரு கண்கள், ஒரே உயிர் என்றெல்லாம் எடுத்து சொல்வார். மக்களை ஒரே நாளில் அமைதியுறச் செய்ய இயலுமா? காலம் அல்லவோ உதவும்!

அன்று காலை வழக்கம் போல் மரப் பலகை படுக்கையிலிருந்து எழுந்தார். மற்றோரை எழுப்பினார். யார் அவர்கள்? உதவியாளர் பிரிஜ் கிருஷ்ண சண்டிவாலா, பேத்திகளான மனு, அபா. எப்போதும்உடனிருக்கும் வைத்தியர் டாக்டர் சுஷீலா நய்யார் அன்று புதிதாக உருவான பாகிஸ்தானில் வேலையாகச் சென்றுவிட்டார் .

முதியவர் வேப்பங்குச்சியால் பல் விளக்கினார். அது தான் டூத் பிரஷ் அவருக்கு எப்போதும். எத்தனையோ கோடி இந்தியர்களுக்கும் இன்றும் அது தானே.

காலை மணி 3.45. -- முதல் மாடி வெராந்தாவில் குளிர் உடலைத் துளைக்க, வழக்கமான பிரார்த்தனை. எப்போதும் டாக்டர் சுஷிலா தான் கீதை ஸ்லோகங்கள் வாசிப்பார். அவரில்லாததால் மனு. அபா இன்னும் தூக்கத்திலேயே . கிழவரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே அவள், என்னை விட்டுப் பிரிய எண்ணமோ? எனக்கு விருப்பமில்லாத செயல்கள் எங்கும் நிறைய இப்போதெல்லாம் நடக்கிறதே. ''ஹே ராமா, என்னை சீக்கிரமே கொண்டு போய் விடு. வெகு காலம் இதையெல்லாம் இருந்து பார்க்க வைக்காதே. என் கட்டுக்கு மீறி போகிறதே.''

''தாத்தா, இன்று என்ன பிரார்த்தனை படிக்கட்டும்? -- மனு .

''உனக்கு தெரியுமே, அந்த குஜராத்தி பிரார்த்தனைப் பாட்டையே படி.பாடு''

அந்த பாட்டு சொன்ன பொருள் கிட்டத் தட்ட '' ஒ மனிதா, களைத்தோ, இளைத்தோ போனாலும், தொய்யாதெ, விடாதே, தனி மனிதனானாலும் எதிர்கொள். மனதில் பலம் கொள். கைக்கு அது தானாகவே கிடைக்கட்டும். தொடர்ந்து முயன்று கொண்டே இரு!" ( இது என்ன பாட்டு என்று தேடி பிறகு சொல்கிறேன்- சிவன்)

பிரார்த்தனை முடிந்தது. அபா எழுந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டாச்சு. இருவர் தோளிலும் கைத்தாங்கலாக நடந்து தனது அறைக்கு திரும்பினார் பெரியவர். மனு அவரது குளிரில் உறைந்திருந்தகால்கள் மேல் கம்பளி சுற்றினாள் . வெளியே கும்மிருட்டு. இன்னும் சூரிய உதயமில்லை. காரிருளும் பனியும், உறைய வைக்கும் டில்லிக்கே உரித்தான பனிப்படலம். கிழவர் தன் அன்றாட வேலையைத் துவங்கிவிட்டார்.

காங்கிரஸ் எப்படி இயங்க வேண்டும் (??) என்று முதல் நாள் இரவில் தான் எழுதிய சட்ட திட்டம் அவரது பார்வையில் மெருகு பெற்றுக்கொண்டிருந்தது. காங்கிரசின் செயல்பாடு எப்படி இருக்கவேண்டும் என்றுஅவர் எழுதியது தான் அவர் விட்டுச் சென்ற அவரது உயில் எனலாம்.

காலை 4.45 மணி. -- ஒரு குவளை எலுமிச்சம்பழ சாறு, தேனுடன் வெந்நீரில் கலந்து பருகினார்.

