Monday, May 31, 2021

LIFE LESSON


 

Dear Friends,
                                                      Pain is a Blessing in Disguise

Name one person, who has not  felt  the pain  and you cannot  because  it is  part of life.God has shaped us  fit to live a  noble, sublime life spiritually  through various means.  He creates  many  repeated opportunities in His own way bringing certain obstacles and  bitter experiences in our life.  His  miracles are through painful and unpleasant experiences than  through pleasant experiences.
Pain is an eye-opener.  Only after our bitter experience and suffering we begin our journey towards Him.   Sorrow, therefore, seems to have some purpose.   Pain is a blessing in disguise.  Pain turns  our mind towards God, in whom alone there is lasting happiness and peace.  Life is not a bed of roses. Ups and downs, troubles and tribulations are common to all of us in this world. There is no way to escape from them. 

God tests His devotees through difficult situations to strengthen them spiritually. Let us face our sufferings bravely. Each obstacle will strengthen you. Each failure is a stepping-stone to success. Please be happy in whatever circumstances God has placed you. Have  unbroken love and faith in Him. Rely on Him; He knows what is best for us all.. Pray to God to give you strength to face them calmly. He will protect you and guide you.

Difficulties come in our path to test our strength. As such, we should welcome them. And with faith and trust in the Lord and His holy Name, we should tide over them. Remember: even this will pass away. is the play of God.  God’s ways are mysterious.. Be a witness in His  play.
God is kind and merciful. Despair not. Be calm and serene.  Worry weakens the mind and body. You cannot remove worries by worrying.  Be ever cheerful and happy.   Ever be rooted in God. Hope and help come when one is utterly helpless.

NANGANALLUR .K. SIVAN 


 




 

GEETHANJALI

 


கீதாஞ்சலி   -  நங்கநல்லூர்  J K  SIVAN 
தாகூர் 

63.  உன்னை விட மாட்டேன்.

 
63.   Thou hast made me known to friends whom I knew not.
Thou hast given me seats in homes not my own.
Thou hast brought the distant near and made a brother of the stranger.
I am uneasy at heart when I have to leave my accustomed shelter; 

I forget that there abides the old in the new, and that there also thou abidest.
Through birth and death, in this world or in others,
wherever thou leadest me it is thou, the same,
the one companion of my endless life who ever linkest my heart
with bonds of joy to the unfamiliar.
When one knows thee, then alien there is none, then no door is shut.
Oh, grant me my prayer that I may never lose the bliss of the touch of the one in the play of many.
 

கிருஷ்ணா, உன் மஹிமையை, பெருமையை எப்படிடா சொல்வேன்?
 உன்னை நினைக்கும்போது  ஆயிரமாயிரம் எண்ணங்கள் மனதில் பொங்குகிறது.  நீ தானேடா எனக்கு  யார் யாரையெல்லாமோ முன் பின் தெரியாதவர்களை ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் மூலமாக  நண்பர்களாக்கினாய்.  உண்மை, உண்மை, உண்மை.  எனக்கு   இன்று  உலக  முழுவதும்   ஆயிரக்கணக்கான நண்பர்கள்,  லக்ஷம்  வாசகர்கள்  யாரால்?,  உன்னைப் பற்றி  பேசுவதால், பாடுவதால், எழுதுவதால் தானே?.  என் வீடு இல்லாத மற்ற  எத்தனையோ  வீடுகளில் என்னை வரவேற்று  ஆசனம் இட்டு அமர்த்துவது யாரால்?  எங்கோ இல்லை, இதோ இங்கே  இருக்கிறேன்  நான்  உங்கள்  சகோதரன் சகோதரி நான் என்று  பலரை  அருகாமையில் என்னிடம் சேர்த்தது யார்?

வழக்கமான என் இடத்தை விட்டு நான்  விலகுவது கஷ்டம் தான். பழையன  கழிவதும் புதியன புகுவதும்  காலம் செய்யும் லீலை. ஆனால்  பழையது தான்  புதியதாக,   நீதான் எல்லாமுமாக  இருக்கிறாய் என்று நன்றாக அறிவேன். எத்தனையோ  பழைய தெரிந்த முகங்கள் அறிந்த பெயர்கள்  மறைந்துவிட்டன, ஒவ்வொரு  நாளும்  இழந்து கொண்டே  வருகிறேன். இது உலக நீதி, நியதி,  இதற்கு கொரோனாவும் பெரிதளவு உதவுகிறது என்பதும் உண்மை  என்று அறிந்து  என்  மனம் வாடுகிறது. ஜனனம் சந்தோஷத்தையும் மரணம் சோகத்தையும்  தருவது இயல்பு.    

கிருஷ்ணா,  நீ  எப்படி எல்லாம் என்னை  அழைத்து,  எங்கெல்லாம் என்னை  இழுத்துச் செல்கிறாயோ அப்படியெல்லாம் நான் அசைபவன்.  எனது நீண்ட  வாழ்க்கைப் பாதையில்  என்றும்  நீயே   இணை பிரியா  ஒரே  உறவினன்,    உற்ற துணைவன்  நீ மட்டுமே.     எவ்வளவு  புது முகங்களை இனிக்க  இனிக்க  எனக்கு உருவாக்கி இருக்கிறாய்.  ஆமாம்,   கிருஷ்ணா,  உன்னைத் தெரிந்து கொண்டால்  எல்லோரையும் தெரிந்து கொண்டதாக அல்லவா  அர்த்தம்.  நீ தானேடா  எல்லாமே, எல்லோருமே,  எல்லா கதவுகளும்  உன்னை வரவேற்கும் திறந்த கதவுகளாயிற்றே.

பகவானே  கிருஷ்ணா,  என்னை  ரக்ஷி. நான்  உன்னை  விடாமல்  போற்றி  வணங்குபவன்  உன்  நாமம் சொன்னாலே  போதுமே, எல்லாவற்றையும்,  எல்லோரையும்  கட்டி அணைக்கும் ஸ்பரிசம் அல்லவா அது. விடுவேனா?

