Wednesday, June 30, 2021

GEETHANJALI

 


கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் 


77   நீ போதுமடா சாமி.


77.  I know thee as my God and stand apart, 
I do not know thee as my own and come closer.
I know thee as my father and bow before thy feet,

I do not grasp thy hand as my friend’s.
I stand not where thou comest down and ownest thyself as mine,
there to clasp thee to my heart and take thee as my comrade.
Thou art the Brother amongst my brothers, but I heed them not,
I divide not my earnings with them, thus sharing my all with thee.
In pleasure and in pain I stand not by the side of men, and thus stand by thee.
I shrink to give up my life, and thus do not plunge into the great waters of life.


நம் ஊர்  ராஜா  என்று தெரியும், நல்லவன் என்றும் தெரியும்  அருகே சென்று தோளில்  கை  போட்டுக்கொள்ள முடியுமா  தூர   நின்று கைகட்டி தான் பேச முடியும்..  கிருஷ்ணா,  நீ என் தெய்வமடா.  அதனால் தான்  நான் தூரமாகப் போய் கை  கட்டி வாய் பொத்தி நிற்கிறேன்.  

 நீ என்னுடையவன் என்னுள்ளேயே  இருப்பவன் என்று அறிந்துகொள்ளவில்லையே.  அதனால் தான் தூர நிற்கிறேனோ?  நீ வேறு நான் வேறு என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறதோ?  நீ எட்டாதவன் நான் கிட்டாதவன் என்ற எண்ணமோ ?.

நீ என் அப்பா என்று   உணர்ந்த போது அப்படியே  உன் காலில் விழுந்தேன் பார்த்தாயா?   உன்னைத் தோழனாக  ஏற்றுக்  கொண்டு  உன் கையைத் தொட்டு பிடிக்க மனம் கூசுகிறது. அவ்வளவு பக்தி, பயம் மரியாதை உன்னிடம். 

நீ எவ்வளவு தான்  கிட்டே கிட்டே வந்து என்னை மார்போடு அணைத்து  என்னை உன் நெருங்கிய நண்பனாக விரும்பினாலும்  நான் என்னவோ  ஏன்  இப்படி  தூரமாகவே ஓடுகிறேன்? .

கிருஷ்ணா ,  நினைத்துப் பார்க்கிறேன்  நீ என்னோடு உடன் பிறந்தவனோ.  என் அண்ணாக்களில்  ஒருவனோ?.   அவர்களோடு என் சொத்தை பங்கு போட்டுக் கொள்ளாமல் உனக்கு அர்ப்பணித்தேன்.  இன்பத்திலும் துன்பத்திலும் நான்  எவரோடும் ஒட்டவில்லை, சேரவில்லை,  நாடவில்லை.  நீ ஒருவனே போதும் என்று  நம்பிவிட்டேன்.

என் உயிரைக் கொடுக்க நான் விரும்பவில்லை, தயக்கம்.  ஆகவே தான்  வாழ்க்கை எனும்  வெள்ளம்போல் ஓடும்  ஆற்றில் குதிக்கவில்லை. நீந்த முயலவில்லை..

MONROE

 கலெக்டரின் வயிற்று வலி ''-  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஹிந்துக்களுக்கு  நிறைய  தெய்வங்கள் இருப்பது வாஸ்தவம். அது ஒரு வசதி.  தனிமனிதனுக்கு னின் திருப்தி  ஒன்று  பலவாக  தன்னை  பரிமளித்துக் கொள்வது.  அதில்  முக்கியமாக திருப்பதி பாலாஜி அநேகரின் குல தெய்வம். இஷ்ட தெய்வம். கலியுக வரதன். கண்கண்ட தெய்வம். நினைத்ததை நடத்தி வைக்கும் பகவான் என்ற  அசையாத  நம்பிக்கை  பக்தர்கள் மனதில் நிரம்பி வழிகிறது. அது உண்மை என்று பல சந்தர்ப்பங்களில் அனுபவம் பெற்றவர்கள்.  அதனால் தான்  திருப்பதி வெங்கடாசலப்பதியை மட்டும் தேடிக்கொண்டு எங்கிருந் தெல்லாமோ கோடானு கோடி பக்தர்கள் வருகிறார்கள். மணிக்கணக்காக நின்று ஒரு வினாடி தரிசனம் ரொம்ப தூரத்திலிருந்து பெறுகிறார்கள்.கிட்டே போகக்கூட முடியவில்லை.. கோவிந்தா கோவிந்தா  என்று  லக்ஷம் குரல்கள் கேட்கிறது.  தீராததை தீர்த்து, முடியாததை முடித்து, ஆபத்திலிருந்து காப்பாற்றி, வேண்டியதை தந்திடும் வெங்கடேசன். நமக்கு மட்டும் அல்ல ஹிந்து அல்லாத வெள்ளைக்காரனுக்கு கூட அருள் புரிந்தவர்.  ஆமாம்   ஒரு வெள்ளைக்காரன், நமக்கெல்லாம் தெரிந்தவன்  நல்லவன்.  தாமஸ் மன்றோ, சென்னையில் தீவுத்திடலில் இன்றும் குதிரைமேல் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருப்பவன். 

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு   திருமலை திருப்பதி  சென்னை மாகாணத்தில் அது ஒரு பகுதி. சித்தூர் மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்  தாமஸ்  மன்றோ. அப்போது எல்லாம் மந்திரிகள் கிடையாது. கலெக்டர்கள் வைத்தது தான் சட்டம். வேலை விஷயமாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி மன்றோ போகவேண்டி இருந்தது. திருப்பதி பாலாஜி பெருமை மஹிமை பற்றி யாரெல்லாமோ சொல்லி கேட்டிருந்தாலும் மன்றோ அதைப் பற்றி சிறிதும் பொருட் படுத்தவில்லை. அவர் நம்பிக்கையும்  மதமும் வேறு.   அவருடைய ஒரே கவலை.  திருப்பதி கோவிலுக்கு  பக்தர்கள் நிறைய  காணிக்கை செலுத்துகிறார்கள், அதெல்லாம்  சரியாக கணக்கு வைத்துக் கொள்கிறார்களா? அதை பரிசோதனை செயது அரசாங்கத்துக்கு போகவேண்டிய பணம்  குறைவின்றி சேரவேண்டும். 

மன்றோ அடிக்கடி  திருமலைக்கு  குதிரை மேல் செல்வார். ஆனால்  ஆலயத்துக்குள் சென்றாலும் வெங்கடாசலபதியைப்  பார்ப்பதில்லை. இந்தியாவின் மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தங்கள் பணம் நகைகள் எல்லாவற்றையும் கணக்கின்றி திருப்பதி உண்டியலில் ல் போடுவதால் அந்த உண்டில் கலெக்ஷன் மேல் தான் கவனம்.

‘கோயில் அதிகாரிகள் இந்தப் பணத்தைச் சுருட்டாமல் இருக்க கண்குத்தி பாம்பாக அதிலே தான் குறி மன்றோவுக்கு. கோயில் வேலையாட்களை, அதிகாரிகளை, அர்ச்சகர்களை சரமாரியாக திட்டுவார். தண்டனை கொடுப்பார் . அதால் அவர்களுக்கு மன்றோ என்ற பெயர் சொன்னாலே சிம்ம சொப்பனம்.

