Tuesday, October 31, 2017

​KRISHNA ... PLEASE HELP..!

​​
​​​​
​ ​KRISHNA ... PLEASE HELP..! - j.k. sivan

Babu Naidu was very religious and pious and not a single day he missed performing his chanting and pooja to Lord Krishna before leaving for his work place. He was poor and never had a permanent job. His aged parents needed his support besides his widowed sister with her two children.
He managed to rent a house at a nominal cost for running this large family with his wife and a child at Tambaram.

He used to go on his two wheeler every day to Chengalpat to the Steel rolling mill where he was employed. Babu used to sing Krishna songs all the way to the factory every day.

It now rains heavily​ during​ ​​ this October unusually, for the last couple of days and Babu had been thinking of his next job as he
was already served​ the notice of termination of his job due to staff reduction in the factory.

He contacted many friends and applied to various organisations and awaits any favourable response . He had another 21 days to go before being jobless.

''Krishna, why dont you consider me a modern Kuchela and help​. I am also responsible for feeding more mouths within my llimited income. What shall I do after 20 more days.... So far nothing had materialised through my efforts'' he sadly reflected his state.

​Babu had a vacant plot in Madhurantakam closer to the main road and he was planning vigorously to dispose it of to raise funds for supporting the family until he got another job. Never did he tell this to his wife because it was her father who​ got​ ​​it​ ​registered​ in his name a decade ago.

Just about a week before he was to lose his job, he had a letter from one Mr.ARJUN LAL​ to meet him at his office in Purasawalkam, Chennai for an interview​.

It was an Ekadasi day and as usual Babu would not consume any food the whole day. He managed to wear the best​ ​dress​ he could manage,his only​ white shirt, and a blue pant, wearing a tie and put on his​ seldom used​ shoes and proceeded to Purasawalkam on his two wheeler. Within about 200 meters of his house, the front tyre of​ the tw​o wheeler got punctured. He pushed​ ​and parked it at a​ nearby shop requesting the friendly​ shopkeeper to him to take care of it until his return and​ rushed to​ the​ bus stop.

It was almost 10am and he had another one hour​ ​for the interview at​ Purasawalkam. He​ saw a bus bound for Purasawalkam moving out. He ran at his best but missed it. There is not going to be another bus for Purasawalkam​ within the​ next fifteen minutes or so. He was so disappointed and frustrated he did not notice a fast moving private car on his right. It was with Krishna's grace that he narrowly missed being run over , but was​ hit on his right shoulder. The car​ disappeard from the scene​. Babu fell down​ and had​ severe pain on the right shoulder. It took some minutes for him to recover from the shock and was helped by a few nearby to get up. His dress was stained with​ slush and mud as it still drizzled. He picked up his hand bag​ lying at a distance on the​ road,​ ​where​ it was thrown away​ as​ he fell down,

Babu lost all hopes of reaching Purasawalkam at 11.15am​ and​ tears rolled​ ​ down his eyes realising his misfortune.

A young man in the vicinity who was​ taking photographs of​ a building​ noticed Babu running towards the bus, missing it and the near fatal car accident he escaped from. The youth​ approached the sad looking Babu Naidu and offered to help him.

''You cannot help me sir,. I am destined to​ suffer. All my prayers to my Lord Krishna​ are unanswered.​''
With his voice choked in sorrow Babu related everything about his large family, loss of job in a couple of days, the just missed opportunity to attend an interview at Purasawalkam etc.,​ ​The youth was surprised and sad at the same time.

''Do you want to go to Puraswalkam now?

''Yes​, ​ but cannot go. How can I in this condition within such a short time attend my interview?

''Dont worry, I​ will take you and​ drop you just in time. Hop in '' said the youth bringing his car from the road side

Babu could not believe his ears. His hopes had a fresh lease of life. He​ looked at the clock in front of a building.​ Luckily still he had
another 40 minutes or so​ when they were near Saidapet in the car.​ Fortunately​ there was no delay on the way​ due to any​ traffic jam. When the car reached Purasawalkam the youth​ told​ Babu ​ ''I know this address'' and​ parked the car in front of an independent bangalow.

Babu rushed in​to the building jumping out of the car without even thanking the youth. A​ lady​ at Reception enquired about him and his purpose of visit.

