Thursday, June 10, 2021

ORU ARPUDHA GNANI


 ஒரு அற்புத ஞானி      -   நங்கநல்லூர்   J K   SIVAN  --சேஷாத்ரி  ஸ்வாமிகள்  



''அங்கே வா,  வந்து பாரு   ''


மகான்களை, மஹநீயர்களை நாம் ஏன்  இன்றும்  அவர்களது  அதிஷ்டானங்களில் சென்று வழி படுகிறோம். அவர்கள் ஜீவன்முக்தர்கள், அதாவது  பூத சரீரம் மறைந்தாலும்,  சூக்ஷ்ம சரீரத்தில் என்றும்  நம்மோடு எங்கும் இருப்பவர்கள்,  அவர்கள்  உடலை அடக்கம் செய்த இடத்தில்   அவர்களது  ஜீவ  சக்தியை   எளிதில் அதிகம் அறிய வழி உண்டு.  மஹான்கள் தேக வியோகம் அடைந்தபிறகு அவர்கள் விருப்பப்படியே  சமாதி அடைவதால் அங்கே  அவர்களது  அதிஷ் டானங்களில் ஜீவ சக்தி அதிர்வலைகள் நிரம்ப  நமக்கு கிடைக்கிறது.   கோவிந்தபுரத்தில்  போதேந்திரா சமாதியில் இன்னும்  அவரது  தியானம் ஓம் என்ற சப்தம் மெல்லிதாக கேட்க முடிகிறது.  மந்திராலயத்தில்,  காஞ்சி  மடத்தில்  ரமணாஸ்ரமத்தில் எல்லாம்  அந்த மஹான்கள்  இருப்பதை   உணரமுடிகிறது. மஹான்க ளின்
சக்தி  அளவற்றது, ஆழம் காணமுடியாதது.  என்றும் இருப்பது.   ஒரு ஆச்சர்யமான சம்பவம்  படித்தேன், சொல்கிறேன்.  பரணீதரன் எழுதியது.


ஒருமுறை  வள்ளிமலை ஸ்வாமிகளின்   குகைக்கு,  ஒரு வயதானவர் வந்தார்.

''வாருங்கள்   ''என்று உபசரித்தார்  ஸ்வாமிகள்.

''எனக்கு பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடு''  

ஒரு பாத்திரத்தில் இருந்த  கஞ்சியை  ஸ்வாமிகள் கொடுக்க, அதை பருகிவிட்டு அந்த முதியவர் சென்றுவிட்டார். ஸ்வாமிகள் சில சிஷ்யர்களை கூப்பிட்டு  

''இப்போது வந்தாரே , யார் அந்த முதியவர்,  எங்கே இருப்பவர் என்று அறிந்து வாருங்கள்"''என்று அனுப்பினார்.  எதற்கு ?'

'யாரால்  மூன்று  படி  (ஒரு படி  ஒன்றரை   கிலோ கொள்வது)  கஞ்சியை  ஒரே மூச்சில் சர்வ  சாதாரணமாக குடிக்க முடியும்? அமானுஷ்ய மான  செயல் அல்லவா?'

'சுவாமி எங்களால் அவரை பின் தொடர்ந்து சென்று கண்டுபிடிக்க முடியவில்லை''

''''ஏன்?'''
'வேகமாக சென்று கொண்டே இருந்தவர்  திடீரென்று எங்கள் கண் முன்னாலே இருந்து மறைந்து விட்டார்''

அந்த நாளில் இருந்து வள்ளிமலை  ஸ்வாமிகள்  தினமும்  அதிகப்படியான  உணவை தயாரித்து  வைத்திருந்தார். ஒருவேளை அந்த முதியவர் மீண்டும் வந்து உணவு கேட்டால்?  முதியவர் வருவதில்லை. ஒரு கீரிப்பிள்ளை தினமும் வந்து  அந்த  அதிகப்படி உணவை சாப்பிட்டு விட்டு ஓடிவிடும்.

பிறகு தான் வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு புரிந்தது.  சேஷாத்ரி ஸ்வாமிகள் தான்  அந்த முதியவர், மற்றும் கீரிப்பிள்ளையாக வந்ததும்  என்று .

திருவண்ணாமலையில் அவர்  ஜீவிய  வந்தராக இருந்த காலத்தில்  சேஷாத்ரி  ஸ்வாமிகளை  எதிர்பாராத இடங்களில் சந்திக்கலாம். பெரும்பாலும் மயான பூமியில் அவர் சென்று அமர்வார். அங்குள்ள  வெட்டியான்  என்று சொல்கிறோமே,  உடல்களை  எரிப்பவர், குழி தோண்டி புதைப்பவர், அவருக்கு  சேஷாத்ரி ஸ்வாமிகளை ரொம்ப பிடிக்கும்.  அவரோடு  அன்பாக பழகி  அவர் அளித்ததை  ஸ்வாமிகள் சிலசமயம்  உண்பார். 

