Wednesday, September 20, 2017

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம்




|| श्री कनकधारास्तोत्रम् ॥ ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம்
J.K. SIVAN

अङ्गं हरेः पुलकभूषणमाश्रयन्ती
भृङ्गाङ्गनेव मुकुलाभरणं तमालम् ।
अङ्गीकृताखिलविभूतिरपाङ्गलीला
माङ्गल्यदाऽस्तु मम मङ्गलदेवतायाः ॥ १॥

Angam hare pulaka bhooshanamasrayanthi,
Bhringanga neva mukulabharanam thamalam,
Angikrithakhila vibhuthirapanga leela,
Mangalyadasthu mama mangala devathaya.

அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:

நீண்டு அடர்ந்த மரங்கள் கொண்ட ஒரு வனம். அகில் ஒரு வயதான கரிய லவங்கப்பட்டை மரம். கேட்கவேண்டுமா வாசனைக்கு. வசந்த காலம். பூத்து குலுங்குகிறது மரம் மற்ற மரங்களைப் போலவே. சமஸ்க்ரிதத்தில் தமால மரம் என்பார் ஜெயதேவர். மரங்களும் செடிகளும் பூத்து குலுக்கினாள் என்ன நடக்கும்? ஏராள வகை கலர் கலரான வண்டுகள் பூக்களின் தேனை உறிஞ்ச வரும் அல்லவா? மஹாலக்ஷ்மி மெல்ல நடக்கிறாள் அங்கு. எதற்கு வண்டுகளை மரத்தையும் பார்க்கவா? அவளுடைய சந்தோஷத்தையும் கவனத்தையும் கவர்ந்த ஸ்ரீ ஹரி அல்லவோ அங்கே அமர்ந்திருக்கிறான். அவளது கரிய விழிகள் அவன் விழிகளை சந்தித்தன. முகத்தில் சந்தோஷ ஒளி பளிச்சிடுகிறது இருவருக்குமே.

இப்படி மகிழ்வுடன் இருக்கும் மஹாலக்ஷ்மி, உன் கடைக்கண் பார்வையை என் மேலும் திருப்பு அம்மா. அது அளிக்கும் எண்ணற்ற செல்வம் எனக்கு போதும் '' என்கிறார் சங்கரர். இதைத்தானே லக்ஷ்மி கடைக்கண் பார்வை, லட்சுமி கடாக்ஷம் என்று போற்றி வேண்டுகிறோம்.

मुग्धा मुहुर्विदधती वदने मुरारेः
प्रेमत्रपाप्रणिहितानि गतागतानि ।
माला दृशोर्मधुकरीव महोत्पले या
सा मे श्रियं दिशतु सागरसंभवायाः ॥ २॥

Mugdha muhurvidhadhadathi vadhane Murare,
Premathrapapranihithani gathagathani,
Mala dhrishotmadhukareeva maheth pale ya,
Sa ne sriyam dhisathu sagarasambhavaya.

முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:

மஹாலக்ஷ்மியின் கடை விழிகளில் மெல்லிய வெட்கம். முகம் சிவக்கிறது. பாற்கடலில் உதித்த அலைமகள் அழகு கூடுகிறது. மேலும் மேலும் அவள் பார்வை காந்த சக்தியால் கவரப்பட்டதைப் போல் முராரியின் அழகிய முகத்தில் பதிகிறது. அந்த கரிய வண்டு விழிகள் தேன் மலராகிய முராரியின் நீலத்தாமரை முகத்தில் மயங்குகின்றன. உன் கடைக்கண் வீச்சுகளை ஒரு அற்புத மாலையாக தொடுத்தால் காணக் கண் கோடி வேண்டாமா தாயே. அந்த அழகிய கரிய கண்களின் கடைக்கண் வீச்சுகள் திரும்ப திரும்ப மோஹனனின் முகத்தில் வந்து தங்குவதை பார்க்கும்போது கரிய வண்டுகள் திரும்ப திரும்ப மலர்களுக்கு தேன் உண்ண அலைவது போல் இருக்கிறதே அம்மா மஹாலக்ஷ்மி அந்த பார்வையை துளியூண்டு என் பக்கம் திருப்பு தாயே. அருள் செல்வம் வாரி வழங்குபவளே . சங்கரரின் வேண்டுகோள் இந்த ஸ்லோகத்தில்.

आमीलिताक्षमधिगम्य मुदा मुकुन्दं
आनन्दकन्दमनिमेषमनङ्गतन्त्रम् ।
आकेकरस्थितकनीनिकपक्ष्मनेत्रं
भूत्यै भवेन्मम भुजङ्गशयाङ्गनायाः ॥ ३॥

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:



இனிய தென்றல், இளங்காலை. புஷ்பங்கள் செடிகளிலும் கொடிகளிலும் மொட்டு அவிழ தொடங்கிவிட்டன. சூரியன் கொஞ்சமாக கீழ்வானத்தின் அடியில் செந்தலையை தூங்குகிறான். முகுந்தன் ஆனந்த நிலையில் அரைக்கண் மூடி யோகா நிஷ்டையிலா இருக்கிறான். முகத்தில் தான் எத்தனை ஆனந்தம் பரமானந்தம் ஜொலிக்கிறது. மஹாலக்ஷ்மியின் கரு விழிகள் அவன் முகத்தில் ஆணியடித்தது போல் தேங்கி விட்டனவே.பரஸ்பர ஆனந்தத்தில் அல்லவோ இருவரும் திளைக்கிறார்கள். அம்மா லோக சம்ரக்ஷணி உன் கடைவிழி கடாக்ஷம் என் மீது சற்றே படும்படியாக அருள்வாய் செல்வா மகளே. அதுவே என் வளமாகும். வார்த்தையில் சொல்ல இயலா இன்பத்தையும் அளிக்கும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...