Sunday, May 31, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்.   J K  SIVAN


        66  அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!


ராமானுஜரை, கூரத்தாழ்வானை, திருவரங்கத்தமுதனாரை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை ஒருவர் எழுதியதை படித்தேன். அதன்   சில விவரங்களைத்  தருகிறேன்:

திருவரங்கத்து அமுதனார்   என்பவர்  பெரிய கோயில் நம்பிகள் என்று பெயரும்  கொண்ட  ஒருவர்.
 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் காப்பாளராகவும், புரோகிதராகவும் இருந்தார். அவருடைய வேலை  பஞ்சாங்கம் , புராணம்  வேதங்கள் எல்லாம்  வாசிப்பது.   திருவரங்கத்துக் கோயில் நிர்வாகப் பொறுப்பில் இவர் இருந்தவர் என்பதால் திருவரங்கத்துடன் இவர் பெயர் இணைந்து திருவரங்கத்து  அமுதனார் என்று ராமானுஜரால் பெயர் சூட்டப்பட்டவர்.

இவர் இராமானுச நூற்றந்தாதி என்ற பெயரில் நூறு பாடல்களை அந்தாதி முறையில் எழுதியுள்ளார். இவரின் ஆயிரக்கணக்கான பாடல்களில் இந்நூறை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறார் இராமானுஜர்.

இத்தொகுப்பு நாலாயிரத்தில் இணைந்து நாலாயிரம் என்ற தொகையைத் தந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத் தொகுப்பிற்கு முழுமை தருகிறது.

இந்நூலில் இராமானுசரின் பணிகள், பெருமைகள், வைணவத் தொண்டு ஆகியனவும், தனக்கும் இராமானுஜருக்குமான தொடர்பின் வலிமையையும் திருவரங்கத்து அமுதனார் எடுத்துரைத்துள்ளார். இப்பாடல்கள் வழியாகப் பெறப்படும் இராமானுஜர் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

திருவரங்கத்து அமுதனார் திருவரங்கம் கோயிலின் வழிபாட்டு முறைகளை மேற்பார்வையிடும் பணியில் இருந்தவர். இவரின் போக்கு சரியில்லாத நிலைக்கு வந்தபோது இராமானுஜர் இந்நிலை கண்டு வருந்துகிறார். கோயில் நிர்வாகங்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமுதனாரைக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் இராமானுஜரை மறுத்து தன் போக்கிலேயே திருவரங்கத்து அமுதனார் கோயில் நிர்வாகத்தைச் செய்கிறார். இதனைக் கண்டு பொறுக்க இயலாமல் காஞ்சிபுரம் சென்றுவிட கூரத்தாழ்வரை அழைக்கிறார் இராமானுஜர். அப்போது கூரத்து ஆழ்வான் திருவரங்கத்து அமுதனாரைத் தான் திருத்தி நல்வழிப்படுத்துவதாக உரைக்கிறார். கூரத்தாழ்வான் மெல்ல மெல்ல இராமானுஜரின் பெருமைகளை எடுத்துரைத்து, அவரின் சீர்திருத்தங்களின் தேவைகளை உணரவைத்து, திருவரங்கத்து அமுதனாரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். இதன் காரணமாக திருவரங்கக் கோயிலொழுகு முறை இராமானுஜர் வசம் வருகின்றது. எண்ணிய சீர்திருத்தங்களை இராமானுஜர் செய்கிறார். இவருக்கு இயற்பாவை ஆண்டவன் முன்னிலையில் சேவிக்கும் பணி தரப்பெறுகிறது. இதனை முழுமனதுடன் செய்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


  அமுதனார் ஒரு நாள், ராமானுஜரின் பெருமையைப் போற்றும் விதமாக, அவரை வாழ்த்தி, அந்தாதி ஒன்று இயற்றி, ராமனுஜரிடம் வழங்கினார். ஆனால், ராமானுஜரோ, தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக்கொண்டார், அந்தாதிக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும்,  “உமக்கு எழுத வேண்டும் என்று தோன்றினால், நமது திவ்யதேசங்கள் பற்றியோ, அல்லது பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியோ, ஆச்சார்யர்கள் பற்றியோ அல்லது கூரத்தாழ்வாரை குறித்தோ எழுது." என்றார்.

அமுதனாரோ, "ராமானுஜர் நூற்றந்தாதி” எழுதினார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டார்.

 இவ்வகையில் இவர் தன்னைத் திருத்திய இராமானுஜரையும், கூரத்து ஆழ்வானையும் குரு நிலையில் வைத்துப் போற்றுகிறார். இதனைப் பின்வரும் நிலையில் இவரின் அந்தாதிப் பாடல் உரைக்கின்றது.

“மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம்கூரத் தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே!” (3899)

என்ற பாடலில் தன் குரு இருவரையும் போற்றுகிறார் திருவரங்கத்து அமுதனார். கூரத்தாழ்வான் தான் உயர்ந்த குலத்தவர் நிறைய படித்தவர் ஒழுக்கத்துடன் வாழ்வை நகர்த்துபவர் என்ற மூன்று குணங்களுக்கு உரியவர் என்றபோதும், இவற்றால் மமதை பெறாதவர் என்று சொல்லி இப்பாடலில் அவரை வணங்குகிறார். இராமனுஜரின் வழிகாட்டுதலின்படி தான் நடப்பதால் எந்த வருத்தமும் தன்னை அணுகாது என்று இராமானுஜரையும் இப்பாடலில் போற்றுகிறார். இவ்வகையில் தன்னை நல்வழிப்படுத்தியோரை வணங்கி, குருபக்தி மிக்கவராக திருவரங்கத்து அமுதனார் விளங்குகிறார்.

\இந்த நூற்றந்தாதியினை திருவரங்கத்தில் ராமானுசரின் சிஷ்யர்கள் ஓதுவது வழக்கமாயிற்று. இதை தானும் கேட்டு இன்புற வேண்டும் என்று விரும்பிய நம்பெருமாள், ராமானுஜரை மடத்திற்கு செல்லப் பணித்துவிட்டு, சப்தாவரணப் புறப்பாடின் போது, வாத்திய கோஷத்தை நிறுத்தி விட்டு, ராமானுஜ நூற்றந்தாதியை மட்டும் ஓதச் சொல்லிக் கேட்டு உகந்தருளினார்.

தான் இராமனுஜருடன் முரண்பட்டுப் பின் சரண் அடைந்த நிலையை மற்றொரு பாடலிலும் குறிக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

“என்னையும் பார்த்து, என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கிலருள் செய்வதே நலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை
தன்னை என் பார்ப்பார்? இராமாநுச உன்னைச் சார்ந்தவரே” (3962)

என்ற இப்பாடலில் திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரோடு முரண்பட்ட தன்மை தெரிகிறது. என்னையும் ஒரு பொருளாக மதித்து என்னை வழிப்படுத்தியவர் இராமானுஜர். என்னுடைய இயல்புகளையும் அவர் கண்டுள்ளார். பல நற்குணங்களை உடைய இராமானுஜருடன் எனக்கேற்பட்ட இத்தொடர்பினை அறியும்போது என்னிடம் ஏதோ ஒரு நல்ல குணம் இருப்பதால்தான் இது நடைபெற்றது என்பதை உணரமுடிகின்றது. இப்பாடலின் கருத்தில் மறைமுகமாக தன் செயல்களுக்கு வருந்தியுள்ளார் திருவரங்கத்து அமுதனார்.

இராமானுஜரின் சிறப்புகளையும் அவரின் நூற்சிறப்புகளையும், அவரின் கொள்கைகளையும் எடுத்துரைப்பதாகவும் இராமானுச நூற்றந்தாதி விளங்குகிறது.

“தொல்லுலகில் மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே” (3922)

மண்ணில் தோன்றிய பல்லுயிர்கட்கும் தலைவனாக அமைபவன் மாயன் என்ற திருமால் என்று தன் பாஷ்ய உரையில் அறிந்து உரைத்தவர் இராமனுஜர் என்று அவரின் நூற்சிறப்பினை இப்பாடல் காட்டுகிறது.

மேலும் பாஷ்யத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை

“சேமநல் வீடும், பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே” (3932)

என்ற பாடலில் அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) என்ற நான்கில் கண்ணன் மீது காமம் வைத்து மற்ற மூன்றையும் அவனிடத்திலே விட்டு நிற்கவேண்டும் என்று தன் பாஷ்ய உரையில் உரைத்தவர் இராமானுஜர் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

மனிதர்களுக்கு உடல் உறுப்புகளை ஆண்டவன் படைத்ததற்கான காரணத்தை மற்றொரு பாடல் குறிக்கிறது.

“சரணமடைந்த தருமனுக்காப்பண்டு நூற்றுவரை
மரணமடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணமிவையுமக் கன்றென்றி இராமானுசனுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல் அரணார் மற்றில் வாருயிர்க்கே” (3959)

என்ற பாடலில் மனிதர்க்கு உடல் உறுப்புகள் தரப்பெற்றதற்கான காரணம் இறைவனை வணங்கிச் சேவை செய்வதற்காகவே என்ற கருத்து உரைக்கப்படுகிறது. பாஷ்ய உரைக் கருத்தாக விளங்கும் இதனையும் இந்நூல் காட்டுகிறது.

இவ்வகையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்தில் இராமானுச நூற்றந்தாதியும் இணைந்து இராமானுசரின் புகழை, வைணவத் தொண்டினை ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்குத் தொடர்ந்து அமைவதாகக் காட்டியுள்ளது.

