Wednesday, October 18, 2017

சூர் ஸாகரம்



சூர் ஸாகரம் 



                   ராதைக்கேற்ற கண்ணனோ !


கிருஷ்ணன் என்றால்  கருப்பன் என்கிறார்கள்.  ஆகர்ஷிப்பதால், காந்தம் போல் கவர்வதால்  கிருஷ்ணன்  என்று சிலர்.  


எனக்கு  இதில் எல்லாம் மாறுபட்ட கருத்து என்று எப்பவாவது நான்  சொன்னேனா?   என்னைப்  பொறுத்தவரை  கிருஷ்ணன் என்றால்  எனக்கு தீராத தாகத்தை தரும் தண்ணீர் என்று மட்டும் தான் சொல்வேன்.  தண்ணீர் குடித்தால் தாகம்  தீரும் அல்லவா.   ஆனால் இந்த அதிசய நீர் பருக பருக  மேலும் மேலும் தாகம் அதிகரிக்கிறதே!   கிருஷ்ணன் ஒரு அதிசயம் , அற்புதம்   என்பேன்.
என் கருத்தை பற்றி யார் இங்கு கவலைப் பட்டார்கள். அவர்கள் இதை படிப்பதே சூர் தாஸ் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளத்தான்.

பிரிந்தாவனத்த்தில்  நந்த குமாரன் அதோ வளைந்து வளைந்து செல்லும் குறுகிய சந்துகளில்  விளையா டிக்கொண்டே ஓடுகிறான்  தெரிகிறதா?

அதோ தூரத்தில் ஓடும் அந்த சிறுவனா கிருஷ்ணன்?

பின்னே யார் அது"

''அவன் தான் என்று எப்படி சொல்லுகிறாய்?''
''இடுப்பில் பார். அவன் எப்போதும் விரும்பி அணியும் மஞ்சள் நிற  ஒளி வீசும் பீதாம்பர பட்டு வஸ்திரம். கருப்புக்கு மஞ்சள் எவ்வளவு எடுப்பு பார்த்தாயா?  வேறு எவனாவது இப்படி இந்த ஊரில் உண்டா?

அதுமட்டுமா  மேலே ஒரு பொருத்தமான துண்டு. அதை ஒரு கயிற்றால் காற்றில் பறக்காமல் வஸ்திரத்தோடு கட்டி வைத்திருக்கிறார்கள்.  காற்றில் அது எவ்வளவு அழகாக அவன் ஓடும்போது இறக்கை போல் பறக்கிறது பார்த்தாயா. 

இப்படி ஆடையை வேறு எந்த பையனாவது அணிந்தால் அவன் க்ரிஷ்ணனா?

நல்ல கேள்வி கேட்டாய். எனக்கு தெரியும் ஏடாகூடமாக இப்படி கேட்பாய் என்று. அதற்கு தான் இன்னொரு தனிப்பட்ட அடையாளம் வைத்திருக்கிறேன். சொல்லட்டுமா?

தலையைப்பார். பெரிய  ஒரு நீல மயில் பீலி. கிரீடம் போல் அவனது தலையின் அலை அலையாக சுருண்ட கேசங்களை பாதி மறைத்தவாறு காற்றில் வா வா என்று நம்மை அழைத்தது ஆடுகிறதே பார்த்தாயா. வேறு எந்த பயலாவது அப்படி ஒரு அழகிய மயில் பீலி சூடி இந்த ஊரில் பார்த்ததுண்டா? 

அவன் அசைந்து அசைந்து அங்கும் இங்கும் திரும்பி பார்த்தவாறு ஓடுகிறான் தெரிகிறதா அப்போது அவன் காதுகளில் என்ன தெரிகிறது?

கண்ணைப் பறிக்கும் குண்டலங்கள் நடனம் ஆடுவது போல் ஆடி அவன் அழகுக்கு அழகூட்டுவதை  பார்க்கவில்லையா நீ.?  பார்த்து விட்டு தான் அழகில்  மயங்கி சிலையாக நின்று விட்டாயோ? பதிலே இல்லையே?

சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டே ஆடிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கும்போது அந்த அதிசய கிருஷ்ணனின் முத்துப்பல் வரிசை பளீர் பளீர் என்று சூரியன் ஒளியை விட  கண்ணைக் கூச  ஒளிர்கிறதே அதையாவது பார்த்தாயா இல்லையா?

