Sunday, May 9, 2021

ADHI SANKARAR


  

ஆதி சங்கரர்    ---   நங்கநல்லூர்  J K  SIVAN

                         சாதனா   /   உபதேச பஞ்சகம்  - 4


ஆதி சங்கரருக்கு  அநேக  நமஸ்காரம். உங்களது உபதேசம்  எங்களை  24 படி    வாழ்க்கையில் உயர வைத்து விட்டது. இதோ  உங்கள் கையைப் பிடித்துக்கொண்டு  25வது படியில் கால் வைக்கிறோம்.  

क्षुद्व्याधिश्च चिकित्स्यतां प्रतिदिनं भिक्षौषधं भुज्यतां
स्वाद्वन्नं न तु याच्यतां विधिवशात्प्राप्तेन सन्तुष्यताम्‌। 
शीतोष्णादि विषह्यतां न तु वृथा वाक्यं समुच्चार्यतां
औदासीन्यमभीप्स्यतां जनकृपानैष्ठुर्यमुत्सृज्यताम्‌॥ ४॥

kṣudvyādhiśca cikitsyatāṁ pratidinaṁ bhikṣauṣadhaṁ bhujyatāṁ
svādvannaṁ na tu yācyatāṁ vidhivaśātprāptena santuṣyatām | 
śītoṣṇādi viṣahyatāṁ na tu vṛthā vākyaṁ samuccāryatāṁ
audāsīnyamabhīpsyatāṁ janakṛpānaiṣṭhuryamutsṛjyatām ||4|| 

வள்ளலாருக்கு பசிப்பிணி மருத்துவர் என்று பெயர். இன்றும் வடலூரில் அவர் ஏற்றிய அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. வருவோர் போவோர் எவர்க்கும் எந்நேரமும் அன்னம் அளிக்கிறது. அன்றாடம் கொஞ்சம் எவர் பசியாவது தீர்ப்போம். ருசியான உணவை விட பசிக்கு கிடைத்த உணவு அமிர்தமாக இருக்கும். இதில் சூடானது என்ன, ஆறினது என்ன?   நான் அங்கு கடைசியாக சென்றபோது ராத்திரி  9 மணி.   முதலில் சாப்பிட்டு விட்டு  அப்புறம் பேச்சு  என்று அன்னை அழைத்துக்கொண்டு  ஒரு இலையின் முன்னால் உட்கார வைத்தார்கள்.  நல்ல பசி. நீண்ட பயணம்.  ஆகவே  சுடசுட  இலையில் விழுந்த சாதம், ரசம், காய் எல்லாம் உடனே  காணாமல் போய் விட்டது.  என்ன  ஒரு தீர்க்க தரிசனம்  வள்ளலாருக்கு.

25. பசி என்னும் நோயை உன்னால் முடிந்தவரை தீர்த்துவிடு.

26. தானமாக கிடைத்த உணவு இருக்கிறதே அது தான் பசி நோய் தீர்க்கும் மருந்து

27. அங்கே மிளகாய் பஜ்ஜி, இங்கே மசால்வடை நன்றாக இருக்கும் என்று தேடி ஓடாதே. நாவை அடக்கு.

28. பகவானே இன்று படி அளந்த உனக்கு நன்றி என்று கிடைத்ததை நன்றியோடு ஏற்றுக்கொள்.

29. அவன் தான் கோடை வெயிலில் வாட்டுபவனும், குளிரில் நடுங்க வைப்பவனும். அவனுக்கு தெரியும் எதை எப்போது கொடுக்கவேண்டும் என்று. சமமாக ஏற்றுக்கொள்.

30. பொறுமை தான் ஒரு வனுக்கு பூஷணம். இதை மறக்காதே.

31. சுக துக்கங்கள் வெளி உலகில் இல்லை. மனதில் தான் உருவாகிறது. மறக்காதே.

32. கருணை தயை, இரக்கம் இல்லாத இதயம் இருந்தும் பயனில்லை.

எவ்வளவு சுலபமாக இதுவரை 32 படி உயரம் வளர்ந்து விட்டோம். இன்னும் எட்டே எட்டு படி தான் இருக்கிறது நாம் உபதேச /சாதன பஞ்சகம் முழுதும் அறிவதற்கு. அதற்கு அப்புறம்? இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவதற்கா இப்படி கஷ்டப்பட்டு ஓலையில் ஆணியால் குத்தி எழுதினது? அதை கடைப்பிடிப்பது ஒன்று தான் பாக்கி.  இதை உங்கள்  நண்பர்கள்  தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும்  உடனே  அனுப்புங்கள் .  அவர்களும் அதே போல்  அதை  மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.  சங்கரரின் அற்புதமான  உபதேசம் எல்லோரையும் சென்று அடையட்டும்.  நூற்றில் ஒருவராவது அதை பின் பற்றினால்  எல்லோருக்கும் நல்லது.

தொடர்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...