Tuesday, March 26, 2019

LITTLE MILLENNIUM 9 TH ANNUAL DAY



                                             
   24.3. 2019  ஒரு  இனிய மாலை வேளையில்....
                                        ஜே. கே. சிவன் 

உடல் வளர்ச்சியோடு  உள்ளம், மனம், வளரவேண்டும்  என்பதற்காக கல்வி  விளையாட்டாக, சிறு  குழந்தைகளுக்கு விருப்பத்த்தோடு கற்க  உதவும்  மாண்டிஸோரி  வழியில் கல்வி கற்றுத்தர  ஒரு சில அருமையான பள்ளிகள் இருக்கின்றன.  மூன்று முதல்  ஆறு ஏழு வயது வரை சகலமும் கற்க வகை  செய்ய பொறுப்பான  ஆசிரியைகளை நியமித்து ஒன்பது ஆண்டுகளாக  சிறப்பாக  நடந்து வரும் ஒரு பள்ளி  கோடம்பாக்கம்  யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள லிட்டில் மில்லினியம் ஆரம்ப பள்ளி.  திருமதி பாலா திரிபுர சுந்தரி கண்ணும் கருத்துமாக இந்த பள்ளியின் உயிர்நாடியாக  சேவை செயகிறார். ஒன்பது வருஷத்தில்  ஏழு எட்டு  முறை சிறந்த  பள்ளி நற்சான்று பெற்றுத் தந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  அடடா  நாம்





















































  சிறு குழந்தைகளாக இருந்த காலத்தில்  இப்படியெல்லாம் பள்ளிகள் இல்லையே என்ற ஏக்கத்தோடு அந்த பள்ளியின்  9ம் ஆண்டு தின விழாவில் பங்கேற்றேன்.   கிரு ஷ்ணார்ப்
பணம் சேவா ட்ரஸ்ட் குழந்தைகளுக்காக  வெளியிட்ட  புத்தகங்கள்  நிகழ்ச்சிகளில் பங்கேற்ற,  மற்ற போட்டிகளில் கலந்துகொண்ட  சிறுவர் சிறுமிகளுக்கு பரிசாக கொடுத்தார்கள்.  என்னை கௌரவித்து பேச சொன்னார்கள். கிருஷ்ணன்களுக்கும் ராதைகளுக்கும் நான் என்ன சொல்லப்போகிறேன்.  பெற்றோர்களே, குழந்தைகளை காசு காய்க்கும் மரங்களாக பண்ணாதீர்கள், மனித நேயம், பிற உயிர்கள் மேல் பாசம் உள்ள ஈர நெஞ்சம் கொண்ட மனித நேயம் கொண்ட வர்களாக , தேசப்பற்று, இறைவன் மேல் பக்தி,  தாய்மொழி பற்று கொண்டவர்களாக வளர்ச்சி பெற உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.   

பெற்றோர்கள் ஆர்வத்தோடு  தமது குழந்தைகள்  கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடையில் நக்ஷத்ரங்களாக ஜொலிப்பதை கண்டு  ஆனந்தித்தனர். ஆசிரியைகள்  3 வயது குழந்தைகளாக  மாறி அவர்களோடு ஆடிப்  பாடி நடித்தனர். 

பணம் செலவழிப்பதால் மட்டும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்காது. ஆசிரியைகள் அவர்களோடு  ஒட்டி உறவாடி, மனம் கவர்ந்து, பாலூட்டுவது போல்  பாடங்களை  ஊட்டுகிறார்கள்.  திணிக்கவில்லை.  


மூன்று  மூன்றரை மணி நேரம்  அற்புதமாக   குழந்தைகள் உலகத்தில்  கண்ணன்கள்  ராதைகளோடு  சேர்ந்து இருந்து விட்டு  நங்கநல்லூர் திரும்பியபோது  புண்ய கர்மபலன்  முடிந்து பூமியில்  மீண்டும் பிறப்பெடுப்பது போல்   உணர்ந்தேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...