Saturday, May 30, 2020

LALITHA SAHASRANAMAM





மடியிலே தூங்கட்டுமா?      J K  SIVAN 

கேள்வி  1 :   பிரம்மஸ்ரீ  தாடப்பள்ளி  ராகவ நாராயண சாஸ்திரி என்கிற சந்தோளு  சாஸ்திரிகளை  - சக்தி உபாசகரை யாருக்காவது தெரியுமா?   நூற்றில் ஒருத்தருக்கு தெரிந்தால் அதிசயம். கேள்வி 2 :   சென்னைக்கு  அருகே  நெமிலி எனும் ஊரில்  (வேலூரில் இருந்து 55 கி. காஞ்சியிலிருந்து 25 கிமீ, அரக்கோணத்திலிருந்து 16 கிமீ.)  ஒரு அழகிய  சிறு  பாலா சுண்டுவிரல் உயரத்தில் தங்கத்தில்இருக்கிறாளே, அங்கே  சாக்லேட் நெய்வேத்யம் பண்ணி பிரசாதமாக தருவார்களே  அது   தெரியுமா? அவள் இருப்பது  பெரிய  ராஜகோபுர  ஆலயம் அல்ல. ஒரு வீட்டில்.  தரிசிக்காதவர்களே கொரோனா விடுதலை கிடைத்ததும் நெமிலிக்கு ஓடுங்கள்.
இப்போது  கேள்வி 1க்கும் 2க்கும் சம்பந்தமான விஷயம்.  அது தான்  தாடேப்பள்ளி ப்ரஹம்ம ஸ்ரீ  ராகவா நாராயண சாஸ்திரிகளுக்கு  பாலாம்பிகை திரிபுரசுந்தரி அனுக்ரஹம் செய்த லீலை:!!

சாஸ்திரிகள் ஒரு தெலுங்கர்.  நவராத்ரி ஸமயம் .  பூஜா கார்யங்கள்  விடுவிடுவென்று தயாராகிறது.  வீட்டில்  சாஸ்திரிகளோ  பாலாவின் விக்ரஹத்தை, அவள்  திவ்ய சுந்தர முகத்தை பார்த்துக்கொண்டு  நிர்விகல்ப ஸமாதி நிலையிலிருந்தார்!!  ஆயிரம் சிஷ்யர்கள் இருந்தாலும் ஸ்ரீ சக்ர பூஜை  சாஸ்திரிகள்  கையால் செய்தா தான் அவருக்கு திருப்தி. செய்தால் தான் அவருக்கு த்ருப்தி!! ஆவரண பூஜை  பண்ணும் நேரம் நெருங்கியது.  சாஸ்திரிகளோ  இன்னும் அசையவே இல்லை. எப்படி எழுப்பமுடியும்?  அவர் இந்த உலகத்திலேயேல் இல்லை.  நவராத்ரி, பூஜை எல்லாம் மறந்துவிட்டதோ?  சிஷ்யர்களுக்கு கவலை, தயக்கம்.வாசலில் ஏதோ சத்தம். சென்று பார்த்தால்   ஒரு  ஒன்பது வயசு பெண்  பச்சை பட்டு  பாவாடையோடு. அலங்காரத்தோடு நிற்கிறாள். 
''எவரம்மா நுவு?!*யாரம்மா நீ)
நா பேரு "ஞானப்ரஸன்னா..!! (என் பெரு  ஞானப்ரஸன்னா )  அந்தாருக்கு  "பாலா" னி செப்பத்தானே தெலிசிந்தி!!  --(பாலா என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும்)
மாயம்மா பேருக் கூட "லலிதா..!! அந்தருக்கி காமாக்ஷீ!! அட்லானே தெலுசு..!!  (எங்கம்மா  லலிதா  எல்லோருக்கும் காமாக்ஷி என்றால் தான் தெரியும்)
''என்ன வேணும் உனக்கு?''ஒண்ணும்  எனக்கு வேண்டாம்.  அம்மா  தாத்தாவுக்கு  ப்ரஸாதம்  தந்தா. கொடுக்க வந்தேன்'''' சரி கொடு!! நான் கொடுத்துடறேன்'' சிஷ்யர்  கை நீட்ட கொடுக்க மறுத்தாள் . ''இது தாத்தா கையிலதான் தரணும்!''
பெண் வீட்டுக்குள் விடுவிடுவென்று நுழைந்தது . சாஸ்திரிகளோ  கண்  மூடி தேவித்யானத்தில் இருந்தார்!!  ''தாத்தா..தாத்தா''தூங்கறியா !!   என்று  அங்குமிங்கு பார்த்தவள்  
'' ஓஹோ!!  தாத்தா நீ இன்னும் நவராத்ரி பூஜை பண்ணலயோ!! சரி வா இன்னைக்கு நாம பண்ணுவோம்!!  சாஸ்திரிகளின் கையை பிடித்து பூஜா மண்டம் வரை   இழுத்து வந்தாள் .சாஸ்திரிகளுக்கு த்யானம் கலைந்து சிறுமியின் பின்னாலே சென்று பூஜாமண்டபத்தில் அமர்ந்தார்.

