Friday, September 29, 2017

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 5

|| श्री कनकधारास्तोत्रम् ॥ ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 5
J.K. SIVAN


नमोऽस्तु देव्यै भृगुनन्दनायै
नमोऽस्तु विष्णोरुरसि स्थितायै ।
नमोऽस्तु लक्ष्म्यै कमलालयायै
नमोऽस्तु दामोदरवल्लभायै ॥ १४॥

Namosthu devyai bhrugu nandanayai,
Namosthu vishnorurasi sthithayai,
Namosthu lakshmyai kamalalayai,
Namosthu dhamodhra vallabhayai.

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை

அம்மா தாயே, பிருகு முனி அளித்த பார்கவி , உன் பாதார விந்தங்களில் சரணடைகிறேன். தாமோதர நாயகி, தயை கூர்ந்து அருள்வாயம்மா. மஹாலக்ஷ்மி தேவி, தாமரை மலரேந்திய தயா நிதியே, மாதவனின் மார்பில் மலர்ந்து மகிழ்ச்சி தரும் மஹாலக்ஷ்மி உன்னை போற்றுகிறேன்.ஜ்யோதி மயமானவளே. எங்கும் ப்ரகாசமானவளே. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன் அம்மா. தாமரை இதழா, கண் விழிகளா?. உலகை ஆனந்தமயமாகவும் நிறைந்த செல்வம் கொண்டதாகவும் ஆக்குகின்ற ஆனந்த ஜோதியே. உன்னை போற்றுகிறேன்.


नमोऽस्तु कान्त्यै कमलेक्षणायै
नमोऽस्तु भूत्यै भुवनप्रसूत्यै ।
नमोऽस्तु देवादिभिरर्चितायै
नमोऽस्तु नन्दात्मजवल्लभायै ॥ १५॥

Namosthu Kanthyai kamalekshanayai,
Namosthu bhoothyai bhuvanaprasoothyai,
Namosthu devadhibhir archithayai,
Namosthu nandhathmaja vallabhayai.

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை
வணங்குவது என்பது எல்லோரையும் அல்ல. தகுதி உடையவர்களை மட்டும் தான் வணங்குகிறோம். அரசியலில் வேறு அகராதி. அம்மா தாயே, மஹாலக்ஷ்மி தேவி. என் மனங்கவர்ந்த நந்தகோபனின் குமாரன் நந்த கோபாலனின் மனங்கவர்ந்தவளே. உன்னை போற்றுகிறேன். நான் மட்டுமா போற்றுகிறேன் அகில புவனமும் அல்லவோ போற்றுகிறது. தேவாதி தேவர்கள் ரிஷிகள், முனீஸ்வரர் அனைவருமல்லவோ போற்றி உன்னை வணங்குகிறார்கள்.

( நந்தகோபாலனோடு நான் ஆடுவேன், ஆனந்த கோபாலனோடு நான் ஆடுவேன் என்று சின்ன வயதில் பெண் வேஷம் போட்டு ஆடியிருக்கிறேனே. நவராத்ரி சுண்டலுக்கு இதெல்லாமும் செய்யவேண்டி இருந்தது. -- சிவன் )


सम्पत्कराणि सकलेन्द्रियनन्दनानि
साम्राज्यदानविभवानि सरोरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरितोद्धरणोद्यतानि
मामेव मातरनिशं कलयन्तु मान्ये ॥ १६॥

Sampath karaani sakalendriya nandanani,
Samrajya dhana vibhavani saroruhakshi,
Twad vandanani dhuritha haranodhythani,
Mamev matharanisam kalayanthu manye

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

என் அடிமனதில் உள்ள விருப்பம் உனக்கு தெரியுமே அம்மா! என்றும் எப்போதும் உன் திருவடிகளை சரணடைந்து தாய்க்கு முன் சேய்போல் நான் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். உன்னை வ வணங்குவதை விட வேறென்ன வேலை எனக்கு. அது ஒன்றே சகல சம்பத்துகளையும் வாரி வழங்கும் எல்லையில்லா இன்பத்தை அளிக்கும் என்று நான் அறிவேன். என் உடல் செய்த பாக்யம் அது. சகல துக்க, துன்ப, துயர நிவாரணி அது. அதுமட்டும் அல்ல. அதே நேரம் துன்பம் துயரம் தீர்த்தும் அதற்கு பதிலாக சர்வ இன்பத்தையும் சுகத்தையும் தர வல்லமை பெற்றதல்லவா? உன்னை வணங்குகிறேன் தாமரை இதழ் கண்ணி, மஹாலக்ஷ்மி தாயே.

यत्कटाक्षसमुपासनाविधिः
सेवकस्य सकलार्थसंपदः ।
संतनोति वचनाङ्गमानसैः
त्वां मुरारिहृदयेश्वरीं भजे ॥ १७॥

Yath Kadaksha samupasana vidhi,
Sevakasya sakalartha sapadha,
Santhanodhi vachananga manasai,
Twaam murari hridayeswareem bhaje

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே

நான் திரும்ப திரும்ப சந்தோஷத்தோடு சொல்கிறேனே. உன் கடைக்கண் பார்வை அது ஒன்றே போதுமே. சகல ஜென்ம பாபங்களும் தீருமே. சர்வ சௌகர்ய சம்பத்தும் சேரும். வளம் வளருமே . விஷ்ணு ஹ்ருதய வாஸினி மஹாராணி, என் அநந்தகோடி நமஸ்காரங்கள் தாயே. மனம் வாக்கு காயம், சொல், செயல் அணைத்தாலும் உன்னை வழிபடுகிறேன் அம்மா. வாழ்வளிப்பாய் தாயே.



ஆதி சங்கரர் ஒரு ஏழை பிராமணன் வீட்டு வாசலில் பிக்ஷை பெற நிற்கிறார். ஒன்றுமே இல்லை அந்த இல்லத்தில் என்று வருந்திய ஒரு முதியவள் ஒரு பழைய காய்ந்த நெல்லிக்கனியை மனமுவந்து அளிக்கிறாள்.அதாவது இருக்கிறதே என்று மகிழ்கிறாள். அவர்கள் வறுமையை போக்க ஆதிசங்கரர் 22 ஸ்லோகங்கள் மூலம் மஹாலக்ஷ்மியை வேண்டுகிறார். தங்க நெல்லிக்கனி மழையாக பொழிகிறது . அந்த 22 ஸ்லோகங்கள் தான் தங்கமழை ஸ்லோகங்கள். கனகதாரா ஸ்லோகங்கள். இந்த நவராத்ரி +நாளை விஜயதசமி உட்பட அதை உங்களுக்கு வழங்க அந்த மஹாலக்ஷ்மி தான் அருள் புரிந்தாள் . நாளையோடு நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...