''I am called for an interview by​ Mr. Arjunlal please''

' Mr. Arjun has his office in the left side of the verandah, facing east at the corner. You can go​ to his o​f​fice​ there.

Babu completely forgot about the youth​ or thanking him for his help. From the corner of his eyes he observed the​ youth was talking to the lady at the Recelption.​​

Babu lost his hopes as there were three or four ladies and​ half a dozen​ ​well dressed young men, probably candidates waiting to be interviewed like him​ in the front hall of Mr. Arjun's cabin​. He simply prayed to Krishna that he should succeed in getting the job at whatever salary​ they​ ​offered ​as he needed a job ​very ​badly.​ ​

Babu's turn came for the interview and he entered nervously the cabin​. Mr Arjun was bald, thick moustached, fat and looked at him through his tainted spectacles. Babu regained his strength somewhat, on looking at the smiling Krishna ​ in a picture ​on the wall playing on his flute​. He nervously prayed to Him within himself.

Babu apologized for his helplessness presenting himself with mud stained clothes and explained the accidental fall he met with. Mr Arjun pitied his condition and poerused his credentials and certificates. Certain routine​ questions​ were answered by Babu Naidu. He was finally told to await a written communication.

Disappoined Babu was moving out of the cabin when the youth who helped​ and brought​ him entered the room. Babu was shocked at the rude behaviour of the youth​ for following him without permission inside the cabin of Mr. Arjun Lal and feared it would ruin his chances of getting a job.

He was angry at the youth and asked him '' Why did​ you folow me and enter this cabin without any manners and decency?​ Could you​ not wait for me outside, if you wanted to talk to me'' said Babu with​ restlessness.

''Why should I wait out, if I want to meet my uncle'' replied the youth​ ​.

''Hi Krishna,come in my boy,​ what brought you here''​ asked Mr Arjun, interrupting their conversation. He rose up​ from his chair to embrace his sister's son,​ Klrishna, his​ his pet​ nephew.'

''You wait out for me'' said Krishna waving at Babu naidu​ . Babu was still​ nervous​ and slowly walked on the verandah unable to believe what was happening to him...

For about half an hour Babu sat​ still like a stone and his mind was releling and recalling in quick succession the events that took place since that morning​ and closed his eyes praying to Krishna as usual.

Krishna the youth,​ came out and​ touched him on the weak right shoulder and handed him the appointment letter with a salary double the amount he last received. When Babu looked up Krishna​ the youth appeared to him to be​ Krishna​ smiling in the picture on the wall playing on his flute.

இவரைத் தெரியுமா?


                   
  இவரைத் தெரியுமா? j.k. sivan 


பரிக்ஷைக்கு  சில நாளோ  நேரமோ  முன்பு தான் படிப்பது நிறைய மாணவர்களுக்கு வழக்கம். அடுத்த வீட்டில் ஆறு பையன்கள் இருந்தார்கள். ஒருவன் உரக்க படித்துக் கொண்டிருந்தான்.  எனக்கு  மதுரை  மணி அய்யரை கேட்க முடியவில்லை.  அய்யருக்கு  விடுதலை அளிக்க வேண்டியதாகிவிட்டது.

'நவ இந்தியாவின் சிற்பி. இரும்பு மனிதன். இருநூறு கோடி ரூபாயில்  ''ஒற்றுமையின்  சிலை'' ஒன்று. 
 ஏன்யா  இந்த பணத்தை உருப்படியாக ஜனங்களுக்கு  ஏதாவது செய்யக்கூடாதா?  என்று எதிர்ப்பு வேறு.

இந்த ஆசாமியின் கனவில் தேசம் தான் திரும்ப திரும்ப வந்ததே தவிர அவர் நேசம் வேறு எவர் மீதும் சொல்லவில்லையாம்.  அவர் இன்னும் கொஞ்சம்  காலம் இருந்திருந்தால்  நாமும்  நமது நாடும் எப்படியெல்லாமோ இருந்திருக்கும்.  சில  வம்சங்கள் தலையே தூக்கி இருக்காது. சுபிக்ஷம் பெருகி இருக்கும்.

