Monday, May 4, 2020

JAMUNA KINARE



                யமுனைக்கரையினிலே....J K  SIVAN 

நமது தென்னகத்தில்  நாடோடி பாடல்கள்  நிறைய உண்டு. பல காணாமல் போனாலும்  இருப்பவை மனதுக்கு தெம்பூட்டுபவை.  அவற்றிற்கென்று சில  ராகங்கள்  அபூர்வமாக  அமைவைதும் தெய்வ சங்கல்பம் தான்.  

வடக்கே நிறையவே  உண்டு.  பல  இன்னும்  பாடப்பட்டு  எண்ணற்றோர்  அனுபவித்து வருகிறார்கள். தெற்கே அவை  ஒரு சிலவற்றை தவிர  செல்லுபடியாகவில்லை.  கிருஷ்ணன் மேலான பாடல்கள் இந்த ராகத்தில் நிறையவே உண்டு.   மால்வா  எனும் இடத்தில்    இப்படி ஒரு சில பாடல்கள் பிரபலம்.   சூர்தாஸ்  போன்ற  அருள் கவிகள் எத்தனையோ பேர்.   அவர்களில் ஒருவர்  பாடின பாடல் போல   இருக்கிறது   இது.  யமுனைக் கரை கண்ணன் குழலூதும் காட்சி பற்றிய  ஒரு பாடல்.  வடக்கத்தி மெட்டு.  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா இந்த பாடலை  கேரளாவில் ஸ்வாதி திருநாள் என்ற  சினிமாவில் பாடி இருக்கிறார் . தவிர  அநேக  கச்சேரிகளில்  இது  ஒரு  ரசிகர் விருந்தான  பாடலாகும்.   எனக்கு ரெண்டு நாள் முன்பு தான் இந்த  பாடலை ஒருவர்  அனுப்பி கேளுங்கள்  பாடிப் பாருங்கள் என்றார்.  ரெண்டுமே  செய்திருக்கிறேன்.  நான்  பாடியதின் யூ ட்யூப் லிங்க் : கிளிக் செய்ய: https://youtu.be/lLxSRAYat2Q​    ​. கேட்டு  விட்டு சொல்லுங்கள். நான் பாடியதே  பிடித்திருந்தால் நிச்சயம்   BMK ஸார்  பாடியது லக்ஷம்  மடங்கு நன்றாகவே இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். 

என்ன அழகுடி   அவன்...   அந்த கதம்ப மரத்தின் மேல் சாய்ந்து ஒரு காலை பின்னி  நிற்பது. சுற்றிலும் கொடிகளும் செடிகளும் மலர்களோடு அவன் மேல்  பூக்களை வாரி  சூட்டுகின்றனவே.   அவன் தலையில் அணிந்த  ,மலர் கிரீடத்தில், பார்த்தாயா, எவ்வளவு அழகாக பெரிய  ஒரு மயிலிறகு.  கழுத்து நிறைய  மலர் மாலைகள் ,  ஆஹா இரு காதுகளிலும்  மகர, மீன் வடிவில் தொங்கும் குண்டலங்கள்  அவன் தலையசைப்புக்கு ஏற்ப  நடனமாடுகிறதே,   உடம்பில் பீதாம்பர வஸ்திரம். இடுப்பில், கைகளை, கால்களில்  ஆபரணங்கள்.

ஓ  பத்மநாபா, நீ  ஏழைக்கருளும்  வள்ளல் அல்லவா? தரித்ரர்களுக்கு கருணை காட்டும் நாராயணன்அல்லவா? என் துன்பங்களையும் கொஞ்சம்  விலக்கேன்.  என் இதயத்தில் உறையும்  தெய்வமே, கோபிநாதா, கிரிதர் கோபாலா அருள் புரிவாய்.

Jamuna kinare Pyaare
Kadam thar Mohana
Baansuri bhajave
Baansuri bhajave
Sakhee kunj bhavan main   (jamuna)   (

More pinch gale mala
Makaraakrt kundal
Makutadika bhushana
Shoba deta tana main  (jamuna)

Padmanaabha deen bandho   4
Mero paap haaro
Padmanaabha deen bandho
Mero paap haaro
Prabhu Gopinaath Giridhara  4 
Raajo mere man main
Sakhee kunj bhavan main  (jamuna)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...