Friday, August 20, 2010

சென்னையை சுற்றி சில அற்புதமான கோவில்கள்












































































சென்னையை சுற்றி சில அற்புதமான கோவில்கள்.

அன்று வியாழக்கிழமை. 12.8.2010 . மழையும் இல்லை. காலையில் 15 பேர் ஒரு சிட்டி ரைடர் வண்டியில் கிளம்பிவிட்டோம். பள்ளிக்கரணையில் வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெருமாளின் உருவத்திலேயே தாயாரும் காட்சி தருகிறாள். மிகவும் நேர்த்தியாக உள்ள இந்த கோயிலில் இன்னும் மற்ற சந்நிதிகளை கட்டி கொண்டு இருக்கிறார்கள். போகும் வழியை விசாரித்து கொண்டு தான் போகவேண்டும். மற்றுமொரு கோயில் அன்னை ஆதிபராசக்தி, தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் மந்திர பாவை சந்நிதியும் உள்ளன. சித்தர்களால் உருவாக்கப்பட்ட இந்த மந்திரபாவை கொல்லி பாவை போன்ற சக்தி வாய்ந்த தெய்வம். தீய சக்திகளை அழிக்கும் தெய்வம். இந்த கோயில் பள்ளிகரணை புகழேந்தி தெருவில் உள்ளது. மிக விஸ்தாரமாக உள்ளது. அதுததாக நாங்கள் சென்றது தாம்பரத்தில் உள்ள ஸ்கந்தாஸ்ரமம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் இந்த கோயிலில் இருந்தாலும் வெளியே செல்ல மனம் வரவில்லை. என்ன அழகான சிலா ரூபங்களில் விக்ரகங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன தெரியுமா ? சகஸ்ர லிங்கத்தின் பிரம்மாண்ட உருவத்தை சொல்வதா, புவனேஸ்வரியின் அருள் பொங்கும் முக அழகை வர்ணிப்பதா, சுவாமிநாதன் திருக்கோலத்தை விவரிப்பதா, சரபேஸ்வரர்- ப்ரத்யங்கிரா அம்பாளின் உக்ரத்தையும் தேஜஸையும் வர்ணிப்பதா, வார்த்தைகளில் உச்சரிக்கமுடியாத திவ்ய ச்வரூபதுடன் விளங்கும் ஐயப்பனையும், பஞ்சமுக விநாயகரையும், சுதர்சன/நரசிம்ஹரையும் எவ்வாறு உங்கள்ளுக்கு சொல்ல முடியும். ; நீங்களே நேரில் சென்று தரிசித்து அனுபவித்து மகிழவேண்டியதுதான். நேரமாகிவிட்டதால் அங்கேயே கையில் எடுத்து சென்ற இட்டலியை மிளகாய் பொடியோடு சுகமாக விழுங்கிவிட்டு காபியை தேடி புறப்பட்டு விட்டோம். தாம்பரத்தின் அருகிலேயே மாடம்பக்கம் இருக்கிரதல்லவா . அங்குதானே 1 8 சித்தர்களின் கோயில் மிக நன்றாய் அமைந்திருக்கிறது. சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானம் அங்கேயே இருக்கிறது. பச்சை கல்லிலான மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆடிபூர பூஜைகள் விமரிசையாக அனேக சுமங் கலிகளுடன் விளக்கு பூஜையோடு நடந்துகொண்டிருந்தது. இதை ஒட்டியே தேனுபுரிஸ்வரர் ஆலயமும் உள்ளது. தரிசனம் செய்து கொண்டு அடுத்ததாக நாங்கள் சென்றது செம்பாக்கத்துக்கு. மிக தொன்மையான இந்த ஆலயம் வட திருவானைக்கா என்று புகழ் பெற்றது. சிவபெருமான் ஜம்புகேஸ்வரர் அம்பாள் அகிலாண்டேஸ்வரி. அபிஷேகம் நடைபெற்றுகொண்டிருந்தது. அன்றைய உபயதாரருக்காக காத்து கொண்டிருந்தார்கள். என் தமையனார் ரத்னமய்யர் பஜனை திலகம் பாலக்ரிஷ்ணனுடன் ஒரு சில பஜனை பாடல்களை பாடி அங்கிருந்தவர்களை திக்கு முக்காட வைத்த பிறகு அடுத்த கோயிலுக்கு புறப்பட்டோம். மகாபலிபுரம் செல்லும் வழியில் இஞ்சம்பாக்கதில் உள்ள மிகபெரிய ஷீரடி சாய் பாபா கோயில் ஒரு பார்க்க வேண்டிய ஆலயம். மிக அழகிய வேலைப்பாடுடன் கட்டபட்டிருக்கிறது. சாய் சமஸ்தானத்தில் தன்னை மறக்காதவர்கள் வெகு சிலராகத்தான் இருப்பார்கள். தொடர்ந்து பிரயாணம் செய்தால் அருகில் கானதுரில் பூரி