Monday, March 4, 2019

TRINAVARTHTHAN


 கிருஷ்ணன்                           J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம்

                                              அணைக்கும்  கரங்கள்

 நங்கநல்லூர் பகுதியில்  அணைக்கும் கரங்கள் என்ற நிறுவனத்தை எனது  நண்பர் லயன் திரு சத்ய கணேஷ் நடத்தி வருகிறார். பெற்றோர்களால் கை விடப்பட்ட குழந்தைகளையும், வளர்த்த குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களையும்  ஆதரவோடு பராமரித்து, குழந்தைகளுக்கு கல்வி, உணவு  தேகப்பயிற்சி, மருத்துவம் அனைத்து வசதிகளையும் இலவசமாக  செய்து தருபவர்.50 குழந்தைகளுக்கு மேல் அங்கே ஆனந்தமாக  வாழ்கிறார்கள்.  இரண்டாயிரம் மாணவ மாணவிகள் கற்கும்  கற்பக விக்னேஸ்வர வித்யாலயா எனும் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்.   ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் நிறைய  விழாக்கள் அங்கே நடத்த உதவி வரும் ஒரு நல்லிதயம் கொண்ட  மனித தெய்வம்  ஸ்ரீ சத்ய கணேஷ்.  எல்லோரும் ஒருமுறை அந்த நிறுவனத்தை நேரில் சென்று பார்த்து தன்னாயிலியன்ற  பொருள், பணம் தானமாக தந்து  உதவி செய்யவேண்டும். அட்ரஸ்:  No 25, periyar street, (opposite to Pazhavanthangal police station, Nangainallur, Chennai, Tamil Nadu 600061.    098843 81831

 ''அணைக்கும் கரங்கள்''  என்ற வார்த்தையை   நினைக்கும்போது கிருஷ்ணன் நினைவு வருகிறது.

அந்த  கருப்பு குழந்தையின் பொக்கை வாய்  சிரிப்பு பார்த்தவர்களை எல்லாம்  காந்தமாக கவர்ந்தது. அவன் கண் பார்வையில் என்னவோ  ஒரு சொல்லமுடியாத  குளுமை, காருண்யம் என்று சொல்லலாமா?  அவனை வாரி  அணைத்து  இடுப்பில் வைத்துக்கொள்ளாத கோபியர்கள் கோகுலத்தில் இல்லை.

ஒருநாள் யசோதை அவனைக் குளிப்பாட்டி,  ஆடை ஆபரணங்கள் அணிவித்து, மடியில்  போட்டு,  பாட்டு ப்பாடி ஆசையாக  தடவிக்கொடுத்தாள் கொண்டிருந்தாள்.  குழந்தை தூங்க வேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு.  கிருஷ்ணன் திடீரென்று அவள் மடியில் அதிக கனமானான் .

''என்ன இது ஏன் இப்படி  கிருஷ்ணன் கனமாக இருக்கிறான். இவ்வளவு கனம் அவன் கிடையாதே. என்னால் எளிதில் தூக்க முடியுமே, மடியில் வைத்துக் கொள்ளமுடியுமே . இப்போது என்  தொடைகள் பிளந்து போய்விடும் போல் இருக்கிறதே. மடித்து அமர்ந்த கால்கள்  மடி  எல்லாமே நசுங்கி விடும்போல் கனமாக இருக்கிறதே. என் கிருஷ்ணன் எதற்காக  ஒரு இரும்புச் சிலைபோல்  கனமாக இருக்கிறான்?  என்ன ஆயிற்று?   என்று  யசோதை திணறினாள்.  இனியும் முடியாது என்ற நிலை வந்து அவனை  மாடியிலிருந்து மெதுவாக கஷ்டப்பட்டு தரையில் இறக்கிவிட்டாள் .  உஸ்  அப்பாடா.  இப்போது தான் அவளால் மூச்சு விட முடிந்தது...அவன் கண்களை மூடி  உறங்குகிறானோ? உள்ளே கொஞ்சம் அவசர வேலையை அதற்குள்  முடிக்கலாம் என்று கிளம்பினாள்.

காலை நேரம். இன்னும் சூரியன் உச்சிக்கு  செல்லவில்லை. காற்று வீசிக்கொண்டிருந்தது. கரிய மேகங்கள் வழக்கம்போல்  இடித்தன.   இன்றும் மழை பெரிதாக வருமோ?

