Thursday, May 13, 2021

chanakya


 

சாணக்கியன். -- நங்கநல்லூர் J K SIVAN --

சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.

कुराजराज्येन कुतः प्रजासुखं
कुमित्रमित्रेण कुतोऽभिनिर्वृतिः ।
कुदारदारैश्च कुतो गृहे रतिः
कुशिष्यशिष्यमध्यापयतः कुतो यशः ॥

ஒரு சுண்டைக்காய் ராஜ்யத்தை ஆண்டுகொண்டு எல்லா மக்களையும் சந்தோஷமாக சுகமாக வாழ வகை செய்ய முடியுமா? ஒரு துரோக சிந்தை கொண்ட நண்பனிடம் இருந்து மன அமைதி பெற முடியுமா ? பொருத்தம் துளியுமில்லா தம்பதிகளிடையே வாழ்க்கை சந்தோஷமாக இருக்க முடியுமா? நம்பகமற்ற சிஷ்யனுக்கு கல்வி பயிற்றுவித்தால் குருவுக்கு புகழ் எங்கிருந்து கிடைக்கும்? இதெல்லாம் கௌடில்யனின் கேள்விகள்.

सिंहादेकं बकादेकं शिक्षेच्चत्वारि कुक्कुटात् ।
वायसात्पञ्च शिक्षेच्च षट्शुनस्त्रीणि गर्दभात् ॥

நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. ஒரு விஷயம் சிங்கத்திடமிருந்து. ஒரு விஷயம் கொக்கிடமிருந்து. சேவலிடமிருந்து நான்கு பாடங்கள். ஐந்து பாடங்கள் காகத்திடமிருந்து. நாயிடமிருந்து ஆறு பாடங்கள். கழுதை யிடமிருந்து மூன்று விஷயங்கள் .

प्रभूतं कार्यमल्पं वा यन्नरः कर्तुमिच्छति ।
सर्वारम्भेण तत्कार्यं सिंहादेकं प्रचक्षते ॥

சிங்கத்தை போல் நாம் என்ன செய்ய எண்ணுகிறோமோ, அதை முழு மனதுடன் செய்ய வேண்டும், அதற்கேற்ப சக்தியை அதை அடைய முயல்வதில் செலவிடவேண்டும்.

इन्द्रियाणि च संयम्य रागद्वेषविवर्जितः ।
समदुःखसुखः शान्तः तत्त्वज्ञः साधुरुच्यते ॥

நாரை , கொக்கு எப்போதும் தான் அடைய வேண்டியதற்காக நேரம், காலம் பார்ப்பதில்லை, பொறுமையோடு தனது தளராத முயற்சியிலும் தன்னம்பிக்கையிலும் சக்தியிலும் வெற்றி பெறும் . கெட்டிக்கார மனிதன் கொக்கிடமிருந்து இடம் பொருள் காலம் எல்லாம் அறிந்து தனது புலன்களை அடக்கி சக்தியை ஒரு முகமாக திசை திருப்பி பலனை அடைய கற்கவேண்டும்.

प्रत्युत्थानं च युद्धं च संविभागं च बन्धुषु ।
स्वयमाक्रम्य भुक्तं च शिक्षेच्चत्वारि कुक्कुटात् ॥

குறித்த நேரத்தில் எழுவது, தைர்யமாக பயமின்றி சண்டை இடுவது, உறவுகளுக்கு விட்டு கொடுப்பது, முயன்று தேடி சோம்பலில்லாமல் தனக்கு தேவையானவற்றை அடைவது, போன்ற குணங்களை சேவல் கோழியிடமிருந்து நாம் கற்க வேண்டும்.

गूढमैथुनचारित्वं काले काले च सङ्ग्रहम् ।
अप्रमत्तमविश्वासं पञ्च शिक्षेच्च वायसात् ॥

குடும்பத்தோடு ஒட்டி உறவாடுவது ஒற்றுமை, தைர்யம், சாமர்த்யம், தேவையானவற்றை கிடைக்கும்போது சேமித்து வைத்துக் கொள்வது, எப்போதும் கவனத்தோடு கண்காணித்துக்கொண்டு இருப்பது, எவரையும் எளிதில் நம்பாமல் இருப்பது, இதெல்லாம் காகத்திடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்

बह्वाशी स्वल्पसन्तुष्टः सनिद्रो लघुचेतनः ।
स्वामिभक्तश्च शूरश्च षडेते श्वानतो गुणाः ॥

எவ்வளவு தான் பசி இருந்தபோதும், கிடைத்ததை உண்டு திருப்தி அடைவது, அசந்து தூங்கினாலும் சட்டென்று விழித்துக் கொள்வது, எஜமானனிடம் பூரண அன்பு, விசுவாசம், தைர்யம், ஆகிய நற்குணங்களை நாயிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.

सुश्रान्तोऽपि वहेद्भारं शीतोष्णं न च श्यति ।
सन्तुष्टश्चरते नित्यं त्रीणि शिक्षेच्च गर्दभात् ॥

தான் களைத்து இருந்தபோதும், சோர்வாக இருந்தபோதும், துளியும் மறுக்காது, தன்னுடைய பொதியை சுமப்பது, வெயிலோ, மழையோ, குளிரோ, வெயில் உஷ்ணமோ, எது இருந்தாலும் துளியும் லக்ஷியம் பண்ணாமல் திருப்தியோடு பொறுமையோடு இருப்பது ஆகிய அற்புத குணங்களை கழுதையிடம் இருந்து கற்கவேண்டும்.

य एतान्विंशतिगुणानाचरिष्यति मानवः ।
कार्यावस्थासु सर्वासु अजेयः स भविष्यति ॥

மேலே சொன்ன 20 நல்ல விஷயங்களை நற்குணங்களை, எவன் ஒருவன் பழக்கத்தில் கொண்டுவருகிறானோ, அவன் எடுத்த கார்யம் யாவினிலும் வெற்றி அடைவான்.
எனக்கு மேலே சொன்ன உவமைகள், வெகு காலத்துக்கு முன்பே தெரியும், ஆனால் அவை சாணக்ய நீ தி யிலிருந்து திரட்டப்பட்டவை என்பது இப்போது தான் உணர்ந்தே அதிசயித் தேன்.


தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...