Friday, May 15, 2020

RASA NISHYANDHINI

ரஸ  நிஷ்யந்தினி  J K SIVAN

                                                                                  உள்ளங்கவர் கள்வன் 

ராமன்  பலே  திருடன்.  நமது மனதை  முழுதும்  கொள்ளை கொள்பவன். இதயத்தை அப்படியே திருடுபவன்.   ஆகவே  இன்று   ஒரு திருட்டு விஷயத்தை  பற்றி ஒரு  நிகழ்ச்சியோடு  துவங்குகிறேன்.
 பருத்தியூர்  கிருஷ்ணசாஸ்திரி  ராமனிடத்தில் தனது உயிர் உள்ளம், உடல் எண்ணம் இதயம் சகலத்தையும் பறிகொடுத்தவர்.  எனவே  அவர் ப்ரவசனங்கள், பிரசங்கங்கள்  பக்தர்களை ரசிகர்களை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை.   அவருக்கு  நிறைய பணமும் பொருளும் சன் மானமாக வழங்கினார்கள். அவற்றை  சாஸ்திரிகள் தமது  சொந்த  உபயோகத்துக்கு தொடவே இல்லை. ஏழை எளியவர்களுக்கு ப்ரோபாகரமாக  வாரி வழங்கினார்.  தான தர்மங்கள் நிறைய செய்தார். யார் வந்தாலும் எப்போது வந்தாலும்  அவர் வீட்டில் உணவு தயாராக இருக்கும்.  சொந்தங்கள், உறவினர், நண்பர்கள், வெளியூரார் வந்தவண்ணம் இருப்பார்கள். 

ஒருநாள் ஒரு தூரத்து உறவினர்  சாஸ்திரிகள் வீட்டு திண்ணையில் தன்னுடைய பையை தலைக்கு வைத்துக்கொண்டு நன்றாக தூங்கும்போது  ஒரு பையன் மெதுவாக வந்து அவரது பையை திருடிவிட்டான். அவர் அதற்குள் எழுந்துவிட்டார்.  பையனுக்கு  திருட்டு அனுபவம் போதவில்லை போல் இருக்கிறது.  ''திருடன் திருடன்'' என்று அவர் கத்தியவுடன்  அண்டை அசல் கூட்டம் கூடி பையன்  ஓட  ஓட துரத்தி பிடித்து அடித்தார்கள்.  வலி தாங்காமல் பையன் கத்தினான். அதற்குள்  சத்தம் கேட்டு சாஸ்திரிகள் வெளியே வந்து ''அவனை அடிக்காதேங்கோ'' என்று தடுத்து அவனை உள்ளே அழைத்து வயிறு நிரம்ப சாப்பாடு போட்டார். 

வயிற்று பசிக்காக திருடினேன் என்ற பையனுக்கு கையில் ஒரு பெரிய  வெள்ளி ரூபாய் நாணயம்..  (பல ஆயிரங்களுக்கு  சமம்  இப்போது).    பையனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. திருடிய வீட்டில் வஸ்திரம், உணவு, பணம் கொடுத்து அன்பாக பேசுவது அவனுக்கு  நினைத்து பார்க்க முடியாத ஆனந்தத்தை தந்தது.  சாஸ்திரிகளை வணங்கினான்     இனிமேல் திருட மாட்டேன் என்று சத்யம் செய்து கொடுத்தான்... 

உயிர்களிடத்தில் அன்பு  நேசம் பாசம்  தயை இரக்கம் வேண்டும் என்பது பாடம். ராமன் காக்கும் தெய்வம் அல்லவா?.
கொஞ்சமாவது,  நம்மிடமும்  அவன் குணத்தில் சிறிதாவது, இருக்க வேண்டாமா.   

இனி  ரஸ  நிஷ்யந்தினி  தொடர்வோம்:   11-15

'ரஸ நிஷ்யந்தினி'' என்ற ராமாவதார 100 காரணங்களை ''அஹம் வேத்மி'' என்ற வார்த்தையின் அர்த்தமாக விஸ்வாமித்ரர் தசரதனுக்கு சொல்வது போல் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதி இருக்கிறார்

 ரிஷி விஸ்வாமித்ரர் தசரதனிடம்  ராமன் யாரு என்று தெரிய  நூறு சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார். ஐந்திலிருந்து ஆறாவதாக இனி ஆற அமர கேட்போம்.

