Sunday, March 31, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்.  J K SIVAN 

மஹா பாரதம்.

                    பயங்கர  விபரீதம்  நெருங்குகிறதே...

லக்ஷக் கணக்கான  ஸமஸ்க்ரித  ஸ்லோகங்களில்  வேத வியாசர்  இயற்றி  பிள்ளையார்  ஒரு  தந்தத்தை ஒடித்து எழுது கோலாக  உப்போயோகித்து  ஓலைச்சுவடிகளில் வடித்ததை  சிறந்த  ஞானஸ்தர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து  அதை  பூரா  அலசி,  வடிகட்டி,  வேண்டியதை, தேவையானதை மட்டும் திரட்டுப்பாலாக சுருக்கி  தந்தது தான்  என்னுடைய ''ஐந்தாம் வேதம்''  இரு பாகங்கள்.  இதில் ஒரு சிறப்பு அம்சம் இதில் விஷ்ணு ஸஹஸ்ரநாம, பகவத்கீதை, யக்ஷப்ரச்னம் அனைத்துமே  முழுமையாக தமிழில் வாடி கட்டி எளிமையாக்கி குழந்தைகளுக்கும்  மற்றவருக்கும்  விலையில்லாத புத்தகமாக்கினேன்.

இப்போது ஹஸ்தினாபுரம் செல்வோம்.
ஹஸ்தினாபுரத்தில்  மனதில் கொஞ்சமும் அமைதி இல்லாமல்  திருதராஷ்ட்ரன்   சஞ்சயன் வரவுக்காக ஆவலோடு காத்திருந்தான்.  யுதிஷ்டிரன் என்ன பதில் சொன்னானோ? கிருஷ்ணன் அங்கிருந்தால் அவன் எண்ணம் என்ன?????????? 

சஞ்சயன் வந்துவிட்டானா.......  வந்தவுடன் உடனே என்னிடம் அழைத்து வாருங்கள்  என்று கேட்டுக்கொண்டே இருந்தான் திருதராஷ்டிரன்.   சஞ்சயன்  அரண்மனையை அடைந்ததும்   வாயிற் காப்போன்  ஓடி ச்சென்று சஞ்சயன் வரவைச் சொன்னதும் ''உடனே என்னிடம் அழைத்து வா''  என்று கட்டளையிட்டான் விழியற்ற  வழியற்ற  திருதராஷ்டிரன்.    சஞ்சயன்  திருதராஷ்டிரனை  வணங்கி  தான் வந்திருப்பதை அறிவித்தான்.

''சஞ்சயா   வா,  என்னருகில் உட்கார் ..  நீ  போய்  வந்த  விஷயம் உடனே ஒன்று விடாமல் என்னிடம் சொல்''

''அரசே, யுதிஷ்டிரன் முதலில்  உங்களைத்தான்  வணங்கி விசாரித்தான். பிறகு இங்குள்ள  அனைத்து  பெரியோர்களைப் பற்றி கேட்டு  அவர்களுக்கு  பாண்டவர்களின்  வணக்கத்தை சொல்ல சொன்னான். 
அரசே.  யுதிஷ்டிரன்  காட்டில்  நாட்டில் எங்கு இருப்பினும்,  தனது சகோதரர்களோடு, த்ரௌபதியோடு  மற்ற ஆதரவான  அரசர்களோடு எல்லோராலும்  மதிக்கப்பட்டு சுகமாக உள்ளான்.

 'அரசே, யுதிஷ்டிரன் தனது உரிமையான  இந்த்ரப்ரஸ்தத்தை உடனே தருமாறு கேட்கிறான்.  கௌரவர்கள் இழைத்த  தீங்கை, கொடுமையை அநியாய அதர்ம செயல் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.  அவனது உரிமையை பறித்து வைத்துக்கொண்ட   அவப் பெயர்  இனி இவ்வுலகில் தங்களை  விட்டு நீங்குமாறு  உடனே  ஏற்பாடு செய்ய வேண்டும்.  துரியோதனன் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தினால் அவனது அடாத செயல்களுக்கு  துணை போகிறீர்கள். அபகரித்த சொத்து துரோகத்தினால் வந்ததால் துக்கத்தையும் சேர்த்து தான் தரும். உங்கள் குல நாசத்திற்கு  நீங்களே  காரணமாகி விடக் கூடாது.  யுதிஷ்டிரன் யுத்தத்திற்கும் தயாராக இருக்கிறான். ஆனால்  சமாதானத்தையே முதலில் விரும்புகிறான். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய மக்கள் அனைவரும் அழிவது நிச்சயம். அவர்களை காப்பது உங்கள் கையில் இருக்கிறது.  உடனே  சபை கூட்டி  உங்கள் முன் நிற்கும் இந்த பிரச்னைக்கு  தீர்வு காணவேண்டும்.''  என்றான்  சஞ்சயன்

திருதராஷ்ட்ரன்   சஞ்சயன் கொண்டுவந்த செயதியை  மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தவன், ''சஞ்சயா  உடனே  இங்கே விதுரனை அனுப்பு'' என்றான். ஆள் ஓடினான். விதுரன் வந்துவிட்டான்.

'அண்ணா, விதுரன் வந்திருக்கிறேன்''  என்று வணங்கினான்.
 ''விதுரா சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொல்லி அனுப்பிய  செய்தியை நாளை சபை கூட்டி நீ அறிவிப்பாயாக. என் மனம் ஒரு நிலையில் இல்லை.  உடல் நடுங்குகிறது. புத்தி பேதலித்து விட்டது.'

''அரசே, யுதிஷ்டிரன் எல்லா வகையிலும் மூவுலகும் ஆளும் சக்தி, திறமை உடையவன். உலகம் புகழ்பவன். அவனை வனத்திற்கு அனுப்பிவிட்டு அவன் ராஜ்யத்தை  அபகரித்த துரியோதனன் செயலை கண்டிக்கத் தவறிவிட்டீர்கள். பார்வை இல்லை என்பதற்காக அரசை துரியோதனனிடம் கொடுத்து அதற்கு பலன் அனுபவிக்கிறீர்கள்.  ஒரு மா பெரும் சக்தி வாய்ந்த  பொறுப்பை  சகுனி,  கர்ணன், துரியோதனன் துச்சாதனன் ஆகியோரிடம் விட்டால் என்ன அனர்த்தம் விளையும் என்று நீங்கள் அறியவில்லை.

''அண்ணா   என் மனதில் பட்டதை  உண்மையாக  சொல்கிறேன்.   உங்களிடம்  ஒப்படைக்கப்பட்ட  இறந்த நம் சகோதரன்  பாண்டுவின் ஐந்து குழந்தைகளை ஆளாக்கி  அவர்களை பாதுகாப்பது உங்கள்  பொறுப்பில் உள்ளபோது அவர்களை எதிர்த்து, அவர்களுக்கு சேரவேண்டிய உரிமையை தடை செய்து, அபகரித்து, அவர்களை துன்புறுத்தி, அவர்கள் பலம் பெற்றவர்களாக வளர்ந்து அவர்களால்  நமது குல அழிவையே  தேடிக்கொள்ளும்படி செய்து விடாதீர்கள். உங்கள்  குழந்தைகள் அவர்களையும் சந்தோஷமாக வாழவைத்து ஒற்றுமையை நிலைநாட்டுவது உங்கள் தலையாய பொறுப்பு. யுதிஷ்டிரனை அழைத்து  அவனை அரசனாக முடி சூட்டுவதால் நன்மையே விளையும்.  அவன்  தனது சகோதரர்களோடு  உங்கள் பிள்ளைகளையும் சேர்த்துத் தான்,   நன்றாக பாதுகாப்பவன்.

செய்த  பாபத்திற்கு இதுவே பிராயச்சித்தம்.