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்   J K  SIVAN


22      
மன்னார்குடி  பெரியவா 

மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் ( 28.5.1815- 4.3.1903) தான் மன்னார்குடி பெரியவா. பாரத்வாஜ   வம்சத்தில் இவர்  ஒரு வேத வியாசர்.    அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பத்தை சேர்ந்தவர்.   திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா: மரகதவல்லி ஜானகி . அம்மாவின் அப்பா: மார்க்க ஸஹாய அப்பா தீக்ஷிதர். 

மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான வித்யார்த்திகளுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களி ருந்தெல்லாம் மாணவர்கள் வந்து கற்றார்கள். அனைவருக்கும்  அன்னதானம், வஸ்திரதானம் அளிக்க  அநேகர் உதவினார்கள்.  பாடம் கற்பிப்பதில் ரொம்ப  ஸ்ட்ரிக்ட் . கண்டிப்பு.  கோபிப்பார். அதே சமயம் புரியவில்லை என்றால்  திரும்ப திரும்ப சொல்லித் தருவார்.

தினமும்   வடக்கே நடந்து கைலாசநாதர் கோவில் அருகே தான் காவேரி ஸ்நானம். சிஷ்யர்கள் தெற்கே மீனாட்சி அம்மன் ஆலய படித்துறையில் ஸ்னானம் செய்வார்கள்.  ஒரு  சிஷ்யன் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் ஒரு  தடவை தர்க்கத்தில் விடை சொன்னதை அவமரியாதை, கர்வம் என்று எடுத்துக்கொண்டு தண்டிக்க  குருகுலத்தை விட்டு அனுப்பினார். கிருஷ்ண சாஸ்திரி வெளியே சென்று ராமாயண ப்ரவசனங்கள் நடத்தினார். (இந்த பருத்தியூர்   கிருஷ்ண சாஸ்திரிகள்  பின்னர்  மஹா பெரியவாவின் ஒரு குரு மகேந்திர மங்கலத்தில்)

இதர சிஷ்யர்கள் மூலம் க்ரிஷ்ணசாஸ்திரியின் பிரசங்கங்கள் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டு தனது சிஷ்யனின் பிரசங்கத்தை நேரில் சென்று கேட்ட  மன்னார்குடி பெரியவா  மகிழ்ந்தார். ராமனின் கல்யாண குணங்களை பற்றி பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் கடல் மடை திறந்தாற்போல் பேசிக்கொண்டிருந்தார். அன்று ''ராமனின் பொறுமை'' பற்றி பிரசங்கம். ''என் கண்ணை திறந்துவிட்டது கிருஷ்ணன் பேச்சு '' என்று அதிசயித்தார் மன்னார்குடி பெரியவா. பிரசங்கம் முடிந்து க்ரிஷ்ணசாஸ்திரிகள் தனது குரு  வந்திருந்ததை அறிந்து அவரை நமஸ்கரித்து பவ்யமாக கைகட்டி நின்றார்.

''அப்பா கிருஷ்ணா, இன்னிக்கு என் கண்ணை திறந்துட்டே. அடடா ஸ்ரீ ராமனின் கல்யாண  குணங்களைப்  பத்தி நீ பேசினது அற்புதம். அதுவும் பொறுமையைப் பத்தி . அபாரம். நீ ஒரு மஹாநுபாவன். எத்தனையோ ஜனங்களுக்கு நீ உன்னதமான சந்தோஷத்தை தரப்போறே. நாளையிலேர்ந்து மறுபடியும் வா. உனக்கு நிறைய இன்னும் சொல்லித்தரணும்''

இந்த நிகழ்ச்சி  மன்னார்குடி பெரியவாளை மாற்றி அவரிடம் இருந்த கோபம் மாயமாக மறைந்து விட்டது.
இரக்க குணம், அமைதி, பொறுமை உள்ளவராக்கி விட்டது..

1864ல் அப்பாவுக்கு சோமயாகம் பண்ணினார். அப்பா சொல்படி அப்பாவின் சகோதரர் அப்பய்ய தீக்ஷிதர் பிள்ளை நீலகண்ட சாஸ்திரியை தத்து எடுத்துக்கொண்டார். இருவருமாக  குருகுலம்  நிர்வாகம் செய்தார்கள். . பல சந்யாசிகள் கூட வந்து மாணவர்களாக சேர்ந்து வேத சாஸ்திரம் கற்றார்கள். அந்த குருகுலம் பிற்காலத் தில் சங்கரமடமாகியது. இதற்குதவியவர் வேறு யாருமில்லை. நமது  பரமாச்சாரியார் தான். அந்த குருகுலத்தில் உருவான மஹான்கள் சிலர் பெயர்களை சொல்கிறேன்:

பைங்காநாடு கணபதி சாஸ்திரி, நடுக்காவேரி ஸ்ரீனிவாச சாஸ்திரி, பழமானேரி சுந்தர சாஸ்திரி, கோஷ்டிபுரம் ஹரிஹர சாஸ்திரி, திருப்பதி வேங்கடசுப்ரமண்ய சாஸ்திரி. மல்லாரி ராமகிருஷ்ண சாஸ்திரி,
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி, காசி ப்ரஹ்மானந்த ஸ்வாமிகள், பாலக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள்
ராமக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள், மஹாதேவ ஸ்வாமிகள், தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், மகாராஷ்டிரா ஸ்வாமிகள், சச்சிதானந்த ஸ்வாமிகள் , தென்னாங்குளம் வைஷ்ணவ, நீலகண்ட சாஸ்திரி, யஞஸ்வாமி சாஸ்திரி, சுத்தமல்லி ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் யதீந்திராள்.   இவர்களில்  யாரையாவது விவரமாக உங்களுக்கு தெரிந்தால்  அவர்களை பற்றி விஷயங்கள் எனக்கு அனுப்பினால்  எல்லோருக்குமாக எழுதுகிறேன். எல்லோரும்  இந்த  மகான்களை அறியவேண்டாமா? பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் பற்றி எழுதியாகிவிட்டது.