''ஸ்ரீநிவாஸா, நீ தான் எங்களை காப்பாற்றவேண்டும் என்று பாலாஜி முன் முறையிடுவார்கள். மொட்டையடிக்க வருபவர்களைக்  கேலி செயது வேறு இடம் கிடைக்கவில்லையா மொட்டை  போட என்றும், இரு மொட்டைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் மன்றோவுக்கு பிடிக்கும். ''அபசாரம்’ என்று மனதிற்குள் சபிப்பார்கள் அர்ச்சகர்கள். யாரேனும் வாயைத் திறந்தால் அவன் பிணம் தான் மிஞ்சும் .

வேங்கடாசலபதிக்கு தெரியாதா எப்போது என்ன செய்யவேண்டும் என்று?

வழக்கம்போல் ஒரு நாள் வசூல் செய்ய மன்றோ தனது படையுடன் வந்தான். வசூல் விவரம், கோவில் வழிபாடுகளில் கிடைத்த பணம். காணிக்கையாக வந்த பொருள், பணம், கையிருப்பு எல்லா கணக்கும் தயாராக வைத்திருந்தார்கள் கோவில் அதிகாரிகள்.

ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வையிடுவதற்கு முன்னதாக, தன்னிச்சையாக ஆலயத்தை அதிகார மிடுக்குடன் வலம் வந்தான். புனிதமான க்ஷேத்ரத்தில் ஒரு வெள்ளையன் மரியாதை இன்றி சுற்றி வருவது அர்ச்சகர்களும் பக்தர்களுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது? பெரிய அதிகாரி ஆயிற்றே.

கோவிலின் ஒரு மூலையில் சில பக்தர்கள் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண் பொங்கலை,   நெய்யொழுக இலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மன்றோ முகம் சுளித்தான். அருவறுப்படைந்தான்.

''சே,   '' சீ சீ உணவா இது. பார்க்கவே வாயிலெடுக்க வருகிறதே. இதை எப்படி சாப்பிடுறீங்க. வியாதி வரவழைச்சுக் காதீங்க. துப்புங்க உடனே '' என்றான்.  இதைப் போய் தின்கிறார்களே, என்னென்ன வியாதிகள் பரவுமோ ?
''எல்லாரும் முதல்ல அதைத் துப்பி விட்டு தூர எறியுங்கள்'' என்று அருவருப்போடு கண்டிப்பான குரலில்   கத்தினான்.

பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு.

பக்தர்களை விரட்டி  விட்டு மன்றோ பிராகாரத்தில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்தவன். திகைத்தான். என்ன ஆயிற்று?  ஏன்  உடல் திடீரென்று சோர்வடைகிறது. கால்கள் தள்ளாடுகிறது. ஏதோ ஒரு  தாங்கமுடியாத வயிற்று வலி ஏன்  வந்தது . காலையில் எழுந்தது முதல்  வழக்கம்போல் உடல்நலம் நன்றாக  தானே, இருந்தது.   மன்றோ வயிற்று வலியால் துடித்தார். 
''ஐயோ அப்பா, வலி தாங்கமுடியவில்லையே.''  அலறினார்   மன்றோ. சுருண்டு விழுந்தவனை அலுவலக அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் தூக்கிவிட்டு பிடித்துக்கொண்டு கலெக்டர் பங்களாவுக்கு கொண்டு சென்றார்கள். படுத்த மன்றோவுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று இடைவிடாத  வலி. ஆங்கிலேய மருத்துவர்கள் வந்து வைத்தியம் செய்தனர். வயிற்று வலிக்கான காரணம் புரியவில்லை.

மருந்துகள், மாத்திரைகள், உறக்கம் வருவதற்கான ஊசிகள் – எதுவும் நிவாரணம் தரவில்லை. தொடர்ந்த வலியும் குத்தலுமாக  அடுத்த  சில நாட்களில்   மன்றோ   கிழிந்த துணி ஆனார். 

ஒருநாள்  வழக்கமாக திருப்பதியில் இருந்து, கோவில் நிர்வாக விஷயமாக மன்றோவைச் சந்திக்க  வேங்கடேசன்  ஆலய பிரதம  அர்ச்சகர் வந்தபோது அவரிடம் புலம்பினார்  மன்றோ.

''துரை அவர்களே, நான் சொன்னால் கோவிக்கமாட்டீர்களே? ” என்று தயங்கினார் அர்ச்சகர்.

'' சொல்லுங்கள்… எனக்கு வயிற்று வலி தீர வேண்டும்.   அன்றைக்குக் கோயிலில் தொடங்கிய வலி இன்னமும் நீங்கிய பாடில்லை. சீக்கிரம் ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்”  எது சொன்னாலும் கேட்பேன். சொல்லுங்கள்''
'சுவாமி பிரசாதத்தை நீங்க மரியாதைக்குறைவாய்   அவமதித்துப்  பேசினதால தான், ஒங்களுக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகி இருக்கும்னு தோண்றது. இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு”

''உடனே சொல்லுங்க . அது என்ன பரிகாரம்? நான் ரெடி. இப்பவே செய்றேன்'' கெஞ்சினார்  மன்றோ.

'' பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா வந்தபடியே   போயிடும்” என்றார் அர்ச்சகர்.

மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினான் மன்றோ.

ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிட   சாப்பிட,  மன்றோவின் வயிற்று வலியும், குத்தல் வலியும் ஆச்சர்யமாக இருந்த இடம் தெரியாமல்  நின்றது.  எப்படி  இவ்வளவு  நாளாக  வாட்டிய  வலி  காணாமல் போனது. ஆச்சரியப்பட்டார் மன்றோ.

''எங்கள் தேசத்து மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது உண்மையில் உங்கள் கடவுள் வெங்கடாசலபதி அருளாசிதான்”  என  கண்களில் நீரோடு  சொன்னார்  மன்றோ.
''இனி நான் சும்மா இருக்கமாட்டேன். உடனே ஒரு வேலை செயகிறேன்'' என்றான். அதிகாரிகளை கூப்பிட்டான்  

நெகிழ்ந்து போய் தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று, வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார் கலெக்டர் மன்றோ .

அத்துடன், ஒரு பக்தனாகப் திருப்பதிக்கு போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார்.
.
''திருப்பதி திருமலையில் வேங்கடேசன் கோயிலில் வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நைவேத்யமாக அளிக்கப்பட்டு எண்ணற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட வேண்டும். இதற்காக திருப்பதி அருகே உள்ள வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ எனும் ஊரில் வசூலாகும் பணம் அத்தனையும் கணக்கு தவறாமல் திருப்பதி பெருமாள் ஆலயத்துக்கு பொங்கல் தயாரிக்க பயன்பட வேண்டும். இதை எவரும் மீறக்கூடாது '' என்று ஆணையிட்டான்.கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறதாம். அந்தக் கட்டளை ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்றே அழைக்கப்படுகிறது.  

பின்னர் மன்றோ வெங்கடேச பெருமாள் பக்தர்களில் ஒருவன் என்று சொல்லவே வேண்டாம்.நிறைய அந்த கோவில் நிர்வாகம் பண்டிகைகள் நடத்த உதவினான்.
உலகெங்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கட்டுகிறார்கள். வெள்ளைக் காரர்கள் நம்மைவிட அதி பக்தியாக உழைக்கிறார்கள். எல்லாம் பெருமாள் செயல். கலியுக வரதன் என்று தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே .

