Monday, September 25, 2017

அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர்


யாத்ரா விபரம்  J.K. SIVAN 













                                            
                    அச்சுதமங்கலம்  சோமநாதேஸ்வரர் 

திருவீழிமிழலை கிராமத்திலிருந்து  அரிசிலாறு போகும் வழியில்  அச்சுத மங்கலம் என்கிற கிராமம் கால் மணி நேரத்தில் வருகிறது.  அங்கேயே இருந்துவிடலாமா என்று தோன்றும் அமைதியான கிராமம். இந்த  அரிசிலாறு பற்றி ஒரு   விஷயம் தெரியுமா.

மூவுலகையும்  காத்து அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக  நீ  இங்கே வா  என்று காவிரியை அழைத்தாராம் மகாவிஷ்ணு.  ஹரி முன்பாக காவிரி வந்தாள் .

''காவேரி,  நீ கடலில் சங்கமமாகும் காவிரிபூம்பட்டினத்தில்  பக்தர்கள் தீர்த்தமாடுவதைக் காட்டிலும்  நீ, கடலோடு சேருமிடத்தில் வேறு ஒரு இடத்தில்  நீராடுவோருக்கு ஏழு கடலிலும் நீராடிய பலன் உண்டாகும். அங்கு காரைவனம் என்னும் சாகம்பரி பட்டணம் உருவாகும். அங்கு நானும் சிவபெருமானும் நித்யவாசம் செய்வோம்‘’ என்று காவிரிக்கு வரம் தந்தானாம்.  இவ்விதமாக காவிரி இப்போதுள்ள காரைக்கால் கடலோரத்தில் ஆறாக உருவெடுத்தாளாம்.

காவேரி இப்படி தென்புறமாக ஹரி சொல்லி ஆறாக ஓடி அரிசொலாறாக இருந்து காலப்போக்கில் அரசலாறு போல்  அதன் பெயரும்  வளைந்து நெளிந்து அரிசிலாறாக இன்று ஓடுகிறது. திருவீழிமிழலையில் அவளைக் கண்டேன். ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரியவேண்டும். இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன.

இருபுரமும் மரங்கள் கப்பும் கிளையாக அடர்ந்து நிழல் தர, பச்சைப் பசேலென வயல்கள் கண்ணுக்கெட்டியவரை தோன்ற, பசுக்கள், காளைகள், கன்றுகள், வைக்கோல் போர்கள், பனைமரதூண் தாங்கிய மண்ணால் பூசிய திண்ணைகள், மஞ்சள் குங்குமம் தீட்டிய சிறு மரக்கதவுகள். மாட்டு வண்டிகள், தொழுவார்கள், காய்கறி விளையும் கழனிகள். சலசல வென்று நீர் ஓடும் வாய்க்கால்கள், தேங்கி நிற்கும் தமரக்கலன்கள், குட்டைகள்.  கிராம வாசனையை சென்னையில் அனுபவிக்கவே முடியாது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில்  உள்ள அச்சுத மங்கலம் சோமனாதசுவாமி சதுர்வேதி மங்கல கோயில் ஆயிரம் வருஷங்களை  தாராளமாக கடந்த ஒரு பழைய ஆலயம்.   அச்சுதமங்கலத்தை   ஸ்ரீவாஞ்சியத்திலிருந்தும்  நன்னிலத்திலிருந்து,   3 கி.மீ. தூரத்திலும்  20 கி.மீ. திருவாரூரிலிருந்தும்  சென்று அடையலாம். 

இங்கே  மிக முக்கியமான விஷயங்களை கொண்ட 30  கி.பி. 1237 ஆண்டு வெளியிடப்பட்ட மூன்றாம் குலோத்துங்க சோழனின் 21 ஆம் ஆட்சியாண்டை சார்ந்த கால கல்வெட்டுகள் கிடைத்தன. .

ஆலய நேரம் 6.00 a.m. to 10.00 a.m. and from 5.00 p.m. to 8.00 p.m.  Sri Darmeswarar temple, Achutha Mangalam, Tiruvarur.
 
வனவாச காலத்தில் அர்ஜுனன் இங்கே வந்து  ஒரு அம்பினால் பூமியிலிருந்து ஒரு நீர் நிரம்பிய குளத்தை உருவாக்கினான் என்று ஒரு குளத்தை காட்டினார்கள். அதன் கரையில் தான் சிவனின் ஆலயம். அர்ஜுனமங்கலம் என்று பெயர் கொண்ட ஊர்  பின்னால் அச்சுதமங்கலமாகியதாம்.   சிவன் தர்மேஸ்வரர் என்றும் அம்பாள் தர்மபத்தினி என்றும் நாமம் கொண்டவர்கள்.

இந்த ஆலயத்தில் இருக்கும் ஜ்வரேஸ்வரர் எத்தனையோ பேரின் ஜுரத்தை குறைத்திருக்கிறார்.  பல பேர் வந்து  இன்றும்  நன்றி காணிக்கை செலுத்துகிறார்கள். அப்போதெல்லாம் அப்போல்லோ இல்லை. புதிய பல மருந்துகளை உள்ளே செலுத்தி காசு வாங்கிக்கொண்டு அந்த மருந்து உங்கள் உடம்பில் என்ன வேலை செய்கிறது என்று வேடிக்கை பார்க்கும் மருத்துவர்கள் இல்லை.  ஜ்வரேஸ்வரர் தான் காப்பாற்றினார்.

நிர்வாகம் கேவலமாக இருக்கிறது. கோவிலில் யாருமே இல்லை நாங்கள் சென்றபோது.  ஒரு பள்ளி ஆசிரியர் ஒய்வு பெற்று தினமும் வீட்டிலிருந்து எண்ணெய்  கொண்டுவந்து விளக்குகளை ஏற்றுகிறார். சற்று நேரத்தில் ஒரு  இளைஞர், இன்ஜினீயர் வேலை பார்ப்பவர்,  வந்தார்.அவர்  மிகவும் ஆர்வமாக இந்த கோவிலை பராமரிப்பதில் அக்கறை காட்டியது சோமநாதர் அருளினால் என்று தான் எனக்கு தோன்றியது. அவரை பாராட்டினேன். சில புத்தகங்களை அவருக்கு பரிசளித்தேன். 
அவ்வப்போது கடவுள் மாதிரி ஒரு அர்ச்சகர் வந்து காட்சி தந்து அர்ச்சனை அபிஷேகம் செயகிறார் என்றும் கேள்விப்பட்டேன்.  நிறைய புராதன கிராம பெரிய  கோவில்கள் இந்த நிலையில் இருப்பது நமது துர்பாக்கியம்.

ஆலய நேரம் 6.00 a.m. to 10.00 a.m. and from 5.00 p.m. to 8.00 p.m. Sri Darmeswarar temple, Achutha Mangalam, Tiruvarur.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...