மன்னார்குடி பெரியவா தனது  தாத்தாவிடம் சாமவேதம் கற்றார். அப்பாவிடம் காவ்யம், நாடகம் எல்லாம் கற்றார். பதினைந்து வயதில் ஸம்ஸ்க்ரிதத்தில் எழுத படிக்க, பேச, கவிகள் இயற்ற திறமை பெற்றார். ஸ்ரீ நாராயண சரஸ்வதியிடம் மேற்படிப்பு. ஸ்வயம்பிரகாச யதி களிடம் வேதாந்தம். மேல காவேரி சின்னண்ணா தீக்ஷிதரிடம் மஹா பாஷ்யம் கும்பகோணம் ஸ்ரீ ரகுநாத சாஸ்திரிகளிடம் மீமாம்சம் பாடம் பெற்றார்.

1887ல் பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் தங்கவிழா. மஹாமஹோபாத்யாய பட்டம் கொடுக்க ராஜு சாஸ்திரிகள் பேர் தேர்வு ஆனது. டில்லிக்கு கூப்பிட்டார்கள். தனது நித்ய கர்மாநுஷ்டானம், பூஜைகள் தடை படக்கூடாது என்று ''டெல்லி எல்லாம் நான் போகமாட்டேன் எனக்கு பட்டம் வேண்டாம்''  என்று சொல்லிவிட்டார்.   இந்திய கவர்னர் ஜெனெரல் தஞ்சாவூர் கலெக்டரை அழைத்து அவர் நேரில் வீட்டுக்கே  வந்து பட்டத்தை அளித்ததால் பெற்றுக்கொண்டார்.

மஹா பெரியவா கூட்டிய அத்வைத மாநாடுகள், சபைகளில் பிரதம பண்டிதராக பங்கேற்றவர் மன்னார்குடி பெரியவா.

ராஜு சாஸ்திரிகள் 30 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். பல ஆசிரியர்களுக்கு தனது அனுபவங்களை கொடுத்திருக்கிறார். வேத சாஸ்த்ர , ஹிந்து நீதி நெறி விஷயங்களில் வழி காட்டியாக இருந்திருக்கிறார்.
அவர் எழுதிய நூல்களின் பெயர்கள்: 
சத் வித்யா விலாசம், வேதாந்த வாத சங்கிரஹம் , உபாதிவிசாரம், ப்ரம்ம வித்யா தரங்கிணி வியாக்யானம் நியாயேது சேகரம், ஆடவைத்த சித்தி, சாம ருத்ர சம்ஹிதா பாஷ்யம், சிவா தத்வ விவேக தீபிகா, சிவ மஹிமா விவேக தீபிகா, ஸ்துதி சிவ மஹிமா ஸ்துதி வ்யாக்யானம், புருஷார்த்த ப்ரபோத ஸங்க்ரஹம், துர்ஜனோக்தி நிராசம், காவேரி நவரத்னமாலிகா, தியாகராஜஸ்த்வம் , தம்பரபரணீஸ்த்வம், காவேரிஸ்த்வம், தீக்ஷித நவ ரத்னமாலிகா, தீக்ஷிதவம்சாபரணம் .

அவருடைய சிஷ்யர்கள் பைங்காநாடு கணபதி சாஸ்திரி, பருத்தியூர் க்ரிஷ்ணசாஸ்திரிகள் ஆகியோர் தங்கள் குருவை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.

காலம் சென்றது. விருத்தியாப்பியம் மன்னார்குடி பெரியவாளையும் விடவில்லை. 1903ல் 88 வயது. உடம்பு 
 ரொம்ப க்ஷீணமாகிவிட்டது. சுயமாக எழுந்திருக்க நடக்க முடியாத நிலை. அவர் மருமகள் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் .
''எனக்கு பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி ப்ரவசனங்களை கேட்கவேண்டும் போல் இருக்கிறதே'' என்றதும்  செய்தி கிருஷ்ண சாஸ்திரியை எட்டியது. எவ்வளவு குரு பக்தி ஸ்ரத்தையான சிஷ்யன் பாருங்கள், கிருஷ்ண சாஸ்திரிகள்.    உடனே புயலாக மன்னார்குடி ஓடினார். சிலமாதங்கள் அங்கேயே தங்கி குருவுக்கு முன்னால் அமர்ந்து பிரத்தியேகமாக அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும்  நண்பர்கள், சிஷ்யர்களுக்கு மட்டுமாக அவருக்கு பிடித்த ராமாயண ப்ரவசனங்கள் புரிந்தார். மன்னார்குடி பெரியவாளுக்கு பரம சந்தோஷம். ஆசிர்வதித்தார்.

மன்னார்குடி பெரியவா, மார்ச் 4, 1903அன்று 88 வயதில் விதேக முக்தி அடைந்தார். நாடு நகரம் முழுதும் அவரது மறைவுக்கு வருந்தியது.



CHANAKYA NEETHI

 


சாணக்ய நீதி  -- நங்கநல்லூர் J K SIVAN

நான்   உலக சரித்ரம்  ஆர்வமாக படித்திருக்கி றேன்.  இருந்தாலும் சரித்ரம் இங்கே  எழுதப் போவதில்லை. அநேகர் விரும்ப மாட் டார்கள். ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த ஒரு அறிவாளி  கௌடில்யன் எனும் சாணக்கியன். அவனைப் போல் இன்னொருவனை இன்னும்  பாரத தேசம் காணவில்லை.  தலை சிறந்த தத்துவ வாதியா, பொருளாதார நிபுணனா,  நீதிபதியா,  சாஸ்திரங்கள்  கற்ற  வேத ப்ராமணனா, ராஜகுருவா.... யார் ?? கிங் மேக்கர்  KING MAKER  என்கிறோமே  கௌடில்யன் உண்மையில்  EMPEROR  MAKER   விஷ்ணு குப்தன், கௌடில்யன்  என்ற  அவனது  இயற்  பெயர்கள்  மறைந்து சாணக்கியன் என்று உலகமுழுதும் அறியப்படுபவன்.  எது எப்படி இருந்தாலும்   சாணக்யன் சொன்னதாக  சில வார்த்தைகள்  நமக்கு கிடைத்து அதைப் படிக்கும்போது அவன் எவ்வளவு தீர்க்க சிந்தனையாளன் என்பது  புலப்படுகிறது.  அவனது சாணக்ய  நீதியைப் படிக்கும்போது  தான் அவனது  தொலை நோக்கு, பக்தி, சமூக சிந்தனை, பேரன்பு, தியாகம், நேர்மை,  நிர்வாக ஆற்றல்,  ராஜரீகம்  எல்லாம் புரிபடுகிறது. 

