Thursday, May 20, 2021

GEETHANJALI

  

கீதாஞ்சலி   -   நங்கநல்லூர்   J K   SIVAN 
தாகூர் .

      

  60.    அலகிலா விளையாட்டு  


60.   On the seashore of endless worlds children meet.
The infinite sky is motionless overhead and the restless water is boisterous.
On the seashore of endless worlds the children meet with shouts and dances.
They build their houses with sand and they play with empty shells.
With withered leaves they weave their boats and smilingly float them on the vast deep.
Children have their play on the seashore of worlds.
They know not how to swim, they know not how to cast nets.
Pearl fishers dive for pearls, merchants sail in their ships, while children gather pebbles and scatter them again.
they seek not for hidden treasures, they know not how to cast nets.
The sea surges up with laughter and pale gleams the smile of the sea beach.
 Death-dealing waves sing meaningless ballads to the children, even like a mother while rocking her baby's cradle.
The sea plays with children, and pale gleams the smile of the sea beach.
On the seashore of endless worlds children meet.
Tempest roams in the pathless sky, ships get wrecked in the trackless water, death is abroad and children play.
On the seashore of endless worlds is the great meeting of children.

 எத்தனையோ   உலகின் பாகங்களை இணைக்கும் சமுத்திரம்  எல்லையற்றது.  கடலில் மிதக்கும் நிலப்பகுதிகள் தாம் நமக்கு தெரிகிறது.  என்னென்னவோ கண்டங்கள் தேசங்கள் என்று பேர் கொடுக்கிறோம். கோளத்திற்கு  முனை எது? நாமே  ஏதோ ஒரு அடையாளம் கொடுத்து  வைத்துக் கொள்வது தான்.

அண்ணாந்து பார்த்தால் அடேயப்பா,  எல்லையில்லாமல்  பரந்த,  அமைதியான, அசையாமல்  ஆடாமல்  நிற்கும்  நீல வானம்.  அதற்கு நேர் மாறாக  அதன் கீழே  கொதிக்கும்  ஓவென்று ஓயாமல் ஆர்ப்பரிக்கும்  வெண்  நுரைகள்  கொண்ட  நீல நிற பெருங்கடல்.

 இந்த மாபெரும் கடலின்  கரையில்  குழந்தைகள் சந்தோஷமாக  பாடி, சிரித்து  ஆடுகிறதே , ஈர மண்ணில் வீடு கட்டுகிறது .  அதற்கு சிங்காரமாக  வண்ண வண்ண  கிளிஞ்சல்களை, சங்குகளை, சோழிகளை வைத்து    மணல் வீட்டில் பதித்து விளையாடுகிறது .   கையில் கிடைத்த காகிதம், காய்ந்த இலையில் கப்பல்கள் செய்து மிதக்க வைக்கிறது. முகத்தில் என்ன சிரிப்பு, என்ன நம்பிக்கை அந்த காகித, இலைக் கப்பல்  அடுத்த கரை போகும்  ஆளுயர அலை கொண்ட ஆழ்கடலில் என்று! 
குழந்தைகளின் உலகமே  வேறு. கடற்கரையில்  ஆனந்த விளையாட்டு.
அவர்களுக்கு  நீஞ்ச தெரியுமா?  ஹுஹும்.  மீன் பிடிக்க வலை வீச பலம் உண்டா? லாகவமாக  வலையை வீச தெரியுமா?
முத்தேடுப்பவன் கடலில்  ஆழமாக  மூழ்குகிறான்.  வியாபாரிகள் அடுத்த கரைக்கு போக கப்பல் தேடுகி றார்கள். குழந்தைகளுக்கு இதெல்லாம் இல்லை.  கூழாங்கல், சிப்பிகள், கலர் கலராக  சின்னதும் பெரிதுமாக  மடி நிறைய சேர்த்து வைத்துக் கொண்டு விளையாடுகிறது. 

கடலும்  எப்போதும் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது.  வெண்மையான நுரைத் தொப்பி போட்ட அலைகள் பற்களோ.  வாயைத் திறந்து சிரித்தால்   பல் தெரியாதா?  சந்தோஷத்தில்  நாம்  தையா தக்கா வென்று   ஆடவில்லையா. கடல்  ஆர்ப்பரித்துக் கொண்டு இருக்காதா?

ஓயாத, இரவும் பகலும் ஓ வென்று  கர்ஜித்து பாடும் கடலின்  அலைகள்  மரணத்தை எளிதில் தருவன. அவற்றின் பாட்டு, ராகம்,  ஸ்வரம், குழந்தைக்கு புரியுமா? தாயாரின்  தாலாட்டு  புரிந்தா  குழந்தை ஏற்று ரசித்து   தூங்குகிறது? அருகாமே  போதுமே.  குழந்தைகள் கடலை விரும்பி  கரையில் ஆடுகிறவர்கள்.  குழந்தைகளை மகிழ்விக்க  ஆடுவது கடல்.  இந்த மாபெரும் கடலின்  கரையில்  குழந்தைகள் சந்தோஷமாக  பாடி, சிரித்து  ஆடுகிறதே.

அமைதியான    பாதை,  திசை இல்லாத   பரந்த ஆகாசத்தில்  எங்கோ  பிரம்மாண்ட காற்று மண்டலம்,  புயலாக  உருவெடுக்கிறது.   பாதையற்ற பெருங்கடலில்  கப்பல்கள்   திக்கு முக்காடி  தத்தளிக்கின்றன. பிணைத்திருக்கும்  மெல்லிய கயிற்றின்  மறு  நுனியில் மரணம் காத்திருக்கிறது விழுங்க.  
இந்த கவலைகள்  துளியும்  இல்லாமல் குழந்தைகள்  கரையில் விளையாடுகிறது.

எல்லையற்ற சமுத்திரம் இணைத்திருக்கும்  கடற்கரைகளில்  குழந்தைகள்  சேர்ந்து அங்கங்கே விளையாடுகிறது. இது தான் சிறுவர் உலகம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...