எப்படி சொல்லமுடியும்? என்று கேட்கலாம்.  
அந்த மனிதர்  காந்தியவாதி.  காந்தி அரசியலில் தலையிடவில்லை. தன்னை இந்த நாட்டின் சுதந்திரம் வேண்டிய தியாகியாக மட்டும் நிறுத்திக்கொண்டார்.  காங்கிரஸ் என்கிற இயக்கம் கலையவேண்டும் என்கிறார். நடக்கவில்லையே.   அவர் பேச்சை யாரும் கேட்கவில்லையே. அதால் வந்த வினை இன்னும் தீரவில்லையே.  
இரும்புமனிதர்  காந்தியவாதி என்றாலும் சுத்தமான மனதும் கைகளும் கொண்ட தேச தொண்டர். சிறந்த நிர்வாகி. நேர்மையானவர். காந்தியின் வலது கை.  

இந்த நாட்டின் உள்துறை மந்திரியாக, உதவி பிரதமராக பணியாற்றி  565 தனித்தனி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே  வருஷ காலத்தில்  இந்தியாவை  ஒரு தனி நாடாக்கிய பெருமை அந்த மனிதரை சேரும்.

ஐயகோ இன்னும்   சில வருஷங்கள்  நீங்கள் இருந்திருக்க கூடாதா?.   எத்தனையோ தலைமுறைகள் உங்களை தெய்வமாக  போற்றி  சுகமாக வாழ்ந்திருப்போமே.
அவர் பிறந்த நாள்  31 அ க்டோபர். எல்லோரும் மறந்த நாள்.
அவர் பெயர் தாங்கி சில தெருக்கள்  சர்தார்  வல்லபாய் படேல் தெரு  என  வழிகாட்டுகின்றன.  நாட்டுக்கே வழிகாட்டியவர்  ரோட்டுக்கு வழிகாட்டியாக நிற்கிறார்.



பார்போற்றும் பரம ஹம்சர்




பார்போற்றும் பரம ஹம்சர் J.K SIVAN

அற்புத உரையாடல்

வெல்லக்கட்டி எங்கிருக்கிறதோ அங்கே எறும்புகள் சேராதா?
அந்த சின்ன அறையில் காற்றோட்டமாக வெளிச்சமாக மட்டும் இல்லை, ஞான ஒளியும் வேத சாரமும் சேர்ந்திருந்தது.

பரமஹம்சர் என்ன சொல்கிறார் என்று பாக்கியசாலிகள் நிறையபேர் அங்கே காத்திருந்தனர். பரம ஹம்சர் பேசிக்கொண்டிருக்கிறார்.

ப: ''மனிதர்களை நாலு வகையாக பிரிக்கலாம். உலக வாழ்க்கை சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள். தவறுதலாக கூட கடவுளை நினைக்காதவர்கள்.

மோக்ஷம் முக்தியை தேடுவோர்கள், இவர்களுக்கு முக்தி நல்லதை கொடுக்கும் என்று தெரியும், ஆனால் உலக இன்பங்களில் இருந்து விடுபடாதவர்கள். ஆற்றில் ஒரு கால். சேற்றில் ஒரு கால் ஆசாமிகள்.

முக்தியை அடைந்தவர்கள், சாதுக்கள், மகாத்மாக்கள்.மண் பெண் பொன் ஆசையை துறந்தவர்கள். உலகப் பற்றை அறுத்தவர்கள். பகவான் சிந்தனையில் ஈடுபடுபவர்கள்.

கடைசியாக என்றும் நிரந்தரமாக ஸ்வதந்திரமான ஜீவர்கள். இந்த கடைசி ராகத்தில் நாரதர் ஒருவர். மற்றவர் நலத்துக்காக, நன்மைக்காக உலவு பவர்கள். ஆன்மீக உண்மைகளை போதிப்பவர்கள்.
இவர்கள் எப்படி என்றால் ஆற்றில் மீன் பிடிக்க வலை விரித்தால் அதில் சிக்காத மீன்கள். சிலது மாட்டிக்கொண்டு தப்பிக்கும். அது போன்றவர்கள் முக்தி தேடி அடைந்தவர்கள். எல்லாமே தப்பாது. முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் வலையில் சிக்கி அதிலேயே மாட்டிக்கொண்ட மீன்கள்.தப்ப முயலாதவர்கள்.