प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम् ।
नानाशास्त्रोद्धृतं वक्ष्ये राजनीतिसमुच्चयम् ॥ 1-1

ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதி⁴பதிம் ப்ரபு⁴ம் । நாநாஶாஸ்த்ரோத்³த்⁴ரு’தம் வக்ஷ்யே ராஜநீதிஸமுச்சயம் ॥ 01-01

நான் யார்?  ஒரு பொம்மை,  இயந்திரம், என்னைச் செலுத்துபவன் அந்த சாக்ஷாத்  மஹா விஷ்ணு, மூவுலகுக்கும் அதிபதி,  லோக காரணன்,  அவனை வணங்கி நமஸ்கரித்து என் மனதில் தோன்றியதை ஓலைச்சுவடியில் வடிக்கிறேன்.  ராஜரீக  கொள்கைகள் கோட்பாடுகள்  நீதி நெறி  பற்றி சொல்கிறேன். 

अधीत्येदं यथाशास्त्रं नरो जानाति सत्तमः ।
धर्मोपदेशविख्यातं कार्याकार्यं शुभाशुभम् ॥1-2

அதீ⁴த்யேத³ம் யதா²ஶாஸ்த்ரம் நரோ ஜாநாதி ஸத்தம: । த⁴ர்மோபதே³ஶவிக்²யாதம் கார்யாகார்யம் ஶுபா⁴ஶுப⁴ம் ॥ 01-02

இதை நன்றாக அறிந்துகொண்டு,  சாஸ்திரம் சொல்வதை புரிந்துகொண்டு , தனது கடமையை சாஸ்திரம் சொல்லும் வகையில், வழியில் கடைபிடிக்கிறானோ,  எதை பின்பற்றவேண்டும், எது கூடாது என்று பகுத்தறிகிறவனோ, அவனே  சிறந்த மனிதருள் மாணிக்கம்.
तदहं सम्प्रवक्ष्यामि लोकानां हितकाम्यया ।
येन विज्ञातमात्रेण सर्वज्ञात्वं प्रपद्यते ॥ 1-3

தத³ஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா । யேந விஜ்ஞாதமாத்ரேண ஸர்வஜ்ஞாத்வம் ப்ரபத்³யதே ॥ 01-03

சமூகநலத்தினை  கருத்தில் கொண்டு,  நான் இதை சொல்கிறேன்,  அதை நான் நினைக்கிறபடியே புரிந்துகொண்டு கடைபிடித்தால்  எல்லாம் இனிதே , நல்லதாகவே  நடக்கும்.  

मूर्खशिष्योपदेशेन दुष्टस्त्रीभरणेन च ।
दुःखितैः सम्प्रयोगेण पण्डितोऽप्यवसीदति ॥ 1-4

மூர்க²ஶிஷ்யோபதே³ஶேந து³ஷ்டஸ்த்ரீப⁴ரணேந ச ।து:³கி²தை: ஸம்ப்ரயோகே³ண பண்டி³தோऽப்யவஸீத³தி ॥ 01-04

எவ்வளவு தான் கற்றுணர்ந்த அனுபவ ஞானி என்றாலும்  ஒரு முட்டாள் சிஷ்யனுக்கு கற்பிக்கும்போது,  ஒரு  தவறான பெண்ணோடு வசிக்கும்போது,  துன்பப்படும்  வியாதியஸ்தர்கள் இடையே  இருக்கும்போதும், அவன்   மிகுந்த துக்கம் அடைகிறான். 

दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः ।
ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥ 1-5

து³ஷ்டா பா⁴ர்யா ஶட²ம் மித்ரம் ப்⁴ரு’த்யஶ்சோத்தரதா³யக: । ஸஸர்பே ச க்³ரு’ஹே வாஸோ ம்ரு’த்யுரேவ ந ஸம்ஶய: ॥ 01-05

பொருந்தாத  துஷ்ட மனைவி,  ஜடம் மாதிரியான ஒரு நண்பன்,  எதற்கெடுத்தாலும் மறுபேச்சு பேசும்  சேவகன், பணியாள், வீட்டில்  பாம்பு குடியிருப்பது,   இவை யெல்லாம், மரணத்தின்  அருகே கொண்டு செல்பவை.  இதில் சந்தேகம் வேண்டாம்.  

आपदर्थे धनं रक्षेद्दारान् रक्षेद्धनैरपि ।
आत्मानं सततं रक्षेद्दारैरपि धनैरपि ॥ 1-6

ஆபத³ர்தே² த⁴நம் ரக்ஷேத்³தா³ராந் ரக்ஷேத்³த⁴நைரபி । ஆத்மாநம் ஸததம் ரக்ஷேத்³தா³ரைரபி த⁴நைரபி ॥ 01-06
பணம் கையில் இருந்தால்  தாம் தூம் என்று செலவு பண்ணக்கூடாது.  பின்னால் ஒருகாலத்தில் ஏதேனும் கஷ்டம் வரும் போது  தக்க உதவியாக இருக்கும் வகையில் அதை சேமித்து, பாதுகாத்து வைக்க வேண்டும். அவன்  சொத்து  சுதந்திரம் எல்லாவற்றையும்  தியாகம் செய்ய,  இழக்க நேரிட்டாலும்  மனைவி மக்களை ரக்ஷிக்கவேண்டும்.   ஒருவன்  தனது மனைவி மக்களை, செல்வத்தை,    தியாகம் செய்ய நேரிட்டாலும்  தனது ஆத்மாவை  ரக்ஷிக்க வேண்டும்.   

