Saturday, January 27, 2018

MADHURANTAKAM


   மதுராந்தகத்தில் மதுரமான  சுக்கு மல்லி காப்பி.


மதுராந்தகம் என்றவுடனே மறக்கமுடியாத  துடிதுடிப்பான, சிரித்த முகம்.  அந்த சிறு உடலில் தான் எத்தனை சுருருப்பு.  வயதை மிஞ்சின உற்சாகம் எப்போதும் எனக்கு ஒரு  படிப்பினை.  இன்னொரு கி.வா.ஜ. என எல்லோரும் புகழும் அவர் தான் கைங்கர்ய சீமான், திருமால் கவிச் செல்வர்  உ.வே. ஸ்ரீ  ரகுவீர பட்டாச்சார்யார்.

சினிமாப்பாட்டும்  சீரிய  திவ்ய ப்ரபந்தமும் , திகட்டாத சமஸ்க்ரித ஸ்லோகமும் ஒன்றாய்  இணைக்கும் கைவந்த கலை அவருக்கே உரித்தானது. அவர்  கடுக்களூர் திருமால் அடியார் அருள் மன்ற சார்பில்  47வருஷ  வைபவத்தை ஸ்ரீ ராமானுஜரின்  ஆயிரமாவது ஆண்டுவிழாவாக  கொண்டாடி  பொருத்தமான  இடமாக  1883ல் கட்டிய  ஹிந்து கார்னேஷன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்  26.1.18 அன்று சிறப்பாக  ஏற்பாடு செயதிருந்தார். 

அடியேனை சிறு குழந்தைகள்  திருப்பாவை ஓதல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அழைத்தது எனது பாக்யம் என்று கருதினேன். என் எதிரே    நூற்றுக்கு குறையாத  எல்லாமே ஆண்டாள் வயது   கிராமத்து  சிறுமிகள் சிறுவர்கள்.    கணீரென்று திருப்பாவை முப்பதும் தப்பாமல்  பாதி ஒரு பிரிவு, மீதி  இன்னொரு  பிரிவாக  ஓதினது ஆச்சர்யமாக இருந்தது.  எல்லாம் பட்டாச்சாரியார் ட்ரெயினிங்.

பழம்பெரும் வெள்ளைக்கார கால  பள்ளிக்கூட கட்டிடம். பெரிய பெரிய  நிழல் தரும் மரங்கள் அடியில் தரையில் ஜமுக்காளம் விரித்து குழந்தைகள். எதிரே  சிறு   மேடையில் அவர்களை  ரசித்தவாறு நான்.  குழந்தைகளுக்கும் வந்திருந்த பெரியவர்களுக்கும்  நிறைய  ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்க  புத்தகங்கள் வழங்கினேன்.  மனது நிறைவோடு  பட்டாச்சாரியார் வீட்டில் பசிக்கு  4 இட்டலி சாப்பிட்டு விட்டு சென்னை திரும்பினோம். பட்டாச்சாரியார்  சுறுசுறுப்பின்  ரகசியம் அவர் மனைவியார் மூலம் தெரிந்துகொண்டேன்.  சுக்கு மல்லி காப்பி  பலவருஷங்களாக அந்த குடும்பம் சாப்பிட்டு வருவதால் காப்பி  டீ  வாசனையில் அங்கே கிடையாது. எனக்கு அந்த  சு.ம. காப்பி ரொம்ப பிடித்தது.  A  short video clipping sent by someone is attached https://youtu.be/gl-VDDRJVKg

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...