நான் சொன்ன வலை தான் மண் பெண் பொன் எனும் மூவாசைகள். குப்புசாமி மரணத்தருவாயில் இழுத்து பிடித்துக் கொண்டிருக்கிறான். அவன் மனைவி ''நீங்க பாட்டுக்கு போயிடுவீங்க. எனக்குன்னு என்ன செஞ்சீங்க?'' என்று தான் அழுகிறாள்? விளக்கு பெரிசா திரி எரியுதுடா கோவாலு, கொஞ்சம் திரியை இழுத்து விட்டு மெதுவா திரி எரிஞ்சு விளக்கு சின்னதா பண்ணு . எண்ணையை குடிக்குது. அப்பாரு போய்க்கினு இருக்கிறார். கொஞ்ச நேரம் விளக்கு நின்னு எரியட்டும் ''

வலையில் மாட்டிக்கொண்ட ஜீவன்கள் கடவுளைபற்றி கொஞ்சமும் சிந்தனை இல்லாத பிறவிகள். கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் ஊர் வம்பு, முட்டாள் தனமான ஏதோ பேச்சு. எந்த பிரயோஜனமும் இல்லாத ஏதோ வேலை.
என்னடா செய்றே என்று கேளுங்க. ''இதோ பாத்தி கட்டிக்கிட்டு இருக்கிறேன். செவத்தை சுரண்டிக்கிட்டு இருக்கேன். சுண்ணாம்பு அடிக்கணும். கொஞ்சம் கூட சும்மா இருக்க நேரமே இல்லையே என்பான். தலை மறைஞ்சதும் சீட்டு ஆடுவான்.''

எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

'குருநாதா, இப்படிப்பட்ட உலக மாயையில் சிக்கியவனுக்கு கதி மோட்சம் ஒன்றும் கிடையாதா?''

'ப: ''ஏன் இல்லை. நேரமா இல்லை அவனுக்கு. மனசு வைக்கணும். ஆன்மீக மனிதர்களோடு பழகணும்.தெரிஞ்சுக்க விருப்பம் முதலில் மனதில் தோணணும். தனிமையில் கொஞ்சம் யோசிக்க ஆர்வம் வேணும். பகவானே எனக்கு இதெல்லாம் தெரியணும் என்று எண்ணம் முதலில் அவனுக்கு வரணும்''
நம்பிக்கை பக்தி அவசியம்.

ராமனுக்கு லங்கை போக தெரியாதா, முடியாதா? ஒரு பாலம் கட்டி அதன் மேலே போகணும்னு தான் தோன்றியது. ஆனால் அவன் பக்தன் ஹநுமானுக்கு எதிரே சமுத்திரத்தை பார்த்ததும் நூறு யோஜனை தூரம் தாண்டணுமே என்று எண்ணியதும் ''ஜெய் ராம் சீதா ராம் என்று ராமனின் பெயரை சொல்லி அதன சக்தியில் தாண்ட முடியும் என்று தோணியது. அப்படியே முடிந்தது. அவனுக்கு எதுக்கு பாலம்?''

இன்னும் தொடருகிறேன்

உத்தவ கீதை.


உத்தவ கீதை.    J.K. SIVAN 

               உத்தவா  இன்னும் சொல்கிறேன்  கேள்!

உத்தவா,  உனக்கு  நான் சொல்வது புரிவதற்கு கொஞ்சம் கஷ்டமானதாக தோன்றினால் அது உன் மனத்தில் தோன்றும் சந்தேகத்தின்  பிரதிபலிப்பு. எனக்கு இது புரியும் என்று எண்ணியவாறு அதை அணுகினால் கட்டாயம் புரியும். 

கிருஷ்ணா,  உத்தவன் மூலம் இதை எங்களுக்கும்  நீ சொல்வது  நன்றாகவே புரிகிறது. உன் உபதேசத்தை தொடர்ந்து நடத்து. பயனடைகிறோம். 