திருக்கோளூர் அம்மாள் எல்லாம் அறிந்தவள் தெரிந்தவள்.  ஆகவே தான் இந்த சம்பவத்தை நினைவில் கொண்டு  ராமாநுஜரிடமே, 

 ''சுவாமி நான்  என்ன திருவரங்கத்து அமுதனாரா? , “அமுதனாரைப் போல் என் ஆச்சார்யான் மீது  அந்தாதி என்றாவது எப்போதாவது  பாடினேனா?  நான் எப்படி  இந்த புண்யக்ஷேத்ரம் திருக் கோளூரில் தங்கி வசிக்க  உரிமை உள்ளவள்?  என்கிறாள்.

ANANDHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்  J K  SIVAN 


                    12  சுக்ரீவா  இனி நீ  நாம்  நண்பர்கள்.

 இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியில் கூட,  நேற்று பட்டப்பகலில் நடந்த ஒரு சம்பவத்தை நாலு  பத்திரிகைகள் நாலு விதமாக  எழுதுகிறது.  செய்திகளை  திரிக்கிறது.  ஐந்தாயிரம்  ஏழாயிரம் வருஷம் முன்னால்  ஒரு வசதியும் இல்லாத காலத்தில் நடந்ததை ஒவ்வொரு ராமாயணமும் வேறு மாதிரியாக கொஞ்சம் மாற்றி சொல்வதால் அது தப்பு, நடக்காத ஒரு சம்பவம், கட்டுக்கதை, என்றா  சொல்லமுடியும்?  இன்றும்  நிறைய  தடயங்கள், நிரூபணங்கள் அங்கங்கே இருக்கிறது.

மாரீசன் மானாக  ஓடியபோது  அவன் காலில் இருந்து நூபுரம் விழுந்த இடம் கௌதமி  ஆற்றங்கரையில்  இன்றும் நூபுர கிராமமாக இருக்கிறது. ராமபாணத்தால்   மாரீசன்  ஜென்ம சாபல்யம் அடைந்த இடம்  சாபல்ய கிராமம் என்று இருக்கிறது. சீதையை சுற்றி  பர்ணசாலையை சுற்றி லக்ஷ்மணன் கிழித்த  ஆழமான  லக்ஷ்மண் ரேகா கோடு இன்றும்  ஆறாக ஓடுகிறது.  மலை உச்சியில் ராமர் சீதை படுத்த இடம்.  ராமசாயாகிரி  என்று உள்ளது. 

லக்ஷ்மணன்  ராமரைத்  தேடி  ஓடி  வந்து  நடுக்  காட்டில் சந்தித்து  விஷயம் சொல்ல இருவரும் பர்ணசாலை திரும்பி வந்து  சீதையை காணாமல்  தேடுகிறார்கள்.  ஜடாயு வை  குற்றுயிரோடு  மரணத்தருவாயில்   வழியில் கண்டபோது  ராவணனால்   சீதை கடத்தி செல்லப்பட்டதை, தான்  போரிட்டு  அவளை மீட்க முயன்றதை சொல்லி மாள்கிறது.  அதற்கு அந்திம கிரியைகள்  செய்து முடித்து  தெற்கு  நோக்கி  நடக்கிறார்கள். 

பார்வதிக்கு  ஒரு  சந்தேகம்.   ராமர் விஷ்ணுவாயிற்றே  மானுட அவதாரம் எடுத்து மனைவியை தேடி வருத்ததோடு அலைகிறாரே , உண்மையாகவே  அவருக்கு சீதை எங்கே  என்று தெரியவில்லையா, வருத்தமா, சோகமா  நடிப்பா என்று சோதிக்க சீதையாக வேஷம் பூண்டு   தண்டகாரண்யம் வருகிறாள். ராம லக்ஷ்மணர்கள் சீதையை தேடி அலையும்போது எதிரே சீதை வருகிறாள்

''ராமா எதற்கு உங்களுக்கு  வருத்தம்.  இதோ ஜானகி நான் எதிரே இருக்கிறேனே'' என்கிறாள் பார்வதி. 

'' அம்மா  நீ  யார்? நிச்சயம்  சீதை இல்லை என்று எனக்கு தெரியும் என்கிறார்  ராமர் 
உமாதேவி  லஜ்ஜையோடு  தனது செயலுக்கு வெட்கி,  அவரை வணங்கி தான் யாரென்று உணர்த்துகிறாள். அந்த இடம் இன்றும்   ''த்வம் லஜ்ஜாபுரம் ''என்று விளங்கி அங்கே  தாயார் பெயர்  த்வங்காம்பிகை. 

எதிர்ப்பட்ட சில ராக்ஷஸர்களை வதம் செய்து பிரம்மாண்டமான   கபந்தன் எனும் ராக்ஷஸனை சந்திக்கிறார்கள். அவர்களை தன்னுடைய  காத தூரம்  நீண்ட கரங்களால் பிடித்து விழுங்க முற்பட அவனை ராமர் பாணத்தால்  கொல்கிறார் . ஒரு காலத்தில் சாபம் பெற்ற  கந்தர்வன் ஒருவன் கபந்தன் உடலிலிருந்து எழுகிறான். ராமரை வணங்குகிறான். 

''ஸ்ரீராமா,   அஷ்டாவக்ர ரிஷியால் சபிக்கப்பட்டு ராக்ஷஸனானேன். உங்கள் வரவால் நான் மீண்டும் பழைய உரு பெறுவேன் என்று சாபவிமோசனம் சொன்னபடி நடந்துவிட்டது. ராகவா, நான் இந்த காட்டில் பல வருஷங்கள் இருப்பதால் சில விஷயங்கள் சொல்கிறேன்.  இந்த வழியாக நேரே கிழக்கில் சென்றால் மதங்க ரிஷி ஆஸ்ரமம்  வரும். அங்கே  சபரி என்பவள் வெகுகாலம் தங்களை தரிசிக்க காத்திருக்கிறாள். அவள் சீதையை மீட்டு வரும் மார்க்கம் சொல்லுவாள்''  என்று  வணங்கி விண்ணுலகம் செல்கிறான்.

ராமர் வருவார் என்று தினமும்  எதிர்பார்த்து கனிவர்கங்களை சேர்த்து வைத்து காத்திருக்கும் சபரி என்ற முதியவள் ராமலக்ஷ்மணர்களை தரிசித்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறாள். 

''ராகவா,  இங்கிருந்து தெரியும் காட்டின் இடப்புறம் ஒரு மலை தெரியும் அதற்கு முன்பு   ஒரு  பெரிய  ஆறு ஓடும். அது தான் பம்பை ஆறு.  அதை தாண்டி தான் அந்த  ருஷ்யமுக பர்வதம் உள்ளது.  அந்த மலை  உச்சியில்  சுக்ரீவன் என்ற  வானர அரசன் மந்திரிகளோடு  வசிக்கிறான். அவனோடு நட்பு கொண்டால் நீங்கள் சீதையை மீட்டு வர உதவி செய்வான்.  இனி என் பூலோக வாழ்வின் அர்த்தம் நிறைவேறி விட்டது. சந்தோஷமாக நான் இப்போதே அக்னிப்ரவேசம் செய்வேன்'' 

அவ்வாறே  சபரி மறைய ராமலக்ஷ்மணர்கள்  பம்பா நதியை அடைந்து ஸ்னானம் செய்து ரிஷ்யமுக பர்வம் நோக்கி நடக்கிறார்கள். 

''பார்வதி,  இனி  உனக்கு  நான் ஆனந்த  ராமாயணத்தின் எட்டாவது சர்க்கத்தில் உள்ள விஷயங்களை சுருக்கமாக சொல்கிறேன்''  என்று  பரமேஸ்வரன் மேலே தொடர்கிறார். . 

''ஹனுமான், சீக்கிரம்  இங்கே வா.  அதோ பார்  யார் அந்த இருவர்  நமது ரிஷ்யமுக பர்வதத்தை  நோக்கி நடந்து  வருபவர்கள்?  மலை யடிவாரம் சென்று யார் அவர்கள் எதற்கு கையில்  தனுசு அஸ்த்ரங்களோடு இங்கே வருகிறார்கள். எதிரிகளாக இருந்தால் நாம் ஜாக்கிரதையாக  எதிர்த்து தாக்க  தயாராக
 இருக்கவேண்டாமா ?அருகே சென்று விசாரி.  எதிரிகள் என்றால் சைகை காட்டு. நாங்கள் மலை உச்சியில் உன்னை கவனித்துக் கொண்டிருப்போம். நண்பர்கள் என்றால் புன்னகை செய். புரிந்து கொள்வோம்.'

எதிரே வந்த பிராமண பிரம்மச்சாரி மிகவும் இனிய ஸ்வபாவம் கொண்டவனாக வினயமாக பேசுகிறான், என்று மகிழ்ந்த ராமர் 

''ஹனுமா, நாங்கள் உங்கள் அரசன் சுக்ரீவனை சந்தித்து அவனது நட்பை கோரி, அவன் உதவியுடன் ராவணன்  கடத்திச்சென்ற சீதையை மீட்க  அவனை சந்திக்க வந்திருக்கிறோம்'' என்கிறார்.  

ஹனுமான்  மலை உச்சியை பார்த்து  புன்னகைக்கிறார். 
''ராம லக்ஷ்மணர்களே , நீங்கள்  ஏற்கனவே   களைத்திருக்கிறீர்கள். மலை ஏறவேண்டாம். என்  தோளில்  அமருங்கள், நான் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன் என்று அவர்களை தூக்கி செல்கிறார் ஹனுமான்.
சௌகர்யமாக ஒரு மர  நிழலில் அவர்களை  அமர்த்தி சுக்ரீவனிடம் சென்று  ராம லக்ஷ்மணர்கள் யார், எதற்கு வந்தனர் என்பதை  சொல்லி  ராமரிடம் அவனை  அழைத்து  வருகிறான். அக்னி வளர்த்து அக்னி சாட்சியாக இருவரும் நட்பை உறுதி செய்து  கொள்கிறார்கள்.