முழு ராஜ்யத்தையும் அரசாள விட முடியாவிட்டால், பாதி ராஜ்யமான அவர்களது இந்த்ரப்ரஸ்தத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுவும் இல்லா விட்டால்  ஐந்து  கிராமங்களையாவது அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஒற்றுமை நிலவும்.  உங்கள் பெயர் விளங்கும்.''   விதுரன் சொல்லி முடித்தான்.

 ''விதுரா  நீ  சொல்லும் நியாயங்கள்  பாண்டவர்களைப் பற்றிய  உண்மைகள், தர்ம நியாயம், நேர்மை  எல்லாமே  துரியோதனன்  என்னிடம் வந்து பேசும்போது எனது  மனதை விட்டு நீங்கி விடுகிறதே  நான் என்ன செய்வது? .

அன்று இரவு கழிந்தது.   மறுநாள்  அரசவை கூடியது. பாண்டவர்கள் அனுப்பிய  செய்தி என்ன என்று அறிவதில் மிகுந்த ஆர்வமோடு  அனைத்து அரசர்களும் பிரதானிகளும் கூடியிருந்தனர்.

சஞ்சயன்  பாண்டவர்கள்   ஹஸ்தினாபுரத்தில்   அனைவருக்கும்  வாழ்த்துகள்  தெரிவித்ததை அறிவித்து  அர்ஜுனன் யுதிஷ்டிரன் கிருஷ்ணன் ஆகியோர் ஆமோதித்து  சொன்ன செய்தி என்னவென்றால் 

''துரியோதனன், யுதிஷ்டிரனிடம் தங்களுக்கு சேரவேண்டிய  ராஜ்யத்தை உடனே ஒப்படைக்க வேண்டும். தவறினால்,  யுத்தம் ஒன்றே  பதில் என்றால்  இதுவரை கௌரவர்கள் செய்த பாவத்துக்கு  தக்க கூலி பெறுவார்கள்.அர்ஜுனன் பீமனோடு  நடக்கும்  யுத்தத்தில்  கௌரவர்கள்  உயிரோடு மீள்வது அவர்களது அதிர்ஷ்டம்.''

கர்ணன் குறுக்கிட்டான்.  ''என்னைப் பொறுத்தவரை, நான்  நேர்மையோடு  தான் துரியோதனனுக்கு உழைக்கிறேன். எந்த துன்பத்தையும் யாருக்கும்  விளைவிக்க வில்லை. பாண்டவர்களை  யுத்தத்தில்  நான் ஒருவனே கொல்வேன் ''

 பீஷ்மர் குறுக்கிட்டு '' கர்ணன் பேச்சு கவைக்குதவாத வெறும் பேச்சு. பாண்டவர்கள் முழு வீரத்தில்  பதினாறில் ஒரு பங்கு கூட  இல்லாத கர்ணன் அவர்கள் அனைவரையும் கொல்வதாவது.  திருதராஷ்டிரா, உன் குல நாசத்திற்கு  முக்ய காரணம் இந்த கர்ணன் ஒருவனே.  அவனை நம்பி உன் மகன் துரியோதனன் மோசம் போகிறான். அவன் சகோதரனை விராடநகரில் அர்ஜுனன் கொன்றபோது  கர்ணன் என்ன செய்ய முடிந்தது. நம் அனைவரையும் தனி ஒருவனாக  அர்ஜுனன்   ஒரு சிறு பயலை  தேர்ப் பாகனாக வைத்துக்கொண்டு தோற்கடித்து நமது வஸ்த்ரங்களை  பறிகொடுத்தபோது  கர்ணன் என்ன செய்தான்?. மூவுலகிலும் அர்ஜுனனை வெல்வதென்பது நடவாது. அர்ஜுனன் கிருஷ்ணன் ஜோடி  நர நாரயணர்களின் அம்சம் என்பதை நான் அறிவேன் .வரட்டுப் பேச்சு பேசி காலத்தை வீணாக்க வேண்டாம்.''

துரோணர் தன்  பங்குக்கு  என்ன சொன்னார்  என்பதையும்  கேட்போம்:

''திருதராஷ்டிரா,    அவனது குரு என்பதால்  அர்ஜுனனை நான் எல்லோரையும் விட வெகு நன்றாக  அறிவேன். அவன் சொன்னதைச்  செய்பவன். சமாதானமாக அவர்களோடு இருப்பதே  உனக்கு இருக்கும் ஒரே வழி. பீஷ்மர் கணிப்பு  சரியானது.  அர்ஜுனனன் ஒருவனையே  சமாளிக்க  முடியாத போது  பீமனோடும் மற்ற பாண்டவர்களையும்  அவர்களது பெரும் சைன்யத்தோடு  ஒன்று சேர்ந்து வெல்வது அரிது''.

திருதராஷ்டிரன் புத்தி வேறு வழியில் சென்றது.  ''சஞ்சயா  நீ பார்த்தவரை  நமது சைன்யங்கள், பாண்டவ சைன்யங்களை  விட  எவ்வளவு  பலம்வாய்ந்தது என்று சொல்.''

சஞ்சயன் ஞான திருஷ்டி பெற்றவன். எதிர்காலத்தை அறியக்கூடியவன்.  ஒரு கணம் கண்மூடி யோசித்தான்.  திடீரென்று மயங்கி கீழே விழுந்தான்.   அவனை  மீண்டும் நிலைப் படுத்திக் கேட்டபோது  சஞ்சயன்  ''அரசே, இரண்டு பக்க சைன்யங்களை  நான் பார்த்தவரை, என் கணிப்பில்,  இருவர் மட்டுமே  கண்ணில் தென்படுகிறார்கள்.  பீமசேனன்  அர்ஜுனன்.   பீமன்,   துரியோதனன் மற்றும் உனது  மற்ற 99 பிள்ளைகளின் ரத்தத்தை குடிக்க  தயாராக உள்ளான். பதினாயிரம் யானை பலம் உடைய அவனை  எவரும் நெருங்க முடியாது.  மற்றும்  அனைத்து  கௌரவ சைன்யங்களும், பீஷ்மர், துரோணர் கர்ணன்  அனைவரையும்  அர்ஜுனன் ஒருவனே  கொல்வான் என்பது எனக்கு உறுதியாக தெரிகிறது. அதுவே  என்னை மயங்கச் செய்தது''  என்கிறான்  சஞ்சயன்.

''சஞ்சயா,  நீ  விவரித்த  சேனை விவரம் போதும்.   நீ  சொன்ன  நமது பக்க அணி அத்தனையும் அந்த பீமசேனன் ஒருவனுக்கு  ஈடாகாது. ஆரம்பத்திலிருந்தே என் மக்கள் அனைவரும் அந்த பீமன் ஒருவனிடம் மட்டுமே அஞ்சினார்கள். என்னென்னவோ செய்தார்கள் அவனை அழிக்க முடியவில்லை. இப்போது அவனாலேயே  அனைவரும் அழிவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. நான் அஞ்சுவது அவன் ஒருவனைத் தான்.  அரசவையில் அன்று அவன் செய்த சபதம்.  நினைத்தாலே  நடுங்கி பல இரவுகள் தூக்கமின்றி தவித்திருக்கிறேன்.   ஐயோ  என் காதில்  விடாமல் நாராசமாக  பீமன்  சபதம் செய்தது எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...''   ...... துரியோதனன் தொடையைப்  பிளந்து ரத்தத்தை குடித்து...... மற்ற  99 பேர்களையும் நானே  கொன்று....'  '  என்று  வார்த்தையின்றி தவித்தான்  திருதராஷ்டிரன்.






Saturday, March 30, 2019

KRISHNA




கொஞ்சம் மனசுக்கு கஷ்டம்
J K SIVAN

கொசு ரொம்ப சின்னது. கண்ணுக்கே தெரியாமல் இருந்தாலும் சில சமயங்கள் நம்மை கடிக்கும்போது கொஞ்சம் வலிக்கிறது. அதை பார்க்காமலேயே நமது கை அதை நசுக்குகிறது. அது போன்ற விஷயம் இது.