''என்னை சரணமென்று அடைக்கலம் அடைந்துவிடு. பகவானுக்கும்  அவனது பக்தர்களுக்கும் சுவை செய்வதில் ஈடுபடுத்து.   தனிப்பட்ட  சுய  விருப்பம், தேவைகள் தேடாதே. உனது ஸ்வய தர்மத்தை கடைப்பிடி.

பரமாத்மாவை அறிய விருப்பமுள்ளவன் பலன்களை அளிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் சேர்க்காமல் இருப்பது போன்ற நியமங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.  குருவிற்கு சேவை, பணிவிடை செய்பவன் அகந்தை, பொறாமை, மமதை, பரபரப்பு, வெறுப்பு, வீண் பேச்சு, மனைவி-மக்கள்-மனை-நிலம்-உற்றார்-செல்வம் முதலியவற்றில் ஒட்டுதல் இல்லாதவனாகவும், அன்பு, வினைத்திட்பம், அனைவரின் நலனில் சம நோக்கு உடையவனாகவும் இருக்க வேண்டும்.

ஆத்மா சுயம் ஜோதி வடிவானது; அனைத்திற்கும் சாட்சியாக இருப்பது; இந்த உடலை விளக்கமுறச் செய்யும் ஆத்மா, இந்த உடலிருந்து வேறானது. இந்த மனித உடல், மாயையின் முக்குணங்களின் சேர்க்கையால் ஆனது. அதனால் தான், மனிதன் உலகவாழ்க்கையுடன் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கிறான். அதாவது, தோற்றமும் அழிவற்ற ஆத்மாவின் மேல் பிறப்பு-இறப்பு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆத்மக்ஞானம் ஏற்பட்டுவிட்டால், இந்த மயக்கம் வேருடன் கிள்ளி ஏறியப்பட்டுவிடும்.

புலன் விவகாரங்களில் சம்பந்தப்படாத சுத்த ஆத்மா புலனளிக்கும் சுகமம் இன்பமும் மாயை, உண்மையானது இல்லை என்பதை உணரும். அதைத்தேடி ஓடுவது வியர்த்தம் , வீண் என அறியும். 

எனவே ஆத்மாவிற்கு எதிரான அனாத்மாவான பொருட்கள் நிலையானது என்ற நினைப்பை விட்டொழித்து, மிக உயர்ந்ததும், தனிப்பெரும் பொருளானதும், தனக்குள் விளங்குவதுமான ஆத்மாவை தேடவேண்டும். 

பஸ் டிக்கெட் வாங்குகிறோம்.  அது எந்த ஊர் செல்லவேண்டுமோ அது வரை தான் சுகமாக ஜன்னல் பக்கத்தி உட்கார்ந்து வேடிக்கை பார்க்க நம்மை தூக்கிச் செல்லும். கொடுத்த காசுக்கு  பயணம் முடிந்தவுடன் இறக்கி விட்டுவிடும். அதுபோல் தான்  புண்ணிய இருப்பு நம்மிடம் உள்ள வரையில் சுவர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கலாம். புண்ணியம் தீர்ந்ததும்,  மனிதனை கீழே பூமியில் மீண்டும் பிறப்பெடுக்க தள்ளிவிடும். , அவர்கள்   இன்ப துன்பங்களுக்கு காரணமான உடலைக் கொண்டு, செயல்கள் செய்து, அழிந்து போகும் தன்மையை உடைய உடல்களையே மீண்டும் மீண்டும் அடைகிறார்கள்.    இதுவே திரும்ப திரும்ப  வரும் ஜனன மரண நியதி.  

முக்குணங்கள் கர்மாக்களைச் செய்ய தூண்டுகிறது; கர்மபலன், செயல் செய்பவனின் விருப்பத்திற்கேற்றபடி அமைகிறது. இந்த சீவன் முக்குணங்களுடன் கூடியிருப்பதால், கர்மபலன்களை அனுபவிக்கிறது. குணங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே ஒரே பரமாத்மாவான என்னை, காலம், ஆத்மா, உலகம், இயற்கை, தர்மம், என்று பலவிதமாக கூறுகிறார்கள்.

அதர்மத்தில் நாட்டம் , தீயவர் சேர்க்கை , புலன்களுக்கு அடிமையாவது,  மனம்போனபடி வாழ்க்கை, , கஞ்சன், பேராசைக்காரன், பெண்ணாசைப் பிடித்தவன்  ஆகியோருக்கு  கோரமான இருள் சூழ்ந்த நரகம் காத்திருக்கிறது. 