பிறகு  பேச்சுக்கிடையே  தனது சங்கடத்தை சுக்ரீவன் விளக்குகிறான். 

''ஸ்ரீ ராமா,  மயனின் பிள்ளை துர்மதன் என்ற ராக்ஷசன் என் அண்ணன்  வாலியை யுத்தத்திற்கு அழைக்க, கிஷ்கிந்தையில் ஒரு குகை அருகே  யுத்தம் நடக்க  இருவரும் அந்த குகையில் நுழைந்தனர்.   நீ  இங்கேயே  இரு என்று வாலி   என்னிடம் சொல்லி,  ஒரு மாத காலமாகியும் காத்திருந்து  ஒருவராவது குகையிலிருந்து  வெளியே வரவில்லை.  குகை வாயிலிருந்து ரத்தம் ஆறாக பாய்ந்து வந்தது .    ஒருவேளை வாலியை அந்த ராக்ஷஸன் கொன்றிருப்பானோ என்று பயந்தேன்.  அந்த நேரம்  கிஷ்கிந்தையை  வாலி இல்லாததால் எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களோடு போராட நான் என்ன செய்வது என்று யோசித்து,  குகையின் உள்ளே இருந்து  இந்த நேரம் பார்த்து   வாலியைக்  கொன்ற  துர்மதன் வெளியே வராமல் இருக்க ஒரு பெரிய மலையால் குகை வாயிலை அடைத்துவிட்டேன். என் வரவைக் கண்ட எதிரிகள் ஓடிவிட்டார்கள்.  வானர மந்திரிகள் யோசித்து இனி வாலி இல்லை என்பதால் என்னையே கிஷ்கிந்தா அரசனாக முடி சூட்டினார்கள்.    ஆனால்  நடந்தது வேறு.  

வாலி தான் தர்மதனை கொன்றவன் . குகையை விட்டு வெளிவரமுடியாமல் மலை தடுத்ததை கண்டு அதை உதைத்து வெளியே வந்தான். நான் அவனுக்காக எ காத்திருக்காமல் குகை வாயிலை மூடியதில்  அசாத்திய கோபம். கிஷ்கிந்தையில் நான் அரசனாக ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்ததை கொண்டு வெகுண்டு என்னை கொல்ல துரத்தினான்.  நான் ஓடினேன்........

நாம் சுக்ரீவனை தொடர்ந்து செல்வோம்..

Saturday, May 30, 2020

LALITHA SAHASRANAMAM





மடியிலே தூங்கட்டுமா?      J K  SIVAN 

கேள்வி  1 :   பிரம்மஸ்ரீ  தாடப்பள்ளி  ராகவ நாராயண சாஸ்திரி என்கிற சந்தோளு  சாஸ்திரிகளை  - சக்தி உபாசகரை யாருக்காவது தெரியுமா?   நூற்றில் ஒருத்தருக்கு தெரிந்தால் அதிசயம். கேள்வி 2 :   சென்னைக்கு  அருகே  நெமிலி எனும் ஊரில்  (வேலூரில் இருந்து 55 கி. காஞ்சியிலிருந்து 25 கிமீ, அரக்கோணத்திலிருந்து 16 கிமீ.)  ஒரு அழகிய  சிறு  பாலா சுண்டுவிரல் உயரத்தில் தங்கத்தில்இருக்கிறாளே, அங்கே  சாக்லேட் நெய்வேத்யம் பண்ணி பிரசாதமாக தருவார்களே  அது   தெரியுமா? அவள் இருப்பது  பெரிய  ராஜகோபுர  ஆலயம் அல்ல. ஒரு வீட்டில்.  தரிசிக்காதவர்களே கொரோனா விடுதலை கிடைத்ததும் நெமிலிக்கு ஓடுங்கள்.
இப்போது  கேள்வி 1க்கும் 2க்கும் சம்பந்தமான விஷயம்.  அது தான்  தாடேப்பள்ளி ப்ரஹம்ம ஸ்ரீ  ராகவா நாராயண சாஸ்திரிகளுக்கு  பாலாம்பிகை திரிபுரசுந்தரி அனுக்ரஹம் செய்த லீலை:!!

சாஸ்திரிகள் ஒரு தெலுங்கர்.  நவராத்ரி ஸமயம் .  பூஜா கார்யங்கள்  விடுவிடுவென்று தயாராகிறது.  வீட்டில்  சாஸ்திரிகளோ  பாலாவின் விக்ரஹத்தை, அவள்  திவ்ய சுந்தர முகத்தை பார்த்துக்கொண்டு  நிர்விகல்ப ஸமாதி நிலையிலிருந்தார்!!  ஆயிரம் சிஷ்யர்கள் இருந்தாலும் ஸ்ரீ சக்ர பூஜை  சாஸ்திரிகள்  கையால் செய்தா தான் அவருக்கு திருப்தி. செய்தால் தான் அவருக்கு த்ருப்தி!! ஆவரண பூஜை  பண்ணும் நேரம் நெருங்கியது.  சாஸ்திரிகளோ  இன்னும் அசையவே இல்லை. எப்படி எழுப்பமுடியும்?  அவர் இந்த உலகத்திலேயேல் இல்லை.  நவராத்ரி, பூஜை எல்லாம் மறந்துவிட்டதோ?  சிஷ்யர்களுக்கு கவலை, தயக்கம்.வாசலில் ஏதோ சத்தம். சென்று பார்த்தால்   ஒரு  ஒன்பது வயசு பெண்  பச்சை பட்டு  பாவாடையோடு. அலங்காரத்தோடு நிற்கிறாள். 
''எவரம்மா நுவு?!*யாரம்மா நீ)
நா பேரு "ஞானப்ரஸன்னா..!! (என் பெரு  ஞானப்ரஸன்னா )  அந்தாருக்கு  "பாலா" னி செப்பத்தானே தெலிசிந்தி!!  --(பாலா என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும்)
மாயம்மா பேருக் கூட "லலிதா..!! அந்தருக்கி காமாக்ஷீ!! அட்லானே தெலுசு..!!  (எங்கம்மா  லலிதா  எல்லோருக்கும் காமாக்ஷி என்றால் தான் தெரியும்)
''என்ன வேணும் உனக்கு?''ஒண்ணும்  எனக்கு வேண்டாம்.  அம்மா  தாத்தாவுக்கு  ப்ரஸாதம்  தந்தா. கொடுக்க வந்தேன்'''' சரி கொடு!! நான் கொடுத்துடறேன்'' சிஷ்யர்  கை நீட்ட கொடுக்க மறுத்தாள் . ''இது தாத்தா கையிலதான் தரணும்!''
பெண் வீட்டுக்குள் விடுவிடுவென்று நுழைந்தது . சாஸ்திரிகளோ  கண்  மூடி தேவித்யானத்தில் இருந்தார்!!  ''தாத்தா..தாத்தா''தூங்கறியா !!   என்று  அங்குமிங்கு பார்த்தவள்  
'' ஓஹோ!!  தாத்தா நீ இன்னும் நவராத்ரி பூஜை பண்ணலயோ!! சரி வா இன்னைக்கு நாம பண்ணுவோம்!!  சாஸ்திரிகளின் கையை பிடித்து பூஜா மண்டம் வரை   இழுத்து வந்தாள் .சாஸ்திரிகளுக்கு த்யானம் கலைந்து சிறுமியின் பின்னாலே சென்று பூஜாமண்டபத்தில் அமர்ந்தார்.

''தாத்தா..!! நீ பூஜை பண்ணு.  நான் உனக்கு பரிஜாரகம் பண்றேன்''பூஜா புஷ்பங்களிலிருந்து "விசேஷார்க்யாம்ருதம்" சரி செய்வது வரை அத்தனை வேலையையும் அச்சிறுமி ஒருவளே செய்வதை பார்த்து  சிஷ்யர்கள்  தூர நின்று  ஆச்சர்யமாக பார்த்தார்கள்.  ப்ரதமாவரணம் துவங்கி  நவமாவரணம் வரை முடிந்தது.  அடுத்து கன்யா, ஸுவாஸிநீ பூஜை.
ஒரு மாமி அவள் பெண் குழந்தை -- சொல்லி இருந்தது.  இன்னும் வரவில்லையே?  நேரமாகிறதே.வாசலில் போய்  பார்த்து காத்திருந்தார்கள் சிஷ்யர்கள்.   அந்த பெண் பேசியது:
''நீங்க  தேடறது  எங்க அம்மா.   லலிதா மாமி என் அம்மா தான்!! நான் ஆத்துல பூஜை பண்ணிட்டு  வரேன் நீ போய் தாத்தாக்கு ஒத்தாசை பண்ணுனு என்னை அனுப்பினா!!