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்   J K SIVAN 


45    தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி 


முந்தைய  கட்டுரையில்  18ம்  நூற்றாண்டின் இறுதியில்  இந்து மத விரோதிகளால்  கோவில்கள்  விக்ரஹங்கள் சேதப்பட்டன.  தங்கம் வெள்ளி  நவரத்ன கற்கள்  கொண்ட  விக்ரஹ  ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  ஆகவே தான்  அப்போதிருந்த காஞ்சி மடாதிபதி   62வது   பீடாதிபதி காஞ்சியிலிருந்து  மூன்று ஆலயங்களின் உற்சவ விக்ரஹங்களை ஜாக்கிரதையாக  உடையார்பாளையம், தஞ்சாவூர்  எடுத்துச் சென்றார்.  பங்காரு காமாக்ஷி எனும் சொர்ண காமாக்ஷி அப்படிதான்  காஞ்சியிலிருந்து தஞ்சாவூர் சென்றாள் . 

1737ம்  ஆண்டு  தஞ்சாவூர் ஏகோஜி எனும் மராத்திய ராஜாவால்  ஆளப்பட்டு, வாரிசு இன்றி அவன் மரணமடைய  பிரதாபசிம்மன்  ராஜாவானான். அவன் காஞ்சி காமகோடி மட  பீடாதிபதி ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்  (1746-1883)   பக்தன்.  அவருக்கு  அழைப்பு விடுத்தான்.  
பீடாதிபதிகள்  அழைப்பை ஏற்று உடையார் பாளையம் சென்றார். 

பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட   ஸ்வர்ண  காமாக்ஷியை , சொக்கத்தங்க காமாக்ஷியை  அர்ச்சகர்கள் ஜாக்கிரதையாக   உடையார் பாளையம் கொண்டுவந்தார்கள் .    பீடாதிபதிகள்  விருப்பப்படியே தஞ்சாவூரில்  பங்காரு காமாக்ஷி ஆலயம்  1746   ஆரம்பிக்கப்பட்டது.   1887ம்  வரை பல மன்னர்களால்  கட்டி முடிக்கப்பட்டது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  சியாமா சாஸ்திரிகள் காமாக்ஷி  பக்தர்.  அவரே  அம்பாளுக்கு   அர்ச்சகர்.
 
கிளியை தாங்கி நிற்கும் கைகளும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் த்ரிபங்க தாரியின் ஒயிலுமாக அவள் அமர்ந்துள்ள அழகு  நம்மை பிரமிக்கச் செய்கிறது.   

காமாக்ஷி பூஜைக்கான உரிமை காஞ்சி முதல் தஞ்சை வரை பங்காரு காமாட்சியுடன்  பயணித்து  தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்து உதவிய மூன்று கோத்திரக்காரர்கள் ஸ்தானிக  பரம்பரை யினர் களுக்கு மட்டும்  தான் உண்டு.  அவர்களில் ஒருவர்    சியாமா சாஸ்த்ரிகள் பரம்பரையினர்.  சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் தஞ்சாவூரில்  சொர்ண காமாக்ஷிக்கு  பூணூல் உண்டு.

காமாக்ஷி யம்மனுக்கு ஆண்டுதோறும் பதினொன்று அபிஷேகங்கள் மட்டும்தான்.  பங்காரு காமாக்ஷி யம்மன் மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை. காமகோடி அம்மன் எனும் உற்சவ மூர்த்திக்கும் கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர்.

அப்போதைய  62வது பீடாதிபதிகள் விருப்பதிற்கிணங்கி பங்காரு காமாக்ஷி அம்மன் ஆலயம்  தஞ்சாவூர் வடக்குத் தெருவில் அமைந்தது.  காஞ்சி காமகோடி பீடாதிபதிகள்  இந்த ஆலய  ட்ரஸ்டிகளில், ( தர்ம கர்த்தா) ஒருவர். 

1926ல்  நமது  மஹா பெரியவா  உடையார்பாளையம் சென்றபோது  அப்போதைய ஜமீன்தார் சிறப்பாக  வரவேற்பளித்தார்.  பெரியவா  ஜமீன்தார் மாளிகையிலும்  காமாக்ஷி அம்மன் ஆலயத்திலும் தங்க  ஏற்பாடுகள் செய்தார்.   நகர் ஊர்வலம், பிக்ஷாவந்தனம் கோலாகலமாக  நடை பெற்றது.

உடையார் பாளைய  ஜமீன்தார்,  காஞ்சி மடத்துக்கு  ஆறுமாத யானைக்குட்டி ஒன்று, ரெண்டு குதிரைகள், ஒரு ஒட்டகம், சில பசுக்கள் அவரது காணிக்கையாக அளித்தார்.    உடையார் பாளைய  மக்கள் சந்தோஷத்துக்கு ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

உடையார் பாளைய  பகுதிகளில்  பல  வருஷங்களாக  மழை இல்லை, வரண்டிருந்த  பூமிக்கு  மஹா பெரியவா அங்கே வந்தவுடன் நல்ல மழை நீர்   கிடைத்தது.   எங்கும் மீண்டும் பச்சையாக வளமை காணப்பட்டது.  மக்களுக்கு ஏராளமான சந்தோஷம்.  அந்த வருஷம் நல்ல அறுவடை. 

1926ம் வருஷம்  வியாச பூஜை, நவராத்ரி வைபவங்கள்  காட்டு மன்னார் கோயில் எனும் கிராமத்தில் நடை பெற்றது.  இந்த ஊருக்கு அருகே  தான்  சிறந்த சிவ க்ஷேத்ரம்  சிதம்பரம் உள்ளது.   அங்கே  அமைதியாக   சாதுர் மாஸ்ய  விரதம் நிகழ்த்திவிட்டு  மஹா பெரியவா அங்கிருந்து விஜய யாத்திரையை  மஞ்சக்குப்பம்,கடலூர், புது பாளையம்,  ஆகிய  ஊர்கள்  வழியாக  திருப்பாதிரிப்புலியூர் அடைந்தார்.  திருப்பாதிரிப்புலியூரில் பெரியவா முகாம் இட்டிருப்பதை அறிந்து எண்ணற்ற பக்தர்கள்  திரண்டனர்.   

கடியாப்பட்டி தர்ம பூஷணம்  D N  நாச்சியப்ப  செட்டியார்  சத்திரத்தில்  விமரிசையாக  நவராத்ரி வைபவம் நடந்தது.   ஒன்பது நாட்களும்  மஹா பெரியவா நிகழ்த்திய  பூஜைகளைக் காண பக்தர்கள்  கூடினர். மஹா பெரியவாளின் முதல் விஜயம் அது என்பதால்  அளவுக்கு மீறிய  ஆயிரக்கணக்கானோர்  அவர் தரிசனம் பெற  வந்து காத்திருந்தனர்.  நவராத்திரி முழுதும்  கடியாப்பட்டி  செட்டியார் கூடவே இருந்து களித்தார்.    நவராத்ரி விழா ஏற்பாடுகள் அற்புதமாக செய்தார். விஜயதசமி அன்று மஹா பெரியவா நகர்வல   ஊர்வலம்  அற்புதமாக  நடந்தது.