கருப்பன் கருப்பன் என்று சொல்கிறார்களே. எங்கேய்யா கருப்பு. அவன் உடம்பு பூரா தான் அவனுக்கு சந்தனம் கம கமக்க   யசோதை கெட்டியாக பூசி அவன் கை கால் முதுகு மார்பு எல்லாமே மஞ்சளாக அல்லவோ காட்சி அளிக்கிறது.

யாரைத்தேடி ஓடுகிறான் என்று கண்டுபிடித்து விட்டேன்.  அவன் ஓடும் திசையை கூர்ந்து பார்த்தேன்.  ஆஹா அவன் யமுனைக் கரை நோக்கி அல்லவோ ஓடுகிறான்!  அவனே காந்தம் என்று சொன்னால் அவனையே கவரும் ஒரு காந்தம் இருந்தால் அதன் பெயர் என்ன? 

எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான்.  ராதா! அவள் நெற்றியில்  மஞ்சள் திலகம். தங்க நிறத்தவள். கருநாக  கூந்தல்.  சந்திரனை பிடுங்கி  கழுத்தின் மேல் வைத்தது போல்  பால் வண்ண குளிர்ந்த  மனத்தை மயக்கும்  ஒளிவீசும் முகம். 

அவள்  உடலை ஒட்டி  ஆனால்  பாந்தமாக அவளை அணைத்தவாறு புரளும்  காற்றில் ஆடும்  பாவாடை . எப்படி பொருத்தமாக அதற்கு ஏற்ப ஒரு நீல நிற சட்டை அணிந்திருக்கிறாள்.  பிளவுஸ்  என்கிறோமே அதை அவளே தைத்திருப்பாளோ. இவ்வளவோ அழகாக தைக்கப் பட்டிருக்கிறதே! சாமுத்திரிகா லக்ஷணமே இவளை பார்த்து தான் ஏதாவது ஒரு ரிஷி எழுதி இருப்பானோ.  கூந்தல் நீண்டு பின் புறம் அவள் நடைக்கேற்ப  நடனம் ஆடி அப்படியும்  இப்படியும்  பார்ப்பவன் தலை, மனம் எல்லாவற்றையும் அசைத்து  கொள்ளை கொண்டு போகிறதே. 

உண்மையில் இவளை போல் அந்த பிரிந்தவனமாகட்டும் அடுத்தடுத்த க்ராமங்களாகட்டும்  இரவும் பகலும் தேடினாலும் ஒரு அழகிய  பால்காரி கிடைக்கவே மாட்டாள். 

அவள் கண்கள் கிருஷ்ணன் கண்களை பார்த்து விட்டன. அவ்வளவு தான். அவள் தான் யார் எங்கே டிருப்பவள், எதற்கு ஏன் எப்போது அங்கே வந்தாள்  எல்லாமே எப்படி சட்டென்று மறந்து போய்விட்டது. மனம் அதில் நிரம்பியிருந்த எல்லா எண்ணங்களும்  சூரிய ஒளியில் யமுனை நீர் போல்  ஆவியாகி  மனம் காலியாகி விட்டதே. அதில்  குபுகுபு வென்று யமுனை வெள்ளம்போல்  கிருஷ்ணா கிருஷ்ணா என்று அவன் நாமம் அவன் பற்றிய எண்ணங்கள் மட்டுமே வியாபித்து விட்டதே.  ஓஹோ  இதை தான் பிரேமை  என்பார்களோ.  கண்ணில்லாத சூரதாசுக்கு தெரிந்தது நமக்கு தெரியவில்லையே. அவர் மனத்தால் கண்டு கண்டு அப்படியே தேன் குடித்த வண்டாகி  விட்டாரே.  நாம் வணங்கிவிட்டு செல்வோம்.

Krishna went playing in the lanes of Braj,
a yellow silk garment round his waist,
holding a top and a string to spin it with,
a crown of peacock-feathers adorning his head
his ears with charming ear-rings decked,
his teeth flashing brighter than the sun's rays,
his limbs anointed with sandalwood-paste.

On the Yamuna bank he chanced to see Radha;
a tika mark of turmeric on her brow,
dressed in a flowing skirt and blue blouse,
her lovely long wreathed hair dangling behind,
a stripling, fair, of beauty unsurpassed
with he a bevy of fair milkmaids:

Krishna's eyes met her's;
love woke in his heart,
says Suradasa, bewitched by her,
he gazed and gazed.

Sant Surdas

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...