பூஜை தொடர்ந்தது.  அந்த சிறுமி பாலாவுக்கே விசேஷமாக கன்யா பூஜை நடந்தது!! சாஸ்திரிகளுக்கு பரமானந்தம். 
'' சரி தாத்தா..!! எல்லாம் நன்னா பண்ணிட்டீள் . நேக்கு தூக்கம் வர்றது. உங்க மடியில   படுத்துக்கட்டுமா?
'' வாடீ  என்  தங்கமே''.  அணைத்து மடியில் தூங்க வைத்து சாஸ்திரிகள்    தானும் தூங்கிபோனார்!! 
இன்னும் ஸுவாஸிநீ   பூஜை    ஆகலையே!! சிஷ்யர் ஒருவர் சொன்னபோது தான்  சாஸ்திரிகளுக்கு ப்ரக்ஞை வந்தது.  எங்கே  மடியில் படுத்திருந்த சிறுமி?    நல்லவேளை  அன்று சுவாசினி பூஜைக்கு அழைத்திருந்த  மாமியும்  பெண்ணும்  வந்தாயிற்று!!

''க்ஷமிக்கனும் மாமா..!! ஆத்து பூஜையில  கொஞ்சம் நாழியாயிடுத்து..!!   முடிஞ்ச கையோடு இதோ நானும் குழந்தையும் வந்துட்டோம். !! பூஜையை ஆரம்பிங்கோ ''
''ஏம்மா  நீ   தான் உன் கொழந்தையை அனுப்பினியே. அடடா  எவ்வளவு விவரம் தெரிந்த குழந்தை. மடமடவென்று  அவளே நேக்கு அத்தனை ஒத்தாசையும் பண்ணா .   கன்யா பூஜையும் வாங்கிண்டு என் மடிலதானே தூங்கினா.    எங்கே  அவோ?!
''நீங்க  என்ன சொல்றேள் மாமா?   நானும் என் பெண்ணும் இப்போ தானே வர்றோம்!! அவ இத்தனை நாழி என்னோட தான் இருந்தா?

 சாஸ்திரிகளுக்கு  பொறி தட்டியது...  அப்போ  இங்கே வந்து என்னோடு பூஜை பண்ணினது, கன்யா பூஜை வாங்கிண்டு என் மடிலே தூங்கினது...! அம்பா..!! என் தங்கமே..!! பாலா   த்ரிபுரஸுந்தரீ!!  அழகுபொம்மையே!!!  
கண்களில் ப்ரவாஹத்தோடு  பாலாம்பிகையின் விக்ரஹத்தை கட்டி  அணைத்துக்கொண்டார் சாஸ்திரிகள்!! 
ஸ்ரீ சாஸ்திரிகள்  1896 முதல் 1990 வரை ஜீவித்தவர்.  அவர் தஹன அக்னி யில் பாலா  வெளிப்பட்டாள்  என்று பிரசித்தம். ஒரு போட்டோ பார்த்தேன். 

RASANISHYANDHINI




ரஸ நிஷ்யந்தினி    J K  SIVAN  
                                                                                                 ராமனைத் தெரியுமா?

'' ரஸ நிஷ்யந்தினி''    (நீரூற்றின் ரஸமாக) ராமாயணத்தில் ஒரு அற்புத பகுதியை ஸ்ருஷ்டித்தவர் பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண ஸாஸ்த்ரிகள்.   100 ஸமஸ்க்ரித  ஸ்லோகங்களை இயற்றி தானே  வாலமீகியாக மாறி, ராமன் யார் என்று விளக்குகிறார்.  இதுவரை 70 ஸ்லோகங்களை ரசித்தோம்.     தொடரை  பார்க்காதவர்கள் பிடிக்காதவர்களுக்கு  ஒரு சுருக்கமான  விளக்கம்: 

ரிஷி விஸ்வாமித்ரர் நேராக அயோத்திக்கு புறப்பட்டு வந்து அரண்மனையில் தசரதனை காண்கிறார். திடு திப்பென்று  ''உன் மகன் ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு, அங்கே நான் ஒரு யாகம் செய்யப் போகிறேன், அதை தடுத்து இடையூறு செய்யும் ராக்ஷஸர்களை அருகே வர விடாமல் தடுத்து காவல் காத்து பாதுகாக்க உன் மகன் தேவை'' என்கிறார்.  பல வருஷங்கள் வேண்டி, புத்ர காமேஷ்டி யாகம் செய்து தனது வாரிசாக ராமனைப் பெற்ற  தசரதன், திடுக்கிடுகிறான். இது ஒரு பேரிடி.  பன்னிரண்டு வயது பாலகனை கொடிய ராக்ஷஸர்களை எதிர்க்க கேட்கிறாரே இந்த ரிஷி, என்ன அக்கிரமம் என்று கூட அவன் மனதில் தோன்றியிருந்தால் தப்பில்லை.  எப்படி அவரது  வேண்டுகோளை நிராகரிப்பது? கோபக்கார   சாபமிடும் முனிவர். ராஜ ரிஷி.  ''நான் வருகிறேன் எனது சேனைகளை அனுப்புகிறேன்'' என்று தசரதன் சமாளிக்கும் போது  நிலைமையை புரிந்து கொண்ட வசிஷ்டர் ''தசரதா,  ராமனை முனிவர் விஸ்வாமித்ரரோடு அனுப்பு, அவனுக்கு ஒரு ஆபத்தும் வராது'' என்று பரிந்துரைக்கிறார்.  அப்போது  விஸ்வாமித்ரரும்  தசரதனின் மனநிலையை புரிந்து கொண்டு

''தசரதா,  நீ நினைக்கின்றபடி  உன் மகன் ராமன் சாதாரண  ராஜகுமாரன் அல்ல'' என்று மஹாவிஷ்ணு அவதாரமான ராமனின் பராக்ரமம், நேர்மை, நீதி, கம்பீரம், பலம், மஹிமை, சக்தி எல்லாவற்றையும்  100 காரணங்களாக  காட்டுகிறதை தான் நாம்  ரஸ நிஷ்யந்தினி  என்று  ஸ்ரீ  கிருஷ்ண சாஸ்திரிகள்  விஸ்வமாமித்ரராக மாறி உபதேசிப்பதை படித்துக் கொண்டு வருகிறோம்.

இனி விஸ்வாமித்ரர் தசரதனுக்கு, அவன் மூலம், அருகில் நிற்கும் ரிஷிகள், மந்திரி பிரதானிகள் அனைவ ருக்கும், புஸ்தக ரூபத்தில் ஏன் நமக்கும் கூடத்தான்,  ராமனைப்பற்றி  பருத்தியூர் பெரியவா  உணர்த்துவதை  அறிந்து கொள்வோம்:  

இன்னும் அற்புதமாக இப்படியெல்லாம்   பருத்தியூர்  ஸ்ரீ கிருஷ்ண ஸாஸ்த்ரிகள்  சொல்லிக்கொண்டு போவதை   நூறு வருஷங்களுக்கு முன்பு  நேரே தமது செவியால் கேட்டு அனுபவித்த அத்தனை மஹநீயர்களுக்கும் வந்தனமுலு.

71 . अस्यायं मूर्धा इमे श्रोत्रे इयं वाक् अयं प्राणःइदं हृदयम् । अतोऽयमस्मदादिवत् कश्चिदिति त्वम्। 'अग्निर्मूर्धा चक्षुषी चन्द्रसूर्यौ दिशः श्रोत्रे वाग्विवृताश्च वेदाः; वायुः प्राणो हृदयं विश्वम्। अस्य पद्भ्यां पृथिवी ह्येष सर्वभूतान्तरात्मा'इत्यहम् ।  

அஸ்யாயம் மூர்தா  இமே ஸ்ரோத்ரே  இயம்  வாக்  ப்ராண:  இதம் ஹ்ருதயம்.    அதோ யமஸ்ம தாதிவத் கிஞ்சிதிதி  த்வம் ;   அக்னிமூர்தா   சக்ஷுஷி சந்திரஸூர்யௌ  திஸ :  ஸ்ரோத்ரே  வாக்வி விர்தாஞ்ச  வேதா:  வாயு; பிராணோ  ஹ்ருதயம் விஸ்வம்  

 ''இதோ பார்  தசரதா , ஒரு தலை, ரெண்டு கைகள், கால்கள், உடம்பு, கண் மூக்கு காது, பேச்சு, ஸ்வாசம், இதயம் இருப்பதால் ராமன்  நம்மைப்போல் ஆகிவிடுவானா?  அவன்  சிரசு அக்னி,  சூரிய சந்திரர்கள் அவன் இரு கண்கள்,  எண்  திசையும் அவன் காதுகள், அவன் பேச்சு தான் வேதம், வாயு அவன்  சுவாசம், பூமி அவன் இதயம், எல்லா ஜீவன்களிலும் உறைபவனப்பா  ஸ்ரீ ராமன். தெரிந்துகொள்.  

72.   अनेन ऋचो यजूंषि सामानि च वेदास्साङ्गाःअधीताः; विवाहानन्तरं दीक्षितेन भवितव्यम्। यज्ञाः क्रतवश्वानुष्ठातव्याः; दक्षिणाश्च याजकेभ्यो देया इति त्वम्, 'तस्मादृचः साम यजूंषि दीक्षा यज्ञाश्च सर्वे क्रतवो दक्षिणाश्च संवत्सरश्च यजमानश्च लोकाः सोमो यत्र पवते यंत्र सूर्यः' इत्यहम् ।

அநேன  ஸ்ருசோ  யஜும்ஷி  ஸாமானி ச  வேதாசாங்க ; அதிதா;  விவாஹனந்தரம்  தீக்ஷிதேன பவிதவ்யம்; யஞா; க்ருதவஸ்வானுஷ்டாதவ்யா; தக்ஷிணாஸ்ச யாஜகேப்யோ தீயா இதி த்வம் ; அதஸ்மாத்வ ; சாம யஜுஷி  தீக்ஷா  யஞாஸ்ச சர்வேம் க்ருதவோ  தக்ஷிணாஸ்ச  ஸம்வஸ்தரஸ்ச  யஜமானஸ்ச லோகா;  சோமோ  பத்ர  பவதே  பத்ரம் சூர்யா: இத்யஹம் 

தசரதா ,உன்  பிள்ளை  ராமனுக்கு வேதங்கள் பாடமாகிவிட்டது.  இனி கல்யாணம் பண்ணவேண்டும். அவன் தீக்ஷை  பெற்றுக் கொண்டு  யாகங்கள் பண்ணவேண்டும்,  தேவர்களை வணங்கி வேத பிராமணர்களுக்கு  நிறைய தக்ஷிணை தரவேண்டும்''  என்று   நினைக்கிறாய். நீ அவனை பற்றி அறிந்து கொண்டது அவ்வளவு தான். எனக்கு அவனைத்  தெரியும். அவனிடம் இருந்துதான்   ரிக், யஜுர், சாம வேதங்களும்,  தீக்ஷைகள்,  யாகங்கள், காலம், வருஷம், யாக வேத பிராமணர்கள்,  எல்லா உலகங்கள், சூரிய சந்திரர்கள்  எல்லாமே  தோன்றியது என்று நீ அறிவாயா?  

