Sunday, May 9, 2021

OLD PROVERBS

 


தெரிந்த பழமொழி, தெரியாத  அர்த்தம்  - 4   --  நங்கநல்லூர் J K  SIVAN ---

ஒரு முருங்கைக் காய்   25  முதல் 30 ரூபாய்  விற்றது  சில நாட்களுக்கு முன்பு.    ஆஹா நாம்  படித்திருக்க கூடாது, பேசாமல்  ரெண்டு முருங்கை மரம் வீட்டில் நட்டிருந்தால்  கொள்ளை கொள்ளையாக  சம்பாதிக்கலாம்  என்று தோன்றுகிறது.  எனக்கு தெரிந்த   நான்   கோலம் மாவு  வாங்கும்  ஒரு  பெண்மணி    அவள்  வீட்டில் இருக்கும் மூன்று   முருங்கை மரங்களை  தெய்வமாக கொண்டாடுபவள்.  தினமும் அதற்கு  சந்தனம், குங்குமம், மஞ்சள்  எல்லாம்   இட்டு நிறைய  தண்ணீர் ஊற்றி சுற்றி வந்து வணங்குவாள்.  நான் கோலம் மாவு  வாங்க போகும்போதெல்லாம்  '' இந்தா அய்யிரே''  என்று  ஐந்து ஆறு  பிஞ்சு  முருங்கைக் காய்கள்  நீளமாக கொடுப்பாள்.  சாப்பிடு  என்று  முருங்கை இலை  பை  நிறைய  பறித்து தருவாள்''  காசு வாங்க மாட்டாள். கோலம் மாவுக்கு மட்டும் தான் காசு. 

முருங்கை  மருந்து சக்தி மிகுந்தது. அதில்  RIBOFLAVIN  இருக்கிறது.  எலும்புக்கு  சிறுநீரகத்துக்கு நல்லது.   அப்படி இருக்கும்போது ஒரு பழமொழி ஏன் இப்படி ?

'முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" . 

இதை நம்பி  நிறைய பேர்  முருங்கை மரத்தை வீட்டில் நடுவதில்லை.  கம்பளிப்பூச்சி வேறு  நிறைய வரும் என்று ஒரு பயம்.  எத்தனையோ மரங்கள்  இந்த பயத்தில் எரிக்கப்படுவது எனக்குத் தெரியும். என் வீட்டில் ஒரு  முருங்கை மரம் இப்படி தான்  மாண்டது.

ஆனால்  மேலே  சொன்ன  பழமொழிக்கு அர்த்தம் வேறே.   ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை.  இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.  வெறுங்கையோடு போவான்  என்றால்  ஜம்மென்று  வாக்கிங் ஸ்டிக் , கைத்தடி, இல்லாமல்  நிமிர்ந்து வயதானாலும் வெறுங்கையை வீசிக்கொண்டு  நடந்து போவான் என்று அர்த்தம்.

 ''ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.''  என்று ஒரு பழமொழி.  ஒவ்வொரு வீட்டிலும்  ஐந்துக்கு மேலே  இருந்த காலம் எங்கள் காலம்.   ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு  திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி  ஆகிவிடுவான்  என்று தான் எல்லோரும்  புரிந்து கொண்ட அர்த்தம். ஆனால் இதன் உண்மையான  அர்த்தம் 

தெரிந்த பழமொழி, தெரியாத  அர்த்தம்  - 4   --  நங்கநல்லூர் J K  SIVAN ---

ஒரு முருங்கைக் காய்   25  முதல் 30 ரூபாய்  விற்றது  சில நாட்களுக்கு முன்பு.    ஆஹா நாம்  படித்திருக்க கூடாது, பேசாமல்  ரெண்டு முருங்கை மரம் வீட்டில் நட்டிருந்தால்  கொள்ளை கொள்ளையாக  சம்பாதிக்கலாம்  என்று தோன்றுகிறது.  எனக்கு தெரிந்த ஒரு கோலம் மாவு  விற்கும்  பெண்மணி அவர்கள் வீட்டில் இருக்கும் மூன்று   முருங்கை மரத்தை தெய்வமாக கொண்டாடுபவள்.  தினமும் அதற்கு  சந்தனம், குங்குமம், மஞ்சள்  எல்லாம்   இட்டு நிறைய  தண்ணீர் ஊற்றி சுற்றி வந்து வணங்குவாள்.  நான் கோலம் மாவு  வாங்க போகும்போதெல்லாம்  '' இந்தா அய்யிரே''  என்று  ஐந்து ஆறு  பிஞ்சு  முருங்கைக் காய்கள்  நீளமாக கொடுப்பாள்.  சாப்பிடு  என்று  முருங்கை இலை  பை  நிறைய  பறித்து தருவாள்''  காசு வாங்க மாட்டாள்.

