Sunday, March 3, 2019

YATHRA VIBARAM


  ஸ்ரீ  வேங்கட நிவாஸாய  ஸ்ரீநிவாஸாய மங்களம்..​     
                                          J K SIVAN       
                                      
திருப்பதி   திருமலை தேவஸ்தானம் கணக்குப்படி  அதன் வருஷாந்திர வருமானம் ஏறக்குறைய  ரூபாய்  2900 கோடி    உண்டியலில் நாம்  வரிசையில் நின்று செலுத்துவது மட்டுமே  ஏறக்குறைய  1200 கோடி  ரூபாய்.  அனில் குமார் சிங்கால்  எனும் அதிகாரி தான் சொல்லியிருக்கிறார். 
 ​  ​மேல் திருப்பதியில், அதாவது திருமலையில் பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இந்தப் புனிதமான மடைப்பள்ளியில் லட்டு மட்டும்தான் என்று இல்லை. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நிவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டுதான் முதலிடம்.

ஆதிகாலத்தில் ‘மனோகரம்’   என்கிற பிரசாதம்தான் பாப்புலராக இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் பழைய கல்வெட்டுகளும் இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்கின்றன. ஆந்திராவில் மனோகரம் ரொம்ப பேர் விரும்பி சாப்பிடும்  இனிப்பு வகை.

மனோகரம் என்பது என்ன?  ‘​தித்திப்பு முறுக்கு’ என்று சொல்லலாம். அதாவது, அரிசி மாவையும் வெல்லப் பாகையும்​ நன்றாக  கலந்து ​ கொஞ்சம் காற்றாட உலர்த்தி எண்ணெயில் போட்டு முறுக்குபோல் ​பிழிந்து ​பொறித்து எடுத்தால் அதுதான் மனோகரம். முறுக்கு மாதிரியே  கரகரவென பல்லால் கடித்து  சாப்பிடலாம்.  இந்த மனோகரம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை, பக்தர்களே ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்த தகவல்களையும் கல்வெட்டுக்க​ள்  சொல்கிறதே.  மனோகரம்​ சீக்கிரம் கெடாது.   எனவேதான், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மனோகரம் கொடுக்கப்பட்டதாக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

திருமலை மடைப்பள்ளியில்​ அன்றாடம் கிட்டத்தட்ட  ரெண்டு லக்ஷம்   லட்டுகள் தயாராகிறது.  ​6 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 300 கிலோ நெய்,​700 கிலோ முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை ​600 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, டைமண்ட் கல்கண்டு ​500 கிலோ, எண்ணெய் 2​5 கிலோ, ​ பாதம்  பருப்பு ​ 3 பெட்டி​ --  இவ்வளவு  சாமான் தேவை​.

கி.பி. 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் காலத்திய கல்வெட்டுக்க​ள்  திருப்பதி ஆலயத்தில்  தயிர்சாதம், எலுமிச்சை சாதம் ​ எல்லாம் கொடுத்தார்கள் ​என்கின்றன. 


​13  -  14ம்  நூற்றாண்டில்  செதுக்கப்பட்ட  சில  கல்வெட்டுகள்  பயத்தம் பருப்பு , அரிசி, உப்பு, மிளகு, நெய் இவை சேர்ந்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு,​   அட  நம்ம  வெண் பொங்கல்.!  --   ​ ஏழுமலையானுக்கு ​   நைவேத்தியம்.அப்போது  பொங்கல் என்ற பெயர்  கிடையாதோ?

நாமெல்லாம் ராத்திரியில் நிம்மதியாக ஏழெட்டு மணி நேரம் உறங்குகிறோம். ஆனால், சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...