Tuesday, May 26, 2020

RASA NISHYANDHINI

\ரஸ நிஷ்யந்தினி J K SIVAN
நீ நினைப்பது போல் அல்ல

சிலர் என்றும் உரியர் பிறர்க்கு. வள்ளுவர் சரியாக சுருக்கமாக சொல்லி இருக்கிறார். அவர்களில் ஒருவர் பருத்தியூர் பெரியவா. நாடு முழுதும் அவரது ரஸ நிஷ்யந்தினி ஒலித்திருக்கிறது. எண்ணற்றோர் அவரது பாண்டித்யத்தை ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரம்மஸ்ரீ பி. சுந்தர் குமார் அவர்களது ராமாயண தொடர் ப்ரவசனத்தில் ரஸ நிஷ்யந்தினியை அற்புதமாக ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் வடித்த அற்புத காவியத்தை ஸ்லோகத்தோடு விளக்கி சொன்னார். நாம் அனுபவிப்பது தசரதன் அரண்மனையில் ராமனை என்னோடு கானகம் அனுப்பு என்று மகரிஷி விஸ்வாமித்ரர் கேட்கும்போது தயங்கிய தசரதனுக்கு ராமன் சாதாரண மானுட சிறுவனல்ல என்று நூறு உதாரணங்களோடு விளக்கிய காட்சி. ஒரு சிறு கடுகு, எள், கீழே விழுந்தால் கூட ''டமால்'' என்று சப்தம் கேட்கும் அளவுக்கு அயோத்தியில் தசரதன் அரண்மனை நிசப்தமாக இருந்தது. அங்கிருந்த அனைவரின் ஸ்வாசம் ஒன்று தான் இயங்கியது. எல்லோருமே எங்கும் சிலைகளாக நின்று கொண்டிருந்தார்கள். ''அடடா நாம் காணும் இந்த சிறுவன் ராமன் இப்படிப்பட்டவனா, நாம் எப்படி எல்லாம் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறோம்'' என்ற திகைப்பு எல்லா மனத்திலும் வியாபித்திருக்க விஸ்வாமித்ரர் ராமனின் உண்மை ஸ்வரூபத்தை மேலும் விளக்குகிறார். 56 முதல் 60 வரையான ஐந்து ஸ்லோகங்களை லென்று ரசிப்போம்: 56. अयं सुलभ इति त्वम्, 'न वेदयज्ञाध्ययनै; न दानैर्न च क्रियाभिः न तपोभिरुग्रैः, एवंरूपः शक्य अयं नृलोके लब्धं त्वदन्येन रघुप्रवीर' इत्यहम् ।
அயம் சுலப இதித்வம்; ந வேதயஞாத்யயனை; ந தானைர்ண ச க்ரியாபி: ந தபோபிருக்ரை ; ஏவம் ரூப: ஸக்ய அயம் ந்ருலோகே லப்தம் த்வதன்யேன ரகுப்ரவீர இத்யஹம். 56. ''இங்கே வா ராமா '' என்று நீ கூப்பிட்டவுடன் எதிரில் வந்து நிற்பவன், எளிதில் கிடைப்பவன் ராமன் என்று நீ நம்புகிறாயே தசரதா, அது அறியாமை. எவ்வளவு வேதங்கள் படித்தாலும், யாகங்கள் புரிந்தாலும், தான தர்மங்கள் செய்தாலும், கடும் விரதம் இருந்தாலும் கிடைக்காதவனை ரகுகுல திலகமாக, மகனாக நீ பெற்றிருக்கிறாய். சாதாரண ராஜகுமாரனா அவன்? பல ஜென்மங்களில் நீ செய்த புண்ய பலனாக உன் மகனாக தோன்றியவன். 57. परस्य ब्रह्मणः एकपादविभूतौ प्रकृतिमण्डले अस्मदीयं राष्ट्रमस्य विषय इति त्वमः 'पादोऽस्य विश्वाभूतानि त्रिपादस्यामृतं दिवि' इत्यहम् । பரஸ்ய பிரம்மண; ஏகபாத விபூதெள ப்ரக்ருதிமண்டலே அஸ்மதீயம் ராஷ்ட்ரமஸ்ய விஷய இதித்வம்; பாதோஸ்ய விஸ்வாபூதானி த்ரிபதஸ்யாஅம்ருதம் தீவி இத்யஹம். 57. தசரதா , உன் சுண்டைக்காய் கோசல ராஜ்ஜியம் ஒன்றுக்கு மட்டுமா ராமன் அரசன் என்று நினைக்கிறாய் ! அது இந்த அகிலபுவனத்தின் அளவில் கண்ணுக்கே தெரியாத ஒரு பாகம். ராமன் சர்வ லோக நாயகன். அவனது உருவில் ஒரு கால் பாகமே இந்த புவனம் அனைத்தும், மற்ற முக்கால் பாகம் அதெல்லாம் கடந்தது. இது எனக்கு நன்றாக தெரியும். 