आपदर्थे धनं रक्षेच्छ्रीमतां कुत आपदः ।
कदाचिच्चलते लक्ष्मीः सञ्चितोऽपि विनश्यति ॥ 1-7

ஆபத³ர்தே² த⁴நம் ரக்ஷேச்ச்²ரீமதாம் குத ஆபத:³ । கதா³சிச்சலதே லக்ஷ்மீ: ஸஞ்சிதோऽபி விநஶ்யதி ॥ 01-07

வருமுன் காப்பானாக,  செல்வம் இருக்கும்போதே, பிற்காலத்தில் ஏதேனும் துன்பம் நேரிட்டால் அதை சமாளிக்க செல்வம் தேவைப்படும் என்று அறிந்து முன்னேற்பாடாக சேமித்து வைக்க வேண்டும்.   நான் தான் பணக்காரனா யிற்றே, எனக்கு என்ன துன்பம் வரப்போகிறது என்கிற இறுமாப்பு, முட்டாள் தைர்யம் கூடாது. ஒரு கணத்தில்  கையிருப்பு கரைந்து விடும்.. ஜாக்கிரதை. 

 स्मिन्देशे न सम्मानो न वृत्तिर्न च बान्धवाः ।
न च विद्यागमोऽप्यस्ति वासं तत्र न कारयेत् ॥ 1-8

யஸ்மிந்தே³ஶே ந ஸம்மாநோ ந வ்ரு’த்திர்ந ச பா³ந்த⁴வா: । ந ச வித்³யாக³மோऽப்யஸ்தி வாஸம் தத்ர ந காரயேத் ॥ 01-08

உனக்கு மதிப்பு இல்லாத, உன்னை லக்ஷியம் செய்யாத  பிரதேசத்தில்,  ராஜ்யத்தில், நீ வாழமுடியாது.  பிழைக்க முடியாது,  உனக்கு உதவ  சகோதரத்வம் அங்கே இல்லை, உன்னால் எதையும் கற்க முடியாது, நண்பர்கள்  கிடைக்க மாட்டார்கள். 

धनिकः श्रोत्रियो राजा नदी वैद्यस्तु पञ्चमः ।
पञ्च यत्र न विद्यन्ते न तत्र दिवसं वसेत् ॥ 1-9

த⁴நிக: ஶ்ரோத்ரியோ ராஜா நதீ³ வைத்³யஸ்து பஞ்சம: । பஞ்ச யத்ர ந வித்³யந்தே ந தத்ர தி³வஸம் வஸேத் ॥ 01-09

எங்கேயாவது ஒரு தேசத்தில், ராஜ்யத்தில், நீ தங்க நேரிட்டால்  முதலில் இந்த ஐந்து விஷயங்களை கவனி. இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் அங்கே ஒரு நாள் கூட  தங்குவதால் பயனில்லை.   தனவந்தன்  செல்வமுள்ளவன் இல்

லாத இடம், , ஏனென்றால் அவன் பணத்துக்கு  பாதுகாப்பு இல்லையென்றால் அவன் செல்வந்தனாக அங்கே இருக்கமுடியாது.   நீ இருந்து என்ன பண்ணுவாய்?   ராஜா என்கிற தலைவன் இல்லாத இடம்,  தலைக்கு தலை நாட்டாமையாக உள்ள இடம் ஆபத்தானது.  வேதம் கற்ற பிராமணன் இல்லாத ஊரில்  நீதி, நியாயம், நேர்மை இருக்கவே இருக்காது. மனச்சாட்சி இல்லாதவன் தான் இருப்பான். அதேமாதிரி  வைத்தியன் இல்லாத ஊரில்  எந்த நோய் வந்தாலும்  அதற்கு  மருந்தில்லாமல் பலியாகவேண்டியது தான். ஆறு நதி இல்லாத ஊரிலும் அதே கதி.  வறட்சி உன்னை கொன்றுவிடும்.

लोकयात्रा भयं लज्जा दाक्षिण्यं त्यागशीलता ।
पञ्च यत्र न विद्यन्ते न कुर्यात्तत्र संस्थितिम् ॥ 1-10

லோகயாத்ரா ப⁴யம் லஜ்ஜா தா³க்ஷிண்யம் த்யாக³ஶீலதா । பஞ்ச யத்ர ந வித்³யந்தே ந குர்யாத்தத்ர ஸம்ஸ்தி²திம் ॥ 01-10

எங்காவது பிழைக்க  ஒரு ராஜ்ஜியம், ஊர் செல்லும்போது,  அங்கே  ஏதாவது  உண்மையிலேயே  வழி இருக்கிறதா என்று முதலில்  சோதித்து பார்க்க வேண்டும். யாருக்கும் பயமில்லாத மனிதர்கள் வாழும் இடத்தில் இருப்பது அபாயம், அவமானம், வெட்கம் இல்லாதவர்கள், புத்திசாலித்தனம் அற்றவர்கள்,   தானம் தர்மம் செய்யும் மனப்பான்மை இல்லாதவர்கள்  வாழும் இடத்தில்  நீ  காலம் தள்ளமுடியாது. ஜாக்கிரதை.அங்கிருந்து முதலில் கழண்டு கொள் .

தொடரும் 

LIFE LESSON

 

Dear Friends,

I quote an excellent sloka  which should form a part of our daily prayer. It has rich meaning as given below:

न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः ।
परेण नाकं निहितं गुहायां विभ्राजते तद्यतयो विशन्ति ॥

na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .
pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti ..

All our karmas, ou rdeeds would not bring us the  divine knowledge, which is  endless, The supreme bliss is known as Moksha,  It cannot be bestowed upon us by our ancestors or the ones to follow, the  progeny,  Whatever amount  we have and donated can at best secure some name and fame that is all, It cannot bring wisdom, or  divine knowledge.  It is only the renunciation, which alone can bring the moksha for us, the relief from sansara,  the immortality which one seeks.   Samsarati iti samsarah. Samsara is a life that is subject to change, e.g., aham sukhi, I am happy or aham duhkhi, I am unhappy. Freedom from samsara is amrtatva. So amrtatva means moksha, freedom from time, freedom from death.


Who are they who gain this amrtatvah? Tyaginah.Tyagena eke praptavantah, by renunciation some gain. Eke in the plural means a few people. By what means? Tyagena, by tyaga. Tyaga is renunciation for the sake of knowledge. These are sannyasins who have renounced to gain knowledge, to gain moksha. Sannyasa is praised in this mantra. The mantra will explain this further.