கிருஷ்ணனை பிடிக்காமல் இருந்தால் அது வேறு விஷயம். கிருஷ்ணனை தூஷிப்பது கிருஷ்ணன் இருந்த காலத்திலிருந்தே இருக்கிறது. சிசுபாலன் ஒன்றா இரண்டா நூறு தடவை அல்லவா பலர் முன்னிலை
யில் கிருஷ்ணனை தூஷித்தான். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? அவன் தாய்க்கு கொடுத்த வாக்கின் படி நூறாவது முறை தூஷித்தபின் சிசுபாலன் உயிர் பறி போனது. இப்போதும் கிருஷ்ணனை தூஷிப்பவர்கள் சிசுபாலன் ரகம் அல்ல. கால் தூசிக்கு சமான மானவர்கள். நாய் குலைத்தால் நாம் திருப்பி குலைக் கிறோமா? அப்படி அதை லக்ஷியம் பண்ணாமல் இருந்ததால் அதற்கு தன்னை எதிர்க்க மனிதர்களுக்கு பலம் இல்லை.பயம் என்று அர்த்தம் புரிந்து கொள்வது வேடிக்கை. குளத்தில் குளித்துவிட்டு வந்த யானை எதிரே ஒரு சேற்றில் உழன்று விட்டு வரும் பன்றியை பார்த்து விலகிப்போகிறது.
''பன்றி தனது மனவியிடம் சொல்கிறது: பார்த்தாயா, கண்ணே, யானைக்கு கூட என்னைக் கண்டால் மரியாதை, பயம். என்னைக்கண்டதும் விலகிப்போகிறது''

யானையைக் கேட்டால் சொல்லும்:

''பன்றியை என் தும்பிக்கை தொட்டால், வீசி எறிந்தால் அதன் மேல் உள்ள சேறு என் மீது அனாவசியமாக ஒட்டிக்கொள்ளும். அதைத் தொடுவானேன், சேற்றை பூசிக் கொள்வானேன்''



ஹிந்துக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ணனை சாதாரணமான மனிதனாக உருவகித்து அவன் செயல்களில் நாம் செய்யும் தவறுகளை திணிப்பது, புகுத்துவது அறிவின்மை. நமக்கும் மேலே உள்ள அதீத கருணாசாகரம் ஆண் பெண் பேதமற்றது. குற்றமற்றது. குறையொன்று மில்லாத கோவிந்தன் என்று பெயர் கொண்டவனை இழிவாக பேசுவது கெடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே சமாச்சாரம். சில விஷயங்களை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். ஆனால் முடிந்தவரை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் இந்த மாதிரி துஷ்ப்ரச்சாரங்கள் வளர்வது விஷயம் தெரியாதவர்களை நம்ப வைப்பதன் மூலம். ஆள் பிடிக்கும் வேலை. இவர்களை தண்டிக்க கிருஷ்ணன் வரவே வேண்டாம். நமது காலணி ஒன்றே போதும்.

SWAMIJI'S TIME


swamiji's  time                  J K SIVAN
vivekananda

                           5  My Master


 Day after day he would weep and   say:
"Mother, is it true that Thou existest,or is it all poetry?
Is the Blissful Mother an imagination of poets and misguided
people, or is there such a reality ?

We have seen that of books, of education in our sense of the word, he had none and so much the more natural, so much the more healthy was his mind, so much the purer his thoughts, undiluted by drinking in the thoughts of others. This thought which was upper most in his mind gained in strength every day until he could think of nothing else. He could no more conduct the worship properly, could no more attend to the various details in all their minuteness.

Often he would forget to place the food offering before the image, sometimes he would forget to wave the light, other times he would wave the lights a whole day, and forget everything else. At last it became impossible for him to serve in the temple. He left it and entered into a littlewood that was near and lived there. About this part of his life he has told me many times that he could not tell when the sun rose or set, nor how he lived. He lost all thought of himself and forgot to eat.

During this period he was lovingly watched over by a relative who put into his mouth food which he mechanically swallowed. Days and nights thus passed with the boy. When a whole day would pass, towards evening, when the peals of bells in the temples would reach the forest, the chimes, and the voices of the persons  singing, it would make the boy very sad, and he would cry: " One day is gone in vain, Mother, and Thou dost not come. One day of this short life has gone and I have not known the Truth."

In the agony of his soul, sometimes he would rub his face against the ground and weep.

This is the tremendous thirst that seizes the human heart. Later on, this very man said to me:
 " My child, suppose there is a bag of gold in one room, and a robber in the room next to it, do you think that robber can sleep? He can not. His mind will be always thinking how to get into that 
room and get possession of that gold. Do you think then that a man firmly persuaded that there is a reality behind all these sensations,
that there is a God, that there is One who never dies, One that is the infinite amount of all bliss, a bliss compared to which these pleasures of the senses are simply playthings, can rest contented without struggling to attain it?
 Can he cease his efiforts for a moment?
No. He will become mad with longing."
This divine madness seized this boy. At that time he had  no teacher; nobody to tell him anything except that everyone thought that he was out of his mind. This is the ordinary condition of things.

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்.
'' மந்த்ராலோசனை ''
இதுவரை அமைதியாக அங்கு வீற்றிருந்த கிருஷ்ணன் மேல் அங்கியால் நெற்றியை துடைத்துக் கொண்டான். அவனது பார்வை சஞ்சயனை நோக்கி இருந்தாலும் அவனுக்கும் பின்னே, நீண்ட பரவெளியில் நடக்கப்போகும் யுத்தத்தில், அதன் விளைவைப் பற்றிய தொலை நோக்கு பார்வையாக அமைந்ததை அவர்கள் எவருமே அறிய முடியவில்லை.

''சஞ்சயா, பாண்டவர்களும், கௌரவர்களும் ஏன் எல்லோருமே, சந்தோஷமாக சீரும் சிறப்புடனும் வாழவேண்டும் என்பதே என் விருப்பம். சமாதானம் ஒன்றே திருதராஷ்ட்ரனின் விருப்பம் என்று அறிவேன். ஏனென்றால் அவனுக்கு வேறு வழி கிடையாது. நான் கவனித்த வரையில் யுதிஷ்டிரன் எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மைக்கு, நியாயத்திற்கு புறம்பாக எதுவுமே செய்யவில்லை. பொறுமையாக, வந்த துன்பம் அனைத்
தையும் ஏற்று விதி விட்ட வழியின் படி நடந்து சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியவன். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்கிறோமே . பொறுத்திருந்த யுதிஷ்டிரன் பூமியை ஆளும் நேரம் வந்துவிட்டது என்று எனக்கு தோன்றுகிறது.

