Saturday, May 30, 2020

RASANISHYANDHINI




ரஸ நிஷ்யந்தினி    J K  SIVAN  
                                                                                                 ராமனைத் தெரியுமா?

'' ரஸ நிஷ்யந்தினி''    (நீரூற்றின் ரஸமாக) ராமாயணத்தில் ஒரு அற்புத பகுதியை ஸ்ருஷ்டித்தவர் பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண ஸாஸ்த்ரிகள்.   100 ஸமஸ்க்ரித  ஸ்லோகங்களை இயற்றி தானே  வாலமீகியாக மாறி, ராமன் யார் என்று விளக்குகிறார்.  இதுவரை 70 ஸ்லோகங்களை ரசித்தோம்.     தொடரை  பார்க்காதவர்கள் பிடிக்காதவர்களுக்கு  ஒரு சுருக்கமான  விளக்கம்: 

ரிஷி விஸ்வாமித்ரர் நேராக அயோத்திக்கு புறப்பட்டு வந்து அரண்மனையில் தசரதனை காண்கிறார். திடு திப்பென்று  ''உன் மகன் ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு, அங்கே நான் ஒரு யாகம் செய்யப் போகிறேன், அதை தடுத்து இடையூறு செய்யும் ராக்ஷஸர்களை அருகே வர விடாமல் தடுத்து காவல் காத்து பாதுகாக்க உன் மகன் தேவை'' என்கிறார்.  பல வருஷங்கள் வேண்டி, புத்ர காமேஷ்டி யாகம் செய்து தனது வாரிசாக ராமனைப் பெற்ற  தசரதன், திடுக்கிடுகிறான். இது ஒரு பேரிடி.  பன்னிரண்டு வயது பாலகனை கொடிய ராக்ஷஸர்களை எதிர்க்க கேட்கிறாரே இந்த ரிஷி, என்ன அக்கிரமம் என்று கூட அவன் மனதில் தோன்றியிருந்தால் தப்பில்லை.  எப்படி அவரது  வேண்டுகோளை நிராகரிப்பது? கோபக்கார   சாபமிடும் முனிவர். ராஜ ரிஷி.  ''நான் வருகிறேன் எனது சேனைகளை அனுப்புகிறேன்'' என்று தசரதன் சமாளிக்கும் போது  நிலைமையை புரிந்து கொண்ட வசிஷ்டர் ''தசரதா,  ராமனை முனிவர் விஸ்வாமித்ரரோடு அனுப்பு, அவனுக்கு ஒரு ஆபத்தும் வராது'' என்று பரிந்துரைக்கிறார்.  அப்போது  விஸ்வாமித்ரரும்  தசரதனின் மனநிலையை புரிந்து கொண்டு

''தசரதா,  நீ நினைக்கின்றபடி  உன் மகன் ராமன் சாதாரண  ராஜகுமாரன் அல்ல'' என்று மஹாவிஷ்ணு அவதாரமான ராமனின் பராக்ரமம், நேர்மை, நீதி, கம்பீரம், பலம், மஹிமை, சக்தி எல்லாவற்றையும்  100 காரணங்களாக  காட்டுகிறதை தான் நாம்  ரஸ நிஷ்யந்தினி  என்று  ஸ்ரீ  கிருஷ்ண சாஸ்திரிகள்  விஸ்வமாமித்ரராக மாறி உபதேசிப்பதை படித்துக் கொண்டு வருகிறோம்.

இனி விஸ்வாமித்ரர் தசரதனுக்கு, அவன் மூலம், அருகில் நிற்கும் ரிஷிகள், மந்திரி பிரதானிகள் அனைவ ருக்கும், புஸ்தக ரூபத்தில் ஏன் நமக்கும் கூடத்தான்,  ராமனைப்பற்றி  பருத்தியூர் பெரியவா  உணர்த்துவதை  அறிந்து கொள்வோம்:  

இன்னும் அற்புதமாக இப்படியெல்லாம்   பருத்தியூர்  ஸ்ரீ கிருஷ்ண ஸாஸ்த்ரிகள்  சொல்லிக்கொண்டு போவதை   நூறு வருஷங்களுக்கு முன்பு  நேரே தமது செவியால் கேட்டு அனுபவித்த அத்தனை மஹநீயர்களுக்கும் வந்தனமுலு.