கனவில் என்னன்னவோ மனம் விரும்பிய  காட்சிகள் வருகிறது. சந்தோஷம் அடைகிறோம். க்ஷண நேரம் தான் அது.    கனவில்  நிஜமாக நடப்பது  போன்று உற்பத்தியான  காட்சியெல்லாம்  கண் திறந்தவுடன் காணாமல் போகிறது.  எல்லாம் மனமெனும் குரங்கின் மாய லீலைகள். 


உத்தவா, என்னையே  குறியாக கொண்டு  நாட்டம் உள்ளவன் புலன்களின் ஈர்ப்பு பக்கமே போகமாட்டான். தன்னை மேலும் உயர்த்திக்கொள்ளும்  எண்ணமுடையவன் பலன் எதிர்பாராது தனது காரியங்களை செய்பவன்.

என்னை ஏற்றுக்கொண்ட பக்தன் வேதங்கள்  சொல்லும் பாப கார்யங்களை புரியமாட்டான்.  புரிந்தால் என்னை அடைய முடியாதே. என்னை அடைய  தக்க  ஞானிகளை, குருமார்களாக அடைந்தபோது  நான் எளிதில் அவனை சேர்வேன்.  நன்குணர்ந்த ஞானிகளும் நானும் வேறல்லவே.

ஒரு  ஊழியன், பெரிய மனிதனிடம் உத்யோகத்தில் இருக்கும்போது, தன்னையே  அந்த பெரியமனிதன் அந்தஸ்துக்கு தானே உயர்த்திக் கொண்டு வறட்டு அதிகாரம், கெளரவம் எல்லாம் இன்றி, பணிவோடு எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும்.  அதிகமாக  பேசாமல்  தனது  பொறுப்புணர்ந்து  கடமையை  ஆற்றவேண்டும்.   விநயம் வெகு அவசியமானது.

தன்னை ஆத்மா என உணர்ந்தவனுக்கு  உற்றார், உறவினர், குடும்ப பாசமோ நேசமோ உலக ஈர்ப்புகளோ  கிடையாது. பெரும் பொருளும், வெறும் பொருளும் தேடுபவனுக்கு பரம் பொருள் எங்கிருந்து கிடைக்கும்.

பற்றி எரியும் கட்டை வேறு, அக்னி வேறு, என்று இருந்தாலும் தன்னை அழித்துக்கொண்டு கட்டை தீயாகிறது.  நமது உடலும் உடலில் உள்ள ஆத்மாவும் வேறு. ஒன்றாக இருந்தாலும் ஆத்மா தேஹ சம்பந்தம் இல்லாதவன். 

அக்னியில்,  சில நீர் பூத்திருக்கும், சில கொழுந்து விட்டு எரியும், சில  கொஞ்சூண்டு தீ பற்றி மற்றது எரியாமல் இருக்கும், சில பற்றிக்கொள்ளவே  செய்யாது. ரொம்ப பிரயாசைப்பட்டு எரிய வைத்தல் மெதுவாக வேறு நேரம் கழித்தது எரியும்.  இதுபோல்  அனந்த உடலுக்கு, தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மா அந்தந்த உடலின் தன்மையை  அனுசரித்து ஞானத்தை வெளிப்படுத்தும். 

இந்த உலகில்  காணும் அனைத்து  ஜீவர்களிலும்  தாவர ஜங்கம  வஸ்துக்களிலும் பகவானே இருக்கிறான் எனபதால், இவைகளில் பகவானையே பார்க்க வேண்டுமேயன்றி அந்தந்தப் பொருளாக அல்ல. இதற்காக தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்  என்று பிரஹலாதன்  நரசிம்மனை பற்றி நிச்சயமாக  கூறினான். 