எது நல்லது, எது தீயது என்று என்னைக் காட்டிலும் நீ அறிவாய் என்றிருந்தால், சஞ்சயா, நீ அதை திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல். துரியோதனனைத் திருத்த உன்னால் முடியுமென்றால் அதை முயற்சி செய்யேன். பசி எடுத்தவன் உண்கிறான். தாக மெடுத்தவன் நீர் பருகிறான். உண்பது, பருகுவது போன்ற செயல்கள் தேவைப்பட்ட திருப்தியை அளிக்கிறது. செயலை விட மேலானது ஒன்று இருந்தால் சொல். அது வெறும் பயனற்ற சொல்லாக தான் இருக்கும். ஒரு நியதிக் குட்பட்டு செயல் புரியும் காற்று, சூரியன் சந்திரன் எல்லாமே நமக்கு தேவையான காலை, மாலை, பருவகாலம், மழை, உஷ்ணம் அனைத்தையும் அளிக்கிறது. சமூகம் நால்வகையாக பிரிக்கப் பட்டு ஒவ்வொரு தொழிலும் அதைச் சார்ந்தவருக்கு என்று வகைபடுத்தி இருக்கிறது. ஒரு க்ஷத்ரியன் யுத்தம் புரியாமல் இருக்க முடியுமா? நேர்மையில், சத்தியத்திற்கு புறம்பாக தனது அதிகாரத்தை செலுத்துவது தர்மமா? பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது அழகா? இப்படிப் பட்ட செயலால் தான் யுத்தம் நேருகிறது. திருதராஷ்டிரன் இப்போது அனுபவிப்பது பாண்டவர்களின் செல்வத்தை. இருட்டில் சொந்தக்காரன் அறியாமல் திருடினாலும், பகலில் கண்ணெதிரே கொள்ளையடித்தாலும், இரண்டும் ஒன்றே. தண்டிக்கத் தக்கது. பாண்டவர்களின் பங்கு நிர்ணயிக்கப் பட்டது தானே. அதை ஏன் துரியோதனன் பறித்துக்கொள்ள வேண்டும்? தனக்குரிமையான பிதுரார்ஜித சொத்து வெளியேயிருந்து சேகரிக்கப் பட்டதை விட உயர்ந்தது. மேலானது. நீ இதெல்லாம் திருதராஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் எடுத்துச் சொல். அனைவர் எதிரிலே, அரசாணி மண்டபத்தில், அபலையாக த்ரௌபதி அலறினபோது பீஷ்மன் முதல் அனைவரும் பார்த்துக் கொண்டே தானே இருந்தார்கள். பேராசை, பெருநஷ்டத்தில் தான் முடியும். இப்போது ஒற்றுமை சமாதானம் எல்லாம் பேசும் திருதராஷ்டிரன் அப்போது இதை தடுத்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். விதுரனைத் தவிர எவரும் இதை தடுக்க முயலவில்லை. சகுனி திரௌபதியை வைத்து ஆடு என்று சொல்லும்போது திருதராஷ்டிரன் ஏன் தடுக்கவில்லை? கர்ணன் தகாத சுடு சொல்லை திரௌபதியிடம் அவள் கணவர்கள் முன்னே வீசியபோது யாருமே தடுக்க வில்லையே. துச்சாதனன் திரௌபதியை மான பங்கப் படுத்த அவள் முடியைப் பிடித்திழுத்து வந்த போது சும்மா இருந்த திருதராஷ்டிரன் இப்போது சமாதானம் பேசுவது காலம் கடந்த செயல்.

சஞ்சயா, நானே நேரில் ஹஸ்தினாபுரத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். பாண்டவர்களுக்கான உரிமையை, அவர்கள் பக்கத்து நேர்மையை, நீதியை எடுத்துச் சொல்கிறேன். சமாதானமாக எல்லாம் முடிந்தால் எனக்கு தான் முதலில் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் கௌரவர்கள் எவரும் உயிரிழக்காமல் தப்புவார்கள். நீதி நேர்மை, நியாயம் எல்லாம் நான் எடுத்துச் சொன்னால் திருதராஷ்டிரன் மகனுக்கு காதில் ஏறுமோ பார்க்கலாம். நான் சமாதான பேச்சுக்கு வரும்போது எனக்கு தக்க வரவேற்பு கிடைக்குமோ என்பதே தெரியவில்லை. இந்த முயற்சியில் நான் வெற்றி பெறாவிட்டால், அர்ஜுனன் பீமன் ஆகியோரால் கௌரவர்கள் அழிவது என்னவோ நிச்சயம். கர்ணன் துச்சாதனன், முதலானோர் சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் தோற்றபோது பேசிய பேச்சுகளுக்கு பீமன் அர்ஜுனன் ஆகியோர் தக்க சமயத்தில் பதில் அளிப்பார்கள்.

துரியோதனன் ஒரு தீய உணர்ச்சிகளைப்பெருக்கும் சக்தி கொண்ட விஷ மரம். அதன் தண்டு கர்ணன். சகுனி அதன் கிளைகள், அதில் உண்டாகும் கொடிய பூக்கள், காய்கள் தான் துச்சாதனன். அடி மர வேர் திருதராஷ்டிரன்.

யுதிஷ்டிரனோ ஒரு நேர்மை, நியாய, நீதி, அடிப்படையில் விளைந்த மரம். அதன் தண்டு அர்ஜுனன். பீமன் தான் கிளைகள், நகுல சகாதேவர்கள் பூவும் காய்களும். அடிவேர் நான்,மற்றும் அறநெறி படைத்த ரிஷிகள், முனிவர்கள்.

திருதராஷ்டிரனும் அவன் மக்களும் ஒரு வனம். அதில் உலவும் சிங்கங்கள் புலிகள் தான் பாண்டவர்கள். சிங்கம் புலி இல்லை என்றால் காடு அழியும். காடின்றி சிங்கம் புலி வாழ இயலாது. ஒன்றை ஒன்று சார்ந்தது. பாண்டவர்கள் திருதராஷ்டிரனை இன்னும் கூட மதிக்கிறார்கள். எனவே சமாதானத்துக்கும் சண்டைக்கும் இரண்டிற்குமே பாண்டவர்கள் தயார். திருதராஷ்டிரன் எதை விரும்புகிறான்? நான் சொன்னதை எல்லாம் எடுத்துச் சொல்.''

கிருஷ்ணனின் பேச்சு, அதில் இருந்த சாதுர்யம், நீதி நேர்மை, நியாயவாதம் எல்லாமே எங்கும் எதிரொலித்தது. ஆம் என்று மரங்கள் கிளைகள் ஆடின, இலைகள் படபடத்து கை தட்டின, பறவை விலங்கினங்கள் மனமொப்பி ஆதரவளிப்பது போல் அவற்றுக்குரிய சப்தஜாலங்களால் ஆமோதித்தன. விதி சிரித்தது.

சஞ்சயன் விடை பெற்று சென்றான்.
THOSE INTERESTED IN OBTAININGD THE TWO VOLUMES OF ''AINDHAM VEDHAM'' PLEASE CONTACT BY WHATSAPP 9840279080 FOR DETAILS.

Friday, March 29, 2019

arupaththu moovar



 அறுபத்து மூவர்                      J K  SIVAN  

திருக்குறிப்புதொண்ட நாயனார்                            

                                                               தூய்மையா(க்கி)ன  தொண்டர்

சைவ திரு நெறியில்  அறுபத்து மூன்று  நாயன்மார்களை, சிறந்த சிவ பக்தர்களாக  சுந்தரர் காலத்திலேயே திருத்தொண்டத் தொகை  என்று பாடி இருக்கிறார்.  சுந்தரர் காலத்திற்கு பிறகும் எத்தனையோ  சிவபக்தர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களை நாயன்மார்களாக்க  இன்னொரு சுந்தரரோ சைவசமய குரவர்களோ  இல்லையே.  நாம்  அவர்களைப்பற்றியும்  தேடிப்பிடித்து அறிந்து கொள்ளவேண்டும்.  அவர்கள் குடத்திலிட்ட விளக்குகள். வெளியே  தம்பட்டம் அடித்து படாடோபமாக  விளம்பரம் செய்பவர்களோ அதைச்செய்ய அனுமதிக்கவோ மாட்டார்கள். இறைவன் அவர்களுக்கு நேரில் அருள்வதை அவர்களோ மற்றவர்களோ சொன்னாலொழிய தெரியப்போவதில்லை.  சுந்தரர் கால  அறுபத்து மூவரில் மற்றுமொருவரை இன்று அறிந்து கொள்வோம்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் என்ற  சிவபக்தர்  தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில்  வெளுத்து தரும்  வண்ணார்  குலத்தவர்.