Na karmana, not by karma. One can gain moksha only by knowledge. Karma will bring karmaphala, results, but karma is finite and therefore, karmaphala is also finite. The limited person plus the limited result born of limited karma will continue to be limited. A finite number when added to a finite number will still be a finite number. Therefore, na karmana, there is no way of getting moksha through karma.

Can karma-yoga lead to moksha? Yes, you can gain knowledge by karma-yoga, in that it prepares you for knowledge. It is not just another form of yoga. We mistakenly think that we will perform karma-yoga. Nobody can ‘do’ karma-yoga. There is no particular action called karma-yoga. Some people believe that in giving as charity or in doing some seva, they are ‘doing’ karma-yoga. Karma-yoga is only possible when your goal is moksa, and the entire life is one of proper attitude. For instance, your conduct and duties in marriage or parenting are also part of karma-yoga. You can thus convert your activities in life into a means for your own growth; that is karma-yoga.

Na prajaya, not by progeny. Na dhanena, not by wealth. There are predominant desires such as the desire for wealth, fame, and power in this world, and the desire for the heavens, etc. Punya-karma is dharma, dhana is artha, and praja is kama. Dharmartha-kama is not moksha. You have to deliberately choose moksha. Dharma is useful in that it becomes a basis for conducting your life, and then the whole life becomes yoga. The bliss is known as Paramananda. 

Tyagenaike amrtatvamanasuh. Only by tyaga, renunciation of karma, can you gain moksha. Not doing karma is not renunciation. Even while performing karma, you should discover that you are actionless. That is akarma. You can gain moksha only by knowing that the atman is akartr and that it is Brahman.

  Swami Dhayananda Saraswathi explains this very nicely:   

Parena nakam. Kam means happiness, su-kham. Even without the prefix ‘su’, kham means happiness. Akam is na sukham, that is duhkham. Na akam is the absence of duhkha. Akam na vidyate yasmin tad nakam, that in which there is no duhkha is nakam. Nakam is the sukha of heaven, which is mentioned in the Vedas. It is anitya, lasting only for a finite period. Parena nakam means more than the heavenly sukha. It is ananda, limitless. It transcends svarga; it transcends the absence of duhkha and is in the form of ananda, untouched or uninhibited by duhkha. It is paramananda.

Guhayam nihitam-that which obtains as yourself, the atman in your buddhi-guha. Guha means cave. By definition, guha is dark; it stands for darkness. The Lord obtains in the buddhi in the form of ananda, limitlessness or fullness, as the svarupa or very nature of the atman. However, you do not recognise it due to ignorance. Its presence is hidden for want of light. Therefore, the faculty of knowledge, the buddhi, is called guha.

Brahman is not hidden because everything is Brahman. The knower is Brahman, the knowledge is Brahman, and the known is Brahman. Every thought is Brahman; nothing is outside Brahman. Therefore, Brahman cannot be hidden by anything. One of the Upanisad says that if a person could cover space with a cloth, he would cover Brahman! This means all that is here is Brahman. Even while you say, “I don’t know Brahman,” it is Brahman that is talking to me. It is as self- contradictory as saying, “I have no tongue,” or “I am dead”. This is denial of Brahman. You cannot deny Brahman because you are Brahman. If everything is Brahman, how is it that you do not appreciate this fact? This is because it is a question of knowing it, and not a question of believing so. This knowledge is not hidden, but veiled due to ignorance and therefore, the buddhi is called guha.

The buddhi is dark with respect to Brahman, the most obvious. If you have not seen an object, it is out of sight and, therefore, out of mind, but Brahman, being oneself, is never out of sight; it never goes out of mind. Therefore, it is our ignorance that conceals its presence.

Yad vibhrajate, that which shines. It is that which shines in the form of ananda, the atman, consciousness. Vividham bhrajate, or višeshena bhrajate. In the form of this entire jagat, that ananda alone is shining all the time on the platform of one’s buddhi as jñatr-jñana-jñeya, the knower, knowledge and the known. Otherwise, how does one recognise any thing? Everything is in the buddhi. All these galaxies ‘out there’ are ‘in here’ within our buddhi.    The sannyasins committed to knowledge ‘gain’paramananda

Yatayah vishanti. Yatayah is the plural form of yatih. A yati is yatna-silah, one who puts in the right effort. This can mean anybody. Even a karma-yogin is a yati. Yati also means seeker, a mumukshu. The rudi, conventional meaning of yati, however, is sannyasin. This meaning is more popular. The effort of these yatayah, sannyasins or mumukshus, is made for the sake of moksha, mokshartham yatnam.

Visanti, labhante, they gain. Yad vibhrajate tat yatayah visanti, the sannyasins attain this shining, pure ananda.

J K SIVAN 

Sunday, May 30, 2021

NAN PETRA SELVAM

 

நான்  பெற்ற  செல்வம்  -  நங்கநல்லூர்  J K   SIVAN 
                             
 சக்தி ஸ்கேன்னர்ஸ்  திருமதி பானுமதி ஏழுமலை 

எட்டு  வருஷங்கள் ஆகப்போகிறது.  2013 ல்  முதலில்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி  என்று ஆரம்பித்த  எங்கள் குழு,   நான் எழுதிய கிருஷ்ணன் கதைகளை  வாசகர்கள்  விரும்பிப் படிப்பதால் அவற்றை புத்தகமாக்க  முடிவெடுத்தது. 
அதற்கு முன்  அச்சிட்டு புத்தகம் வெளியிடும்  அனுபவம்   இல்லாததால்  தயக்கமாக இருந் தது.  நன்கொடை பெற்று தான் அச்சிட வேண்டும் என்ற நிலை.   முகநூல்,மின்னஞ்சல் வழியாக எங்கள் திட்டத்தை அறிவித்தோம்.  வியாபார நோக்கம் இன்றி  புத்தகத்தை விலை இன்றி வெளியிட்டு வாசகர்களுக்கு வழங்குவதே எங்கள் முடிவு.

