Sunday, July 16, 2017

அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம்

அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம்
J.K. SIVAN

நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்கம் என்றால் அது தப்பில்லை. எவ்வளவோ விஷயங்கள் அதில் இருக்கிறது. அதை அறியாமலேயே, நாம் முடிந்து விடுகிறோம் . அரைகுறையாக அதை தெரிந்து கொண்ட டாக்டர்கள் ஆஸ்பத்திரிகள் நம்மை இன்னும் சீக்கிரமே முடித்து விடுகிறார்கள்.

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றிக்கு மிக முக்கியா பங்கு இருக்கிறது. மோட்டு நெற்றிக்காரன் என்கிறோம். உண்மையில் அகலமாக உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். ரொம்ப அகலமாக மேலே போய் கொண்டிருந்தால் அது வழுக்கை சார். சரியாக பார்த்து சொல்லுங்கள்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

காது இப்படித்தான் பரந்து விரிந்து இருக்க வேண்டும். காது சின்னதாக ஆக அந்த ஆசாமியின் மனநிலையும் எண்ணங்களும் கூட குறுகலாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணம் சும்மா விருதாவாக சொல்வதல்ல. மரத்தடியில் எவன் கையோ பார்த்து

இன்னும் மூன்று நாளில் வெளியூரிலிருந்து உனக்கு ஒரு அதிர்ஷ்டம் வரப்போகிறது.
அப்படியா எங்கிருந்து?
வடக்கே இருந்து ?
எப்படி வரும்?
யானை மேலேயா வரும். யாரோ ஒருவர் மூலம் வரும். நீ அதற்கு முன் என்னைப் போல் ஒருவருக்கு ஒரு வேஷ்டி துண்டு நூறு ரூபா தக்ஷிணை அரை டஜன் பழங்களோடு போய் வாங்கிக்கொண்டு ஓடி வா ?

அதிர்ஷ்டம்ஒ தேடியவனுக்கு செலவு மிச்சம். ஜோசியன் மறைந்து போவான். நான்கு நாள் கழித்து யாருக்காகவோ கண்டி surety போட்டதால் அந்த ஆள் பணம் கட்டாததால் பாங்கிலிருந்து நோட்டீஸ் உனக்கு வரும். அது தான் வடக்கே இருந்து ஒருவரான போஸ்ட்மன் மூலம் வந்த அதிர்ஷ்டம்.

இப்படி ப்பட்ட ஜோசியம் இல்லை சாமுத்திரிகா லக்ஷணம். சாஸ்த்ர பூர்வமானது. ஒருவருக்காக சொல்லப்பட்டதல்ல. பொதுவாக மனிதர்களுக்கு அங்க அவயங்களை வைத்து அவரின் குணநலன்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது. இந்தியாவில் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரிய சாஸ்திர முறையாகும்.

இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண பலாபலன்களை இலக்கியங்கள், புராணங்கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் காணலாம். அதில் காணப்படுவது எல்லோருக்கும் அமையாது. அமைந்துவிட்டால் அவள் தெய்வம். பெண் பார்க்க போகும்போது அந்த காலத்தில் பெரியவர்கள் அங்க லட்சணங்கள் (சாமுத்ரிகா லட்சணம்) பார்க்கும்போது மாப்பிள்ளைக்காரன் பெண்ணின் அழகை பார்ப்பதில் கவனமாக இருப்பான்.

ஆகம சாஸ்திரத்தில் ஆண், பெண் தெய்வங்களின் சொரூபம் எல்லாம் சாமுத்ரிகா லட்சணம் பொருந்தியவையாக சிலை வடிக்கப்படும். நாம் அதால் தான் பெண்ணை பார்த்தாயா மகாலட்சுமி மாதிரி, சரஸ்வதி மாதிரி இருக்கிறாள் என்போம்.

இதில் பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உருண்டையான கண்கள் உள்வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் பற்றி ஏற்கனவே சொன்னேன்.

அடுத்தபடியாக விரல் அமைப்புகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம். இந்த மாதிரி விறல் உள்ள பெண்கள் மேலும் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர் நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள். ஆஜானு பாஹு என்று சமஸ்க்ரிதத்தில் இதை தான் சொல்வோம். நமது தமிழ் பொல்லாதது. ''அந்த ஆளுக்கு கை நீளம்'' என்றால் வேறு அர்த்தம். உண்மையில் அப்படிப் பட்ட நிறைய பேரை நாம் அரசியலிலிருந்து ஆபிஸ் வரை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். கண் பார்த்ததை கை எடுத்துவிடும் அபேஸ் பேர்வழிகள்.

நீண்ட விரல்கள் நீண்ட கைகளும் ராஜ யோகம். நாடாளும் யோகம் கொண்டது என்று சாமுத்ரிகா அங்க சாஸ்திரம் சொல்கிறது.

காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக் கிறதோ அந்த அளவிற்கு நல்லதாம். . கட்டை விரலின் தடித்து உருண்டு காணப்படுவதை விட மெல்லிய விரலாக இருப்பது சிலாக்கியம். இல்லையென்றால் எப்படி யாரிடம் போய் கேட்பது. பேசாமல் அதை பார்க்காமல் இருந்துவிடுவது சமயோசிதம்.

இரண்டாம் விரலை விட சற்று தடிமனாக கட்டை விரல் இருந்தாலே போதும் என்று சொல்கிறார்கள்.

கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பியிருக்கும் அதாவது வலது காலின் கட்டை விரல் வலது பக்கமாகவும் இடது காலின் கட்டை விரல் நுனி இடது பக்கமாகவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது வீட்டுக்கு வந்தால் முதலில் கால் கட்டை விரலை ஜாடையாக பார்த்து உஷாராகி விடவும்.

இரண்டாவது விரல் கட்டைவிரலை விட நீளமாக இருந்தால் கணவனை மதிக்கமாட்டாள் என்றும் தன் மனம் போன போக்கில் நடந்து கொள்வாள் என்றும் கூறப்படுகின்றது. பிரமன் படைப்பில் இந்த டைப் தான் இப்போது அதிகமோ?

கொஞ்சம்ஆண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்பிலிருந்து சில ருசிகர தகவல் பார்ப்போமா?

1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப் பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண் டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக் கும்.

4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனை யோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

5. வாய் – அழகான, சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். கண்ணாடியில் உடனே சென்று பார்த்து உங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

6. உதடு – உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந் து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

இன்னும் சொல்ல வேண்டியிருக்கிறது. அடுத்ததில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...