நிறைய  புலவர்கள், துறவிகள்,  சித்தர்கள், ஞானிகள்  ஆகியோரின்  இயற்பெயர்  நமக்கு கிடைப்பதில்லை. அவர்களது,  உருவம், பழக்கம், தோற்றம்  செயல், பற்றிய   பெயர்களே அவர்கள் அடையாளமாக நிலைத்து விட்டது.   இந்த அடியார் பெயர் ஏன்   குறிப்புத் தொண்டர்  (திரு என்பது மரியாதைக்கான  சொல்)
என்றால் சிவபக்தரான அவர்  சிவனடியார்களையே, எப்போதும்   சுற்றும் வந்து போல்,  நெருங்கி பழகி அவர்களது உள்ளத்தில் அவர்கள் என்ன தேவை என்று நினைக்கிறார்களோ அதை அறிந்து அதை பூர்த்தி செயது அவர்களை மகிழ்விக்கும்  பணியில் ஈடுபட்டார். அவர்களை பற்றிய குறிப்புகளை நுட்பமாக அறிந்து  சேவை, பணிவிடை,  செய்ததால்  இந்த சிவனடியாரை திருக்குறிப்பு தொண்டர் என்று அழைத்தார்கள். நாமும் அவரை அப்படியே  63பேரில் ஒருவராக அழைத்து வணங்குகிறோம்.

இந்த சிவனடியார் தொழில் துணி வெளுத்து தருவது என்பதால்,  சிவனடியார்கள் ஆடைகளை எடுத்துச் சென்று  அன்போடு கவனத்தோடு, பொறுப்போடு  வெளுத்தும் தரும் பணியில் ஈடுபட்டார்.

சர்வ லோகத்திலும் நடப்பதை அறியும் சர்வேஸ்வரன் திருக்குறிப்பு தொண்டர் சேவையை அவர் பக்தியை மெச்சினான். பூலோகத்தில் அனைவருக்கும் அவர் மஹிமை தெரியவேண்டும் என்று திருவிளையாடல் ஒன்று நிகழ்த்தினது தான் இந்த அடியார் பற்றிய இன்றைய தொகுப்பு.

காஞ்சிபுரத்தில் அருள் பாலிக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஒரு குளிர் மிகுந்த மழைகாலத்தை தேர்ந்தெடுத்தார். ஒரு பரம ஏழை சிவனடியாராக உருக் கொண்டு திருக்குறிப்பு தொண்டர் வசித்த இடத்துக்கு வருகிறார்.
முதிர்ந்த உடல், பளபளக்கும்  பொன்மேனி.  அதில் வெண்மையாக கண்ணைப் பறிக்கும்  விபூதி பூச்சு.  கழுத்து கைகளில், தலையில் ஜாடையில் ருத்ராக்ஷ மாலைகள்.  இடையில் அழுக்கடைந்த கறைபடிந்த  ஆடை.

''சிவோஹம் ''   கம்பீரமான குரல்  கேட்ட அடுத்த கணம் திருக்குறிப்பு தொண்டர்  ஓடிவருகிறார்.  முதிர்ந்த சிவனடியாரை உபசரித்து வீட்டுக்குள் அழைத்து வணங்குகிறார்.  அவரது தொழில் துணி வெளுப்பது என்பதால் அவர் கண்கள் சிவனடியாரின் இடையில் இருந்த அழுக்காடையை நோக்குகிறது.

''குருநாதா, வேறு ஆடை தருகிறேன், தங்கள் இடுப்பிலுள்ள ஆடையை அவிழ்த்து தருவீர்களானால்   உடனே அதை சீக்கிரத்தில் வெளுத்து காயவைத்து தருகிறேன். அருள்வீர்களா?  '' என்கிறார்.

''இன்று மாலை நேரத்திற்குள் அதை என்னிடம் வெளுத்து திருப்பித்தருவதாக இருந்தால் அவிழ்த்து தருகிறேன். முடியுமா உம்மால்?   உம்மால் தக்க நேரத்தில் தரமுடியவில்லை என்றால் என் உடலுக்கு  இடர் விளைத்த பாவம் சேரும்'' என்கிறார் சிவனடியார்.

''தங்கள் சித்தம் என் பாக்கியம். அப்படியே  மாலை பொழுது சாய்வதற்குள் துவைத்து வெளுத்து காயவைத்து தருகிறேன் ''  என்று அந்த கந்தல் ஆடையை வாங்கி கொள்கிறார் திருக்குறிப்பு தொண்டர்.  வழக்கமாக துணி துவைக்கும் குளக்கரைக்கு ஓடுகிறார்.  மழை பெரிதாக பிடித்துக் கொண்டது.  துணி துவைத்தாலும் அதை  மாலை நேரத்திற்குள்  உலர்த்த வழியில்லாமல்  மழை தொடர்ந்து பெய்தது.
''பெருமானே, என்ன செய்வேன். எப்படி சிவனடியார் ஆடையை அவருக்கு அளிப்பேன்?'' என்ற கவலை திருகி குறிப்பு தொண்டரை  வாட்டியது. மாலை நேரம் முடியப்போகிறது. இனி இரவு நெருங்கிவிடுமே .  மழை விட்ட பாடில்லையே.

சிவனடியார் குளிரில் ஆடையின்றி அவதிப்படுவாரே. கால தாமதம் ஆகிவிட்டதே.  கொடுத்த நேரம் கெடு  தாண்டி விட்டதே.  இனி சிவனடியாரை நான் சந்திக்கமுடியாது. தவறு செய்துவிட்டேன். அவருக்கு கொடுத்த வாக்கு  பொய்த்து விட்டது. இனி நான்  உயிரோடு வீடு திரும்ப முடியாது. அவரை காண முடியாது. ஒரு பெரும் பாவத்துக்கு  ஆளாகிவிட்டேனே.  அவர் கண்கள் எதிரே இருந்த துணி துவைக்கும் பாறைக்கு கல்லை கண்டது முடிவு எடுத்துவிட்டார். என் தலையை பாறையில் மோதி உயிர் விடுகிறேன்.
யோசிக்காது துளியும் வந்தது, தனது தலையை பாறையில் வேகமாக மோதினார்.
வேகமாக  பாறையை நோக்கி  சாய்த்த தலையை ஒரு கை  பிடித்து தடுத்தது.  சிவன் நாடகத்தால்  பெய்த மழை சட்டென்று  நின்றது. அதிசயத்தோடு தன்னை தடுத்த கை  யாருடையது என்று பார்க்க தலையை  தூக்கியபோது எதிரே பார்வதி சமேத பரமேஸ்வரன், காஞ்சி வாழ்  ஏகாம்பரநாதர் நின்றார்.

'' பக்தா,உன் உண்மையான சிவபக்தியை சோதிக்கத்தான் நான் சிவனடியாராக உன்னை நாடி வந்தேன்.  உண்மையான நீ வெளுக்கும் துணியைப் போன்ற தூய சிவபக்தி இதுமுதல் உலகறியும்'' என்று ஆசிர்வதித்து மறைகிறார்.

காஞ்சி மாநகரம்  புண்ய பூமி. நகரங்களில் தலை சிறந்தது காஞ்சி என்ற புகழ் பெற்றது. மஹா பெரியவர்  வாழ்ந்த ஸ்தலம். இன்றும் அருள்புரியும் க்ஷேத்ரம். எண்ணற்ற சிவ விஷ்ணு ஆலயங்களை திவ்ய தேசங்களை தன்னுள் கொண்ட புராதன நகரம்.   சிற்ப சாஸ்த்ர நிபுணர்கள், சிவபக்தியில்   ஈடற்ற பல்லவர்கள் தலைநகரமாக கொண்ட நகரம். சென்னை வாசிகள் கொடுத்துவைத்த  புண்யசாலிகள். ஒன்றரை ரெண்டு மணி நேரத்தில் நினைத்த  76 கி.மீ. தூரத்தில் உள்ள காஞ்சி மாநகரை அடையலாம். புண்யம் சம்பாதிக்கலாம்.   

Thursday, March 28, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்.

யுத்தமா அமைதியா?

''மஹாபாரத யுத்தம் நெருங்கப்போகிறதா மகரிஷி?'' ஜனமேஜயன் ஆர்வமாக கேட்டான்.