ஜகந்நாதர் காதுகொண்டிருக்கிறார். தனியாக அல்ல. தமையன் பலராமனுடனும் சுபத்ரையுடனும் தான். ஒரிசாவுக்கு செல்லாமலேயே சென்னையிலேயே பூரிக்கு செல்ல முடிகிறது. நாங்கள் சென்ற நேரம் உச்சி கால பூஜை நடந்துகொண்டிருந்தது. அர்ச்சகரின் ஒரியா கலந்த சமஸ்க்ரித மந்திரங்கள் வித்யாசமாக காதில் விழுந்தது குழந்தைகளின் மழலை மொழி இனிமையை நினைவூட்டியது. மகாலட்சுமி சன்னிதியையும் தரிசனம் செய்துகொண்டு அண்ணாந்து பார்த்தல் பூரி ஜெகநாத சுவாமி கோயிலின் கோபுர தர்சனம். மிகவும் அருமையாக தரிசனம் செய்தோம். இஸ்கான் கிருஷ்ணன் கோயில் இன்னும் கட்டப்படவில்லை. இருப்பதை பார்த்தால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும் போல் உள்ளது. அமெரிக்க பக்தர்களின் ஆர்த்தியை பார்க்க நேரமில்லாததால் புறப்பட்டு விட்டோம். திருப்போரூர் முருகன் கோயில் மூடபட்டிருந்தால் அருகாமையிலிருந்த சிறிய குன்றில் இருக்கும் அம்மனை தரிசித்துவிட்டு அங்கேயே குதிரை சிலையின் கீழே உள்ள மண்டபத்தில் மரநிழலில் மதிய உணவை முடிதுகொண்டோம். உண்ட களைப்பில் அனைவரும் நல்ல காற்று வீசியதால் புளியோதரை, தயிர் சாதம் தந்த சுகத்தில் சில நிமிடங்கள் இளைப்பாறினோம். மாலை முருகன் சந்நிதி திறந்தவுடன் முருகனை தரிசித்து விட்டு திருப்போரூர் செங்கல்பட்டு சாலையில் குலுங்கி கொண்டே சென்றோம். வழியில் ஒரு அழகிய சிவன் கோயில் (புராதனமானது) செம்பாக்கம் என்ற ஊரில் உள்ளது. இங்கும் இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர் தான். ; அம்பாள் அழகாக காட்சி தருகிறாள். மிக பொருத்தமான பெயர் அவளுக்கு " அழகாம்பிகை" . எத்தனை பேருக்கு இந்த கோயில் தெரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டிய கோயில் இது. செல்லவே மனமில்லாமல் கிளம்பி அடுத்ததாக சிறிது நேரத்தில் மற்றொரு ஊருக்கு சென்றோம். அது முள்ளிபாக்கம் என்கிற ஸ்தலம். இங்கு பிரம்மாண்டமாக சிவன் தரிசனம் தருகிறார். நாங்கள் சென்ற நேரம் பூஜை செய்ய அர்ச்சகர் இல்லை. ரத்னமய்யர் இருக்கையில் என்ன கவலை. ஸ்லோகத்துடன் இனிய குரலில் ஒரு சிறு நாமாவளி. ஓயாமல் பாடி மகிழ்த்தும் பாலக்ரிஷ்ணனின் இனிய குரல் இங்கும் ஒலித்தது. இறைவனின் ஆசியுடன் மனதை அங்கேயே விட்டு விட்டு புறப்பட்டோம். வழியில் காபி உள்ளே சென்ற தெம்பில் அடுத்ததாக எங்கள் வண்டி நின்றது திரு இடைசுரம் என்று பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தாலும் தற்போதுள்ள பெயர் திரு இடை சூலம். யாரவது ஒரு நல்ல கதையை இதற்கு காரணமாக வைத்திருக்க கூடும். இந்த கோயிலின் வாசலில் இரு தூண்களில் பிள்ளையாரும் முருகனும் அழகாக வரவேற்கிறார்கள். இந்த ஊரின் அருகாமையிலேயே சற்று பிரயாணம் செய்தால் திருவேர்காட்டு அம்மன் ஐம்பது அடி உயரத்தில் நாகம் படமெடுத்து குடையாக, ஒரு கால் மடித்து அபய ஹஸ்தத்துடன் புன்னகை புரிந்து அருள் பாலிக்கிறாள். இருள் நெருங்கிவிட்டது. நேரம் சென்று விட்டது. விளக்கில்லாத காட்டு பாதை போன்ற வழியில் சிங்கபெருமாள் கோயிலுக்கு குறுக்கு வழியில் செல்வதாக சொல்லி எங்களை சிறிது நேரம் ஆட்டி படைத்து விட்டு வண்டி திரும்ப நங்கநல்லூர் அடைந்தபோது இரவு ஒன்பது மணி. குட் நைட் சொல்லி பிரிந்தோம். சென்ற கோயில் புகை படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. கண்டு மகிழலாம். - J.K. SIVAN



GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...