Thursday, May 6, 2021

surdas

 


ஸூர்தாஸ்     --   நங்கநல்லூர்    J K SIVAN               


             
 38   நீ யின்றி நானேதடா  கண்ணா...
                                      

 Where else, but with you
Can my heart get peace and joy.
Just as a bird, living on a ship, may fly out far,
but returns to the ship,always.
How can I give up the splendour of the Lotus Eyed?
Concentrate upon another deity?
The thirsting, stupid one gets a well dug,
leaving the holy waters of Ganga.
Would a bee which has tasted the lotus pollen   ever like the sourness of karil fruit ?
Surdas says, O Lord, who would want to give up   the Cow of Wishes and
milk a common goat?


கண்ணிருந்தும்  குருடர்கள் நாம்.   ஆனால்  பிறவியிலேயே   பார்வையற்ற   ஸூர்தாஸ்   கிருஷ்ணனை  அகக்கண்ணால் கண்டு களித்தவர் .    கண்ணன் நம் எதிரே   எத்தனையோ   உருவங்களில்  வந்து நிற்கிறான்.   இதோ நான் உன் எதிரே இருக்கிறேனே, என்னைப்பாரேன் என்கிறான் , நாம்  ஏதோ கட்சி கூட்டம் பற்றிய  சுவரொட்டியில்,   இரு கை  கூப்பி இளிக்கும் எவரோ ஒருவரை பார்த்து களிப்பதில்  கவனமாக  இருக்கிறோம் .

கண்ணா,  சொல்லடா,  என் இதயம் உன்னை யின்றி வேறு எங்கு சென்று  அமைதியையும்  அபரிமித ஆனந்தத்தையும் பெற முடியும்?   ஒரு உதாரணம் சொல்லட்டுமா?

 நடுக்கடலில் ஒரு பாய்மரக்கப்பல்  சென்று கொண்டிருக்கிறது.  ஆழந்தெரியாமல் காலை விட்ட கதையாய் ஒரு  பறவை தன்னால் பறந்து செல்ல க்கூடிய தூரத்தைத்  தாண்டி நடுக்கடல் வந்துவிட்டது. எங்கே அது சற்று அமர்ந்து ஒய்வு பெறும். அடுத்த கரை சேரும் வரை எங்கு பறந்தாலும்  திரும்பத்  திரும்ப  கப்பலின் பாயமரத்தின் மேல் தான் உட்காரும்.   அதால் கரை வரி  பறக்க  முடியாது.  நானும் அப்படியே  திசை தெரியாமல் திண்டாடி உன்னை கண்டுபிடித்தேன். எங்கு சென்றாலும் உன் அருகே வந்துவிடுவேன்.

திவ்ய சௌந்தர்ய  ரூபா,  தாமரைக்கண்ணா , கிருஷ்ணா,  உன்னை  விட்டு வேறு தெய்வம் ஏதடா எனக்கு? வேறு எதிலாவது என் மனம் லயிக்குமா? ஈடுபடுமா? சொல்.

அருமையான  புனித கங்கை நீர்  சலசல வென்று அகண்ட நீராக ஓடும்போது  எந்த முட்டாள்  தாகத்திற்கு  நீர் வேண்டும் என்று  கிணறு தோண்டுவான் ?

இந்த வேடிக்கையைக்  கேள்,  சுவையான  பூந்தேன்  நிரம்பிய  தாமரை மலர்களில்  அமர்ந்து தேனை ருசிபார்த்த வண்டு  நினைத்தாலே புளிக்கும்  புளியம்பழத்தை  நாடுமா ?   ரொம்ப  சுருக்கமாகவே சொல்கிறேன் கிருஷ்ணா ,  கேட்டதைத்  தரும் காமதேனு   நீ  இருக்கையில்  எவனாவது  காட்டில் ஓடி தேடி ஒரு ஆட்டை பிடித்து பால் கறந்து பருக விரும்புவானா?

எனக்கு  ஸூர்தாஸ்  மேல்  ஒரே  பொறாமையாக இருக்கிறது,   அவரது கிருஷ்ண  பக்தியில் லக்ஷத்தில் ஒரு பங்காவது  இந்த ஜென்மத்தில் எனக்கு   கிட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...