73. अयं बालः, त्वया साकं प्रेषितश्चेत् शिशत्वेन भयानभिज्ञः समुद्रे पतेत् गिरिभ्यो निपतेत इति त्वम्, 'अतः समुद्रा गिरयश्च सर्वे अस्मात् स्यन्दन्ते सिन्धवः सर्वरूपाः, अतश्च सर्वा ओषधयो रसश्च' इत्यहम् ।

அயம் பால : த்வயா சாகம் ப்ரெஷிதஸ்சேத்  சிசத்வேன  பயானபிஞ;  ஸமுத்ரே  பதேத்  கிரிப்யோ நியதேத  இதித்வம் ;  அத  சமுத்திரா கிரயஸ்ச  சர்வே அஸ்மாத்  ஸ் யந்தந்தி  சிந்தவ; சர்வ ரூபா; அதஸ்ச  சர்வா ஓஷதயோ ரஸஸ்ச இத்யஹம்   

 ''தசரதா, உன் மனதில் ஓடும் எண்ணங்கள்  எனக்கு புரிகிறது: அடாடா,   இந்த  ரிஷி என் சிறிய பாலகன் 12 வயதே ஆன ராமனை காட்டுக்கு அனுப்ப  கேட்கிறாரே. எங்காவது அவன் நதியில் கடலில் விழுந்துவிட்டால்? மலையிலிருந்து  கால் தடுக்கி  உருண்டு விழுந்தால்? ... இப்படி எல்லாம் பயம் உன்னை ஆட் கொள்கிறது.  நீ பயப்படும் அந்த மலைகள், சமுத்திரம், நதிகள், காடுகள், விலங்குகள், எல்லாமே  அவனிடமிருந்து வந்தவை.  அவன் உருவாக்கியவை.  பயம் என்பது நெருங்க முடியா தவன் ராமன்''

74 सूर्यणायं प्रकाश्यत इति त्वमः अनेन 'सूर्यः तपति तेजसेद्धः' इत्यहम् ।

சூர்யணாயம் ப்ரகாஸஸ்யத  இதித்வம் ;  அநேந  சூர்யா;  தபதி  தேஜஸேத்த ; இத்யஹம் ; 

சூரிய ஒளியில் என் மகன் ராமன் முகம் ஜொலிக்கிறதே  என்று மகிழ்கிறாயே தசரதா ,  இதைக் கேள்,  சூரியன் சந்திரன் எல்லாமே  ஒளியைப் பெற்று பிரகாசிப்பது அவனிட மிருந்து தான்.  

75 एषः रजन्यां सुप्तो भवेदिति त्वम्; ‘य एष सुप्तेषु जागर्ति कामं कामं पुरुषो निर्मिमाणः' इत्यहम् ।

யேஷ; ரஜன்யாம் பவேதிதி  த்வம்;  ய  ஏஷ  சுப்தேஷு  ஜகந்தீ காமம் காமம் புருஷோ நிர்மிமாண: இத்யஹம்

' இரவாகி விட்டது. குழந்தை ராமன் படுக்கைக்கு சென்று தூங்கவேண்டும்  என்று உனக்கு கவலை. தசரதா, பிரபஞ்சத்தில் எல்லாமே  உறங்கும்போதும் விழித்திருப்பவன் ஸ்ரீ ராமன்,  அனைத்துக்கும்  அவன் அல்லவா  பாதுகாவலன்.    எல்லாவற்றுக்கும் சாக்ஷியானவன். இதை நீ அறியாய்.  நான் அறிவேன். ''

PESUM DEIVAM




பேசும் தெய்வம்    J K   SIVAN 

             யாரு  குரு என்று சொல்லுங்கோ?

உனக்கு பிடித்தமான  மரியாதைக்குரிய  குரு ஒருவரை  நினைத்துக்கொண்டு அவர் பெயரை ஸ்லேட்டில் எழுது என்று சொன்னால், நிறைய  ஸ்லேட்டுகளில் காணப்படும் பெயர்    காஞ்சி மாமுனிவர்  மஹா பெரியவா  பெயராகத்தான் இருக்கும். சைவ வைணவ  மத பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு ஞானி. உண்மையான  ஜகத் குரு.
மகா பெரியவர் படம் முன்னால் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்தேன்.  அவரையே  கேட்போமே 

''மஹா பெரியவா  நீங்க உபதேசம் பண்ணுங் கோ  குரு என்பது யார்?''
''ஏன் கேக்கறே?''
''எத்தனை படித்தாலும்  புரியாத விஷயங்களில் இது ஒண்ணு .  புரியல்லேன்னு அதை  ஓரம் கட்டிவிடுகிறோம். அப்புறம் தொடுவதே  இல்லை  அப்படி ஏதாவது ஒண்ணை  எடுத்து  உதறி, தூசி தட்டி என்ன என்று  பார்த்தால்,  அதுவுமே இன்னும்  புரியாமலே தான்  இருக்கிறது.   அதனாலே கேட்டேன் பெரியவா?

பெரியவா ஏற்கனவே  அவரது நீண்ட  ஆயுளில்  அடிக்கடி நிறைய சொன்னது தான்.  ரொம்ப பெரிய விஷயத்தை ஒரு கதை மூலமாக  அவர்  சொன்னதை மறுபடியும் நினைவு படுத்துகிறேன் :

''சாந்தோக்ய உபநிஷத்தில்தான் ''தத்வமஸி'' என்ற மஹாவாக்கியம் வருகிறது.

'' நீயேதானப்பா அந்த பிரம்மமாக இருக்கிறாய் என்று ச்வேதகேதுவுக்கு  அவனுடைய பிதா  உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை  செய்த  உபதேசம் அது.

தத்-த்வம்-அஸி    =    ''தத்'' என்பது பரமாத்மாவான பிரம்மம்;   ''த்வம்'' என்பது ஜீவாத்மா;  ''அஸி'' என்றால் இருக்கிறாய்.  பரப் ரம்மமாக இருக்கிறாய் -  என்றைக்கோ ஒருநாள் அல்ல!   எதிர்காலத்தில் இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலே தான்  பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

அப்படியானால் ஸாதனை எதற்கு? பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து  கொள்ளவில்லையே! தெரிந்தால்  இத்தனை அழுகை,  இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப  முடியாமல் ஆகாசம் வரை முட்டிக் கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா இருப்போம்?

எனவே   ''நீ எப்போதும் பிரம்மம் தானப்பா'' என்றால் எப்படி? அதைப் புரிய   வைக்க  ஒரு கதை:  நமது  வாழ்க்கையே  எதாவது ஒரு கதையை  நம்பி தானே  நடக்கிறது.

ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி  தன்னிலிருந்தே நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும் , ஆத்மாவிலிருந்தே அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது எனகிற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக் கொண்டு போகிறபோது,  இந்தக் கதை வருகிறது.

ஒரு  ராஜகுமாரன் அவனது  அப்பா  அம்மா எதிரி ராஜாவின்  படையெடுப்பில் கொல்லப் பட்டதால்,   உயிர் தப்பி  மந்திரியால்  காட்டில் வேடர்கள்  பகுதியில் குழந்தையாக விடப்பட்டு   இளம்  வயதில்  வேடர்களோடு  வளர்கிறான். பெரியவனாகி,  பின்னால் அவன்,   தான் ஒரு  ராஜகுமாரன் என்று  அவனை  தப்பிக்க  விட்ட  மந்திரி மூலமே  உணர்கிறான்.  இத்தனை காலமும்  வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இது முதலில் தெரியாததால்  வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மை புரிந்தவுடன் ,ராஜ குமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். வேடப்பையனும்  ராஜகுமாரனும் இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத் தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான்.  முதலில் தன்னை தெரிந்து கொள்ளவில்லை. புரியவில்லை.  அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் வேடப்பையனாகி கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாகினான். அப்புறம் எதிரி  ராஜாவோடு சண்டை போட்டு  ஜெயித்து ஸாம்ராஜ்யாதிபதி யாகவே ஆகிவிட்டான்.

