Wednesday, June 9, 2021

CHANAKYAN

 



சகல கலா வல்ல  சாணக்கியன்.  -    நங்கநல்லூர்  J  K  SIVAN  --


சாணக்கியன் கோடியில் ஒருவன்.  அதி புத்தி சாலி. தீர்க்க தரிசி.  கடவுள் பக்தி நிறைந்தவன். அவன் மனதில் நேர்மை நாணயம் இருந்ததால் அவன் வார்த்தைகள் தெளிவாக பாரபக்ஷம் இல்லாமல் இருப்பதை உணர்கிறோம்.  சில வார்த்தைகள்  காலத்துக்கு ஒவ்வாமல் போய்விட்டது. அது அவன் தப்பில்லை. காலத்தின் கோலம். 


जानीयात्प्रेषणे भृत्यान्बान्धवान् व्यसनागमे ।
मित्रं चापत्तिकालेषु भार्यां च विभवक्षये ॥1-11

ஜாநீயாத்ப்ரேஷணே ப்⁴ரு’த்யாந்பா³ந்த⁴வாந் வ்யஸநாக³மே । மித்ரம் சாபத்திகாலேஷு பா⁴ர்யாம் ச விப⁴வக்ஷயே ॥ 01-11

டேய்  இங்கே வா, இதோ இந்த வேலையை  இப்படிச்செய் என்று ஒரு பணியாளுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி விட்டு அவன் வேலையை எப்படி முடிக்கிறான் என்று எஜமானன் கவனிக்கும்போது தான் தெரியும் அவன் எவ்வளவு கெட்டிக்காரனாக, நேர்மையானவன்  என்று.
துன்பம் வந்த போது தான் தெரிகிறது  மனைவி எவ்வளவு  பாசமானவள், நேசமானவள் , நெசமானவள் என்று.   நாம் கஷ்டப்படும்போது தான்  இதுவரை நம்மைச் சுற்றி இருந்த உறவுகள் எப்படிப்பட்டவர்கள் என்று துல்லியமாக புரியும்.

आतुरे व्यसने प्राप्ते दुर्भिक्षे शत्रुसङ्कटे ।
राजद्वारे श्मशाने च यस्तिष्ठति स बान्धवः ॥ 1-12

ஆதுரே வ்யஸநே ப்ராப்தே து³ர்பி⁴க்ஷே ஶத்ருஸங்கடே । ராஜத்³வாரே ஶ்மஶாநே ச யஸ்திஷ்ட²தி ஸ பா³ந்த⁴வ: ॥ 01-12

வள்ளுவர்  எவ்வளவு அழகாக கவனித்து சொல்லியிருக்கிறார்.  உடுக்கை இழந்தவன் கை  போல் என்று.  எப்படி இடுப்பு வேஷ்டி அவிழும்போது கை தானாகவே வேகமாக சென்று அதை பிடித்து இழுத்து இடுப்பில் சுற்றி காட்டுகிறதோ, அதுபோல்  நமக்கு கஷ்டம், துன்பம் என்று வந்ததை அறிந்து ஓடி வந்து உதவுபவன்  உண்மைநண்பன்.  

यो ध्रुवाणि परित्यज्य अध्रुवं परिषेवते ।
ध्रुवाणि तस्य नश्यन्ति चाध्रुवं नष्टमेव हि ॥ 1-13

யோ த்⁴ருவாணி பரித்யஜ்ய அத்⁴ருவம் பரிஷேவதே । த்⁴ருவாணி தஸ்ய நஶ்யந்தி சாத்⁴ருவம் நஷ்டமேவ ஹி ॥ 01-13 1

இந்த வேடிக்கை கவனித்தீர்களா?  எது  சாஸ்வதமோ, நித்யத்வஸ்துவோ , அதை விட்டுவிட்டு  அழியப்போகும் ஒன்றை தேடி ஓடி பிடித்துக் கொள்கிறோம்.  இதனால் என்ன நடக்கும்?  அழியாதது,  நித்தியமானது  கிடைத்தும் இருந்தும் அதை  துறந்தோம், எது  அநித்யமானதோ, சாஸ்வதமில்லையோ, அதுவும் நம்மை விட்டு  அகன்றுவிட்டு ஒன்றுமில்லாமல் வாயைப் பிளக்கிறோம்.


वरयेत्कुलजां प्राज्ञो विरूपामपि कन्यकाम् ।
रूपशीलां न नीचस्य विवाहः सदृशे कुले ॥  1-14

 வரயேத்குலஜாம் ப்ராஜ்ஞோ விரூபாமபி கந்யகாம் । ரூபஶீலாம் ந நீசஸ்ய விவாஹ: ஸத்³ரு’ஶே குலே ॥ 01-14

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எவ்வளவு உண்மை.  கெட்டிக்காரன் நல்ல குடும்பம், பழக்க வழக்கமுள்ள  பெண்ணை, ஏழையாக இருந்தாலும்,  அழகற்றவளாக, குறைபாடுள்ள அங்கத்தினளாக இருந்தாலும்  ஏற்றுக்கொள்வான். அந்தஸ்துக்கு மீறி, அழகால் மயங்கி, லாபம் கருதி  மணந்தவன் படும்  அவஸ்தை , கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.  

नदीनां शस्त्रपाणीनांनखीनां श‍ृङ्गिणां तथा ।
विश्वासो नैव कर्तव्यः स्त्रीषु राजकुलेषु च ॥ 1 – 15

நதீ³நாம் ஶஸ்த்ரபாணீநாம்நகீ²நாம் ஶ்ரு’ங்கி³ணாம் ததா² । விஶ்வாஸோ நைவ கர்தவ்ய: ஸ்த்ரீஷு ராஜகுலேஷு ச ॥ 01-15

எதையெல்லாம்  நம்பக்கூடாது என்று ஆயிரம் வருஷங்களுக்கு முன்  சொன்னது.  ஆழம் தெரியாமல் ஆற்றில் காலை விடாதே.  ஆயுதம் வைத்துக்கொண்டிருப்பவனை அணுகாதே.  கொம்பு, நகம், கூரிய  பல்லுள்ள மிருகங்கள் எப்போது வேண்டுமானாலும் காரணமின்றி தாக்கும். கிட்டே போகாதே.  பெரிய இடத்து  பெண்கள் இதில் கொஞ்சமும் குறை இல்லாதவர்கள். ஜாக்கிரதை. 

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...