Saturday, May 16, 2020

RASA NISHYANDHINI


ரஸ  நிஷ்யந்தினி      J K  SIVAN   

             

            மஹான்கள்  குருமார்கள்    

மஹா பெரியவா  எப்போதும்  ஞானம் பெற வாழ்க்கையில்  ஒரு குரு அவசியம் என்பார். தார்மீக வழியை பின்பற்றுவதன் அவசியத்தை அடிக்கடி எடுத்து சொல்வார்.  பன்னிரண்டு வயதிலேயே  மிகப்பெரிய  பதவியான ஜகத் குருவான பாக்கியம் பெற்றவர்  மஹா பெரியவா.  அவருக்கு  சாஸ்திரங்கள்,  புராணங்கள், இதிகாசம், காவ்யம் வேதம், வ்யாகரணம், தர்க்கம், இதெல்லாம்  யார்  கற்பித்தது தெரியுமா?  பருத்தியூர் பெரியவா என்று அவரால் போற்றப்பட்ட  பிரம்மஸ்ரீ பருத்தியூர்   கிருஷ்ண சாஸ்திரிகள்  மற்றும் கும்பகோணத்திலிருந்த  (1908-1911)  ஆஸ்தான பண்டிதர்கள் ஆகியோர் தான்.

சிறிய பாலகனாக  மஹா பெரியவா  பருத்தியூர் பெரியவா, கிருஷ்ண சாஸ்திரிகள் வீட்டிற்கு பாடம் கற்க வருவார். பாலனாக இருந்தும் சந்நியாசி அல்லவா?   சம்ப்ரதாயம் காரணமாக வீட்டில் பெண்கள் கண்ணில் படாமல் ஜன்னல் இடுக்கு வழியாக அவரை தரிசிப்பார்கள்.  இதில் என்ன  விசேஷம் என்றால்   மாணாக்கன் சிறுவனாக இருந்தாலும் ஆசிரியர்கள் முதலில் ஜகத் குருவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி வணங்கிவிட்டு கைகட்டி தான் பாடம் கற்பித்தார்கள்.ஆசிரியர்கள் அத்தனைபேரும்  மஹா விற்பன்னர்கள்.    மாணவன் மட்டும் என்ன  சாதாரணமா?  நன்றாக கிரஹித்துக்கொண்ட   அதி புத்திசாலியான   ஞான பண்டிதன் அல்லவா?   கும்பகோணத்தில்  வரிசை வரிசையாக பக்தர்கள் வந்து கொண்டே இருந்தால்  ஜகத் குரு மாணவருக்கு கற்க எது நேரம், ஏது  நேரம்?  ஆகவே   காவேரி வடகரையில் , முசிரிக்கு   ஐந்து மைல்  தூரத்தில் அமைதியான  கிராமமான  மஹேந்திர மங்கலத்தில்  மஹா பெரியவா   விசேஷ கல்வி பெற  ஏற்பாடு ஆனது.  ஆசிரியர்கள்  ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள், கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள், ராஜகோபால தாத்தாச்சாரியார், பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோர் இன்னும் பலரும்  கூட. 

இனி ஸ்ரீ பருத்தியூர்  கிருஷ்ண சாஸ்திரிகளின்  ரஸ  நிஷ்யந்தினியின் மற்றும் ஐந்து ஸ்லோகங்களை பார்ப்போம்.  16-20.

16. अयं धर्माराधक इति त्वम्; अयं धर्माराध्य इत्यहम् ।
     அயம்  தர்மாராதக இதித்வம்;  அயம் தர்மாராத்ய இத்யஹம் 
   
16. ராமன் தர்ம வழியில் நடப்பவன் என்கிறாயே, உனக்கு தெரியுமா தசரதா , தர்ம தேவதையே அவனை தொழுது பின் செல்கிறது என்று?

17. अयं कोसलपतिरिति त्वम् अयं सर्वलोक पतिरित्यहम्।
அயம் கோசலபதிரிதி த்வம்  அயம்  சர்வலோக பதிரித்யஹம் 

17   உன் ராமன் வெறும் கோசல மன்னனா? அவன் ஈரேழு பதினாலும் லோகங்களுக்கும் அதிபதி அப்பா!

18.अयं नवीनपुरुष इति त्वम् अयं पुराणपुरुष इत्यहम् ।
அயம் நவீனபுருஷ இதித்வம்.  அயம்  புராணபுருஷ இத்யஹம் 
 
 என் குழந்தை ராமன் பிறந்து பன்னிரண்டு வயசு கூட பூர்த்தி அடையவில்லையே என்று ஆதங்கப்படுகிற தசரதா, அவன் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்தவன் என்று நான் அறிவேன்.

19. अयं वित्तवश्य इति त्वम्; अयं भक्तवश्य इत्यहम् ।
   அயம்  வித்தவஸ்ய இதித்வம்.;  அயம்  பக்தவஸ்ய இத்யஹம்

 உன்னை பொறுத்தவரை தசரதா மற்ற அரசர்கள் போல ராமனும் செல்வத்திற்கு அடி பணிபவன்....ஆனால் உண்மை எதுவென்றால் ராமனை வெற்றிகொள்வது அவனது பக்தர்கள் அவனிடம் செலுத்தும் பக்தி ஒன்றே.

20. अयमश्नन् वृद्धिमुपगत इति त्वम्, 'अनश्नन् अन्यो अभिचाकशीति' इति श्रुतिप्रतिपादित इत्यहम् ।
யமஸ்ரன்  வ்ருத்திமுபகத்  இதித்வம்;  அனஸ்ரன்  அந்யோ  அபிசாகாஸீதி  இதை ஸ்ருதிப்ரதி பாதித
  இத்யஹம் 

20. பாவம் நீ தசரதா , ராமனை அவன் செய்யும் நல்வினை தீவினை கட்டுப்படுத்தும் என்று குழந்தை போல் நம்புகிறாய். என்னைப்போல் நீயும் புரிந்துகொள் அவனிடம் இவை நெருங்கமுடியாது.



மேலே  தொடர்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...