Tuesday, July 4, 2017

ஆடு பாம்பே விளையாடு பாம்பே!
J.K. SIVAN
சமீபத்தில் ''நந்தவனத்தில் ஓர் ஆண்டி'' என்று நமது உடம்பை பற்றி அதன் அநித்யத்தை பற்றி கடுவெளிச் சித்தர் பாடியதை எழுதியிருந்தேன். அது நினைவில் இருக்கலாம். இதோ பாம்பாட்டி சித்தரும் அசாத்தியமாக ஒரு பாடல் இயற்றியிருப்பதை படியுங்கள். ரசியுங்கள். அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள். மானுட வாழ்க்கை, நமது உடலின் அநித்யத்தை உணருங்கள்.
''இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று
ஆடுபாம்பே !
தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு
பாம்பே - சிவன்
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!
ஆடு பாம்பே! தெளிந்து ஆடு பாம்பே
சிவன அடியினைக் கண்டோம் என்று
ஆடு பாம்பே''.
‘ஆணும் பெண்ணும் சேர்ந்து தாயின் வயிற்றில் பத்து மாத காலம் உருவாகும் கருவை, சிசுவைத்தான் தம்பிடிக்கு அரைக்காசுக்கு உதவாத ''இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’ என்று பாம்பாட்டி சித்தர் சொல்கிறார்.
உடல் பற்றியோ, உள்ளம் பற்றியோ எதைச் சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே ஒரு பாம்பை ஆட்டி வைப்பவராக உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார்.
ஒரு சின்ன கதை சொல்லட்டுமா?. ஒரு ராஜாவை பாம்பு தீண்டிவிட, அவன் மண்டையை போட்டுவிட்டான். ராஜாவின் ஆட்கள் அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அந்தப்பக்கமாக வந்த பாம்பாட்டி சித்தர் அப்போது என்ன செய்தார் தெரியுமா?. அந்த செத்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் செத்த பாம்பை கண்டே பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.
சித்தர் அஷ்ட மா சித்தி படைத்தவர் ஆயிற்றே. அந்த க்ஷணமே தானே அந்த செத்துப்போன ராஜாவின் உடலுக்குள் தனது ஜீவனை புகுத்திக் கொண்டு அதனால் ராஜா எழுந்து உட்கார்ந்து வழக்கம்போல் மீசையை முறுக்கினான்.
அதோடு நிற்காமல் ராஜாவின் உருவில் இருந்த சித்தர் செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடியது. ராஜா எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது? போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, ராணிக்கு மட்டும் இதில் ஏதோ சூக்ஷமம் இருக்கிறது என்று புரிந்துவிட்டது.
கணவன் ராஜாவை சுற்றிவந்து வணங்கினாள் . '' நீங்கள் யாரோ தெரியவில்லை. ஒரு மஹான் என அறிகிறேன். இறந்து போன என் புருஷனுக்கு மீண்டும் உயிர் தந்துவிட்டீர்கள். பாம்பையும் பிழைக்கவைத்தீர்கள். நீங்கள் ஒரு யோகி. ஆனால் யார் என்று சொல்லவேண்டும்?’’ என்று பவ்யமாக வணங்கி கேட்டாள். அவளது அறிவுத் திறனை, தெளிவைக் கண்டு வியந்து, ''என்னை பாம்பாட்டி சித்தர் என்பார்கள்.
அப்புறம்இ சுற்றியிருந்த எல்லோரையும் பார்த்து அவர் என்ன சொன்னார் தெரியுமா?
‘‘ ஒரு பாம்பு தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே நீங்கள் எல்லோரும் இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!? யோசியுங்களேன் கொஞ்சமாவது'' என்கிறார் சித்தர்.
ராஜாவின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, நிறைய நமக்கு உபதேசம் செய்திருக்கிறார்.
அவரது எளிய ஆடு பாம்பே உபதேசங்கள் எல்லோருக்கும் புரிந்தது. யாக்கை நிலையாமை புரிந்துகொண்டார்கள். ராணியும் மனம் தெளிவடைந்து, அழாமல், தனது கணவனின் கொண்டாள் . சித்தரும் அவன் உடலில் இருந்து வெளிப்பட்டார். தனது உடலை மீண்டும் அடைந்தார். ராஜா தொப்பென்று உயிரற்று மீண்டும் விழுந்தான். அவனுக்கு சகல மரியாதைகளோடு அந்திம காரியங்கள் நடந்தன.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...