திருப்பாதிரிப்புலியூரில் மஹா பெரியவா  இவ்வாறு முகாம்  இட்டிருந்த நேரத்தில்  நன்றாக கற்ற பண்டிதர் ஒருவர்  பெரியவா தரிசனத்துக்கு வந்தார். அவர் ஒரு  சுதந்திர போராட்ட  தியாகி. காந்தி மஹான் சீடர்.  அந்த கற்றறிந்த அறிஞர் ஒரு பெண் பாவலர்.  அவர் பெயர்  பண்டித, அசலாம்பிகா அம்மையார். 

மஹா பெரியவாளை தரிசித்த அம்மையார், ''சுவாமி  நான் பெரியவா மீது   ஐந்து செய்யுள் கள் இயற்றியிருக்கிறேன்.  தங்கள் அனுமதியோடு இங்கே  தங்கள் முன்பு  அதை வாசிக்க உங்கள் உத்தரவுக்கு காத்திருக்கிறேன்'' என்றார் .

''ஆஹா  வாசியுங்கோ''

எல்லோர் முன்னிலையிலும் அந்த அம்மையார்  ராகமாக  தான் எழுதிய செய்யுள்களை வாசித்தார். மஹாத்மா காந்தியடிகள்  வாழ்க்கை வரலாற்றை  செய்யுளாக  இயற்றியவர் இந்த பெண்மணி. இன்னொரு விஷயம்  மஹா பெரியவாவின்  பூர்வாஸ்ரம  தந்தையார் சுப்ரமணிய ஐயர்  திண்டிவனத்தில்  ஆசிரியராக பணியாற்றிய  போது இந்த பெண்மணி அவரது மாணவி.

தொடரும் 



MAHABARATHAM WAR


 பாரதப்போர்  விஷயம்  --   நங்கநல்லூர் J K  SIVAN 



உலகப்பிரசித்தி   பெற்ற மஹா பாரத 18 நாள் யுத்தம் நடந்து எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டது தெரியுமா? கிட்டத்தட்ட  5200 வருஷங்கள் முன்பு.   இன்னும்  ஞாபகத்தில் இருக்கிறதே. கௌரவர்கள் அத்தனைபேரும் மாண்ட பின் பாண்டவரால் 36 வருஷம் 8 மாதம் ஹஸ்தினா புரத்தை ஆண்டார்கள்.  துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்தது.   ஆர்ய பட்டர் போன்ற  கணக்கு புலிகள்  நிறைய  யோசித்து கண்டுபிடித்த  உண்மை இது.  
கோசல நாட்டு  சூர்ய வம்சம் சுமித்ராவுடன் முடிந்தது .   ஹஸ்தினாபுரத்தில்  சந்திர வம்சம்  சேமக்  என்பவனுடன் முடிந்தது.  அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக முளைத்தது தான்  மகத நாட்டு  குப்த வம்சம். 2100 வருஷங்களுக்கு முன்பு.  இப்போதுள்ள டில்லி, என்கிற இந்திரப்பிரஸ்தம் தான் ஹஸ்தினாபுரம்.  யுதிஷ்டிரன் என்கிற தர்ம ராஜா முதல்   விக்ரமாதித்யன்   வரை சந்திர வம்ச ராஜாக்களை  அவர்கள் காலத்தோடு  கண்டுபிடித்து  லிஸ்ட் போட்டிருக்கிறார்கள்.

இதை வெளியிட்டது  ராஜஸ்தானை சேர்ந்த  ஹரிச்சந்திர  சந்திரிகா,    மோஹன் சந்திரிகா பத்ரிகைகள். 1872ம் வருஷம்.  ஒவ்வொரு ராஜாவும் எத்தனை வருஷம், மாதம், நாள்  ஆண்டான் என்று தெரிந்ததால்  யுதிஷ்டிரன் முதல்  விக்ரமாதித்யன் வரை  நான்கு வம்சத்தை   70   ராஜாக்கள் ஆண்ட மொத்த  காலம் எவ்வளவு தெரியுமா  3148 வருஷம். 2011 வருஷங்கள் முன்பு வரை. 

விக்ரமாதித்யன்  93 வருஷங்கள் ராஜாவாக   ஹஸ்தினாபுரத்தை  ஆண்டான்.   பாவிஷ்ய புராணம், ராஜ தரங்கிணி போன்ற நூல்கள்  இந்த விஷயத்தை சொல்லும்போது  தோராயமாக இந்த கால அளவு சரி என்று தான் தெரிகிறது.

விஸ்வ பஞ்சாங்கம் , 1925ல் மூன்று  வித  வருஷங் களை,  கால  அளவுகளை  குறிப்பிடு கிறது. கலியுக வருஷம், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம்..T1999ம் வருஷம்   5100 வருஷம்  ஆகிவிட்டது கலி பிறந்து.  அதாவது விக்கிரம வருஷம் 2056ல் என்கிறது.

1500 வருஷங்களுக்கு முன்பே  ஆரியபட்டர்   “ இந்த மூன்று  யுகங்களும்   அதாவது, சத்யயுகம், திரேதாயுகம்,  த்வாபர யுகம் மூன்று முடிந்து  கலியுகம்  பிறந்து 3600 வருஷங்கள் ஆகியபோது எனக்கு 23 வயஸு  என்கிறார் ''


துவாபர யுக கடைசியில் கிருஷ்ணன்  வைகுண் டம் ஏகினார்.   கிருஷ்ணன் பூமியை விட்டு மறைந்த போது , பிரளயம் வந்திருக்கிறது.  7 நாட்கள்  அது தொடர்ந்தது.   துவாரகா முழுதும் கடலில் மூழ்கியது.    அப்போது தான்  பாபிலோனியாவில்  ஊர் என்கிற  நகரத்தில்   பிரளயத்தில் நோவாவின் படகு மட்டும் மிதந்தது என்று தெரிகிறது.   பழைய  மாயன்  MAYAN  கால  குறிப்புகளும்  இதை ஆமாம்  அப்படித்தான்   என்கிறது. 

இதெல்லாம் கணக்கில் வைத்து பார்த்து மஹா பாரதப் போர்  நடந்த விஷயங்களைப்  பற்றி ஆராய்ச்சியாளர்கள், சரித்திர நிபுணர்கள்,  என்ன தகவல் சொல்கிறார்கள் தெரியுமா?

 1.  மஹாபாரதம்  யுத்தம்  உத்தராயணம்  மக நக்ஷத்ரத்தில் சுக்ல பக்ஷத்தில்  பஞ்சமி  திதி  அன்று  தொடங்கியது.

2. பாரத  யுத்தத்தின்   10ம்  நாள்   பீஷ்மர்  தலைமையில்   கவுரவ  சேனையில்  யுத்தம்  நடந்தபோது  உத்தராயணம் துவங்க  58  நாள்  இருந்தது.

3. பீஷ்மர்  யுத்தத்தில் வீழ்ந்து  அம்புப் படுக்கையில்  இருந்து  கடைசியில்  உத்தராயணத்தில்  உயிர் விடும்போது  மக நக்ஷத்ரம்  சுக்ல பக்ஷம்  ஏகாதசி நாள்.  அதாவது  யுத்தம்  எல்லாம்  முடிந்த  56வது  நாள்.

4. யுத்த முடிவுக்கும்   உத்தராயண  புண்ய காலத்துக்கும்   இடையே  50  நாள்   இருந்தது.

5.  பாரத  யுத்தம்  18 நாள்  இடைவிடாது  நடந்தது.