காலை 5.45 மணி. -- ஒரு சிறு டம்பளர் ஆரஞ்சு பழ சாறு. இதெல்லாம் அவருக்கு ஏன் தேவை என்றால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அவர் உடல் கலகலத்து விட்டது. சக்தி இல்லை. விரைவில் உணர்வு இழக்க தொடங்கியது. மயக்கம் லேசாக வருகிறதே. தலை கிறு கிறு கிறது. தூக்கமாகிவிட்டது. அரை மணி நேரம் நடை பழகினார். காலுக்கு சக்தி வேண்டுமே. பொழுது ஒரு நிமிஷம் கூட வீணாக்காமல் உழைக்கவேண்டும்? யாருக்கு, தனக்கு பணம் சேர்க்கவா? (அது மற்றவர்களை சேர்ந்தது)

''எங்கே அந்த கடிதங்கள்? சீக்கிரம் கொண்டுவா? நேற்று அந்த கிஷோரிலால் மஷ்ருவாலாவுக்கு பதில் எழுதி சீக்கிரமே நான் குஜராத் வருவேன் அதற்குள் குஜராத்தில் சேவா கிராமத்தில் செய்யவேண்டியதை விளக்கினேனே? ''

அந்த கடிதம் எங்கோ ஞாபக மறதியாக மனு வைத்து விட்டாள் . விடுவாரா கிழவர். தேடிக்கண்டுபிடித்து உடனே தபாலில் அனுப்பு''

தாத்தா, நாம்ப எல்லோரும் பிப்ரவரி 2 வாக்கில் சேவா கிராமம் போகிறோம் இல்லையா?''

''மனு, நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கம்மா தெரியும்?'' எல்லாமே கொஞ்சம் தெளிவானால் இன்று சாயந்திரம் பிரார்த்தனைக் கூட்டத்தில் நாம் இங்கிருந்து செல்வதைப் பற்றி அறிவிக்கிறேனே. ரேடியோவில் ராத்திரியே தெரியப் படுத்தலாம்.''"

உண்ணா விரதங்கள் அவரை வாட்டி எடுத்தன. சில காலமாகவே இருமல். அதைச் சமனப்படுத்த பனை வெல்லம், இருமல் மாத்திரை, லவங்கப்பொடி எல்லாம் எடுத்துக் கொண்டார். அடடே! என்ன இது? லவங்கப் பொடி தீர்ந்து விட்டதே. தினமும் காலையில் சற்று நேரம் அறைக்குள்ளேயே நடப்பதில் அவருக்கு உதவி செய்யாமல், உடனே லவங்கத்தைப் பொடி பண்ண மனு தயாரானாள். பொடி பண்ணிவிட்டு நொடியில் வருகிறேன் என்று குரல் கொடுத்தாள் . ''ராத்திரி உங்களுக்கு தேவைப்படுமே.''

''ராத்திரி பத்தி இப்போ என்ன கவலை? இருப்பேனோ மாட்டேனோ? அப்போ பார்த்துக்கலாமே!''

அவருக்கு மேற்கத்திய மருந்துகள் பிடிக்காது. கிட்டேயே வரக்கூடாது. பென்சிலின் இருமல் மாத்திரை கொடுக்கும்போது கூட அவளிடம் சொல்வார். ''பைத்தியமே, என் ராமன் பெயரைக் காட்டிலுமா இது சக்தி வாய்ந்தது.''

காலை 7 மணி - ராஜன் பாபு வருவார். அவருடன் நேருவும் சேர்ந்துகொண்டு இருவரும் அமேரிக்கா பயணம் விரைவில். உண்ணாவிரத பாதிப்பு இன்னும் சரியாக பழையபடி நடக்க முடியவில்லை.
ஒரு பெஞ்சில் படுத்திருந்தார், பிரிஜ் கிருஷ்ணா அரை மணி நேரம் நன்றாக அவர் கால்களைப் பிடித்து எண்ணெய் தேய்த்து உருவி விட்டார். தெம்பாக இருந்தது. மாடியிலேயே உதவியாளர் பியாரேலால்அறையும். அவரைக்கூப்பிட்டு தான் எழுதித் திருத்திய காங்கிரஸ் செயல்பாட்டு திட்டம் குறிப்பை நீட்டி

''இதைப் படித்துப் பார்த்து நான் ஏதாவது விட்டிருந்தால் பூர்த்தி செய்து, அடுத்த காங்கிரஸ் காரிய கமிட்டியில் பேசி முடிவெடுக்கச் சொல்லுங்கள்''

டில்லி குளிரிலிருந்து விடுபட ரெண்டு மின் ஹீட்டர்கள் ''உர்'' என்று உறுமிக் கொண்டு மேலே இயங்கின. நேரத்தை வீணடிக்காமல் கிழவர் அன்றைய செய்தித் தாள்களைமேய்ந்து கொண்டிருந்தார்.

