Thursday, September 21, 2017

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 2




             || श्री कनकधारास्तोत्रम् ॥    
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 2 

बाह्वन्तरे मधुजितः श्रितकौस्तुभे या
हारावलीव हरिनीलमयी विभाति ।
कामप्रदा भगवतोऽपि कटाक्षमाला
कल्याणमावहतु मे कमलालयायाः ॥ ४॥

Bahwanthare madhujitha srithakausthube ya,
Haravaleeva nari neela mayi vibhathi,
Kamapradha bhagavatho api kadaksha mala,
Kalyanamavahathu me kamalalayaya

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:
.  

Bahwanthare madhujitha srithakausthube ya,
Haravaleeva nari neela mayi vibhathi,
Kamapradha bhagavatho api kadaksha mala,
Kalyanamavahathu me kamalalayaya

எதைக்கண்டபோது நமது பார்வை அங்கேயே  லயிக்கிறது?
கண்ணைப்பறிக்கும் இயற்கை வளமோ, மிருகமோ, பறவையோ, அழகிய மனித உருவங்களோ   எதுவாயினும் அதன் வனப்பில் மயங்கி நிலையாக  தங்கி விடுகிறது. 
இவற்றுக்கே இந்த சக்தி என்றால், ஜொலிக்கும் வனமாலை, கௌஸ்துபாமாலை அணிந்த அழகிய நாராயணனின்  பரந்த நீல நிற மார்பின் மேல் பதிந்த  ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை அங்கிருந்து நகருமா?  ஸ்ரீ மந் நாராயணனின் மார்பின் மீது விடாமல் தொடர்ந்து பதிந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பார்வை  அந்த பரந்த மார்பின் மேல் மற்றொரு அழகிய மாலையாகவும் காட்சி அளித்தது என்று சொன்னால் வெகு பொருத்தம் தானே? லட்சுமி தேவியின் கண்ணொளி மாதவனின் நீல மார்பில் அங்கங்கு பட்டு நீலக்கல்  பதித்த மாலையாக அல்லவோ தோன்றியது.

''அம்மா மஹா லட்சுமி, உனது அத்தனை கடைக்கண் பார்வைகளில் ஒன்றையாவது என் மீது படும்படியாக அருள் புரிவாயா தாயே? அது ஒன்றல்லவோ மிகவும் சிறந்த புனித செல்வம் எனக்கு!.  என்கிறார்  ஆதி சங்கரர்.
कालाम्बुदालिललितोरसि कैटभारेः
धाराधरे स्फुरति या तडिदङ्गनेव ।
मातुस्समस्तजगतां महनीयमूर्तिः
भद्राणि मे दिशतु भार्गवनन्दनायाः ॥ ५॥

Kalambudhaali lali thorasi kaida bhare,
Dharaadhare sphurathi yaa thadinganeva,
Mathu samastha jagatham mahaneeya murthy,
Badrani me dhisathu bhargava nandanaya
காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:

ஆஹா  எவ்வளவு பெரிய  பர்வதம்  கம்பீரமாக  கரு நிறத்தோடு வானளாவி பறந்து நிற்கிறது. அட என்ன அழகு பார்த்தீர்களா?  அந்த கரிய நிற  மலையின் மேலே பல இடங்களில் மின்னல் கீற்றுக்கள் வானிலிருந்து இறங்கி  வெண்ணிற வெள்ளிக்கம்பிகளாக பனி உருகி நதிகள் தொடர்ந்து வளைந்து வளைந்து கீழ் நோக்கி ஓடுவது மாதிரி  அற்புதமாக  மினுமினுக்கிறது. 

அடடா  நான் பார்த்தது மலையோ, மின்னலோ,  வெள்ளிக்கம்பி உருக்கி வார்த்த நதியோ இல்லையா? பிறகு எதை பார்த்து அப்படி நினைத்து மலைத்தேன்? ஓஹோ  அது  ஸ்ரீ மகாலக்ஷ்மியின் அன்பு மலர்ந்த பார்வைகள் மாதவ மணி பார்பனின் மேல் பட்டு ஜவலிப்பது  என்று அப்புறம் தான்  தெரிகிறது எனக்கு. 

அம்மா  பிருகு பெற்ற  பார்கவி தாயே, உலக நாயகியே, என்னை புனிதப்படுத்த உன் கடாக்ஷம் தந்தருள்வாய் அம்மா. ஆதிசங்கரரின் ஸமஸ்க்ரித  வார்த்தைகள், சந்தம், உபமான உபமேயங்கள் நமக்கு கிடைத்த பக்தி பிரசாதம்.  

प्राप्तं पदं प्रथमतः खलु यत्प्रभावात्
माङ्गल्यभाजि मधुमाथिनि मन्मथेन ।
मय्यापतेत्तदिह मन्थरमीक्षणार्धं
मन्दालसं च मकरालयकन्यकायाः ॥ ६॥

Praptham padam pradhamatha khalu yat prabhavath,
Mangalyabhaji madhu mathini manmathena,
Mayyapatheethiha  mathara meekshanardham,
Manthalasam cha makaralaya kanyakaya.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:

இந்த மன்மதன் இருக்கிறானே. அவன் சிவனை அணுகி தனது மலரம்புகளை வீசி தவம் கலைந்தது. நெற்றிக்கண்  திறந்தது. மன்மதன் கருகினான்.  அதே மன்மதன் விஷ்ணுவை நெருங்க முடிந்தது.  காமன்  மது எனும் ராக்ஷஸனை அழித்த மது சூதனனை, விஷ்ணுவை,  எவ்வாறு அணுக முடிந்தது எந்த ஆபத்தும் இல்லாமல்.  காரணம்  தெரியவேண்டுமா.  அம்மா  ஸ்ரீ லக்ஷ்மி தேவி, நீயே  தான் அந்த காரணம், அதுவும் உன் கடைக்கண் பார்வை ஒன்றே. அதன் சக்தியே மன்மதனை ஆசிர்வதித்து. 

அம்மா  தேவி மஹாலக்ஷ்மி, உன் கடைவிழி பார்வை கண  நேரமேனும், என் மீதும் சற்று விழட்டுமே, அது அளிக்கும் செல்வத்திற்கு ஈடு இணை உண்டா?

ஆதி சங்கரர் இன்னும் நிறைய ஸ்லோகங்கள் சொல்வார் கேட்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...