6. பாரத யுத்தம்  ஆரம்பித்த  பிறகு   அமாவாசை  வந்தது.  அது  அது  ஜேஷ்ட (கேட்டை)  நக்ஷத்ரத் தில்  அமைந்தது.

7  பாண்டவ  சைன்யம்  உபப்லாய  வனத்திலி ருந்தும் , கவுரவ  சேனை  ஹஸ்தினாபுரத் திலி ருந்தும் குருக்ஷேத்ர  யுத்த களத்தை நோக்கி   பூச நக்ஷத்ரத்தன்று நடந்தது.

8. ஸ்ரீ  கிருஷ்ணன் அதற்கு  முன்பு  கார்த்திகை  மாதம்  ரேவதி நக்ஷத்ரத்தன்று ஹஸ்தினாபுரத் துக்கு  சமாதான  தூது  சென்றான்.

மேற்கூறி யதெல்லாம்  கூட்டிக்  கழித்துப் பார்த் தால்  மஹா பாரத  யுத்தம்  18 நாள்  நடந்து உத்தராயணம்  துவங்கிய  51ம்  நாள்  ராத்திரி முடிந்தது  என்று  வரும்.

நாம்  இப்போது பின்பற்றி வரும் கேலண்டர், நாள்கணக்கு (ரஷ்யா, கிரீஸ்,  துருக்கி  தவிர) மற்ற  நாடுகளில்  நடைமுறையில்  உள்ளதல்லவா.  அது  கடந்த  3524 வருஷங்களில் ஏறக்குறைய  ஒரு நாள் குறைவாக  கணக்கிடப்பட்டுள்ளதாம்.  

பாரத யுத்தம்  கி மு  1194ல் (அதாவது   3094  வரு ஷங்களுக்கு  முன்பு) அல்லது  நமது  நாள்காட்டி (கேலண்டர்) யை போப்பாண்டவர்  திருத்தம்  செய்ததற்கு  2776 வருஷங்களுக்குமுன்னால்  நடந்ததாக  தோன்றுகிறது.

மண்டையை  உடைத்துக்கொண்டு இத்தனை  கணக்கை  போட்டிருக்கிறார்கள். இதனால்  தெரிவது  என்னவென்றால் உத்தராயணம்  இதன்  பிரகாரம்  21 டிசம்பரில்  மகா பாரதம்  முடிந்த 51ம்  நாள்  வந்தது. எனவே   மஹா  பாரத  யுத்தம்  கி  மு   1194  அக்டோபர்  ஆரம்பித்து  31 அக்டோபர்  முடிந்தது.

இந்த  கணக்கை  போட்டவர்கள்  ஆதாரமாக  எடுத்துக்கொண்டது கம்புயூட்டர்,  கால்குலேட்டர் எதுவும் இல்லாமல், வெறும்  பஞ்சாங்கம்,  மகாபாரத ஸ்லோகங்களை படித்துக் கொண்டு சுற்றிலும் பழைய  ஓலைச்சுவடிகளைப்   பரப்பி வைத்துக்  கொண்டு  நடுவில் அமர்ந்து,  எண் ணெய்  தீப வெளிச்சத்தில்  படித்து  சொன்ன வை.  கண்டுபிடித்தவை.

நேரத்தை  நல்ல படியாக  செலவழிக்க நல்லவேளை அப்போது  டிவி, வாட்ஸாப்ப், FACEBOOK  மொபைல் போன் இல்லை. 

மகாபாரதத்தில்  வரும் ஸ்லோகங்களையே   என்று  தெரிந்து கொள்ளும்போது அவர்களது  முயற்சிக்கு  மனமார்ந்த நமஸ்காரம் ஒன்றே  நம்மால் செய்ய முடிந்தது. 

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

16வது தசகம் 

16. நர நாராயணா , நீலகண்டா .....

दक्षो विरिञ्चतनयोऽथ मनोस्तनूजां
लब्ध्वा प्रसूतिमिह षोडश चाप कन्या: ।
धर्मे त्रयोदश ददौ पितृषु स्वधां च
स्वाहां हविर्भुजि सतीं गिरिशे त्वदंशे ॥१॥

dakṣō viriñcatanayō:’tha manōstanūjāṁ
labdhvā prasūtimiha ṣōḍaśa cāpa kanyāḥ |
dharmē trayōdaśa dadau pitr̥ṣu svadhāṁ ca
svāhāṁ havirbhuji satīṁ giriśē tvadaṁśē || 16-1 ||

த³க்ஷோ விரிஞ்சதனயோ(அ)த² மனோஸ்தனூஜாம்
லப்³த்⁴வா ப்ரஸூதிமிஹ ஷோட³ஶ சாப கன்யா꞉ |
த⁴ர்மே த்ரயோத³ஶ த³தௌ³ பித்ருஷு ஸ்வதா⁴ம் ச
ஸ்வாஹாம் ஹவிர்பு⁴ஜி ஸதீம் கி³ரிஶே த்வத³ம்ஶே || 16-1 ||

 ப்ரம்மா   ஜீவன்களை   ப்ரபஞ்சத்தில்  சிருஷ்டி  பண்ணும்போது ஆரம்ப காலத்தில்  உதித்த ஒரு புத்ரன்  தான்  தக்ஷன். .  ஸ்வயம்பு மனுவின் பெண் ப்ரஸூதியை மணந்தவன்.  அவர்களுக்கு 16 பெண்  குழந்தைகள்.    அவர்களில்  13 பேர்  தர்ம தேவதைக்கு மனைவியானார்கள்.  பித்ரு தேவதைக்கு  ஸ்வாதா வை மணம் செய்து  கொடுத்தான்.  ஸ்வாஹா  என்பவள் அக்னிக்கு மனைவியானாள்.  ஹோமத்தில்  பொருள்களை அர்ப்பணிக்கும்போது அதனால் தான் ''ஸ்வாஹா'' என்று அக்னிக்கு திருப்தியாக கொடுக்கிறோம்.   ஸதி  என்கிற பெண்  சிவ பெருமானுக்கு மனைவியானாள்.  குருவாயூரப்பா,  நீயும்  சிவனும் ஒன்று தானே!

मूर्तिर्हि धर्मगृहिणी सुषुवे भवन्तं
नारायणं नरसखं महितानुभावम् ।
यज्जन्मनि प्रमुदिता: कृततूर्यघोषा:
पुष्पोत्करान् प्रववृषुर्नुनुवु: सुरौघा: ॥२॥

mūrtirhi dharmagr̥hiṇī suṣuvē bhavantaṁ
nārāyaṇaṁ narasakhaṁ mahitānubhāvam |
yajjanmani pramuditāḥ kr̥tatūryaghōṣāḥ
puṣpōtkarānpravavr̥ṣurnunuvuḥ suraughāḥ || 16-2 ||

மூர்திர்ஹி த⁴ர்மக்³ருஹிணீ ஸுஷுவே ப⁴வந்தம்
நாராயணம் நரஸக²ம் மஹிதானுபா⁴வம் |
யஜ்ஜன்மனி ப்ரமுதி³தா꞉ க்ருததூர்யகோ⁴ஷா꞉
புஷ்போத்கரான்ப்ரவவ்ருஷுர்னுனுவு꞉ ஸுரௌகா⁴꞉ || 16-2 ||

நாராயணா,  மூர்த்தி என்கிற  தர்ம தேவன் மனைவிக்கு நீ  நர நாராயணனாக பிறந்த போது  சகல தேவர்களும் ரிஷிகளும் மகிழ்ந்தார்கள்.  உன் மேல் அனைவருமே புகழ்ந்து பாடினார்கள்,   புஷ்பங்களால் அர்ச்சித்தார்கள்.  வாத்ய கோஷம் எழுப்பினார்கள்.