கிருஷ்ணன்  அப்போது எங்களுக்கு  ''என் புத்தகத்தை முதலில் வெளியிட  நானே  உனக்கு  ஒரு நல்ல  பிரசுர கர்த்தாவை  அனுப்புகிறேன்'' என்று எனக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர் தான்  திருமதி பானுமதி ஏழுமலை
கும்பகோணத்தில் பிறந்தவர்.   சென்னை எதிராஜ் கல்லூரியில்  வாணிபம், வணிகம் உயர்நிலை வல்லுநர்  M.COM  படித்தவர்    கிட்டத்தட்ட  முப்பது ஆண்டுகளாக  அச்சுத் துறையில்  அனுபவசாலி. எண்ணற்ற  வணிக,  அச்சுத்துறையில்  தொடர்கள் கொண்டவர்.  கணவரோடு சேர்ந்து அச்சகத் துறையில்  ஈடுபட்டு  பேரும் புகழும் பெற்றவர்.  
 தமிழ் நாடு   அரசாங்க பள்ளிப்பாடங்கள்,    BSNL  வெளியீடுகள்,  ,  ஞான ஆலயம்  ஞான பூமி,  ஆனந்தவிகட ன், குமுதம், வாசன் பப்பிளிகேஷன்,  சென்னை துறைமுகம்,   கிரி ட்ரேடிங்,  போன்ற  பல பிரபல  நிறுவனங் களின்  அச்சுப்பணிகளை ஏற்று சிறப்புற  குறித்த காலத்தில்  நிறைவேற்றித் தருபவர்.  அச்சுத் துறை   உலகில் தனக்கென ஒரு பெருமையான   முதன்மை ஸ்தானம் வகிப்பவர். சக்தி ஸ்கேன்னர்ஸ்  பிரைவேட்  லிமிடெட் குழுமம்  நிறுவன  அதிபர். 

இப்படி ஒருவர்   என்னை  நேரில் வந்து சந்திக் குமாறு  சொன்னபோது  எனக்கு   நம்பிக்கை இல்லை.  ''இது சரிப்பட்டு வராது, ரொம்ப பெரிய  அச்சக நிறுவனம், நாம்  சாதாரண ஒரு சிறு குழு'' அவர்கள்  குறிப்பிடும் தொகையை   நம்மால் செலுத்த  வழியில்லாத நிலையில் எப்படி சந்திப்பது  என்று போகவே  விருப்ப மில்லை.  எனினும் ஸ்ரீ சுந்தரம் ராமசந்திரன், எங்கள்  செயலர், வாருங்கள்  எதற்கும்  நாம் போய் பார்த்துவிட்டு வருவோம்'' என்று  2013  அக்டோபர் மாதம்  கோபாலபுரம் 3வது தெருவில் திருமதி பானுமதியை  சந்திக்கச்   சென்றோம்.
''வாருங்கள்''
என்று சிரித்த முகத்துடன் வரவேற்ற போது  எனக்கு  பாதி தெம்பு வந்து  நம்பிக்கை துளிர் விட்டது.
''இதுவரை எத்தனை புத்தகங்கள் வெளியிட்டி ருக்கிறீர்கள். 
''ஒன்றுமே யில்லை. இப்போது தான் முதலில்  ஆங்கிலத்தில்  ஸ்ரீ கிருஷ்ணன்  வாழ்க்கை  கதைகள் 100 புத்தகமாக  ஆங்கிலத்தில் வெளியிட எண்ணம் '' 
''நீங்கள் தானே  J  K   சிவன். முகநூல்  ஈமெயில் மூலம் நிறைய கதை எழுதிகிறவர். நான் உங்கள் கதைகளை விரும்பி படிப்பேன்.  ரொம்ப  விறுவிறுப்பாக  எழுதுகிறீர்கள்''    என்று  அவர் சொன்னபோது  என் காதுகளை நம்ப முடியவில்லை.   தரையில் கால் பாவ வில்லை. பறப்பது போல் ஒரு ஆனந்தனு பவம்.குரல்  மெதுவாக எழும்பியது.  
''ஆமாம் மேடம், இதுவரை விடாமல்  ''YOU , I   AND  KRISHNAA '' என்கிற தலைப்பில் எழுதிய  100  கிருஷ்ணன்  பாகவத  கதைகளை புத்தக மாக்க விருப்பம்.  குறைந்தது 1000 பிரதிகள் வேண்டும்.  விலை  போட உத்தேசம் இல்லை ''.   
''என்னிடம் உங்கள்  pdf அனுப்புங்கள்,  எவ்வ ளவு ஆகும் என்று சொல்கிறேன். அதற்கு முன் ஒரு வார்த்தை. நீங்கள் செய்து வரும் இறை பணி  பற்றி எனக்குத்  தெரியும்,  ஆகவே  உங்களில் ஒருவராக  நானும் இதில் பங்கேற் கிறேன். வெறும் காகிதவிலை,  புத்தகமாக் கும் விலை, அச்சுக்கூலியில் ஒரு சிறு  பகுதி மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும், நீங்கள் செய்யும்   நல்ல காரியத்தில் நானும்  பங்கு கொள்ள விரும்புகிறேன். ஆகவே  மற்ற  செலவினங் களை  நானே  பொறுப்பேற் கிறேன்'' என்றார்.      
என் காதுகளை நம்பமுடியவில்லை.  மிகச்  சிறந்த  வகையில்  அற்புதமாக  இதுவரை 35 புத்தகங்கள் போல்  அச்சிட்டு கொடுத்தி ருக்கிறார் இந்த  விந்தைப் பெண்மணி. 
இன்று அவருடைய  பிறந்த நாளில்  அவரை  மனமார வாழ்த்தி நான் வணங்கும் கிருஷ் ணன்   திருமதி  பானுமதி தம்பதியர்   நீண்ட காலம்   ஆரோக்கியமாக    மகிழ்ச்சிகரமாக  வாழ அருள வேண்டும் என  பிரார்த்திக் கிறேன்.  இன்னும்  40க்கும் மேலாக  புத்தகங் கள் வெளி வர காத்திருக்கிறது.  ஸ்ரீ க்ரிஷ்ணார் ப்பணம் சேவா டிரஸ்ட்  நிறுவனம்  இன்னும் நிறைய  புத்தகங்கள்  விலையின்றி  அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 
அவர்  ஒன்றிரண்டு  புத்தக வெளியீட்டு விழாக்களில் பங்கு கொண்டு மகிழ்வித்தார். அப்போது அவரை  கௌரவித்து  நன்றியோடு  வாழ்த்தினோம்.
கொரோனா  கொஞ்சம்  மனது வைத்து  சீக்கிரம் நம்மை விட்டு விலகினால் மேலும் எங்கள் புத்தகங்கள் வெளிவரும். எல்லோரும்  ஆவலோடு  காத்திருப்போம்.  . 