58. अयमध्यापकैः प्रवचनादिना शिष्यत्वेन वृत इति त्वम्, 'नायमात्मा प्रवचनेन लभ्यो, न मेधया न बहुना श्रुतेन यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनुं स्वाम्' इत्यहम् । அயமத்யாபகை: ப்ரவசனாதினா சிஷ்யத்தவென வ்ருத இதித்வம்; நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ, ந மேதய ந பஹுனா ஸ்ருதேன யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனும் ஸ்வாம் இத்யஹம். 58. தசரதா , என் மகன் ராமனுக்கு சிறந்த ஆச்சார்யர்களை நியமித்து கல்வி கற்றுக் கொடுத்தேன் என்று கனவு காண்கிறாயா நீ ? பரமாத்மாவை வெறும் ப்ரசங்கங்களை , ப்ரவசனங்களை கேட்பதாலோ அறியமுடியாது. புத்தி கூர்மை போதாது. கட்டு கட்டாக புத்தகங்களை மனப்பாடம் பண்ணுவதால் அவனை அடைய முடியாது. மனம் குவிந்து ஸ்ரத்தையாக தியானிப்பவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் ராமன். 59. . एनं रजःप्रकृतयः तमःप्रकृतयश्च क्षत्रियकुमाराः मित्रत्वेन प्राप्नुवन्तीति त्वम्। 'नाविरतो दुश्चरितानाशान्तो नासमाहितः नाशान्तमानसो वापि प्रज्ञानेनैनमाप्नुयात्' इत्यहम् ।
யேனம் ராஜா: ப்ரக்ருதய ; தம: ப்ரக்ருதயஸ்ச க்ஷத்ரியகுமாரா; மித்ரவேன ப்ராப்ருவந்திதி த்வம் ; நாவிரதோ துஸ்சரிதானா சாந்தோ நாசமாஹித; நாசாந்தமானஸோ வாபி ப்ரஞ்ஞானேனைனமாப்ருயாத் இத்யஹம் :
59. இதைக் கேள் தசரதா : மூன்று குணங்களில் ரஜோ குணம் தமோ குணம் கொண்டவர்களே அதிகம், உன் கண்ணில் படும் அப்படிப்பட்ட ராஜ குமாரர்கள் சிலர் தான் உன் மகன் ராமனின் நண்பர்கள் என்று நீ நினைக்கிறாய். சரியான வேடிக்கை இது.
ராமனை இப்படிப்பட்டவர்கள் அணுக முடியுமா? தீய செயல்களில் ஈடுபடுபவர்கள், அமைதி இல்லாத மனம் கொண்டவர்கள் , சஞ்சல மனத்தினர்கள் ராமனின் நிழலையாவது நெருங்கமுடியுமா?
ஆச்சார்யனிடம் முறையாக கற்றவர்கள், தூய மனம் கொண்ட சிறந்த பக்தர்கள் மட்டுமே ராமன் யார் என்று உணர்வார்கள், அவனது உண்மை ஸ்வரூபத்தை அறிவார்கள். அவனை நெருங்குவார்கள், அடைவார்கள். புரிகிறதா உனக்கு ? 60. अस्मत्पुत्र इति वचनेनायं ग्राह्य इति त्वम् अहं ब्रह्मास्मीति वचनेन ग्राह्योऽयमित्यहम् । அஸ்மத்புத்ர இதை வசனேநாயம் கிராஹ்ம இதித்வம் ; அஹம் ப்ரஹ்மாஸ்மீதி வசனேன க்ராஹ்மோஸ்யமித்யஹம் 'தசரதா, ராமன் இதோ என்னெதிரில் நிற்கும் என் மகன் '' -- என்று அடையாளம் காட்டுகிறாயே; இப்படி எளிதிலா அவனை புரிந்து கொள்ளமுடியும்?
தசரதா, முற்றும் உணர்ந்த ஞானிகள் எப்படி ராமனை அடைபவர்கள் தெரியுமா உனக்கு? ''நான் தான் அந்த உன்னத பரமாத்மா'' என்ற உயர்ந்த இரண்டறக்கலந்த நிலை அடைந்த பிறகே தான் ராமன் உள்ளே தெரிவான். இன்னும் 40 உதாரணங்களை மேற்கொண்டு ரசிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...