Friday, May 29, 2020

DESIRE




பற்று பற்றி எரியட்டுமே  J K SIVAN
மிதிலையில்  எல்லோராலும் போற்றப்பட்ட  அரசன்  ஜனகன் விசித்ரமானவன். அவன் அரசன் என்ற ஆடையில்  பதவியில்,  அரசவையை அலங்காரத்தை ஒரு பழுத்த துறவி, ஞானி.
அரசனும் ஆண்டியாவான் என்ற வார்த்தை நமக்கு தெரியும்.  ஆனால் ஆண்டி அரசனாக ஆண்ட கதை ஜனகன் கதை.
அரசகுமாரனாக பிறந்து  வெறுத்து  துறவியானவன்  கௌதம புத்தன்.  ஆனால்  அரசன் என்ற கடமையை புரிந்து கொண்டே  ஆண்டியாக வாழ்ந்தவன்  ஜனகன் ஒருவனே.  உலக வாழ்வில் இருந்து கொண்டே தாமரை இலை  தண்ணீராக  இறைவனோடு ஒன்றியவன்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் படித்தவர்கள் அவர் அடிக்கடி '' எல்லோராலும் ஜனகனாக முடியாது. கோடியில் ஒருவன் அவன்.  உலக வாழ்வின் சகல சம்பத்து களுடனும் இருந்து அதே சமயம் அதில் எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்த ஒருவனைக் காட்டுங் கள் பார்க்கலாம்''  என்பார்.
ஜனகனுக்கு ஒரு குரு உண்டு.  அவரை அடிக்கடி சென்று பார்த்து அறிவுரை பெறுவான் ஜனகன். இப்படி வாழ்ந்த ஜனகன் மேல் பொறாமை கொண்ட ஜீவன்களும் உண்டு. அது தானே உலகம்.
ஒருநாள்  ஜனகன் தனது குருவை க்கான  காட்டுக்குச்  சென்றபோது யாரோ விஷமி அவனது மாளிகைக்கு தீ வைத்து விட்டான்.  நெருப்பு ஜிவாலை விட்டு ஜிகு ஜிகு என்று கட்டுக்கடங்காமல் தீயின் நாக்குகள்  எல்லாவற்றையும் கபளீகரம் பண்ணுகிறது.
எல்லோரும்  எதெல்லாம்  காப்பாற்றமுடியுமோ அதெல்லாம் எடுத்துக்கொண்டு  ஓடினார் கள்.ஜனகனிடம் ஓடிவந்து  விஷயம் சொன் னார்கள்.
ஜனகன் குருவிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந் தான். காதில் விழுந்த விஷயம் அவனை பாதிக் கவில்லை.
குரு கவனித்தார்.
''ஜனகா,  என்ன இது, உன் அரண்மனை மாளிகை  எண்ணற்ற  விலைமதிப்பற்ற  பொருள்களோடு பற்றி எரிகிறது என்கிறார்கள். நீ  அசைவற்று பேசாமல் இருக்கிறாயே? உன் காதில் சேதி விழவில்லையா?
''குருநாதா, எனக்கு எது தேவையோ அதை பெறத்தானே  உங்களிடம் வருகிறேன்.  எனக்கு தேவையற்றவை மீது எனக்கு பற்று ஏது? பற்று  பற்றி எரியட்டுமே!''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...