Thursday, September 21, 2017

சூர் சாகரம்




சூர் சாகரம் - J.K. SIVAN

உலகத்தில் நமக்கு சக்தி எத்தனையோ ரூபங்களில் கிடைக்கிறது. அக்னி வாயு, நீர், ஆகாசம் போன்றும் இதர மக்களிடமிருந்தும், பிற உயிருள்ளவை, உயிரற்ற எண்ணற்ற பல வஸ்துக்களிடமிருந்தும் சக்தி பெறுகிறோம். சூர் தாஸ் ஒரு பேருண்மையை இந்த பாடலில் நினைவூட்டுகிறார்.

திக்கற்றவனுக்கு தெய்வமே சக்தியும் துணையும்.
நிர்கதியானவனுக்கு ராமா என்ற ஒரு வார்த்தையே போதும். அதுவே அவனுக்கு சக்தி அளிக்கும். இது கற்பனையல்ல. புராணங்கள் எத்தனையோ நிரூபணங்களை இப்படி பலருக்கு இக்கட்டான நேரத்தில் வலுவற்ற வலுவிழந்த நேரத்தில் சக்தியும் பலமும் கிடைத்ததை சொல்கிறது. மஹான்கள் சரித்திரத்தில் கூட இதை நிறைய பார்க்கிறோம்.

கஜேந்திரன் நீர் குடிக்கப்போய் ஒரு காலை முதலை கவ்வி அவனை நீருக்குள் இழுத்து கஜேந்திரன் தனது
சகல முயற்சிகளும் தோல்வியடைந்த போது இனி நம்மை காக்கும் ஒரே சக்தி அந்த ஆதிமூலமே என்று நாராயணனை வேண்டுகிறான். சக்தி கிடைத்தது சுதர்சன சக்ரம் மூலம். கஜேந்திரன் தப்பித்தான். நாராயணன் ராமன் தானே. கிருஷ்ணனும் அவன் தானே. எந்த பேர் சொல்லி எப்படி அழைத்தால் என்ன?

''கிருஷ்ணா நீ செய்ததை மறந்துவிட்டாயா?' துருபதன் மகள் தன்னால் இயன்றவரை, முயன்று இனி தன்னால் ஆவது ஒன்றுமில்லை என்று அறிந்த நேரத்தில் ' ஹே கோவிந்தா, ஆபத்பாந்தவா'' என்று உன்னை அழைத்தாள். இடுப்பில் அவள் அணிந்திருந்த ஒரே ஒரு வஸ்திர மான புடவை நீண்டு கொண்டே கின்னஸ் ரிக்கார்டாக வளர்ந்தது. அதை இழுத்த துச்சாதனன் மயங்கி கீழே அவன் சேகரித்த புடவை மலைமேல் விழுந்தான்.

வசிய சக்தியோ, தவ சக்தியோ, ஆயுத பலமோ, சக்தியோ, பெரிதல்ல, அதற்கெல்லாம் மேலே ஒரு பெரிய சக்தி தான் கிருஷ்ணா உன் மூலம் பெறுவது.

ஆகவே மானுடர்காள், தோல்விகளை சந்தித்து சோர்ந்து விழாதீர்கள். நமது முயற்சிகள் பலன் அளிக்காததை அந்த வெண்ணெய் திருடன் நிறைவேற்றி தருவான். சின்ன வார்த்தை, ரெண்டே எழுத்து ''ஹரி'' என்ற சொல்லை மட்டும் மறவாதீர்கள்.

''கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா,கிருஷ்ணா, கீதையின் நாயகனே'' என்றல்லவோ பாடுகிறார் சூர்தாஸ் இந்த பாடலில்:

''suni ri maine nirbal ke balram
pichhali saakh dharun santan ki ade sawaren kaam
jab lag gaja bal aapno bartyo nek saryo tah kaam
nirbal hoi balram pukaro aayen aadhe naam
drupad suta nirbal bhai ta din taj aayen nij dhaam
duhshashan ki bhuja thakit bhai basan roop bhayen shyam
ap-bal tap-bal aur bahu-bal chautha bal hai bal-dam
sur kishor kripa se sab bal haare ko hari naam''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...