'' என்ன பியாரேலால், நான் எழுதியதைப் படித்து முடித்தாயா? இனி தமிழ்நாட்டில் அரிசிப்பஞ்சம் இருப்பதை எப்படி தீர்க்கலாம் என்று ஒரு யோசனை சொல்லியிருக்கிறேன் இதையும் சேர்த்துக்கொள் ''. எண்ணெய் உடம்பை மனு குளிப்பாட்டி விட்டாள். அவளையும் விடவில்லை. '' கைகளுக்கு சக்தி அளிக்க நான் உனக்குச் சொல்லிக்கொடுத்த பயிற்சியை விடாமல் செய்து வருகிறாயா?

''இல்லையே தாத்தா எனக்கு அது பிடிக்கலை'' மெல்லிதாக கோபித்துக்கொண்டாலும் அவளுக்கு தாத்தாவின் அக்கறை புரிந்தது. வழக்கமாக பார்க்கும் எடை இயந்திரம் 109 1/2 பவுண்டு காட்டியது. 5 அடி 5 அங்குலம்.உண்ணாவிரதத்துக்கு அப்புறம் ரெண்டரை பவுண்டு கூடியிருக்கிறதே. குளித்தவுடன் புத்துணர்ச்சி. ஒருவர் வந்து ஏதோ ஒரு செய்தி சொல்கிறார். ஒரு பெண்மணி சேவா கிராம் போய்ச் சேரவில்லை.
ஏன்?
வார்தாவிலிருந்து வண்டி எதுவும் கிடைக்கவில்லையாம்.
''வண்டி இல்லையென்றால் நடந்து செல்லவேண்டியது தானே. சில மைல்கள் நடக்க முடியாதா?''

பலே கிழவர் எத்தனை மைல்கள் மின்னல் வேகத்தில் நடப்பவர். நடந்தவர். அப்புறம் சிறிது நேரம் வங்காளமொழி எழுத்துப் பயிற்சி.

''இந்தியாவின் அத்தனை மொழியும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் ஒரு இந்தியன்'' என்ற கட்டுப்பாடு அவருக்கு. வங்காளியில் என்ன எழுதினார்:

'' பைரவன் வீடு நைஹாதியில் இருந்தது. ஷைலா அவன் முதல் பெண். இன்றைக்கு ஷைலாவுக்கும் கைலாஷுக்கும் கல்யாணம்''
காலை 9.30 மணி. -- சாப்பாடு. வேகவைத்த காய்கறி. 12 அவுன்ஸ் ஆட்டுப்பால். 4 தக்காளி. 4 ஆரஞ்சு, கேரட்டு+ எலுமிச்சை, இஞ்சிச்சாறு. நேரம் வீணாகலாமா? இதைச் சாப்பிட்டுக் கொண்டே காங்கிரஸ் சட்டதிட்ட ஒழுக்க நெறி முறைகள் பற்றி பியாரே லாலுடன் விவாதம். நேற்று ஹிந்து மகா சபா தலைவர் சயாம பிரசாத் முகர்ஜியுடன் பேச்சு வார்த்தை. ''அவரிடம் சொல்லுங்கள், அந்த சபையில் ஒரு சிலர் தீவிரவாதிகளாக கொலை, வன்முறை என்று பேசுவது ஈடுபடுவது தவறானது. நாட்டுக்கு நல்லதல்ல. முகர்ஜி தலையிட்டு இவற்றை நிறுத்தலாமே ''

''தலைவரே இவ்வாறு வன்முறையை வளர்க்கும் விதத்தில் பேசுகிறாரே என்ன செய்ய?''

கிழவரின் புருவங்கள் நெருங்கின. அடுத்து நவகாளி கலவரம் பற்றி நிலவரம், விவாதம்.

''நான் பாகிஸ்தான் போகப்போகிறேன். என்னால் வன்முறையை நிறுத்த என்ன வெல்லாம் செய்யமுடியுமோ அதைச் செய்கிறேன்'. நீங்கள் உடனே நவகாளி திரும்புங்கள். சிறிது நாளில் நானும் வந்துசேர்ந்து கொள்கிறேன்.''

அப்போது அங்கே தென்னாப்ரிக்காவில் கூடவே உழைத்த ருஸ்தும் சொராப்ஜி குடும்பத்தோடு வந்தார். சிறிது நேரம் தான் அவரோடு.

காலை 10.30 மணி ---- சிறிய தூக்கம். உள்ளங்கால் மரத்து விட்டது. நெய் தடவி அமுக்கிப் பிடித்து விட்டார்கள்.