दैत्यं सहस्रकवचं कवचै: परीतं
साहस्रवत्सरतपस्समराभिलव्यै: ।
पर्यायनिर्मिततपस्समरौ भवन्तौ
शिष्टैककङ्कटममुं न्यहतां सलीलम् ॥३॥

daityaṁ sahasrakavacaṁ kavacaiḥ parītaṁ
sāhasravatsaratapassamarābhilavyaiḥ |
paryāyanirmitatapassamarau bhavantau
śiṣṭaikakaṅkaṭamamuṁ nyahatāṁ salīlam || 16-3 ||

தை³த்யம் ஸஹஸ்ரகவசம் கவசை꞉ பரீதம்
ஸாஹஸ்ரவத்ஸரதபஸ்ஸமராபி⁴லவ்யை꞉ |
பர்யாயனிர்மிததபஸ்ஸமரௌ ப⁴வந்தௌ
ஶிஷ்டைககங்கடமமும் ந்யஹதாம் ஸலீலம் || 16-3 ||

Nara and Narayana who were you yourself,
Took turns and destroyed the asura called Sahasra Kavacha,
Who wore one thousand armours,

குருவாயூரப்பா,  நீ  நர நாராயணனாக அவதரித்த  போது தான்  சஹஸ்ர கவசன்  எனும் ராக்ஷஸனை வதம் செய்தாய். அடேயப்பா,  ஒரு  இரும்பு கவசம் அணிந்தாலே எவ்வளவு கனம்? , அந்த ராக்ஷஸன் எப்படித்தான்  ஆயிரம் கவசங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து நடந்தானோ?   அவன் சாதாரண ராக்ஷஸன் இல்லை,   மஹா கனம் பொருந்திய  ராக்ஷஸன். ஒரு கவசத்தை அறுக்க, ஆயிரம் வருஷங்கள் தவம் இருக்கவேண்டும்,   ஆயிரம் வருஷங்கள் யுத்தம் புரிய வேண்டும். அப்படியும்   கடைசியில்  ஒரு கவசம் மட்டும் அவன் மேல் இருக்கும்  அவனைக் கொல்லும்போது,   என்கிறார்  மேல்பத்தூர் நம்பூதிரி.  இப்படி ஒரு ராக்ஷஸனை இப்போது தான் அறிகிறேன்.

अन्वाचरन्नुपदिशन्नपि मोक्षधर्मं
त्वं भ्रातृमान् बदरिकाश्रममध्यवात्सी: ।
शक्रोऽथ ते शमतपोबलनिस्सहात्मा
दिव्याङ्गनापरिवृतं प्रजिघाय मारम् ॥४॥

anvācarannupadiśannapi mōkṣadharmaṁ
tvaṁ bhrātr̥mān badarikāśramamadhyavātsīḥ |
śakrō:’tha tē śamatapōbalanissahātmā
divyāṅganāparivr̥taṁ prajighāya māram || 16-4 ||

அன்வாசரன்னுபதி³ஶன்னபி மோக்ஷத⁴ர்மம்
த்வம் ப்⁴ராத்ருமான் ப³த³ரிகாஶ்ரமமத்⁴யவாத்ஸீ꞉ |
ஶக்ரோ(அ)த² தே ஶமதபோப³லனிஸ்ஸஹாத்மா
தி³வ்யாங்க³னாபரிவ்ருதம் ப்ரஜிகா⁴ய மாரம் || 16-4 |

பத்திரிகாஸ்ரமத்தில்  நர நாராயணர்களை இன்றும் தரிசிக்கிறோம்.  மோக்ஷ மார்க்கம் கற்பித்து பக்தர்களை ரட்சிக்கும் நரநாராயணன் சஹஸ்ர கவசனை சுலபமாக  கொல்ல முடிந்த காரணம்   அவனுடைய  அசுர பலத்தை விட அவரது தபோபலம்  ஆயிரம் கவசத்துக்கும்  மேலான வலுப் பெற்றதாக இருப்பதால் தான்.  இல்லையா  குருவாயூரப்பா?  என்று நம்பூதிரி கேட்கிறார்.  சிரித்துக்கொண்டே  ''ஆமாம்''  என்று தலையாட்டுகிறான்  உண்ணி  கிருஷ்ணன். 

இந்திரன் எப்போதும் சும்மாவே இருக்கமாட்டான்.  உன் மேல் பொறாமை கொண்டு  மன்மதனை அனுப்பினான் உன் தவ  வலிமையைக்  குலைப்பதற்கு . மன்மதன் போதாதென்று  தேவலோக அரம்பையர்களை வேறு அனுப்பினான் மன்மதனோடு.    
कामो वसन्तमलयानिलबन्धुशाली
कान्ताकटाक्षविशिखैर्विकसद्विलासै: ।
विध्यन्मुहुर्मुहुरकम्पमुदीक्ष्य च त्वां
भीरुस्त्वयाऽथ जगदे मृदुहासभाजा ॥५॥

kāmō vasantamalayānilabandhuśālī
kāntākaṭākṣaviśikhairvikasadvilāsaiḥ |
vidhyanmuhurmuhurakampamudīkṣya ca tvāṁ
bhītastvayātha jagadē mr̥duhāsabhājā || 16-5 ||

காமோ வஸந்தமலயானிலப³ந்து⁴ஶாலீ
காந்தாகடாக்ஷவிஶிகை²ர்விகஸத்³விலாஸை꞉ |
வித்⁴யன்முஹுர்முஹுரகம்பமுதீ³க்ஷ்ய ச த்வாம்
பீ⁴தஸ்த்வயாத² ஜக³தே³ ம்ருது³ஹாஸபா⁴ஜா || 16-5 ||

தவத்தை கெடுக்க வந்த  மன்மதன் சும்மாவா வருவான்?  இனிய  தென்றல்,  வசந்த கால  நறுமலர்களின் மணங்கள்  மனதை கிறுகிறுக்க, கிறங்க வைக்க சந்தர்ப்ப சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு வந்து   உன் மீது  காமன் மலர் அம்புகளை வழக்கம் போல்  தொடுத்தான்.  நரநாராயணனான  உன்னை மயக்கி தவத்தை   தடை  செய்ய  முயன்றான்.  பாவம் இந்திரன்.   அவன் அனுப்பிய  மன்மதனும்  அவன்  அரம்பையரும் போட்ட  ஆட்டம் பாட்டம் எல்லாம் வீண்.   நீ  கருங்கல் சிலையாக அமர்ந்து    இடையூறில்லாத தவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பார்த்து  இந்திரனே  அசந்து போனான்.   அவன் அனுப்பிய  மன்மதனுக்கு  பயம் வந்துவிட்டது. கை கூப்பி நின்றான்.  கண்ணைத் திறந்து  ஒரு சிறு புன்னகையை அவன் மீது வீசினாய். பேசினாய்.