''ஏன் உனக்கு யுத்தம் என்றால் அவ்வளவு ஆர்வமா, ஆசையா? எத்தனை உயிர்கள் நாசமாகும் அதில் என தோன்றவில்லையா?'' என்கிறார் மகரிஷி.

''ஆமாம் வாஸ்தவம். நான் ஆர்வப்பட்டது அப்படி ஒரு யுத்தம் நேர்ந்தபோது என்னுடைய பாட்டனார்கள் அதில் எவ்வளவு வீரமாக செயல்பட்டார்கள் என்று அறியவே'' என்றான் ஜனமேஜயன்

வாசகர்களே, நாமும் யுத்தத்தை வெகு சீக்கிரம் சந்திப்போம். தர்ம யுத்தம்...!!!! இனி கதைக்குள் செல்வோம். துரியோதனாதிகளும் பாண்டவர்களும் யார் யார் தமக்கு ஆதரவாக செயல்படுவார்கள் அவர்கள் சேனை, சைன்யம் முழுதும் அதில் பங்கேற்க வேண்டும் என்று முனைந்தார்கள்.

பாண்டவர்களிடமிருந்து சேதி கிடைத்ததும் சால்யன் தனது பிள்ளைகளுடன் ஒரு படை திரட்டினான். சேனை நகர்ந்தது. சால்யனின் சேனை பாண்டவர்களுக்கு சென்றடைய போகிறது என்ற விஷயம் அறிந்த துரியோதனன் வேகமாக சென்று சால்யனை வணங்கி, வரவேற்றான். மனம் மகிழ்ந்த சால்யன்.

' கௌரவ அரசனே, உன் அன்புக்கு ஈடாக நான் என்ன செய்யட்டும் உனக்கு?''

'' மகாராஜா, சால்ய படைகள் எங்களுக்கு ஆதரவாக யுத்தத்தில் உதவ வேண்டும். இந்த வாக்கு கொடுத்து அதை நிறைவேற்ற வேண்டும்'' என்று துரியோதனன் கேட்க, சால்யன் ''அவ்வாறே ஆகட்டும் என்று வாக்கு கொடுத்து விட்டான்''

''அப்பாடா, சால்ய படைகளை ஒரு வழியாக பாண்டவர்களுக்கு எதிராக திருப்பியது முதல் வெற்றி'' என மகிழ்ந்தான் துரியோதனன்.

''சரி, நான் யுதிஷ்டிரனை நேரில் கண்டு வாழ்த்தாமல் திரும்ப உத்தேசம் இல்லை'' என்று சால்யன் கிளம்ப, ''சீக்கிரமே வந்து விடுங்கள். எனக்கு கொடுத்த வாக்கு நினைவில் இருக்கட்டும். உங்கள் உதவியை நம்பி இருக்கும் எனக்கே சால்ய சேனை அளிக்க வேண்டும் '' என்றான் துரியோதனன். சால்யன் உபப்லாவ்யம் சென்று பாண்டவர்களை சந்தித்தான். பாண்டவர்கள் அவனை உபசரித்தார்கள். க்ஷேமலாப குசலத்திற்குப் பிறகு யுதிஷ்டிரனை ஆதரவோடு அணைத்தான் சால்யன்.

''யுதிஷ்டிரா, உன்னைச் சந்திக்கு முன்பு துரியோதனன் என்னை வந்து வழியில் சந்தித்தான். என்னிடம் ஒரு வாக்கு பெற்றான்.''

''என்ன வாக்கு ?''

''பாண்டவ- கௌரவ யுத்தம் நேர்ந்தால் எனது படைகள் கௌரவர்களுக்கு முழுதுமாக உதவ வேண்டும் என்றான். நான் வாக்கு கொடுத்ததால் சரி'' என்று சொல்லி விட்டேன். உனக்கு என்ன செய்யட்டும் சொல் ?'' என்றான் சால்யன் .

''மகாராஜா, தாங்கள் பராக்கிரமம் எனக்கு தெரியும். சத்தியவான். கொடுத்த வாக்கு மீற மாட்டீர்கள் என்றும் அறிவேன். எனக்காக நீங்கள் ஒரு உதவி செய்தால் அதுவே போதும். உங்கள் பலமுள்ள சேனை துரியோதனனிடம் சென்று எங்களை எதிர்க்கட்டும். நீங்கள் கிருஷ்ணனுக்கு சமமானவர் போர்க்களத்தில். நிச்சயம் கர்ணனும் அர்ஜுனனும் மோதப்போகிறார்கள். அப்போது கர்ணனுக்கு தாங்கள் தேரோட்ட வேண்டும்.

''யுதிஷ்டிரா, நான் அவனுக்கு தேரோட்ட உனக்கு வாக்கு கொடுக்கிறேன். கர்ணன் என் சொல்படி நடந்தால் அவனுக்கு நல்லது. இல்லையேல் அவன் என் உதவியை இழப்பான்.அவன் பேச்சை எடுத்தாலே அரசவையில் திரௌபதிக்கு அவன் இழைத்த அநீதி நினைவுக்கு வருகிறது. ஆத்திரம் பொங்குகிறது.'' என்றான் சால்யன்.

' யுதிஷ்டிரா, தபோபலம், பித்ருக்கள், ரிஷிகள் வரம் பெற்ற நஹுஷன் கதை தெரியுமா உனக்கு?

'' ஏதோ கொஞ்சம் தெரியும், உங்கள் வாக்கில் அதைச் சொல்லுங்கள் அரசே'' என்றான் யுதிஷ்டிரன்.

'' நஹுஷன் ரிஷிகள், பித்ருக்கள் ஆசியோடு இந்திர பதவி பெற்றான். ஆனால் அவன் இந்திரனின் மனைவி சசியை தனது ராணியாக்க முயன்று, ரிஷிகளை தனக்கு பல்லக்கு தூக்கும்படி கட்டளையிட்டு, அவர்களை அவமரியாதைப் படுத்தி, அகஸ்தியரின் தலையில் காலை வைத்து விரட்டி அவரால் சபிக்கப்பட்டு பாம்பாக கீழே விழுந்து மாண்டான். பொறுத்திருந்த இந்திரன் மீண்டும் பதவிக்கு வந்தான். அதிகாரத்தை துஷ் பிரயோகம் பண்ணுபவர்கள் அக்ரமத்தை அநியாயத்தை நாடுபவர்கள் அழிவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். கர்ணன், துரியோதனன் ஆகியோர் உனக்கும் திரௌபதிக்கும் இழைத்த தீங்கிற்கு கூலி கொடுக்கப் போகிறார்கள். நீ அவர்களை அழித்து ஆட்சியைக் கைப்பற்றப் போவது உறுதி'' என்றான் சால்யன்.
இதற்கிடையில் நடந்த இன்னொரு விஷயத்தை அறிவோம்.

துருபதனால் அனுப்பப் பட்ட அவனது அரசவை பிராமண குரு, துரியோதனனை சந்திக்க ஹஸ்தினாபுரம் நடந்தவர் ஒரு வழியாக அங்கே சென்றடைந்தார்.

''யார் வந்திருக்கிறது என்னைப் பார்க்க என்று விவரம் அறிந்து சொல்லுங்கள் ?'' என்கிறான் திருதராஷ்டிரன் .
'' மஹாராஜா,தங்களை பார்க்க துருபத மஹாராஜாவின் ஆஸ்தான குரு வந்திருக்கிறார் ''
'' அழைத்து வா என்னிடம் ' என்றான் திருதராஷ்டிரன்.

