Saturday, October 7, 2017

சூர் சாகரம்

சூர் சாகரம் J K. SIVAN

                                 காது ஜாக்கிரதை.

கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான். கண்ணில் இமை போல் யசோதை அவனை கண் துஞ்சாமல் பாதுகாத்து வளர்க்கிறாள்.

''கண்ணப்பா, நீ ரொம்ப தூரம் எல்லாம் போய் விளையாடக்கூடாதுப்பா. கண்ணுக்கெட்டாமல் எங்கேயாவது போய் விளையாடிவிட்டு நமது வீடு எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் தேடுவாய் கண்ணே. அது தவிர அங்கெல்லாம் ஏதாவது ஒரு பூதம் பிசாசு நின்று கொண்டு இருக்கும்.''

''ஆ!'' என்கிறான் கிருஷ்ணன் பயத்தோடு.

இப்படிப்பட்ட விஷயத்தை எனக்கு இன்னிக்கி தான் ஒரு பையன் மூலமாக தெரிந்தது. உன்னோடு விளையாடுவானே ஒரு குண்டு பையன் அவன் வந்து சொன்னான். வேகமாக என்னை நோக்கி ஓடி வந்தான். மேல் மூச்சு கீழ் மூச்சு இறைத்தது அவனுக்கு. கண்களில் தாரை தாரையாகி கண்ணீர் வேறு.

''என்னடா பையா ஆச்சு உனக்கு ? ஏன் இப்படி மூச்சு இறைக்க ஓடி வருகிறாய்? ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டேன்.

''நான் தனியாக ஓடி வந்து விட்டேன் மத்த பசங்களை விட்டு. அங்கே யாரோ சொன்னா ஒரு பூதம் பெரிசாக இருக்குமாம். சின்ன பசங்க தனியா இருந்தா அது காது ரெண்டையும் மளுக் என்று பிச்சு தின்னுடுமாம்''. இதை சொல்லும்போது அந்த பையன் கையால் ரெண்டு காதையும் பொத்திக் கொண்டான்.

கிருஷ்ணன் இதை உன்னிப்பாக கேட்டான். அவனுடன் இருந்த பலராமனும் ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு பயத்தோடு நின்றுகொண்டிருந்தான்.

'' கிருஷ்ணா நாம இனிமே வீட்டு பக்கத்திலேயே விளையாடுவோம். வா '' என்றான் பலராமன்.

சரி என்று தனது தலையில் இருந்த மயில் பீலி ரெண்டு பக்கமும் ஆட கண்ணனும் தலையாட்டி பலராமன் பின்னே சென்றான்.

என்ன அற்புதமான கற்பனை பார்த்தீர்களா சூர் தாஸுக்கு இந்த சிறிய பாடலில். ஒரிஜினல் பாட்டு வ்ரஜ பாசி என்கிற ஒரு மொழியில் எழுதியிருக்கிறார். அதன் ஹிந்தி ஆக்க்கம் என்னிடம் இல்லை.

Kanha, don't go so far to play,
you do not know the 'hau' is here,
I've learnt of it today.
one boy came running just now
I saw him crying away,
the 'hau' clips the ears away
of little boys astray.
come let us be up and gone
to near our place of stay,
Sur, Shyam on hearing this,
with Balaram came away.
Kanha, don't go so far to play,
you do not know the 'hau' is here,
I've learnt of it today.
one boy came running just now
I saw him crying away,
the 'hau' clips the ears away
of little boys astray.
come let us be up and gone
to near our place of stay,
Sur, Shyam on hearing this,
with Balaram came away.
x

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...