भीत्याऽलमङ्गज वसन्त सुराङ्गना वो
मन्मानसं त्विह जुषध्वमिति ब्रुवाण: ।
त्वं विस्मयेन परित: स्तुवतामथैषां
प्रादर्शय: स्वपरिचारककातराक्षी: ॥६॥

bhītyālamaṅgaja vasanta surāṅganā vō
manmānasantviha juṣudhvamiti bruvāṇaḥ |
tvaṁ vismayēna paritaḥ stuvatāmathaiṣāṁ
prādarśayaḥ svaparicārakakātarākṣīḥ || 16-6 ||

பீ⁴த்யாலமங்க³ஜ வஸந்த ஸுராங்க³னா வோ
மன்மானஸந்த்விஹ ஜுஷுத்⁴வமிதி ப்³ருவாண꞉ |
த்வம் விஸ்மயேன பரித꞉ ஸ்துவதாமதை²ஷாம்
ப்ராத³ர்ஶய꞉ ஸ்வபரிசாரககாதராக்ஷீ꞉ || 16-6 ||

' ஹே , மன்மதா, வசந்தமே , தேவலோக  அழகிகளே ,  துளியும்  என்னைப் பார்த்து  நீங்கள்  யாரும்  பயம் கொள்ள வேண்டாம்.  நான் சிவன் போல் உங்களை  எரிக்கப்  போவதில்லை.   இங்க்கே என்னைத்  தேடி இந்த ஆஸ்ரமத்துக்கு  வந்த உங்களுக்  கெல்லாம்  பரிசு தந்து அனுப்பப் போகிறேன் ''என்றாய் . 

குருவாயூரப்பா, உனது சங்கல்பத்தால்  உன்னைத் சுற்றி   அந்த  அரம்பையர்களை விட  அதி ரூப  அழகிகளை  திவ்ய சுந்தர ரூபவதிக;ளை  வரவழைத்து  உனக்குப்  பணிவிடை செய்யும் அதிசயத் தோற்றத்தை அவர்களுக்கு காட்டினாய்.  உன்னைப் போற்றிப்  பாடி அவர்கள் வணங்குவதை எல்லோரும் பார்த்தார்கள். 

सम्मोहनाय मिलिता मदनादयस्ते
त्वद्दासिकापरिमलै: किल मोहमापु: ।
दत्तां त्वया च जगृहुस्त्रपयैव सर्व-
स्वर्वासिगर्वशमनीं पुनरुर्वशीं ताम् ॥७॥

sammōhanāya militā madanādayastē
tvaddāsikāparimalaiḥ kila mōhamāpuḥ |
dattāṁ tvayā ca jagr̥hustrapayaiva sarva-
svarvāsigarvaśamanīṁ punarurvaśīṁ tām || 16-7 ||

ஸம்மோஹனாய மிலிதா மத³னாத³யஸ்தே
த்வத்³தா³ஸிகாபரிமலை꞉ கில மோஹமாபு꞉ |
த³த்தாம் த்வயா ச ஜக்³ருஹுஸ்த்ரபயைவ ஸர்வ-
ஸ்வர்வாஸிக³ர்வஶமனீம் புனருர்வஶீம் தாம் || 16-7 ||

உன்னை மயக்க வந்த மன்மதன்,ரதி, மற்றும் அநேக தேவலோக அரம்பையர்கள் அந்த ரூபவதிகளின் அழகில்  அதிசயித்து,  பத்திரிகாஸ்ரம ரம்யத்தில்,  அங்கு வீசிய இனிய  ஹிமயமலைத் தென்றலில் கலந்த சுகந்த மணத்தில் தங்களை  இழந்து மதி மயங்கி தவித்தார்கள்.  உனக்குச் சேவை செய்த  அந்த அழகிய  நாரீமணிகளில் மிகவும் அழகானவளான  ஊர்வசி என்பவளை நரநாராயணனான   நீ  இந்திரனுக்கு பரிசாக அளித்து அவனை திருப்பி அனுப்பினாய்.  ஏமாற்றத்தாலும் வெட்கத்தாலும் தலை குனிந்த  மன்மதன்   தனது தவறுக்கு வருந்தினான்.  அவ்வாறே  இந்திரனும்.

दृष्ट्वोर्वशीं तव कथां च निशम्य शक्र:
पर्याकुलोऽजनि भवन्महिमावमर्शात् ।
एवं प्रशान्तरमणीयतरावतारा-
त्त्वत्तोऽधिको वरद कृष्णतनुस्त्वमेव ॥८॥

dr̥ṣṭvōrvaśīṁ tava kathāṁ ca niśamya śakraḥ
paryākulō:’jani bhavanmahimāvamarśāt |
ēvaṁ praśāntaramaṇīyatarāvatārā-
ttvattō:’dhikō varada kr̥ṣṇatanustvamēva || 16-8 ||

த்³ருஷ்ட்வோர்வஶீம் தவ கதா²ம் ச நிஶம்ய ஶக்ர꞉
பர்யாகுலோ(அ)ஜனி ப⁴வன்மஹிமாவமர்ஶாத் |
ஏவம் ப்ரஶாந்தரமணீயதராவதாரா-
த்த்வத்தோ(அ)தி⁴கோ வரத³ க்ருஷ்ணதனுஸ்த்வமேவ || 16-8 ||

உண்ணி  கிருஷ்ணா,  இந்திரன்  ஊர்வசியின் அழகில் திகைத்தான்.  உனது  தவவலிமை, மஹிமை புரிந்தது.  உள்ளூர ஒரு பயமும் வந்துவிட்டது.  தனது உத்யோகம் பறிபோய்விடுமோ வென்று  நடுங்கினான்.  

வரம் தரும் வள்ளலே,  உன்னுடைய  இந்த நர நாராயணன் அவதாரம்  மிகவும் அமைதியாகவும்  அழகாகவும்  இருந்தாலும், எல்லாவற்றிலும் மனதை கொள்ளை கொள்வது  உன் கிருஷ்ண  அவதாரம் தான் அப்பா.  என்ன கருணை என்ன அழகு,என்ன இனிமை, சௌலப்யம். அன்பு.  நிச்சயம்  இது பூர்ணாவதாரம் தான். 

दक्षस्तु धातुरतिलालनया रजोऽन्धो
नात्यादृतस्त्वयि च कष्टमशान्तिरासीत् ।
येन व्यरुन्ध स भवत्तनुमेव शर्वं
यज्ञे च वैरपिशुने स्वसुतां व्यमानीत् ॥९॥

dakṣastu dhāturatilālanayā rajō:’ndhō
nātyādr̥tastvayi ca kaṣṭamaśāntirāsīt |
yēna vyarundha sa bhavattanumēva śarvaṁ
yajñē ca vairapiśunē svasutāṁ vyamānīt || 16-9 ||

த³க்ஷஸ்து தா⁴துரதிலாலனயா ரஜோ(அ)ந்தோ⁴
நாத்யாத்³ருதஸ்த்வயி ச கஷ்டமஶாந்திராஸீத் |
யேன வ்யருந்த⁴ ஸ ப⁴வத்தனுமேவ ஶர்வம்
யஜ்ஞே ச வைரபிஶுனே ஸ்வஸுதாம் வ்யமானீத் || 16-9 ||

தக்ஷன்  தனது தந்தை ப்ரம்மா  தனக்கு கொடுத்த  அந்தஸ்து,  பெருமையில் தலை கொழுத்துப் போனான்.  அவனுக்கு ஆணவம் கண்ணை மறைத்தது. காரணம் அவனுள்ளே இருந்த  ரஜோகுணத்தின் ஈர்ப்பு .  அகங்காரத்தின் உச்ச நிலை.  நாராயணா, நீ யார் என்று அறியும் சக்தியைக்கூட  அவன் அறியா வண்ணம் அவன் ஆணவம்  அவனை ஆக்கிரமித்தது.  உன் மேல் மரியாதை  குறைந்தது , மறைந்தது.  தனது  மருமகனான  பரமேஸ்வரனைக் கூட  துச்சமாக  எண்ண  ஆரம்பித்து விட்டான்.  இழிவு படுத்தினான்.  சிவன் யார், நீ தானே.!   ஹரிஹரன் அல்லவா நீ?  தக்ஷன்  அதிக சக்தி பெற யாகம் வளர்த்தான். அதில் பங்கேற்க அனைத்து தேவர்களையும் தேவதைகளையும்  அழைத்தான். தனது மகள்  ஸதியின் கணவன்  பரமேஸ்வரனை அழைக்கவில்லை.  அவன்  பெற்ற மகளையே அவமானப் படுத்தினான்.   சிவனை உதாசீனப் படுத்தினான்.

