Monday, May 31, 2021

CHANAKYA NEETHI

 


சாணக்ய நீதி  -- நங்கநல்லூர் J K SIVAN

நான்   உலக சரித்ரம்  ஆர்வமாக படித்திருக்கி றேன்.  இருந்தாலும் சரித்ரம் இங்கே  எழுதப் போவதில்லை. அநேகர் விரும்ப மாட் டார்கள். ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த ஒரு அறிவாளி  கௌடில்யன் எனும் சாணக்கியன். அவனைப் போல் இன்னொருவனை இன்னும்  பாரத தேசம் காணவில்லை.  தலை சிறந்த தத்துவ வாதியா, பொருளாதார நிபுணனா,  நீதிபதியா,  சாஸ்திரங்கள்  கற்ற  வேத ப்ராமணனா, ராஜகுருவா.... யார் ?? கிங் மேக்கர்  KING MAKER  என்கிறோமே  கௌடில்யன் உண்மையில்  EMPEROR  MAKER   விஷ்ணு குப்தன், கௌடில்யன்  என்ற  அவனது  இயற்  பெயர்கள்  மறைந்து சாணக்கியன் என்று உலகமுழுதும் அறியப்படுபவன்.  எது எப்படி இருந்தாலும்   சாணக்யன் சொன்னதாக  சில வார்த்தைகள்  நமக்கு கிடைத்து அதைப் படிக்கும்போது அவன் எவ்வளவு தீர்க்க சிந்தனையாளன் என்பது  புலப்படுகிறது.  அவனது சாணக்ய  நீதியைப் படிக்கும்போது  தான் அவனது  தொலை நோக்கு, பக்தி, சமூக சிந்தனை, பேரன்பு, தியாகம், நேர்மை,  நிர்வாக ஆற்றல்,  ராஜரீகம்  எல்லாம் புரிபடுகிறது. 

प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम् ।
नानाशास्त्रोद्धृतं वक्ष्ये राजनीतिसमुच्चयम् ॥ 1-1

ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதி⁴பதிம் ப்ரபு⁴ம் । நாநாஶாஸ்த்ரோத்³த்⁴ரு’தம் வக்ஷ்யே ராஜநீதிஸமுச்சயம் ॥ 01-01

நான் யார்?  ஒரு பொம்மை,  இயந்திரம், என்னைச் செலுத்துபவன் அந்த சாக்ஷாத்  மஹா விஷ்ணு, மூவுலகுக்கும் அதிபதி,  லோக காரணன்,  அவனை வணங்கி நமஸ்கரித்து என் மனதில் தோன்றியதை ஓலைச்சுவடியில் வடிக்கிறேன்.  ராஜரீக  கொள்கைகள் கோட்பாடுகள்  நீதி நெறி  பற்றி சொல்கிறேன். 

अधीत्येदं यथाशास्त्रं नरो जानाति सत्तमः ।
धर्मोपदेशविख्यातं कार्याकार्यं शुभाशुभम् ॥1-2

அதீ⁴த்யேத³ம் யதா²ஶாஸ்த்ரம் நரோ ஜாநாதி ஸத்தம: । த⁴ர்மோபதே³ஶவிக்²யாதம் கார்யாகார்யம் ஶுபா⁴ஶுப⁴ம் ॥ 01-02

இதை நன்றாக அறிந்துகொண்டு,  சாஸ்திரம் சொல்வதை புரிந்துகொண்டு , தனது கடமையை சாஸ்திரம் சொல்லும் வகையில், வழியில் கடைபிடிக்கிறானோ,  எதை பின்பற்றவேண்டும், எது கூடாது என்று பகுத்தறிகிறவனோ, அவனே  சிறந்த மனிதருள் மாணிக்கம்.
तदहं सम्प्रवक्ष्यामि लोकानां हितकाम्यया ।
येन विज्ञातमात्रेण सर्वज्ञात्वं प्रपद्यते ॥ 1-3

தத³ஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா । யேந விஜ்ஞாதமாத்ரேண ஸர்வஜ்ஞாத்வம் ப்ரபத்³யதே ॥ 01-03

சமூகநலத்தினை  கருத்தில் கொண்டு,  நான் இதை சொல்கிறேன்,  அதை நான் நினைக்கிறபடியே புரிந்துகொண்டு கடைபிடித்தால்  எல்லாம் இனிதே , நல்லதாகவே  நடக்கும்.  

