Saturday, May 8, 2021

 

ஒரு சின்ன யோசனை.  -  நங்கநல்லூர்   J K  SIVAN 



ஒரு  சின்ன மனக்கணக்கு  ஒவ்வொருவரும் போட்டுப் பார்ப்போம்.  நமக்கு தான் வேறே எதுவும்  வேலையே இல்லையே. வீட்டோடு முடங்கிக்  கிடந்தாலும் மனது தான் எங்கே வேணுமானாலும் மாஸ்க் இல்லாமல் போலீசுக்கு பயப்படாமல்  பறக்கிறதே .


ஜனங்களுக்கு  எதனால் எல்லாம் மரணம் நேரிடுகிறது? .  ஆபிசுக்கு போகும்போது  பஸ்ஸில்,   ரயிலில்  ஆட்டோ ரிக்ஷா  கவிழ் ந்து, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்    பஸ்  இன்னொரு வாகனத்தோடு  மோதி , லாரி ஏறி,   சம்மர் கோடை வெயிலில் மயங்கி உச்சி வெயிலில் தரையில் விழுந்து,  ஹோட்டலில், பொது இடங்களில் சாப்பிட்டு உணவு விஷத்தில்  செத்துப்போகிறவர்கள்,   இப்படி பல விதங்களில்  மரணம் மனிதனை  விடாமல்  தொடர்கிறது.  அது ஒரு நாளைக்கு எத்தனைபேர் என்று உத்தேசமாக  கணக்கு எடுத்து  இப்போது  கொரோனாவில்  மரணிப்பவர்களின் எண்ணிக்கையோடு  ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை  முதலில் சொன்னது தான்  ஜாஸ்தியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.  இப்போது மேலே சொன்ன  விபத்துகள் நேரிடுவதற்கு வாய்ப்பே  இல்லையே.  யார் வெளியே போகிறார்கள், எங்கே சாப்பிடுகிறார்கள், எங்கே வண்டி ஓடுகிறது??  

ஆகவே  கொரோனா சாவு பற்றி மனதில் ஒரு திகில் வேண்டாம். மூச்சு முட்டி  போவது வயதானவர்களுக்கு கொரோனா வருவதற்கு முன்பே  வழக்கமானது தான். எத்தனை பேருக்கு வெண்டிலேட்டர் வைத்து  விடை கொடுத்து அனுப்பி இருக்கிறோம்.

கொரோனாவால்  இப்போது ஒரு கட்டுப்பாடு வந்திருக்கிறது. உடலைப் பாதுகாக்கும் கவனம் அதிகமாகியிருக்கிறது . உணவு விஷயத்தில்  ஸ்ட்ரிக்ட்.   அரசாங்கம் வேறு கெடுபிடி பலமாக  வைத்திருப்பது ரொம்ப நல்லது.  ஆஸ்பத்திரிக்கு போகவே வேண்டாம்  வீட்டிலேயே தனிமையில் சுகமாக  காற்றோட்டமாக வீட்டில் இருங்கள்.  குப்பை கூளங்களை வீட்டிலிருந்து அகற்றி சுத்தமாக காற்றோட்டமாக வைத்திருந்தால் ஆக்சிஜனுக்கு பஞ்சமே இல்லை. வீட்டில் செடி கொடி  வளருங்கள்,  மரங்களை வெட்டாதீர்கள்.  இன்னொரு விஷயம் கவனித்தீர்களா.  எத்தனையோ பேர்  தமது உயிரையும் பணயம் வைத்து மற்றவர்களுக்கு உணவு, வாகனம் மருந்து,  சேவைகள் செய்ய  பணம் வேண்டுமென்ற மனத்தோடு  முன் வந்திருக்கிறார்கள். இதல்லவோ  கைதட்டி கொண்டாடவேண்டிய விஷயம். 

நீராவி பிடியுங்கள், மிளகு உப்பு லவங்கம் வெற்றிலை  வெந்நீர்  சாப்பிடுவதை நிறுத்தவே வேண்டாம். கைகால் , முகம் எல்லாம் அடிக்கடி கழுவுங்கள்,  வெளிஆட்களோடு  நடமாட்டம் வேண்டாம்.  வெளியே அதிகம் போகவேண்டாம்..அப்புறம் அதே பழக்கமாகிவிடும்.  மற்றபடி  பகவானை வேண்டி நல்ல காலம் திரும்ப காத்திருப்போம் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...