Thursday, May 27, 2021

PESUM DEIVM

 


பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN

15. இந்த ஞானசாஸ்திரி வானசாஸ்திரியும் கூட .
என்னால் சொல்லி மாளாது. எவ்வளவு பெரிய பெரிய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ப்ரொபஸர்கள், இன்ஜினீர்கள், நிறுவன நிர்வாகிகள், பண்டிதர்கள், பாமரர்கள், எல்லோருமே மஹா பெரியவாளிடம் அறிவுரை பெற வரிசையாக நின்றார்கள். ஒரு தாயிடம் சேய் போல் வழி காட்ட , நடத்த காத்திருந் தார்கள்.

ப்ரொபஸர் ராமமூர்த்தி, ஒரு சர்க்கஸ் கம்பெனி முதலாளி. அவருக்கு சில சந்தேகங்கள். எங்கும் தீராத அவற்றை மஹா பெரியவாளிடம் வந்து கேட்டார். யோகத்தில் பல சந்தேகம் அவருக்கு. நிமிஷத்தில் சூர்யனைக் கண்ட பனி போல அவர் சந்தேகங்கள் நிவர்த்தியாகிவிட்டது. புரியாதன வெல்லாம் புரிந்துவிட்டது. தான் சந்தித்தவர் களிடமெல்லாம்

''அடாடா. பிரம்மச்சர்யம் என்பதன் சக்தியை முழுதுமாக மஹா பெரியவாளிடம் தான் கண்டே ன். அதன் அளவற்ற சக்தியால் உலகையே வென்று விடலாம் என்பதை நிரூபித்து விட்டார். வேறெவரிடமும் இதை நான் காணவில்லை ''

என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த சர்க்கஸ் ராமமூர்த்தி பற்றி நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். ஒரு சில வார்த்தைகள் சொல்கிறேன்.

கொடி ராமமூர்த்தி நாயடு என்று பெயர் (1882–1942) ஒரு பயில்வான். மல்யுத்த நிபுணர். ஸ்ரீகா குளம் ஜில்லாவில் வீரக்கட்டம் எனும் ஊரில் பிறந்தவர். காற்றில் மிதக்கும் வாயுஸ்தம்பம் , நீரில் நடக்கும் ஜலஸ்தம்பம் கற்றவர். யோகம் பயின்றவர். நமக்கு அப்போது வெள்ளைக்கார ராஜா ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் கலியுக பீமன் பட்டம் பெற்றவர். ஒரு சர்க்கஸ் கம்பெனி ஆரம் பித்து நிறைய சம்பாதித்தவர்.

ஸ்ரீகாகுளத்தில் அவருக்கு பெரிய சிலை வைத்தி ருக் கிறார்கள். (பயில்வான் படம் இணைத் திருக்கிறேன்.)

1917ல் தர்பங்கா மஹாராஜா ராமேஷ்வர் சிங் (படம் இணைத்திருக்கிறேன்) கும்பகோணம் வந்தார். அங்கே அவர் வந்ததே, மஹா பெரியவா ளைப் பற்றி அநேகரிடம் கேள்விப்பட்டு தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலால் தான். மூன்று நாள் மடத்தில் தங்கியிருந்தார். 23 வயது இளைஞர் மஹா பெரியவரிடம் கோவில்களில் அனுஷ் டிக்கப்படும் நியமங்கள் எப்படி வடக்கையும் தெற்கையும் ஒன்றாக இணைக்கிறது என்று கேட்டறிந்து மகிழ்ந்தார்.

கும்பகோணம் அரசு காலேஜ் சரித்திர பேராசிரி யர் பி. ராஜகோபாலய்யர் ஆர்வத்தோடு மஹா பெரியவா ளின் சர்வ கலா ஞானத்தைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினார் அவர் சன்யாசி யாயிற்றே. இதெல்லாம் பற்றி நம்மோடு பேசுவாரா என்று தயக்கம். எப்படியும் ஸ்வாமி களை தரிசிக்கவாவது செய்வோம் என்று வந்தார். அவருக்கு ஒரு சந்நியாசியை சந்தித்தல் எப்படி முறையோடு வணங்கவேண்டும் என்பது கூட தெரியவில்லை.

