Tuesday, October 17, 2017

கிருஷ்ணனின் கவலை

சூர் ஸாகரம் 
                                     
கிருஷ்ணனின் கவலை 

குட்டிக்கண்ணன்  கண்கள் துறுதுறு வென்று எல்லாவற்றையும் கவனிக்கும்.  உலகையே சம்ரக்ஷணம் பண்ணுகிறவன் பார்வை அப்படித்தானே  எங்கும் எதிலும் கவனமாக இருக்கும்.  அம்மா யசோதையை பார்க்கிறான்.  அருகே நடமாடும் கோபியர்களின் தலைகளை கவனிக்கிறான்.  மெதுவாக ஒரு கையால் தனது தலையை தடவிப்பார்க்கிறான்.  ஒரு சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு?

நேராக  கவலையோடு  அம்மா யசோதை அருகே சென்று முத்தாக ஒரு கேள்வி கேட்கிறான்.


''அம்மா, இதோ பார்  உன்னுடைய  தலையில் மட்டும்  எப்படி அவ்வளவு முடி நீளமாக இருக்கிறது. அதோ அந்த கோபியர் மாமிகள் தலையிலும் நீள  நீளமாக  கூந்தல் பின்னிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஏன்  என் தலையில் மட்டும் கொஞ்சமாக  முடி இருக்கிறது. உங்களைப்போல எனக்கு ஏன் இன்னும் நீளமாக ஆகவில்லை. காரணம் சொல் உடனே?''

யசோதை விலாப்புடைக்க சிரித்தாள்.  என்ன கேள்வி கேட்கிறான் இந்த ப்பயல் . இப்படியெல்லாம் வினோதமாக கேட்கும் இவன் ஒரு விநோதன் தான்.  சிரிப்பை அடக்கிக் கொண்டு பதில் சொல்கிறாள் 

''கொஞ்ச  நாள்  நீ காத்திருக்க வேண்டும்  கிருஷ்ணா''

''அன்னிக்கு ஒருநாள்  நான் இதே கேள்வி கேட்ட போது  '' நீ பால் நிறைய விடாமல் சாப்பிடு என்று சொன்னியே''  நான் தான் பால் வெண்ணெய் நீ தரும்போது எல்லாம் சாப்பிடுகிறேன்.

''கிருஷ்ணா பொய்  சொல்லாதே.  நான் தரும்போது மட்டும் தானா  நீ வெண்ணை சாப்பிடுபவன்?? 

''அம்மா  அதை விடு.  பலராமன்  மாதிரி எனக்கும்  நீண்ட கெட்டியான பலமான  முடி அலை அலையாக வளரும் என்று சொன்னாயே. பொய்  தானே''

''இல்லவே  இல்லை கிருஷ்ணா. அவனை விட உனக்கு இன்னும் கரு கருவென அழகாக  அலை அலையாக சுருண்டு சுருண்டு  கூந்தல் வளரும் கொஞ்ச நாளிலேயே பார்.  


''அப்போ அவனை மாதிரியே எனக்கு  எண்ணெய்  தைலம் எல்லாம் தடவி சீப்பு போட்டு வாரி, சிடுக்கெடுத்து கெட்டியாக பின்னி விடுவாய் இல்லையா.

ஆஹா  அழகாக உன் தலையை வாசனை தைலங்கள் தடவி குளிப்பாட்டி துடைத்து   காயவைத்து, பின்னி கருநாகம் போல வளைந்து வளைந்து அது உன் தோளில்  விழும் பார்.

அப்படின்னா  இன்னும் நிறைய  வெண்ணை தயிர் பால் சாப்பிடப்போறேன்.   யசோதை சிரித்தாள். அவள் மட்டுமல்ல அருகே நின்ற எல்லா கோபியர், கோபர்கள், நந்தகோபன்  வானில் உள்ள தேவர்கள்  இதை யோசித்த சூரதாஸர், எழுதும் நான், படிக்கும் நீங்கள் எல்லோருமே தான். என்ன ஒரு சாமர்த்தியம்.  வெண்ணை இன்னும் கொஞ்சம் சாப்பிட இப்படி ஒரு சாமர்த்தியமான காரணமா?

அடடா  ஹரியும்  ஹலதாரியும்  எப்படிப்பட்ட  திவ்ய சகோதரர்கள். வாழ்க அவர்கள், வளர்க அவர்கள் கூந்தல். நாடு நகரம், உலகம் எல்லோருமே  

இந்த தீபாவளி நன்னாளில் சூர் தாச ரோடு நாமும் கிருஷ்ணனை ஒவ்வொரு கோணத்திலும் ரசித்து ருசித்து அனுபவிப்போம்.


Mother, when will my hair-braid grow?
milk you said will make it grow,
but still it remains so short.
Mother when will my hair-braid grow
you said like Bal it would be strong,
his braid has grown fat and long,
combing , braiding, bathing, drying,
to the ground like a serpent writhing.
for me you say milk is better.
never delicious bread and butter,
Sur, long live the two brothers,
the twosome of hari and haldhar.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...