12மணி நடுப்பகல். --- ஒரு டம்பளர் வெந்நீர் தேனுடன் கலந்து. தானாகவே பாத் ரூம் சென்றார். அது தான் முதல் முறையாக ஒருவரையும் பிடித்துக் கொள்ளாமல் நடந்தது. பலநாட்களாக ''உண்மையிலேயே'' அவர் செய்த உண்ணாவிரதம் அவர் உடல் நிலையை ரொம்பவே பாதித்து விட்டதே.

''பாபுஜி ஆச்சர்யமாக இருக்கிறதே, மீண்டும் தானாகவே நடக்க ஆரம்பித்து விட்டீர்களே'' கிழவர் சிரித்துக்கொண்டு ''பிரமாதம் இல்லை? ''தனியே நட, தனியாகவே நட'' இது தாகூரின் கடைசி வார்த்தை அல்லவா? '' என்றார்.

மதியம் 12.45 மணி. -- ஒரு உள்ளூர் டாக்டரிடம், இலவச மருத்துவ மனை. அனாதை இல்லம் கட்டச் சொல்லி ஒரு ஆலோசனை.

மதியம் 1மணி -- சில முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சு. பிரிவினையால் ஏற்பட்ட நஷ்டங்கள், அலங்கோலங்கள், இழப்புக்கள், மதக் கலவரம், வெறியாட்டம் குறைக்க என்னவெல்லாம் வழி என்று ஆலோசனை.

'' நான் வார்தாவுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2ந்தேதி சேவா கிராமின் வளர்ச்சி வேலை முறைகள் கவனித்து விட்டு 14ம்தேதி திரும்ப டில்லி வருகிறேன். கடவுள் சித்தம் அப்படியிருந்தால், ஏனென்றால் நாளைக்கு மறுநாள் என்னால் டில்லியை விட்டு புறப்பட முடியுமா என்பது கூட தெரியவில்லையே. அது அவன் உத்தரவல்லவா. சாயந்திரம் ப்ரார்த்தனைக் கூட்டத்தில் என் பிரயாணம் குறித்து சொல்கிறேன்''

''மறைந்த என் காரிய தரிசி மகாதேவ தேசாய் பற்றி ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமே. என்ன அற்புதமான மனிதர் அவர். இதை வெளியிட பணம் வேண்டுமே ? மஹா தேவ தேசாய் எழுதி வைத்தவைகள் வேண்டும் .அவற்றில் இருந்து குறிப்பெடுத்து தான் ஒரு புத்தகம் தயார் செய்யவேண்டும். நரஹரி பாரிக் இதற்க்கு சரியான ஆள். ஆனால் அவருக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, அடுத்து இந்த வேலையை சந்திரா ஷங்கர் ஷுக்லாவிடம் கொடுக்கலாம் '' என்று சொன்னார் கிழவர்.

அதற்குள் சுதிர் கோஷ் என்ற நிருபர், ஆங்கிலே செய்திகளில் பிரதமர் நேருவுக்கும் உதவி பிரதம படேலுக்கும் இடையே விரிசல், லடாய் என்று விமர்சனங்கள் வருவதை கிழவரிடம் சொன்னார்.

''அப்படியா. இன்றே படேலைக்கூப்பிட்டு விசாரிக்கிறேன். ஜவகரும் ஆஜாத்தும் இன்றிரவு 7 மணிக்கு வருவார்களே. அவர்களிடமும் பேசுகிறேன்''

மத்தியானம் கொஞ்சம் ரெஸ்ட். அடி வயிற்றில் களி மண்ணைப் பிசைந்து பத்து கெட்டியாக போட்டுக்கொண்டு வெயில் பட படுக்கை. முகத்தில் வெயில் படாமல் நவகாளியிலிருந்து கொண்டுவந்த தாழங்குடை. மனுவும் அபாவும் மீண்டும் கொஞ்ச நேரம் கால் பிடித்து விட்டார்கள்.

ஒரு நிருபர் வந்து கேட்டார். பாபுஜி நீங்கள் குஜராத் சேவாக்ராம் 1ம் தேதி பிப்ரவரி செல்கிறீர்களா?

''யார் சொன்னது அப்படி?''
''சில பத்திரிகைகளில் அப்படி ஒரு செய்தி ''
''ஆமாம். ஆனால் எந்த காந்தி போகிறார் என்று எனக்கு தெரியவில்லையே'' (அப்போதே காந்தி என்ற பேரில் சிலர்
முளைத்து விட்டார்கள்)

பகல் 1.30 மணி. ---- பிரிஜ் கிருஷ்ணா ஒரு செய்தி படித்துக் காட்டினார். அகாலி தாள் தலைவர் மாஸ்டர் தாராசிங் ''ஹே காந்தியே, நீ நாட்டுக்கு செய்ததெல்லாம் ரொம்ப ஜாஸ்தி, உடனே இமயமலைக்குப்போய் தவம் செய்'' என்றும் பிரிவினைக் கலவரங்களுக்கு காந்தியே காரணம்'' என்று கோபமாகப் பேசியிருக்கிறார். நேற்று ஒரு பாகிஸ்தான் அகதி பண்ணிய ரகளையும் கிழவரை வருத்தப்படவைத்தது. இதெல்லாம் கேட்டு பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. கொஞ்சம் கேரட் எலுமிச்சை ஜூஸ் பருகினார்.