GEETHANJALI

 

கீதாஞ்சலி     ---    நங்கநல்லூர்    J K  SIVAN --

தாகூர் 

     
  62.  சுகம்.   சுகம்,   இதல்லவோ  சுகம்


62.  When I bring to you coloured toys, my child, I understand why there is such a play of colours on clouds, 
on water, and why flowers are painted in tints---when I give coloured toys to you, my child.

When I sing to make you dance I truly Know why there is music in leaves, and why 
waves send their chorus of voices to the heart of the listening earth---when I sing to make you dance.

When I bring sweet things to your greedy hands I know why there is honey in the cup of the flowers and
 why fruits are secretly filled with sweet juice---when I bring sweet things to your greedy hands.

When I kiss your face to make you smile, my darling, I surely understand what pleasure streams from the sky in morning light, and
what delight that is  which the summer breeze brings to my body---when I kiss you to make you smile.


என் செல்வமே, கண்ணா, உனக்கு  விளையாட நான் கலர் கலராக  பொம்மைகள் வாங்கி வந்தேனே,  அப்போது தான்  எனக்கும்  புரிந்தது,  ஏன்  வானில்  மேகங்களுக்கு  இத்தனை வண்ணங்கள் என்று,   நீருக்கு ஏன்  இவ்வளவு  வித வித  நிறங்கள் என்று,  ஏன் எங்கு பார்த்தாலும்  பூக்களுக்கு   எண்ண முடியாத அளவு  வர்ண ஜாலங்கள் என்று, ஆம்   குழந்தாய் , உனக்கு நான்  விளையாட  கலர் கலராக  பொம்மைகள் கொடுத்தேனே  அப்போது தான் புரிந்தது.

நீ  ஆட வேண்டும் என்று நான் பாடினேன்  அல்லவா அப்போது தான்  காற்றில்  இலைகள்   அசைந்து பாடுவது ஏன் என்று புரிந்தது.   அமைதியாக  பார்த்துக்  கொண்டு கேட்கும் பூமித்தாயின் இதயம்  குளிர  ஏன்  கடலலைகள் ஓயாமல்  சப்தித்துக்  கொண்டு  கம்பீரமாக    ஒன்று  சேர்ந்து இசைப்பது ஏன்  என்று புரிந்தது.  ஆமாம் இது நான்  நீ  ஆட  , பாடினேன்  அல்லவா , அப்போது தான் புரிந்தது.

நீ உன்  பிஞ்சு கரங்களை  ஆசையோடு  நீட்டி  அத்தனையும் எனக்கு கொடு என்று கேட்கும்போது  உனக்கு பிரியமான  இனிய  வஸ்துக்கள  வாரிக்  கொடுத்தேனே  அப்போது தான் புரிந்தது   ஏன்  புஷ்பங்கள்  சிறிதோ பெரிதோ  அதன்  வயிற்றில் நிறைய  சுவையான   தேனைச்  சேர்த்து வைத்துக்கொண்டு  வண்டுகளுக்காக காத்திருக்கிறது என்று.

எந்தப்  பழமும்  ஏன்  அதற்குள்  ஒரு வித சுவையை, இனிப்பை  பதமாக  கலந்து வைத்துக் கொண்டிருக்கிறது என்று  அப்போது  தான் என் அறிவுக்கு எட்டியது.

ஆமாம்  கண்ணா,  நீ  ஆசையாக , எல்லாமே  எனக்கு என்று  நீட்டும் உன்   ஆசைக் கரங்களை  நிரப்ப  உனக்கு பிரியமான இனிய  வஸ்துக்களை கொண்டு  வந்தேனே  அப்போது தான் புரிந்தது.
கொடுப்பதில் உள்ள சுகமே  தனி கிருஷ்ணா.

நீ  ஆசையோடு  சிரிக்க  உன்னை  இருகக்  கட்டி,உச்சி முகர்ந்து,  அணைத்து  இச் இச் என்று மாறி மாறி உன் முகம் நிறைய  முத்தங்களைக்   கொடுத்தேனே  அப்போது தான் புரிந்தது,  என் கண்ணே,   ஏன்  காலை நேர  முதல் வெயிலின்   தங்க நிற கிரணங்கள்  பூமியைத் தொடும் போது,   ஆகாயத்திற்கு ஏன்  அத்தனை ஆனந்தம் என்று . 


அதே போல்  என் உடலைக்   குளிர்ந்த  கோடைத்  தென்றல்  மென்மையாக  தொடர்ந்து வருடும் போது  SG  கிட்டப்பா  பாடுவாரே  ''  மேடையிலே வீசுகின்ற  மெல்லிய பூங்காற்றே, மென்காற்றின் விளை   சுகமே''  என்று  அதேதான்,   அதே தான், அது ஒன்றே தான்.  மேலே வர்ணிக்க  வார்த்தை  வரவில்லை.

உன்னை  ஆசையோடு,   நீ சிரிக்க,    உன்னை  இருகக்கட்டி உச்சி முகர்ந்து அணைத்து  முகம்  பூரா  நான்  ''இச் இச்''   தரும்போது கிடைத்த சுகம்.  ஆஹா  கிருஷ்ணா  என் தெய்வமே அது அலாதி இன்பமடா.

பகவானே   இந்த சுகமெல்லாம்  நீ  தருவது, நான் மகிழ  நீ யோசித்து முடிவெடுத்துத்  தந்த  இணையற்ற இனிய சுகங்கள்  வேறெதுவோடும்  ஒப்பிட முடியாதவை.  உன் புன்னகை ஒன்றே போதுமே விளக்குவதற்கு...

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...