கம்சன் சதா சர்வகாலமும்  கிருஷ்ணனை எப்படியாவது அழிக்கவேண்டும் என்று யோசித்தவன். அவன் சபையில் எதிரே ஒரு அரக்கன் நின்றுகொண்டிருந்தான்.
''த்ரிணாவர்த்தா ,  என்ன சொல்கிறாய் நீ, திரும்ப சொல்?''
''கம்சா, நான் ஒரு சூறாவளி அரக்கன். என் பலம் உனக்கு தெரியும். நீ கவலையே படாதே,  நொடியில் நான் கோகுலம் செல்வேன். அந்த க்ரிஷ்ணன் பயலை அப்படியாக அலேக்காக தூக்கிக்  கொண்டுவந்து உன்னிடம்  தருகிறேன்.போதுமா?''
''ஓஹோ... உன்னால் அது  முடியுமென்றால் அதைவிட  சிறந்த பரிசு எனக்கு எதுவுமில்லை த்ரினா வர்த்தா''
த்ரிணா வர்த்தன் கோகுலம் வந்துவிட்டான்.  எங்கும் ஓவென்ற  பேரிரைச்சல், மரங்கள் பேயாட்டம் ஆடி  வேரோடு சாய்ந்தன. நதியில் பிரவாகம் பெருக்கெடுத்தது.  கோகுலம் முழுதும்  பசுக்கள்  கன்றுகள் நடுங்கின. வீடுகள் ஆடின. எங்கும்  இருள் புழுதி மண்டலம். த்ரிணாவர்த்தன்  நந்தகோபன் வீட்டில் தரையில் கிடந்த கிருஷணனை பலம் கொண்டமட்டும் தூக்க முயன்றான். என்ன மாயக்கார குழந்தை இது. இவ்வளவு கனமாக இருக்கிறதே.  அதற்குள்  அருகே வந்து தன்னை தூக்க முயற்சித்த  த்ரிணா வர்த்தன் கழுத்தை கிருஷ்ணன் கெட்டியாக கட்டிப்பிடித்தான்.  அரக்கனால் தலை நிமிர்த்தி எழும்ப முடியவில்லை.  கிருஷ்ணன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக  இறுகியது.  த்ரிணாவர்த்தன்  திணறினான்.மூச்சு விட முடியாமல் தவித்தான். அப்படியே போராடி தோற்று மயங்கி வீழ்ந்தான்.  . த்ரிணா வர்த்தன்  ஒருவன் தான்  கிருஷ்ணனோடு மோதிய  அரக்கர்களின் அவனால்  அணைத்தபடியே உயிர்விட்டவன் என்று சொல்லலாம்.   ஹா   என்று  ஒரு  பேரிரைச்சல் எங்கும் கேட்டு  அனைவரும்  கதி கலங்கினர்.   அடுத்த சில கணங்களில் , . உயிர் பிரியும் முன் 'ஹா''  என்ற அவன் பெரும்கூச்சல் கேட்டு எல்லா கோபியர்கள் கோபர்களும்  நந்தகோபன் வீடு  நோக்கி ஓடி வந்தார்கள்.  இதுவரை மாயமாக  பேய்க்காற்றாக உருவெடுத்து வந்த த்ரிணாவர்த்தன் இப்போது மலை போல் ஒரு பெரிய ராக்ஷசனாக உயிரற்ற பிணமாக கிடந்தான். அவன் மார்பில் கிருஷ்ணன்ஒன்றும் அறியாத பாலகனாக தவழ்ந்தான். இளங்கன்று என்பதால் பயமறியவில்லையா?  அட இதால்  என்னை என்னசெய்ய முடியும் என்ற அலட்சியமா ?

கோகுலம் முழுதும் செய்தி பரவியது.  விவரங்கள் சேகரித்தார்கள்.  ஓஹோ  கம்சன் அனுப்பிய த்ரிணா வர்த்தன் என்ற ராக்ஷஸன் அவன் என்று   தெரிந்தது.அவனை எரித்தார்கள். கிருஷ்ணனால்  அணைக்கப்பட்டு உயிரிழந்த அந்த ராக்ஷஸனும் மோக்ஷம் பெற்றான்.
         

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...