சில குருடர்கள், போக்கிடம் அற்ற அகதிகள் என்று சிலர் அவரைப் பார்க்க வந்தனர். அவர்களை ரட்சிக்க பிரிஜ் கிருஷ்ணாவிடம் சில ஆணைகள் இட்டார். அலஹாபாத் கலவரங்கள் பற்றி கேட்ட செய்தியால் கண்களில் ஜலம்.

பகல் 2.15 மணி. -- மக்கள் சந்திப்பு. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பலர். ரெண்டு பஞ்சாபியர் அவர்கள் மாகாணத்திலிருந்த ஹரிஜன் மக்கள் நலம் பற்றி பேசினர். சில சிந்திகள். இலங்கையிலிருந்து சிலர். அவர்கள் நாட்டு விடுதலை பெப்ரவரி 14க்கு வாழ்த்து செய்தி வாங்க .கூட வந்த ஒரு குட்டி சிங்களப்பெண், கிழவரின் கையெழுத்தை தனது புத்தகத்தில் பெற்றுக்கொண்டாள் . அதிர்ஷ்டக்காரி அவள்.!!

பகல் 3 மணி -- ஒரு பேராசிரியர் வந்தார். '' பாபுஜி, நீங்கள் செய்வதைத்தான் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன் புத்த பிரான் சொல்லியும் செய்தும் வந்தார்.

பகல் 3.15 மணி --- ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரர் வந்து ஒரு ஆல்பம் தந்ததில் முழுக்க தானே அவர் எடுத்த புகைப்படங்கள். பரிசாக அளித்தார். பஞ்சாபிலிருந்து ஒரு குழு வந்தது. அவர்களது பெப்ரவரி 15ம் தேதி டில்லியில் நடக்கப்போகிற மாநாட்டிற்கு தலைவர் ஒருவரை பரிந்துரை செய்ய வேண்டியது. கிழவர் ராஜன் பாபு பெயரை அங்கீகரித்தார். தானே வாழ்த்து செய்தி அனுப்ப ஒப்புக்கொண்டார்.

பகல் 4 மணி - படேல் தனது பெண் மணிபென்னுடன் வந்தார். கிழவர் எழுந்து தானே பாத்ரூம் சென்றார்.

'' பிரிஜ் கிருஷ்ணா. நாளைக்கு நாம் குஜராத் வார்தா செல்ல ரயில் டிக்கெட் வாங்கிவிடப்பா''. படேல் ப்ரிஜ்க்ரிஷ்ணாவுடன் சிறிது சம்பாஷணை செய்தார். கிழவர் பாத்ரூமிலிருந்து மெதுவாக வந்தார். ரெண்டு பேரும் அவர் காலில் விழுந்து வணங்கினர். கிழவர் படேலுடன் பேசினார். மந்திரி சபையிலிருந்து நேரு படேல் இருவருமே விலக வேண்டும் என்று கிழவர் முதலில் அபிப்ராயப்பட்டார். ஆனால் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் அந்த ரெண்டுபேரும் அத்யாவசியம் என்று சொல்லிவிட்டதால் சரி என்று ஒப்புதல்.

''படேல்ஜி , இன்று சாயந்திரம் பிரார்த்தனைக் கூட்டத்தில் இது பற்றி அறிவிக்கிறேன். இரவு நேரு வரும்போது அவரிடமும் இது பற்றி பேசுகிறேன். தேவைப்பட்டால் உங்கள் இருவரிடையே சமரசம் திருப்திகரமாக இல்லையென்றால் நாளை நான் வார்தா செல்வதையும் தள்ளி வைக்கிறேன்''

பேசும்போது கத்தியவாரிலிருந்து சில தலைவர்கள் சந்திக்க விரும்புகிறார்கள் என்று மனு தெரிவிக்க

''அவர்களிடம் சொல், கட்டாயம் சந்திக்கிறேன், ஆனால் இன்றைய ப்ரார்த்தனைக் கூட்டம் முடிந்த பிறகு அதுவும் நான் இருந்தால்''.