நாமெல்லாருமே இந்த மாதிரி ''வேட''  வேஷத் தில் தான் உள்ளோம்.  ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம்  எப்படியிருந்தாலும் உள்ளே இருக்கிற வஸ்து எப்போதும்  பரமாத்மாதான். ஐம்புலன்களின்   வசியத்தில் இழுக்கிற வழியில் ஒடி வேட்டை யாடிக் கொண்டிருக் கிறோம். நாம் உண்மை யில் பிரம்மம்என்று தெரிந்து கொள்ளலாமா? தெரிந்தால் மட்டும் என்ன?  அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் (ஐம்புலன்கள்) இழுத்துக்கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளை  யெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாகஆகவேண்டும். 'ஸாம்ராட்'- அதாவது ராஜா - என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது.   ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கி றதோ அதுதான் உருகி மறுபடியும் தன்ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால்மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது. ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மா ட்டோம் என்கிறோம்.  அது தான்  வித்தியாசம்.

''கல்லேனும்,  ஐயா,   ஒரு காலத்தில் உருகும் என் கல்நெஞ்சம் உருகவில்லையே! -- தாயுமான ஸ்வாமிகள் நமக்காகத்தான் பாடியிருக் கிறார்.நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை Practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி,நம்மை உருக்கி நிஜ நாமாகப் பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி ,பாரமார்த் திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? நம்மை நம்முடைய நிஜ  ''நாமாக'' ஆக்கக்கூடிய ஒருத்தர்  இருக்கிறாரா?



இருக்கத்தான் செய்கிறார். வேடப்  பையனுக்கு நீதானப்பா ராஜகுமாரன் என்று சொல்லிப் புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி கொடுத்து,அவனை ராஜாவாக்கு வதற் காகஅவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம். (உருவகம்) . நமக்கு நம்  '' பரமாத்ம'' த்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி  தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.''

PESUM DEIVAM



 பேசும் தெய்வம்   J K SIVAN
​                                                              
                   
     கடன் பைசல் ஆனது.

இது ஒரு  அற்புதமான சம்பவம்.  ஏற்கனவே நான் படித்து   எழுதியதும் தான்,  என்றாலும் இன்று மீண்டும் இந்த மஹா பெரியவா அனுபவம் எனும் என்றும் அலுக்காத சுகத்தை  உங்களோடு  துய்க்கிறேன்.

ஆயிற்று. இது நடந்து  பல வருஷங்கள் ஓடிவிட்டன.   மகா பெரியவா விருப்பத்தின் படி சதாராவில்  ஸ்ரீ உத்தர நடராஜா கோவில் நிர்மாண  பணி நடந்த சமயம்.  மஹாபெரியவா வந்திருக்கிறார் என்ற செய்தி எண்ணற்ற பக்தர்களை சதாராவில்  அவர் தரிசனம் பெற கூட வைத்தது.
மத்தியானம் சுள்ளென்று வெய்யில் கொஞ்சம் குறைய   மாலை  சுமார்  மூன்று மணி  இருக்கும்.  ஒரு 30 வயது வாலிபன் பெரியவா எதிரில்  சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுகிறான். கண்களில் ப்ரவாஹம் . அவர் முகத்தில் மந்தஹாசம்.

​எழுந்திரு  நீ  யாரு ? எங்கேர்ந்து வரே, ஏன் அழறே ?''
பதிலுக்கு பதிலாக மேலும்  கண்ணீர்.  பக்கத்தில் இருந்தவர்  முதுகை தட்டிக்கொடுத்து ஆறுதல். மஹா பெரியவா எதிரே உட்காரு என்று ஜாடை காட்ட உட்கார்ந்தான்.
''எங்கேருந்து வரே?
''பாலக்காடு பெரியவா''
பாலக்காட்டிலிருந்து இங்கே வரணும்னு வந்தியா,  இல்லே   இந்த பக்கம்  வேறே ஏதாவது வேலையா
   வந்தியா?
பெரியவா இங்கே இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுண்டு இங்கே நேரே வந்தேன்''
சரி, உன் பேர் என்ன?
ஹரிஹர சுப்ரமணியன்''
''  பேஷ்  ரொம்ப நல்ல பேர். உன் தோப்பனார் என்ன பண்றார்?''
'' அப்பா இப்போ ஜீவிய வந்தர் இல்லை. பாலக்காட்டில் ஆயுர்வேத வைத்தியரா  இருந்தா. பேர்  டாக்டர் ஹரிஹர நாராயணன்.''
மஹா பெரியவா முகத்தில் குதூகலம்.  புருவம் உயர்ந்தது.  ''அட,   நீ  ஆயுர்வேத நாராயணன் பிள்ளையா? அப்படின்னா உன் தாத்தா  டாக்டர் ஹரிஹர ராகவன் இல்லியோ?  ஆயுர்வேதத்தில  நல்ல பேர் சம்பாதிச்சவர்''
''  ஆமாம் பெரியவா''
''பேஷ்,  பிரபல வைத்ய பரம்பரைன்னு சொல்லு. நீ ஏன் டாக்டர்ன்னு பேரிலே போட்டுக்கலே ''
''நான் வைத்தியம் படிக்கலே .அந்த லைனிலே அப்பா என்னை விடலே . ''
''அப்படி சொல்லாதே. அப்பா உன்னை சேக்கலியா , உனக்கு ஸ்ரத்தை  இல்லையா ஆயுர்வேதம் கத்துக்க''
பதில் இல்லை.  
'பெரிய வைத்ய பரம்பரைலே  பிறந்தும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்காம விட்டுட்டே, சரி. என்ன படிச்சிருக்கே?''
''ஒம்பதாவது''
''ஏன் மேற்கொண்டு படிக்க பிடிக்கலியா?''
அப்போ  தெரியலை. இப்போ தோண்றது ''
''கல்யாணம் ஆயுடுத்தா?''
''ஏழு வயசிலே ஒரு பொண்ணு இருக்கு''
ஓஹோ  இப்ப  என்ன பண்றே?''

அவன் கண்களில் கண்ணீர். '' படிப்பு இல்லாததால்  வேலை எதுவும் கிடைக்கலே.   உள்ளூர்  அரிசி மில் ஒண்ணிலே  சூப்பர்வைசர்.  எழுநூறு ரூபா சம்பளம். அதிலே தான் குடும்பம் ஓடறது.''
ஓஹோ . தாத்தா  கொள்ளுத்தாத்தா  விட்டுட்டு போன  சொந்த க்ரஹம் இருக்கா?''.
''தாத்தா கட்டின பழைய வீடு இருக்கு. அது விஷயமா தான் பெரியவாளை பார்க்க வந்தேன்''
ரொம்ப வருஷம் முன்னாலே  அத்தை புருஷனை இழந்து  வீணாபோய்ட்டா, ரெண்டு பெண்களோடு எங்க வீட்டோட வந்துட்டா. நவராத்ரி சமயம் . வீட்டை அப்பா உள்ளூர்லே ஒரு வியாபாரிகிட்டே 25ஆயிரம் ரூபாய்க்கு அடமானம்  வச்சு   அந்த ரெண்டு பெண்களுக்கும்  கல்யாணம் பண்ணினார்.  அப்பாவும் போய்ட்டார், அத்தையும் போய்ட்டா.  எங்கள் வருத்தம் என்னன்னா, லக்ஷ்மிகரமான நவராத்ரி சமயம்  வீட்டு மேலே கடன் வாங்கி அடைக்க முடியாமல் இப்போ  நாப்பத்தஞ்சாயிரம் ரூபா அசலும் வட்டியும் நிக்கிறது.  கடனிலே  இருக்கற வீடும் மூழ்கப்போறது. என்ன பண்றதுன்னு தெரியலை ''

மஹா பெரியவா ஒரு க்ஷணம் கண்களை மூடினார். பிறகு கேட்டார்:  வருஷா வருஷம் கொலு வைக்கிற துண்டா?''
''இல்ல பெரியவா.   அப்பா இருந்தவரைக்கும் விடாம நடந்தது தான். அப்புறம் வைக்கலே ''
''ஆத்துலே பெரியவாளை  மரியாதை இல்லாமலோ,   குறை யோ  சொல்லப்படாது.  அவா மஹான்கள். பெரிய  காரியங்கள் எல்லாம் பண்ணினவர்கள்.  எதையோ மனசிலே வச்சுண்டு, நவராத்ரி கொண்டாடி, கொலு வைக்காம விட்டது தப்பு.  இப்போ நவராத்ரி சமயம் . ஆரம்பிச்சுடுத்து. பாலக்காட்டில் ஆத்திலே இந்த நவராத்திரிலே இருந்து மறுபடியும் கொலு வை.   உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும். க்ஷேமமா  இருப்பே''   

மங்களக்ஷதை குங்குமம் பிரசாதம் கொடுத்தனுப்பினார்.

இருபது நாள் கழித்து சதாராவில்  பெரியவா தரிசனத்துக்கு பெரிய கூட்டம்.  மடத்து சிப்பந்திகள்  ஆண் பெண்  வரிசைப்படுத்தி  பக்தர்களை தரிசனத்துக்கு  அனுப்பினார்கள் .  ஒரு வடக்கத்தியர்  காவி ஜிப்பா, 60-65 வயசு, குண்டாக  பஞ்சகச்சம்  துளசி ருத்ராக்ஷ மாலைகளோடு பெரியவா முன் நகர்ந்து நமஸ்கரித்தார்.  ஹிந்தியில் பேசினார். பெரியவா ஹிந்தி பேசுவா.    எதிரே  ஒரு ஓரமாக உட்காரச்சொன்னார்.

அரைமணி  முக்கால் மணி நேரத்தில்  பாலக்காட்டு ஹரிஹர சுப்பிரமணியன் வரிசையில் வந்து  எதிரே நின்றான். கையில் ஒரு இரும்பு பழைய ட்ரங்க் பெட்டி . 