யாரேனும்  தனவந்தர்கள், மற்றும்  பக்தர்கள் தனக்கு அளித்த  ஆடைகள், அணிகலன்கள் உணவுப் பண்டங்கள் எள்ளவற்றையும்  ஒன்றுவிடாமல்   அந்த  மயான பணியாளருக்கு   தந்துவிடுவார்.  எப்போதும் போல்   தன்னுடைய   கந்தல் துணியோடு சுற்றிக்கொண்டிருப்பார்.


சேஷாத்ரி ஸ்வாமிகள்  மஹா சமாதி அடைந்த போது  எண்ணற்ற  பக்தர்கள்  கண்களில் நீரோடு அவரை வழிபட்டபோது  இந்த  மயான பணியாள ரும்  ஸ்வாமிகள் மறைவுக்கு  வருந்தியவர்களில்  ஒருவர் , அவர்  ஸ்வாமிகளை பற்றி சொல்வதைக் கேட்போம்:  

''என்ன  ஒளிங்க   அந்த  சாமி   கண்ணிலே,  எவ்வ ளவு துறு துறு  ன்னு இருப்பாரு,  எப்போவும் ஏதாவது யாருக்காவது நல்லது செஞ்சுக்கிட்டே  இருக்கிற  சாமி  அவுரு,    ஒண்ணு  ரெண்டு வார்த்தை தான் பேசுவாரு ,    பாதி நேரம் புரியாது. புரிஞ்சா  அது  தேன்  மாதிரி தித்திப்பா  இருக்கு முங்க, என் கனாவிலே 
ஒருநா  வந்தாரு.   அப்படியே  வந்து  ''என்னடா''ன் னு  ஆசையா  கட்டிக்கிட்டாருங்க.
''நான் உங்களை பார்க்க முடியலேயே இப்போ ''ன்னு  அழுவுறேன்.''
டே  நிறுத்துடா,  நான் எங்கேடா போய்ட்டேன், நான் தான் வள்ளிமலையிலே இருக்கிறேனே,  அங்கே போ, என்னைப்பார் அங்கே போ ''   அப்படின்னாரு.மக்கா நாளே ஓடினேன் வள்ளிமலைக்கு.''
  
வள்ளிமலை ஸ்வாமிகளை வணங்கி  தான் கண்ட  கனவைப்பற்றி  அந்த  எளிய மனிதர்  சொன்னார்.  வள்ளிமலை ஸ்வாமிகள் கண்களை மூடிக்கொண்டு ஆத்மார்த்தமாக தனது குருநாதர்  சேஷாத்ரி ஸ்வாமிகளை   வணங்கினார்.

அன்று முழுதும்  அந்த மயான பணியாள்  அங்கேயே    காலையிலிருந்து  சேஷாத்திரி ஸ்வாமிகள் வரவுக்காக, தரிசனத்துக்காக  காத்திருந்தார்.  சாயந்திரம் ஆயிற்று.   ஸ்வாமி களைக் காணோம்.
 குகை வாசலுக்கு அருகே ஒரு பெரிய பாறையில்  வழக்கம்போல்  வள்ளிமலை ஸ்வாமிகள் தனது குகைக்கு வந்த அந்த முதியவருக்காக  தயாரித்த உணவை  வைத்தார்.   வேகமாக ஒருகீரிப்பிள்ளை
ஓடி வந்தது. 
வள்ளிமலை ஸ்வாமிகள், மற்ற பக்தர்கள் எல்லோ ரும் திருப்புகழ் பாடினார்கள்.   வெல்லத்தோடு  கலந்து வைத்த உணவு அத்தனையும்  கீரிப் பிள்ளை சுகமாக சாப்பிட்டு விட்டு அவர்களை பார்த்தது.  கீரிப்பிள்ளையை காணோம். சேஷாத்ரி ஸ்வாமிகள் ஒரு க்ஷணம்    தோன்றி  அனைவருக்கும்  காட்சி அளித்தார்,

''சாமி  சாமி  எதுக்கு என்னை தனியா  அங்கே விட்டுட்டு  இங்கே ஓடி வந்துட்டீங்க சாமி ''என்று அந்த மயான பணியாளர் ஓவென்று கதறினார்.

அதே சமயம் தன்னை  வள்ளி மலைக்கு வரச் சொல்லி தரிசனம் தந்ததற்கு  நன்றி சொல்ல வார்த்தை தெ ரியாமல்  ஆனந்தத்தில் திக்குமுக்காடினார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...