மனு சொன்னபிறகு அவர்களும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்காக காத்திருக்க, அவர் படேலுடன் பேசிக்கொண்டே அபா சாயந்திர உணவு தந்தாள். என்ன தட புடல் சாப்பாடு அது தெரியுமா. கேளுங்கள் ? ஆட்டுப்பால், வேகவைத்த காய்கரிச்சாறு, வழக்கமான ஆரஞ்சு, கேரட், எலுமிச்சை சாறு.

''எங்கே நான் நூற்கும் சர்க்கா அதைக் கொண்டுவா'' ஆர்வமுடன் கொஞ்ச நிமிஷம் நூல் நூற்றார்.

+++

அன்று காலை 37வயதான ஒருவன் டில்லி ரயில் நிலையத்திலேயே 6ம் நம்பர் அறையில் வந்து தங்கினான். கூட ரெண்டு பேர் அவனைத்தேடி வந்தவர்களின் பெயர் நாராயண ஆப்தே, விஷ்ணு கார்காரெ. நண்பர்கள். கூட்டாளிகள் மொத்தம் எட்டு பேர். இவர்கள் மூன்று பேருக்கு தான் இன்றைக்கு டில்லியில் வேலை.. அன்று எப்படியாவது கிழவரை அருகில் சென்று சந்திக்க முயற்சி. பிரார்த்தனைக் கூட பந்தல் மேடைக்கருகே வெளியே வடப்புரத்தில் ஓரத்தில் நின்றால் அருகே அவரைக் காணலாம் என்று முடிவு. அங்கிருந்து 35 அடி தூரம் தான் இருக்கும். அவருக்கு வெகு அருகில் செல்ல முடியாது. மற்ற இருவரும் துணைக்கு.

+++

பிற்பகல் 4.30 மணி. -- தான் புதிதாக வாங்கிய காகி கோட்டை போட்டுக்கொண்டான் அவன். நேராக ஒரு டோங்கா பிடித்து பிர்லா மாளிகை வந்தான் நண்பர்களோடு. 20ம் தேதி ஜனவரி அன்று யாரோ சிலவிஷமிகள் கிழவரைக் கொல்ல சதி முயற்சி நடந்து தோற்றபின் நேருவும் படேலும் எப்போதும் 30 போலிஸ் காரர்கள் சூழ தான் கிழவரை வெளியே எங்கும் உலவ அனுமதித்தார்கள். ஆகவே எவருமே கிட்டே செல்ல முடியாது. எண்ணற்ற போலிஸ் வேறு சாதாரண உடையில் எங்கும் சுற்றியவாறு கண்காணிப்பு. மக்களை துன்புறுத்த வேண்டாம். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்று கிழவர்கேட்டுக் கொண்டாலும் பாதுகாப்புக்காக நேருவும் படேலும் செய்ய வேண்டியதைச் செய்திருந்தனர்.

+++

3 நண்பர்களும் தனித் தனியாக பிர்லா மாளிகை மைதானத்தில் நுழைந்த நேரத்தில் தான் கிழவரும் படேலும் உள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.

+++

மாலை 5 மணி --- கார்கால சூரியன் ஒளி குன்றியிருந்தான். - அது பிரார்த்தனை நேரம். கிழவருக்கு குறித்த நேரத்தில் எதையும் செய்யவேண்டும். கால தாமதம் அவருக்கு அறவே பிடிக்காது. இடுப்பிலே கச்சத்தில் தொங்கும் இங்கர்சால் சங்கிலி கடிகாரம் அன்று காணோம். கொஞ்ச நாளாக அருகில் உள்ளோர் தான் மணி சொல்லுவார்கள். மனுவும் அபாவும் நேரமாகிவிட்டது உணர்ந்தனர். ஆனால் கிழவர் படேலோடு மும்முரமாக பேசிக்கொன்டிருக்கிறாரே.

மாலை 5.10 மணி -- இனி தாமதிக்கக் கூடாது என்று அபா கடிகாரத்தை கிழவருக்குக் காட்டினாள். பாவம் அவர் கவனிக்கவில்லை. படேலின் பெண் மணிபென் தைரியமாக குறுக்கிட்டாள் .

''ஒ,வெகுநேரமாகிவிட்டது. இங்கிருந்து நான் கிளம்பிப் போகவேண்டும்'' என்றார் கிழவர். பேச்சு முடிந்தது.