''நான் துருபதனின், பாஞ்சால தேசமன்னனின், குலகுரு. ப்ரோஹிதர். உங்களை கண்டு வணங்கி ஆசிபெற வந்துள்ளேன். பாண்டவர்களிடமிருந்து ஒரு சேதி கொண்டு வந்துள்ளேன்.''
பாண்டவர்களிடமிருந்து சேதி என்றதும் கண்ணற்ற திருதராஷ்டிரன் யோசிக்கிறான்.
பிறகு தக்க மரியாதைகளுடன் பிராமணர் அரண்மனையில் அரச சபைக்கு கூட்டிச் செல்லப்படுகிறார். பீஷ்மர் துரோணர் விதுரனை எல்லாம் வணங்குகிறார். பாண்டவர்கள் நலம் பற்றி விஷயம் சொல்கிறார்.

பிறகு மெதுவாக விஷயத்துக்கு வருகிறார். பாண்டு, திருதராஷ்டிரன் இருவரும் சகோதரர்கள். அவர்கள் குடும்பமும் அவ்வாறே குடும்பச் செல்வத்தில் சரி பாதியாக பங்கு பெற்று ஒற்றுமையாக வாழ வேண்டியவர்கள். பாண்டவர்கள் எதற்காக அதை அடையாமல் வாட வேண்டும்? ஆரம்பத்திலிருந்தே கௌரவர்கள் பாண்டவர்களை அழிக்க பல் வேறு திட்டங்கள் போட்டு தோற்றனர். தங்களது வீரத்தினால் தங்களுக்கு அளிக்கப் பட்ட இந்திரப்ரஸ்தத்தை மேம்படுத்தி பேரும் புகழுமாக வாழ்ந்தது பொறுக்காத துரியோதனன் சகுனியின் சதியோடு திருதராஷ்டிரன் அனுமதியோடு யுதிஷ்டிரனை சூதாட்டத்துக்கு அழைத்து அனைத்து செல்வங்களையும் இழக்க வைத்து, பதிமூன்று வருஷ வனவாசங்களில் சொல்லொணாத் துயரோடு வாழ்ந்தார்கள். இந்த நிலையிலும் இடையிடையே இந்த பதிமூன்று வருஷங்களில் பல் வேறு துன்பங்களை துரியோதனனும், கௌரவர்களும் கொடுத்தபோதும் அனைத்தும் சமாளித்து இப்போது சமாதானமாக தங்கள் பங்கை சகல உரிமையோடும் கேட்கிறார்கள். பாண்டவர்களுக்கு இன்னமும் கௌரவர்களோடு போர் புரிய எண்ணம் கிடையாது. தங்களது பங்கை உயிர்ச் சேதமின்றி பெறவே விருப்பம். துரியோதனன் குணம் தெரிந்ததாலும், அவன் நண்பர்கள் எண்ணங்கள் அறிந்ததாலும், தக்கவாறு நல்வழி கூறி எல்லோரும் நலமடைய அமைதியான முறையில் இந்த விவகாரம் தீர வேண்டும் என்று விருப்பம். உலகத்தில் ஒரு உயிருக்கும் சேதமின்றி தங்கள் பங்கு பிரித்துக் கொடுக்கப் பட வேண்டும் என்று பாண்டவர்கள் விரும்பு கிறார்கள். யுத்தம் தேவை என்று துரியோதனன் நினைத்தால் அதற்கு தகுந்த காரணம் இல்லாததால் முறையாகாது. ஏழு அக்ஷௌணி சேனை இதுவரை பாண்டவர்கள் பக்கம் அணி சேர்ந்திருக்கிறது. பீமன், அர்ஜுனன் பலம் பராக்கிரமம் ஏற்கனவே கௌரவர்களுக்கு அனுபவத்தில் தெரியும். கிருஷ்ணன் வேறு அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் கேட்கவே வேண்டாம். எனவே பாண்டவர்கள் பங்கை உடனே பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று கேட்கிறேன். இந்த அரிய சந்தர்ப்பத்தை வீணாக்க வேண்டாம்.'' பிராமண குரு ஆணித்தரமாக பாண்டவர்களிடமிருந்து பெற்ற செய்தியை அறிவித்தார்

ANYONE INTERESTED IN THE TWO VOLUMES OF ''AINDHAM VEDHAM'' MAY CONTACT ME BY WHATSAPP NO. 9840279080 FOR DETAILS.



lalitha sahasranamam



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(658 - 677) -
J.K. SIVAN

इच्छाशक्ति-ज्ञानशक्ति-क्रियाशक्ति-स्वरूपिणी ।
सर्वाधारा सुप्रतिष्ठा सदसद्रूप-धारिणी ॥ १३०॥

Iccha shakthi-Gnana shakthi-Kriya Shakthi Swaroopini
Sarvaadhara Suprathishta Sada Sadroopa Dharini

இச்சாஶக்தி ஜ்ஞானஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ |
ஸர்வதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூபதாரிணீ || 130 ||

अष्टमूर्तिर् अजाजैत्री लोकयात्रा-विधायिनी । or अजाजेत्री
एकाकिनी भूमरूपा निर्द्वैता द्वैतवर्जिता ॥ १३१॥

Ashta murthi, ajaajaithri, lokayathraa, vidhaayini
Ekakini Bhooma roopa Nirdwaitha Dwaitha varjitha

அஷ்டமூர்தி, ரஜாஜைத்ரீ, லோகயாத்ரா விதாயினீ |
ஏகாகினீ, பூமரூபா, வைதா, த்வைதவர்ஜிதா || 131 ||

अन्नदा वसुदा वृद्धा ब्रह्मात्मैक्य-स्वरूपिणी ।
बृहती ब्राह्मणी ब्राह्मी ब्रह्मानन्दा बलिप्रिया ॥ १३२॥

Annadha Vasudha Vriddha Brhmatmykya Swaroopini
Brihathi Brahmani Brahmi Brahmananda Bali priya

அன்னதா, வஸுதா, வ்றுத்தா, ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்றுஹதீ, ப்ராஹ்மணீ, ப்ராஹ்மீ, ப்ரஹ்மானம்தா, பலிப்ரியா || 132 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (658-677 ) அர்த்தம்

* 658 *இச்சாஶக்தி ஜ்ஞானஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ - அம்பாள் மூவிதமான சக்திகளின் ஸ்வரூபம். அவற்றை திரிசக்தி என்போம். பிரியமாக செய்யும் காரியங்கள் இச்சை. அப்படி பிடித்ததை வழங்குபவள் லலிதை. அம்பாளின் சிரம் இச்சை. ஞானம் தான் தேஹம் . காரியம் தான் அவளது திருப்பாதங்கள். ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் என்ற மூன்று தொழில்களையும் புரிபவள். அவள் வேறு சிவன் வேறு அல்ல.

* 659 * ஸர்வா தாரா - எல்லாவற்றுக்குமே ஆதாரமாக திகழ்பவள் அம்பாள். இந்த பிரபஞ்சம் இயங்குவதே அவளால் தான்.அவளது திரிசக்தியால் தான்.

* 660 * ஸுப்ரதிஷ்டா - பிரதிஷ்டை என்பது ஒரு இடத்தில் நிரந்தரமாக ஸ்தாபிப்பது. இருப்பது. அம்பாள் தான் நமக்கு சிறந்த சுகமான இருப்பிடம். அவளின்றி ஒன்றும் அசையாது

* 661 * ஸதஸத்-ரூபதாரிணீ - சத்தியத்தின் உண்மையின் உருவகமானவள் அம்பாள். சத் என்றால் நிரந்தரமானது. அஸத் என்பது அழியக்கூடியது. பிரம்மத்தை தவிர்த்து எதுவும் நிரந்தரமில்லை. அதுவே அம்பாள்.

* 662 * அஷ்டமூர்த்தி - எட்டு விதமான உருவங்களை கொண்டவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். அவை பவா,
ஸர்வா,ஈசான, பசுபதி, ருத்ர, உக்கிர, பீம, மஹா என்பன. இந்த சக்தி கொண்ட அம்பாளை தான் பிராம்மி ,மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி , மஹேந்திரி , சாமுண்டி, மஹாலக்ஷ்மி என்று கொண்டாடுகிறோம். ஆத்மாவை அதுபோல் எட்டாக அறிகிறோம். ஜீவன், அந்தராத்மன் , பரமாத்மன், நிர்மலாத்மன், சுத்தஆத்மன், ஞானாத்மன், மஹாத்மன், பூதாத்மன்.