அவரைப் பார்த்தவுடனே அவர் மனதில் ஓடும் எண்ணங்கள் மஹா பெரியவாளுக்கு புரிந்து விட்டது.

'' வாங்கோ, உட்காருங்கோ. உங்க காலேஜ் எப்படி நடக்கிறது? -(கும்பகோணம் கவர்மெண்ட் காலேஜ் பழைய படம் இணைத்திருக்கிறேன்)

இப்போது நாட்டு நடப்பு பற்றி உங்கள் அபிப் ராயம் என்ன, விஞ்ஞானம், பௌதிகம் எந்த அளவில் முன்னேறி இருக்கு? என்று லோகாயத மாக அவரை பேச்சுக்கு இழுத்தார் பெரியவா. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பொது மராமத்து இன்ஜினீர் P V மாணிக்க நாயக்கர், கணித நிபுணர், அங்கே பெரியவா தரிசனத்துக்கு வந்தார். அவருக்கு மஹா பெரியவா மேல் மட்டற்ற பக்தி மரியாதை.
பெரிய வா ராஜகோபாலய்யருடன் பேசிக் கொண் டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த நாயக்கருக்கு அவர் யார் என்று அறிந்துகொள்ள விருப்பம்.
'' நாயக்கர் வாள் , இவர் தான் ராஜகோபா லய்யர், கும்பகோணம் கவர்மெண்ட் காலேஜ் ஹிஸ்டரி ப்ரொபஸர், என்று மஹா பெரியவா அவரை அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் மூவரின் பேச்சு அப்புறம் வானசாஸ்திரம், மேற்கத்திய பழக்கவழக்கங்கள் நம்முடைய புராதன சித்தாந்தம் பற்றியெல்லாம் இருந்தது. மஹா பெரியவாளின் துல்லியமான கருத்துக்கள் அவர்களை அதிசயிக்க வைத்தது.
''உங்க காலேஜ்லேருந்து ஒருநாள் டெலஸ்கோப் கொண்டுவாங்கோ, சில நக்ஷத்திரங்ளை பார்த்து விட்டு பேசுவோம்'' என்றார் மஹா பெரியவா.
வானசாஸ்த்ரத்தில் மஹா பெரியவாளின் ஞானத்தை வியந்தார்கள் இருவரும். ராஜகோபாலய்யர் பிறகு எப்போதெல்லாம் நேரம் கிடைத்ததோ அப்போதெல்லாம் மஹா பெரியவாளை தரிசிக்க மறக்கவே இல்லை.
நாயக்கர் சமஸ்க்ரிதத்தை சரியான உச்சரிப்போடு அறிய தகுந்த தமிழ் எழுததுக்களை அறிமுகப்படுத்தி ஒரு புத்தகம் வெளியிட்டபோது மகா பெரியவா அதை விமர்சித்து பெரிதும் ஆதரித்து ஸ்ரீமுகம் வழங்கினார்.

விசாகபட்டணத்தில் முஹமதுபுரம் என்ற ஊரில் ஒரு பெரிய பணக்கார நிலச்சு வான்தார். பெயர் ராஜா A V ஜக்கா ராவ். அவருக்கு வானசாஸ்தி ரத்தில் ரொம்ப ஆர்வம். ஆகவே பல லக்ஷங்களை செலவ ழித்து விசாகபட்டணத்தில் ஒரு வான சாஸ்த்ர ஆராய்ச்சி நிலையம் அமைத்தி ருக்கிறார். உலகில் பல வானசாஸ்திர நிபுணர் களை சந்தித்தவர்.
ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொடுத்து தூர திருஷ்டி கண்ணாடி ஒன்று நாலு அடி நீளம், ,அரை அடி விட்டம் கொண்ட பூத கண்ணாடி பொருத்திய டெலஸ்கோப் வாங்கினார்.

மஹா பெரியவாளை சந்தித்து வானசாஸ்தி ரம் பற்றி சம்பாஷித்த ராவ், மஹா பெரியவா ளின் கருத்துக்களை கேட்டு அசந்து போனார். தன்னிடம் இருந்த தூர திருஷ்டி கண்ணாடி யை மஹா பெரிய வாளுக்கு அளித்தார். இப்போது எங்கே இருக்கிறது அந்த கண் ணாடி??

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...