क्रुद्धेशमर्दितमख: स तु कृत्तशीर्षो
देवप्रसादितहरादथ लब्धजीव: ।
त्वत्पूरितक्रतुवर: पुनराप शान्तिं
स त्वं प्रशान्तिकर पाहि मरुत्पुरेश ॥१०॥

kruddhē śamarditamakhaḥ sa tu kr̥ttaśīrṣō
dēvaprasāditaharādatha labdhajīvaḥ |
tvatpūritakratuvaraḥ punarāpa śāntiṁ
sa tvaṁ praśāntikara pāhi marutpurēśa || 16-10 ||

க்ருத்³தே⁴ ஶமர்தி³தமக²꞉ ஸ து க்ருத்தஶீர்ஷோ
தே³வப்ரஸாதி³தஹராத³த² லப்³த⁴ஜீவ꞉ |
த்வத்பூரிதக்ரதுவர꞉ புனராப ஶாந்திம்
ஸ த்வம் ப்ரஶாந்திகர பாஹி மருத்புரேஶ || 16-10 ||

ஸதியின்  நிலைமையை உணர்ந்த  பரம சிவன்  தக்ஷனின் யாகத்திற்கு சென்று  அதை அழித்து, அவன் சிரத்தையும் கொய்தார்.  தேவர்கள்  வேண்டியதால் , அவனை மன்னித்து   மீண்டும்  உயிர்ப்பிச்சை அளித்தார். யாகத்தை முடிக்க அருளினார்.  தக்ஷன் திருந்தினான் , அவன் ஆணவம் அவனை விட்டு  அகன்றது. தான்  சிவன்  சொல்லியும் கேளாமல் தந்தை அழைக்காமலேயே  தக்ஷன் யாகத்துக்கு சென்று அவமதிக்கப்பட்ட  ஸதி, அந்த   யாகத்திலேயே உயிர் நீத்தாள்.  கொடுங்கோபத்தோடு ஸதியின்  உயிரற்ற கருகிய உடலை தூக்கிக்கொண்டு  சிவன்  ஆடிய  ருத்ர தாண்டவத்தை போது  அவள் உடல்  51 துண்டுகளாக  பூமியில் விழுந்த இடங்கள் தான் 51 சக்தி பீடங்கள். (இதைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன்)

 எண்டே குருவாயூரப்பா, எல்லோருக்கும்  அமைதியும் ஆனந்தமும் தரும்  தெய்வமே,  உன் கருணையை என் மீதும் காட்டப்பா. என் நோய்களை நீக்கி என்னை ரக்ஷித்தருளவேண்டுமப்பா.

இவ்வாறு  ஸ்ரீமந்  நாராயணீயம்  16வது தசகம் நிறைவு பெறுகிறது. 




Tuesday, June 29, 2021

life lesson

 


Dear Friends.

Do you find this series of letters  interesting and worth reading and circulating to your contacts and friends   Of course if you find the contents  beneficial and would worth considering .. Interaction with you would be stimulating and friendship thickens. Now  communication is onesided.

We always  have solutions to all the  problems  ONLY WHEN   they are not ours, and when it comes to facing our own  problems, we  get bewildered and  confused. We  struggle to  find solutions and seek some others to help us out of the situation. .  Problems  should be deeply analysised, because solutions are embedded there within the problems themselves..

Some one thought he was clever and asked God: “If everything is already  written in Destiny, then WHY should I  pray?” 
God knows  us,  and so smilingly replied  '' have also written  CONDITIONS APPLY''

It is the  experience of most of us  that  ''empty pockets teach facts of  life. But full pockets spoil us in million ways''.
Strangely enough,  for one reason or the other,  every one  in the world is afraid to speak the  truth.  Why because  of the fear to  face the consequences  after  telling the  truth''

Anger does more harm to us than to others, and so  getting angry is punishing  ourselves  for the  mistakes of others.
 Everything about the future is  uncertain,  But one thing is sure:  
God has already arranged all our  tomorrows.  We just have to TRUST HIM TODAY !!

J K SIVAN 

GEETHANJALI

 கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --                                                       தாகூர் 



76.   உன்னெதிரே நிற்கட்டுமா?


(76)   Day after day, O lord of my life, shall I stand before thee face to face?
With folded hands, O lord of all worlds, shall I stand before thee face to face?
Under thy great sky in solitude and silence,
with humble heart shall I stand before thee face to face?
In this laborious world of thine, tumultuous with toil and with struggle,
among hurrying crowds shall I stand before thee face to face?
And when my work shall be done in this world,
O King of kings, alone and speechless shall I stand before thee face to face?

கிருஷ்ணா, என் உயிரே,  நான் நாள்தோறும்  உன்னைப் பார்த்துக்  கொண்டே உன் எதிரில் கைகட்டி நிற்கட்டுமா? அப்படி ஒரு ஆசை  உள்ளே வேகம் எடுக்கிறதே.
உன்னைப்பற்றி நினைத்தாலே  என் கைகள் தானாகவே  கூப்பி உன்னை வணங்குகிறது. 
நீ ஆகாசம் பூமி எல்லாம் கடந்தவன். உன் கீழே காலடியில் தான்  வானமே எல்லையாக நிற்கிறது. 
உன் காலடியில் , அமைதியாக, பணிவான  ஹ்ருதயத்தோடு  உன் முன்னால்  நான் நிற்கட்டுமா ?
இந்த உலகம் என்று அமைதியாகி இருந்தது? எப்போதும் ஓயாத ஒழியாத எதையோ தேடிக்கொண்டே இருக்க வைக்கும் இந்த  மாய பிரபஞ்சத்தில்,  ஆர்ப்பாட்ட  அல்லல் துயரங்களின் சப்தத்தில், உன்னை மட்டும் நினைவில் கொண்டவனாக, அமைதியாக உன் முன்  நிற்கட்டுமா?
நான் செய்யவேண்டியன  என்று எனக்கு சில நிபந்தனைகள், அந்த வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு, உன் முகத்தைப்   பார்த்த்துக் கொண்டே நிற்கட்டுமா கிருஷ்ணா.

தேவாதி தேவா, பிரபஞ்ச நாயகா, எனக்கு பேச்சும் வரவில்லை, எவரையும்  தேடவுமில்லை. தனியனாக ஆனந்தமாக  உன்னைப் பார்த்துக்கொண்டே  இருக்கட்டுமா?

தொடரும் 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...