''தாத்தா..!! நீ பூஜை பண்ணு.  நான் உனக்கு பரிஜாரகம் பண்றேன்''பூஜா புஷ்பங்களிலிருந்து "விசேஷார்க்யாம்ருதம்" சரி செய்வது வரை அத்தனை வேலையையும் அச்சிறுமி ஒருவளே செய்வதை பார்த்து  சிஷ்யர்கள்  தூர நின்று  ஆச்சர்யமாக பார்த்தார்கள்.  ப்ரதமாவரணம் துவங்கி  நவமாவரணம் வரை முடிந்தது.  அடுத்து கன்யா, ஸுவாஸிநீ பூஜை.
ஒரு மாமி அவள் பெண் குழந்தை -- சொல்லி இருந்தது.  இன்னும் வரவில்லையே?  நேரமாகிறதே.வாசலில் போய்  பார்த்து காத்திருந்தார்கள் சிஷ்யர்கள்.   அந்த பெண் பேசியது:
''நீங்க  தேடறது  எங்க அம்மா.   லலிதா மாமி என் அம்மா தான்!! நான் ஆத்துல பூஜை பண்ணிட்டு  வரேன் நீ போய் தாத்தாக்கு ஒத்தாசை பண்ணுனு என்னை அனுப்பினா!!

பூஜை தொடர்ந்தது.  அந்த சிறுமி பாலாவுக்கே விசேஷமாக கன்யா பூஜை நடந்தது!! சாஸ்திரிகளுக்கு பரமானந்தம். 
'' சரி தாத்தா..!! எல்லாம் நன்னா பண்ணிட்டீள் . நேக்கு தூக்கம் வர்றது. உங்க மடியில   படுத்துக்கட்டுமா?
'' வாடீ  என்  தங்கமே''.  அணைத்து மடியில் தூங்க வைத்து சாஸ்திரிகள்    தானும் தூங்கிபோனார்!! 
இன்னும் ஸுவாஸிநீ   பூஜை    ஆகலையே!! சிஷ்யர் ஒருவர் சொன்னபோது தான்  சாஸ்திரிகளுக்கு ப்ரக்ஞை வந்தது.  எங்கே  மடியில் படுத்திருந்த சிறுமி?    நல்லவேளை  அன்று சுவாசினி பூஜைக்கு அழைத்திருந்த  மாமியும்  பெண்ணும்  வந்தாயிற்று!!

''க்ஷமிக்கனும் மாமா..!! ஆத்து பூஜையில  கொஞ்சம் நாழியாயிடுத்து..!!   முடிஞ்ச கையோடு இதோ நானும் குழந்தையும் வந்துட்டோம். !! பூஜையை ஆரம்பிங்கோ ''
''ஏம்மா  நீ   தான் உன் கொழந்தையை அனுப்பினியே. அடடா  எவ்வளவு விவரம் தெரிந்த குழந்தை. மடமடவென்று  அவளே நேக்கு அத்தனை ஒத்தாசையும் பண்ணா .   கன்யா பூஜையும் வாங்கிண்டு என் மடிலதானே தூங்கினா.    எங்கே  அவோ?!
''நீங்க  என்ன சொல்றேள் மாமா?   நானும் என் பெண்ணும் இப்போ தானே வர்றோம்!! அவ இத்தனை நாழி என்னோட தான் இருந்தா?

 சாஸ்திரிகளுக்கு  பொறி தட்டியது...  அப்போ  இங்கே வந்து என்னோடு பூஜை பண்ணினது, கன்யா பூஜை வாங்கிண்டு என் மடிலே தூங்கினது...! அம்பா..!! என் தங்கமே..!! பாலா   த்ரிபுரஸுந்தரீ!!  அழகுபொம்மையே!!!  
கண்களில் ப்ரவாஹத்தோடு  பாலாம்பிகையின் விக்ரஹத்தை கட்டி  அணைத்துக்கொண்டார் சாஸ்திரிகள்!! 
ஸ்ரீ சாஸ்திரிகள்  1896 முதல் 1990 வரை ஜீவித்தவர்.  அவர் தஹன அக்னி யில் பாலா  வெளிப்பட்டாள்  என்று பிரசித்தம். ஒரு போட்டோ பார்த்தேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...