 11. एतस्मै कुलशीलादिभिरुपेता काचिदन्वेष्टव्या कन्येति भवान्; एनमनन्यसाधारणगुणा काचित्   अयोनिजा दिव्यकन्या अन्विष्यति इत्यहम् ॥

யேதஸ்மை குலசிலாதிபி ரூபேதா  காசிதன்வேஷ்டவ்யா கன்யேதி பவான்:  ஏனமனன்ய  சாதாரண குணா காசித்  அயோனிஜா திவ்யகன்யா அன்விஷ்யதி  இத்யஹம்    
 தசரதா , உன் மனதை  நான் அறிவேன். உன் மகன் ராமனுக்கு  ஒரு நல்ல குடும்ப பெண்ணாக , உயர்ந்த உன்னத  குணங்கள் உள்ளவளாக தேடி பிடித்து கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுகிறாய்.  ஒரு தேவலோக பேரழகி, தெய்வீகமானவள், சகல சௌபாக் கியங்கள், கல்யாண குணங்களும் கொண்டவள் , எந்த உடலிலும் பிறக்காத  தேவதை, தெய்வம், அவன் மனைவியாக  காத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

12. एतमस्मद्राज्य प्रापयिष्यामाति त्वम् एतद। दत्तमहाराज्या ब्रह्मेन्द्रादय इत्यहम् ।

ஏத மஸ்மத்ராஜ்யம்  ப்ராபயிஷ்யாமிதி த்வம்; ஏதத் தத்த மஹாராஜ்யா பிரம்மேந்திராத்ய இத்யஹம் :

  2. எனது  இந்த  அயோத்யா   ராஜ்யத்தை என் மகன் ராமனுக்கு அளித்து அவனை மன்னனாக முடிசூட்டுவேன் என்கிறாயே?  உனக்கு ஒரு உண்மை  தெரியுமா?   பிரம்மன் இந்திராதி தேவர்கள் எல்லாருக்குமே  அவர்களது ராஜ்யத்தை அவர்களுக்கு அளித்ததே  இந்த ராமன் தான்.

13. एतेन देवानुद्दिश्य यज्ञाः करणीयाः इति त्वम् एनमुद्दिश्य 'यज्ञं यज्ञेनायजन्त देवाः' इत्यहम्।

ஏதேன தேவானுதிஷ்ய  யஞா :  கரணியா:   இதித்வம்   ஏனமுதிஷ்ய  யஞம்  யக்னேநாயஜந்த  தேவா:இத்யஹம் 
தசரதா , உன் மனதில் ஓடும் எண்ணம் என்ன தெரியுமா? என் ராமனை நிறைய  யாக யஞங்கள் செய்ய வைத்து  தெய்வங்களை, தேவர்களை  திருப்திப்படுத்தி  சக்தி பெறச்செய்யவேண்டும்  என்பதே.  உண்மை என்ன தெரியுமா உனக்கு?  சகல தெய்வங்களும், தேவதைகளும்  மனதில்  நாராயணனாகிய ராமனை சங்கல்பித்து  அவன் மீதுள்ள  பக்தியால்  யாக யஞங்கள் புரிந்து  உய்யுகின்றார்கள். 

14. एतस्मै दिव्यज्ञानं देयमिति त्वम् एषः दिव्य ज्ञानेनापि ज्ञातुमशक्य इत्यह
म्
 
யேதஸ்மை திவ்யஞானம் தேயமிதித்வ  யேஷ:  திவ்ய ஞானேனாபி ஞாது மஷக்ய  இத்யஹம் 

என்  ராமன்  எல்லா  ஞானங்களும் பெறவேண்டும் என்று நீ  ஆசைப்படுகிறாய். தசரதா ,  சகல சாஸ்திரங்கள், வேதங்களால் அறியப்பட முடியாதவன் பரமாத்மாவான  ஸ்ரீ  ராமன். நல்ல ஆச்சார்யர்களை கொண்டு உன் மகன் ராமனுக்கு  தெய்வீகமான ஞானம் பெற வைக்கவேண்டும் என்று நீ நினைக்கிறாய். உன் ராமன்  ஞானிகளால்  உணரமுடியாத,  வேத  சாஸ்த்ர ஞானங்களை எல்லாம் கடந்தவன் என்பதை  நான் அறிவேன்.

15. अयं ज्ञातेति त्वम् अयं ज्ञेय इत्यहम् ।
அயம் ஞாதேதி த்வம்  அயம்  க்னேய இத்யஹம் .
15. தசரதா, ராமன் கல்வி கற்றதாக சொல்கிறாயே எனக்கு தெரியும் சகல சாஸ்திரங்கள் வேதங்கள் ஞானங்கள் அனைத்திற்கும் அவனே ஆதாரம் உன் மகன் ராமனே என்று.  நீ நினைப்பது போல் ராமன்  கற்றுக்கொள்ளவேண்டியவன் அல்ல. அவனிடமிருந்து சகல ஞானமும்  வெளிப்ப டுகிறது. அறியப்படவேண்டியவன் அவனே  


ஸ்ரீ பருத்தியூர்  கிருஷ்ண சாஸ்திரிகள் இதெல்லாம் நேரே  ஆனந்தமயமாக  ராமனுடன் இரண்டறக்கலந்து   இதை ராமாயண ப்ரவாஹமாக  பிரசங்கம் செய்யும்போது  கேட்டவர்கள் அல்லவோ  உண்மையிலே பாக்கியசாலிகள்!!



விஸ்வாமித்ரர் தொடர்வதை கேட்போம்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...