मूर्खशिष्योपदेशेन दुष्टस्त्रीभरणेन च ।
दुःखितैः सम्प्रयोगेण पण्डितोऽप्यवसीदति ॥ 1-4

மூர்க²ஶிஷ்யோபதே³ஶேந து³ஷ்டஸ்த்ரீப⁴ரணேந ச ।து:³கி²தை: ஸம்ப்ரயோகே³ண பண்டி³தோऽப்யவஸீத³தி ॥ 01-04

எவ்வளவு தான் கற்றுணர்ந்த அனுபவ ஞானி என்றாலும்  ஒரு முட்டாள் சிஷ்யனுக்கு கற்பிக்கும்போது,  ஒரு  தவறான பெண்ணோடு வசிக்கும்போது,  துன்பப்படும்  வியாதியஸ்தர்கள் இடையே  இருக்கும்போதும், அவன்   மிகுந்த துக்கம் அடைகிறான். 

दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः ।
ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥ 1-5

து³ஷ்டா பா⁴ர்யா ஶட²ம் மித்ரம் ப்⁴ரு’த்யஶ்சோத்தரதா³யக: । ஸஸர்பே ச க்³ரு’ஹே வாஸோ ம்ரு’த்யுரேவ ந ஸம்ஶய: ॥ 01-05

பொருந்தாத  துஷ்ட மனைவி,  ஜடம் மாதிரியான ஒரு நண்பன்,  எதற்கெடுத்தாலும் மறுபேச்சு பேசும்  சேவகன், பணியாள், வீட்டில்  பாம்பு குடியிருப்பது,   இவை யெல்லாம், மரணத்தின்  அருகே கொண்டு செல்பவை.  இதில் சந்தேகம் வேண்டாம்.  

आपदर्थे धनं रक्षेद्दारान् रक्षेद्धनैरपि ।
आत्मानं सततं रक्षेद्दारैरपि धनैरपि ॥ 1-6

ஆபத³ர்தே² த⁴நம் ரக்ஷேத்³தா³ராந் ரக்ஷேத்³த⁴நைரபி । ஆத்மாநம் ஸததம் ரக்ஷேத்³தா³ரைரபி த⁴நைரபி ॥ 01-06
பணம் கையில் இருந்தால்  தாம் தூம் என்று செலவு பண்ணக்கூடாது.  பின்னால் ஒருகாலத்தில் ஏதேனும் கஷ்டம் வரும் போது  தக்க உதவியாக இருக்கும் வகையில் அதை சேமித்து, பாதுகாத்து வைக்க வேண்டும். அவன்  சொத்து  சுதந்திரம் எல்லாவற்றையும்  தியாகம் செய்ய,  இழக்க நேரிட்டாலும்  மனைவி மக்களை ரக்ஷிக்கவேண்டும்.   ஒருவன்  தனது மனைவி மக்களை, செல்வத்தை,    தியாகம் செய்ய நேரிட்டாலும்  தனது ஆத்மாவை  ரக்ஷிக்க வேண்டும்.   

आपदर्थे धनं रक्षेच्छ्रीमतां कुत आपदः ।
कदाचिच्चलते लक्ष्मीः सञ्चितोऽपि विनश्यति ॥ 1-7

ஆபத³ர்தே² த⁴நம் ரக்ஷேச்ச்²ரீமதாம் குத ஆபத:³ । கதா³சிச்சலதே லக்ஷ்மீ: ஸஞ்சிதோऽபி விநஶ்யதி ॥ 01-07

வருமுன் காப்பானாக,  செல்வம் இருக்கும்போதே, பிற்காலத்தில் ஏதேனும் துன்பம் நேரிட்டால் அதை சமாளிக்க செல்வம் தேவைப்படும் என்று அறிந்து முன்னேற்பாடாக சேமித்து வைக்க வேண்டும்.   நான் தான் பணக்காரனா யிற்றே, எனக்கு என்ன துன்பம் வரப்போகிறது என்கிற இறுமாப்பு, முட்டாள் தைர்யம் கூடாது. ஒரு கணத்தில்  கையிருப்பு கரைந்து விடும்.. ஜாக்கிரதை. 