மஹா பெரியவா  மந்தஹாசத்தோடு அவனையும்  அந்த ட்ரங்க் பெட்டியையும் அர்த்தபுஷ்டியோடு பார்க்க  அதை திறந்தான்.  பட்டுத்துணியில் சுற்றிய   பழைய 10-15 ஓலைச்சுவடிகள்.  அவற்றை பார்த்துவிட்டு அவனையும்  பார்த்தார். அவன் விழித்தான்.   ஒன்றும் புரியவில்லை. ஞான சூன்யம்.   பேசினான்: 

''பெரியவா சொன்னபடி  இந்த வருஷம் கொலு வைக்க பரண்லே ஏறி  கொலு பொம்மை எல்லாம் எடுத்தேன்.  இந்த   ட்ரங்க் பேட்டி பரண்லே இருந்தது.  இத்தனை வருஷ காலம் அதை நாங்க  யாருமே  பாக்கவே இல்லை பெரியவா.   திறந்து பார்த்தா  இந்த ஓலைச்சுவடிகள். எனக்கு ஒண்ணும் தெரியலை, புரியலே.  பெரியவா கிட்டேயே காமிக்க எடுத்துண்டு  நேரே வந்தேன்''

பெரியவா முகத்தில் புன்னகை.  எதிரே உட்கார்ந்திருந்த  காவி ஜிப்பாவை ஜாடை காட்டி அழைத்தார்.  ஹிந்தியிலே 

 '' கொஞ்சம் நேரத்துக்கு முன்னாலே என்னோடு பேசும்போது  கேட்டீர்களே அந்த அபூர்வ வஸ்து  உங்களைத் தேடி வந்திருக்கு''  

அவரிடம் ஓலைச்சுவடி சென்றது.    அதை பிரித்து பையில் வைத்திருந்த  பூதக்கண்ணாடியால் ஒவ்வொரு சுவடியாக  படித்தார் .  முகம் மலர்ந்தது.  தலையில்  சுவடிகளை வைத்து நமஸ்கரித்தார்.  

' ஆஹா,  பெரியவா  நீங்க  பரம ஆச்சார்ய புருஷா. சந்தேகமே  இல்லை.  இந்த அபூர்வ ஆயுர்வேத  கிரந்தத்தை பல வருஷங்கள் எங்கெங்கோ தேடியும்  கிடைக்கலே.  நீங்க ப்ரத்யக்ஷ தெய்வம்.   உங்க கிட்டே கேட்டா தெரியும்  என்று  எல்லோரும் சொல்லி இங்கே  வந்தேன்.  அரைமணி நேரம் கூட ஆகலே.  பல வருஷமா எங்கெல்லாமோ நான் தேடியது கைமேல் கிடைச்சுடுத்து.''
 மீண்டும் நமஸ்காரம் பண்ணின்னார்  காவி..   
ஹரிஹர சுப்ரமணியன் ஒன்றும் புரியாமல் ஓரமாக கைகட்டி நின்று ொண்டுபார்த்தான். பெரியவா அவனை
 கிட்டே கூப்பிட்டார். 

 “இவர்  ஒரு பெரிய   ஆயுர்வேத  பண்டிதர். ஆராய்ச்சி நிபுணர்.   பண்டரிபுரம் ஊர்க் காரர்.  அரைமணி நேரத்துக்கு முன்னாலே தான் எங்கிட்டே அவருடைய ஆயுர்வேத ஆராய்ச்சியில் சில விஷயங்கள் விட்டுப்போய்  இருக்கிறது.  அதை எங்கேயும் தேடி  பிடித்தால் தான் ஆராய்ச்சி முழுமை பெறும் . என்ன செய்வது எங்கே கிடைக்கும் என்று  கேட்டார். நான் யோசனை பண்ணினேன். சரி கொஞ்சம்  நேரம் கழித்து சிந்திப்போம் என்று எண்ணி உட்கார வைத்தேன் . நீ  என்னடான்னா  நாங்க  எதை தேடறோமோ அதை  ட்ரங்க் பெட்டியோட  கொண்டு வந்திருக்கே.    ​இந்த  சுவடிகள்  அவருக்கு   ரொம்ப உபயோகமாக இருக்கும். ​ நீயே உன்கையால் உங்க தாத்தா ஆராய்ச்சி பண்ணி எழுதியதை கொடு. ''

​ரொம்ப பவ்யமாக பணிவோடு ஹரிஹர சுப்பிரமணியன் கொடுத்ததை  ஹிந்திக்காரர்  மரியாதையோடு பெற்றுக்கொண்டார்.​​ அவர் கண்களில் ஆனந்த கண்ணீர். நாக்கு  தழு தழுக்க 

''பரமாச்சார்யா,  உங்களுடைய  ஆசிர்வாதத்திலே தான் இந்த அபூர்வ கிரந்தம் கிடைச்சுது.  காணிக்கை எதுவும் குடுக்காம  இதை  பெற்றுக்கொள்வது தர்மம் இல்லை ''

​பையிலிருந்து  ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக எடுத்தார். ​  ஐம்பதாயிரம் ரூபாய் எடுத்து  தட்டில்  தாம்பூலம் பழங்களோடு வைத்து பெரியவா முன்னால் வைத்தார்.  பெரியவா ஹரிஹரசுப்ரமணியனை பார்த்து  தலையாட்டி  ஜாடையாக எடுத்துக்கோ  என்று சொன்னார்.  கைகள் நடுங்க, உடல் வியர்க்க அவன் அதைப்  பெற்றுக்கொண்டான். 

​''உன்கிட்டே என்ன சொன்னேன்,  குடும்பத்திலே  இருந்த பெரியவாளை  குறை சொல்லாதே,   பெரிய  காரியங்கள் எல்லாம் பண்ணவா அவா.     ட்ரங்க்  பெட்டிலே ஜாக்கிரதையா   உனக்கு  பெரிசா வச்சிட்டு போயிருக்கா. உனக்கு தெரியலே  
 ஸம்ப்ரதாய தர்மத்தை விடக்கூடாது. நவராத்திரி கொலு   வை.  அம்பாள், லட்சுமி சரஸ்வதி,  முன்னோர்கள்    எல்லோரும் சுபிக்ஷமா உங்களை வைப்பா'' என்றேனா  இல்லையா.  என்னமோ என் மனசிலே பட்டுது . அப்படி சொன்னேன். வீடு கடன் வட்டியோடு இப்போது தீந்துடுத்தா?  அது தான்  சந்திர மௌலீஸ்வரன் அனுக்கிரஹம்.  போயிட்டு வா...பாலக்காட்டில் சந்தோஷமா இரு 

 

Friday, May 29, 2020

ANANDHA RAMAYANAM

ஆனந்த ராமாயணம்   J K  SIVAN  

                                11    ராவண சந்நியாசி வந்தான் 

மூன்று லோகங்களிலும்  தன்னை எதிர்க்க எவருமின்றி, சர்வ வல்லமை படைத்த  தசமுகன், பத்து தலை  ராவணேஸ்வரனுக்கு  தனது அன்
புத் தங்கை தலைவிரி கோலமாக, ரத்தம் சொட்ட, மூக்கு, காது எல்லாம் அறுபட்டு அலங்கோலமாக அழுது கொண்டு  எதிரே நின்றால் எப்படி இருக்கும்?   உடைவாள் மேல் கை  செல்ல,

''சூர்ப்பனகை, என்ன இது, யார்  இப்படி காயப்படுத்தியது ? எங்கே அவன்? இன்னுமா உயிரோடு இருக்கிறான்?    மஹா சக்தி வாய்ந்த   சகோதரர்கள்  கரன்,  தூஷணன், திரிசிரஸ்  பாதுகாப்பில் உள்ள உனக்கு இது எப்படி நேர்ந்தது?

''அண்ணா, நீ  பரம முட்டாள் என்று நிரூபித்துவிட்டாய். பெரிய ராஜாக்களின் தூதர்கள், உளவாளிகள் அவ்வப்போது உலகில் நடக்கும் விஷயங்களை ராஜாவுக்கு சொல்வார்கள். உனக்கு உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையே!''

''என் தங்கை என்பதால் பிழைத்தாய். என்ன சொல்கிறாய் நீ?'

''நீ முட்டாள் என்றேன்.  கரன், தூஷணன், திரிசிரஸ் பதினாலாயிரம்  அசுரர் வீரர்கள் அத்தனை பேருமே  விளக்கின் முன் விட்டிலாக  கணநேரத்தில் மாண்டுவிட்டார்கள்.  முன்பே  சுபாகு கொல்லப்பட்டான். தாடகை அழிந்தாள் மாரீசன்  எங்கோ கடலில் தூக்கி வீசி எறியப்பட்டான் ...  எல்லாம் ஒரு மனிதனால் நடந்தும் உனக்கு ஒன்றுமே தெரியவில்லை... 

''உனக்கு என்ன நேர்ந்தது என்று சொல்?''

''பஞ்சவடியில் ஒரு பர்ணசாலையில் ஒரு அழகான பெண், உலகத்தில் அவளைப்போன்ற அழகியே இல்லை, என்பதால் அவளைக்  கொண்டு வந்து உனக்கு பரிசாக கொடுக்கலாம் என்று எண்ணி நெருங்கியபோது  லக்ஷ்மணன் என்பவனால் இந்த கதி நேர்ந்தது.  லக்ஷ்மணன் என்பவன் ராமனின் சகோதரன். அவன் தான் தூங்கிக் கொண்டிருந்த என் மகன் சாம்பவனையும் கொன்றவன்.  இதற்கெல்லாம் பழி தீர்க்க முடியும் உன்னால் என்றால் உடனே அந்த சீதையை இங்கே கொண்டு  வந்து விடு. இல்லாவிட்டால் பேடியாக  ஓடி
ஒளிந்துகொள்''

''நிறுத்து, நான் அவர்களைக் கொன்று, சீதையுடன் இங்கு வந்தவுடன்   மேற்கொண்டு பேசு''
 ராவணன் கிளம்பினான். மாமன்  மாரீசனைச் சென்று பார்த்தான். 