உத்தவா  இன்னும் நிறைய சொல்கிறேன் கேட்கிறாயா? புரிகிறதா?
கிருஷ்ணா  இது எனக்கு கிடைத்த அரும்பெரும் பாக்யம். சொல் காதார  கர்ணாம்ரிதமாக கேட்கிறேன்.
அன்பர்களே, இது உத்தவனால் நமக்கும் கிடைத்த பாக்யம்.  ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா  இந்த பூவுலகத்தி கடைசியாக தோன்றி அவதாரம் முடிந்து விடைபெறும் சமயம்  உத்தவனுக்கு உபதேசித்தது தான் இந்த உத்தவ கீதை.   இதை உங்களுக்கு  தெரிவிக்கும் சிறு பணியில் ஈடுபட்டிருக்கும்  நானே உங்களிலும் பெரும் பாக்கியசாலி 

Monday, October 30, 2017

BHAGAVAN SRI RAMANA'S TALKS

BHAGAVAN SRI RAMANA'S TALKS : J.K. SIVAN

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you. So you will enjoy profusely. JKS

Maharishi Ramana: Because you identify yourself with the body you have accepted objects as being outside you. But are you the body? You are not. You are the Self. There are all the objects and the whole universe.
Nothing can escape the Self. How then can you move away from the Master who is your very Self? Suppose your body moves from a place; does it ever move away from your Self? Similarly, you can never be without the Master.

Devotee: ‘’Can I be enabled to realise the Truth.
M.: Is there any moment when you have not realised the Self? Can you ever be apart from the Self? You are always That.

D.: You are the great Master shedding joy and bliss on the world.Your love is indeed unlimited that you choose to abide in the world in human shape! But I wish to know if one should necessarily realise one’s Self before being of help to the country and a leader of men.
M.: Realise the Self first and the rest will follow.

D.: America is now the foremost country in industrial matters,
mechanical engineering, scientific advance and other worldly
affairs. Will she come up to the same level in spiritual life also?
M.: Certainly, she is bound to.

D.: Thank God that it will be so! I am a partner in an Engineering firm. But it is not of vital concern to me. I try to bring spiritual ideals into the work-a-day life of the firm.
M.: That is good. If you surrender yourself to the Higher Power all is well. That Power sees your affairs through. Only so long as you think that you are the worker you are obliged to reap the fruits of your actions. If on the other hand, you surrender yourself and recognise your individual self as only a tool of the Higher Power, that Power will take over your affairs along with the fruits of actions.You are no longer affected by them and the work goes on unhampered. Whether you recognise the Power or not the scheme of things does not alter.Only there is a change of outlook.

Why should you bear your load on the head when you are travelling on a train? It carries you and your load whether the load is on your head or on the floor of the train. You are not lessening the burden of the train by keeping it on your head but only straining yourself unnecessarily. Similar is the sense of doership in the world by the individuals.

D.: I have been interesting myself in metaphysics for over twenty years. But I have not gained any novel experience as so many others claim to do. I have no powers of clairvoyance, clairaudience, etc. I feel myself locked up in this body and nothing more.
M.: It is right. Reality is only one and that is the self. All the rest are mere Phenomena in it, of it and by it. The seer, the objects and the sight, all are the self only. Can anyone see or hear, leaving the self aside? What difference does it make to see or hear anyone in close proximity or over enormous distance? The organs of sight and hearing are needed in both cases; so also the mind is required. None of them can be dispensed with in either case. There is dependence one way or another. Why then should there be a glamour about clairvoyance or clairaudience?

Moreover, what is acquired will also be lost in due course. They
can never be permanent.
The only permanent thing is Reality; and that is the Self. You
say “I am”, “I am going”, “I am speaking”, “I am working”, etc.
Hyphenate “I am” in all of them. Thus I - AM. That is the abiding
and fundamental Reality. This truth was taught by God to Moses:
“I AM that I-AM”. “Be still and know that I-AM God.” so “I-AM”


is God.

சித்தர்கள் - J.K. SIVAN

சித்தர்கள் - J.K. SIVAN  

                        புரட்சி சித்தர் சிவவாக்கியர்..!!  

எத்தனை எத்தனையோ மஹான்கள், சித்த புருஷர்கள் நம்மிடையே தோன்றி இருக்கிறார்கள். பலரை விடாது கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். அவர்களது ஒவ்வொரு சொல்லும் விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள். அர்த்தம் பொதிந்தவை. எந்த காலத்திற்கும் முக்யமாக தற்காலத்துக்கும் பொருந்தியவை.
\
அப்படிப்பட்ட ஒரு சித்தர் தான் சிவ வாக்கியர். அவர் வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக இருக்கும். தண்டவாளத்தில் ரயில் வண்டி ஓடுவதைப் போல ஆடி அசைந்து இதமாக மனதை தொடும். வேகமாக உள்ளே பதியக்கூடியதும் கூட.