* 663 * அஜாஜைத்ரீ - அஞ்ஞானத்தை வென்றவள் அம்பாள் .ஸ்ரீ லலிதை.

* 664 * , லோகயாத்ரா விதாயினீ - இந்த பிரபஞ்சம் கோளங்களாக ,உருண்டு சதா சர்வகாலமும் ஓயாது ஒழியாது இயங்குவது அம்பாள் சக்தியால். பிறப்பு இறப்பு விடாது நிகழ்வது இந்த இயக்கத்தால் தான்.

* 665 *ஏகாகினீ, - எல்லாம் ஒன்று, அது .அவளே. ஒன்றே பலவாக காட்டுபவளும் அவளே. சாந்தோக்ய உபநிஷத் அழகாக சொல்கிறதே (VI.ii.1) “ekam eva advitiyam” ஏகம் ஏவ அத்விதீயம் '' - அதாவது இரண்டாவதாக வேறு இல்லாத ஒன்று. கதோபநிஷத் கூட (II.ii.9) ‘ ஒரே வஸ்து தான் எல்லாவற்றிலும் இருந்து அவற்றை வெவ்வேறு ரூபங்களில் வேறுபடுத்திக் காட்டுகிறது.''

* 666 * பூமரூபா - நாம் நமது புலங்களினால் எதெல்லாம் காண்கிறோமோ, எஹெல்லாம் கேட்கிறோமோ, எதெல்லாம் புரிந்துகொள்கிறோமோ அதெல்லாம் அம்பாள் ஸ்ரீ லலிதாவின் ஸ்வரூபங்கள். பூம என்கிற வார்த்தை பிரம்மத்தைக் குறிக்கும் சொல். சந்தோக்யோபநிஷத் சொல்வதை அறிவோம். (VII.23)“ யா வை பூமா தத் சுகம் ' - எதெல்லாம் எல்லையற்ற, ப்ரம்மமோ அதுவே சுகம்'' எல்லை, வரையறைக்குட்பட்டது எதுவுமுமே இன்பத்தை தராது.

* 667 * நிர்த்வைத - இரண்டில்லாத, எல்லாமே ஒன்றேயானது எதுவோ அதுவே அம்பாள் ஸ்ரீ லலிதா என்கிறது இந்த நாமம். ப்ரம்மம் ஒக்கட்டே. ப்ரம்மம் ஒன்றே தானே.

* 668 * த்வைத வர்ஜிதா - ஒன்றுக்கு மேற்பட்டதாக காணும் எதற்கும் அப்பாற்பட்டவள் அம்பாள் ஸ்ரீ லலிதை என்று இந்த நாமம் வலியுறுத்துகிறது.

* 669 * அன்னதா - அவள் அம்பாளால் தான் சகல ஜீவராசிகளும் உயிர்வாழ உணவை, அன்னத்தைப் பெறுகிறது. அவள் அன்னலட்சுமி. அன்னதாதா என்கிறது இந்த நாமம். .

* 670 * வஸுதா - செல்வத்தை வாரி வழங்குபவள் அம்பாள். வசு என்றால், நவரத்ன கற்கள், விலையுயர்ந்த உலோகங்கள், செல்வம் என்று பொருள் படும். சிறந்த நிரந்தர செல்வங்களான அஷ்ட வசுக்கள் என்ன தெரியுமா? ஆப (நீர்) 2. துருவ (நக்ஷத்ரம்) 3. சோமன் (சந்திரன் 4. தாவா - தாரை 5. அனிலன் - வாயு, 6. அனலன் - அக்னி. 7. பிரத்யுஷன் - விடிவெள்ளி, 8 ப்ரபாஸன் - ஒளி. (ப்ரபாஸன் தான் பீஷ்மராக பிறக்கிறான்)

* 671 * வ்ருத்தா - மூத்தவள், முதியவள். ஸ்வேதாஸ்வதர உபநிஷத் (IV.3) அம்பாளை ''நீ ஒரு பெண், நீ ஒரு ஆன், நீ ஒரு பாலகன், நீ ஒரு சிறுமி, நீ முதியவள் கோல் ஊன்றி நகர்பவள், நீ எல்லா பருவங்களும் உருவங்களும் கொண்டவளாய் பிறந்தவள் '' என்கிறது.

* 672 *ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ - பிரம்மத்தில் கலந்தவள். முடிவான சத்தியமாக தோன்றுபவள்.''அஹம் ப்ரம்மாஸ்மி'' என்ற மஹாவாக்யத்தின் உருவம். நானே அந்த ப்ரம்மம் என்று உணர்த்துபவள்.

* 673 * ப்ருஹதீ -- ப்ரம்மாண்டமானவள் அம்பாள் என்னும் நாமம். பெரியதில் எல்லாம் பெரியவள்.

* 674 * ப்ரஹ்மணி - பிரம்மத்தின் பெண் உருவம். சாந்தோக்ய உபநிஷத் (VIII.14). ப்ரஹ்மண்யத்தை, வேத சாரத்தை, கற்றுணர்ந்து தேர்ந்தவர் ப்ராஹ்மணர். இதை ஒரு குலத்தவரை குறிப்பதாக பொருள் கொள்ளக்கூடாது.

* 675 * ப்ராஹ்மீ- பிரம்மன் அம்சத்தை கொண்டவள் அம்பாள் என்கிறது பிரம்மனின் நாவில் வசித்து நாமகள் என்ற பெயர் கொண்ட சரஸ்வதியும் அவளே. வாக் தேவி. கலைமகள்.
அஷ்ட மாதாக்களில் ஒருவள்.

* 676 * ப்ரஹ்மானந்தா - பூரண ஆனந்தத்தை தரும் பிரம்மத்தின் ஆதார சக்தி அம்பாள். சர்வமும் ப்ரம்மத்திலிருந்து ஜனித்து முடிவில் ப்ரம்மத்திலேயே கலந்துவிடுகின்றன என்கிறது தைத்ரிய உபநிஷத் (III.6).

* 677 * பலிப்ரியா - பலி இங்கே இரு பொருள் கொண்டது. பலிஷ்டர்களை மெச்சுபவள் அம்பாள் என்றும் நித்யம் சகல ஜீவர்களுக்கு ஆகாரமாக சேரும் உணவை வழங்குபவள் என்றும் பொருள்படும். ஆலயங்களில் பலிபீடம் இருப்பது நைவேத்தியத்தை அற்பணிகத்தான் . பூத யஞம் என்று பெயர்.
சக்தி பீடம்: திருவையாறு தர்ம ஸம்வர்த்தனி

சோழநாட்டின் சிறப்பான புண்ய க்ஷேத்ரங்களில் ஒன்று திருவையாறு. பஞ்சநதிகள், எனும் ஐந்து ஆறுகள் ஓடும் செழிப்பான பூமி. ஐயாறு திரு வென்ற மரியாதை கலந்து திருவையாறு என்ற பெயர் பெற்ற ஸ்தலம். சிவன் இங்கே ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்த நாயகி. வடமொழியில், பஞ்சநதீஸ்வரர், தர்மசம்வர்த்தனி . எத்தனையோ மஹான்கள் தரிசித்த ஆலயம். தக்ஷிண கைலாசம் என்று போற்றப்படுவது. ஐந்து பெரிய பிராஹாரங்கள்.மண்டபங்கள் சந்நிதிகள் கொண்டது. சப்தஸ்தான க்ஷேத்திரங்களில் ஒன்று. காவேரி வடகரை சிவாலயங்களில் ஒன்று. ஏழு நிலை கோபுரம். 15ஏக்கரா நிலப்பரப்பு கொண்ட ஆலயம்.





GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...