Friday, March 1, 2019

RAMANAMA MAHIMAI



ராம நாம மஹிமை J K SIVAN

ராஜாக்கள் என்றால் மந்திரியை தினமும் நமது நாட்டில் மழை மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்கவேண்டும். காட்டில் வேட்டையாட போகவேண்டும். முனிவர்கள் ரிஷிகள் பெரியவர்கள், மூத்த மந்திரிகளிடம் நீதி கதைகள் கேட்கவேண்டும். நமது கதையில் வரும் ராஜா இந்த சம்பிரதாயத்தை முழுமையாக கடைபிடித்தவன்.

ஒருநாள் ராஜா மந்திரியோடு காட்டில் வேட்டையாட போனான். மந்திரி சிறந்த ராம பக்தன். எப்போதும் அவன் ராமநாமம் உச்சரித்துக்கொண்டிருப்பவன். ரொம்ப கெட்டிக்கார மதியூகி என்பதால் ராஜாவுக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டு விஷயங்களை புதிது புதிதாக தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஜாஸ்தி.

காட்டில் வேட்டையாட வெகு தூரம் போனதில் ராஜா களைத்து போனான். பசி காதடைத்தது. களைப்பு தீர ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தனர்.

கூட வந்த மந்திரியோ ராஜாவின் அப்பா காலத்திலிருந்து மந்திரி. ஆகவே வயதானவர்,

“ மந்திரியாரே, எழுந்திருங்கள். கிளம்புவோம். இருவரும் எங்காவது உணவு தேடுவோம்” என்றான் ராஜா.

“ இல்லை ராஜா நான் வரவில்லை. இங்கேயே இருக்கிறேன்”

“. கொஞ்சம் நேரம் ஆனாலும் ஆகுமே. நீர் என்னசெய்வீர் நான் வரும்வரையில்?”

“ பேசாமல் ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருப்பேன்”

. ராஜா சிரித்தான். ''ராம ஜபம் உணவு கொண்டு தருமா? கஷ்டப்பட்டு உழைத்தால், முயற்சி எடுத்தால் மட்டுமே உணவு கிடைக்கும். புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ரொம்ப களைத்திருக்கிறீர்கள். ஆகவே இங்கேயே இருங்கள். நான் போய் அருகில் எதாவது வீடு இருக்கிறதா என்று பார்த்து உணவு சேகரித்து வருகிறேன்”

ராஜா மரத்தில் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து ஏறிக்கொண்டு கிளம்பிவிட்டான். மந்திரிக்கு தனிமையில் ஆரண்யத்தில் ராமநாம ஜபம் பண்ண நேரம் கிடைத்ததே வரப்ரசாதம் என கருதி சந்தோஷமாய் ஜெபத்தில் ஈடுபட்டார் .

சுற்றி அலைந்து ஒரு வீட்டை எங்கோ கண்டுபிடித்து ராஜா கதவை தட்டினான். வீட்டில் இருந்தவர்கள் ராஜாவை அடையாளம் கண்டுகொண்டு வரவேற்று அவனுக்கு அவர்களால் முடிந்தவரை விருந்து வைத்தனர். ராஜாவும் உண்டு பசியாறி மந்திரிக்கும் உணவு பொட்டலம் கட்டிக் கொண்டுவந்தான்.

“மந்திரியாரே, இப்போது புரிகிறதா. என் உழைப்பும் முயற்சியும் தான் உணவு தந்தது. உம்முடைய ராம நாம ஜபம் என்ன பலன் தந்தது??” என்றான் ராஜா.

அவனை ஏற இறங்க பார்த்து மந்திரி அமைதியாக சொன்னான்:

“நீங்கள் ஒரு பெரிய ராஜா, உணவுக்காக அலைந்து தேடி ஒரு எழை குடும்பத்திடம் பிச்சையெடுத்து உண்டு பசியாரினீர்கள் . என்னை பார்த்தீர்களா. இருந்த இடத்திலேயே நான் செய்த ராமநாம ஜெபம் ஒரு ராஜாவையே எனக்காக உணவு கொண்டு செய்தது. இப்போது புரிகிறதா ராம நாம ஜெப மகிமை” என்கிறார்.

ராஜா மந்திரியை பக்தியோடு நோக்கினான். இதுவரை புரியாத ஏதோ ஒன்று இப்போது புரிந்தது. அன்றுமுதல் ராஜா தினமும் மந்திரியாரிடம் ராமாயணம் விவரமாக கேட்டு பயனடைந்தான் என்று வேண்டுமானால் இந்த கதையை முடிக்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...