''என்ன  தசகண்டா  இப்படி ஓடி வருகிறாய்? என்ன விஷயம் ''

''மாமா  நம்  சூர்பனகைக்கு  இரு மானுடர்கள் தீங்கு செய்து விட்டார்கள். உடனே பழி தீர்க்க வேண்டும்''  என்று விஷயம் சொன்னான்.

''உன்  தங்கையால் விளைந்த புது  ஆபத்து இது.  ஏற்கனவே  நான்  விஸ்வாமித்ரன் யாகத்தில் அதை தடுக்க சென்றபோது  என்னுடன் வந்த சக்திவாய்ந்த  சுபாகு மாண்டான். நான் இந்த கடலில் தூக்கி எறியப்பட்டு உயிர் பிழைத்தேன்'. '' ரா'' என்ற எழுத்தை கேட்டாலே எனக்கு உடல் நடுங்குகிறது. உயிர்  ஊசலாடுகிறது.  நீ அவனை போய்ப்  பார்த்தால் திரும்பி நான் உன்னை பார்க்க முடியாது. ஜாக்கிரதை.''

''மாமா   வாயை அடக்கி பேசு.  நான் சொல்வதை கேட்காவிட்டால் உனக்கு என் கையாலேயே மரணம்.' யோசித்து நான் ஒரு திட்டம் தீட்டி இருக்கிறேன். அதன் படி செய்.  நீ உடனே  ஒரு மான் உருவம் கொண்டு பஞ்சவடி செல்  ராமன் சீதை முன்பு விளையாடி அவளை மயக்கு.  ராமன் உன்னை பிடித்து தர வருவான். போக்கு காட்டி தொலை  தூரம் அவனை ஓட  விடு.  அங்கிருந்து  ராமன் குரலில் ''ஹே  லக்ஷ்மணா'' என்று அலறு . லக்ஷ்மணனும்    ராமனுக்கு ஆபத்து என்று உன்னிடம்   ஓடி வருவான்.  தனியாக விடப்பட்ட சீதையை நான் பார்த்துக் கொள்கிறேன். கிளம்பு உடனே ''

மாரீசன்  கெட்டிக்காரன்.  எப்படியும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்து விட்டது. ஒரே ஆப்ஷன் தான் இருக்கிறது.  யார் கையால்  சாவது?  ராவணன் கையால் சாவதை விட ராமன் கையால் மரணம் சிறந்தது என்று முடிவெடுத்தான். காரியம் வெற்றியானால்  பாதி ராஜ்ஜியம் தருகிறேன் என்று வேறு சொன்னான்  ராவணன் ''

மாரீசன்  ராவணனோடு ரதத்தில்  ஏறினான். பஞ்சவடி சென்றார்கள்.  தூரத்திலேயே  ரதம் நின்றது.  மாரீசன்  தங்கநிற மானானான். பர்ணசாலை அருகே  அமர்ந்திருந்த மூவரை பார்த்தான்    சீதையின் கண்ணில் படும்படி  ஒரு பொன்னிற மான்  அழகாக விளையாடியது.  சீதைக்கு அதை ரொம்ப பிடித்தது.  அது உண்மை சீதை அல்ல. சாயா சீதை. மானும்  நிஜமல்ல  ராக்ஷஸன். எல்லாமே  நாடகம்.  நடக்கப்போவதை எல்லாம் நன்கு அறிந்த ராமன் '' லக்ஷ்மணா  நீ சீதைக்கு காவல் இரு. நான் அந்த மானைப்பிடித்துக்கொண்டு வருகிறேன்''  என்றான்.  மானை  துரத்தி ஓடினான்.  

வெகுநேரம் ஆகியது.  மான் பிடிபடவில்லை.  ராமனை வெகுதூரம் காட்டுக்குள்  இழுத்துச்  சென்றது.  கடைசியில் ராமன் ஒரு அஸ்த்ரத்தை எடுத்து அதன் மேல் பிரயோகிக்க  மான் திடீரென்று  ராமன் குரலில் வலியோடு  '' ஹே  லக்ஷ்மணா, ஹே  சீதா... நான் இறந்தேன்''     என்று கத்தியது. மாரீசன் வேலை முடிந்து மரணமடைந்தான்.  காற்றில் எங்கோ  நடுக்காட்டில் ஒலித்த   ராமனின்  அபயக் குரல் சீதைக்கு கேட்டது. 
''ஐயோ   ராமனுக்கு ஏதோ ஆபத்து. லக்ஷ்மணா உடனே  ஓடு. ராமனைக்  காப்பாற்று...''

''அம்மா  எனக்கும் கேட்டது.  ஆனால்  இது  ராமன் குரல் அல்ல... கவலைப்படாதீர்கள்...'' எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக சீதை அவனை விரட்டினாள் . தகாத வார்த்தைகளை  வீசினாள் ஏசினாள் என்று சொன்னாலே போதும். என்ன என்று எழுத அவசியமில்லை.  ''

''அம்மா, நீங்கள்  என்னை  எவ்வளவு இழிவாக பேசினாலும் என் கடமையை செய்கிறேன். உங்கள் வாக்குப்படியே  அண்ணனை தேடிச்  செல்கிறேன் . தயவு செய்து  நான் கிழிக்கும் இந்த கோட்டை மட்டும் தாண்டி வெளியே வராதீர்கள். இது  உங்களை நான் வரும்வரை பாது காக்கும்.  எல்லோருக்கும் இப்போது தெரிந்த   வார்த்தை. '' லக்ஷ்மண் ரேகா' . அதை  வட்டமாக  சீதையை யின் பர்ணசாலையை சுற்றி கிழித்தான். ராமனைத்  தேடி  ஓடினான். 

இதெல்லாம்  சரியாக எதிர்பார்த்தபடி நடப்பதை அறிந்த ராவணேஸ்வரன் ஒரு சந்நியாசி வேடத்தில் '' ''நாராயண''  என்று வெளிப்படுகிறான். பிக்ஷை கேட்கிறான்.  கோட்டுக்குள்ளிருந்தே   ''இந்தாருங்கள்'' என்று சீதை அளித்ததை ஏற்கவில்லை. 

''ராமரின் க்ரஹ தர்மத்திற்கு  இது தக்கதல்ல. வாசலுக்கு வெளியே வந்து அல்லவோ  பிக்ஷை இடவேண்டும்''

லக்ஷ்மண ரேகைக்கு வெளியில்  இடது காலை  வைக்கிறாள்.  ராவணன் லபக்கென்று சீதையை பிடித்துக்கொண்டு  சந்நியாசி வேஷம் களைந்து, கோவேறு கழுதைகள்  பூட்டிய தனது ரதத்தில் வைத்து  வேகமாக செல்ல,   எதிரே  ஜடாயு வந்தான்.  தடுக்கிறான் பெரிய யுத்தம் நடக்கிறது.  எட்டு கோவேறு கழுதைகளையம்  கொன்றான் ஜடாயு. ராவணன் வில் முறிந்தது.  பத்து க்ரீடங்களும் தரையில் உருண்டது.  ஒருவாறு  ஜடாயுவை தனது  மந்திர  சிவனளித்த  வாளால் இறக்கைகளை துண்டித்துவிட்டு  சீதையை தூக்கிக்கொண்டு ஆகாயமார்க்கமாக இலங்கை புறப்பட்டான் ராவணன். 

சொல்லமுடியாத வருத்ததுடன் தனது ஆபரணங்களை கழற்றி  சீதை தனது உத்தரீயத்தை கிழித்து அதில் முடிந்து கீழே ஒரு மலை மேல் சில வானரங்கள் உட்கார்ந்திருப்பதை கண்டு அவற்றை நோக்கி வீசினாள் .

சீதையை இலங்கையில் அசோகவனத்தில்  சிறை வைத்த ராவணன் பல ராக்ஷஸிகளை அவளுக்கு காவல் வைத்துவிட்டு தனது மாளிகைக்கு சென்றான்.

ப்ரம்ம தேவாதி தேவதைகள்  நடந்ததை கண்காணிக்கிறார்கள். பிரமன் உத்தரவுப்படி தேவேந்திரன் சிறிது பாயசம் ரகசியமாக சீதைக்கு கொண்டு தருகிறான். அதை  பருகினால் வருஷக்  கணக்கில் பசிக்காது. அதில் சிறிதை , ஆகாயத்தில் தேவர்களுக்கும், ராமர் லக்ஷ்மணர்களுக்கும், அருகில் இருந்த திரிசடை எனும் ராக்ஷஸிக்கும் கொடுத்துவிட்டு சீதை  தானும் சிறிது சாப்பிட்டாள் என்கிறது வால்மீகியின் ஆனந்த ராமாயணம்.  நான் இதுவரை கேள்விப்படாதது.

ராவணன் மந்திராலோசனை நடத்தி பதினாறு வலிவுமிக்க ராக்ஷஸர்களை  அழைத்து   ராமலக்ஷ்மணர்களை கொல்லும்படி  அனுப்ப அவர்களை பாவம், வழியில்  கபந்தன் எனும் இன்னொரு ராக்ஷ்சன் அப்படியே ஒரே வாயில் விழுங்கிவிட்டான்...

இனி ராமனை தொடர்ந்து செல்வோம்...





''



GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...