கிழவர் எழுந்தார். காலில் பாதுகை அணிந்தார். பக்க வாட்டு கதவைத் திறந்து அந்தி நேரத்தில் வெளி நடந்தார். மேலே ஒரு கம்பளி குளிருக்காக. ரெண்டு பேத்திகள் தோளில் கைத்தாங்கலாக, வலது கைக்கு மனுவின் தோள், இடதுகைக்கு அபாவின் தோள். மனுவின் ஒரு கையில் அவர் உபயோகிக்கும் எச்சில் துப்பும் பாத்திரம். மூக்குக் கண்ணாடி கூடு, ஜபமாலை, அத்துடன் அவளுடைய நோட்டுப் புத்தகம். பின்னால் பிரிஜ் கிருஷ்ணா. அவர் அருகில் பிர்லா குடும்பத்தினர் சிலர், மற்றவர்கள், கத்தியவாரிலிருந்து வந்த குழு. கூட்டத்தில் எல்லோருக்கும் ஆச்சர்யம். எப்படி கிழவர் நேரம் தவறினார் என்று. அவரைக் கண்டதும் ஓவென்று ஆரவாரம்.

நேரம் கடந்ததால் வழக்கமாக வரும் வழியை விட்டு, குறுக்கு வழியாக புல் தரை கடந்து மேடைப் படி நோக்கி நடந்தார்.

''அபா , இன்று எனக்கு நீ கொடுத்த கேரட் வேகவில்லை. ஆடு மாடு உணவு எனக்கு,'' \
''இல்லை தாத்தா இதை கஸ்துரிபா பாட்டி குதிரை உணவு என்பாளே ஞாபகமிருக்கிறதா?'' இருவரும் சிரித்தார்கள். ''மற்றவர்கள் ஏற்காததை நான் ஏற்று உண்பது சிறப்பல்லவா'' என்றார். ரெண்டுபேத்திகளும் தாத்தா கடிகாரம் உப்யோகிக்காததை கேலி செய்தார்கள்.

''அது உங்கள் தப்பு. நீங்கள் எனக்கு மணி சொல்வதால் எனக்கு எதற்கு கடிகாரம்?'. நான் பத்து நிமிஷம் லேட்டானதற்கு நீங்கள் தான் காரணமே!

பிரார்த்தனைக்கு நேரம் தவறினது பிசகு. குறித்த நேரத்தில் செய்யவேண்டிய வேலைக்கு குறுக்கே கடவுளே வந்தாலும் காக்க வைக்க வேண்டும். நோயாளிக்கு மருந்து குறித்த நேரத்தில்கொடுக்க வில்லையானால் அவன் மரணமடைவான்.''
++++
200 கஜ நேரத்தில் 170 கஜ தூரம் வந்தாயிற்று. 6 வளைந்த படிகள் தான் இருக்கிறது. அதைக் கடந்தால் பிரார்த்தனைத்திடல். பிரார்த்தனைத் திடல் அடைந்தால் பேசக்கூடாது. போலிஸ்காரன் குர்பச்சன் சிங் கும்பலை விலக்கினான். நூற்றுக் கணக்கானோர் சூழ, அதில் இருபது முப்பது பேர் போலிஸ் ஆட்கள். மேடையின் மேல்படி முன் நின்று இரு கரம் கூப்பி கூட்டத்தை வணங்கினார் கிழவர். அனைவரும் மரியாதையாக வழி விட்டனர். கடைசி படி ஏறிவிட்டார்.

+++

தான் நிற்கும் இடத்திற்கு நேராக அவர் வருவது தெரிந்தது அவனுக்கு. எண்ணத்தை மாற்றிக்கொண்டான். முன்னே இருந்தவர்களை முழங்கையால் இடித்து த்தள்ளி முன்னேறினான். மற்ற இருவர்கள் தயாராக வழி விட இரு கரம் கூப்பி கிழவரை வணங்கினான். இரு கூப்பிய கரங்களுக்கும் இடையே கைக்கடக்கமான அந்த கருப்பு இத்தாலி நாட்டு பெரெட்டா கைத்துப்பாக்கி! (அட. இதுவும் இத்தாலியா, எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே!!) ''

''நமஸ்தே காந்திஜி'' என்ற அவன் குரலைத்தொடர்ந்து, மனு பதிலுக்கு வணங்கினாள். காந்திஜியும் பதிலுக்கு வணங்கினார். அவன் குனிந்தான். மனுவுக்கு அவன் அவரது கால்களை வணங்கி முத்தமிடுவான் என்று நினைத்து அவருக்கு இந்த மரியாதை எல்லாம் பிடிக்காது , நகரு'' என்று கையால் ஜாடை காட்டியும் நகராததால்

''அண்ணா, பாபு, ஏற்கனவே பிரார்த்தனைக்கு லேட். ஏன் அவரை தடை செய்கிறீர்கள்?'' என்றாள்'' போலீஸ் யாரும் பக்கத்தில் அப்போது இல்லை.