71 . अस्यायं मूर्धा इमे श्रोत्रे इयं वाक् अयं प्राणःइदं हृदयम् । अतोऽयमस्मदादिवत् कश्चिदिति त्वम्। 'अग्निर्मूर्धा चक्षुषी चन्द्रसूर्यौ दिशः श्रोत्रे वाग्विवृताश्च वेदाः; वायुः प्राणो हृदयं विश्वम्। अस्य पद्भ्यां पृथिवी ह्येष सर्वभूतान्तरात्मा'इत्यहम् ।  

அஸ்யாயம் மூர்தா  இமே ஸ்ரோத்ரே  இயம்  வாக்  ப்ராண:  இதம் ஹ்ருதயம்.    அதோ யமஸ்ம தாதிவத் கிஞ்சிதிதி  த்வம் ;   அக்னிமூர்தா   சக்ஷுஷி சந்திரஸூர்யௌ  திஸ :  ஸ்ரோத்ரே  வாக்வி விர்தாஞ்ச  வேதா:  வாயு; பிராணோ  ஹ்ருதயம் விஸ்வம்  

 ''இதோ பார்  தசரதா , ஒரு தலை, ரெண்டு கைகள், கால்கள், உடம்பு, கண் மூக்கு காது, பேச்சு, ஸ்வாசம், இதயம் இருப்பதால் ராமன்  நம்மைப்போல் ஆகிவிடுவானா?  அவன்  சிரசு அக்னி,  சூரிய சந்திரர்கள் அவன் இரு கண்கள்,  எண்  திசையும் அவன் காதுகள், அவன் பேச்சு தான் வேதம், வாயு அவன்  சுவாசம், பூமி அவன் இதயம், எல்லா ஜீவன்களிலும் உறைபவனப்பா  ஸ்ரீ ராமன். தெரிந்துகொள்.  

72.   अनेन ऋचो यजूंषि सामानि च वेदास्साङ्गाःअधीताः; विवाहानन्तरं दीक्षितेन भवितव्यम्। यज्ञाः क्रतवश्वानुष्ठातव्याः; दक्षिणाश्च याजकेभ्यो देया इति त्वम्, 'तस्मादृचः साम यजूंषि दीक्षा यज्ञाश्च सर्वे क्रतवो दक्षिणाश्च संवत्सरश्च यजमानश्च लोकाः सोमो यत्र पवते यंत्र सूर्यः' इत्यहम् ।

அநேன  ஸ்ருசோ  யஜும்ஷி  ஸாமானி ச  வேதாசாங்க ; அதிதா;  விவாஹனந்தரம்  தீக்ஷிதேன பவிதவ்யம்; யஞா; க்ருதவஸ்வானுஷ்டாதவ்யா; தக்ஷிணாஸ்ச யாஜகேப்யோ தீயா இதி த்வம் ; அதஸ்மாத்வ ; சாம யஜுஷி  தீக்ஷா  யஞாஸ்ச சர்வேம் க்ருதவோ  தக்ஷிணாஸ்ச  ஸம்வஸ்தரஸ்ச  யஜமானஸ்ச லோகா;  சோமோ  பத்ர  பவதே  பத்ரம் சூர்யா: இத்யஹம் 

தசரதா ,உன்  பிள்ளை  ராமனுக்கு வேதங்கள் பாடமாகிவிட்டது.  இனி கல்யாணம் பண்ணவேண்டும். அவன் தீக்ஷை  பெற்றுக் கொண்டு  யாகங்கள் பண்ணவேண்டும்,  தேவர்களை வணங்கி வேத பிராமணர்களுக்கு  நிறைய தக்ஷிணை தரவேண்டும்''  என்று   நினைக்கிறாய். நீ அவனை பற்றி அறிந்து கொண்டது அவ்வளவு தான். எனக்கு அவனைத்  தெரியும். அவனிடம் இருந்துதான்   ரிக், யஜுர், சாம வேதங்களும்,  தீக்ஷைகள்,  யாகங்கள், காலம், வருஷம், யாக வேத பிராமணர்கள்,  எல்லா உலகங்கள், சூரிய சந்திரர்கள்  எல்லாமே  தோன்றியது என்று நீ அறிவாயா?  