 स्मिन्देशे न सम्मानो न वृत्तिर्न च बान्धवाः ।
न च विद्यागमोऽप्यस्ति वासं तत्र न कारयेत् ॥ 1-8

யஸ்மிந்தே³ஶே ந ஸம்மாநோ ந வ்ரு’த்திர்ந ச பா³ந்த⁴வா: । ந ச வித்³யாக³மோऽப்யஸ்தி வாஸம் தத்ர ந காரயேத் ॥ 01-08

உனக்கு மதிப்பு இல்லாத, உன்னை லக்ஷியம் செய்யாத  பிரதேசத்தில்,  ராஜ்யத்தில், நீ வாழமுடியாது.  பிழைக்க முடியாது,  உனக்கு உதவ  சகோதரத்வம் அங்கே இல்லை, உன்னால் எதையும் கற்க முடியாது, நண்பர்கள்  கிடைக்க மாட்டார்கள். 

धनिकः श्रोत्रियो राजा नदी वैद्यस्तु पञ्चमः ।
पञ्च यत्र न विद्यन्ते न तत्र दिवसं वसेत् ॥ 1-9

த⁴நிக: ஶ்ரோத்ரியோ ராஜா நதீ³ வைத்³யஸ்து பஞ்சம: । பஞ்ச யத்ர ந வித்³யந்தே ந தத்ர தி³வஸம் வஸேத் ॥ 01-09

எங்கேயாவது ஒரு தேசத்தில், ராஜ்யத்தில், நீ தங்க நேரிட்டால்  முதலில் இந்த ஐந்து விஷயங்களை கவனி. இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் அங்கே ஒரு நாள் கூட  தங்குவதால் பயனில்லை.   தனவந்தன்  செல்வமுள்ளவன் இல்

லாத இடம், , ஏனென்றால் அவன் பணத்துக்கு  பாதுகாப்பு இல்லையென்றால் அவன் செல்வந்தனாக அங்கே இருக்கமுடியாது.   நீ இருந்து என்ன பண்ணுவாய்?   ராஜா என்கிற தலைவன் இல்லாத இடம்,  தலைக்கு தலை நாட்டாமையாக உள்ள இடம் ஆபத்தானது.  வேதம் கற்ற பிராமணன் இல்லாத ஊரில்  நீதி, நியாயம், நேர்மை இருக்கவே இருக்காது. மனச்சாட்சி இல்லாதவன் தான் இருப்பான். அதேமாதிரி  வைத்தியன் இல்லாத ஊரில்  எந்த நோய் வந்தாலும்  அதற்கு  மருந்தில்லாமல் பலியாகவேண்டியது தான். ஆறு நதி இல்லாத ஊரிலும் அதே கதி.  வறட்சி உன்னை கொன்றுவிடும்.

लोकयात्रा भयं लज्जा दाक्षिण्यं त्यागशीलता ।
पञ्च यत्र न विद्यन्ते न कुर्यात्तत्र संस्थितिम् ॥ 1-10

லோகயாத்ரா ப⁴யம் லஜ்ஜா தா³க்ஷிண்யம் த்யாக³ஶீலதா । பஞ்ச யத்ர ந வித்³யந்தே ந குர்யாத்தத்ர ஸம்ஸ்தி²திம் ॥ 01-10

எங்காவது பிழைக்க  ஒரு ராஜ்ஜியம், ஊர் செல்லும்போது,  அங்கே  ஏதாவது  உண்மையிலேயே  வழி இருக்கிறதா என்று முதலில்  சோதித்து பார்க்க வேண்டும். யாருக்கும் பயமில்லாத மனிதர்கள் வாழும் இடத்தில் இருப்பது அபாயம், அவமானம், வெட்கம் இல்லாதவர்கள், புத்திசாலித்தனம் அற்றவர்கள்,   தானம் தர்மம் செய்யும் மனப்பான்மை இல்லாதவர்கள்  வாழும் இடத்தில்  நீ  காலம் தள்ளமுடியாது. ஜாக்கிரதை.அங்கிருந்து முதலில் கழண்டு கொள் .

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...