+++

நாதுராம் விநாயக கோட்சே தன் இடக்கையால் மனுவைப் பிடித்து தள்ளினான். அவன் வலக்கரத்தில் துப்பாக்கி. அவள் கையில் வைத்திருந்த பொருள்கள் யாவும் கீழே சிதறின. சில வினாடிகள் மனுஅவனை எதிர்த்தாள். அவருக்குத் தேவையான ஜபமாலையைக் கீழேயிருந்து எடுக்க குனிந்தாள். ஒரு வினாடிக்குள் அந்த அமைதிச் சூழலில் காது செவிடு பட வெடி சத்தம். கோட்சே செலுத்திய துப்பாக்கி ரவைகள் காந்திஜியின் அடிவயிற்றைத் துளைத்தன. மூன்று குண்டுகள் அடிவயிற்றையும் இதயப்பகுதியையும் துளைத்தன. மூன்றாவது குண்டு துளைத்தபோது கூட காந்தி நின்றுகொண்டே இருந்தார். இருகைகளும் கூப்பியபடி இருந்தன.

'' ஹே ராம், ஹே ராம்'' என்ற ஓர் சொல் தான் வெளிப்பட்டது. மூச்சு திணறியது. பிறகு, பிறகு, மெதுவாக அந்த மகா புருஷர் தரையில் சாய்ந்தார். கைகள் இன்னும் கூப்பியே இருந்தன. அஹிம்சா மூர்த்தி பின் எப்படி காட்சி யளிப்பார்?? கண் பிதுங்கி,நாக்கு முன்னே தள்ளி, கை கால் உதைத்துக் கொண்டா நம் போல் இருப்பார்? புகை மண்டலம் சூழ்ந்தது. எங்கும் ஒரே குழப்ப நிலை,அமளி, பயம்,கலவரம் பரவியது. இரு பேத்திகளின் மடியிலேயே தலை சாய்த்து அந்த மகான் கீழே விழுந்தார். முகம் வெளுத்து விட்டது. அவர் மேலே போர்த்தியிருந்த வெள்ளை நிற ஆஸ்திரேலிய கம்பளி செக்கச்ன் செவேலென்று ரத்த நிறம் பெற்றது.

மாலை 5.17 மணி - மோகன் தான் கரம் சந்த் என்ற பெயர் வைக்கப்பட்டாலும் இனி அவர் ''மகாத்மா காந்தி''. அவர் இனி இல்லை.

பின்னர் மனு சொன்னாள் : ''அவருக்கு ஏற்கனவே இன்று தான் கடைசி நாள் என்று விடிகாலை இன்று அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

''என்னை யாராவது சுட்டால் கூட ஒரு முணு முணுப்பும் இன்றி இறைவன் நாமத்தோடு என் மறைவு இருக்கும். நீ பின்னால் உலகுக்குச் சொல் இங்கு உண்மையாக ஒரு சத்தியம் கடைப்பிடித்த மகாத்மா இருந்தார் என்று''

காந்தி என்ற கிழவர், போர்பந்தரிலிருந்து துவங்கி, உலகமெங்கும் நமது தேசத்துக்கு நற்பெயர் தந்து, புகழ் பெற்று, அந்நியனிடமிருந்து நாட்டை மீட்டு, சுதந்திர நாடாக்கி இன்று நம் இஷ்டம் போல் களியாட்டம் ஆட வழி வகுத்தார். அவர் நடந்த பாதை, அசத்தியத்திலிருந்து சத்தியத்துக்கு. இருளிலிருந்து ஒளி மயத்துக்கு, அழிவிலிருந்து அழியாத அமரத்வத்துக்கு. அவர் சொன்னவை நாலு திசையிலும் உண்மை, தர்மம்,சத்யம் எது என்று எதிரொலித்து, நீதியை நிலைநாட்டி அனைவரையும் அவரைத் தெய்வமாக யுக புருஷனாக, அவதாரமாக, மகாத்மாவாக நோக்கச்செய்தது.

அவர் இன்றிருந்தால் ஒருவேளை ''என்னை இவர்களிடமிருந்து காப்பாற்றி ய உனக்கு நன்றி கோட்சே'' என்று சொல்லியிருப்பாரோ?''

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...