வேத கால ரிஷிகள் மீன் தின்றார்களா? இல்லையா? மீன்கள் நீரில் என்னவெல்லாம் செய்தனவோ. அவை இப்படி உபயோகித்த ஆற்று நீரைத் தானே பருகினார்கள், அதில் தானே குளித்தார்கள். மீனை விடு. மானை சாப்பிடவில்லையா? அப்போதும் இப்போதும்? மான் தோலின் மீது தான் அமர்வதே அப்போதும் இப்போதும்! மான்தோலை க்ரிஷ்ணாஜினம் என்று சிறிது கொண்டது தானே உபவீதம் எனும் பூணுல்.

ஆடு சமாச்சாரமும் அப்படித்தான். அப்போதும் இப்போது சில இடங்களிலும் வாஜபேய யாகம்.
வேறு விதத்தில் உணவுத்தட்டில் இப்போது.

பசு? ரிஷிகள் தொடவில்லை. இப்போதுள்ள சிலர்? புதைத்த இறந்த பசுவின், மாமிசம், கழிவு, சாணம் கூட காய்கறிகள் விளைய உரம் தானே! காய்கறிகளில் பசு மாமிசம்.......??

நிறுத்துங்கள் போதும். இது என்ன சிவவாக்கியர் என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு கழக ஆசாமி மாதிரி விதண்டாவாதம் பேசுகிறீர்கள். போதும் உமது வியாக்கியானம். கேட்க தயாராக இல்லை இங்கு யாரும்! இப்படித்தான் நானும் நினைத்தேன்.

இது சிவவாக்கியர் தான். ஏன் எதற்கு எந்த சந்தர்ப்பத்தில் இப்படி சீறுகிறார் என்று புரியவில்லை. ஆனால் அவரது எழுத்தில் உள்ள வேகம், வாதம் சற்று சிந்திக்க வைக்கிறது. விடை தெரியாத வினாக்கள். இனி பாடல்களை பார்ப்போம்.

மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

சிவ வாக்கியர் என்று ஒருவர் இருந்தால் அவரை போற்றி வணங்கவேண்டும். என்ன தெளிவான சிந்தனை எண்ணம் அந்த சித்தருக்கு. அவரை திருமழிசை யாழ்வாராக அடையாளம் கொண்டுவிட்டதால் சிவ வாக்கியர் பாடல்கள் நின்று போயிருக்கலாம். அல்லது ரெண்டு பேருமே வேறாக இருக்கலாம். பத்தாம் நூற்றாண்டு பற்றிய இந்த கவலை பெரிய கேள்விக்குறியாக நின்று போகிறது.
மேலே ஒரு பாடலில் மாட்டிறைச்சி மரக்கறிக்கிடுவது என்றால் உரம் என்று சொன்னேன்.

நேற்று ஒரு கோசாலை சென்றிருந்தேன். பாலா வேத பாடசாலை தொழுப்பேடு என்ற கிராமத்தில் 100கி.மீ. தூரத்தில் சென்னையிலிருந்த்து திருச்சி மார்கத்தில் செல்லும்போது இடது பக்கம் தெரு மீதே 4 ஏக்கர் பரப்பளவில் அருமையாக செயல் பட்டுவருகிறது. அதன் நிறுவனர் ஸ்ரீ பாலகிருஷ்ணன் என்னோடு பேசும்போது பேச்சு வாக்கில் இந்த பத்து வருஷத்தில் எந்த பசுவும் அந்திம காரியம் செய்ய சந்தர்ப்பம் அளிக்கவில்லை. அப்படி நேரிட்டால் நிறைய அதற்கான மந்திரங்கள் மனிதர்களுக்கு செய்வதை விட பல மடங்கு அதிகம் என்றார். இது தான் நான் மேலே சொன்ன ''மாட்டுக்கறி'' உரம்.....

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...