Thursday, March 21, 2019

PATTINATHAR



சித்தர்கள்   J K  SIVAN 
பட்டினத்தார் 

                              ''நான்''  இனி  இல்லை.

 நான்  நாக்குக்கு  அடிமையல்ல. சோற்றைத் தேடி  எங்கும் அலையாதவன்.  என்னை தேடி, நான் இருக்குமிடத்திற்கு வந்த, யாரவது தந்த,  உணவு என் பசியை  தீர்க்கட்டும்.  என் மீது உருக்கம், இரக்கம் கொண்ட  ஜீவன்கள்    யாராவது இல்லாமலா போய்விடுவார்கள்?  இனிமேல்  என்னை தேடி  ராஜ  உபச்சாரம் செய்தாலும் என் கால்கள்   இந்த  மரத்தடியையோ,  சத்திரத்து திண்ணையையோ,    கோவில் வாசல் மூலையையோ  விட்டு துளியும் நகராது.  பரம சிவா,  நான்  உன் பக்தன், அடிமை, என் தேகம் இளைக்கட்டுமே, அதனால் என்ன? என்கிறார்  பட்டினத்தார்.

இருக்குமிடந்தேடியென்பசிக்கேயன்
முருக்கமுடன்கொண்டுவந்தாலுண்பேன் - பெருக்க
வழைத்தாலும்போகேனரனேயென்றேக
மிளைத்தாலும்போகேனினி.

என்னய்யா  தேகம் இது.  நெய்யும்  பாலும், பாதம் முந்திரி பருப்பு  வளர்த் தேன்  கொஞ்சமாவது நன்றி இருக்கவேண்டாம்? எனக்கு தெரியாமலே  என்னுள்ளே  புதுசு புதுசாக  வியாதிகளை  கிளப்பி வேடிக்கை பார்க்கிறதே?  ஏதோ ஒருநாள் திடீரெண்டு  பொட்டென்று உயிரை போக்கிவிடும்? இதற்காகவா வளர்த்தேன் அதை?  அப்புறம் என்ன  இந்த உயிரற்ற பெரும் தேகத்தை  சில்க் ஜிப்பாவோடு  கட்டை அடுக்கி அதன் மேல் வைத்து நெருப்பில் கொளுத்தி விடுவார்கள்.  போதும்  போதும்  இந்த  தேகத்தை பற்றியே  இத்தனை காலமும் நினைத்து அபிமானம் வைத்தது எல்லாம். இனியாவது அந்த  காடுடைய சுடலைப்  பொடி பூசிய  என் உள்ளம் கவர் கள்வன் சிவனை நினைப்போம். அதில் உள்ள சுகம்  இந்த தேகத்தை வளர்த்ததில் இருந்த சுகத்தை விட  எவ்வளவு உயர்ந்தது. ப்ரயோஜனமானது.


விட்டுவிடப்போகுதுயர்விட்டவுடனே
யுடலைச்சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டது
பட் டெந்நேரமுஞ் சிவனையேத்துங்கள்போற்றுங்கள்
சொன்னேனதுவேசுகம்.

 ஆவி ஆவி  என்றால்  உயிர் தான்.  ஆவி யோடு  இருந்தால்  தான் இந்த மண்பாண்டம்  உடலுக்கு  மதிப்பு. அப்படி  இந்த உடலை உயிரோடு  சுமந்து எங்கு பார்த்தாலும்  எத்தனை காலம் திரிந்தேன்.  என்ன பேர்  எனக்கு  கிடைத்தது?  அதோ போகிறானே அவன் ஒரு மஹா பாவி ...இந்த  உலகம் என்னை புகழ,  போற்ற நான்  எதற்கு நடிக்க வேண்டும்?  ஏ முட்டாள் மனமே, போதும் இதெல்லாம். கொஞ்சம் திருந்து. நீ செய்யவேண்டியது என்ன தெரியுமா? இன்னும் இருக்கும்  சொச்ச  நாளில் இறந்துபோனவன் சத்தம் இல்லாமல் எதுவும் தேவையில்லாமல்  பேசாமல், கேட்காமல், தேடாமல் இருப்பதுபோல்  உன் வாழ்க்கையை நடத்து.  ''செத்தாரைப்  போலே திரி''  எவ்வளவு  அற்புதமான  தங்க வாக்கியம்..

ஆவியொடு  காயமழிந்தாலு   மேதினியிற்
பாவியென்று   நாமம்  படையாதே - மேவியசீர்
வித்தாரமுங்  கடம்பும்  வேண்டா  ம டநெஞ்சே
செத்தாரைப்  போலேதிரி.

ஆஹா  அந்த  பரமேஸ்வரன்  எங்கும் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன். எங்குமுள்ள அவனை  நாடவில்லையே என் மனம்?  என்  ஆணை அதிகாரம் எல்லாம் கையிலிருந்த  பணத்துக்கு தக்கவாறு  ராஜாங்கம் அல்லவா  நடத்தினேன்.  என்ன அதிகாரம், விர

ட்டல்  மிரட்டல்,  ,கர்வம், அகங்காரம் ! எல்லாம்  தொலைந்தது  அப்பாடா..  பற்று என்று ஒன்று இருந்தால் அது இந்த மஹா பாவி நெஞ்சே  உனக்குள்  அவனை உடனே  பற்றிக்கொள். நாவும்  மனமும் இனிக்கும் அவன் பேரை சொன்னால் நினைத்தால்.

வெட்ட வெளியானவெளிக்குந் தெரியாது
கட்டளையுங் கைப்பணமுங்  காணாதே - இட்டமுடன்
பற்றென்றார் பற்றாது  பாவியே  னெஞ்சிலவன்
இற்றெனவே வைத்த வினிப்பு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...