முருங்கை  மருந்து சக்தி மிகுந்தது. அதில்  RIBOFLAVIN  இருக்கிறது.  எலும்புக்கு  சிறுநீரகத்துக்கு நல்லது.   அப்படி இருக்கும்போது ஒரு பழமொழி ஏன் இப்படி ?

'முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்"  . இதை நம்பி  நிறையபேர்  முருங்கை மரத்தை வீட்டில் நாடுவதில்லை.  கம்பளிப்பூச்சி வேறு  நிறைய வரும் என்று ஒரு பயம்.  எத்தனையோ மரங்கள்  இந்த பயத்தில் எரிக்கப்படுவது எனக்குத் தெரியும். என் வீட்டில் ஒரு  முருங்கை மரம் இப்படி தான்  மாண்டது.

அந்த பழமொழிக்கு அர்த்தம் வேறே.   ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை.

இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.  வெறுங்கையோடு போவான்  என்றால்  ஜம்மென்று  வாக்கிங் ஸ்டிக் , கைத்தடி, இல்லாமல்  நிமிர்ந்து வயதானாலும் வெறுங்கையை வீசிக்கொண்டு  நடந்து போவான் என்று அர்த்தம்.

 ''ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.''  என்று ஒரு பழமொழி.  ஒவ்வொரு வீட்டிலும்  ஐந்துக்கு மேலே  இருந்த காலம் எங்கள் காலம்.   ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி  ஆகிவிடுவான்  என்று தான் எல்லோரும்  புரிந்து கொண்ட அர்த்தம். ஆனால் இதன் உண்மையான  அர்த்தம் வேறே: 

ஒரு முக்கியமான   ஐந்து  விஷயம்   அவனிடம்  சேர்ந்து விட்டால் , அதாவது  அவனுக்கு   கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். அந்த  மோசமான ஐந்து விஷயங்கள்: 

1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 
2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 
3.ஒழுக்கம் தவறும் மனைவி; 
4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு;
 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை.

 இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.  அட,  இப்படி ஒரு அர்த்தமா? ஆச்சர்யமாக இருக்கிறதே. என்னுடைய  எதிரிக்கு கூட  இப்படி  ஒரு ஐந்து நேரக்கூடாது என்று கிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று :

'' பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!    கல்யாண வீட்டில்  மணமக்களுக்கு இதை  ஆசிர்வதிப்பது வழக்கம்.  அந்தக்காலத்தில் இதை சீரியஸ் ஆகி  எடுத்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட  பத்துக்கு குறையாமல் ஒவ்வொரு வீட்டிலும்  குட்டி  டிக்கெட்கள்  இருந்த காலம்.   ஆனால்  இப்போது கல்யாணங்களில்   இப்படி வாழ்த்தினால்  சோறு போடாமல் துரத்தி விடுவார்கள்.  இப்போது அனைவருக்கும் தெரியும்.  பதினாறு என்பது  பிள்ளை குட்டி இல்லை என்று. ஆனால் அந்த பதினாறு என்ன  என்று மட்டும்  தெரியாது: அது இது தான்:  

வாழ்க்கையில் பெறவேண்டிய   16 வகையான செல்வங்கள் :  1.நோயின்மை, 2 நல்ல கல்வி, 3தீதற்ற செல்வம், 4 நிறைந்த தானியம், 5 ஒப்பற்ற அழகு,  6.அழியாப் புகழ், 7 சிறந்த பெருமை, 8 சீரான இளமை, 9 நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11. நல்ல வலிமை, 12  மனத்தில் துணிவு, 13.  நீண்ட வாழ்நாள் (ஆயுள்), 14  எடுத்தக் காரியத்தில் வெற்றி,  15. நல்ல ஊழ் (விதி),கர்மா    16. இன்ப நுகர்ச்சி .

இன்னும் சில பழமொழிகள் கைவசம் இருக்கிறது. சொல்கிறேன் 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...