73. अयं बालः, त्वया साकं प्रेषितश्चेत् शिशत्वेन भयानभिज्ञः समुद्रे पतेत् गिरिभ्यो निपतेत इति त्वम्, 'अतः समुद्रा गिरयश्च सर्वे अस्मात् स्यन्दन्ते सिन्धवः सर्वरूपाः, अतश्च सर्वा ओषधयो रसश्च' इत्यहम् ।

அயம் பால : த்வயா சாகம் ப்ரெஷிதஸ்சேத்  சிசத்வேன  பயானபிஞ;  ஸமுத்ரே  பதேத்  கிரிப்யோ நியதேத  இதித்வம் ;  அத  சமுத்திரா கிரயஸ்ச  சர்வே அஸ்மாத்  ஸ் யந்தந்தி  சிந்தவ; சர்வ ரூபா; அதஸ்ச  சர்வா ஓஷதயோ ரஸஸ்ச இத்யஹம்   

 ''தசரதா, உன் மனதில் ஓடும் எண்ணங்கள்  எனக்கு புரிகிறது: அடாடா,   இந்த  ரிஷி என் சிறிய பாலகன் 12 வயதே ஆன ராமனை காட்டுக்கு அனுப்ப  கேட்கிறாரே. எங்காவது அவன் நதியில் கடலில் விழுந்துவிட்டால்? மலையிலிருந்து  கால் தடுக்கி  உருண்டு விழுந்தால்? ... இப்படி எல்லாம் பயம் உன்னை ஆட் கொள்கிறது.  நீ பயப்படும் அந்த மலைகள், சமுத்திரம், நதிகள், காடுகள், விலங்குகள், எல்லாமே  அவனிடமிருந்து வந்தவை.  அவன் உருவாக்கியவை.  பயம் என்பது நெருங்க முடியா தவன் ராமன்''

74 सूर्यणायं प्रकाश्यत इति त्वमः अनेन 'सूर्यः तपति तेजसेद्धः' इत्यहम् ।

சூர்யணாயம் ப்ரகாஸஸ்யத  இதித்வம் ;  அநேந  சூர்யா;  தபதி  தேஜஸேத்த ; இத்யஹம் ; 

சூரிய ஒளியில் என் மகன் ராமன் முகம் ஜொலிக்கிறதே  என்று மகிழ்கிறாயே தசரதா ,  இதைக் கேள்,  சூரியன் சந்திரன் எல்லாமே  ஒளியைப் பெற்று பிரகாசிப்பது அவனிட மிருந்து தான்.  

75 एषः रजन्यां सुप्तो भवेदिति त्वम्; ‘य एष सुप्तेषु जागर्ति कामं कामं पुरुषो निर्मिमाणः' इत्यहम् ।

யேஷ; ரஜன்யாம் பவேதிதி  த்வம்;  ய  ஏஷ  சுப்தேஷு  ஜகந்தீ காமம் காமம் புருஷோ நிர்மிமாண: இத்யஹம்

' இரவாகி விட்டது. குழந்தை ராமன் படுக்கைக்கு சென்று தூங்கவேண்டும்  என்று உனக்கு கவலை. தசரதா, பிரபஞ்சத்தில் எல்லாமே  உறங்கும்போதும் விழித்திருப்பவன் ஸ்ரீ ராமன்,  அனைத்துக்கும்  அவன் அல்லவா  பாதுகாவலன்.    எல்லாவற்றுக்கும் சாக்ஷியானவன். இதை நீ அறியாய்.  நான் அறிவேன். ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...